![]() |
|
முரளீதரன் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக நியமனம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முரளீதரன் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக நியமனம் (/showthread.php?tid=7026) Pages:
1
2
|
முரளீதரன் உலக உணவுத் த - AJeevan - 06-18-2004 இலங்கையில் மோதலில் ஈடுபட்டு வரும் இரு இனங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என <span style='font-size:25pt;line-height:100%'>ஐ.நாவின் உலக உணவுத் திட்டத்தின் நல்லெண்ணத்தைப் பரப்பும் தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் <img src='http://www.webdunia.com/sports/photogallery/2002_01/images/2Muttiah%20Muralitharan.jpg' border='0' alt='user posted image'> முத்தையா முரளீதரன் </span> கூறியுளார். முரளீதரனுக்கு வாழ்த்துகள் . . . . . . . . . . . . . AJeevan _______________________________________________________________________________________________________ சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.......... -அஜீவன் - Eelavan - 06-19-2004 இதையே இவர் சர்வதேச விளையாட்டுகளில் விளையாடி வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் சரி உள்நாட்டு நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் சரி கூறியிருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்தியிருப்பேன் அரசியல்வாதிக்கு தேவையான முகமூடி - AJeevan - 06-19-2004 Eelavan Wrote:இதையே இவர் சர்வதேச விளையாட்டுகளில் விளையாடி வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் சரி உள்நாட்டு நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் சரி கூறியிருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்தியிருப்பேன் இவரை கௌரவிக்கும் முகமாக நடைபெற்ற விழாவில் இவரைப் பேட்டி கண்ட சர்வதேச ஊடகங்களின் கேள்வியொன்றுக்கு பதில் அழிக்கும் போது, "தான் ஒரு தமிழன் என்றும், இலங்கையில் உள்ள பிற்போக்கு தனம் கொண்ட அரசியல்வாதிகளால் தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மோதலில் ஈடுபட்டு வரும் இரு இனங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என வேணடுகோள் விடுத்ததாக BBC செய்தியும், சிங்கள செய்திகளும் கூறின. சுவிஸ் செய்தியிலும் கேட்டேன். தாழ்ப்புணர்ச்சி காரணமாக சில ஊடகங்கள் இது பற்றிக் குறிப்பிடவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. "ஒருவன் வீழ்ந்து விட்டால் கை கொடுத்து தூக்கி விட யோசிக்காதே அவனைப் படுகுழிக்குள் தள்ளி விட வேண்டுமென்று நினைத்தால் ஆயிரம் முறை என்ன; கோடி முறை யோசி........." என்று எனது ஆசிரியர் சொன்னதை என்றும் பின்பற்றுகிறேன். எதிரியாக இருந்தாலும் நல்லதை வாழ்த்துவதற்கு மனசு இருக்க வேண்டும். அவன் யார் என்பதை விட, அவன் செயல் என்ன என்பதே முக்கியம். BBC tamil news (18.06.2004) also:- http://www.bbc.co.uk/tamil/2115.ram ______________________________________________________________________________________________________________________________________ சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.......... -அஜீவன் - Ilango - 06-19-2004 AJeevan Wrote:[quote=Eelavan]இதையே இவர் சர்வதேச விளையாட்டுகளில் விளையாடி வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் சரி உள்நாட்டு நிறுவனங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போதும் சரி கூறியிருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்தியிருப்பேன் இவரை கௌரவிக்கும் முகமாக நடைபெற்ற விழாவில் இவரைப் பேட்டி கண்ட சர்வதேச ஊடகங்களின் கேள்வியொன்றுக்கு பதில் அழிக்கும் போது, "தான் ஒரு தமிழன் என்றும், இலங்கையில் உள்ள பிற்போக்கு தனம் கொண்ட அரசியல்வாதிகளால் தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மோதலில் ஈடுபட்டு வரும் இரு இனங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்" என வேணடுகோள் விடுத்ததாக BBC செய்தியும், சிங்கள செய்திகளும் கூறின. சுவிஸ் செய்தியிலும் கேட்டேன். தாழ்ப்புணர்ச்சி காரணமாக சில ஊடகங்கள் இது பற்றிக் குறிப்பிடவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. "ஒருவன் வீழ்ந்து விட்டால் கை கொடுத்து தூக்கி விட யோசிக்காதே அவனைப் படுகுழிக்குள் தள்ளி விட வேண்டுமென்று நினைத்தால் ஆயிரம் முறை என்ன; கோடி முறை யோசி........." என்று எனது ஆசிரியர் சொன்னதை என்றும் பின்பற்றுகிறேன். எதிரியாக இருந்தாலும் நல்லதை வாழ்த்துவதற்கு மனசு இருக்க வேண்டும். அவன் யார் என்பதை விட, அவன் செயல் என்ன என்பதே முக்கியம். BBC tamil news (18.06.2004) also:- http://www.bbc.co.uk/tamil/2115.ram ______________________________________________________________________________________________________________________________________ சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.......... -அஜீவன் பிழைபிடிப்போர் மலிந்த உலகத்தில் எது செய்தாலும் நொட்டை நொடுக்குச் சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். - Eelavan - 06-19-2004 நான் முரளி மீது குறை கண்டுபிடிப்பதற்காகச் சொல்லவில்லை தனியே ஒரு விளையாட்டு வீரனாக பலதரப்பட்ட சவால்களையும் சந்தித்து வெற்றி கொண்டவர் என்ற ரீதியில் எனது பாராட்டு என்றும் அவருக்கு உண்டு ஆனால் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றியது மூலமும் பேட்டி கண்ட பத்திரிகைக்கு தனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்றதன் மூலம் பெருமையடைந்தவர் இப்படியான பதவிக்கு வந்ததன் மூலம் ஒரு தமிழனுக்கு இப்பதவி கிடைத்திருக்கின்றதே என்ற உண்மையான மனச்சந்தோசத்துடன் என்னால் வாழ்த்த முடியவில்லை வேண்டுமானால் ஒருவரைக் கைதுக்கி விடவேண்டும் என்ற உங்கள் இருவரினதும் நல்ல மனதுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன் - kuruvikal - 06-19-2004 முரளி நீ ஒரு கிரிக்கெட் வீரானாயே இரு அதுவே உனக்குப் பெருமை...! கூலியாகாதே காலியாகிடுவாய்.....! இந்த உண்மை உனக்கே தெரியும் இத்தனை சாதனை படைத்தும் நீயோ ஒற்றுமைக்காய் குரல் கொடுக்கும் சிங்களத் தீவின் கிரிக்கெட் அணியில் நீ வகித்த பதவியென்ன சொல்.....????! உண்மையில் ஒற்றுமையை உனதணி உளமார நேசித்திருந்தால் உனது காலத்திலாவது வடக்கில் இருந்தோ கிழக்கில் இருந்தோ ஒரு வீரனையாவது உள்வாங்க முயற்சித்திருக்கலாமே....????! மனச்சாட்சியைத் தொட்டுப்பார் அது சொல்லும் வழி நடந்துகொள் எமக்காய் நீ ஒன்றும் இழக்கத் தேவையில்லை உன் மனச்சாட்சிக்கு - நீ மாறாய் இராதே....! அதுபோதும் உன் கிரிக்கெட் புகழ் ஸ்திரமாய் நிலைத்திட...! இன்றேல் கணணியுகத்திலும் லயத்தோடு கறலோடு கூடி வாழும் உனது உறவுகளுக்கு உளமாற ஏதாவது செய் வரவேற்போம்..... சுட்ட மண்ணுக்கும் சுடாத மண்ணுக்கும் முடிச்சுப் போடா எண்ணாதே அது உன் புகழ் அழித்துப் பழி சேர்க்கும்....! - AJeevan - 06-19-2004 பாதையில் போகும் ஒருவன் "வணக்கம்" (Good Morning or Morgen..................) என்று சொன்னால் பதிலுக்கு, வணக்கம் (Good Morning or Morgen..................) என்று சொல்லித்தான் பழக்கம். அவன் யார் என்று பல்லுப்பிடித்துப் பார்த்து "வணக்கம்" சொல்லிப் பழக்கமில்லை. <span style='font-size:25pt;line-height:100%'>தவறு...........தான்? </span> "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா?. . . . . " யாரோ ஒரு கவிஞர் வாய்க் கொழுப்புக்கு சொல்லவில்லை. கிடைத்தால் வாய்க்கு ஒரு பிடி சீனி போட தோன்றுகிறது. சிலர் கைக்கு கிடைத்தால் வாய்க்கரிசியோ , ஒரு பிடி மண்ணோ?.............................. ______________________________________________________________________________________________________________________________________ சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.......... -அஜீவன் - AJeevan - 06-19-2004 kuruvikal Wrote:முரளி நீ நண்பனே, நீ வைத்திருக்கும் உன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையும் பாடசாலை சான்றிதழ்களையும் அடையாள அட்டையையும் ஏன் நாடு கடக்க உதவிய கடவுச் சீட்டையும் தூக்கி எறி அதுவும் சிங்களத் தீவு தந்ததுதானே? இல்லை என்று சொன்னால் நீயும் கள்ளத் தோணிதானே? kuruvikal Wrote:மனச்சாட்சியைத் தொட்டுப்பார் ______________________________________________________________________________________________________________________________________ சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்.......... -அஜீவன் - kuruvikal - 06-19-2004 பத்திரம் எல்லா பத்திரமாய் சிங்களத் தீவில் தான்...! எம் தாயும் தாய் நிலமும் தந்த தமிழும் தயவும் அறிவும் அன்புமே எம்மோடு இன்று......! சிங்களத்தீவு தானாய் வலிந்து தந்த அடையாளங்கள் தரித்ததற்காய் சிங்களவன் கையால் பட்டது போதும்....! மறப்போம் மன்னிக்கவும் தயார் அவன் ஒரு மானிடனாய் வாழத் தயார் என்றால்....! - AJeevan - 06-19-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- AJeevan - 06-19-2004 kuruvikal Wrote:பத்திரம் எல்லா பத்திரமாய்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelavan - 06-20-2004 மீண்டும் தொடரும் மிடுக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அஜீவன் அண்ணா சில விடயங்கள் சொல்லலாம் என்றிருந்தேன் நீங்கள் ஒரேயடியாக வணக்கம் சொல்பவனை பல்லைப் பிடித்துப் பார்த்து பதிவணக்கம் சொல்வதில்லை என்று போட்டுவிட்டீர்கள் அதனால் விட்டுவிட்டேன் - AJeevan - 06-20-2004 Eelavan Wrote:மீண்டும் தொடரும் மிடுக்கு. <!--emo& ஈழவன், தான் வெல்ல வேண்டுமென்று சிலர் லொஜிக்கேயில்லாமல் எழுதுவார்கள். அதுவல்ல நாம் செய்ய வேண்டியது நல்லதொரு சமுதாயம் உருவாக நாமாவது உருப்படியாக சொல்ல வேண்டும் என்றுதான் எழுதுகிறேனே தவிர எவரோடும் தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லை. எனவே நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள். எனக்குத் தெரியாதது இன்னுமொருவரிடமிருந்து கிடைக்குமானால் மகிழ்வேன். Quote:யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றியது மூலமும் பேட்டி கண்ட பத்திரிகைக்கு தனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்று முரளி கூறியிருந்ததாக எழுதியிருந்தீர்கள். அதுபற்றி எழுதலாம் என யோசித்தேன். ஆனால் கருத்துகள் வேறு பாதையால் போகத் தலைப்பட்ட போது இவற்றை இங்கே பேசாமல் விடுவது நல்லது எனத் தோன்றியது. இருந்தாலும் இது சரியாகப்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். அல்லது விட்டு விடலாம். நான் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவன் என்பது மட்டுமல்ல, ஆரம்பக் கல்வியை தமிழில் கற்காதவன் என்பதும், சிங்கள மொழி மூலமே எனது கல்வி என்பதும், பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. வீட்டில் பெற்றோரோடு தேவையானவற்றை தமிழில் பேசுவேன். இருநதாலும் அப்பா வழி உறவினர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தால் நானும் ஆரம்பததில் எனக்குத் தெரிந்த தமிழில் பேச முற்படுவேன். அவர்கள் என் பேச்சில் வரும் தவறுகளை திருத்துவதை விட்டு, என் தவறுளுக்கு நொட்டை நொடிசல்களையே சொல்லத் தொடங்கினார்கள்.ஒரு வார்த்தையை திரித்து கூறவும் முற்பட்டார்கள். இதனால் நான் இவர்களுக்கு முகம் கொடுக்காமல் ஒதுங்கத் தலைப்பட்டேன். என் அப்பாவின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தால், நான் அறைக்குள் முடங்கிக் கிடப்பேன் அல்லது இருளும் வரை வெளியே சுற்றித் திரிவேன்.(இதை விட சொல்வதற்கு வெகுவாக இருக்கிறது.இவை வேதனையான விடயங்கள்...............) சிங்கப்புூருக்கு போன பின் (1980)தான் தமிழ் கற்க ஆரம்பித்தேன். எனது தமிழ் சிங்களத் தமிழாக இருக்கிறது என்று கூறி என்னை ஆளாக்கிய கோபாலி (சிங்கை தொலைக்காட்சி பணிப்பாளர்) அண்ணாவின் தயவில் தமிழை ரசிக்கக் கற்றக் கொண்டேன். ஈழவன், இது போன்ற ஒரு நிலை முரளிக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது முரளி பேசுவதை விளங்கிக் கொள்ளாமல் தமிழரும்-சிங்களவரும் ஏதாவது திரித்தும் எழுதிவிடலாமல்லவா? யாருக்குத் தெரியும்? அவரவர் பிரச்சனை அவரவருக்குத்தான் தெரியும்? நாங்கள் நாட்டை விட்டு வெளியே நின்று வீராப்பு பேசுவது இலகுவான காரியம். அவரவர் நிலையில் இருந்து பார்ப்பதிலே நமது நிலை தங்கியிருக்கிறது? அண்மையில் சோணியா காந்தியிடம் பேட்டி எடுக்க முற்பட்ட இத்தாலிய நாட்டு தொலைக்காட்சி பேட்டியாளருக்கு, அவர் இத்தாலிய மொழியில் பேட்டி கொடுக்க மறுத்ததை பார்த்திருப்பீர்கள். அது அவரது தாய் மொழிதான், ஆனால் அவர் பேசும் ஒரு வார்த்தையை திரித்துக் கூற எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை காட்டியது. இதற்காக அவரை நாம் குறை சொல்லவில்லை. இது ஒரு புரிந்துணவு மட்டுமே...................... - Aalavanthan - 06-20-2004 இப்படித்தான் சிவாந்தியை எல்லாரும் தூக்கிப்பிடிச்சம். அவர் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக எத்தனைபேர் கஸ்ரப்பட்டார்கள். கடைசியில் அனைவருக்கும் என்ன கிடைத்தது? என்னைப் பொறுத்தவரையில் இவர்கள் சந்தர்ப்பவாதிகள். யாழ்ப்பாணத்தில் ஒன்றும், கொழும்பில் ஒன்றும், வெளிநாட்டில் ஒன்றும் சொல்வார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்: உண்மை முகம் ஒரு நாளைக்குத் தெரியும் தானே. - kuruvikal - 06-20-2004 நல்லாச் சொன்னியள் ஆளவந்தான்...சிலபேருக்கு தாங்கள் வாழ்ந்தது வாழ்வதுதான் உலகம்...ஆனா அவை இன்னும் தரிசிக்கப் பல உலகம் இருக்கெண்டது தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கிறதுதான் விநோதம்.....! அதுபோலத்தான் முரளிக்கும்.....இன்னும் பலருக்கும்....கிரிக்கெட் உலகில முரளி காண்பதுவேறு....அரசியல் உலகில் நடப்பது வேறு....அதை முரளி என்ன அர்சுனா ரணதுங்காவாலேயே சமாளிக்க முடியாது....முரளி ஒருக்காலும் தந்தை செல்வா ஆக முடியாது......அது நிச்சயம்.....! முரளி கிரிக்கெட் உலகில இருந்து அரசியலுக்க வர முனையிறாரோ தெரியாது...ஆனா அது அங்க கஸ்டம்...வேணும் என்டா ஆறுமுகம் தொண்டமானோட சந்திரசேகரன் மனோகணேசனோட கலந்தாலோசிச்சுப் பாக்கட்டும்....சில குளூக்கிடைக்கும்.....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதைவிட்டுட்டு இலங்கையில் இன ஐக்கியம் எண்ட ஜே ஆரின் அதே பல்லவிய முரளியும் பாடுறது...முரளிக்கு அரசியல் பூச்சியம் எண்டததைத்தான் காட்டுது.....! முரளி அரசியலுக்க அல்லது அரசியல் சாயத்தோட வந்தா அவரை அரசியல்வாதியாத்தான் பாக்க வேண்டுமே தவிர தொடர்ந்து கிரிக்கெட்டில் வைச்சுப் பாக்கச் சொல்லுறது மற்றவனை ஏமாத்த முயலுறமாதிரித்தான் இருக்கும்.....! :!: :twisted: - Eelavan - 06-21-2004 நன்றி அஜீவன் அண்ணா வடபகுதி மக்களுக்கு தங்கள் தமிழ் பற்றி கர்வம் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். நான் கூற விழைந்தது என்னவென்றால் முரளி சாதனை செய்தபோது கூட தமிழன் என்றில்லாமல் எமது நாட்டவன் ஒருவனது சாதனைகள் என்று மகிழ்ந்தவன் நான்.இங்கு நான் அவரது தமிழைக் குறைகூறவில்லை அது அவர் விருப்பம்.ஆனால் அவரது பேட்டியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சிரிப்பை வரவழைத்தன.அதனாலேயே முரளி அரசியல்வாதி மாதிரி பேசுகிறார் என எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். இதுவரை காலமும் இலங்கையில் நடப்பது முரளிக்குத் தெரியாததல்ல இத்தனை திறமை இருந்தும் தமிழன் என்ற ஒரே காரணத்துக்குக்காக சர்வதேச அணியில் இடம்பிடிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டவர் என்று அவருக்கே தெரியும் அதெல்லாம் ஏன் இன்றே அவருக்குப் பின் ஒரு தமிழன் இலங்கை அணியில் இடம்பிடிக்கமுடியாமல் போனது ஏன் என்றும் விளங்கும் அப்படியிருக்க இனமத பேதமில்லாமல் பல இனத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் அணியில் ஒன்றாக விளையாடும் போது நாட்டில் மட்டும் ஏன் வாழ முடியவில்லை என்று பாலர் வகுப்புப் பிள்ளை மாதிரி ஒரு கேள்வி கேட்டார்பாருங்கள் பழுத்த அரசியல்வாதிகள் தோற்றுவிடுவார்கள்.. சாதரண்மாக விளையாட்டு வீரனாக முரளியை வாழ்த்த என்னால் முடியும் ஆனால் உலகின் கண்களுக்குப் பூச்சுற்றுவதற்காக முரளிக்கு வழங்கப்பட்ட இப்பதவிக்காக அவரை வாழ்த்துமளவுக்கு நான் பக்குவடப்பவில்லை அதனையே சொன்னேன். தமிழ் தெரியாதவரையும் தமிழ் மொழி மீதும் இனம் மீதும் பற்று இருப்பின் தமிழனாக ஏற்றுக்கொள்ளலாம் என முன்பொருமுறை நான் சொன்னதை நினைவூட்ட விரும்புகிறேன் - kavithan - 06-21-2004 kuruvikal Wrote:பத்திரம் எல்லா பத்திரமாய் எங்கிருக்கந்த சிங்களத் தீவு? அப்படி ஒன்றை நான் கேள்விப் படவே இல்லை. உங்களுக்கு அடையாளங்களைத் தந்தது சிங்கள பேரினவாதம். நீங்களே அண்ணை சிங்களத்தீவு எண்டால் அவன் ஏன் சொல்லமாட்டான் அது தன்ரை நாடு எண்டு? - vallai - 06-21-2004 சரியாய்ச் சொன்னியள் அப்பு கேட்கிறது ஒண்டு சொல்லுரது ஒண்டு உதுக்கும் நிரையச் சடையும் குருவிகள் ஏனெண்டா எனக்கு வாயிலைதான் கள் குருவிகளுக்கு பெயரிலையே கள் - kuruvikal - 06-21-2004 ஏனப்பு வல்லை உங்க கொல்லைக்கையும் சிங்களவந்தானே சென்ரி போட்டு நிக்கிறான்...அப்ப அது இப்பவும் சிங்களத் தீவுதான்...சிங்களவன் ஆக்கிரமிச்ச தீவு.....உதுல சடைய ஒண்டுமில்ல....கண்ண மறைக்கிற சடையைக் கொஞ்சம் தூக்கிப் போட்டுப் பாருங்கோ.....எல்லாம் தெரியும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vallai - 06-21-2004 சிங்களவன் ஆக்கிரமிச்சாப்போல அது சிங்களத் தீவே அப்ப ஏன் எங்கடை நாடு எங்களுக்கு வேணும் எண்டு அடிபடுறியள் அவன் ஆக்கிரமிச்சிட்டான் அவன்ரை தீவெண்டு விட்டிட்டு வேறை இடம் பாக்கவேண்டியது தானே எல்லாச் சடையும் சடையல்ல குருவிகளின் பொல்லாச்சடையே சடை |