Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நானும் அப்படிச் சொல்லவில்லை விடுதலைப் புலிகளின் பிரச்சாரம் என்னEPDP இன் பிரச்சாரமே நடக்கிறது அவ்வளவுக்கு இயல்பு நிலை திரும்பி விட்டது
நான் சொன்னது வெறுமனே நாமும் கருத்தரங்கு நடத்தினோம் என்று இருக்காமல் அதன் பயன் ஒவ்வொரு பெண்ணையும் போய்ச் சேரும் வகை செய்யவேண்டும் அதனை முன்னர் விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு செய்து வந்தது இப்போது அவர்கள் இயக்கம் பற்றிய கொள்கை விளக்கங்களில் தீவிரமாக மூழ்கியிருப்பதால் இதிலே கவனெடுத்து செய்ய முடியாதிருக்கிறது
அவர்கள் செய்த பணியைத் தொடர்வதற்கு தகுந்த நிறுவனங்கள் இல்லை என்பது எனது கருத்து சில தொண்டர் நிறுவனங்கள் செய்கின்றன தான் ஆனால் போதாது
எனவே மீண்டும் ஒரு சுமூக நிலை ஏற்படும் வரை காத்திருப்போம்
இலங்கை மண்ணில் அமைதி திரும்பினால் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மகிழ்ச்சியே தவறு என்று சுட்டுவதற்காக இதனைக் கேட்டீர்கள் என்று நான் நினைக்கவில்லை கருத்துக்குள் கருத்து எடுப்பது போன்ற ஒன்றோ என்று நினைத்தேன்
சரி உங்களுக்காக ஒரு தகவல் மாவீரர் தினம் கார்திகை 27ம் திகதி 26ம் திகதி. அல்ல சுட்டிக் காட்டவேண்டாம் என நினைத்தேன் சரியில்லை பின்னர் நீங்கள் நீங்கள் சொன்னது தான் சரி என நம்பிக்கொண்டிருப்பீர்கள் அதனால் தான்
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அந்த திகதியில் உண்மையிலேயே எனக்கு குழப்பம் தான். அதைப்பார்த்தே பத்தாண்டுகளுக்கு மேலாகின்றது. சுட்டிக்காடியதற்கு நன்றி. உண்மையிலேயே நீங்கள் சொல்லாவிடின் அதுதான் சரி என்று நினைத்துக்கொண்டிருப்பேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அலைகள் சிறுகதை 08.01.2004
மியாவ் !
பிள்ளைகள் பராமரிப்பு நிலையம்..
சிறியதும் பெரியதுமாக குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.. டேனிஸ், துருக்கி, தமிழ், சோமாலி என்று பல இனங்கள்... நண்பர்களாக, எதிரிகளாக ஓடுவதும், பாடுவதும், மோதுவதுமாக... சத்தம் காதைப் பிளந்தது..
சில அந்தச் சத்தங்களே தாலாட்டுக்கள் என்று எண்ணி ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தன..
தள்ளுவண்டியில் ஒரு குழந்தையை படுக்கவைத்து வெளியில் விட்டிருந்தார்கள்.. நெற்றியில் காய்ச்சிய கருஞ்சாந்துப் பொட்டு, கன்னங்கரேலென்ற கேசம்... அங்கிருப்பவர்களைப் பார்த்து அலறிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் மானின் மிரட்சி..
மூக்கால் சளி கொத்துக் கொத்தாகக் கொட்டுப்பட்டது.. கண்களில் தாயைத் தேடிய தவிப்பு.. அம்மா ... அம்மா .. என்ற அதன் மழலைத் தமிழ் அழைப்பு காற்றில் கரைந்து எங்கோ பறந்து தாய் இளமதியை அந்த இயந்திரத் தெருக்களில் தேடியது...
குழந்தை உறங்கும் என்ற நினைப்புக்களோடு தாய் வேலைத் தலத்தில் போராடிக் கொண்டிருந்தாள். மார்பில் பாலின் கனம்.. குழந்தை தமிழினி இரவும் சரியாக உறங்கவில்லை... என்னமோ ? ஏதோ.. அவளுள் தாய்மையின் தவிப்பு...
குழந்தை மேலும் குரலெடுத்து அழுதது... வயிற்றுவலியோ.. காய்ச்சலோ.. காதுக்குடைவோ... யாரறிவார்... அழுகை பலமாக இருந்தது.
அதன் அழுகை கேட்டால் கடவுளும் வானத்தில் இருந்து இறங்கியே தீருவார்...
மரத்தால் தாவிப் போன பூனையொன்று சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தது.. குட்டி போட்ட பூனை... அதன் கண்களில் தாய்மையின் ஏக்கம் தெரிந்தது.. குழந்தையின் குரல் அசாதாரணமென்பதை அந்த மிருகம்கூட கண்டுவிட்டது..
,மியாவ் ! மியாவ்!, பூனை பதிலுக்குக் குரல் எழுப்பியடி அருகில் ஓடிவந்து குழந்தையைப் பார்த்தது...
பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்யும் இரண்டு மூன்று டேனிஸ் பெண்கள் தங்களுக்குள் எதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.. அவர்களின் தலைவி கிரேட்டா சிகரட்டை குத்தி அணைத்தாள்..
, யாரோ அழுது கேட்கிறதே ! , இது சுசேனா.
, புதிதாக வந்த தமிழ் குழந்தை ரமிலினிதான் அழுகுது.. , கத்தரினா சொன்னாள்.
, ஓகே ! ஓகே ! புதுசா வந்தால் அப்படித்தான்... போகப்போக சரியாகியிடும்!,
, அழுகைச் சத்தம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே.. , சுசேனா முகத்தில் சிறு கலவரம்.
, சுசேனா ! நீ வேலைக்குப் புதுசு.. அதுதான் உனக்கு அப்பிடியிருக்கு .. புதுசா சிறைச்சாலை வாற கைதிபோலத்தான்... இதுவும்... அழுகை ஒப்பாரி , கிரேட்டா சமாதானம் சொன்னாள்.
குழந்தை தமிழினி விக்கிவிக்கி தாயைத் தேடி... தகப்பனைத் தேடி... எதுவுமே நடக்காமல் ஞானப்பால் வழங்க வரும் அம்மையப்பனை தேடுவதுபோல அழுதது. அந்தப் பரிதாபத்தைப் பார்த்து அருகில் கிடந்த கற்கள், மரங்கள் எல்லாம் அழத்துடிப்பது போல இரங்கின...
, சுசேனா நேற்று நீ தொலைக்காட்சி பார்த்தியா ? ,
, இல்லையே... ,
, கடைசி ரெக்ஸ் hP வியைத் தன்னும் தட்டியிருக்கலாம்... ,
, விN ம்... ,
, இரண்டாவது தலைமுறையா வந்திருக்கிற வெளிநாட்டுப் பெண்கள் எல்லாம் இப்ப கனக்க கனக்க பிள்ளையள் பெறுகினம்... அவர்களோடை ஒப்பிட்டால் டெனிஸ் பெண்கள் பெறும் அளவு அரைவாசியாத்தான் இருக்குதாம்... இதெல்லாம் எங்கே போய் முடியப்போகுதோ ? , கிரேட்டா ரெக்ஸ் hPவி கதையைச் சொன்னாள். அவளுடைய முகத்தில் இனம் புரியாத கவலை.
தமிழினி விக்கி விக்கி அழுதது.. குரல் உடைந்து ... நின்று .. அழுது... அதன் நம்பிக்கை மெல்ல மெல்லக் குலைகிறது.. கள்ளங்கபடமற்ற அந்த குழந்தை உள்ளம் கோடி கோடி துண்டுகளாக உடைகிறது... உள்ளம் விறைப்படைகிறது... அழுகை மெல்ல மெல்லக் குறைகிறது...
பூனை தயக்கத்துடன் வாலை ஆட்டியாட்டி நடக்கிறது.. ஏதோ தவறு நடப்பதுபோல அது கலவரப்படுகிறது பின் வாலை ஆட்டியபடி நிற்கிறது.. அது வாயில்லா ஜீவன்.
குழந்தை அழுகையை முற்றாக நிறுத்துகிறது..
பிள்ளைகள் உளவியலை பேசுவதற்கு பிரபல பெண்; உளவியலாளர் ஒருவர் வரப்போகிறார் என்ற தகவலை அறிவித்தல் பலகையில் போட்டுவிட்டு நேரத்தைப் பார்க்கிறாள் கிறேட்டா, ஐந்துமணி.
வேக வேகமாகச் சென்று தமிழினியைத் து}க்குகிறாள்... அதன் கண்களைத் துடைத்து மூக்கையும் சிமிந்தி விடுகிறாள். தலைமுடியை விரல்களால் கோதி வாரி விடுகிறாள். முருகனை மடியில் வைத்திருக்கும் பார்வதிபோல பாசமாக ஒரு பாவனை அவள் முகத்தில்...
து}ரத்தே வேலை முடிந்து இளமதி ஓடோடி வருவது தெரிகிறது... கலைந்த கேசம், வியர்வை வடிந்த தோற்றம்.. எங்கோ ஒரு கோழிப்பண்ணையில் மாடாக முறிந்துவிட்டு வருகிறாள்...
குழந்தைக்காக மார்பகங்களில் பால் கசிவது போன்ற உணர்வு. ஐயோ ராத்திரியும் உறக்கமில்லாமல் அழுதது... பாலோடு மனமும் கனத்தது...
ஓடிவந்து தமிழினியைப் பார்க்கிறாள்.. அது சிரிக்க மறந்து அவளையே வெறித்துப் பார்த்தபடி இருக்கிறது..
, தமிழினி நல்ல பிள்ளை.. ஒரு குழப்படியும் இல்லை.. பிள்ளைக்கு இங்கை வாறதென்றால் நல்ல விருப்பம்... அருமையான பிள்ளை.. ம் ஆ.. , கிறேட்டா குழந்தையை தாயிடம் கொடுத்தபடி சொன்னாள்.
ஒரு குழந்தையின் உளவியல் ஆயிரம் சம்மட்டிகளால் அடித்து நொருக்கப்பட்டு விட்ட கதையை அங்கே யார் யாருக்கு சொல்லப் போகிறார்கள்...
, குஞ்சு... செல்லக்குட்டி... எனம்மா அம்மாவிலை கோபமோ .. சிரியம்மா ! அட சிரிக்கமாட்டியோ... , இளமதி குழந்தை சிரிக்க மறுப்பதைப் புரியாதவளாக மெல்லிய கவலையுடன் நடக்கிறாள்.
, மியாவ்...,
திரும்பிப் பார்க்கிறாள்.. அந்தப் பூனை அவளைப் பார்த்து என்னவோ சொன்னது...
, நீ மாடாய் உழைத்து... நாற்பத்தைந்து வீதம் வரி கட்டி... மிகுதி உழைப்பில் பாதியை பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்துக்குக் கொடுத்து... இரண்டாவது தலைமுறை அகதிப் பெண்கள் அதிக பிள்ளைகள் பெறுகிறார்கள் என்று அவமானப் படுத்தப்பட்டு... உன் பிள்ளையின் சிரிப்பைத் தொலைத்து... அந்தக் குழந்தை உள்ளத்தை நொருக்கி... தாயே இந்த வாழ்வு உனக்குத் தேவையா ?
மியாவ் !
பூனை மனிதர்கள் உலவும் இடத்தைவிட்டு பாய்ந்து ஓடுகிறது.. அதன் ஒலியில் ஆயிரம் அர்த்தங்கள்... அறிந்தும் அறியாதவளாய் தமிழினியுடன் நடக்கிறாள் இரண்டாவது தலைமுறை அகதி இளமதி.
யாவும் கற்பனை. கி.செ.துரை 08.01.2004
நன்றி அலைகள் இணையத்தளம்
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
'பெண்கள் எனக்கு பிடிக்கும். அவர்களின் முகம் தரும் பிரகாசத்தால் எனக்கு புத்துணர்வு வருகிறது. ஆனால் அவர்கள் எப்பொழுதும் வாயை முடிக்கொண்டு இருக்க வேண்டும்' என்று பெண்களை பற்றி பிரபல கவிஞர் பெர்னார்ட்ஷா இப்பொழுது உயிருடன் இருந்து சொல்லி இருந்தால் வெளியே அவரால் தலை காட்ட முடியாது. ஆனால் இன்றும் பெண் சுதந்திரம் இல்லை என்று குரல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. இது குறித்து பலரிடம் கேட்ட போது :
"வியர்வை சிந்தி சமைத்து குடும்பத்திற்கு உழைக்கும் பெண் அவளது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடையும் பொழுது அப் பெண்ணின் துன்பங்கள் அனைத்தும் காணாமல் போய்விடும் என பெண்மையை பற்றி பழமையான கருத்து ஒன்று உண்டு. ஆனால் என்னைப் பொறுத்த வரை எனக்கு கை கால் வலியும் சோர்வு தான் ஏற்படுகிறது" என நகைச்சுவையுடன் பேசும் தீபா ஒரு மின் வாரிய ஊழியர். "உழைக்கும் பெண்களுக்கு ஒரு நாள் விழா வேண்டும் என்று அதற்கு உலக மகளிர் தினம் என கோபன் கேகனில் பெயர் வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றும் உடல் உழைப்பில் வாழும் கிராமப்புறப் பெண்களின் நிலை மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது. நகரப்புறப் பெண்களின் நிலையில் தான் முன்னேற்றம் இருக்கிறது. ஒரு தனி ஆணிற்கு இருக்கும் சுதந்திரம் ஒரு தனி பெண்ணிற்கு இன்று இல்லை.
"இன்று பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரங்கள் அனைத்தும போராட்டங்களால் பெறப்பட்டவைகள்தான். ஆண்கள் தங்களது கல்லூரி நண்பர்களை பார்க் பீச் போன்ற இடஙகளில் சந்தித்து தங்களத நட்பை புதிப்பித்துக் கொள்கின்றனர் ஆனால் ஒரு பெண்ணால் அப்படி இருக்க முடியவில்லை. திருமணம் ஆனவுடன் தனது குடும்பம் தனது உறவு என்று பெண்ணின் வாழ்க்கை வட்டம் சுருங்கி மெழுகுவர்த்தி போல் கரைந்து விடுகிறாள். இச்சமுக மாற்றமும் நடைமுறையும் மாற வேண்டும்.
இன்றைய திரைப்படங்கள் முதல் தொலைக்காட்சிகள் வரை உள்ள வெகுஜன ஊடகங்கள் பெண்ணியத்தை தூக்கிப் பிடிக்கவில்லை என்றாலும் பெண் சாதனையாளர்களும் அதிகாத்துக் கொண்டு தான் வருகின்றனர்.
பெண் உரிமை பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்ட போது,
"ஆண்களைப் போலவே பெண்களுக்கும் இன்பம், துன்பம், உறவுகள், வலிகள், நெருக்கடிகள் சோதனைகள், சவால்கள் இருக்கின்றன. ஆண்களுக்குப் பிரச்சினைகளின் எண்ணிக்கை ஆறு என்றால் பெண்களுக்கு ஆண்களையும் சேர்த்து ஏழு பிரச்சினைகள். இருவருக்குமே பிரச்சனைகளின் எண்ணிக்கை ஆறு என்று வரும் பொழுது பெண் உரிமை பெண் விடுதலை கிடைத்துவிட்டதாக நம்பலாம் என்று பெண் உரிமை பற்றி பிரபல பெண்ணிய கவிஞர் தாமரை ஒரு முறை கூறி கருத்து தான் நினைவிற்கு வருகிறது. இன்றைக்கு பெண்ணுரிமை என்பது கிராமப்புறங்களில் மதிப்பு இழந்து காணப்படுகிறது. ஏனெனில் அங்கு ஆணும் பெண்ணும் உடல் உழைப்பினைச் சார்ந்து வாழ்கிறார்கள். அங்கு வீட்டு வேலைகளை மனைவி செய்தால் தனது மாடு ,ஆடு போன்றவைகளை வீட்டில் கவனித்துக் கொள்ளும் பணியை கணவன் செய்கிறான்.அவர்களுக்குள் பணிப் பிரிப்புச் செய்து கொள்கின்றனர். ஆனால் நகரங்களில் ஆண் பெண் வேலைக்குச் செல்வதால் அலுவலக பிரச்சினை, ஈகோ போன்ற காரணத்தால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனை புரிந்து கொண்ட ஆண்கள் பணிகளை பகிர்ந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளாத இடங்களில் பிரச்சனைகள் என்று ஆகி விடுகிறது. என்னைப் பொறுத்த வரை கடந்த 15 வருடமாக பெண் சமுக முன்னேற்றத்தைப் பார்க்கையில் ஆண்களைவிட அவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் பெண் பார்க்க மாப்பிள்ளை வரும் காலம் போய் மாப்பிள்ளை பார்க்க பெண்கள் வந்து விடுவார்கள் பாருங்கள்" என்கிறார் இவர்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பெண் என்றாலே நிர்வாணம்தான் -ஆண் மேலாதிக்க ஓவிய மொழி குறித்து
எமது பார்வைகள் பெரும்பாலும் தன்னிலைகள் சார்ந்தவை. இனம், வர்க்கம், பால், சாதி மதம் என ஏதோ ஒன்றைச் சார்ந்துதான் நாம் ஒவ்வொருவருக்கும் வரையறுக்கப்பட்டிருக்கின்றோம். அல்லது வரையறைகளை உருவாக்கியிருக்கிறோம். சிந்தனையாளர் தாமஸ்லாஸ் சொல்வது போன்று மனித உலகின் சட்டம் என்பதே வரையறு அல்லது வரையறுக்கப்படு என்பதுதான்.
நமது இயங்குதளத்திற்கு ஏற்ப பேசு பொருள்கள் மாறுகின்றன. சமூகப் பார்வைக் கோணங்கள் வேறுபடுகின்றன. அவ்வளவுதான். இவற்றிற்கு அப்பாற்பட்ட சித்தனைகள் இருப்பதாகச் சொல்லுவதெல்லாம் வெறும் பாசாங்கு தன்னிலை சார்ந்த பார்வைகள் பிழையென்பதல்ல வாதம். ஆனால் இவ்வாறான தன்னிலை சார்ந்த கருத்தியல்கள் (சில விளிம்பு நிலைக் கருத்தியல்கள் விதிவிலக்கானவை) பிற தன்னிலைகளை மறுதலிக்கும் அடக்கி ஒடுக்கும் ஆதிக்கக் கூறுமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்றஇ உண்மையில்தான் நாம் அதிக கவனக்குவிப்பைச் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பெரும்பான்மை இனம் சிறுபான்மைகளை அடக்கியாழ முற்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டி வாழ்கிறது. ஆண்பாலர் பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கின்றனர் உயர்சாதி எனப்படும் பிரிவினரால் சில மக்கட்பிரிவினர் ஒடுக்கப்படுகின்றனர். இம்சிக்கப்படுகின்றனர். மக்களில் அதிகமானவர்களை பற்றியிருக்கும் மதம் சிறுபான்மையோரின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துகின்றது. அவர்களின் தனித்துவத்தைச் சிதைக்க முற்படுகின்றது. இவ்வாறு ஒடுக்குமுறைக்குள்ளாகும் பிரிவினர் தமது தனித்துவத்தையும் சுய இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். தமக்கான கருத்தியல்களை தாமே வடிவமைத்துக் கொள்கின்றனர். மீண்டும் தன்னிலை சார்ந்த பார்வைகளே மேலேழுகின்றன. இந்த வகையில்தான் தேசியம்இ பெண்ணியம், தலித்தியம் போன்ற கருத்தியல்கள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
நாம் ஆணியப்பார்வை என்னும் தன்னிலை சார்ந்த பார்வையிலிருந்து விலகி நவீன ஆண் ஓவியர்களின் ஓவிய மொழியைக் கட்டவிழ்க்க முயல்வோம். <span style='color:#ff0024'><b>நாம் பொதுவாகவே தன்னிலை சார்ந்து (ஆண் நோக்கில்) சிந்திக்கும் பழக்கம் உடையவர்களே அன்றி, பெண்ணிலை சார்ந்து சிந்திக்கும் பழக்கமுடையவர்களல்ல. நான் என்னையும் உள்ளடக்கி ஆண்களைச் சொல்கிறேன். இது காலாதிகாலமாக கடத்தப்பட்டு வரும் ஆண் தலைமைத்துவ பண்பு நிலை. எமது பேச்சு எழுத்து செயல் எல்லாவற்றிலும் பெண்களுக்கு இராண்டாம் இடம்தான்</b>. இந்நிலைமையானது முற்போக்கு, பிற்போக்கு, மார்க்சியம், பின்நவீனத்துவம்இ ஆன்மிகம் போன்ற வட்டங்களையெல்லாம் தாண்டியது. இதன் காரணமாகத்தான் இது ஒரு ஆண்மேலாதிக்க சமூகமென பெண்களால் இலகுவாகச் சொல்ல முடிகி;றது. உண்மையும் அதுதான். எனது அவதானத்துக்கு உட்பட்ட வகையில் பெரும்பாலான நவீன ஓவியர்களின் நவீன ஓவியர்களென சிலாகிக்கப் படுபவர்களின் பெண் பற்றிய புரிதல் பெண் என்றாலே நிர்வாணம் தான். அவர்களின் ஓவிய மொழியில் இரண்டு பெரிய முலைகள் பெரிய பிருஸ்டம் அவ்வளவுதான் பெண்.
ஆண் ஓவியர்களைப் பொறுத்த வரையில் வாழ்வியலின் இன்னல்களை சித்தரிப்பதானாலும் அதன் அழகைச் சித்தரிப்பதானாலும் போரின் கொடூரத்தைக் காட்டுவதானாலும்இ சமூகப் பிரச்சினைகளைச் சித்தரிப்பதானாலும் கட்டயாமாக ஒரு பெண்ணின் நிர்வாணம் தேவைப்படுகின்றது. அடக்குமுறைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழும் போதும் பெண்கள் ஆடையில்லாமல்தான் இருக்க வேண்டுமென்பது ஆண் ஓவியர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறான சித்தரிப்புக்கள் நவீன ஆண் ஓவியர்கள் மத்தியில் ஒரு நோய்க் கூறாகவே பரவியிருக்கிறது. இங்கு தமது எண்ணத்திற்கு ஏற்ப பெண் உடலைக் கையாளும் அதிகாரத்தை ஆண் ஓவியர்கள் எடுக்துக் கொள்கின்றனர். தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பெண்களை உருவாக்குகின்றனர். நிலந்தி வீரசேகர என்னும் ஓவியை சொல்லுவது போன்று ஆண்களால் உருவாக்கப்படும் பெண் உண்மையில் இதனை நாம் நுணிகிப் பார்ப்போமானால் பெண் எனக்கு கட்டுப்பட்டவள். எனக்கு கீழானவள். நான் அவளை எப்படி வேண்டுமானாலும் கையாளக் கூடிய அதிகார முடையவள் என்றஇ சராசரி ஆண் புத்திதான் நவீன ஓவியர்கள் எனப்படுவோரையும் ஆட்கொண்டிருக்கிறது. அந்தப் புத்திதான் அவர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது.
இந்நிலைமை தமிழிச் சூழலுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல. இது ஒரு உலகளாவிய நிலைமையைச் சொல்லக் கூடியது. நாம் பிக்காசோவை அறிவோம். அவர் நவீன ஓவியத்தின் பிதாமகரென கொண்டாடப்படுபவர். இன்று வரை உலகளவில் நவீன ஓவியர்களின் ஆதர்சமாக விளங்குபவர். கியூபிசஷம் என்னும் ஓவியப் பாணியில் அவரது பங்களிப்பு அசாதாரணமானதெனச் சொல்லப்படுகிறது. உருவச்சிதைப்பு என்ற அடிப்படையில் நவீன ஓவியத்திற்கு முப்பரிமாண முறைமையை வழங்கியவர் பிக்காசோஇ சமாதானப் புறா இவரது படைப்பு போரும் அமைதியும்இ கொரியாவில் படுகொலைஇ ஆவிக்ணான் நங்கையர்இ குவர்ணிகா போன்றனஇ பிக்காசோவின் அற்புத படைப்புகளாகச் கொள்ளப்படுபவை. பிக்காசோ பிரான்ஸின் ஆவிக்ணான் நகர விலைமாதர்களின் இன்னல்களினால் தாக்குண்டதன் விளைவேஇ ஆவிக்ணான் நகர நங்கையர் என்ற படைப்பு. ஸ்பெயின் உள்நாட்டுப் ரின்போது ஃபிராங்கோவிற்கு உதவியாக வந்த நாஜி விமானங்களால் அழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமே குவர்ணிக்கா. பிக்காசோ அந்த அழிவை தனது தூரிகையால் அற்புதமான படைப்பாக்கியிருக்கின்றார்.
குவர்ணிகா தனக்குள் ஏற்படுத்திய அனுபவத்தை ஜப்பானிய எழுத்தாளரும்இ ஓவியருமான ஒக்கமாட்டோ இப்படி விபரிக்கின்றார். 'அன்று எனக்குள் உண்டான அதிர்ச்சி பெறும் திகைப்புக்கும்இ அச்சத்திற்கும்இ மனித அட்டூழியத்திற்கும்இ மேற்பட்டது. கட்டுங்கடங்கா கோபாவேசம் கித்தானில் வெடித்துச் சிதறுகின்றது. அதில் காணும் உணர்ச்சி வெளிப்பாடு என்னை நிலைகுலையச் செய்து விட்டது' இவ்வாறு புறச் சூழல் நிலைமைகளை அற்புதமான படைப்புக்களாக்கிய பிக்காசோவால் பெண்களை மட்டும் இறுதிவரை புரிந்துகொள்ள முயடிவில்லையாம். பிக்காசோவின் பெண் பற்றிய சில சித்தரிப்புக்கள் அதிர்ச்சியளிப்பனவாக இருக்கின்றன. அதேவேளை பிக்காசோவின் இன்னொரு முகத்தை அடையாளம் காட்டுபவையாகவும் இருக்கின்றன. வோல்லார்ட் என்பாரது ஆடம்பரமான தொகுதிக்காக நூறு செதுக் கோவியங்களை வரைந்திருகின்றார் பிக்காசோ. அனைத்து ஓவியங்களும் உணர்வ10ட்டக் கூடிய வகையிலான சித்தரிப்புக்களாகும். காளை முகமும் மனித உருவமும் கொண்ட புராணப் பாத்திரம் பெண்களை பலாத்காரப் படுத்துவதான ஓவியங்கள். பிக்காசோ தனது காதலி ஜாக்குலின் ஹ_டின் சிறுநீர் கழிப்பதாக ஒரு ஓவியத்தை வரைந்திருக்கின்றார். எலும்பும் தோலுமான ஒரு பெண்ணை கூரிய நகங்களால் குத்திக் கிழிப்பதாக இன்னொரு ஓவியம். பிக்காசோ விரும்பிய பெண்கள் எல்லோரும் மாடலாக நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சமாதானப் புறாவை உருவாக்கிய அதே பிக்காசோதான் பெண்களை இழிவுபடுத்தும் இவ்வாறான சித்தரிப்புக்களையும் ஆக்கியிருக்கின்றார். எனினும் பிக்காசோவின் இந்த முகத்தை யாரும் பார்ப்பதில்லை. ஏனெனில் பிக்காசோ இப்பொழுது ஒரு ஓவியப்புனிதர். புனிதர்களை கேள்விக்குள்ளாக்கலாமா? அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவா.
உண்மையில் புதினர்இ புனிதம் ஆகிய சொற்களுக்குப் பின்னால்தான் பதுங்கிக்கிடக்கிறது அநேக அசிங்கங்கள். நிர்வாண சித்திரிப்புகளில் புனித நிர்வாணம் என்ற ஒன்றைப் பற்றி சொல்கிறார் தமிழக கலை விமர்சகர் இந்திரன். Nயுமுநுனு என்பது சங்கடத்தைக் கொடுக்கும் ஆடைகளைத் உடம்பின் நிலை. Nருனுநு என்பது சகஜபாவத்திலிருக்கிறஇ தன்னம்பிக்கையோடு கூடியஇ சமநிலையிலிருக்கிற உடம்பின் நிலை. ஓவியர்களும் சிற்பிகளும் இந்த சகஜபாவத்திலுள்ள நிர்வாணத்தைத்தான் தங்கள் படைப்பில் கையாள்கின்றார்கள். இங்கே வசதி கருதி Nயுமுநுனு என்பதை நிர்வாணம் என்றும் Nருனுநு என்பதை புனிதநிர்வாணம் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்பது இந்திரன் வாதம் (பார்க்க தீராநதி - ஆகஸ்ட் 2003)
இங்கு நிர்வாணம் என்பது புனிதமானதாஇ அல்லது அழகானதா என்பதல்ல பிரச்சினை. இந்திரன் சொல்லுவது போன்று அது புதினமானதாவே இருக்கட்டும். ஆனால் அந்தப் புனித நிர்வாணம் பெண் உடலோடு மட்டும் மட்டுப்படுத்தப்படுவதன் சூட்சுமம் என்ன என்பதுதான் நமக்குரிய கேள்வியாக இருக்கின்றது. இன்றைய ஆணியமுதலாளித்துவ உலகில் பெண் உடல் என்பது ஒரு நுகர்வுப் பொருள். சனரஞ்சக ஊடகங்களிலிருந்து கோடாம்பக்க சினிமா வரை பெண் உடல்தான் பெரும் மூலதனம். இவற்றின் பார்வை என்னவென்றால் எந்தளவிற்கு பெண் உடலில் ஆடை குறைகின்றதோ அந்தளவிற்கு இலாபம் கூடும்.
பெண் உடல் என்பது ஆண்களின் பாலியல் உணர்விற்கான தீனிப்பொருள்.
இந்நிலைமையை நவீன ஆண் ஓவியர்களும் துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். முதலாளியச் சந்தையில் நிர்வாணப் பெண்
சித்தரிப்புக்களுக்குத்தான் விலை அதிகம். ஏனெனில் இன்றைய நவீன ஓவியம் என்பதே ஜந்து நட்சத்திர ஹொட்டேல்களின் படுக்கையறைகளையும்இ வரவேற்பறைகளையும் அலங்கரிக்கப்பயன் படுபவைகளாகவும்இ பெரும் பணக்காரர்களின் இல்லங்களில் தொங்குபவையாகவும் இருக்கின்றதேயன்றி சாதாரண மக்களுக்கு எட்டக்கூடிய நிலையில்லை. அவை அபூர்வமாகத்தான் சாதாரண மக்களின் பார்வைக்கு எட்டுகின்றன. சில விதிவிலக்கான ஓவிய செயற்பாட்டாளர்களும் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் தமது வரைபுகைள மக்களை நோக்கி கொண்டு செல்கின்றனர். நாட்டுபுற கலை வடிவங்களை உள்வாங்கி புதிய ஓவிய மரபொன்றை உருவாக்க முயல்கின்றனர். மேற்கின் வரைபுகளில் திருப்தி கொண்டு சுருங்கிப் போகாமல் வேரிலிருந்து எழ முயல்கின்றனர்.எனினும் இவ்வாறானவர்கள் மிக அரிதானவர்களே.
நவீன ஓவியத்துறையைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டளவில் ஆண் ஓவியர்களின் பங்குபற்றலே அதிகம். ஓவியமொழி முழுக்கஇ முழுக்க ஆண் நோக்கிற்குட்பட்டதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஈழத்துச் சூழலைப் பொறுத்தவரையில் வாசுகி ஜெயசங்கர்இ அருந்ததிஇ ரஞ்சனி போன்ற ஒரு சில ஓவியைகளே தமது சுவடுகளைப் பதித்துள்ளனர். இவர்களது வெளிப்பாடுகள் ஆண் மேலாதிக்க ஓவியமொழியை கேள்விக்கு உள்ளாக்குவனவாகவும்இ அவற்றை மறுதலிப்பனவாகவும் இருக்கின்றன. பெண் என்றாலே நிர்வாணம் தான் எனும் ஆணிய வரையறையை சிதைத்துஇ பெண்ணைப் பெண்ணாக சித்திரிக்கின்றன. பெண்களின் பல்வேறு சமூக எதிர்கொள்ளல்களை பெண்ணின் உணர்வுசார்ந்தும்இ அறிவுசார்ந்தும் பார்க்கின்றன. இது பற்றி சிங்களப் பெண் ஓவியையான நிலந்தி வீரசேகர இப்படிச் சொல்கிறார். 'ஓவியத் துறையில் வேறுபட்ட கோணங்களில் பெண்கள் சித்தரிகப்பட்டுள்ளன.
உதாரணமாக லியானாடோ டாவின்சி என்னும் ஓவியர் மோனாலிசாவை சித்தரித்தது தமக்குத் தேவையான முறையிலாகும். அதற்கு அவர் தேவையான அழகுஇ நிறம்இ உருவமைப்புஇ என்பவற்றை பாவித்துள்ளார். அனைத்துக் கலைஞர்களும் இம்முறையில்தான் தமக்கு உரியதான நீள அலகங்களுக்கு ஏற்ப பெண்களை உருவாக்கியுள்ளார்.
நான் ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட உருவத்தை உடைத்தெறித்து பெண்ணாக பெண்ணைப் பார்ப்பதற்கும்இ பெண் என்ற hPதியில் அவர்களை உருவாக்கவும் முனைகிறேன்' இவ்வாறான பெண்ணியல் நோக்கிலான ஓவிய வரைபுகளை தொடர்ச்சியாக முதன்மைப்படுத்துவதன் ஊடாகவும்இ அவற்றை தொடர்ச்சியாக முன் தள்ளுவதனூடாகவும்தான் ஆண் மேலாதிக்க ஓவியமொழியை கேள்விக்குள்ளாக்குவதும்இ ஆண் ஓவிய முடிபுகளை ஓரம் கட்டுவதும் சாத்தியமாகும்.
ஒடுக்குமுறைகளும்இ இழிவுபடுத்தல்களும் தொடரும் போதேஇ மாற்றுத் தேடல்களும்இ எதிர்ச் செயற்பாடுகளும்இ எதிர்க் குரல்களும் எமக்கு அவசியமாகின்றன.</span>
- ஞானம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
Quote:அவர்களின் ஓவிய மொழியில் இரண்டு பெரிய முலைகள் பெரிய பிருஸ்டம் அவ்வளவுதான் பெண்.
இக்காலத்தில் ஆண்களும் தலைமுடி வளர்க்கிறார்கள் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அதே நேரம் தாடி மீசை வழிக்கிறார்கள் பெண்களும் ஆண்களும் ஒரே உடையை அணிகிறார்....மெல்லிய தோள்கள், இடை, முலை, பிருஸ்டம், இவைதானே ஓவியம் வரையும்போது ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்திக்காட்ட உகந்தது.....இதில் என்ன பிழை? :?  hock:
ஆணுக்கு பொதுவாகவே பார்வைப்புலத் தூண்டல் அதிகம் அழகை ரசிப்பது காட்சிகள் காண்பது வர்ணிப்பது என்பன அதிகம்
இதனால் தமக்கு எது அழகாய்த்தெரிகிறதோ, மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அல்லது ஆழமாகப் பதிகிறதோ அதை ஓவியமாக மற்றவர்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்துகிறார்கள், வர்ணிக்கிறார்கள் என நினைக்கிறேன்
ஓவியம் ரசிக்கக்கூடியதாக இருக்கவேணும் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=Kanani][quote]அவர்களின் ஓவிய மொழியில் இரண்டு பெரிய முலைகள் பெரிய பிருஸ்டம் அவ்வளவுதான் பெண்.[/quote]
இக்காலத்தில் ஆண்களும் தலைமுடி வளர்க்கிறார்கள் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அதே நேரம் தாடி மீசை வழிக்கிறார்கள் பெண்களும் ஆண்களும் ஒரே உடையை அணிகிறார்....மெல்லிய தோள்கள், இடை, முலை, பிருஸ்டம், இவைதானே ஓவியம் வரையும்போது ஆணிலிருந்து பெண்ணை வேறுபடுத்திக்காட்ட உகந்தது.....இதில் என்ன பிழை? :?  hock:
ஆணுக்கு பொதுவாகவே பார்வைப்புலத் தூண்டல் அதிகம் அழகை ரசிப்பது காட்சிகள் காண்பது வர்ணிப்பது என்பன அதிகம்
இதனால் தமக்கு எது அழகாய்த்தெரிகிறதோ, மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அல்லது ஆழமாகப் பதிகிறதோ அதை ஓவியமாக மற்றவர்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்துகிறார்கள், வர்ணிக்கிறார்கள் என நினைக்கிறேன்
<b>ஓவியம் ரசிக்கக்கூடியதாக இருக்கவேணும்</b>
ஆணை வரைந்தால் ரசிக்க கூடியதாக இருக்காது என்று சொல்கிறீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
ஆண்கள் பெண்களை வரைகிறார்களாம் ......
வரைபவன் ஆணாயிருந்தால் தான் ரசிக்கக்கூடியதைத்தானே வரைவான்
எனக்கு ரசிக்கக்கூடியதாக இருக்கவேணும் என்று சொன்னன்....எல்லாம் இரசாயனம் செய்யும் வேலை <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
அதுசரி நீங்கள் ஆண்களை ரசிக்கிறீர்களா? ம்...ம்.....ம்...<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நான் ஆண்களை ரசிக்கின்றேன் என்று சொல்லவில்லை. ஏன் குழந்தைகளை, இயற்கையை ரசிக்கலாம் தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அழகை இரசிப்பது மனித உணர்வு அதற்குள்ளும் பேதமை தேடுவது அழகை அழகாகக் காணத் தெரியாத மிருக இயல்பின் வெளிப்பாடு...!
(இது மனிதப் பெண்கள் தொடர்பான கருத்தல்ல அழகு தொடர்பானது)
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 142
Threads: 9
Joined: May 2003
Reputation:
0
<b><span style='font-size:30pt;line-height:100%'>வடு</b></span>
[b][size=18]சுமதி ரூபன்
"அந்த எண்ணம் எனை விட்டகல நீ தான் அருள்புரிய வேண்டும் பரா பரமே" நொய்மைப் பிண்டம்: மெல்ல, மெல்ல மேலே எழுந்து சில நிமிடங்கள் இயங்க மறந்து, பின் தொப்பென்று கட்டிலில் விழுந்தது. அசைந்து பார்க்க அச்சம் வந்தது. பெருவிரல்கள் ஒன்று சேர்த்து, பிணம் போல் உருவெடுத்து அசையாது கிடந்தாள் மல்லிகா. கை விரல்கள் குளிர்ந்து சொடுக்கிக் கொண்டன. தலைமுடியின் ரப்பர் கழன்று தரையில் கிடந்தது. வியர்த்திருக்க வேண்டும், ஆனால் இல்லை! சீதளமும், உஷ்ணமும் இல்லாத நிலையில் உடல் ஊசலாடியது. மெல்லிய மேற்சொண்டும,; தடித்த, பருத்த கீழ்ச்சொண்டும் நீர் வற்றி வெடிப்புக்கண்டிருந்தன. நெற்றிப் பொட்டில் மீண்டும், அதே வலி தொடங்கிக் காதோரம் பரவத்தொடங்கியது. பிணைப்பு விடுத்துக் கால்கள் அகட்ட, தொடைகள் இரண்டும் விண், விண் என்றது. அலைகளுக்கு நடுவில் அகப்பட்டது போல் அந்த முகம் தௌ¤வற்று அவளைப் பார்த்து சிரித்தது. வலித்த இடம் தடவ ஈரம் உணர்ந்தாள். மெல்லிய பரிச்சயப்பட்ட நாற்றம் நாசியைத் தாக்கியது. குமட்டல் பித்தலாய் வழிய, அசைவுகள் அகன்று, மெல்ல, மெல்ல முகம் தௌ¤வுறத் திடுக்கிட்டாள் மல்லிகா - லண்டன் மாமா!
பெருஞ்சாலை கடக்கையில், வேகமாக வந்த குப்பை வண்டிச் சில்லுக்குள் சில நிமிடங்கள் அகப்பட்டு, சிதைந்து, கால்களில் கண்களும், காதுகளும் பொருத்தியது போல் இரத்த வெள்ளத்தில், நெடுங்தூரம் தூக்கியெறியப்பட்ட உடல், கண்டெடுக்கப்பட்டு, எரித்து, சாம்பலாக்கி எத்தனை வருடங்கள் ஆகிவட்டன. மீண்டும் இங்கு எப்படி? விசா எடுத்து, பிண்டம் கனடா வந்து விட்டது போலொரு உணர்வு அவளுக்குள்! விடியற்காலைச் சொப்பனத்தின் விசேஷம் அறிந்ததால் பயம் கௌவ, ஒரு மூக்கின் துவாரம் அழுத்தி, மூச்சிழுத்து, மறு மூக்கால் சுவாசம் விட்டாள். சவர்க்காரம் போட்டு, உடல் கழுவி, உடை மாற்றித் தன்னைத் தீவிரம் செய்தாள். ஆனாலும் பாழாய்ப் போன மனதில் மீண்டும் அதே கேள்வி! அஞ்சலி ஏன் கட்டில் நனைத்தாள்?
பத்து வயது. வயதுக்கு மீறிய வளர்ச்சி. குளிக்க வார்க்கும் போது, தற்செயலாகக் கை பட சட்டென்று தட்டி விட்டு, மிரள, மிரள முழித்துக் கொண்டு தலைகுனிந்து நின்ற விதம். சிக்கெடுக்க முடியாமல் முடிச்சுக்கள் நீண்டு கொண்டு போனது. "உன்னுடைய அந்தரங்க உறுப்பில் உன் சம்மதம் இன்றி யாராவது ஸ்பரிசிக்கும் பட்சத்தில், உனக்கு நம்பிக்கை உள்ள, வயது வந்த ஒருவரிடம், நீ முறையிடல் வேண்டும்" பாடசாலையில் புகட்டப்பட்டது. "உன் சம்மதம் இன்றி" இந்த வரிகள் வைத்தியத்திற்காகக் கொடுக்கப்பட்டவை. நான் சம்மதம் கொடுத்தேனா? தெரியவில்லை. ஆனால் தடுக்கவுமில்லை. இது எதில் சேர்த்தி? மல்லிகா குழம்பினாள்.
நேசனை, வேறு இடம் பார்க்கச் சொல்ல வேண்டும். காரணம் கேட்டால் என்ன சொல்வது? என் காலைக் கனவும், அஞ்சலியின் கட்டில் நனைப்பும் போதுமானதா? சின்னத்தம்பி பாவம!; அப்பா, அம்மாவைப் பலிகொடுத்துவிட்டு அண்ணாதான் கதியென்று பல இலட்சங்கள் கொடுத்து, கப்பலேறி, பல மைல்கள் தாண்டி தஞ்சம் புகுந்திருக்கின்றான். அவனை என் சொப்பனம் சொல்லி விரட்டியடிப்பதா? சடைமாடையாக என்று தொடங்கி, கொஞ்சம் பச்சையாகவே கேட்டுப் பார்த்தாகிவிட்டது, அஞ்சலி அசங்கவில்லை.
"மாடு,மாடு என்ன நாத்தமடி உன்ர மூத்திரம். சின்னஞ் சிறுசெண்டால், கழுவிக் காயப்போட்டுப் பாவிக்கலாம், ரெண்டு கழுதை வயதாகுது, உந்த வயசில காத்தால எழும்பி, குசினி மெழுகி, தேத்தண்ணி வைச்சு, அப்பனைக் கமத்துக்கு அனுப்பியிருக்கிறன் நான். இது, இப்பதான் பாய் நனைக்குது". விடாத புறுபுறுப்போடு தண்ணி மோந்து, கவிழ்த்துப் பாய் கழுவும் பாட்டி நினைவிற்கு வந்தாள். "மல்லிக்குட்டி! இரவு ஒண்டுக்குப் போக வேணுமெண்டால் என்னை எழுப்பு" அம்மா, ஆதரவு தருவதாக எண்ணிக் கூறினாள். ஒருவரும் கேட்கவில்லை, அவள் பாய் நனைத்த காரணத்தை. ஆனால் மல்லிகா, அஞ்சலியிடம் துருவித் துருவிக் கேட்கிறாளே! "தெரியாதம்மா, தெரியாதம்மா இன்மேல் நனைக்க மாட்டன்". இவளுக்கும் பிடித்திருக்கிறதோ? தனக்கு வேண்டிய பதில் வராததால் மல்லிகாவிற்கு கோபம் வந்தது.
நான் சொன்னதில்லை. அப்பா, அம்மாவிடம் நான் சொன்னதில்லை. பயமா? இல்லை, எனக்கும் பிடித்திருந்ததா? பிடித்திருந்தால், இரவில் நடுநடுங்க ஏன் நான் பாய் நனைக்க வேண்டும? தவறு என்று மட்டும் புரிந்தது. ஆனால் சொல்லும் துணிவு வரவில்லை. பக்கத்து வீட்டு வாசி, முதுகில் குத்த, அழுவதிலும் முந்திக் கொண்டு, அம்மாவிடம் கோள் சொன்ன எனக்கு, லண்டன் மாமா, நோக நோக என்னைத் தன்னுடன் பிணைத்துக் கொண்டது மட்டும் சொல்லத் துணிவு வரவில்லை. "உன் அந்தரங்க உறுப்பில், யாராவது உன் சம்மதம் இன்றி" இந்தப் பாடம், எனக்குச் சொல்லித் தரப்படவில்லை.
அம்மா கேட்டிருந்தால்? ஓரே ஒருமுறை, அம்மா கேட்டிருந்தால்? "ஓ" வென்றழுது கொட்டித் தீர்த்திருப்பேன். அம்மாவுக்கு கால் வைக்கும் இடமெல்லாம் குழந்தைகள். நேரம் கிடைக்காமல் போயிருக்கலாம். சரி நானாவது லண்டன் மாமா வீட்டிற்கு ஓடியோடிப் போகாமல் இருந்திருக்கலாம்.
லண்டன் மாமா வீட்டிற்கு மல்லிக்குட்டி ஓடியோடிப் போகப் பல காரணங்கள் இருந்தன. ஊரிலேயே ஹோர்லிங் பெல் கொண்ட ஒரே வீடு அவர்களுடையது. கதவு பரப்பித் திறந்திருந்தாலும், தொங்கித் தொங்கி பெல் அடிப்பதில் சுவாரசியம் நிறையவே இருந்தது. மாமி வந்து "என்னடி மல்லிக்குட்டி" என்று கேட்ட பின்பும்,; அவள் தொங்குவதை விடமாட்டாள். பகல் நித்திரை கலைந்து லண்டன் மாமா எழுந்து வந்தாலும் சிரிப்பாரே தவிரத் திட்ட மாட்டார். வீட்டிற்குள், குஷன் போட்ட இருக்கை. மல்லிக்குட்டி வீட்டில் ஒரேயொரு மர இருக்கை, அதுவும் அப்பா இருப்பதற்காக, இல்லாவிட்டால் யாராவது வந்தால் இருப்பதற்கு. கால்கள் ஓயும் வரை குஷன் போட்ட பஞ்சுக் கதிரைகளில் ஏறி நின்று துள்ளுவாள் மல்லிக்குட்டி. மாமிக்குக் கோபம் வந்தாலும், "பாவம் சின்னப்பிள்ளை விடு" என்பது மட்டுமல்ல, கை நிறைய நீளம், அகலம், வட்டம், சதுரம் என்று லண்டன் சொக்லெட்சும் அள்ளிக்கொடுப்பார் லண்டன் மாமா. எப்படி மல்லிக்குட்டி இதையெல்லாம் அசட்டை செய்வாள்?
ரூபவாஹினியில் தமிழ்ப் படம் போடுகிறார்களாம்! லண்டன் மாமா வீட்டில் கூட்டம் கூடிவிடும். வறுத்த கச்சான், பொரித்து உப்பு, மிளகாய் தூவிய கடலைப் பருப்பு சகிதம் ரீ.வீ முன்னால், பழபழத்த நிலத்தில் பெண்களும் சிறுவர்களும் சப்பாணி கட்டி இருந்து விட, லண்டன் மாமா மட்டும் பின்னால் கதிரையில் நிமிர்ந்து இருந்து, ராஜாபோல், ஆஜானுபாகுவாய் காட்சி அளிப்பார். லண்டன் மாமா வீடு, தனக்கு நல்ல அத்துப்படி என்பதையும், தான் மாமா, மாமியின் சின்ன, செல்ல மல்லிக்குட்டி என்பதையும், தனது நண்பிகளுக்குத் தெரியப் படுத்த மல்லிக்குட்டி துடிப்பாள். "மல்லிக்குட்டி மாமாவிற்குத் தண்ணி கொண்டு வா" குரல் கேட்டால் போதும், எப்போது கேட்பார் என்று காத்திருந்தவளாய், பெருமை பொங்கும் முகத்துடன், ப்ரிஜைத் திறந்து தண்ணீர் எடுத்து வருவாள். வேண்டுமென்றே தானும் கொஞ்சம் குடித்தும் வைப்பாள். கண்கள் அகல, வைத்த கண் வாங்காமல், ஏக்கத்துடன் பார்க்கும் சிறுமிகளை மல்லிக்குட்டி கண்டு கொள்வதேயில்லை.
லைட் அணையும். படம் தொடங்கும். லண்டன் மாமா மல்லிக்குட்டியின் கை பிடித்திழுத்து, தன் மடியில் இருத்திக்கொள்வார். மெல்ல, மெல்ல அவர் கைகள் அவள் உடல் அளையும். பின்னர், அவள் பிஞ்சுக் கை பிடித்து தன்னுடல் துளாவுவார். மல்லிக்குட்டி நௌ¤வாள். கவலையால் நெஞ்சடைக்கும், ஆனால் பொறுத்துக் கொள்வாள், காரணமின்றி.
"ச்சீ, நாசமாப் போக! என் தலையில் இடி விழ! அப்பவே அம்மாவிடம் சொல்லி லண்டன் மாமாவை உண்டு இல்லையென்று பண்ணியிருக்கவேணும்". மல்லிகா வெம்பினாள். நான் சொல்லியிருந்தாலும் அம்மா நம்பியிருப்பாளா? எப்போதும், எதிலும் பெண்கள் தவறுசெய்பவர்கள், ஆண்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்றும், கைச் செலவிற்கும், கறி உப்பிற்கும் அடிக்கடி லண்டன் மாமா வீட்டை நம்பி வாழ்க்கை நடாத்தும் அம்மாவால் லண்டன் மாமாவைப் பார்த்துக் கேள்வி எழுப்ப முடிந்திருக்குமா? அதுமட்டுமல்ல, அம்மாவுக்கு எப்போதுமே லண்டன் மாமா மேல் ஒரு வெட்கம். மாமா முகம் பார்த்தே கதைக்கமாட்டாள். மாமி அதிஷ்டம் செய்தவள் என்று அடிக்கடி கூறுவாள். ஆண்களின் உதாரண புருஷன் மாமா என்றும் அவள் நம்பினாள். ஒரு வேளை அம்மாவிற்கும், மாமாவிற்கும்.. ச்சீ இருந்திருக்காது. எங்கே அதற்கெல்லாம் நேரம் அவளிற்கு?.
எனக்குப் பிடித்திருந்ததா? இல்லை. பயத்தால் எழுந்த சம்மதமா? எட்டு வயதில் உணர்ச்சிகளுக்கு உடல் ஏங்குமா? பல வருடங்களாக, பலவிதமாகச் சிந்தித்தாகி விட்டது. பதில் கிடைக்கவில்லை. கூச்சம் விட்டுப் பிறருடன் அலசவும் பிடிக்கவில்லை. எனக்கு மட்டுமா இந்த நிலை! இல்லா விட்டால் பல பெண்களுக்கும் இருந்திருக்குமா இப்படி? பார்க்கும் இடங்களெல்லாம், பிண்டங்கள் பிணப்பதற்கு அலைவதாக அவளுக்குப் பட்டது. தன் சாபம், வேதனைதான் லண்டன் மாமா ரோட்டில் சிதைந்து போனதிற்கு காரணமோ?
அஞ்சலி கொஞ்ச நாளாய், விந்தி விந்தி நடப்பது போல் பட்டது மல்லிகாவிற்கு. தொடைகள் வலிக்கிறதோ? நேசன் மேல் வெறுப்பு வந்தது. நேசனின் கட்டிலின் அஞ்சலியின் தலைமயிர் தேடினாள் மல்லிகா. அஞ்சலியின் கட்டிலை உருட்டிப் பிரட்டினாள் தடையங்களுக்காய். எதற்குத் தடையம்? மல்லிகா நேசனை வெறுத்தாள். அஞ்சலியைக் காப்பாற்ற வேண்டும். நேசனை உடனை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். தீர்மானித்தாள். "அண்ணி! அஞ்சலி ரெடியா?" நேசன் வந்தான். இவனுக்கென்ன அஞ்சலி மேல் இவ்வளவு அக்கறை. கார் வைத்தி;ருப்பதால், அஞ்சலியை அனுங்காமல் குலுங்காமல் பாடசாலையில் விட்டுவரும் பொறுப்பை நேசனிடம் ஒப்படைத்திருந்தான் அவன் அண்ணன். அனுங்காமல் குலுங்காமல் விட்டுவருகிறானா? இல்லை, குலுக்கி எடுக்கிறானா என் செல்வத்தை? மல்லிகை பல்லு நெருமினாள். இரண்டு பேர் உழைப்பை நம்பி வீடு வாங்கியாகி விட்டது. காருக்கும் மாசம் மாசம் கட்டுக்காசு. நேசனும் வாடகை சாப்பாட்டுக்காசு என்று ஏதோ தன்னால் இயன்றதைத் தருகிறான். இனி வே¬லையை விட்டுவிட்டு வீட்டில் நிற்பதோ, இல்லைத் திடீரென்று நேசனை அப்புறப்படுத்துவதோ நடக்காத காரியம். வாழ்வின் சௌகரியங்களில் பெரிய இடி விழும். "நேசன் நல்லவன், அவன் லண்டன் மாமாவின் மறு உறு அல்ல" குழப்பத்துடன் மீண்டும் மீண்டும் மந்திரமாய் உச்சரித்தாள் மல்லிகா.
நேசனை நம்பியே ஆக வேண்டும். அஞ்சலியைப் பாடசாலைக்கு கூட்டிச் செல்வது, மத்தியானம் அழைத்து வந்து சாப்பாடு சூடாக்கிக் கொடுப்பது, பின்னர் பாடசாலையால் அழைத்து வருவது. முகம் தூக்காமல் அவன் ஓடியோடிச் செய்வதை, அண்ணா பணம் ஏதும் கேட்காமல் தன்னை கனடா அழைத்து விட்டதன் பிரதியுபகாரமாகச் செய்கிறானா? இல்லை! கடவுளே.. அவள் மனம் மீண்டும் முருங்க மரத்தின் மேல் ஏறியது.
அப்பா நோய்வாய்ப்பட்டு, ஆஸ்பத்திரியில் படுத்துவிட, சாப்பாட்டு பார்சலுடன் லண்டன் மாமா ஓடித்திரிந்தது ஞாபகத்திற்கு வந்தது. துணைக்கென்று அவர் மல்லிக்குட்டியையும் அழைத்துச் செல்ல மறந்ததில்லை. ஆஸ்பத்திரி சென்று இறங்கு முன்பே, சைக்கிளின் முன் சீட்டில் இருக்கும் மல்லிக்குட்டியின் முதுகுப் புறச்சட்டை, லண்டன் மாமாவின் கிருபையால் தேய்ந்து தேய்ந்து ஈரமாகிப் போயிருக்கும்.
பிள்ளை பெற்றுக்கொள்ள என்று மாமி தன் தாய் வீடு போய் விட, மாமி கேட்டுக் கொண்டதன் பேரில், மாமாவிற்கென்று விதவிதமாய் சமைத்து மல்லிக்குட்டியிடம் கொடுத்தனுப்புவாள் அவள் அம்மா. வெறும் வீடு, கேட்பதற்கு நாதியில்லை, பல வண்ண நிறச் சொக்லேட்டுக்களைக் மல்லிக்குட்டியின் கைகளில் திணிப்பார் லண்டன் மாமா. ஒன்று, இரண்டு அவள் சாப்பிட்டு முடிக்கு முன்பே, வினோதமான நிறத்தில் ஐஸ் போட்ட ஜ_ஸ் கொண்டு வந்து அவள் அருகில் வைப்பார். அவள் சொக்லேட் சாப்பிட்டுப் பின்னர் ஜ_ஸைக் குடிக்க மட்டும் பொறுமையாக இருந்து விட்டு, அலாக்காக அவளைத் தூக்கி உயரப் போட்டு விளையாட்டுக் காட்டுவார். நௌ¤ந்த படியே மல்லிக்குட்டி வாய்விட்டுச் சிரிப்பாள் (வேறு வழியின்றி). மெதுவாக அறைப்பக்கம் நகர்ந்து, கட்டிலில் அவளைத் தொப்பெனப் போடுவார். அவள் எதிர்பதில்லை. வாய் விட்டுக் கதறுவதில்லை. இருதயம் படபடவென்று அடிக்கும். பயம் நெஞ்சைக் கௌவிக்கொள்ளும். கைகள் குளிர்ந்து நடுங்கும். வலிக்குப் பயந்து, கண்களை இறுக் மூடிக்கொள்வாள் மல்லிக்குட்டி. லண்டன் மாமாவின் கனம் உடலில் சரியும். மல்லிக்குட்டிக்கு மூச்சுத் திணறும். இந்த நேரம் பார்த்து யாராவது வந்து விடக்கூடாதே, எல்லாமே கெதியில் நடந்து முடிந்து விட்டால் தான் வீட்டிற்குப் போய் விடலாம் என்பதாய் மனம் ஏங்கும். லண்டன் மாமாவின் வியர்வை அவள் நாசியைத் தாக்க, தொடைகள் வலிக்கும். பின்னர் ஈரமாகும். மாமா ஓய்ந்து போவார். மல்லிக்குட்டியின் முதுகு தடவி அவளை ஆசுவாசப் படுத்துவார். தீபாவளிக்கு அவளிற்குத் தர இருக்கும், லண்டன் சட்டை பற்றிக் கூறுவார். ஈரத்துணி கொண்டு அவள் உடல் துடைப்பார். மணம் அகன்று உடல் சுத்தமாகும். அவளை ஊஞ்சலில் இருத்தி ஆட்டுவார். குழாய் கொண்டு ரோஜாவிற்கு தண்ணீர் பாய்ச்ச வைப்பார். மல்லிக் குட்டியின் முகத்தில் நோயின் சாயல் போய் சிரிப்பு வரும் வரையில் அவளை அங்கேயே வைத்துக்கொள்வார். போனவளை எங்கே காணோம்? வீட்டில் தேடுவார் இல்லை.
வீடு வந்ததும், லண்டன் மாமா தனக்குத் தந்த சொக்லெட் பற்றியும், தீபாவளிக்குக் கிடைக்கவிருக்கும் லண்டன் சட்டை பற்றியும் தங்கைகளுக்குக் கூறுவாள் மல்லிக்குட்டி. அவள் மனம் ஏனோ சலனத்துடன் கனக்கும்.
தன் கண் முன்னாலேயே அஞ்சலியை நேசன் அழைத்துக்கொண்டு செல்ல, பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் மல்லிகா. தொலைபேசி அழைத்தது. லண்டனில் இருந்து மாமி. மாமாவின் நினைவு நாளாம். விக்கி விக்கி அழுதாள். "எவ்வளவு நல்ல மனுஷன், ஒருத்தருக்கும் ஒரு தீங்கும் செய்ததில்லை, இப்படிப்பட்ட சாவு வந்திட்டுதே" ஒவ்வொரு வருடமும் இதே புலம்பல் தான். மல்லிகா கண் கலங்கினாள். வெளியே சோவென்று மழை. ரோட்டுக்கரையோரம் நௌ¤ந்த படியே அலையலையாய் நீரோடி இரும்புக் குழயாய்குள் விழுந்து கொண்டிருந்தது. "மல்லிக்குட்டி என்னைக் காப்பாற்று" கத்தியபடியே கைகளை நீட்டிய லண்டன்மாமா, அலையோடு அள்ளுப்பட்டு இரும்புக் குழாய்க்குள் முகம் சிக்கி சிதைந்து காணாமல் போனார். மல்லிகா அசையாது நின்றாள்.
[b]காலச்சுவடு 2000
[b]சுமதி ரூபன் (கனடா)
[b]nantri - Thinnai.com
nadpudan
alai
|