புலிகளின் தலைமையகம் தற்போது வன்னிதான், ஆனால் அப்படி அழைப்பது பிரதேசவாதம் என்று புலிகள் கருதுகின்றார்கள்.
பத்திரிகை செய்தி ....
'வன்னித் தலைமையை' தவிர்ப்போம்!
தேசியத்திற்காய் குரல் கொடுப்போம்!!
'வன்னித் தலைமையைத் தவிர்ப்போம்' என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு கருணாவிற்கு வந்த பிரதேச வியாதி எமக்கும் தொற்றிவிட்டதோ என்று நினைக்க வேண்டாம்.
விடயம் 'வன்னித் தலைமை' என்ற பதம் பற்றியதுதான். கருணாவிற்கு வருத்தம் முற்றிய பின்னர்தான் இந்தச் சொற்பதம் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியது. கருணாவைப் பொறுத்தவரை தனது பிரதேச வாதத்தை விற்பதற்கு இந்தச் சொற்பதம் தேவைப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. எனினும், இது போன்ற பதங்கள் குறுகிய பிரதேச வாதத்திற்கு முண்டு கொடுக்கும் எங்கள் பிரதேசக் கனவான்கள் சிலர் கருணாவிற்குச் சொல்லிக் கொடுத்த பதம் என்பதும் எமக்குத் தெரியாததல்ல. (இக்கனவான்களின் முகங்களை விரைவில் அம்பலமாக்கும் நோக்கோடு தகவல்களைத் திரட்டி வருகிறோம்)
ஆனால், பிரதேச வாதத்தை முற்று முழுதாக நிராகரித்து, ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்ற எம்போன்றவர்களுக்கு தலைமை என்பது தேசியத் தலைமைதான். அது தற்போது வன்னியில் உள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தது. தமிழீழத் தனியரசு அமைந்தவுடன் அது திருமலைக்கு மாறலாம். தலைமையின் இருப்பிடத்தை வைத்து அதனை வன்னித் தலைமை, மட்டுநகர் தலைமை எனக் கூறுபோட முடியாது என்பதே எமது நிலைப்பாடு. தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கின்ற அனைவரது நிலைப்பாடும அதுவாகத்தான் இருக்க முடியும்.
தமிழ் தேசியத்தை ஆதரித்து நிற்கின்ற சில வெகுசன ஊடகங்களும் 'வன்னித் தலைமை' என்ற பதத்தை அண்மைக்காலமாக பாவித்து வருவதைக் காண்கிறோம். அறியாது செய்யும் இந்தத் தவறை இனி தவிர்க்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
மிகுதி .... தமிழ் அலை நிழற்பதிப்பில்
http://www.thamilalai.net/news/2.html#fifteen
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>