![]() |
|
காதல் என்ன விலை...??! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல் என்ன விலை...??! (/showthread.php?tid=7122) |
காதல் என்ன விலை...??! - kuruvikal - 05-24-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/wallpaper-flower.jpg' border='0' alt='user posted image'> காத்திருந்தேன் யன்னல் திறப்பாய் என்று காலங்கள் ஓடியது காதலும் பெருகியது ஒரு தலையாய்...! உன்னைக் காணாமலே காதலித்தேன் யன்னலை உனக்காய் வைத்த பூச்செண்டை யன்னல் ஏற்றது... அழகாய் பதிலும் சொல்கிறது...! அட... ஆறறிவு ஜீவனாம் - நீ சடத்திலும் கேவலம் உன்னுடன் காதல் என்று - நான்..! வாறான் வெளிநாட்டு மாப்பிள்ளை ஓடிப்போ.... காதல் என்ன விலை என்று டொலரில் காட்டுவான்... நீயும் யன்னல் என்ன உன்னையே திறப்பாய்...! முதற் பதிவு இங்கே.... http://kuruvikal.yarl.net/archives/2004_05.html - shanmuhi - 05-25-2004 யன்னலில் தொடங்கிய காதல்கள் பல யன்னலிலே முடிந்த கதையும் உண்டு தொடர்ந்ததும் உண்டு <b>உன்னைக் காணாமலே காதலித்தேன் யன்னலை உனக்காய் வைத்த பூச்செண்டை யன்னல் ஏற்றது... அழகாய் பதிலும் சொல்கிறது...! </b> கற்பனை அருமை வாழ்த்துக்கள்... - tamilini - 05-25-2004 <!--QuoteBegin-shanmuhi+-->QUOTE(shanmuhi)<!--QuoteEBegin--> கற்பனை அருமை வாழ்த்துக்கள்...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?: - Paranee - 05-25-2004 விலை தெரிஞ்சால் எப்பவோ வாங்கியிருக்கலாம் ? விற்றிருக்கலாம். ம் தெரிந்தால் சொல்லுங்கள் கவிதை கலக்கல் குருவிகளே - kuruvikal - 05-25-2004 ஆக்களைப் பொறுத்து விலையும் வேறுபடும் போல...ஒரு நிலையான விலை இருப்பதாகத் தெரியவில்லை....அன்று காதலுக்காய் உயிரை விலையாகக் கொடுத்ததோரையும் வாழ்க்கையையே விலையாய் கொடுத்தோரையும் கண்டிருக்கின்றோம்...இன்று எல்லாம் சீப்பாய் போச்சு....ஒரு ஐஸ்கிறீமுக்கே காதல் கிடைக்குமாம்....நாம் முயற்சிக்கல்ல....நீங்கள் விரும்பினா முயற்சித்துப் பாருங்கோ பரணி.....! :wink: கவி வரிகளை வசமாக்கி விமர்சனம் தந்த அனைவருக்கும் நன்றிகள்....! மேலும் சில கவிதைகள் இங்கும்... http://kuruvikal.yarl.net/ உண்டு...இங்கு மறுபிரசுரம் ஆகும் வரை அங்கு சென்றும் பார்க்கலாம்...! |