05-21-2004, 06:55 PM
இலங்கை முஸ்லீம் மக்களின் ஏக தலைவனாக கனவுகண்டார் ரகூப்..இப்பொழுது மோகத்தலைவரென மக்கள் முடிவுசெய்யத் தலைப்பட்டுவிட்டனர்....
-
|
ஹக்கீமினால் ஏமாற்றப்பட்ட பெண்
|
|
05-21-2004, 06:55 PM
இலங்கை முஸ்லீம் மக்களின் ஏக தலைவனாக கனவுகண்டார் ரகூப்..இப்பொழுது மோகத்தலைவரென மக்கள் முடிவுசெய்யத் தலைப்பட்டுவிட்டனர்....
-
05-22-2004, 01:38 AM
ஹக்கீமுக்கெதிரான சதிமுயற்சியை கண்டித்து நாட்டின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
றிஷாட், நஜீப், பைலா எம்.பி.க்களின் கொடும்பாவிகளும் எரிப்பு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுக்கெதிராக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டதாக் கூறப்படும் சதி முயற்சியைக் கண்டித்து கிழக்கில் பல்வேறு இடங்களிலும் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நேற்று நடைபெற்றன. ஜும் ஆ தொழுகையையடுத்து நடைபெற்ற இந்த ஊர்வலங்கள் அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் மிகவும் மினுமினுப்பாக அமைந்திருந்தன.இறக்காமம் ஜும்ஆ பள்ளியிலிருந்து ஆரம்பித்த இந்த ஊர்வலம் இறக்காமம் பிரதான சந்திவரை சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் சுலோக அட்டைகளையும் நீண்ட பதாகைகளையும் தாங்கிச் சென்றதையும் காணக் கூடியதாயிருந்தது. அமைச்சுப் பதவிகளுக்காக முஸ்லிம்களை அடகு வைக்காதீ“ரகள். பண ஆசைக்காக, றவூப் ஹக்கீமை வஞ்சிக்காதே உண்மையான முஸ்லிமாயிருந்து கொண்டு முஸ்லிம்களை தலைகுனிய வைக்காதே! போன்ற வாசகங்களையும், ஊர்வலத்தில் சென்றோர் ஏந்திச் சென்றனர். பின்னர் றிசாத் பதியுதீன் நஜீப், ஏமஜீது ஆகியோரின் கொடும்பாவிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன. இதேவேளை அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆப் பள்ளியிலிருந்து ஹக்கீமுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் இடம்பெற்று கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. நேற்று அம்பாறை மாவட்டத்தின் சகல முஸ்லிம் பிரதேசங்களிலும் கலகம் அடக்கும் பொலிஸார் விரைந்து காணப்பட்டதுடன் அவசரத் தேவைக்கென விஷேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும், கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. முஸ்லிம் சமூகத்தின் முகத்தில் அறைய நினைத்தவர்கள் முகம் குப்புற விழுந்து மூக்குடைபட்டார்கள் என்ற துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. கொழும்பில்... இதேளை நேற்று கொழும்பு கொம்பனித்தெரு சந்தியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கொம்பனித்தெரு ஜும்ஆப் பள்ளியில் ஜும்ஆ தொழுகையின் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்திக் கொண்டு கொம்பனி வீதி சந்திவரை சென்று சதி முயற்சியில் ஈடுபட்ட எம்.பி.க்களான ஹுசைன் பைலா, றிஷாட் பதியுதீன் மற்றும் இனாமுல்லா போன்றோருக்கெதிராக எழுதப்பட்ட வாஷங்ககளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர். இதில் கொழும்பு மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். புத்தளத்தில், .... ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன், நஜீப் ஏ.மஜீத் மற்றும் ஹுஸைன் பைலா ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் நகரில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், புத்தளம் நகர சபை உறுப்பினர் ஏ.ஓ.அலிகான் ஆகியோர் தலைமையில் ஒன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பதாதைகளை ஏந்திக் கொண்டு புத்தளம் நகர மத்தியிலுள்ள சுப்பர் மார்க்கட் வரைக்கும் ஊர்வலமாக கோஷங்களை இம்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக கோஷித்துக் கொண்டுசென்றனர். இவ்வூர்வலத்தில் இம்மூன்று எம்.பி.க்களையும் கண்டித்து எழுதப்பட்ட பதாதைகள் காணப்பட்டதுடன் ரிசாத் எம்.பி. போன்று வடிவமைக்கப்பட்ட கொடும்பாவியொன்று தூக்கிச் செல்லப்பட்டது. பின்னர் அக்கொடும்பாவி நகர மத்தியில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்களால் தீமூட்டி எரிக்கப்பட்டது. சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாகாண சபை உறுப்பினர்கள் நியாஸ் உயர்ந்த இடமொன்றில் ஏறி நின்று எம்.பி.மார்களையும் அரசையும் கடுமையாக சாடினார். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் புத்தளம் நகரில்பலத்த பாதுகாப்பை மேற்கொண்டிருந்தனர். வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
05-22-2004, 02:16 AM
நீண்ட நாளா ஒரு சந்தேகம்...ஜும்மா தொழுகை என்பது மத அநுட்டானத்திற்கான ஒரு கூடு முறை...இலங்கையில் எப்போதும் முஸ்லீம்கள் அரசியல் ஆர்ப்பாட்டம் என்றால் என்ன வன்முறை என்றால் என்ன ஜும்மாவிற்குப் பின்புதான் செய்வார்கள்....ஒரு காலமும் வெள்ளிக்கிழமைக்குப் புறம்பான ஒருநாளில் முஸ்லீம்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கண்டதே இல்லை....அப்படி என்னதான் உந்த ஜும்மாவில சொல்லிக் குடுக்கினம்....அது முடிஞ்ச கையோட உசாராத்தான் வருகினம்...ஒரு முறை மாவனல்ல வன்செயலுக்குப் பின்னர் ஜும்மா முடிந்து உள்ள வீடுகள் வாசல்களையும் அடிச்சு நொருக்க அம்மா அவசர அவசரமா ஊரடங்குச் சட்டம் போட பொதுசனம் பஸ்ஸுகள் எல்லாம் பதறியடிச்சு ஓட கொழும்பு நகரத்தில வாகன நெருக்கடி ஏற்பட்டு...ஒரு பஸ் தரிப்பிடத்தில இருந்து அடுத்ததற்குப் போக அரை மணி நேரம் பிட்டிச்சதாம்....ஏன் உந்த ஜும்மா சும்மா அரசியல் பேசவும் வன்முறைகளைத் தூண்டவும் பழிவாங்கல்களுக்கு தூபமிடவும் பயன்படுத்தப்படுகிறது.....??????! :roll:
:twisted: :?: :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
05-22-2004, 05:04 AM
உண்மைதான் அதைவிட நான் வேறு மாதிரி யோசித்தேன்
அவர்கள் பிரிவுகளாகப் போய் பள்ளிவாசலால் வரும் போது ஒற்றுமையுடன் வருகின்றார்கள் நாம் ஒற்றுமையாகக் கோவிலுக்குப் போய் அடிதடியுடன் வெளியில் வருகிறோம்
\" \"
06-02-2004, 02:57 PM
ரவ10ப் ஹக்கீம் - குமாரி கூýரே தொடர்புபட்ட சதித் திட்டத்தின் பின்னணிகள் என்ன?
<b>தமது சமூýகத்தையே இழிவுபடுத்திய முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள்</b> கடந்த சில தினங்களாக நாட்டிýல் முஸ்லிம் மக்களிடையேயும், முஸ்லிம் அரசியலிலும் பரபரப்பாகவும், காரசாரமாகவும் பேசப்பட்டுவரும் }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவ10ப் ஹக்கீமுடன், குமாரி கூýரே என்ற பெண்மணியையும் இணைத்து சோடிýக்கப்பட்டு வெளிவந்த சதித்திட்டம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. பல கோடிý ரூýபாய்கள் பணத்துக்கும், முக்கிய அமைச்சர் பதவிகளுக்கும் ஏமாந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்னின்ற வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐ.தே. முன்னணியில் போட்டிýயிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், திருமலை மாவட்ட மு. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ.மஜீத் ஆகிய இருவரும் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் முஸ்லிம் சமூýகத்தின் கோபத்துக்கும் விசனத்துக்கும் ஆளாகியுள்ளனர். திட்டமிட்ட இச்சதி முயற்சிக்கான பொய்களைச் சோடிýத்து வெளியிடுவதன் மூýலம், மு.கா. கட்சித் தலைவரை கட்சியைவிட்டு நீக்குவதுடன், கட்சியையும் அழித்துவிடலாம் என்ற நோக்கில் ஈடுபட்ட இவ்விரு முஸ்லிம் பிரதிநிதிகளும் இப்பொய்களை உண்மையாக்க பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்களின் முயற்சி வெற்றியளிக்காததையடுத்து இவர்களுக்கெதிரான குரல் முஸ்லிம் சமூýகத்தில் பலமடைந்துள்ளது. இச்சதித்திட்டத்தினால் }லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் மட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரஸ் கட்சிப் போராளிகள், முஸ்லிம் சமூýகம் என்பனவும் வெட்கித் தலைகுனிந்து நிற்பதுடன், பலத்த சந்தேகங்களையும், பெரும் சீற்றத்தையும் இது தோற்றுவித்துள்ளது. கடந்த 16ஆம், 17 ஆம் திகதிகளில் அரச இலத்திரனியல் ஊடகங்களான ரூýபவாஹினி 'ஐ" அலைவரிசை, சுயாதீன தொலைக்காட்சி என்பவைகளில் ஒளிப்பரப்பப்பட்ட குமாரி கூýரேயின் வாக்குமூýலம் ஒளிப்பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவு நாடாவைப் பார்த்தவர்கள் இது உண்மையிலேயே சோடிýக்கப்பட்ட, திட்டமிட்ட ஒரு நாடகம்தான் என உணர முடிýந்தது. அரச ஊடகங்களில் மட்டும் அடிýக்கடிý ஒளிபரப்பியதைப் பார்க்கும்போது, இது வேண்டுமென்றே அரசினால் திட்டமிட்டு, ரவ10ப் ஹக்கீமின் தனிப்பட்ட வாழ்க்கையை நாசமாக்க வேண்டும், முஸ்லிம் மக்களிடையே இவர்மீது வெறுப்புக்களையும், ஆவேசங்களையும் ஏற்படுத்தி கட்சித் தலைமைத்துவத்திலிருந்து நீக்க வேண்டும், முக்கியமாக முஸ்லிம் சமூýகத்தையே இழிவுபடுத்தி காங்கிரஸ் கட்சியையும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே இப்போலி சதித்திட்டம் அடங்கிய ஒளிநாடா ஒளிபரப்பப்பட்டது என்றே முஸ்லிம்கள் மட்டுமன்றி, மாற்று இன மக்களும் கருதுகின்றனர். தனியார் இலத்திரனியல் ஊடகமான 'சிரச" தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் இதுபற்றிய உண்மைத் தன்மையைக் கண்டறியும் பொருட்டு பிரஸ்தாப பெண்ணான குமாரி கூýரேயுடன் தொடர்பு கொண்டு விசாரித்தபோதுதான், இதன் உண்மைத் தன்மையை அவராகவே வெளியிட்டார். அவர் கூýறும்போது, முன்னர் வெளிவந்த ஒளிநாடா என்னை ஏமாற்றி, ஆசைவார்த்தைகளைக் கொட்டிý, பயமுறுத்தியும் என்னைக் கொண்டு பொய்களால் சோடிýக்கப்பட்ட ஒரு நாடகம் எனவும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூýடிýய ஒரு செயலைச் செய்துவிட்டேனே என்ற மன உறுத்தலினாலும், எனது பாதுகாப்புக்காகவும் நடந்தவைகளை உண்மையாகக் கூýறுவதாகவும் அளித்த செவ்வியை, கடந்த 17 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் 11.30 மணிவரை தமிழாக்கத்துடன் 'சிரச" தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை இன, மத கட்சி வேறுபாடிýன்றி பார்த்தவர்கள் இதுதான் உண்மை என்பதை ஊகித்துக் கொண்டிýருப்பர். இச் சதித்திட்டத்தின் முக்கிய சூýத்திரதாரியாக ரிசாட் பதியுதீன் செயல்பட்டிýருக்கிறார் என்பதும், இத்திட்டம் வெற்றியளித்திருப்பின் இன்று ரிசாத்துக்குப் பல கோடிý ரூýபாக்கள் பணமும், பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியும், சொகுசு வாழ்விற்கான சகல ஏற்பாடுகளும் கிடைத்திருக்கும். அதேபோன்று, அவரின் ஏனைய சகாக்களுக்கும் கோடிýக்கணக்கான பணம், அமைச்சு, பிரதி அமைச்சுப் பதவிகளும் கிடைத்திருக்கும். கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற சபாநாயகர் தெரிவின்போது, ரவ10ப் ஹக்கீமின் மனநிலையைப் பாதித்து, திசை திருப்பியும், சபாநாயகருக்கான தெரிவின்போது வாக்களிக்காது பாராளுமன்றத்தை விட்டு வெளியேற வைக்கும் நோக்கில், திட்டமிட்டு ரவ10ப் ஹக்கீமின் மனதைச் சஞ்சலப்பட வைக்கும் வகையிலும், அச்சுறுத்தல் விடுத்தும் அப்பெண்ணினால் எழுதிய கடிýதம் அன்றைய தினமே ஹக்கீம் பாராளுமன்றத்துள் வரும்போது 'லிப்ட்"க்கருகில் வைத்து அப்பெண்ணினால் கொடுக்கப்பட்டதும், ரவ10ப் ஹக்கீம் அக்கடிýதத்தை வாங்கி கோட் பக்கட்டிýல் படிýத்துப் பார்க்காது வைத்துக் கொண்டதும், இவர்களின் சதி நாடகத்துக்கு ஏற்பட்ட படுதோல்வியாகும். குமாரி எனும் அப்பெண்ணினால் கொடுக்கப்பட்ட அக்கடிýதத்தை ரவ10ப் ஹக்கீம் பிரித்துப் படிýத்திருந்தால், அவரின் மனம் ஒருநிலையில்லாது நாலா பக்கமும் பாய்ந்தோடிýயிருக்கும். சஞ்சலப்பட்டிýருப்பார். நிதானம் தவறியிருப்பார். இவரும் பாராளுமன்றத்தை விட்டு அவ்வேளையிலேயே வெளியேறியிருப்பார். ரிசாத்தைப் போன்றவர்கள் அரசதரப்பில் சபாநாயகருக்காகப் போட்டிýயிட்டவருக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்திருப்பர். அவர்களின் திட்டமும் வெற்றியடைந்திருக்கும். இச்சதி முயற்சிகளும் மூýடிý மறைக்கப்பட்டிýருக்கும். அதன்பின்னர், இவர்களும் அரசபக்கம் சென்றிருப்பர். ஆனால், இத்திட்டமும் தோல்விகண்டதினாலேயே இத்திட்டத்தை உண்மையாக்கி வெளியிட முனைந்தனர். இதிலும், மூýக்குடைபட்டு மதிப்பிழந்து இன்று, 'ஆப்பிழுத்த குரங்காக"த் தவிக்கின்றனர். இதனால், வெகுவாகப் பாதிக்கப்பட்ட ரவ10ப் ஹக்கீம் பதற்றப்படாமல், நிதானமாக தனது கடமைகளைச் செய்துவருகின்றார். இவரின் நிதானமான போக்கும் பொறுமையும் அரசியல் சாணக்கியமும்தான் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெண்ணை சம்பந்தப்படுத்தி அவதூறுகளை ஏற்படுத்தியும் எத்தனையோ பேர் பணம் - பதவி ஆசையினால் கட்சியை விட்டு 'பல்டிý" அடிýத்துக்கொண்டு சென்றும், தனிமரமாக நின்றாவது கட்சியைக் காப்பாற்றுவேன் என்ற மனஉறுதி அவரிடம் இருக்கின்றது. குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும் என்பார்கள். அது ரிசாத் பதியுதீன் மூýலம் நிரூýபிக்கப்பட்டுள்ளது. அவரின் பதற்றமும் ஆவேசமும் அவர்தான் குற்றவாளி என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதில், தான் சம்பந்தப்படவில்லை என்றிருந்தால் ஏன் அடிýக்கடிý பத்திரிகையாளர் மகாநாடுகளைக் கூýட்டிý அறிக்கைகளைவிட வேண்டும். ஏன் தனது வன்னி மாவட்ட மக்கள் அதிகமாக வாழும் புத்தளத்தில் உள்ள தனது வீட்டுக்கும், ஆதரவாளர்களில் குறிப்பிட்ட ஒரு சிலரைச்சந்திக்க, சாதாரண ஒரு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அரசாங்கத்தின் ஏற்பாட்டிýல், ஜனாதிபதிக்குரித்தான பாதுகாப்பு புடைசூýழ சென்று வர வேண்டும். தனது ஆதரவாளர்களைச் சந்திக்க ஏன் தயங்க வேண்டும்? இச் சதித்திட்டம் அம்பலத்துக்கு வரமுன்னரே கடந்த 16.05.2004 ஆம் திகதிய 'நவமணி" எனும் வாராந்த பத்திரிகையில் 'மு.கா. கட்சியையும் அதன் தலைமையையும் அழிக்கும் இரகசிய சதி அம்பலம்" என முதற் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிýருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில்தான் வெளிவர வேண்டிýய இப்பத்திரிகை வழமைபோல் நாட்டிýன் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமையே விற்பனைக்கு வந்துவிடும். மேற்படிý செய்தி 'நவமணி" யில் வெளிவருவதை உணர்ந்த ரிசாத் பதியுதீன், இப்பத்திரிகை விற்பனைக்கு விடப்பட்டால் தமது சதிமுயற்சி அம்பலமாகும் என்ற அச்சத்தில், தமது ஆதரவாளர்களினால், இப்பத்திரிகை புத்தளம் மாவட்டத்தில் குறிப்பாக தமது ஆதரவாளர்களினால், வன்னி மாவட்ட மக்கள் வாழும் புத்தளம் தொகுதியிலுள்ள விற்பனை முகவர்களிடம் எல்லாப் பத்திரிகைகளையும் முற்பணம் கொடுத்து வாங்குவதன் மூýலம் இச்சதி நாடகத்தை மறைக்க முயன்றதேன்? செய்ய வேண்டிýயவைகளை எல்லாம் செய்து, முஸ்லிம் சமூýகத்தையே இழிவாக்கி, ஒரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் பேரிடிýயை உண்டாக்கிவிட்டு, தான் நல்லவன், சுத்தமானவன் என்பதை சமூýகத்தில் மீண்டும் நிரூýபிப்பதற்காக மு. காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன், நஜீப் ஏ. மஜீத் மற்றும் மு. காங்கிரஸ் கட்சியின் மஜ்லிஸ் அர்;ர்{ரா தலைவர் அர்;nர்ய்க் மஸிஹ{தீன், இனாமுல்லா ஆகியோர் பல அறிக்கைகளை விட்டுவருகின்றனர். ஆனால், நஜீப் ஏ.மஜீத் இன்று வரையும் எந்தவித மறுப்பறிக்கையும் விடாது மௌனம் சாதிப்பதன் மர்மம் என்னதானோ! மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பார்கள். ரவ10ப் ஹக்கீமை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான போராட்டத்தைத் தொடரப் போவதாகவும், கட்சியிலிருந்து இடைநிறுத்தியமைக்காக சட்ட நடவடிýக்கை எடுக்கப் போவதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளையோ ஒரு போதும் பெறமாட்டேன் என சூýளுரைக்கும் ரிசாத் பதியுதீன், மு. காங்கிரஸ் சார்பில் ஐ.தே.முன்னணி தேசியப் பட்டிýயல் மூýலம் எம்.பி.யான ஹ{ஸைன் பைலா, கட்சிக்குத் துரோகமிழைத்துவிட்டு அரசு தரப்புடன் இணைந்து கொண்டதை வன்மையாகத் கண்டிýப்பதுடன், சிங்கள பௌத்தரான புர்;பகுமார, முஸ்லிம் இனத்தவர் ஒருவருக்கு இடம்கொடுப்பதற்காக தனது தேசியப் பட்டிýயல் எம்.பி. பதவியை நம்பிக்கைக்குத் துரோகமிழைக்காது இராஜிநாமாச் செய்து கட்சியின் கட்டுக்கோப்பை பேணி முன்மாதிரியாக நடந்துகொண்டமையையிட்டு வரவேற்பையும் நன்றியையும் அவரின் அறிக்கைகளில் தெரிவிக்கின்றார். ரவ10ப் ஹக்கீம், குமாரி கூýரே சம்பவம் உண்மையாகவே நடந்திருந்தால், இச்சம்பவம் மூýடிý மறைக்கப்பட்டு இரகசியமாக இதன் உண்மைத் தன்மைகளை பின்வரும் அடிýப்படையில் ரிசாத் பதியுதீன் மேற்கொண்டிýருந்தால், இன்று முஸ்லிம் சமூýகம் மற்றவர்களின் கேலிக்கும், நகைப்புக்கும் ஆளாகாது காப்பாற்றப்பட்டிýருக்கலாமல்லவா? பிரஸ்தாப பெண்மணி குமாரி கூýரேயை, ரவ10ப் ஹக்கீமின் வீட்டிýற்கருகில் இரவு 11 மணியளவில் கண்டதாகவும், அவரிடம் வினவியபோது, ஹக்கீம் மீதான குற்றச்செயலை சுமத்தியதாகவும், ரிசாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கூýறுவது போன்று உண்மையில் அந்தப் பெண்ணைக் கண்டிýருந்தால், ஹக்கீமின் வீட்டிýற்கே அக்கணமே அழைத்துச் சென்று அவர் முன்னாலே விசாரித்து ஒரு முடிýவுக்கு வந்திருக்கலாம். அப்படிý முடிýயாதவிடத்து, அப்பெண்ணை நாளை அல்லது வேறு ஒரு தினத்தில் வரவழைத்து, தங்களுடன் இன்னும் பல மு.கா. கட்சி உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு அப்பெண்ணை அவர் முன்னாலே வைத்து விசாரித்திருக்கலாம். அதையும் ரவ10ப் ஹக்கீம் தட்டிýக்கழிப்பாரானால் உலமாக்கள், முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் சட்டத்தரணிகள் இன்னும் பலரையும் அழைத்து அவர்களின் முன் நிறுத்தி விசாரித்திருக்கலாம். இதைவிடுத்து, நள்ளிரவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு ஏன் கூýட்டிýச் செல்ல வேண்டும்? ஒரு முஸ்லிம் கட்சி, அதுவும் தான் சார்ந்திருக்கும் கட்சியின் தலைவருக்கும் - அப்பெண்ணுக்கும் தொடர்பிருந்தது உண்மை என்றால், அது ஒன்று கட்சியின் உயர்பீடத்தினால் விசாரித்து முடிýவாக்கப்பட்டிýருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் உலமா சபையினால் விசாரித்து முடிýவு எடுக்கப்பட்டிýருக்க வேண்டும். அப்படிýயல்லாது, ஜனாதிபதியிடம் அப்பெண்ணைக் கூýட்டிýச் செல்வதற்கான காரணம் என்ன? சபாநாயகர் தெரிவு செய்யப்படும் தினத்தில்தானா அதுவும் பாராளுமன்ற'லிப்ட்"டுக்கருகில் வைத்து அப்பெண்ணினால் ஹக்கீமிடம் அக்கடிýதம் கொடுக்கப்பட வேண்டும். ஏன் அக்கடிýதம் பாராளுமன்றம் கூýடுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, பாராளுமன்றம் அல்லாது வேறு ஒரு இடத்தில் வைத்துக் கொடுக்கப்பட்டிýருக்கலாம்தானே! பாராளுமன்ற சபாநாயகர் தெரிவன்று ஒரு சாதாரணமான இப் பெண்ணை பாராளுமன்றத்தில், அதுவும் இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் விருந்தினர்கள் அமரும் 'கலரி"யில் அதுவும் முன்வரிசையில், ஹக்கீமுக்கு முன்னால் உள்ள ஆசனத்தில் ஏன் உட்காரவைக்கப்பட வேண்டும்? அதற்கு யார் சிபார்சு கொடுத்தது? அப்பெண்ணின் கூýற்றுப்படிý இதற்கு அரச தரப்பு அமைச்சர் ஒருவர் உதவியுள்ளார் என அறியப்படுகின்றது. பாராளுமன்றத்தில் சபாநாயகர் தெரிவன்று ஹக்கீம் - குமாரி என ஏன் ஓரிருமுறை ஒலிக்கப்பட வேண்டும். யாரால் ஒலிக்கப்பட்டது. உண்மையிலே அப்பெண் ஹக்கீமினால் பாதிக்கப்பட்டிýருந்தால் அவரின் குடும்பத்தார்கள் குறிப்பாக மாமனார், மனைவி மற்றும் அவரின் உற்றார் உறவினர்கள் மூýலம் இது சம்பந்தமாக கலந்துரையாடிý ஒரு சுமுகமான முடிýவுக்கு வந்திருக்கலாம் தானே? அப்பெண்மணியின் ஜா-எல வீட்டுக்குச் சென்றதாகவும், ஹக்கீம் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய வீடிýயோ ஒளிநாடாவையும், கடிýதம் ஒன்றையும் அப்பெண்ணிடமிருந்து பெற்றதாகவும் குறிப்பிடுகின்றனர். அப்படிý இவைகள் கிடைத்தவுடன், ஏன் அரச ஊடகங்களுக்கும் மட்டும் கொடுத்து வெளியிட வேண்டும். தனியார் ஊடகங்களுக்கு கொடுத்திருக்கலாம்தானே! இந்த ஒளிநாடாவையும், கடிýதத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் முதலானோர்களைக் கூýட்டிýக் இத்திட்டம் அம்பலமாவதற்கு முன்னர் அவர்களின் முன்னால் ஒளிபரப்பியும், படிýத்துக் காட்டிýயும் இதற்கான நடவடிýக்கைகளை அவர்களிடமே விட்டிýருக்கலாம்தானே! இவைகள் எந்த வழியும் தெரியாதவிடத்து, உண்மையாகவே அந்தப் பெண் ஹக்கீமினால் பாதிப்படைந்திருந்தால் குமாரி கூýரே ஆதாரங்களுடன் ஏன் நீதிமன்றத்தை நாடிý சட்ட நடவடிýக்கைகளில் ஈடுபட்டிýருக்கலாம்தானே! இவ்வாறான, பல வினாக்களை சாதாரண படிýப்பறிவற்ற மக்கள்கூýட எழுப்பி, அதற்கான விடைகளைக் காணும்பட்சத்தில் இச்சதித்திட்டத்தின் உண்மைத்தன்மை புலப்படும். அத்துடன், இது ஒரு சோடிýக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிýக்கை என்பது தெட்டத்தெளிவாக விளங்குகின்றது. இச்சதித்திட்டத்தின் சூýத்திரதாரி ரிசாத் பதியுதீன்தான் என அறிந்த அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்ட மக்கள் வாழும் புத்தளம் பகுதியில்தான் முதன் முதல் இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதோடு, அவர்களின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்ட நிலையில் மு.கா. கட்சிக்கும், அதன் தலைவர் ஹக்கீமுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பப்பட்டது. வன்னி மாவட்ட முஸ்லிம் அகதிகள், ரிசாதின் ஆதரவாளர்கள், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கட்சி பேதங்களை மறந்து நள்ளிரவில் ஒன்று சேர்ந்து பெரும் ஆர்ப்பாட்டத்துடன் அவரின் புத்தளம் நகரில் அமைந்துள்ள அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அலுவலகத்தைச் சுற்றி ஏற்கனவே அரசினால் பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டிýருந்ததால், ஆவேசம் கொண்ட மக்கள் முஸ்லிம் சமூýகத் துரோகியே! கோடிýக்கணக்கான பணத்துக்கும் அமைச்சுப் பதவிக்குமாக சமூýகத்தையே அடகு வைத்த கோடாரிக்காம்பே! எட்டப்பரே என பலவாறான இழி சொற்களையும் பாவித்து வெறுப்பையும் ஆத்திரத்தையும் கொட்டிýத்தீர்த்தனர். இச்சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக் கருதப்படும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ.மஜீட், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐ.தே. கட்சித் தேசிய பட்டிýயல் மூýலம் நியமனம் பெற்று தற்போது அரச தரப்புக்கு 'பல்டி" அடிýத்த, பாராளுமன்ற உறுப்பினர் உசைன் பைலா மற்றும் இவர்களின் ஊதுகுழலாக கட்சியை விட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ள, மு.கா. கட்சியின் மஜ்லிஸ் அர்;ர்{ரா தலைவர் அர்;nர்ய்க் மஸிஹ{தீன் இனாமுல்லா ஆகிய நால்வருக்கும் எதிராக தற்போது நாட்டிýன் நாலாபகுதிகளிலும் முஸ்லிம் மக்கள் குமுறிக் கொண்டிýருப்பதுடன் ஆக்ரோர்மான எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 21.05.2004 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் நாட்டிýன் பல பாகங்களிலும், இச் சமூýக விரோதிகளின் செயல்களுக்கெதிராக, பல கோர்ங்களை கோர்pத்த வண்ணம் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும், இந்நால்வரின் கொடும்பாவிகளை கட்டிý இழுத்து, ஊர்வலமாகச் சென்று எரித்ததுடன் கண்டனக் கூýட்டங்களையும் நடத்தினர். சதித்திட்டம் அம்பலப்படுத்தப்பட்டதினால் இவர்கள் இன்று முஸ்லிம் சமூýகத்தில் மூýக்குடைபட்டவர்களாக, முஸ்லிம்களின் எதிரிகளாகவும், துரோகிகள் என்ற பட்டத்துடன் தத்தமது பகுதிகளுக்குச் செல்லமுடிýயாது அரச பாதுகாப்பில் இருந்து வருகின்றனர். இவர்கள் எப்படிýயாவது தாம் செய்த தவறுகளையும் சதித்திட்டங்களையும் உண்மை என நிரூýபிப்பதற்காக எவ்வாறெல்லாம் முயற்சி செய்கின்றனர். மக்கா சென்று சத்தியம் செய்யப் போகின்றார்களாம். கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிýயினுள் இறங்கப் போகின்றார்களாம். ஆனால், மக்கா சென்று சத்தியம் செய்தால் அதன் நன்மை - தீமை மறுமையில்தான் தெரியும். கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிýயினுள் இறக்கிப்பார்த்தால் இவர்களின் உண்மை - பொய்களை அவ்விடத்திலேயே அறிந்துகொள்ள முடிýயும். எண்ணெய்ச் சட்டிýயினுள் இறங்க இவர்கள் முன்வருவார்களா? தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
|
|
« Next Oldest | Next Newest »
|