Shan Wrote:Quote:ஒன்றை திருப்பி திருப்பி சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்றது அந்தக் காலம்.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பது; பொய் தீர விசாரித்தறிவதே உண்மை!!!
கருத்து களம் கருத்தாடலுக்கே!
மீட்புப்பணியா.. சகோதரக்கொலையா.. என்ற விவாதத்திற்கு முன்னம் ஆரம்பத்தில் எடுத்த எடுப்பில் துரொகிப்பட்டம் சூட்டியதற்கு நான் கண்டனம் தெரிவித்ததை நீங்கள் அறியவில்லைப்போலும்.. இத்தனைக்கும் காரணமே கொடுத்த துரொகிப்பட்டம் என்பதை மறுக்கமுடியாது.. தற்போதைய ஆய்வுகள் காரணத்தை ஆராய்ந்த தீர்வுகாண முற்படுகின்றன..
எடுத்த எடுப்பில் துரொகிப்பட்டத்தையும் கொடுத்துவிட்டு தினமும் வேறு வேறு பொதுப்படையான காரணங்களை சொல்லி ஏமாற்றியதை ஆரம்பத்திலிருந்த அவதானித்ததனாலேயே எனது கருத்தும் கருணாவுக்கு ஆதரவாக மாறியதே தவிர எவரையும் தாக்கும் எண்ணத்திலில்லை..
நிதிமோசடி.. பெண்பிரச்சனை.. அந்நிய சக்திகளின் தூண்டுதல் பிரதேசவாதம் என நாளுக்குநாள் மாற்றி மாற்றி பேசப்பட்ட வதந்திகளுக்கு இவர்களால் நிறைவான ஆதாரம் எதையும் கொடுக்கமுடியவில்லை.. யாரும் எவரும் இந்த இடத்தில் இருக்கிறேன் இப்படி இப்படி நடக்கிறது என இணையத்தளத்தில் வதந்தி பரப்பலாம்.. வானொலியில்கூட எடுத்த எடுப்பில் நஞ்சை பரப்பலாம்.. ஏன் ஒருவரே பல பெயரில் வேறு வேறு இடங்களில் இருப்பதாக வதந்திகள் பரப்பலாம்.. அதற்கெல்லாம் எடுபட்டு குருடனாக எழுதுவதெல்லாவற்றையும் நம்புமளவிற்கு எனது மனம் உங்களைப்போல பக்குவப்படவில்லை..
மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள் அதற்கு ஆதாரம்.. தேர்தல் காலத்தில் கருணாதரப்ப பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மட்டக்களப்பின் வெற்றியை சுட்டி நிற்கின்றது.. இது கருணாதரப்புக்கு ஆதரவு இல்லை என்ற பரப்பரைக்கு கிடைத்த சாட்டைய என்பதை நீங்கள் ஒருவரும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை..
ஆயதபலம் ஆட்பலம் பிரச்சாரப்பலம் தேசியம் இத்தனை பலம் இருந்தும் கடைசியில் யார் வென்றார்கள்..? தமிழனை தமிழன் தாக்குவதுதான் வெற்றிக்கு வழியென போர்தொடுத்தால்.. அதற்கு பலியாகாமல் பின்வாங்கி தடுத்து சகோதரக்கொலையை நிறுத்துவதை என்னவென்று சொல்லுவது..
10 ஆம்திகதி அதிகாலை சண்டைதொடங்கிவிட்டது என்று கேள்விப்பட்டவுடன் பட்ட வேதனையை எப்படி விமர்சிப்பது..?
என்னிடம் இணையம் இல்லாத நிலையில் அந்தரப்பட்டுக்கொண்டிருந்தவேளையில் எரிக் சொல்கெய்ம் ஊடாக யுத்த நிறுத்த அறிவிப்பு வந்தபோது அடைந்த ஆறுதல் சொல்லி விளங்காது.. இப்படியிருக்க ஒருசிலர் யுத்தம்புரியாமல் ஓடி ஒளித்ததுபற்றி புலம்புவதை என்னால் ஏற்க முடியாது.. 18 வருடம் போர்புரிந்து இத்தனை வடுக்களின்பின் போர்நிறுத்தம் சமாதானம் என்று இரண்டு வருடங்கள் உலகமெல்லாம் திரிந்துவிட்டு சகோதரப்போர் தொடுப்பது எவ்வளவு மடைத்தனம்.
கருணா யாருடனாவது இணைந்த செயற்படுவாராயின்.. போராட்டம் இச்சம்பவத்தால் பின்னடைவுபெறுமாயின் அதற்கான முழப்பொறுப்பும் பட்டம் கொடுத்தவர்களையே சாரும்.. அதற்கான முழப்பொறுப்பும் தலைமைதான் ஏற்கவேண்டும்.. இத்துடன் முடித்து உங்கள் கத்தல்கள் தூற்றல்கள் பட்டங்கள்.. பழிச்சொல்லுகளை எதிர்பார்த்து இத்துடன் நிறுத்துகிறேன்..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->