03-25-2004, 06:28 PM
கண்ணன் Wrote:அஜீவன் உங்கள் படபிடிப்பு அனுபவங்களையும் கூறுங்கள்.
எப்படி எல்லோரையும் சமாளிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
AJeevan
|
அழியாத கவிதை, கனவுகள், தாகம், ஏகலைவன்.
|
|
03-25-2004, 06:28 PM
கண்ணன் Wrote:அஜீவன் உங்கள் படபிடிப்பு அனுபவங்களையும் கூறுங்கள். AJeevan
03-25-2004, 06:45 PM
BBC Wrote:தகவல்களுக்கு நன்றியும் உங்கள் குறும்பட முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும் அஜீவன். நீங்கள் யாழ் களத்தில் போட்ட குறும்படங்களை தவிர மற்றைய குறும்படங்களை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த குறும்படங்களை எங்கேயாவது பெற்றுக்கொள்ள முடியுமா? உங்களிடம் சீடி அல்லது கசற் வடிவில் இருக்கின்றதா? அல்லது உங்கள் வெப்சைட் எதிலாவது போட்டு வைத்திருக்கின்றீர்களா? <span style='font-size:21pt;line-height:100%'>நன்றி! சுவிஸ் சினிமாக் குழுவினரோடு செய்யும் படைப்புகள் தவிர,<b>அழியாத கவிதை </b>மட்டுமே என்னிடமிருக்கிறது. அது (லண்டன்) மற்றுமொருவரின் தயாரிப்பு என்பதால் அதை எவருக்கும் கொடுக்க முடியாமலிருப்பது மட்டுமல்ல, சுவிசில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கே அனுப்ப முடியாமல் போய் விட்டது. அதை என் விருப்பப்படி செய்ய என் மனசாட்சி இடம் தரவில்லை. கூடிய விரைவில் முழு நீள படமொன்றை எனது தயாரிப்பில் கொண்டு வருவேன். குறும்படங்கள் செய்வதை தற்காலீகமாக நிறுத்தி விட்டேன்.</span> AJeevan
03-25-2004, 07:29 PM
அழியாத கவிதை படபிடிப்பு அனுபவங்களை அறிய மிக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
மேலும் தங்களின் முழுநீளபடமும் வெற்றியுடன் முடிவடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
03-25-2004, 08:18 PM
நிதானமாக எழுத வேண்டிய விடயம் . ஈழவன் & சண்முகி, படம்தான் வேதனையாக இருக்குமே தவிர படப்பிடிப்பு நடந்த விதத்தைக் கேட்டால் அல்லது நினைத்தால் சிரிப்புதான் வரும்.
பின்னர் விடயத்தை நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடாதீர்கள். [size=15]அதைப்பற்றி எழுதுமுன் சுவிசில் என் முதல் அனுபவத்தை முகவுரையாக எழுதுவது அடுத்ததற்கு மனதை தயார் செய்து கொள்ள உதவியாக இருக்குமென நம்புகிறேன். நான் சுவிசுக்கு வந்த ஆரம்ப கால கட்டத்தில் (1990), ஒரு சிலர் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு தயாராவதாக அறிந்தேன். எனக்கும் பெருமகிழ்ச்சி. நானும் அப்படியா என்று வாயைப் பிளந்தேன். ஓரு சிலர் சொன்ன கதைகளைக் கேட்டால் ஐரோப்பாவெல்லாம் தூள் கிளப்பும் என்றார்கள். இக் கதை என் காதுகளுக்கு எட்டும் காலத்தில் நான் அகதி முகாமிலிருந்தேன். அக்காலத்தில் இருக்கும் முகாமிலிருந்து நகருக்கு வர மாத்திரமே எனக்குத் தெரியும். மொழியும் புரியாது இடமும் பெரிதாக பரிச்சயமில்லை. என்னோடு முகாமிலிருந்த ஒருவர் ஊடாக, எனக்கு சினிமாவில் பரிச்சயமிருப்பது அறிந்து , ஒருநாள் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்கள். நானும் பயபக்தியுடனே அங்கு சென்றேன். அவர்களது வீட்டுக்குள் நுழைந்ததும் எனக்கு முதல் அதிர்ச்சி. அறையெல்லாம் பியர் டின்கள் நிறைந்து கிடந்தது. அறையிலிருந்த இருவரும் கொஞ்சம் போதையுடன் இருந்தார்கள். நானும் சுததாகரித்துக் கொண்டு இருக்கச் சொன்ன இடத்தில் அமர்ந்தேன். கொஞ்ச நேரம் வழமையான அறிமுகபடலம், குசல விசாரிப்புகள். பின்னர் கதை சொல்லும் படலம் ஆரம்பமாகியது. இருவரும் மாறி மாறி கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒருவர் சொல்வதில் உள்ள தவறை சரி செய்து, அடுத்தவர் கதை சொல்லத் தொடங்குவார். அவர் விடும் தவறிலிருந்து முன்னையவர் கதையை தொடருவார். இதற்குள் நல்ல நல்ல வார்த்தைகள் தலைகாட்டி மறையும். இப்படியே 2 மணித்தியாலங்கள் சென்றது. எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.கதையும் புரியவில்லை. எனது முக்கிய பிரச்சனையானது யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், யார் நடிகர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாக திணறிப் போனதேயாகும். ஓரு சந்தர்ப்பம் வந்த போது, மெதுவாக நான் என் சந்தேகத்தைக் கேட்டேன். அவர்கள் தந்த பதில் அவரவர் பகுதிகளை அவரவரே இயக்கி நடிப்பதாகச் சொன்னார்கள்.நான் வாயே திறக்கவில்லை. "கமரா நீர் எடுத்தால் போதும்.........." என்றார்கள். எனக்கு முச்சு நின்றது போலாகியது. நான் பேசவில்லை. அடுத்த கேள்வி "என்ன மாதிரி கமரா வாங்கினால் படம் நல்லா வரும்?" நான் கடையில் பார்த்து விட்டு சொல்வதாக கூறிவிட்டு, அழைத்துச் சென்றவரோடு வெளியேறினேன். அழைத்துச் சென்றவர் என்னிடம் "நான் என்ன பாத்திரத்தில் நடித்தால் நல்லாயிருக்கும்" என்று கேட்டார். கதையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாக வருகிறதே அந்த பாத்திரத்திதை தந்து பாலத்திலிருந்து ஓடும் ரயிலில் குதிக்கச் சொல்லி , உன்னைக் கொன்று போட வேண்டுமென்றேன். அதன் பிறகு நான் அந்தப்பக்கமே போகவில்லை. கண்டால் , கடன் கொடுத்தவனைக் கண்டவன் போல நான் மறைந்து விடுவேன். அவர்கள் கடைசி வரை படம் எடுக்கவேயில்லை, ஆனால் படம் எடுக்க தேர்ந்தெடுத்த இரு பெண்களையும் (அக்கா-தங்கை) திருமணம் செய்து சுவிசை விட்டுச் சென்று குழந்தை குட்டிகளோடு தற்போது இரு நண்பர்களும் ஹொலண்டில் வாழ்கிறார்கள். தொலைக்காட்சியில் எனது பேட்டியை பார்த்து விட்டு ,என்னோடு தொடர்பு கொண்டார்கள். இன்னும் படமெடுக்கும் ஆசையோடே வாழ்வதாக சொன்னார்கள்........................ AJeevan
03-25-2004, 09:24 PM
ஆரம்பமே சுவாரசியமாக இருக்கின்றது.
தொடருங்கள்.....
03-25-2004, 09:56 PM
தொடருங்கள் அஜுவன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பேப்பர் காறரும் அதற்கு எழுதுபவர்களும் பியர் ரின்னுடன்தான் இருந்த எழுதுகின்றார்கள் போலிருக்கின்றது. எழுத்துக்கள் அப்படி இருக்கின்து என்பதால் இந்தச் சந்தேகம்.
<b>
? ?</b>-
03-26-2004, 12:42 AM
ஏற்கெனவே ஒரு தொடர் ஒரு அத்தியாயத்தோட நிற்குதென நினைக்கிறேன்.. இதுவாவது முழுமையாக வருமா? வாழ்த்துக்கள்! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
03-26-2004, 09:32 AM
sOliyAn Wrote:ஏற்கெனவே ஒரு தொடர் ஒரு அத்தியாயத்தோட நிற்குதென நினைக்கிறேன்.. இதுவாவது முழுமையாக வருமா? வாழ்த்துக்கள்! <!--emo& [size=14]நானே எழுதி, நானே பார்க்கும்படியான, தொடர் ஒன்றைத் தொடர்வதில் யாருக்கும் லாபமில்லை சோழியன்? நான் அந்த தொடருக்காக, முறையான தரவுகளைத் தேடி படிப்போருக்கு விளங்கும்படி எழுத வெகு நேரத்தைச் செலவிட வேண்டும்.அதை யாரும் விளங்கியதென்றோ, விளங்கவில்லை என்றோ கருத்துக்கள் வரவில்லை. ஒன்று, இவை படிப்போருக்கு தெரிந்த விடயமாக இருக்கலாம். அல்லது தேவையற்ற விடயமாக இருக்கலாம். வாசகர்கள் விரும்பாத ஒரு விடயத்தை எழுதுவதில் யாருக்கு லாபம்? உதாரணத்துக்கு, விகடனில் வந்த <b>மாத்தி யோசி </b>என்ற ஒரு கட்டுரையின், ஒரு சில பகுதிகளை தந்தால், என் நிலை புரியுமென நம்புகிறேன். இதோ:- [size=14]எல்.கே.ஜி. சிறுவன் ஒருவன் நம்மிடம் மழை எப்படிப் பெய்கிறது? என்று கேட்டால், ஆகாயத்தில் தேங்கி இருக்கும் தண்ணீர் பொத்துக்கொண்டு மழையாகப் பெய்கிறது என்றோ, பெரிய யானை ஒன்று மேலிருந்து தண்ணீரைக் கொட்டுகிறது என்றோ சொன்னால், மறுகேள்வி கேட்காமல் நமது பதிலை அப்படியே ஏற்பான். இதையே பத்தாம் வகுப்பு மாணவனிடம்சொன்னால் சிரிப்பான்! காரணம், அவனுக்கு இன்னும் சரியான விளக்கம்தேவையாய் இருக்கிறது! கடல்நீர், ஆவியாகி, மேலே சென்று மழையாகப் பொழிகிறது என்றால் ஒப்புக்கொள்வான். ஆனால், ஒரு பட்டதாரி மாணவனுக்கு இந்த விளக்கம் போதாது. அதுவே, ஆராய்ச்சி மாணவனாக இருந்தால்பட்டதாரி மாணவனுக்குச் சொன்னவிளக்கமும் போதுமானதாக இராது! அறிவின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்ப, விளக்கங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. ஆயினும், நிதர்சனமான மழைமட்டும் மாறவில்லை! மாறுதலுக்குட்பட்ட, மேலும் மேலும் வளருகிற தன்மை கொண்ட அறிவுக்கு எப்படி நிலையான விளக்கம் தரமுடியும்?! (நன்றி:கவிஞர் பெருமாள்ராசு) [size=14]நான் யாருக்கு? எந்த நிலையில் உள்ளவருக்கு? எழுதுகிறேன் என்று கூட தெரியாத போது, <b>கட்டுரையை நிறுத்தியதில் தவறுண்டா?</b> AJeevan
03-26-2004, 11:31 AM
அந்த ஹொலண்ட் நண்பர்கள் பற்றி நீங்கள் இன்று வரை என்னிடம் வாய்திறக்கவில்லை.
அவர்கள் பற்றிய விபரத்தை கொஞ்சம் தாருங்களேன். எனக்கு வேண்டியது ஆர்வமுள்ளவர்களே திறமை இருக்கோ இல்லையோ பிரச்சினை இல்லை
03-26-2004, 12:30 PM
நல்லதொரு முயற்சி அஜீவன் அண்ணா ஒளிப்பதிவு பற்றித் தெரியாதவர்கள் கூட உங்கள் கட்டுரையைப் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்து ஆனால் இந்தக் கட்டுரை மூலம் ஒரு கலைஞனின் அனுபவங்கள் எமக்கும் கிடைக்கும் என்றால் அது உண்மை
\" \"
03-26-2004, 01:00 PM
கண்ணன் Wrote:அந்த ஹொலண்ட் நண்பர்கள் பற்றி நீங்கள் இன்று வரை என்னிடம் வாய்திறக்கவில்லை. ஆர்வம் இருப்பதில் தவறில்லை கண்ணன்.கமராவைப் பிடிப்பதற்குத்தான் இவர்களுக்கு ஆள் தேவைப்பட்டதே தவிர ஒரு ஒளிப்பதிவாளரல்ல. தேவையானால் சொல்லுங்கள் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை தருகிறேன். AJeevan
03-26-2004, 01:09 PM
Eelavan Wrote:நல்லதொரு முயற்சி அஜீவன் அண்ணா ஒளிப்பதிவு பற்றித் தெரியாதவர்கள் கூட உங்கள் கட்டுரையைப் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கருத்து ஆனால் இந்தக் கட்டுரை மூலம் ஒரு கலைஞனின் அனுபவங்கள் எமக்கும் கிடைக்கும் என்றால் அது உண்மை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உங்கள் கருத்து சரியாகத்தான் இருக்கிறது. திரைக்கலை என்ற கட்டுரையை எவருமே எட்டியும் பார்க்கவில்லை.இதுவரை ரசனையாக ஏதாவது செய்யாமலிருந்தது எனது தவறு ஈழவன்.நன்றிகள்.......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நான் எனது சினிமாக் கதைகளைச் சொல்லும் போது இப்படியானவற்றை எழுதுங்கள், சீரியசாக இருப்பதை விட உங்கள் ரசனை பலருக்கு தெரியாது என என்னை எழுத வைத்த இளங்கோவுக்கும் நன்றிகள்..................................AJeevan
03-26-2004, 01:14 PM
Aalavanthan Wrote:தொடருங்கள் அஜுவன். <!--emo& போத்தலுக்கு பக்கத்தில் இருந்தாலும் சிலருக்கு போதை வரும். அப்படியும் இருக்கலாம் இல்லயா ஆளவந்தான்?
03-27-2004, 02:39 AM
[quote=AJeevan]நிதானமாக எழுத வேண்டிய விடயம் . ஈழவன் & சண்முகி, படம்தான் வேதனையாக இருக்குமே தவிர படப்பிடிப்பு நடந்த விதத்தைக் கேட்டால் அல்லது நினைத்தால் சிரிப்புதான் வரும்.
பின்னர் விடயத்தை நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடாதீர்கள். [size=15]அதைப்பற்றி எழுதுமுன் சுவிசில் என் முதல் அனுபவத்தை முகவுரையாக எழுதுவது அடுத்ததற்கு மனதை தயார் செய்து கொள்ள உதவியாக இருக்குமென நம்புகிறேன். நான் சுவிசுக்கு வந்த ஆரம்ப கால கட்டத்தில் (1990), ஒரு சிலர் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு தயாராவதாக அறிந்தேன். எனக்கும் பெருமகிழ்ச்சி. நானும் அப்படியா என்று வாயைப் பிளந்தேன். ஓரு சிலர் சொன்ன கதைகளைக் கேட்டால் ஐரோப்பாவெல்லாம் தூள் கிளப்பும் என்றார்கள். இக் கதை என் காதுகளுக்கு எட்டும் காலத்தில் நான் அகதி முகாமிலிருந்தேன். அக்காலத்தில் இருக்கும் முகாமிலிருந்து நகருக்கு வர மாத்திரமே எனக்குத் தெரியும். மொழியும் புரியாது இடமும் பெரிதாக பரிச்சயமில்லை. என்னோடு முகாமிலிருந்த ஒருவர் ஊடாக, எனக்கு சினிமாவில் பரிச்சயமிருப்பது அறிந்து , ஒருநாள் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்கள். நானும் பயபக்தியுடனே அங்கு சென்றேன். அவர்களது வீட்டுக்குள் நுழைந்ததும் எனக்கு முதல் அதிர்ச்சி. அறையெல்லாம் பியர் டின்கள் நிறைந்து கிடந்தது. அறையிலிருந்த இருவரும் கொஞ்சம் போதையுடன் இருந்தார்கள். நானும் சுததாகரித்துக் கொண்டு இருக்கச் சொன்ன இடத்தில் அமர்ந்தேன். கொஞ்ச நேரம் வழமையான அறிமுகபடலம், குசல விசாரிப்புகள். பின்னர் கதை சொல்லும் படலம் ஆரம்பமாகியது. இருவரும் மாறி மாறி கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒருவர் சொல்வதில் உள்ள தவறை சரி செய்து, அடுத்தவர் கதை சொல்லத் தொடங்குவார். அவர் விடும் தவறிலிருந்து முன்னையவர் கதையை தொடருவார். இதற்குள் நல்ல நல்ல வார்த்தைகள் தலைகாட்டி மறையும். இப்படியே 2 மணித்தியாலங்கள் சென்றது. எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.கதையும் புரியவில்லை. எனது முக்கிய பிரச்சனையானது யார் இயக்குனர், யார் தயாரிப்பாளர், யார் நடிகர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாக திணறிப் போனதேயாகும். ஓரு சந்தர்ப்பம் வந்த போது, மெதுவாக நான் என் சந்தேகத்தைக் கேட்டேன். அவர்கள் தந்த பதில் அவரவர் பகுதிகளை அவரவரே இயக்கி நடிப்பதாகச் சொன்னார்கள்.நான் வாயே திறக்கவில்லை. "கமரா நீர் எடுத்தால் போதும்.........." என்றார்கள். எனக்கு முச்சு நின்றது போலாகியது. நான் பேசவில்லை. அடுத்த கேள்வி "என்ன மாதிரி கமரா வாங்கினால் படம் நல்லா வரும்?" நான் கடையில் பார்த்து விட்டு சொல்வதாக கூறிவிட்டு, அழைத்துச் சென்றவரோடு வெளியேறினேன். அழைத்துச் சென்றவர் என்னிடம் "நான் என்ன பாத்திரத்தில் நடித்தால் நல்லாயிருக்கும்" என்று கேட்டார். கதையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயல்வதாக வருகிறதே அந்த பாத்திரத்திதை தந்து பாலத்திலிருந்து ஓடும் ரயிலில் குதிக்கச் சொல்லி , உன்னைக் கொன்று போட வேண்டுமென்றேன். அதன் பிறகு நான் அந்தப்பக்கமே போகவில்லை. கண்டால் , கடன் கொடுத்தவனைக் கண்டவன் போல நான் மறைந்து விடுவேன். அவர்கள் கடைசி வரை படம் எடுக்கவேயில்லை, ஆனால் படம் எடுக்க தேர்ந்தெடுத்த இரு பெண்களையும் (அக்கா-தங்கை) திருமணம் செய்து சுவிசை விட்டுச் சென்று குழந்தை குட்டிகளோடு தற்போது இரு நண்பர்களும் ஹொலண்டில் வாழ்கிறார்கள். தொலைக்காட்சியில் எனது பேட்டியை பார்த்து விட்டு ,என்னோடு தொடர்பு கொண்டார்கள். இன்னும் படமெடுக்கும் ஆசையோடே வாழ்வதாக சொன்னார்கள்........................ AJeevan அஜீவன், கட்டுரை நல்ல சுவாரசியமாக இருக்கின்றது. நீங்கள் நிறைய சுவாரசிமான மனிதர்களை சம்பவங்களை சந்தித்து இருப்பீர்கள் போல தெரிகின்றது. உண்மையில் இதுபோன்ற வாழ்க்கை அனுபவங்களை நிறையப்பேர் ஆங்கிலத்தில் எழுதி ஓரே இரவில் புகழும் பணமும் பெற்று விடுகின்றார்கள். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு வரவேற்பில்லை என்பது கவலைக்குரிய விடயம். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இந்த கள நண்பர்கள்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. எழுதும் அஜீவனுக்கும் எழுத வைத்த இளங்கோவுக்கும் எனது நன்றிகள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-27-2004, 06:22 PM
நன்றிகள்..............
AJeevan
03-28-2004, 12:16 AM
<span style='font-size:22pt;line-height:100%'>சில வருடங்களுக்கு முன் என் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து \"நாங்கள் செய்த குறும்படங்களுக்கு விருதுகள் கிடத்திருக்கு. இதுவே நமக்கு அடுத்த அடி எடுத்து வைக்கிறது சரியான நேரம். ஓரு முழு நீளப் படத்தை செய்வோம்\" என்றார்கள். நானும் சரியென்று சொல்லி வானோலி ,தொலைக்காட்சியிலெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நல்லதொரு திருப்பம். எல்லா இடத்தில இருந்தும் டெலிபோன் கோள்கள். வானோலி பேட்டி வேற தூள் பறக்கிற மாதிரிதான். . . . . தெரியும்தானே, ஒரு விழிப்புணர்வு நம்ம உறவுகள் மத்தியில. . . சந்தோசமாக இருந்தது. எல்லோருடய விலாசங்கள், தகவல்களை எல்லாம் வாங்கி அழைப்பிதழ் அனுப்பி, அழைப்பிதழிலேயே, என்ன எமது திட்டம் என்று எல்லாம் கொள்கை விளக்கம் கொடுத்து . . . அவங்களுடைய கருத்துகளையும் எழுதுங்கள். . . என்று சொன்னோம். இப்படி வாரவங்க பலருக்கு எழுத நேரமிருக்காது . . . . சிலருக்கு எழுதத் தெரியாது. . . . . . இவங்கள் போன்ல சொன்னதை நான் குறித்துக் கொண்டேன். முதல் கடிதம் குறைந்தது 100 பேருக்கு அனுப்பினோம். கொள்கை விளக்கமெல்லாம் ,படித்து தெளிவானதாலேயோ என்னவோ பிறகு கூட்டம் ஒரு 100 பேர்களாக இருந்தவர்கள், 35 பேர்களாக குறைந்தது. அதற்கு பிறகு நான் அதிகமாக யோசிக்கத் தொடங்கினேன். . . . ஏன் திடீரென்று 100,35 ஆகியது. ஓரே குழப்பம். ராடார் வேலை செய்ய மறுத்தது. எங்கேயோ பிழை விட்டுட்டோமே? அது என்னவா இருக்கும்? தலையை பிச்சுக் கொண்டேன். . . . .ஊகும். . . . ஒரு கிழமையா பிடிபடவேயில்லை. அதுக்கு பிறகு அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விடை ஒரு மாதிரி வெளிச்சது. நான் எடுக்கிற படங்கள் யதார்த்தமானவையா இருக்கும். எனது படங்களில கதாநாயகன் கதாநாயகி வில்லன் என்று இருக்காது. அவனவன் வாழ்கையில அவனவன் தன்னை கதாநாயகனாத்தான் நினைக்கிறான். ஓவ்வொரு மனிதனக்குள்ளயும், தெய்வமுமிருக்கு மிருகமுமிருக்கு. அதனால கதாநாயகனா நினைக்கிற ஒவ்வொரு மனிதனும் எங்கோ ஒரு இடத்தில தப்பு பண்ணுகிறான். அப்போது அவன் வில்லனாகிறான். அதே மனிதனுக்கு ஏதோ ஒரு இடத்தில சிரிக்கிறதுக்கோ இல்ல இன்னொருவரை சிரிக்க வைக்கிறதுக்கோ ஒரு சந்தர்ப்பம் வருகிறது. அப்போ நாங்க கொமடியனாகிறோம். இப்படித்தான் என் படம் இருக்கும் என்று, மேதாவித்தனமா அடுத்தவங்களுக்கு அறிவை கொடுக்கிறதுக்கு நான் எழுதிய விளக்கத்தால் வந்த வினை அது என்று பிறகுதான் புரிந்தது. நான், அதன்பிறகு, அப்படியான விளக்கங்களை தவிர்த்தே அடுத்த பதில் கடிதம் எழுதினேன். முதல் சந்திப்புக்கு நாள் குறித்து ஹோட்டல் ஒன்றில் எனது சுவிஸ் திரைப்பட சம்மேளனத்தின் கூட்டம் நடைபெறும் பகுதிக்கு பணம் கட்டி மாலை 2.00 மணிக்கு கலைஞர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்தால் மாலை 3.00 மணி வரை 5பேர்தான் வந்திருந்தார்கள். கொஞ்சம் நேரம் கழித்து அதாவது மாலை 4.30 மணிக்கு பிறகு ஒருவாறு 16பேர் அளவு வந்தார்கள். கூட்டத்தை ஆரம்பித்தோம். முன்ன விட்ட தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று மிக அவதானமாக பேசினேன். கதையை அவர்கள் ரசிக்கும் படி சொல்ல மிகவும் சிரமப்பட்டேன். கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருப்பவர்களை ரேயின் ரேன்ஜூக்கு கொண்டு வாரதெண்டால் பின்லாடனை பிடிக்கிறதை விட கடினம். இருந்தாலும் எல்லாரும் சந்தோசத்தில் சிரித்தார்கள். எல்லோருக்கும் சந்தோசம்....... அவர்களையும் கொஞ்சம் பேச விட்டேன். இது நான் செய்த அடுத்த தவறு. அவர்களுக்குள்ளும் ஒவ்வொரு கதையிருக்கும் என்று சொல்லி பேசச் சொன்னேன்.. மனசிலிருந்தவற்றை ஒரு சிலர் மடை திறந்தது போல சொன்னார்கள். ஒரு சில கதைகள் நல்லாயிருந்தது. இப்போ கதைக்கு பஞ்சமில்ல. ஆனா முதல்ல ஒரு கதையை தேர்வு செய்து செய்வோம், அடுத்ததா தொடரலாம் என்று சொல்லி ஒரு சின்ன இடைவேளை கொடுத்தேன். இடைவெளிக்கு எல்லோரும் வெளியே போனார்கள். இடைவேளை முடிந்த பிறகு மறுபடி கூடினால், 6-7 பேரைக் காணவில்லை. தேடிப் போனால், அவர்கள் ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டே கதை விவாதத்தில் முழுதாக ஈடுபட்டிருந்தது தெரிந்தது. எனக்கு சந்தோசம். நல்ல கலைஞர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று. சரி டீயை குடித்து விட்டு கெதியா வாருங்கள் என்று சொல்லி விட்டு அறைக்கு திரும்பி வந்து, உள்ளே இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் டீ குடித்து விவாதித்துக் கொண்டிருந்தவர்களில், ஒருவர் மட்டும் எமது பகுதிக்கு வந்தார். நான் மற்றவர்கள் வருகிறார்களா? என்று கேட்டேன். இல்லை என்றார். நான் அவரது முகத்தைப் பார்த்தேன். அவரது முகம் இறுகிப் போயிருந்தது. அமைதியாய் இருந்துவிட்டுச் சொன்னார் \"அவர்கள் விவாதித்த கதையை தாங்களே படமாக்க போறதா சொல்லிட்டு போயிட்டாங்கள்\" . என்னோடு அப்பாவித்தனமான மீதியாகி இருந்த 8-9 பேருடைய முகங்களும் இறுகிப் போனது. ஒருவர் மட்டும் கொடுக்கால் வாயை திருப்பி \"உங்க புண்ணியத்தில, அவங்களுக்கு படம் எடுக்க வாச்சிருக்கு\" என்று சொல்லி விட்டு பக்கத்திலிருந்தவரைப் பார்த்து \"கெக்கே\" என்று கோழிச் சிரிப்பொன்றை சிரித்தார். அடுத்த அடி எடுத்து வைக்கிறதுக்கு சரியான நேரம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. எடுத்து வைக்கிறது இல்ல, அடி சறுக்கிறதுக்கு................</span> ![]() AJeevan Note:அவர்களாவது படம் செய்தார்களா? அதுவும் இல்லை............
03-28-2004, 12:50 AM
இந்த அனுபவம் பல விசயங்களுக்கு பொருந்தும். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.
.
03-28-2004, 02:55 AM
ஒரு முளு நீள திரைப்படம் எடுத்த சம்பவத்தை வாசித்தது ஒரு முழு நீள நகைச்சுவைத்திரைப்படத்தை பார்த்தது மாதிரி இருந்தது
குறும்படத்தில் வேண்டுமானால் நீங்கள் சொல்ல வந்த விடயத்தை மையமாகச் சுற்றி சுற்றி கதை வருமாறு உருவாக்கலாம் ஆனால் 2 அல்லது 2 1/2 மணி நேரம் ஓடக்கூடிய முளுநீள திரைப்படத்திற்கு நகைச்சுவை இயல்பான சண்டை இப்படி ஏதாவது ஒன்று யதார்த்ததோடு ஒன்றியதாக இருந்தால் தானே அது அனைவராலும் ரசிக்கப் படக் கூடியதாக இருக்கும் இல்லாவிட்டால் அது விவரணப் படம் மாதிரித் தானே இருக்கும்
\" \"
03-28-2004, 07:05 AM
அண்மையில் லண்டனிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு. எடுத்தவர் எனக்குத் தெரிந்த நண்பர்தான். <span style='color:brown'>\"அண்ண என்ட நண்பனுக்கு ஒரு படம் செய்ய விருப்பம்.\" \"நல்ல விசயம் செய்யுங்கள்\" என்றேன். \"நானும் அதில நடிக்க வேணுமெண்டு சொல்லுறார். உங்களைப் பத்தி அவரிடம் சொன்னன்.\" \"சரி\" \"ஓரு ரெண்டு மூண்டு கட்டுக்கு கதை எழுதி வச்சிருக்கிறார். சுப்பர் கதைகளாம்.\" \"இப்ப எடுக்கப் போற படத்திட கதை என்னவாம்?\" \"அதை அவர் சொல்லயில்ல.\" சரி நான் உங்களுக்கு என்ன செய்யவேணும்? \"அதுதான்,......... கதை வசனம் டைரக்சன் மெயின் ரோலும் அவர் பண்ண இருக்கிறாராம். கமராவுக்கு ஒருத்தர் வேணுமென்றார்.\" \"அவர் ஏதாவது படம் பண்ணியிருக்கிறாரே?" \"இல்லயண்ண.\" \"அப்ப எப்படியப்பா?\" \"அவரட கதைய ஆராலேயும் செய்யேலாதாம். அது அவருக்கு மட்டும்தான் முடியுமாம்?...........எனக்காக ஏலாதெண்டு மட்டும் சொல்லாதேங்கோ...........\" \"சரி பிரச்சனையில்ல. அவரே எல்லாம் செய்யட்டும். கதையை ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ தம்பி. முடிஞ்சா என்னோட பேசச் சொல்லுங்கோ.\" என்று சொல்லி விட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்துக் கொண்டோம். அடுத்த நாள் அதே நண்பர் தொடர்பு கொண்டார். \"கதையை கேட்டீங்களா தம்பி?\" \"யாருக்கும் அவர் கதை சொல்ல மாட்டாராம். நீங்கள் கமரா செய்தாலும் காட்சி எடுக்கும் போதுதான் சொல்வாராம்.\" என்றார். \"உங்கட ரோலையாவது கேட்டீங்களா தம்பி?\" என்றேன். மறு முனையில் அமைதி தாண்டவமாடியது...........</span> [align=center:6e0057058f] [/align:6e0057058f]AJeevan |
|
« Next Oldest | Next Newest »
|