![]() |
|
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... (/showthread.php?tid=7447) |
பெண்ணென்று பூமிதனில் - Chandravathanaa - 02-20-2004 <b><span style='color:#7f0000'>பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... [b][size=18]கலாநிதி சந்திரலேகா வாமதேவா</span> பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரான கோட்பாடல்ல. அது ஆண்களுக்குச் சமமாகச் சகல துறைகளiலும் சுதந்திரமாக பெண்கள் இயங்குவதை நோக்கமாகக் கொண்டது. அம்மாச்சி என்று அழைக்கப்படும் அமிர்தானந்தமயி அம்மையார் பெண்கள் பற்றி வழங்கிய கருத்துக்களiல் சிலவற்றை இங்கு தருகிறேன். அமிர்தானந்தமயி அம்மா சில இடங்களiல் ஆண்கள் பெண்களுக்கு ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகளால் அவர்களை சற்று கடுமையாகக் கூறுகிறார். ஆயினும் சுதந்திரம் என்பதைப் பெண்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதையும் அவர் எடுத்துக் கூறத் தயங்கவில்லை. அவரது கருத்துக்களுடன் இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன் உலக அமைதிக்காக 2002 அக்டோபர் 6-ம் தேதி முதல் 9-ம் தேதிவரை ஆன்மீக பெண் தலைவர்களின் மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் நூற்றி இருபத்தைந்து நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான சமாதானத்துக்குரிய 'காந்தி கிங்' விருது மாதா அமிர்தானந்தமயிக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு அவர் 'பெண்ணே உன்னால் முடியும்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள். விகடன் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது. அவர்களுக்கு நன்றி தெரிவித்து இதனை உங்களுக்குத் தருகிறேன். உறங்கிக் கொண்டிருக்கும் பெண் சக்தி விழித்தெழ வேண்டும். இந்தக் காலகட்டத்தின் மிகவும் முக்கிய மான தேவைகளில் இது ஒன்றாகும். மதமும், ஆசாரங்களும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு, குறுகிய மனப்பான்மையால் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்கள் என்ற நியதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் நாடுகளில் உள்ள பெண்கள், புதுமையான சிந்தனைகளைப் பெற வேண்டும். கல்வியறிவின் மூலமும், உலகியல் ரீதியான வளர்ச்சியின் மூலமும் பெண்ணும், அவளைச் சுற்றியுள்ள சமூகமும் விழிப்படையும், பண்பாடு வளரும் என்று நாம் கருதினோம். ஆனால், இந்த நம்பிக்கை தவறானது என்பதைக் காலம் தெளிவாக்கியுள்ளது. [b]பெண்ணை விழிப்புறச் செய்வது யார்? அவள் விழிப்படையத் தடையாக நிற்பது எது? உண்மையில் பெண்ணையும், அவளது பிறவிக் குணமான தாய்மை உணர்வையும் தடுத்து நிறுத்த எந்த சக்தியாலும் முடியாது. பெண்ணைப் பெண்ணே விழிப்புறச் செய்யவேண்டும். அதற்குத் தடையாக நிற்பது அவளுடைய மனமாகும்.</b> கடந்தகால சமூகம் படைத்த சட்ட திட்டங்களும், குருட்டு நம்பிக்கைகளும் இன்றும் பெண்ணுக்கு எதிராக நிலை பெற்றுள்ளன. சுரண்டுவதற்கும், அடக்கி ஆள்வதற்கும் ஆண்கள் உருவாக்கிய காட்டு மிராண்டித்தனமான சம்பிரதாயங்களும் தொடர்கின்றன. இவை எல்லாம் சேர்ந்து உருவாக்கிய சிலந்தி வலைக்குள் சிக்கிக் கிடக்கிறது பெண்ணின் மனம். அவளுடைய மனமே அவளை வசியம் செய்து வைத்திருக்கிறது. இந்த வளையத்திலிருந்து வெளிவர அவள் தனக்குத்தானே உதவ வேண்டும். <span style='font-size:27pt;line-height:100%'><b>பெரிய மரங்களைக்கூட வேரோடு பெயர்த்து எடுக்கும் சக்தியுள்ள யானையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். குட்டியாக இருக்கும்போது மிகவும் பலமுள்ள வடம் அல்லது சங்கிலியால் மரத்தில் கட்டி வைப்பார்கள். வடத்தை அறுத்துக் கொண்டோ, மரத்தை வேரோடு சாய்த்தோ கட்டிலிருந்து விடுபடும் சக்தி குட்டியானைக்கு இல்லை. காட்டில் சுதந்திரமாகத் திரிந்து பழகிய குட்டியானை, கட்டிலிருந்து விடுபட தன்னால் இயன்றவரை முயற்சி செய்யும். கட்டிலிருந்து விடுபடத் தேவையான அளவு பலம் தனக்கில்லை என்று அறியும்போது, அது தனது முயற்சிகளை எல்லாம் கைவிட்டு விடும். அவ்வாறு பழகிவிட்ட குட்டி யானை வளர்ந்து பெரியதாகும்போது, அதை சிறிய மரத்தில், அதிக வலுவில்லாத கயிற்றினால் கூடக் கட்டி வைப்பார்கள். அந்த யானை நினைத்தால் மிக எளிதில் மரத்தை வேரோடு சாய்த்து விட்டோ, கயிற்றை அறுத்துக்கொண்டோ கட்டிலிருந்து விடுபட முடியும். ஆனால் குட்டியாக இருந்தபோது அதற்கு ஏற்பட்ட பழைய அனுபவமானது, அதன் மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மனதில் ஏற்பட்டுவிட்ட முன்பதிவால், அது விடுதலை பெற முயற்சி செய்வதில்லை. பெண்களின் விஷயத்தில் இதுதான் நடந்து வருகிறது. அவளது ஆத்ம சக்தி விழிப்படைவதை அனுமதிக்க நாம் மறுக்கிறோம். அந்த மகாசக்தியை அணை கட்டித் தடுத்து நிறுத்துகிறது இன்றைய சமூகம். </b> எச்செயலையும் செய்வதற்கான எல்லையற்ற சக்தி ஆண்-பெண் ஆகிய இருவரிடமும் சமமான அளவில் உள்ளது. சமூகம் பெண்ணின் மீது திணித்துள்ள நியதிகள், நிபந்தனைகள் என்னும் சங்கிலியை உடைத்துக்கொண்டு வெளியில் வரப் பெண்ணால் முடியும். கடந்தகாலம் பெண்ணின் மனதில் உருவாக்கிய குறைகள் நிறைந்த பதிவுகள் எல்லாம் பெண்ணின் முன்னேற்றத்துக்குத் தடையாக நிற்கின்றன. பெண்ணின் மனதில் பயத்தையும், சந்தேகத்தையும் வளர்க்கும் நிழல்கள் அவை. நிழல் உண்மையானதல்ல; பொய்யாகும். <b>ஆண்கள் பொதுவாக உடலின் வலிமையில் நம்பிக்கை உள்ளவர்கள். வெளிப்பார்வையில் பெண்ணைத் தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் காணவும், ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள். ஆனால், மனதளவில் அவளை முறையாகப் புரிந்துகொள்ளவோ, புரிந்துகொண்டு அங்கீகரிக்கவோ அவர்களுக்கு இன்றும்கூட கஷ்டமாக இருக்கிறது </b>என்ற உண்மையை மறைத்து வைப்பதில் பயனேதுமில்லை. <i>இங்கே ஒரு கதை நினைவுக்கு வருகிறது.. ஒரு பெண்மணி, பலனை எதிர்பாராது பிறருக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையெனக் கருதி, அதில் மனமகிழ்ச்சி அடைந்து வந்தார். அந்நாட்டின் மதத்தலைவர்கள் அவரை ஒரு அர்ச்சகராக (புரோகிதையாக) நியமித்தார்கள். அந்நாட்டில் ஒரு பெண்ணை அர்ச்சகராக நியமிப்பது இதுவே முதல் முறையாகும். அவரைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்ததை மற்ற அர்ச்சகர்கள் சிறிதும் விரும்பவில்லை. அதுமட்டுமல்ல; அவர்களுக்கு அளவற்ற கோபமும் வந்தது. ஆனால், பணிவும், நிஷ்டையும், ஆன்மீகிக அறிவும் நிறைந்த அந்தப் பெண் அர்ச்சகர் மிக விரைவில் பிரசித்தி அடைந்தார். எல்லோரும் அவரைப் புகழ ஆரம்பித்தனர். இதனால் அர்ச்சகர்களின் பொறாமை ஆதரித்தது. ஒருமுறை, அருகிலிருந்த தீவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள அர்ச்சககள் அனைவரும் புறப்பட்டனர். வேண்டுமென்றே அவர்கள் பெண் அர்ச்சகரை அழைக்கவில்லை. ஆனால், படகில் ஏறியபோது அந்தப் பெண்மணி படகில் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர். ''இங்கேயும் இது வந்துவிட்டதா?'' என்று அவர்கள் முணுமுணுத்தனர். தீவை அடைவதற்கு இரண்டு மூன்று மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். சுமார் ஒருமணி நேரம் கழிந்தபோது படகு நின்றது. படகின் சொந்தக்காரன் பரிதவிப்புடன், ''நாம் நன்றாக மாட்டிக்கொண்டோம். டீசல் தீர்ந்துவிட்டது. போதுமான அளவு டீசல் எடுத்துவர நான் மறந்து விட்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வேறு படகு எதுவும் வருவதாகவும் தெரியவில்லை'' என்றான். செய்வதறியாமல அனைவரும் திகைத்தனர். அப்போது அந்தப் பெண் அர்ச்சகர் முன்வந்து, ''சகோதரர்களே, கவலை வேண்டாம். நான் சென்று டீசலுடன் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் படகிலிருந்து இறங்கி, கரையை நோக்கி நீரின்மீது நடக்க ஆரம்பித்தார். இந்தக் காட்சியைக் கண்ட அர்ச்சகர்கள் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர். சட்டென சுதாரித்துக்கொண்ட அவர்கள் பரிகாசம் நிறைந்த குரலில், ''பார்த்தீர்களா, அவளுக்கு நீச்சல் கூடத் தெரியவில்லை'' என்றனர். இதுவே பெரும்பாலான ஆண்களின் மனோபாவம். பெண்ணின் சாதனைகளை அலட்சியமாகக் காண்பதும், அவற்றைக் குறைகூறுவதும் ஆணின் இயல்பாகும்.</i> <b> ஆணின் கையில் சிக்கியுள்ள வெறும் அலங்காரப் பொருளல்ல பெண். ஆண், ஒரு பூந்தொட்டியில் வளர்க்கும் செடியைப் போல் பெண்ணை ஆக்கி வைத்திருக்கிறான். ஆணுக்கு உணவு தயாரிப்பதற்கு மட்டும் பிறந்தவளல்ல பெண். பெண்ணை முன்னேற அனுமதிக்காமல், அவளைத் தனது விருப்பத்துக்கு ஏற்ப இயக்ககூடிய டேப்ரெக்கார்டரைப் போல் ஆக்கவே ஆண் முயற்சி செய்கிறான். உண்மையில் எல்லா ஆண்களும் பெண்ணின் ஒரு பாகமே. எல்லாக் குழந்தைகளும் தாயாரின் உடலின் ஒரு பாகமாகவே கர்ப்பப்பையில் வளர்கின்றன. ஒரு குழந்தைக்குப் பிறப்பளிப்பதைப் பொருத்தவரை, அவனுக்கு ஒரு நிமிட வேலை; அவ்வளவுதான். அத்துடன் ஆணின் பங்கு முடிந்துவிடுகிறது. ஆனால், பெண் அதனை ஏற்று, அதனைத் தனது உடலின் அம்சமாக மாற்றி, ஜீவனாக உருவாக்குகிறாள். அது வளர்வதற்குத் தேவையான சூழ்நிலையை தனக்குள் அவள் ஏற்படுத்திக் கொடுக்கிறாள். அதன்பிறகு, அதற்குப் பிறப்பளித்து, கவனத்துடன் வளர்க்கவும் செய்கிறாள். பெண் தாயாவாள். </b> உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பெண்களாகும். ஆகவே, பெண்ணுக்கு உரிய இடமும், சுதந்திரமும் அளிக்கவில்லை எனில், அது உலகிற்கே மிகப்பெரிய இழப்பாக இருக்கும். ஆண் செய்யக்கூடியவை அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும். சொல்லப்போனால், அதைவிடக் கூடுதலாகவே அவளால் செய்ய முடியும். புத்தி சக்தியிலும், திறமைகளிலும் பெண் ஆணைவிடத் தாழந்தவள் அல்ல. ஆரம்பம் நன்றாக இருந்தால் இடைப்பகுதியும் முடிவும் சரியாக இருக்கும். தவறான அடிப்படையில் ஆரம்பிக்கும் காரணத்தால்தான் பெண் பல நலன்களை இழக்க நேரிடுகிறது. உதாரணமாக, ஆணுக்கு சமமாக சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பெண்ணுக்கும் இடமளிக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு உரிமையாகும். அதற்காக முயற்சி செய்வதும் சரியே. அதற்கு ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும். ஆனால், இன்று இந்த ஆரம்பம் தவறாகிவிட்டது. அதைக் குறித்து உருவான கருத்தும் தவறாகிவிட்டது. ஆரம்பத்தை விட்டுவிட்டு, முடிவை நோக்கி அவள் ஒரேடியாகத் தாவ முனைகிறாள். வாழ்வின் அஸ்திவாரம் எது? பெண்ணைப் பெண்ணாக்குவது எது? அவளுடைய அடிப்படைக் குணங்களான தாய்மை, அன்பு, கருணை, பொறுமை போன்றவையாகும். பெண்ணின் அடிப்படை தத்துவம் தாய்மையாகும். தாய் ஆவதும், மனைவி ஆவதும், கணவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் நண்பனாவதும் அவளுக்கு எளிதான செயலாகும். இல்லற வாழ்வையும், உத்யோக வாழ்வையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொள்ளாமல் இருக்க அவளால் முடியும். அலுவலகத்தையும், பதவியையும் வீட்டிற்குக் கொண்டு வருவதும், அதன் விளைவான உணர்ச்சிகளை மனைவியிடமும், குழந்தைகளிடமும் வெளிப்படுத்துவதும் பெரும்பாலான ஆண்களின் இயல்பாகும். சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் திறமையைப் பெண்ணுக்கு அளிப்பது அவளுடைய தாய்மையின் சக்தியாகும். அந்தப் பண்பில் அவள் எந்த அளவுக்கு மனம் ஒன்றுபடுகிறாளோ, அந்த அளவிற்கு அவளுக்குள்ளே ஆற்றல் பெருகும்; அவளது குரலை உலகம் உற்றுக் கேட்க ஆரம்பிக்கிறது. இன்றைய உலகில் போலித்தன்மை ஒரு தொத்துவியாதி போல் பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பெண்மையும், தாய்மையும் கலப்படத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஆணின் முழு மனதுடன் கூடிய ஒத்துழைப்பு அவளுக்குத் தேவை. ஆணும், பெண்ணும் பரஸ்பரம் உதவினால் இன்று உலகில் காணும் அமைதியின்மையும், சமாதான மின்மையும், போராட்டமும், யுத்தமும் பெருமளவில் குறையும். இவ்வாறு உதவும் மனநிலை இன்று தாறுமாறாகிக் கிடக்கிறது. இதை நாம் மீண்டும் பெற வேண்டும். அப்போதுதான் பிரபஞ்சத்தின் சமநிலையைச் சீராக்க முடியும். <b>மனிதப் பண்பாடு உருவாகி, ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து விட்டன. ஆயினும், நாம் இன்றும் பெண்ணுக்கு இரண்டாம் இடத்தையே அளிக்கிறோம். ஆண் உருவாக்கிய கட்டுப்பாடுகள் எனும் வேலிக்குள்ளே பெண்களின் திறமை மொட்டுகள் விரியாமல் வாடிப்போகின்றன. </b> சமூகத்தின் சட்ட திட்டங்களும், மத ஆசாரங்களும் அவை தோன்றிய காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்பவே உருவாயின. பெண்ணின் வளர்ச்சிக்காக அன்று உருவாக்கப்பட்ட அந்த சட்ட திட்டங்கள் இன்று காலாவதி ஆகிவிட்டன. அதுமட்டுமல்லாமல், அவை பெண்ணின் இன்றைய வளர்ச்சிக்குத் தடையாகவும் இருக்கின்றன. <b>ஆண், அவனுக்காகப் படைத்த ஒரு உலகத்தில்தான் இன்று பெண் வாழ்ந்து வருகிறாள். அந்த உலகத்திலிருந்து வெளியில் வந்து, அவள் தனக்குரிய தனித்தன்மையை நிறுவ வேண்டும். அதேசமயம், பெண் விடுதலை என்பது, அவள் மனம்போன போக்கில் வாழ்வதற்கும், நடந்துகொள்வதற்கும் உரிய சுதந்திரமல்ல. பெண்ணின் உயர்வு அவளது மனதிற்குள்ளிருந்தே ஆரம்பமாக வேண்டும். </b> ஆண்களைப் போல் நடந்துகொள்ள முனைவதால் இது கிடைக்காது. பெண்ணிடம் சக்தி விழிப்புற வேண்டுமெனில், முதலில் தனது பலவீனங்களை அவள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். மாறாக, தனது சுதந்திரத்திற்காகப் போராடும் பெண், தன்னிடமுள்ள பெண்மையையே இழக்கின்ற குறைபாட்டை இன்று பல இடங்களில் காண்கிறோம். இது உண்மையான பெண் விடுதலை ஆகாது; அது, பெண்ணினத்திற்கும், சமூகத்திற்கும் தோல்வியாகவே மாறும். பெண்ணும் ஆணைப்போல் ஆகிவிட்டால், உலகிலுள்ள பிரச்னைகள் மேலும் அதிகரிக்கவே செய்யும். ஒருவிதத்தில், பெண்ணின் உலகை மிகக் குறுகியதாக்கியவள் பெண்ணே ஆவாள். உடல் அலங்காரத்திற்கும், புற அழகிற்கும் அளவற்ற முக்கியத்துவம் அளிக்கும் போது, ஆண் உருவாக்கிய கூட்டிற்குள் அவள் தானே சிக்கிக் கொள்கிறாள். சமூகத்திலிருந்து எதைப் பெறலாம் என்று சிந்திக்காமல், சமூகத்திற்கு எதைக் கொடுக்க முடியும் என்று பெண் சிந்திக்க வேண்டும். இந்த மனோபாவம் ஏற்பட்டால் அவளால் நிச்சயமாக முன்னேற முடியும். தாய்மை என்பது குழந்தைகளை ஈன்ற பெண்களிடம் மட்டும் காணப்படும் பண்பல்ல. எல்லாப் பெண்களிடமும், எல்லா ஆண்களிடமும் இயல்பாகக் காணப்படும் உள்ளார்ந்த பண்பாகும். அது மனதின் ஒரு பேருணர்வாகும் - அது அன்பாகும். அன்பு நம்முடைய சுவாசத்திற்கு நிகரானது. ''நான் என் உற்றார், உறவினர் முன்னால் மட்டுமே சுவாசிப்பேன். வேறு யார் முன்னாலும் சுவாசிக்க மாட்டேன்'' என்று யாரும் சொல்வதில்லையே? அன்பு அல்லது தாய்மை என்பது அதுபோன்றதுதான். அதற்கு எல்லைகள் இல்லை; பேத உணர்வில்லை. இனி வருங்காலம் பெண்களின் பொற்காலமாக ஆக வேண்டும். பெண்மையின் நற்பண்புகளுக்கும், தாய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சாந்தியும், சமாதானமும் நிறைந்த ஒரு உலகை உருவாக்கும் முயற்சி வெற்றியடையும். இது நம்மால் இயலாத காரியமல்ல. </span> [b]<span style='font-size:25pt;line-height:100%'>கலாநிதி சந்திரலேகா வாமதேவா</span> - Mathan - 02-20-2004 உண்மை உண்மை - kuruvikal - 02-20-2004 என்ன இந்தக் கலாநிதியம்மா பெண்களை யானை எங்கிறா....நாங்கள் மனிதராத்தானே காண்கிறோம்...! இவர்களே இப்படி சொன்னா எப்படி...உண்மைத்தான் சொல்லுறாங்களோ....?????! யானைகளையே நெறிப்படுத்துபவன் அந்தப் பாகன் ஆச்சே...அவன் மனிதன்...தனது திறமையை புத்திசாலித்தனமாகப் பாவித்து தன் செயலைச் செய்து முடிக்கிறான்...அந்தளவுக்கு யானை சிந்திக்க முடியுமா என்ன...முடிந்திருந்தால் பாகன் எல்லோ சங்கிலியால் கட்டப்பட்டிருப்பான்....???! அப்படிச் செய்யாதது யார் தவறு யானையினதா பாகனினதா...??! சும்மா திறமை வலிமை இருக்கு என்று சொல்லிக் கொண்டு கட்டின இடத்தையே சுற்றிக் கொண்டிருக்கும் யானைகளால் ஆவது என்ன.....பாகனின் கட்டளைக்கு அடிபனிதலும் சாப்பிட்டுப்படுப்பதும் தான்....???! ஆனா அதுவா மனித சமூகத்தில நடக்குது...மறுதலை எல்லோ நடக்குது.....கட்டளை வந்ததும் ஆண் ஓடுகிறான் வேலைக்கு...ஓய்வில்லாமல் சம்பாதிக்கிறான்...கொண்டு வந்து கொட்டுகிறான்....பெண்கள் நாங்கள் யானை மாதிரி ஆகிறம்...! அதாலதான் இப்படி மிணக்கட்டு எழுத முடியுது...இதில செலவிடும் நேரத்தை...ஏதாவது படித்த படிப்பைக் கொண்டு நாங்கு பிள்ளைகளை வைத்து ஒரு ஆராய்ச்சி செய்திருந்தால் கூட....ஒட்டு மொத்த சமூகமும் பயனடைந்திருக்கும்....! இப்படியே ஆண் வேலி போடுறான் என்று கற்பனையில் யானைகள் போல் வாழ வேண்டியது...அப்பப்ப கனவு கண்டு விழிச்சா மட்டும் திட்டித் தீர்த்து விட்டு மீண்டும் உறங்க வேண்டியது....அல்லது விடுதலை என்று கொண்டு மதம் பிடித்த யானைகளாகி திரிய வேண்டியது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 02-20-2004 நல்லதொரு ஆக்கத்தினை தந்த சந்திரவதனா அக்காவுக்கு நன்றிகள். - Kanakkayanaar - 02-21-2004 Quote:இங்கே ஒரு கதை நினைவுக்கு வருகிறது....தண்ணீரில் நடப்பதோ... இந்தப் பெண்ணியக்காரர்கள் இன்னும் புராணகாலத்தில் தான் இருக்கிறார்கள் போலும்! Quote:ஒரு குழந்தைக்குப் பிறப்பளிப்பதைப் பொருத்தவரை, அவனுக்கு ஒரு நிமிட வேலை; அவ்வளவுதான். அத்துடன் ஆணின் பங்கு முடிந்துவிடுகிறது. ஆனால், பெண...ஆமாம், ஆண்களுக்கு அது சில நுணுத்த வேலை தான், அத்துடன் அவர்கள் வேலை முடிந்து விடுகிறது! பெண்ணியத் தேவதை மட்டும் இல்லாவிட்டால் பெண்களின் பாடு பெரும்பாடு. ஏனெனில் பெண்ணியத்தேவைதை தானே, மாடா உழைச்சு கருவளர்ச்சிக்கான ஊட்டச் சத்துணவு வழங்குது. பெ.தே தானே நிறைமாதமாக இருக்கும்பொழுது அன்பாகவும் ஆதரவுடனும் கவனிக்குது (நானே சில பெ.தே கள் நாரைப்பழச் சாறு கரைச்சுக் கொடுத்த). "அம்மா வயிறு வலிக்குதே" எனும்போழ்து, பெ.தெ தானே அரக்க்கப் பரக்க, தன்னிடம் உள்ள ஊர்தியிலோ, மிதிவண்டியிலோ (அததன் வருவாய்க்கேற்ற வகையில்) மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போகுது. பிள்ளை பிறந்த பிறகு பெ.தெ தானே சாணத்துணியில் இருந்து சட்டை வரை வாங்கி வருது. பின்னர் பிள்ளையை நல்ல பள்ளிக்கு அனுப்ப ஊக்கம் கொடுக்குது. ஆன இது வரைக்கும் இந்த ஆண்கள் எங்காவது கள்ளுக்கொட்டிலில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறர்கள் போலும். பெ.தே மட்டும் இல்லை என்றல் எண்ணிப் பாருங்கள் பெண்ணின் நிலையை. கலாநிதி ச. வாமதேவாவும் இதைப் போய் தடிப்பாக்கி வலியுறுத்துகிறார். கடுரையே சொல்கிறது: Quote:ஆண் செய்யக்கூடியவை அனைத்தையும் பெண்ணால் செய்ய முடியும். சொல்லப்போனால், அதைவிடக் கூடுதலாகவே அவளால் செய்ய முடியும். புத்தி சக்தியிலும், திறமைகளிலும் பெண் ஆணைவிடத் தாழந்தவள் அல்ல.பின்னர் இப்படியும்: Quote: ஆணுக்கு சமமாக சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் பெண்ணுக்கும் இடமளிக்க வேண்டும் என்பது நியாயமான ஒரு உரிமையாகும். அதற்காக முயற்சி செய்வதும் சரியேபெண்களுக்கு ஆணுக்கு நிகரான திறமையிருக்கென அம்மாச்சி எண்ணினால்; திறமை, தகமை அடிப்படையிலல்லவோ பணியில் சேர்க்க முன்மொழியவேண்டும ் அதை விடுத்து ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள். ஆண்களுக்கு ஆண்கள் என்ற காரணத்துக்காக பதவியும் பணிகளும் வருவதில்லையே அவரவர் திறமைக்கும் தகமைக்கும் தானே அவை வரும். இங்க சிலர் கோயில் ஆக்களப் போல தலையாட்டுகிறதால் தான் இது போன்று பெண்ணியக்காரரும் எழுதி வடிக்கிறர்கள். :mrgreen: - Mathivathanan - 02-21-2004 நீங்கள் அந்த வெட்கப்பட்ட தம்பிதானே..? வயது வர சீலைத் தலைப்பை விடத்தான்வேணும்.. இப்ப கொஞ்சம் வளர்ந்த உடனை முற்றுமுழுதா துண்டிக்கிறது சரியில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-21-2004 நல்லாச் சொன்னியள் கணக்கயனார்...இப்பதான் களத்தில் ஒரு யதார்த்தவாதியைச் சந்தித்த திருப்தி....! தொடர்ந்து எழுதுங்கள்...! தங்கள் கருத்துக்கு பாராட்டும் நன்றிகளும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 02-21-2004 எங்கயோ நல்லாய் சுட்டுப்போட்டுது போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 02-21-2004 Mathivathanan Wrote:நீங்கள் அந்த வெட்கப்பட்ட தம்பிதானே..? ஓ அப்படியா விசயம் :roll: :roll: - kuruvikal - 02-21-2004 சாமியார் வசியானந்தா.... ஆருக்கு சுட்ட கதை எழுதினனியள்.... எங்களுக்கெண்டா நினச்சது மிகத் தப்பு....நெருப்புச் சுடும் எண்டது அனுபவத்தால பெற முதலே அறிஞ்சிட்டம்....! சாம்பலுக்கால வந்த பீனிக்சுக்கே சூடாவது வைக்கிறதாவது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 02-21-2004 அட அங்க சொன்னது உங்களுக்கு இல்லை குருவி. - Mathan - 02-21-2004 Kanakkayanaar Wrote:[quote=Kanakkayanaar] பெண்களுக்கு ஆணுக்கு நிகரான திறமையிருக்கென அம்மாச்சி எண்ணினால் ???????? அப்பிடின்னா இல்லைன்னு சொல்றீங்களா? அப்பிடி நினைக்காதீங்க. நிச்சயமா அவங்களுக்கு திறமை இருக்கு. அவங்களுக்கு சரியான வாய்ப்பு வசதி குடுக்கலை. அதனால தான் இட ஒதுக்கீடு கேக்கிறாங்க. அவங்களை ஆணுக்கு சமனா எல்லாத்துலையும் கொண்டு வரும் வரைக்கும் இட ஒதுக்கீடு வேணும் பொஸ். அவங்க நிலைமையில இருந்தும் கொஞ்சம் நினைச்சு பாருங்க. எப்பவும் ஒரு பக்கமா யோசிக்காதீங்க. மத்த பக்க நியாயத்தையும் பாருங்க. - kuruvikal - 02-22-2004 திறமையைக் காட்ட வேணும்...காட்டினா பிறகெதற்கு ஒதுக்கீடு....திறமை உள்ளவன் செய்து முடிப்பான் கெஞ்சமாட்டான்....! எல்லாப் பக்கமும் நிலைமை ஒன்றுதான்....நின்றுதான் பாத்தோமே....சில பேருக்கு பார்வைக் கோளாறெண்டா கொஞ்சம் அப்படித்தான் தெரியும்....! விதிவிலக்குகள் எங்கும் உண்டு இங்குமா....?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-22-2004 kuruvikal Wrote:திறமையைக் காட்ட வேணும்...காட்டினா பிறகெதற்கு ஒதுக்கீடு....திறமை உள்ளவன் செய்து முடிப்பான் கெஞ்சமாட்டான்....! எல்லாப் பக்கமும் நிலைமை ஒன்றுதான்....நின்றுதான் பாத்தோமே....சில பேருக்கு பார்வைக் கோளாறெண்டா கொஞ்சம் அப்படித்தான் தெரியும்....! விதிவிலக்குகள் எங்கும் உண்டு இங்குமா....?! [size=18]காலாகாலமா பெண்கள் ஒடுக்கப்பட்டு வந்திருக்காங்க. அவங்களுக்கு வசதி வாய்ப்பு கிடைக்கலை. இப்ப திடீருன்னு திறமை இருந்தா செய்து பாருங்கன்னு வசதி வாய்ப்புல மேல இருந்துகிட்டு வாய்சவடால் விட முடியாது. அவங்களை ஆண்கள் இருக்குற அதே அளவு சமுக நிலைமைக்கு கொண்டுவரும் வரைக்கும் இட ஒதுக்கீடு தேவை. - kuruvikal - 02-22-2004 BBC... அதென்ன ஆண்கள் இருக்கும் சமூக நிலை..... அதை கொஞ்சம் தெளிவாச் சொன்னியள் எண்டா பெண்கள் அதை அடைவது (நீங்கள் சொல்வது போல ) சுலபமாகுமே....பிறகேன் இட ஒதுக்கீடு எண்டு புலம்பவேணும்....! ஆண்களால்...பெண்களும் அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் பெண்கள் இருக்கிறார்கள்....அவர்களா உணர்ந்து தமது திறமைகளூடு ஆண்களுக்கு போட்டியாக வளர்ந்து தம் திறமைகளைக் காட்ட முன்வரவில்லையே...இட ஒதுக்கீடு என்று அரசியல் திறமையற்ற பெண்களை... பெண் என்பதற்காக அரசியலுக்குள் இழுப்பது தவறான அரசியல் எதிர்காலத்தையே உருவாக்கும்....அப்படி என்றால் சிங்களவரின் தரப்படுத்தல் கல்விக் கொள்கையும் நியாயமானதாகத்தானே இருக்கும்.....! திறமையானவர்களுக்கே என்று இடம் கொடாமல் பிரதேசவாரியாக எல்லோருக்கும் உயர்கல்வி கொடுக்கும் முயற்சி.....பெண் என்பதற்காக திறமை அற்றவருக்கும் அரசியல் சந்தர்ப்பம் வழங்கல்.....!வேற்றுமை ஒன்றும் அதிகமில்லையே.....???! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
- Mathan - 02-23-2004 ஒரு கேள்வி? உங்க பார்வையில் பெண் விடுதலை அடைஞ்சுட்டாங்களா? - shanmuhi - 02-23-2004 :?: :roll: :?: - kuruvikal - 02-23-2004 ஆரக் கேக்குறீங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 02-23-2004 kuruvikal Wrote:ஆரக் கேக்குறீங்கள்....! உங்களைதான் குருவி ஒரு கேள்வி? உங்க பார்வையில் பெண் விடுதலை அடைஞ்சுட்டாங்களா? - kuruvikal - 02-23-2004 அது அவங்கதான் சொல்ல வேணும்....அதுக்கு முதல் ஒரு கேள்வி பெண் விடுதலை என்றால் என்ன....?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|