ஈழத்தில்..... மட்டக்களப்பில்...குண்டுகள் வெடிக்காதோ அதில் நாம் குளிர்காயோமோ எண்டு கனவு காணுறவனுக்கு....அது...! இதோ இது....மற்றவனுக்கு... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
---------------------------
விடுதலைப் புலிகள், படையினர் இன்று வவுணதீவில் சந்திப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைத்தரப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று மு.ப.11.00 மணிக்கு யுத்த சூனியப் பிரதேசமான வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலைமையில் நடைபெறும் இச்சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் மட்டு.அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், தளபதி ரமணன், தளபதி ஜெனார்த்தன், தளபதி ஜெயார்த்தன், அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன், சமாதானச் செயலக துணைப் பொறுப்பாளர் பவானந்தன் மற்றும் மனோஜ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறிலங்கா படைத்தரப்பு சார்பில் கூட்டுப்படை தலைமையக பிரிகேடியர் விஜயகுணவர்த்தன, மட்டக்களப்பு 233 படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் அமரதுங்க, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஸ் சமரதிவாகர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கிரவக, காரைதீவு விசேட அதிரடிப்படை அத்தியட்சகர் உபுல்செனவரத்தின ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் சார்பில் இலங்கைப் பிரதித் தலைவர் ஹக் ரப் ஹெக்லான், மட்டக்களப்பு மாவட்ட பிரதித் தலைவர் பேர்உன் ரஹ்முஷன், இணைச் செயலாளர் சதாசிவம், உவைஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதி நிலையை பேணுவது சம்பந்தமாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>