Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல் என்ன விலை...??!
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/wallpaper-flower.jpg' border='0' alt='user posted image'>

காத்திருந்தேன்
யன்னல் திறப்பாய் என்று
காலங்கள் ஓடியது
காதலும் பெருகியது
ஒரு தலையாய்...!

உன்னைக் காணாமலே
காதலித்தேன் யன்னலை
உனக்காய் வைத்த பூச்செண்டை
யன்னல் ஏற்றது...
அழகாய் பதிலும் சொல்கிறது...!

அட... ஆறறிவு ஜீவனாம் - நீ
சடத்திலும் கேவலம்
உன்னுடன் காதல் என்று - நான்..!

வாறான் வெளிநாட்டு மாப்பிள்ளை
ஓடிப்போ....
காதல் என்ன விலை என்று
டொலரில் காட்டுவான்...
நீயும்
யன்னல் என்ன
உன்னையே திறப்பாய்...!



முதற் பதிவு இங்கே.... http://kuruvikal.yarl.net/archives/2004_05.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
யன்னலில் தொடங்கிய காதல்கள் பல
யன்னலிலே முடிந்த கதையும் உண்டு
தொடர்ந்ததும் உண்டு

<b>உன்னைக் காணாமலே
காதலித்தேன் யன்னலை
உனக்காய் வைத்த பூச்செண்டை
யன்னல் ஏற்றது...
அழகாய் பதிலும் சொல்கிறது...! </b>

கற்பனை அருமை வாழ்த்துக்கள்...
Reply
#3
<!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin-->

கற்பனை அருமை வாழ்த்துக்கள்...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
விலை தெரிஞ்சால் எப்பவோ வாங்கியிருக்கலாம் ? விற்றிருக்கலாம். ம் தெரிந்தால் சொல்லுங்கள்

கவிதை கலக்கல் குருவிகளே
[b] ?
Reply
#5
ஆக்களைப் பொறுத்து விலையும் வேறுபடும் போல...ஒரு நிலையான விலை இருப்பதாகத் தெரியவில்லை....அன்று காதலுக்காய் உயிரை விலையாகக் கொடுத்ததோரையும் வாழ்க்கையையே விலையாய் கொடுத்தோரையும் கண்டிருக்கின்றோம்...இன்று எல்லாம் சீப்பாய் போச்சு....ஒரு ஐஸ்கிறீமுக்கே காதல் கிடைக்குமாம்....நாம் முயற்சிக்கல்ல....நீங்கள் விரும்பினா முயற்சித்துப் பாருங்கோ பரணி.....! :wink:

கவி வரிகளை வசமாக்கி விமர்சனம் தந்த அனைவருக்கும் நன்றிகள்....!

மேலும் சில கவிதைகள் இங்கும்... http://kuruvikal.yarl.net/ உண்டு...இங்கு மறுபிரசுரம் ஆகும் வரை அங்கு சென்றும் பார்க்கலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)