![]() |
|
அழியாத கவிதை, கனவுகள், தாகம், ஏகலைவன். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: அழியாத கவிதை, கனவுகள், தாகம், ஏகலைவன். (/showthread.php?tid=7488) |
அழியாத கவிதை, கனவுகள், - mohamed - 02-10-2004 - mohamed - 02-10-2004 இந்த நான்கு குறும்படங்களையும் 10பவுண் கொடுத்து ஜனவரி 30 லண்டனில் பார்த்தேன். ஈழவர் திரைக்கலை மன்றத்தின் புதிய முயற்சி. மிகவும் வரவேற்க வேண்டியுது. அதை பார்த்து விட்டு வெறுமனே பேவதை விடுத்து அதன் விமர்சனத்தை வைப்பபது அவர்களை இன்னமும் வளர வைக்கும் என்ற ஆதங்கத்தில் எனது விமர்சனங்களை வைக்கிறேன். குறித்த நேரத்திற்கு படத்ததை ஆரம்பித்தது மிகவும் முன்னேற்றகரமான விடயம் அனால் இந்த நிகழ்ச்யை ஒழுங்கு செய்தவர்கள் பணம் கொடுத்து படம் பாரக்க வந்தவர்களை, 30 நிமிட நேரம் ஈழவர் திரைக்கலை மன்றம் பற்றிய விவரணப்படத்தை போட்டு பொறுமையை சேதித்திருக்க கூடாது. ஒரு திரைப்படத்ததை பலரும் பல வித கண்ணோட்டத்துடன் பாரக்க வந்தாலும் பொரும்பாலானவர்கள் ஒரு பொழுதுபோக்கு என்ற நினபை;புடன் தான பார்க வருவார்கள். விளைவு ஆரம்பமே கோணல். எனக்கு பக்கத்தில் இருந்தவர் அசந்து து}ங்கி விட்டார். படம் தொடங்கியதும் தன்னை எழுப்பும் படி கூறிவிட்டு. நானும் பொறுமை காத்தபடி காத்திருந்தேன் படத்திற்காக. முதலாவது படம் அழியாத கவிதை. மிக அருமையாக படம்பிடிக்கப்பட்ட ஒரு கவிதையை கமரா நன்கே சொல்கிறது. புலம் பெயர் வாழ்வில் ஒரு வயதானவரின் தனிமையை சொல்ல வந்த இந்தக் கவிதை நம்மவர் திரைக்கலையை புலம் பெயர் மண்ணில் வளர வைப்பார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது. படம் தொடங்கும் போது நமக்கு ஒரு எதிர்பார்பபை தந்த இந்த குறும்படம் சில இடங்களில் எனக்கு ஏனோ ஏமாற்றத்தை தந்து விட்டது. ஒரு வயதானவர் இலங்கையிலிருந்து வருகிறார் அனால் அவர் முகத்தில் ஒரு களை தெரியவில்லை. மாறாக பல நாட்கள் இன்னுமொரு ஐரோப்பிய நாடு ஒன்றல் இருந்து வந்தவர் போலவே தெரிகிறார். மிக நீண்ட தலைமுடியுடன் தாயகத்திலிந்து அகதியாக வந்த ஒருவராக. என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. இருந்தாலும் தனது தனிமையை வெளிப்படுத்திய அந்த நடிப்பு இந்த குறையை பெரிதாக்கவில்லை. அனுபவம் மிக்க ஒரு நடிகர் அந்த முடியை தியாகம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் சபாஸ்.. ஆனால் கிழவரின் தனிமையை காட்;ட இறுதிக்காட்சியான பூங்கா காட்சி கொஞ்சம் கூடிப்போனதாகவே எனக்குப் படுகிறது. அதைக் கொஞசம் குறைத்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும். இந்த படத்தில் அனுபவம் மிக்க நடிகர் இருந்தும் அவரின் பிள்ளைகளாக நடத்தவர்களின் நடிப்பு பெரிதாக கவரவில்லை. இயக்குனர் இதை இன்னும் மெருகு படுத்தியிருக்கலாம். இருந்தாலும் புதியவர்கள் என்றவகையில் வாழ்துக்கள். நான் சொன்ன குறைகளை விடுத்து படத்தை பார்க்கையில் ஒரு அற்புதமான படைப்பு இன்னுமும் மெருகூட்டியிருந்தால் இந்தக் கவிதை என்றென்றும் ஒரு அழியாத கவிதையாகவே இருந்திருக்கும் ஆனால் நம்மவர்கள் நிச்சயம் பாரக்க வேண்டிய ஒரு படைப்பு. அடுத்த படம் கனவுகள். முதலாவது படத்தை பார்த்ததும் எனக்கு ஏற்பட்ட அந்த கனவு, அதாவது ஈழவர் திரைக்கலை இனி வீறுகொண்டு வளரும் என்ற அந்த கனவை, அடித்து சிதறவைத்த குறும் படம் தான் கனவு. இதை பற்றி நான் விமர்சனம் செய்ய முன், இந்த திரைப்பட கதையை சுருக்கமாக சொல்கிறேன். புலம் பெயரந்து வந்த ஒரு ஆண் மிக காலம் போய் திருமணம் செய்ய முனைகிறார். பொய்சொல்லி தாயகத்திலிருந்து ஒருபெண்ணை வரவளைக்கிறார்கள். பெண் வந்ததும் மாப்பிள்ளையின் குட்டு உடைகிறது. பின்னர் என்ன நடக்கிறது என்பதே படம். மிக அருமையான கரு. நாம் இங்கு காணும் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் ஏன் இந்த படத்தை இந்த விழாவில் போட்டார்கள் என்று கேள்வி கேட்கும் வண்ணம் படத்தை எடுத்தவர்கள் மாற்றி விட்டார்கள். ஒளிப்பதிவு, நடிப்பு இதில் ஒரு சதவீத கவனம் செலுத்தியதாகவும் தெரிவில்லை. ஆக மொத்த்தில் இந்த படத்த்pல் பார்க்க கூடியதாக இருந்தது மாப்பிள்ளையின் நடிப்பு, மற்றும் அவரின் சகோதரியின் மகள், ஐசாக், அவரது நண்பர். இந்த நால்வரும் மிக எளிமையக நடித்ததுடன் கொஞ்சம் சிரிக்க வைத்தார்கள். அனால் இதை விட்டால் கனவு? ஒரு விரயமான கனவுதான். அடுத்தது, தாகம். ஒரு அமையான கரு. பழம் பெரும் நடிகரின் தனி நடிப்பு என்று கூட சொல்லலாம். ஆனால் தாகம் கூட ஒரு விதத்தில் என்னை ஏமாற்றி விட்டது. காரணம் இயக்குனர் சொல்ல வந்த விடயத்தை இழுத்தடித்து சொன்னதே. ஒரு 8 அல்லது 10 நிமிடத்தில் எடுக்க வேண்டிய கருவை 20 நிமிடநேரம் இழுத்ததுதான் இதற்கு காரணம். அத்துட்ன இந்த படத்தில் ஒளிப்பதிவு மிக மிக மோசம். காரணம் காட்சியில் நடிகரை தவிர பின்னணி முழுவதும் கண்ணை கூசவைக்கும் வெளிச்சம். மிக அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் ஏன் இந்த தவறை விட்டார். இந்த படங்கள் பற்றிய விமர்சனத்தை அண்மையில் ஒரு பத்திரிகையில் படித்தேன். அதில் இந்த நான்கு குறும்படங்களையும் பற்றி எழுதி விட்டு இனி வரும் காலங்களில் படம் எடுப்பவர்கள் இந்த படங்களை எடுத்தவரிடம் படித்து விட்டே எடுக்கவேண்டும். சும்மா ஒரு 400 பவுணுக்கு டிக்சனிலை கமரா வங்கிவிட்டு திருமணம், சாமத்திய சடங்குகளுக்கு படம் பிடிப்பவர்கள் திரைப்படம் எடுப்பதை நிறுத்தவேணும். முதலிலை இவை இந்த நான்கு படங்களை எடுத்தவர்களிடம் படிக்க வேணும் என்று எழுதியது கொஞ்சம் அதிக பிரசங்கி தனம். முதலாவது படமான அழியதா கவிதை எடுத்தவரிடம் படிக்க வேண்டும் என்டால் நான் நிச்சயம் ஒப்புக்கொண்டிருப்பன். ஆனால் அடுத்த இரண்டு படங்கள் எடுத்தவர்கள், திருமணம், சமாத்திய சடங்கை கூட ஒழுங்காக எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே. காரணம் மிக மோசமாக ஒளிப்பதிவு. ஆனால் தாகத்தை சோரம் போகவிடாதது தனது தனி நடிப்பால் உயர்த்திய அந்த பழம் பெரும் நடிகருக்கும் சபாஸ்! இருந்தாலும் தாகம் மனதில் நிற்கும் படியாக நிலை நிறுத்த முடியாமல் போனது இயக்குனரின் தவறே. அழியாத கவிதை ஒரு சலனத்தை நம் மனதில் ஏற்படுத்திய போதும் இந்த தாகம் ஏனோ ஏமாற்றி விட்டது. அடுத்து ஏகலைவன் நாட்டுக் கூத்து. சிறுவயதில் நான் பார்த்து ரசித்த கலை.. ஆனால் கூத்து என்பது நேரடிக் கலைகளில் இன்னுமெரு வடிவம். அதை சினிமா ஆக்க முடியுமா? மேடை நாடகம் மேடையில் செய்யப்பட வேண்டியுது. தெருக் கூத்து தெருக்களில் செய்யப்பட வேண்டியது. நாட்டுக் கூத்தின் முக்கிய கவர்ச்சி எலும்பும் தசையும் எம் கண்முன்னே தோன்றி எந்த ஒரு சாதனமும் இல்லாது தம் குரல் வளத்தால், உடல் வளத்தால் ஆடிப் பாடி நடித்து நம்மை மயக்கும் அந்த கலையை குறுந்திரையில்?? என்னால் முடியது. வேண்டுமென்றால் அதை ஆவணப்படுத்த இதை செய்ய வேண்டும், ஆனால் திரையிடக் கூடாது என்பதை நான் பார்த்து அனுபவித்த ஒன்று. எனவே அதைப்பற்றி நான் மேலும் விமர்சிக்க முனையவில்லை. மொத்தத்தில் 10 பவுணுக்கு நாலு படங்கள்?? இருந்தாலும் இது நம்மவர் கலை வளர ஒரு விட்டமின் செலவு. என்னை பொறுத்த மட்டில் எனது எதிர்பார்புக்கு கிடைத்த ஒரு சின்ன ஏமாற்றம். ஆனால் இதையும் நான் கூறாவிட்டால், ஈழவர் திரைக்கலைக்கு நான் செய்த துரோகம்.. இன்னுமொரு துரோகம்?? விமர்சனம் என்பது துதிபாடுதல் அல்ல அவனை வளர்த்து விடும் ஒரு ஏணி. இந்த திரைக்கலை மன்றம் இனியும் வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உண்மையான விமர்சனத்தை உள்வாங்கி மீண்டும் நமக்கு ஒரு திறமான தீனி தர மனமார்ந்த வாழ்த்துக்கள். - AJeevan - 02-10-2004 <span style='font-size:30pt;line-height:100%'><b>அழியாத கவிதை</b></span> <img src='http://www.eelavarcinearts.com/a_kavithai_trailer.jpg' border='0' alt='user posted image'> http://www.eelavarcinearts.com mohamed Wrote:முதலாவது படம் அழியாத கவிதை. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி மொகமட். தவறுகளை சுட்டிக் காட்டுவதும்- நல்லதை பாராட்டுவதுமே விமர்சனம். நான் கதை வசனம் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்த அழியாத கவிதையைத் தவிர அடுத்த படங்களை பார்க்காததால் என்னால் எதுவும் கூற முடியவில்லை. அழியாத கவிதையில் உங்கள் விமர்சனங்களில் உண்மைகள் இருக்கின்றன. இதற்கான காரணம் முழுமையான திட்டமிடல் இல்லாததே என்பதை மனம் திறந்து கூறுவேன். லண்டனில் என் குறும்படங்களை திரையிட்டு கருத்தரங்குடன் கூடிய விழா ஒன்றை நடத்த ஈழவர் திரைக் கலை மன்றம் எனக்கு அழைப்பு விடுத்த போது அங்கு சென்றேன். அந்த மன்றத்தில் வைத்து என்னிடம் கேட்காமலே நான் சுவிசுக்கு போகுமுன் 3 குறும்படங்களை செய்து தந்து விட்டு போவார் என்று கூறினார்கள்.நானே திகைத்தேன்.இது கலியாண வீட்டுக்கு படம் பிடிக்கும் விடயமில்லை என்று கூறி ஒரு குறும்படத்தை செய்ய ஒப்புக் கொண்டேன். நான் ஒரு வாரமே லண்டனில் இருக்க வேண்டிய நிலையில் திரு.ரகுநாதனை வைத்து படம் செய்ய வேண்டியிருந்ததால் ஒரு கதையை அவருக்காக தேடி அதற்கான திரைக்கதையை எழுதி நடிகர்களை தேர்வு செய்து படத்தை உருவாக்கியது ஒரு பெரிய கதை. அதற்குள் வந்திருக்கும் உங்கள் பாராட்டுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். ஒன்று மட்டுமே மனம் திறந்து சொல்வேன். அழியாத கவிதைக்காக ஒரு வாரம் என்னோடு உரமான அனைவரது அர்பணிப்பும் என்னால் மறக்க முடியாதது. அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தற்போது இக்குறும் படங்கள் திரையிடப்படுவதால் அவை பற்றி எழுதுவதை விடுத்து மௌனமாகிறேன். இருப்பினும் சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல விழைகிறேன்........................ Quote:அழியாத கவிதை. நீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். குறும்படம் என்பது ஒரு முழு நீளப் படம் போன்றதோ அல்லது தொலைக்காட்சி தொடர் போன்றதோ அல்ல என்பதை முதலில் தெரிந்து வேண்டும். குறும்படத்தில் ஒரு நொடி வேறுபக்கம் திரும்பினாலும் கதையை புரிந்து கொள்ள முடியாது. குறும்படங்கள் 1 நிமிடம் தொடங்கி 30 நிமிடம் வரை நீளகிறது. உதாரணத்துக்கு இதோ சுவிசில் நடக்கவிருக்கும் 1நிமிடக் குறும்படப் போட்டி பற்றிய அறிவித்தல்:- http://www.oneminute.ch/ இவற்றை புரிந்து கொள்ள பொழுது போக்கு சினிமா ரசிகர்கள் அனைவராலும் முடியாது. சினிமா பாடல்களை கேட்கும் ரசிகனுக்கு முன் நடத்தப்படும் கர்நாட்டிக் இசை கச்சேரியை புரிந்து கொள்ள கொஞ்சமாவது இசை ஞானம் தேவை. இல்லாவிடில் அதுவே மாபெரும் அவஸ்தையாகிவிடும். குறும்படங்கள் தமிழர்களை சென்று அவர்களை வெல்ல வெகு காலமெடுக்கும். அழியாத கவிதையை பார்த்த வேற்று நாட்டவர்களுக்கு புரிகிறது. காரணம் அவர்கள் அதற்கு பரிட்சயப்பட்டவர்கள். இந்தியாவிலேயே இப்போதுதான் குறும்படங்களை பற்றிய அக்கறை வந்திருக்கிறதென்றால் நம்மவர் நிலை பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. எனவே அது போன்ற பிரச்சனைகள் எவருக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்களும் அழியாதகவிதை படத்தில் எவ்வளவு தூரம் ஒன்றித்திருந்தீர்களோ தெரியாது. <span style='font-size:22pt;line-height:100%'>அக்குறும்படத்தில் நடிக்கும் ரகுநாதன் வரும் வழியில் அவரது கதையை காரில் இருக்கும் இருவருக்கும் சொல்லிக் கொண்டு வருகிறார். அப்போது அவர் வந்த பாதை தொட்டு கடந்து வந்த நாடுகளை குறிப்பிடுகிறார். அவர் லண்டனுக்கு வருமுன் கடந்து வந்த நாடுகளையும், காலங்களையும் குறிப்பிடுகிறாரே? கவனிக்கவில்லையா?</span> Quote:மிக நீண்ட தலைமுடியுடன் தாயகத்திலிந்து அகதியாக வந்த ஒருவராக. என்னால் கற்பனை பண்ண முடியவில்லை. இருந்தாலும் தனது தனிமையை வெளிப்படுத்திய அந்த நடிப்பு இந்த குறையை பெரிதாக்கவில்லை. அனுபவம் மிக்க ஒரு நடிகர் அந்த முடியை தியாகம் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் சபாஸ்.. தயகத்தில் வாழும் பல கலைஞர்கள், வயதானவர்கள், பிராமணர்கள்................. இப்படிப்பட்ட எத்தனையோ வயதானவர்களை நாம் நீண்ட தலை முடியுடன் சந்திக்கிறோம். இவரும் அப்படிப்பட்டவரில் ஒருவரே தவிர வேறு ஒருவரல்ல.[/color] ( உழும் விவசாயியையும் - ரிக்சா ஓட்டுனரையும் -பிச்சை எடுப்போரையும் கால் சட்டையோடு ஏற்று கொண்டதை விட இங்கு மேலதிகமாக எதுவுமேயில்லை.) Quote:ஆனால் கிழவரின் தனிமையை காட்சி இறுதிக்காட்சியான பூங்கா காட்சி கொஞ்சம் கூடிப்போனதாகவே எனக்குப் படுகிறது. அதைக் கொஞசம் குறைத்திருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும். எமது ரசிகர்கள் இன்னும் கதைப்படங்களுக்குள்ளேயே சிக்கியிருப்பதுதான் இதைப் புரிந்து கொள்ளாததற்கான காரணம். எனது படங்கள் தமிழர்களுக்காக மட்டும் உருவாக்கப்படும் படங்களல்ல. இவை சர்வதேச மக்களை அடைவதற்கான எண்ணத்தோடு (இங்கே நாமும் அடக்கம்) உருவாக்கப்படும் இலங்கை மக்கள் சார்ந்து புலம் பெயர் நாடுகளில் உருவாகும் குறும்படங்கள். பேசிக் கொண்டேயிருப்பது (சினிமா)படங்களல்ல. அவை நாடகங்கள். நாடக நடிகர்களை சினிமாவுக்குள் கொண்டு வர வேறோர் பயிற்சி தேவை. அழியாதகவிதையில் நாடக நடிப்பு செய்யும் பலரை பாத்திரமாக அமைதியாக வாழ வைத்திருக்கிறேன். அவர்களை சுற்றி தெரியும் காட்சிகள் எத்தனையோ கதைகளை சொல்லும். ஓரு படத்தில் 30 சதவிகிதத்துக்கு மேல் பேச்சு இருந்தால் அது சினிமாவல்ல. அது நாடகம். தந்தையாக நடிக்கும் நடிகர் வந்த நாட்டில் தனது குழந்தைகளாலும் - வாழ்ந்த மண்ணைப் பிரிந்த சோகத்தாலும் வாடி நிற்கும் போது புூங்காவில் காணும் காட்சிகளைக் கண்டு ஏன் இப்படியான ஒரு எதிர்பார்ப்போடு வந்தேன் என்று ஏங்கி நிற்கும் போது சிரிக்காத - அதுவும் பேசியும் கண்டு கொள்ளாத ஒரு சில லண்டன் தமிழர்கள் மத்தியில், முகம் தெரியாத அதுவும்,பாதையில் செல்லும் கறுப்பர்கள் அவரிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கும் போது இல்லை என்று மெனமாக நிற்பதைவிட, அப்படியான ஒரு பெரியவரால் என்ன செய்ய முடியும்? தனது மகனது இயலாமையையும் தனது மருமகளது சொல் அம்புகளையும் எமது பெரியவர்கள் வாய் திறந்து சொல்பவர்கள் அல்ல. அவர் மௌனமாகி தனிமையில் உறைந்து ஞானிபோல் ஆனவர்கள்தான். அவர் ஊரில் கண்டேயிராத எத்தனையோ காட்சிகளை காண்கிறார். அவரது கண்கள் அவை கண்டு விறைத்து போயிருக்கிறதே................... வேதனையான ஒருவன் [u]தேவனே என்னைப் பாருங்கள் என்றா ரோட்டில் பாட முடியும்? அது போலவே இறுதிக் காட்சியிலும் அத்தனை மக்களது சிரிப்பு,பொழுது போக்குகள் ,அத்தனைக்குள்ளும் ஒரு பிணம் போல் பெரியவர் போவதை சரியா என்று அதே வயதை ஒத்த பல பெரியவர்களிடம் கேளுங்கள் அல்லது மனோ தத்துவ வைத்தியரிடம் கேளுங்கள் நிச்சயம் சரியான விடை கிடைக்கும்................................................ Quote:இந்த படத்தில் அனுபவம் மிக்க நடிகர் இருந்தும் அவரின் பிள்ளைகளாக நடத்தவர்களின் நடிப்பு பெரிதாக கவரவில்லை. இயக்குனர் இதை இன்னும் மெருகு படுத்தியிருக்கலாம். நடித்த நடிகர் அனுபவமிக்கவராக இருக்கலாம். ஆனால் எனது இயக்கத்தில் அவர் ஒரு கதாபாத்திரமே தவிர வேறெதிலும் அவர் தலையிடவில்லை என்பது மட்டுமல்ல ஒரு வித்தியாசமான ரகுநாதனை பார்த்து வியந்திருக்கிறார்கள். அவரது பணிவான ஒத்துழைப்புக்கு என்றும் நன்றி கூறுகிறேன். இயக்குனர் என்பவன் அங்கு தளபதியே தவிர வந்தவர் போனவர் எல்லாம் தலையிட அனுமதித்தால் அது சாம்பார்தான். Quote:இருந்தாலும் புதியவர்கள் என்றவகையில் வாழ்துக்கள். நான் சொன்ன குறைகளை விடுத்து படத்தை பார்க்கையில் ஒரு அற்புதமான படைப்பு இன்னுமும் மெருகூட்டியிருந்தால் இந்தக் கவிதை என்றென்றும் ஒரு அழியாத கவிதையாகவே இருந்திருக்கும் ஆனால் நம்மவர்கள் நிச்சயம் பாரக்க வேண்டிய ஒரு படைப்பு. இறுதி பாராட்டுகள் பாரிஸ்டர் ஜோசப் அவர்களையே சாரும். எந்தவொரு ஊடகமும் தனது சொந்த பணத்தை இது காலமும் விரயம் செய்யாத போது துணிந்து ஒரு செயலை செய்ததற்காகவும், எனது வேலைகளின் போது தலையீடு செய்யாததற்காகவும் இறுதி பாராட்டுகள் பாரிஸ்டர் ஜோசப் அவர்களையே சென்றடைய வேண்டும். <span style='font-size:23pt;line-height:100%'>அவர் முறையாக திட்டமிட்டும் சிலரது தவறான புகழுரைகளுக்கும் தவறான வார்த்தைகளுக்கும் மயங்காது ஒரு படைப்பை உருவாக்குவதற்காக தயாரிப்பாளரானால் <b>நிச்சயம் பாரிஸ்டர் ஜோசப் அவர்களது பெயர் புலம் பெயர் சினிமா வரலாற்றில் பதிவாவதை எவராலும் தடுக்க முடியாது.</b></span> நட்புடன் ________________________________________அஜீவன் http://www.eelavarcinearts.com - AJeevan - 02-10-2004 <img src='http://www.eelavarcinearts.com/kanavu_trailer.jpg' border='0' alt='user posted image'> http://www.eelavarcinearts.com - vasisutha - 02-26-2004 குறும்படங்களை எங்கே காணலாம்? - AJeevan - 02-28-2004 vasisutha Wrote:குறும்படங்களை எங்கே காணலாம்? 30.01.2004 6:00 pm Tooting Leisure Centre,Lola Johnes Hall Garrats Lane, Tooting Broadway 31.01.2004 6:00 pm Libray Hall, 6 Church Lane Leytonstone 01.02.2004 4 pm & 6pm Brent Town Hall,Forty Hall, Wembley 06,07,08 February Netharlands 13,14,15 February Germany 20,21,22 February Denmark 27,28,29 February France 12,13,14 March Canada April Switzerland more details:- http://www.eelavarcinearts.com/films.html - Manithaasan - 03-11-2004 அஜீவன் மார்ச் 28ல் பாரிசில் மேற்குறிப்பிட்ட படங்கள் திரையிடப்படவுள்ளனவாம்...... - AJeevan - 03-19-2004 ஈழவர் திரை விருந்து <b><span style='font-size:22pt;line-height:100%'>அஜீவனின் அழியாத கவிதை</b></span> குறும்பட விமர்சனம் <img src='http://www.yarl.com/forum/files/th1.jpg' border='0' alt='user posted image'> 25 நிமிடங்கள் கொண்ட அஜீவனின் அழியாத கவிதை படத்தின் முக்கிய பாத்திரமான புலம் பெயர்ந்த தந்தையாக ஏ.ரகுநாதன் நடித்தார். தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த ஒரு தந்தை எதிர்நோக்கும் பிரச்சனைதான் இந்த அழியாத கவிதை. கதை நகர்த்தப்பட்ட விதத்தில் யதார்த்தம் தெரியவில்லை. இலண்டன் வந்த நாளிலே அவர் தனியாக சட்டத்தரணியிடம் செல்கிறார். கடற்கரைக்குச் செல்கிறார். வீட்டக் கதவு தட்டும் போது அவரே திறந்து பதிலளிக்கிறார். இன்னொரு காட்சியில் கற்பனையில் பாடல் ஒலிப்பதாக தோன்றியது. ஆயினும் ஒரு வெள்ளைக்காரர் வந்து கதவைத் தட்டிக் கூச்சல் போடுகிறார். ஒலித்த பாடல் கதவைத் திறப்பதற்கு முன்னரே திடீரென நின்றது. காட்சிகள் தொடர்புபடுத்தப்படவில்லை. அழியாத கவிதை தொழில் நுட்பம் சிறப்பாகவே அமைந்தது. ஆனால் நிழல் யுத்தம் ஏற்படுத்திய தாக்கத்தை அஜீவன் அழியாத கவிதையில் கோட்டை விட்டு விட்டார். (விமர்சனத்தை அனுப்பிய சுதாகருக்கு நன்றி) - AJeevan - 03-19-2004 page.1 <img src='http://www.yarl.com/forum/files/text.1.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/text.1.2.jpg' border='0' alt='user posted image'> page2 <img src='http://www.yarl.com/forum/files/text.2.jpg' border='0' alt='user posted image'> ___________________________________________________________________________________________________________________________________________________ :!: :?: <img src='http://www.yarl.com/forum/files/text.1.3.jpg' border='0' alt='user posted image'> [size=15]ஜேர்மனியில் நடக்கும் கதையை பிரான்ஸ் என்று <img src='http://www.yarl.com/forum/files/text.1.4.jpg' border='0' alt='user posted image'> [size=16]அன்பு ஜெயபாலன் அவர்களே அழியாத கவிதையில் ஒரு காட்சியில் நடிக்க ஒப்புதல் அழித்து எங்களை (film unit ) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை காக்க வைத்து கப்சா கொடுத்து எனக்கு அறிவிக்காமல் வர முடியவில்லை என்று வேறொருவருக்கு அறிவித்த செம்மல் நீங்கள். உங்களைப் போன்றவர்களால்தான் எம்மால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் உங்களுக்கு சிலர் புலம் பெயர் <b>திரப்பட காவலர்</b> விருது கொடுத்திருக்கிறார்களே? _______________________________________________________________________________________________________AJeevan - Shan - 03-19-2004 விமர்சனங்களை தலைகுனிந்து ஏற்பவன் நிமிர நிஙய வாய்ப்பு உண்ட, அதே விமர்சனங்களை விமர்சிப்பது விமர்சனத்தை உள்வாங்காது மறுதலிப்பதாகவே அமையும். ஒருவர் விமர்சிக்கும்போது அவர் தகமைகள், தன்மைகளை விடுத்து நமக்கு வேண்டிய அந்த விமர்சனத்தை பர்ப்பது நம்மை மேலும் வளர வைக்கும். - Manithaasan - 03-19-2004 வணக்கம் அஜீவனின் கருத்தோடு ஒன்றியே நானும் வருகிறேன். பாரிய முதலீடும் பல நாள் உழைப்பும் சில மணிப் பொழுதுகளில் உங்கள் பார்வைக்கு வந்து காட்சிதரும்போது ஊன்றிக் கவனியாமல் முழுமையாக உள்வாங்காமல் எழுந்தமானமாக விமர்சனம் என்ற போர்வையில் விவாத பொருளாக்கப் படுவது வேதனைக்குரியதே. கனவுகள் படத்திற்கும் டேனியன் சூரியனுக்கும் நீங்கள் போட்டிருக்கும் முடிச்சு மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் போட்டிருக்சுகும் முடிச்சு போல். டேமீயன் சூரி ஏகலைவன் நாட்டுக்கூத்தின் நெறியளர். அவருக்கும் கனவுகள் படத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. கனவுகள் படத்தின் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர்: நாச்சிமார் கோயிலடி இராஜன் (யேர்மன்) . இப் படத்தை இயக்கியவர் பால் ராஜ் (யேர்மன்). ஆனால் நீங்களோ டேமியன் சூரியின் கனவுனளென்"றும் பிரான்ஸில் தயhரிக்கப்பட்டதாகவும குறிப்பிட்டிருக்கிறீர்கள். திரையில் எழுத்தில் தெளிவாகத்தானே இருந்தது..இதைக்கூட கவனியாமல் மயக்கநிலையில் விமர்சனம் எழுதி நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்றீர்களே.. விமர்சனம் என்பது குறை நிறை இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தால் மட்டுமே கலையாகும். திட்டி தீர்த்து மட்டம் தட்டுவதும் ஆகh ஓகோ... அபாரம் அற்புதம் என இல்லhததைச் சொல்லி முதுகு சொறிவதும்வதும் விமர்சனம் ஆகாது. நாற்பது ஆண்டுகளாக ஈழவர் திரைக்கலை குழந்தையாகவே இருக்கிறது என்பது உண்மை. அதற்கு பொறுப்பாளிகள் படைப்பாளிகள் மட்டுமா? உங்களைப்போன்ற அரைவேக்காடு விமர்சகர்களும்...இத்தகைய விமர்சனங்களை நம்பியோரும்,இவங்கள் என்ன செய்யப் போறாங்கள் என பார்க்காமலே ஆதரவு தர மறுக்கும் எமது ரசிகர்களும் பொறுப்பாளிகள். இல்லையெனச் சொல்ல உங்களால் இயலுமா? - Manithaasan - 03-19-2004 Quote:உங்களைப் போன்றவர்களால்தான் எம்மால் உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை.அட இப்படியும் ஒரு செய்தியுண்டா? - AJeevan - 03-20-2004 Manithaasan Wrote:விமர்சனம் என்பது குறை நிறை இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தால் மட்டுமே விமர்சன கலையாகும். திட்டி தீர்த்து மட்டம் தட்டுவதும் ஆகh ஓகோ... அபாரம் அற்புதம் என இல்லhததைச் சொல்லி <span style='color:red'><b>முதுகு சொறிவதும்வதும் விமர்சனம் ஆகாது. </b>நாற்பது ஆண்டுகளாக ஈழவர் திரைக்கலை குழந்தையாகவே இருக்கிறது என்பது உண்மை. அதற்கு பொறுப்பாளிகள் படைப்பாளிகள் மட்டுமா? [size=15]நன்றி மணிதாசன் நான் தேசத்தில் உள்ள விமர்சனத்துக்கு பதில் அளிக்வேயில்லை. காரணம் அழியாத கவிதையைத் தவிர அடுத்த எந்தவொரு படைப்பையும் நான் முழுமையாக பார்க்கவில்லை. அடுத்து தேசத்தின் விமர்சனமே குளறுபடியும் சிறுபிள்ளைத்தனமுமான விமர்சனம். சினிமா விமர்சனம் எழுதுவதற்கு ஒரு முறையிருக்கிறது.தேசத்தில் எழுதப்பட்டிருக்கும் விமர்சனம் வேலை வெட்டியற்றவர்கள் ஊர்த் திண்ணைகளிலும் பாதையோர பாலங்களிலும் இருந்து வம்பபளப்பவர்களின் தரத்திலானது. இப்படியான எண்ணங்களை உங்கள் கருத்து என்று வேண்டுமானால் நேரடியாக உரியவர்களிடம் கூறுங்கள் அல்லது கருத்தரங்குகளில் முன் வையுங்கள். அவற்றுக்கு பதில் கிடைக்கும். கலைஞர்களும் சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள். அதைவிடுத்து மேதாவி போல் சினிமா விமர்சனம் என்ற பெயரில் <b>தனியாக சட்டத்தரணியிடம் செல்கிறார்.கடற்கரைக்கு செல்கிறார்.கதவை தட்டியதும் அவரே திறந்து பதிலளிக்கிறார்.........................</b> என்று எழுதியிருப்பதைப் பார்த்தால் 3ம் 4ம் வகுப்பு குழந்தைகள் எழுதிய கட்டுரை போல் இருக்கிறது. :?: ஊரிலிருந்து லண்டன் வரை வந்த ஒரு மனிதனால் லண்டனில் உள்ள ஒரு இடத்துக்கு தனியாக போக முடியாதபடி ஏதாவது தடுப்புச் சட்டம் இருக்கிறதா? :?: இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழருக்கு ஆங்கிலம் தெரியும். எனவே இது ஒரு பாரிய பிரச்சனையா? :?: ஒருவர் கதவை தட்டினால், கதவை திறக்கக் கூடாதா? (ஒரு சிலர் தொலைபேசியையே எடுப்பதில்லை. யார் என்ற குரல் தெரியும் வரை இருந்து விட்டு, பின்னர்தான் தொலைபேசியையே எடுப்பார்கள். இவர்களுக்கு ஒரு முதியவர் கதவைத் தட்டியதும், திறப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான்?)[/color] தயவு செய்து உங்கள் நிலையிலிருந்து அடுத்தவர்களைப் பார்க்காதீர்கள். லண்டனில் உள்ளவர்களை விட நன்றாக ஆங்கிலம் மட்டுமல்ல எத்தனையோ வேற்று மொழிகளை சரளமாக பாவிக்கும் பலரை நான் இலங்கையில் கண்டிருக்கிறேன். உங்களைப் போல் மற்றவர்களையும் கிணற்றுத் தவளையாக நினைக்காதீர்கள்.:!: எந்த ஒரு விடயத்தை விமர்சிப்பதற்கும் அதற்கான தகுதி இருக்க வேண்டும்.அப்படியில்லாதவிடத்து மௌனமாக இருப்பதே சாலச் சிறந்தது. hock: ஐரோப்பாவில் பலர் இப்படைப்புகளைப் பார்த்திருக்கிறார்கள்.ஐரோப்பிய புலம் பெயர் கலைஞர்கள் இங்கு பங்கு கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களது கருத்துகள் முதலில் வரட்டும் என்றே விமர்சனத்தை இடம்பெற வைத்தேன். <b>எனது பதிலை வெகு விரைவில் தருகிறேன்.</b>:roll: மணிதாசன் உங்களுக்கு விபரம் தெரிந்தால் குமுறுபவர்கள் யார் என்பது புரியும்? எனது பட்டறை படங்ளை வைத்து புலம் பெயர் திரைக்காவலர் பட்டம் வாங்கியவர் எழுதிய அரை வேக்காடு விமர்சனத்தை ஏற்க வேண்டுமென்று பட்டம் கொடுத்தவர் குமுறுகிறார். நியாமானதுதான்?. :twisted: ஒருவருடைய குழந்தையை, வேறு ஒருவருடைய குழந்தை என்று அடையாளம் காட்டுவது போல, யாருடைய படைப்பென்றே இனம் கண்டு கொள்ள முடியாமல் ,கண்ணிருந்தும் குருடர்கள் போல் விமர்சனம் செய்தவர்கள், தம்மை முதலில் திருத்திக் கொள்ளட்டும். நெற்றிக் கண் சுட்டினும் குற்றம் குற்றமே என்று ,சாம்பலாகி நிலைத்த நக்கீரர் மத்தியில் ,குறைக்கு ஏற்றாற் போல பரிசுத் தொகையை கேட்கும், தருமிகள் போன்ற , வணிக சுயநல விமர்சகர்களும் எம்மோடு இல்லாமலில்லை. hock: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பது போல, இவரது அனைத்து கட்டுரைகளையும் , விமர்சனங்களையும் இது போலவே எடுத்துக் கொள்ளலாம்.______________________________________________________________________________________________ AJeevan - AJeevan - 03-21-2004 [size=24]<b>புலம் பெயர் சினிமாவை வளர்ப்போர் ஆதங்கம்?</b> <img src='http://www.yarl.com/forum/files/ajeevan.2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/1.1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.yarl.com/forum/files/1.2.jpg' border='0' alt='user posted image'> :?: <img src='http://www.yarl.com/forum/files/ajeevan.4.jpg' border='0' alt='user posted image'> [size=15]<b>வைத்தியரிடமும் குடும்பத்தினரிடமும் கேட்க வேண்டிய கேள்வி. </b> (எழுதியவர் M or F என்று தெரியவில்லை.உதவக் கூடியவர்கள் உதவலாம்.) - Manithaasan - 03-21-2004 Quote:மணிதாசன் உங்களுக்கு விபரம் தெரிந்தால் குமுறுபவர்கள் யார் என்பது புரியும்?புலிகளுக்குள் புூகம்பம், ஈழம் ஈடாட்டம், பருவமடைவது எப்போது? தலையங்கங்களிலிருந்தே தெரிகிறதே.. இனியும் இவர்கள் என்ன எழுதுவார்களென்பதும்..யாரென்பதும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - AJeevan - 03-23-2004 Manithaasan Wrote:Quote:மணிதாசன் உங்களுக்கு விபரம் தெரிந்தால் குமுறுபவர்கள் யார் என்பது புரியும்?புலிகளுக்குள் புூகம்பம், <span style='color:red'><b>யார் இவர்கள் ?</b> <img src='http://www.yarl.com/forum/files/ajeevan.2.jpg' border='0' alt='user posted image'> http://www.eelampage.com/audio/tamil20040323.smilஒலி வழி கேட்டால் புரியும்............... <i>[size=15]எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் இருட்டு. ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் ஒளியின் கால்கள் அதை உதைத்து விரட்டும்................</i></span> கவிஞர் மு.மேத்தா - AJeevan - 03-24-2004 [b]<span style='color:darkred'>அழியாத கவிதை <img src='http://www.eelavarcinearts.com/a_kavithai_trailer.jpg' border='0' alt='user posted image'> [size=15] ஈழத்தில் மனைவியை இழந்த ஒரு முதியவர், லண்டனில் வாழும் தனது மகனோடு கழிக்க வேண்டுமென்ற கனவுகளோடு புலம் பெயர்ந்து வந்த பின், அவர் அனுபவிக்கும் வேதனைகள் மற்றும் மன உழைவுகளை சுற்றி அஜீவன் இயக்கத்தில் நெறிப்படுத்தப்பட்டு திரைக் கவிதையாகியுள்ள குறும்படமே அழியாத கவிதை. ஆரம்பமே ஒரு ஆங்கிலத் திரைப்படத்தைப் போன்ற வண்ணக் கலவையுடன் அகன்ற திரைப் பிம்பத்தினூடக ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கும் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன் காரிலிருந்து இறங்கி , சுற்றும் முற்றும் பார்த்து விட்டு காரின் டிக்கியை திறக்கிறார். \"ஐயோ பாவம்\" என்று சொல்லும்படியாக ஒரு முதியவர் இதுவரை காருக்குள் அடைபட்டு வந்திருக்கிறாரே என்ற வேதனை மனதை வருடுகிறது. டிக்கியை விட்டு வெளியே வரும் முதியவர் காருக்குள் ஏற்றப்படுகிறார். காரில் உள்ள இளைஞர் \"இனி பயமில்லை ஐயா லண்டனுக்குள் வந்து விட்டோம்\" என்று சொல்கிறார். பெரியவர் தான் யாழ்பாணத்தில் இருந்து, வன்னி-கொழும்பு-இந்தியா-சிங்கப்புூர் -ஜெர்மனி- பிரான்ஸ் என தான் கடந்து வந்த பாதைகளையும், இன்னல்களையும் புலம்பும் போது எமது பெரியவர்களின் இடைவிடா புலம்பல்களே நினைவுக்கு வருகிறது. அவரது புலம்பல் தாங்க முடியாமல் வாகனத்தை ஓட்டும் இளைஞன், திரும்பி பெரியவரை முறைக்கும் பார்வையை எவராலும் மறக்க முடியாது. குறும்படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் அந்த மௌனத்தோடு கூடிய முறைப்பு கோடி வார்த்தைகளுக்கு சமமானது. எங்கே மௌனம் தேவை எங்கே பேச வேண்டுமென்பதை இக்குறும்படத்தில் பல இடங்களில் அழகாக செதுக்கியிருப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று. முதியவர் தன்னை ஒரு ஏஜன்ஸிகாரன் ஏமாற்றி விட்டதாக கூறும் போது காரிலுள்ள ஏஜன்ஸிகாரர்கள் முகத்தில் தெரிவது பிணத்தின் சாயலே. பெரியவர் பேச்சினூடே சுற்றும் முற்றும் பார்த்து அந்நிகழ்வைக் கூறுவதிலிருந்து பெரியவருக்கு இவர்கள் மேல் கூட நம்பிக்கை இல்லை என்பதைப் போலவும் தாம் எதற்கும் அஞ்சாதவர் போலவும் காட்டிக் கொள்கிறார்.ஆனாலும் உண்மை அதுவல்ல என்பதை அவரது முகமே காட்டுகிறது. லண்டனில் இருக்கும் மகனது வீட்டுக்கு ஆவலோடு வரும் தந்தையை மகன் வரவேற்றாலும், மருமகள், வீட்டுக்கு வந்த மாமனாரை வரவேற்கும் விதமும் - \"வேலைக்கு நேரமாகி விட்டது. வந்து கதைக்கிறன் - சாப்பாட்டைக் காட்டிப் போட்டு தாமதிக்காமல் வேலைக்கு போங்கோ\" என்று கணவரை அன்புடன் அதட்டும் பாங்கும் வீட்டில் மனைவி ராஜ்யம் என்பதையும் விபரிக்காமலே விளக்குகிறது. அந்த வார்த்தை பெரியவரைச் சுடும் போதும் சரி, அவர் தன் மகனை அப்பாவியாகப் பார்க்கும் போது சரி, பெரியவருக்காக எமது இதயம் கூட, வலிக்கவே செய்கிறது. அகதி விண்ணப்பத்துக்காக கையெழுத்திட சட்டத்தரணியிடம் சென்றவருக்கு, சட்டத்தரணி சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கை கொடுத்தாலும், பெரியவரது மன உழைவையும் தனிமையையும் போக்கிக் கொள்ள வீதிகளிலும் ,புூங்காக்களிலும், அலைந்து திரியும் போது எமது மனதும் தடுமாறவே செய்கிறது. அவர் கண்களில் காணும் காட்சிகளாக கமரா படம்பிடித்துள்ள காட்சிகளாக தெரியும், ஒரு நாயின் மேல் ஒரு ஐரோப்பியன் காட்டும் பரிவு , நாம் நாயைவிடக் கேவலமான ஒரு ஜீவனா? என்றும், சுதந்திரமாக நடந்து திரியும் குழந்தைகளைக் காட்டும் போது , இப்படியான ஒரு சிங்கார காட்சி தாயகத்தில் எப்போது உருவாகும் என்பதுமான கேள்விகளை எம்முள் எழுப்புகிறது. புூங்காவில் பறவைகளுக்கு தான் உண்ணும் உணவைக் கொடுத்து, சிந்தனை வசப்பட்டிருக்கும் பெரியவரைக் காணும் போது, தாயகத்தில் இருந்து வருவோரிடம் புலம் பெயர்ந்த பல இதங்களில் இல்லாத ஈரமும், மனித நேயமும், அந்த அரக்கத் தனமான யுத்தக் கொடுமைக்குள்ளும் மறையவில்லை என்பது தெரிகிறது. இடையிடையே ஐரோப்பிய நாடுகளில் நாம் காணும் காதலர்களையும், அவர்களது சிலுமிசங்களையும், கொச்சைத்தனமின்றி மென்மையாக திரைக்குள் கண் சிமிட்டிச் செல்ல வைத்திருப்து தவறாகத் தெரியவில்லை. தவிரவும், நம்மவர்களே கண்டு கொள்ளாத நேரத்தில் கூட வேற்று இனத்தவர்கள் நம்மை விரும்புவது புலம் பெயர்ந்தோருக்குத் தெரிந்த விடயமே. இங்கும் கறுப்பு இன இரு இளைஞர்கள் பெரியவரை \"பப்பா\" என்று குசலம் விசாரித்து விட்டு \"ஏதாவது பிரச்சனையா?............. இலங்கையரா?........... ஓ!..........அவர்கள் மிக நல்லவர்கள்.........\" என்று கறுப்பர்களே கூறும் போது லாவகமாக அப்பாராட்டு எம்மையும் தழுவுகிறது. தனக்கு ஒரு நிழல் கிடைக்குமென்ற கனவுகளோடு வந்த பெரியவர், மகனது இயலாமை மற்றும் மருமகளது வாத-விவாதங்கள் இடையே, தத்தளிக்கும் போதும் சரி, வானோலியின் ஒலியை அதிகரித்து வைத்ததனால் வெள்ளையனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் போதும் சரி, தனது வேதனையை இறந்து போன தனது மனவியின் புகைப்படத்தைப் பார்த்து விம்மும் போதும் சரி, பேத்தியின் மடலை வாசித்து பிரம்மை பிடித்தவராய் அலையும் போதும் சரி, பெரியவர் அலட்டல் அடங்கிய மௌனத்தில் எம்மை நெருட வைத்திருக்கிறார். மகன்-மருமகள்-பெரியவர் சார்ந்த ஒரு சில பகுதிகள் சேர்க்கப் பட்டிருந்தால் அழியாத கவிதை இன்னும் சிறப்புப் பெற்றிருக்கும்.அதுவே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி கதையின் தாக்கத்தை குறைத்திருக்கிறது. மிகையான நடிப்புகளோடும் தொழில் நுட்பக் குறைகளோடும் வெளிவரும் ஈழத் தமிழரின் எத்தனையோ படைப்புகள் மத்தியில் அஜீவனின் படைப்புகள் வித்தியாசமானவையாகவும் தொழில் நுட்ப நிறைவோடும் வருவது ஆறுதல் தரும் விடயம். அழியாத கவிதையில் கதைக்குத் தேவையான நடிகர்களும் ஒளிப்பதிவும், இசையும், தொகுப்பும் மாத்திரமல்ல, தொழில் நுட்ப பகுதிகள் கூட சிறப்பாக இருப்பதால் ரசிகனின் கவனத்தை படத்திலே வைக்கும் உத்தி இயக்குனருக்கு கை வந்த கலையாகி இருக்கிறது. அழிவைத் தேடிய இலங்கை தமிழ் சினிமா புலத்தில் வளர வேண்டிய தருணத்தை நோக்கி முளை விட்டிருக்கும் இக் கால கட்டத்தில் அழியாத கவிதையின் கலைஞர்கள் அனைவரையும் பாராட்டுவது எமது கடமையும், பொறுப்புமாகும். </span> - முரளி ______________________________________________________________________________________________________________________________ [size=14]விமர்சனத்தை அனுப்பிய முரளிக்கு நன்றிகள். AJeevan - கண்ணன் - 03-25-2004 அஜீவன் உங்கள் படபிடிப்பு அனுபவங்களையும் கூறுங்கள். எப்படி எல்லோரையும் சமாளிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். - Mathan - 03-25-2004 தகவல்களுக்கு நன்றியும் உங்கள் குறும்பட முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும் அஜீவன். நீங்கள் யாழ் களத்தில் போட்ட குறும்படங்களை தவிர மற்றைய குறும்படங்களை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த குறும்படங்களை எங்கேயாவது பெற்றுக்கொள்ள முடியுமா? உங்களிடம் சீடி அல்லது கசற் வடிவில் இருக்கின்றதா? அல்லது உங்கள் வெப்சைட் எதிலாவது போட்டு வைத்திருக்கின்றீர்களா? - AJeevan - 03-25-2004 MURALI Wrote:<span style='font-size:22pt;line-height:100%'>மகன்-மருமகள்-பெரியவர் சார்ந்த ஒரு சில பகுதிகள் சேர்க்கப் பட்டிருந்தால் அழியாத கவிதை இன்னும் சிறப்புப் பெற்றிருக்கும்.அதுவே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி கதையின் தாக்கத்தை குறைத்திருக்கிறது. </span> <span style='font-size:21pt;line-height:100%'>உங்கள் வாழ்த்துகளுக்குள்ளே <b>அழிவைத் தேடிய இலங்கை தமிழ் சினிமா என்று</b> குறிப்பிட்டிருப்பது போலவே, நான் பலரோடு முரண்படுவதும் விசனப்படுவதும் ஏன் என்பது பலருக்கு தெரியாமலிருக்கலாம். இலங்கையின் தமிழ் சினிமாவை அழித்தொழித்த பெருமை தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றையே சாரும். அதிலிருந்து மீள்வதற்கு புலம் பெயர் நாடுகளில் சிறிதாக முயற்சிகளை மேற் கொண்டால், அவற்றையும் ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டும் விமர்சனங்களும் ,திருட்டுக்களும் நடைபெறுவதை வளரவிட்டால் நிச்சயம் அது புலம் பெயர் நாடுகளில் வளரும் தமிழ் சினிமாவை தலை தூக்க முடியாமல் ஆக்கிவிடும். எனவே உங்கள் கருத்துகளை கண்டு மகிழ்கிறேன். இதை ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். எனது படைப்பாக மட்டுமல்ல, வேறு எவருடைய படைப்பாகட்டும் , ஆரம்பத்தில் வைக்கப்படும் விமர்சனங்கள் காரணமாக எம்மவர் படைப்புகளை உருவாக்கவே முடியாத நிலை உருவாகலாம். இலங்கை தமிழர்கள் பேசாமலே இருந்து தம் உரிமைகளை இழந்து விட்ட ஒரு நிலையைப் போல, இங்கும் வளரும் தமிழ் சினிமாவொன்றை அழித்தொழிக்க கருத்துகளை முன் வைக்கும் எவரையும், எதிர்த்து குரல் கொடுப்பது தப்பாகாது. அதைச் செய்யாமல் இருப்பதே மாபெரும் தவறாகும். எனவே தங்களைப் போன்ற விமர்சனங்கள் வருவதில் அனைத்து கலைஞர்களும் பலம் பெறுவார்கள்.</span> AJeevan |