Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
விளையாட்டு
#21

லாகூரில் நடைபெற்ற 5வது இறுதி ஒரு நாள் போட்டியை 40 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று இந்தியா ஒரு நாள் போட்டித் தொடரைக் கைப்பற்றியது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற இந்திய வீரர்கள் கோப்பையுடன்.

நன்றி - வெப் உலகம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#22

இந்திய - பாகிஸ்தான் தேசியக் கொடிகளை முகத்தில் வரைந்திருந்த இரண்டு கிரிக்கெட் ரசிகைகள் ஒன்றாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண வந்திருந்த காட்சி.

நன்றி - வெப் உலகம்

விளையாட்டு மூலமாவது இரண்டு நாடுகள் இடையேயும் ஒற்றுமை ஏற்படட்டும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#23
முரளி பந்தை முறைப்படி வீசாமல் எறிகிறார் என்று மீண்டும் இரண்டாந்தடவையாக குற்றம்சுமத்தியுள்ளனர்....

BBC SPORT CRICKET

முரளி உலகசாதனையை முறியடிப்பது வெகு தொலைவிலில்லை...அவ்வாறு ஒரு சாதனையை ஏற்படுத்தினால் அதை முறியடிக்க தற்பொழுது வேறு யாருமில்லை என்பது யாவரும் அறிந்ததே!
[/url]
Reply
#24
தகவலுக்கு நன்றி கணணி.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#25
முரளிதரன் பந்து வீச்சு மீது மீண்டும் புகார்!

திங்கள், 29 மார்ச் 2004

ஆஃப் - ஸ்பின் பந்து வீசும் அதே முறையிலேயே ஒரு பந்தை லெக் ஸ்டம்பிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்குத் திருப்பும் முரளிதரன் புதிய பந்து ஒன்று த்ரோ போடுவது போல் உள்ளதாக ஆட்ட நடுவர் கிளிஸ்பிராட் ஐசிசியிடம் புகார் செய்துள்ளார்.

முரளிதரனிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டவுடன், உற்சாகத்தை இழந்தார். ஆனால் கிறிஸ் பிராடின் புகார் மனுவில் முரளிதரனின் இந்த புதிய தூஸ்ரா பந்து வீச்சில்தான் பிரச்சினையிருக்கிறது என்றும், ஆஃப் - ஸ்பின்னர் பந்துகளில் பிரச்சினைகள் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முரளிதரனின் பந்து வீச்சு அவருக்கு விக்கெட்டுகளை சரமாறியாக பெற்றுத் தரத் தொடங்கியவுடன் உலக கிரிக்கெட்டில் அவர் ஆக்ஷன் மீது பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இலங்கை வாரியம், இப்புதிய பிரச்சினையிலும் தாங்கள் முரளிதரனுக்கு பக்கபலமாக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.

நன்றி - வெப் உலகம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#26
முல்தான் டெஸ்ட் 300 ரன்கள் அடித்து ஷேவக் சாதனை

திங்கள், 29 மார்ச் 2004

முல்தானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவக் 366 பந்துகளை எதிர்கொண்டு 300 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார், பாகிஸ்தானின் 300வது டெஸ்ட் போட்டியில் ஷேவக் இந்த சாதனையை படைத்தார்.

அவர் 309 ரன்கள் எடுத்திருந்த போது சமீ பந்தில் உமரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரைக் கைப்பற்றிய உத்வேகத்துடன் முல்தானில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று களமிறங்கியது. டாஸில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆகாஷ் சோப்ரா, வீரேந்திர ஷேவக் ஆகியோரில் சோப்ரா 40 ரன்கள் அடித்த நிலையில் சமீ பந்தில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திராவிட்டும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்குப் பின் ஷேவக்குடன் ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் நன்றாக ஈடுகொடுத்து விளையாடினார்.

டெண்டுல்கர் - ஷேவக் இணை அதிகபட்சமாக ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.

இதனிடையே துவக்கம் முதலே நன்றாக அடித்தாடிய ஷேவக் ஆட்டத்தின் 2வது நாளான இன்று 366 பந்துகளில் 300 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். தொடர்ந்து ஆடிய ஷேவக், சமீ வீசிய பந்தில் பாகிஸ்தான் வீரர் உமரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நன்றி - வெப் உலகம்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#27
அபார பந்து வீச்சு! பாகிஸ்தானை முடக்கியது இந்தியா!

செவ்வாய், 13 ஏப்ரல் 2004

பாலாஜி, பத்தான், நெஹ்ரா ஆகியோரின் அபார பந்து வீச்சு பாகிஸ்தான் அணியை 224 ரன்களுக்கு முடக்கியது!

ராவல்பிண்டியில் இன்று துவங்கிய 3வது இறுதி டெஸ்ட் போட்டியில் பூவா - தலையா வென்ற அணித் தலைவர் சௌரவ் கங்குலி, வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆட்டக்களத்தின் தன்மையை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியை முதலில் களமிறக்கினார்.

லேசாக புற்கள் முளைத்திருந்த ஆட்டக்களமும், அதிலிருந்து ஈரப்பதமும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு உதவியது. முதல் 10 ஓவர்களை தாக்குப் பிடித்த பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தோஃபிக் உமரையும், இம்ரான் ஃபராத்தையும் எல்.பி.டபிள்யூ ஆக்கி பாலாஜியும், நெஹ்ராவும் பெவிலியனுக்கு அனுப்பினர். பாகிஸ்தான் 34/2.

சரிவை தடுத்து நிறுத்த வந்த யாசிர் ஹமிதும், இன்சமாம் உல் ஹக்கும் 3வது விக்கெட்டிற்கு 33 ரன்களைச் சேர்த்தனர். துவக்கத்தில் இருந்தே மிகச் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருந்த இர்ஃபான் பத்தான் வீசிய பந்தை முன்னால் சென்று ஹமீத் அடித்தாட, அவருடைய மட்டையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு ஸ்லிப்பிற்குச் சென்ற பந்தை வெங்கட்சாய் லக்ஷ்மண் அபாரமாக பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.

அடுத்த ஓவரை வீசிய ஆஷிஷ் நெஹ்ரா, இன்சமாமை திணறடித்து இறுதியில் அருமையாக பந்து ஒன்றை வீசி ஆட்டமிழக்கச் செய்தார்.

77 ரன்களுக்கே 4 விக்கெட்டுகள் இழந்து நெருக்கடியில் வீழ்ந்த பாகிஸ்தான் அணியை தூக்கி நிறுத்த போராடிய யூசஃப் யுஹானாவும், அசீம் கமாலும் உணவு இடைவேளைக்குப் பிறகு பத்தான், பாலாஜி பந்து வீச்சிற்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அருமையான இன் ஸ்விங்கரை கமாலை எல்.பி.டபிள்யூ. ஆக்கிய பாலாஜி, காம்ரான் அக்மாலையும், ஷோயப் அக்தரையும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணியை சரிவில் தள்ளினார்.

137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணியை மொஹம்மது சமியும், ஃபசால் அக்பரும் காப்பாற்றினர். இவர்கள் என்னதான் ஆடுகிறார்கள் என்று பார்ப்பவர்களுக்கு புரியவில்லை என்றாலும், அவர்களின் விக்bக்டடுகளை வீழ்த்த முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள் என்பது உண்மையே.

இவர்கள் இவருவரும் இணைந்து அடுத்த 23 ஓவர்களில் 9வது விக்கெட்டிற்கு குவித்த 70 ரன்களின் உதவியால் பாகிஸ்தான் அணி 200 ரன்களைக் கடந்தது.

மொஹம்மது சமி அணியின் எண்ணிக்கையை 224 ரன்களுக்கு உயர்த்தி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராவல்பிண்டி ஆட்டக்களத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆட்டமிழக்கும் "சாதனையின்" விளிம்பில் இருந்த பாகிஸ்தானை சமி காப்பாற்றி கரையேற்றினார் என்றுதான் கூறவேண்டும்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி 19 ஓவர்கள் வீசி 4 மெய்டன்களுடன் 63 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இர்ஃபான் பத்தான் 22 ஓவர்கள் வீசி 7 மெய்டன்களுடன் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஆஷிஷ் நெஹ்ரா 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அனில் கும்ளே 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி முதல் பந்திலேயே வீரேந்திர சேவாக்கை இழந்தது. லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்தை சரியாக கணிக்காமல் தடுத்தாட, பந்து அவருடைய மட்டையின் விளிம்பில் பட்டு கல்லிக்குச் சென்றது. அதனை மூன்றாவது முயற்சியில் அழகாக பிடித்தார் யாசிர் ஹமீத்.

அதன் பிறகு சரிவேதும் ஏற்படாமல் காத்த துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பட்டேலும், ராகுல் திராவிடும் அணியின் எண்ணிக்கையை 23 ரன்களுக்கு உயர்த்தினர்.
Source: webulagam
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#28
இந்தியா இன்னிஸ் வெற்றி! தொடரை வென்று புதிய வரலாறு!!

வெள்ளி, 16 ஏப்ரல் 2004

லக்ஷ்மிபதி பாலாஜி, அனில் கும்ளே ஆகியோரின் அபார பந்து வீச்சின் உதவியால் பாகிஸ்தான் அணியை ஒரு இன்னிங்ஸ் 131 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொரையும் வென்று புதிய வரலாறு படைத்துவிட்டது!

ராவல்பிண்டியில் நடைபெற்ற 3வது இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளான இன்று இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 376 ரன்கள் எடுக்க வேண்டும் என்கின்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி, இன்று காலை தமிழக வீரர் லக்ஷ்மிபதி பாலாஜியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் துவக்க முதலே திணறியது.

பாகிஸ்தான் அணியின் 3வது விக்கெட்டை வீழ்த்துவதற்குள் பாலாஜியின் பந்து வீச்சில் கிடைத்த 5 கேட்ச் வாய்ப்புக்களை இந்திய வீரர்கள் நழுவவிட்டனர். அதன் பிறகு ஒரு அருமையான பந்தொன்றை வீசி காம்ரான் அக்மாலை க்ளீன் போல்ட் செய்தார் பாலாஜி.

அடுத்து பந்து வீச வந்த நெஹ்ரா, தனது முதல் ஓவரிலேயே யாசிர் ஹமீதை வீழ்த்தினார். லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி மேலெழும்பிய பந்தை கிளான்ஸ் செய்ய முயன்றார் யாசிர் ஹமீத். பந்து அவருடைய மட்டையைத் தொட்டுக் கொண்டு பின்னால் சென்றது. அதனை பார்த்தீவ் பட்டேல் அபாரமாக பாய்ந்து பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.

பாகிஸ்தான் அணியை தோல்வியிலிருந்து மீட்கும் சுமை இன்சமாம், யூசஃப் யுஹானா ஆகியோர் தோள்களில் வீழ்ந்தது. அதே நேரத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் இவர்களை வீழ்த்த வேண்டிய அவசியம் இந்திய அணிக்கு எழுந்தது. அதனை பாலாஜி சாதித்தார்.

ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி லேசாக ஸ்விங் ஆகி சென்ற பந்தை முன்னால் சென்று இன்சமாம் தடுத்தாட, பந்து அவருடைய மட்டையின் விளிம்பை உரசிக்கொண்டு பார்த்தீவ் பட்டேலின் கைக்குள் அடைக்கலமானது.

94 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் விழுந்த பாகிஸ்தான் அணியை காப்பாற்ற ஆசிம் கமால் களமிறங்கினார். கங்குலி பந்தை அடித்த போது முழங்கையில் பட்டு சிகிக்சை எடுத்துக் கொண்டிருந்த ஆசிம் கமால், தோல்வியைத் தவிர்க்க ஒவ்வொரு பந்தையும் பெருமுயற்சி செய்து தடுத்தாடுவதும், பிறகு வலியால் துடிப்பதும் பார்ப்பதற்கு மிக வருத்தமாக இருந்தது. தோல்வியைத் தவிர்க்க முடியாது என்பது நிச்சயமாக தெரிந்த பின்னரும், சிகிச்சை பெற்றுவரும் ஒரு வீரரை இப்படி இறக்கி துன்பப்படுத்த வேண்டுமா என்கின்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடைசி வரை வலியை பொறுத்துக் கொண்டு 90 பந்துகளை எதிர்கொண்டு 13 பௌண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கமால் திரும்பியது பாரட்டிற்குரியதுதான்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய யூசஃப் யுஹானா, கும்ளேயின் பந்துகளை தொடர்ந்து அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். ஆனால் கும்ளே வீசிய பந்தொன்றை நேராக அடிக்க முயன்று அவரிடம் கேட்ச் கொடுத்து 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்த பந்திலேயே மொஹம்மது சமியை வீழ்த்தினார் கும்ளே. அடுத்து ஆடவந்த ஷோயப் அக்தர் 14 பந்துகளில் 4 பௌண்டரிகளுடனும், 2 சிக்ஸர்களுடனும் 28 ரன்கள் எடுத்து கும்ளேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அக்பரும் 12 ரன்கள் எடுத்து கும்ளேயின் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்தும் பொறுப்பை டெண்டுல்கருக்கு வழங்கினார் கங்குலி.

அவருடைய பந்தை நேராக தூக்கி அடிக்க முயன்றார் டேனிஷ் கனேரியா. பந்து அவருடைய மட்டையின் விளிம்பில் பட்டு பாய்ண்ட்டின் மீது மேலெழும்பிச் செல்ல அதனை கங்குலி பிடித்துவிட, பாகிஸ்தான் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஒரு அணியாக எல்லா விதத்திலும் சிறப்பாக ஆடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் 131 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3வது டெஸ்ட்டையும், முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் தொடரையும் வென்றது.

தமிழக வீரர் பாலாஜி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்ட்டில் மட்டும் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறியபோது பந்து வீச அழைக்கப்பட்ட கும்ளே 8 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் கதையை முடித்தார்.

இந்த டெஸ்ட் போட்டியின் நாயகனாக ராகுல் திராவிடும், தொடர் நாயகனாக வீரேந்திர ஷேவக்கும், சிறந்த பந்து வீச்சாளராக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ளேயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Source: Webulagam
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#29
2007 உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு-முரளிதரன்

உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பெற்ற இலங்கை சுழற்பந்து வீச்சாளர் 2007ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு ஓய்வு பெற எண்ணம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"அடுத்த உலகக் கோப்பை வரை விளையாட விரும்புகிறேன். 2007 உலகக் கோப்பையை இலங்கை அணி வெல்ல பாடுபடுவேன், ஒய்வு பெறும்போது அத்தகைய பெருமையுடன் ஓய்வு பெற விரும்புகிறேன்" என்று கூறினார் முரளிதரன்.

வால்ஷ் போலவே 132 டெஸ்ட்களை முரளிதரன் விளையாடினால், தற்போது அவர் சராசரி ஒரு டெஸ்ட்டிற்கு பெறும் விக்கெட்டுகள் விகித அடிப்படையில் 772 விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

webulagam
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#30
முரளியின் தூஸ்ராவிற்கு ஐ.சி.சி. தடை!

521 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை நிகழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் தூஸ்ரா எனும் பந்தை வீசக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்துவிட்டது!

தூஸ்ராவை வீசும் போது ஐ.சி.சி. நிர்ணயித்த அளவைவிட அதிகமாக முரளியின் கை நீள்கிறது என்று கூறி, முரளிதரன் தூஸ்ரா வீசக்கூடாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் பிறப்பித்த உத்தரவை ஆதரித்து இம்முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமை நிர்வாகி மால்கம் ஸ்பீட் கூறியுள்ளார்.

பொதுவாக ஆஃப் ஸ்பின் வீசும் முரளிதரன் ஆஃப் ஸ்பின் வீசுவது போல, ஆனால் லெக் ஸ்பின்னை வீசுவதே தூஸ்ரா என்றழைக்கப்படுகிறது.

முரளிதரன் வீசிய தூஸ்ரா மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருந்தது, ஆனால் தூஸ்ரா வீசும் பொழுது அவருடைய கை அனுமதிக்கப்பட்ட 5 டிகிரி அளவை விட அதிகமாக, 10 டிகிரி அளவிற்கு நீள்கிறது என்று அவரை சோதித்த ஆஸ்ட்ரேலிய நிபுணர் குழு கூறியதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் பேரவையும் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Webulagam
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#31
முரளிதரனின் தூஸ்ரா பந்துவீச்சு மீதான தடையை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் சர்வதேச கிரிக்கட் பேரவையை நீதிமன்றத்துக்கு வரவழைப்பேன் என்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் அவுஸ்ரேலிய பிரதமர் தூஸ்ரா மட்டுமின்றி முரளியின் பந்துவீச்சு எதுவுமே கிரிக்கட் விதிமுறைக்கு உட்பட்டதல்ல என்ற தொனிப்பட கருத்து தெரிவித்துள்ளார்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#32
இது பற்றிய மேலும் சில செய்திகளை இங்கும் பார்க்கலாம்....

http://kuruvikal.yarl.net/archives/000753.html#more

Reply
#33
நன்றி குருவி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#34
முரளியின் பந்து வீச்சு குறித்த வேறு பழைய செய்திகள் சில . . .

ஹெயாருடன் ஸ்-ரீவ் டன்னின் அனுபவங்கள்

முத்தையா முரளிதரனின் பந்துவீச்சுபாணி தவறானது என ஆஸி.நடுவர் டெரல் ஹெயார் முதன்முதலில் தாம் அவ்வாறு செய்யாமல் மௌளனம் காத்தமை குறித்து ஓய்வு பெற்ற நியூஸிலாந்து நடுவரான ஸ்-ரீவ்டன் தனது நூலொன்றில் விளக்கியுள்ளார்.களத்தில் மத்தியில் தனியாக ஒரு நடுவரின் கதை என்பதே இந்நூலின் பெயர். இந்நூலின் ஒருசில பகுதிகள் மாத்திரம் கடந்தவாரம் அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றில் வெளியாகின.
1995ஆம் ஆண்டு மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியின்போதுதான் முரளியின்பந்துவீச்சு தவறானது என ஹெயர் அறிவித்தார். அப்போது ஸ்கொயர் லெக் நடுவராக ஸ்-ரீவ்டன்் கடமையாற்றினார்.முரளி பந்துவீசிய போது 7 தடவை நோபோல் என அறிவித்தார் ஹெயர். இது குறித்து ஸ்hPவ் டன் கூறுகையில்,ஹெயர் என்னை நோக்கி வந்து அந்த நோபோல்களுக்கு காரணம் பாதத்தில் ஏற்பட்ட தவறுகளஅல்ல என்று கூறினார்.

இலங்கை அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் திரும்பி வந்தஅவர் ஸ்hPவன் பந்துவீச்சு முனையில் நிற்கும்போது முரளிதரனை பந்துவீசச்செய்தார்.பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் போது இயன்றவரை ஸ்டம்புகளை நெருங்கிறிபதே எனது வழக்கம். அப்போது துடுப்பு, கால்கவசத்தில் பட்டு பிடிக்கப்படும் பந்துகள் குறித்து கவனம் செலுத்தமுடியும்.நான் பின்னால் நகர்ந்து நின்றால் முரளியின் கை அசைவுகளை நன்றாகக்கவனிக்க முடியும். ஆனால் நான் எனது நடுவர் வாழ்க்கையில் பழக்கமான முறையையே பின்பற்றினேன்.

அப்போது என் மனதில் பலவாறான எண்ணங்கள் எழுந்தன. முரளிதரன் பந்தை எறிகிறார் என டெரல் ஹெயார் கூறினார். நானும் அவ்வாறு கூறிஹெயருக்கு ஆதரவு அதரிவிப்பதா அல்லது வருட ஆரம்பத்தில் நடந்த மாநாட்டில் நாம் தீர்மானித்தற்கிணங்க நான் என்ன கருதுகிறேனோ அதற்கு ஆதரவளிப்பதா? என்று தடுமாறினேன் என்கிறார் ஸ் ரீவ் டன்.அவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற மாநாட்டில், போட்டியின்போது வீரர் ஒருவரின் பந்துவீச்சுபாணி தவறானது எனக்கருதப்பட்டால் அதுகுறித்து போட்டி மத்தியஸ்தருக்கு நடுவர்கள் அறிவிக்க வேண்டும்.
மத்தியஸ்தர் குறித்த வீரரின் பந்துவீச்சு பாணி அடங்கிய வீடியோ பதிவுகளை ஐ.சி.சி.இற்கு அனுப்புவார் எனத்தீர்மானிக்கப்பட்டது.இந்த நடைமுறை பின்னர் சார்ஜாவில் நடைபெற்ற சுற்றுப்போட்டியொன்றின் போது ஆராயப்பட்டது. இத்தொடரில் டன், ஹெயார், இங்கிலாந்து நடுவர் நைகல் புளுஸ், மத்தியஸ்தரான ராமன் சுப்ரா ராவ் (இங்கிலாந்து) ஆகியோர் முரளியின் பந்து வீச்சு தொடர்பாக கலந்துரையாடலானார்.நானும், ஹெயாரும், நைகலும் முரளியின் பந்துவீச்சில் பிரச்சினையுள்ளதென ஏகமனதாக நம்பினோம்.

இவ்விடயத்தில் நாம் செய்யக்கூடியது என்பது குறித்து இலங்கை அணியின் பயிற்றுநரான டேவ் வட்மோருடன் பேசினோம். முரளியின் பந்துவீச்சு பாணியை சீரமைக்கும் பணியைஇலங்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தோம்.இத்தீர்மானத்தின்படியே மெல்பேர்ன் போட்டியின்போது நான் செயற்பட்டேன். அன்றைய ஆட்டம் முடிந்தவுடன் அறைக்குத்திரும்பியபோது எனக்கும் ஹெயாருக்குமிடையில் சுமுக உறவு இருக்கவில்லை.தனிப்பட்ட ரீதியிலும் நடுவர் என்ற வகையிலும் டெரல் ஹெயார் மீது நான் மதிப்பு வைத்திருக்கிறேன்.

ஆனால், எனது வாதம் என்னவென்றால், அச்சந்தர்ப்பத்தில் முரளி 30 டெஸ்ட் போட்டிகள் வரை விளையாடியிருந்தார். பல்வேறுநடுவர்கள் அவரின் பந்துவீச்சை அவதானித்துள்ளனர். ஒரேயொருவர் தான் அது தவறானது என்று கூறியுள்ளார்.ஆனால், நான் ஹெயாருக்கு ஆதரவளிக்காமை குறித்து ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.அப்போட்டி முடிந்தவுடன் மத்தியஸ்தர் கிறஹம் (நியூஸிலாந்து) தனது ஹோட்டல் அறைக்கு என்னை அழைத்து முரளியின் பந்துவீச்சு தவறானது என ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்டார்.

அடுத்த உலகக்கிண்ணப்போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றுவது குறித்தே நான் அதிககரிசனை கொண்டிருந்தேன் என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மார்க் டெய்லர் தனது போட்டி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.அது அபாண்டமான குற்றச்சாட்டு. அது என்னை மிகவும் ஆத்திரப்படுத்தியது. இப்போது கூட நான் நடுவராகப்பணியாற்றினால் முரளியின் பந்துவீச்சுதவறானது என போட்டியின்போது கூறமாட்டேன். ஆனால், அவரது பந்துவீச்சு முறையானதாக இல்லையென மத்தியஸ்தருக்கு அறிவிக்கக்கூடும்|| என்கிறார் ஸ்-ரீவ்டன்்.

இதேவேளை எனது பந்துவீச்சுப்பாணி தவறானது எனக்குற்றம் சாட்டப்பட்டபோது எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என அஞ்சினேன் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். விஸ்டன் ஏஸியா கிரிக்கெட்சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே முரளிமேற்கண்டவாறு கூறியுள்ளார்.எனது பந்துவீச்சு விதிகளுக்கு முரனானது என நான் எப்போதும் எண்ணவில்லை.இந்த பிரச்சினையில் இலங்கைக்கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை அணியினர் அனைவரும் தமது முழு ஆதரவை எனக்கு வழங்கினார். ணதுங்க, எனது கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றியவர் எனலாம் இவ்வாறு முரளி கூறியுள்ளார்.

நன்றி - வெப் தமிழன்
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#35
அவுஸ்திரேலிய தொடரை புறக்கணிக்கும் முரளிதரனின் முடிவுக்கு ஆதரவு

அவுஸ்திரேலிய தொடரை புறக்கணிக்கும் முரளிதரனின் முடிவுக்கு இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கும் இடையிலான பிரச்சினை சுமார் 10 ஆண்டு காலமாக நீடிக்கிறது. இவரது ஒவ்வொரு அசைவுக்கும் ஏதாவது ஒரு புகாரை கூறுவது அவுஸ்திரேலிய அணியினரின் வழக்கம். கடந்த 199596இல் இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்ற போது முரளிதரன் பந்தை எறிவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பின்னரும் இவரது பந்துவீச்சு முறை குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வந்தன. சமீபத்தில் அவுஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மீண்டும் பிரச்சினை வெடித்தது.

"துõஸ்ரா' தடை அதாவது முரளியின் "தூஸ்ரா' வகை பந்துவீச்சு, வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை தருவதாக கூறப்பட்டது. இவ்வகை பந்துகள் அதிவிரைவாக விலகிச் செல்வதால் துடுப்பாட்ட வீரர்களால் பந்தை அடிக்க இயலவில்லை என்று விளக்கமும் தரப்பட்டது.பின்னர் இது பற்றி சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் இந்த வகையில் பந்துவீச இவருக்கு தடை விதிக்கப்பட்டது. இப்படி அவுஸ்திரேலியாவுடன் மோதும் போதெல்லாம் முரளி பற்றி ஏதாவது ஒரு பிரச்சினை கிளப்பப்படும்.

இந்நிலையில் அடுத்த மாதம் இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்று 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் பங்கேற்பது குறித்து முரளிதரன் சந்தேகம் வெளியிட்டு இருந்தார்.

தனது பந்துவீச்சை மதிக்காமல் தொடர்ந்து புகார் கூறும் மண்ணில் விளையாட விருப்பம் இல்லை என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்ட் முரளிதரன் பந்தை எறிகிறார் என்று சமீபத்தில் புகார் கூற பிரச்சினை பூதாகரமாக மாறியது. அவுஸ்திரேலிய அரசை நடத்துவதில் மட்டும் ஹோவார்ட் கவனம் செலுத்தினால் போதும். உண்மை அறியாமல் எனது பந்துவீச்சு குறித்து விமர்சிக்க தேவையில்லை என்று முரளிதரன் பதிலடி கொடுத்தார். இவரது இந்த கருத்தை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவும் பிரதிபலித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் 523 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள வீரர் மீது ஹோவர்ட் புகார் கூறியுள்ளது முட்டாள்தனமானது.

வெளிநாட்டவர்கள் வேண்டுமென்றே முரளிதரன் குறித்து சர்ச்சையை கிளப்புவதை ஏற்க இயலாது என கருத்து தெரிவித்துள்ளார். இதே போல் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் மொஹான் டி சில்வாவும் முரளிதரனுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியா செல்ல விருப்பம் இல்லை என்று முரளிதரன் கோரிக்கை விடுத்தால், அதை உடனடியாக ஏற்போம். இவருக்கு மதிப்பு அளிக்காத இடத்துக்கு வற்புறுத்தி அனுப்பி வைக்க மாட்டோம். ஹோவர்டின் கருத்து ஏமாற்றத்தை தந்துள்ளது என்கிறார் டி சில்வா.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வோர்னை(519 விக்.,) முந்தி அதிக விக்கெட் வீழ்த்திய முரளிதரனால் சர்ச்சையில் இருந்து மட்டும் மீள முடியவில்லை. இவரது பிரச்சினையால் அவுஸ்திரேலிய, இலங்கை இடையிலான விளையாட்டு உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஹோவார்டின் புகார், அதை தொடர்ந்து முரளியின் புறக்கணிப்பு முடிவு போன்றவை நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யக்கூடும்.

வீரகேசரி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#36
முரளியை விமர்சித்த வீரருக்கு ஒரு போட்டித்தடை

சிம்பாவே கிரிக்கெட் அணியில் அன்டிபிளவர், ஹென்றி ஒலங்கா இருவரும் ஆரம்பித்து வைத்தார்கள். அன்று தொடக்கம் இன்றுவரை அவ் அணியில் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை.

முதலில் 15 வெள்ளையின வீரர்களின் வெளியேற்றம் மஹ்வியறின் முறையற்ற பந்து வீச்சு இது தவிர தற்போது இலங்கை அணியின் முரளிதரனை விமர்சித்தார் என சிம்பாப்வே அணியின் உபதலைவர் டியோன் எப்ராஹிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் சிம்பாப்வே அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்ட முடிவில் தொலைபேசி பேட்டியொன்றின் போது முரளிதரன் குறித்து கருத்து வெளியிட்ட எப்ராஹிம், முரளிதரன் வீசிய பந்துகளிலேயே "லெக்பிரேக்' பந்து வீச்சு மாத்திரமே முறையானது என்றார். உடனே ஏப்ராஹிமின் இக்கருத்துக்கெதிராக போட்டி நடுவர் மைக் பிரொக்டரிடம் இலங்கை அணியின் நிர்வாகிகள் முறையிடவே எப்ராஹிம்மை அழைத்து விசாரித்த போட்டி நடுவர் அவருக்கு ஒரு போட்டிக்கான தடையை விதித்தார்.

வீரகேசரி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#37
முரளிக்கு அலன்போர்டர்எச்சரிக்கை

தொடர்ந்து உலக சாதனை வீரர் முரளிதரன் தூஸ்ரா பந்து வீச்சை பயன்படுத்துவது முட்டாள்தனமான செயல் என விமர்சித்துள்ளார் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரும் தேர்வுக்குழு உறுப்பினருமான அலன் போர்டர்.

இது குறித்து அலன் போர்டர் கூறும் போது;

முரளிதரன் தொடர்ந்து தூஸ்ரா பந்து வீச்சை பயன்படுத்துவது முட்டாள்தனமான விடயமாகும். போட்டி நடுவர் கிரிஸ் ப்ரோட்டின் குற்றச்சாட்டை தொடர்ந்து இவர் ஐ.சி.சி.யின் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தூஸ்ரா பந்து வீச்சு சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளுக்கு முரணானது என அறிவுறுத்தப்பட்டார். இதுதவிர இலங்கை கிரிக்கெட் சபையும் முரளிக்கு தூஸ்ராவை பயன்படுத்த வேண்டாம் என ஆலோசனை வழங்கியிருந்தது.

இந்நிலையில் அவர் தொடர்ந்து தூஸ்ராவை பயன்படுத்தினாரேயானால் நிச்சயம் பல தடைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றார்.ஆனால் தற்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள முரளிதரன் தனது மிக முக்கியமான ஆயுதமான தூஸ்ராவுக்காக தொடர்ந்து போராடும் முடிவில் இருந்து வருகிறார்.இதுதவிர சிம்பாப்வே அணியுடனான போட்டியில் நேற்யை தினம் பந்து வீசிய முரளி வழமையான ஓப் ஸ்பின் பந்து வீச்சை விட அதிக அளவில் லெக்பிரேக் பந்து வீச்சுக்களை பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#38
முரளியின் பந்துவீச்சு பற்றி வலைப்பூவில் இந்திய தமிழர் ஒருவர் எழுதிய கருத்துக்கள் ......

முத்தையா முரளிதரன் - இப்பொழுதைக்கு டெஸ்டு போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்திருப்பவர் - 'தூஸ்ரா' எனப்படும் வெளியே செல்லும் பந்தைப் போடக் கூடாது என்று ஐசிசி அறிவித்திருந்தது. முரளி, என்னிடம் யாரும் சொல்லவில்லை, அதனால் நான் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அந்தப் பந்தைப் போடுவேன் என்று எதிர்ப்பேச்சு பேசினார். ஐசிசி மீண்டும், நாங்கள் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஏற்கனவே சொல்லிவிட்டோம், மீறி முரளி 'தூஸ்ரா'வை வீசினால் ஒரு வருடத்திற்கு அவரைத் தடை செய்வோம் என்றனர்.

இத்தனையும் நடக்கும்போது ஜிம்பாப்வே அணியில் உருப்படியான ஒரு ஆட்டக்காரருமே கிடையாது. [முன் விவரங்களை அறிந்து கொள்ள எனது இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.] முதல் இன்னிங்க்ஸில் ஜிம்பாப்வேக்காக ஒழுங்காக ஆடிய ஒரே ஆட்டக்காரர் டியான் இப்ராஹிம். முரளி அவருக்கு ஒரு லெக் பிரேக் பந்து வீசியுள்ளார். இப்ராஹிமும் வாயை சும்மா வைத்துக் கொண்டிராமல், முரளி வீசிய பந்துகளிலேயே அந்த லெக் பிரேக் ஒன்றுதான் 'எறியாது' வீசிய பந்து என்று ஒரு செவ்வியில் சொல்லி விட்டார். கடுப்பான இலங்கை அணியின் மேனேஜர் ஐசிசி மேட்ச் ரெஃபெரியிடம் புகார் கொடுக்க, அவர் டியான் இப்ராஹிமை ஒரு ஆட்டத்துக்குத் தடை செய்து விட்டார்.

இந்தக் குழப்பங்கள் போதாதென்று இரு நாட்டின் பிரதமர்கள் முரளியின் பந்துவீச்சு சமாச்சாரத்தில் களத்தில் குதித்துள்ளனர். இலங்கைப் பிரதமர் மஹிந்தா ராஜபக்ஸே, முரளியின் மீது அவதூறு சொன்னதற்காக ஐசிசி மீது வழக்குத் தொடுப்பேன் என்று கூக்குரல் விடுக்கிறார். முரளி இலங்கையின் சொத்தாம். ஆஸ்திரேயாவின் பிரதமர் ஜான் ஹாவர்ட் முரளி பந்தை 'chuck' செய்கிறார் (எறிகிறார்) என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி விட்டுள்ளார். முரளிதரன் உடனே நான் இனி ஆஸ்திரேலியா போக மாட்டேன் என்று அறிவித்துள்ளார். [இதனால் நஷ்டம் ஆஸ்திரேலியாவின் மட்டையாளர்களுக்குத்தான். தூஸ்ராவோ, தீஸ்ராவோ, முரளியை ஆஸ்திரேலிய மட்டையாளர்கள் இதுவரை கைமா பண்ணியுள்ளனர்!] இலங்கை அணி நிர்வாகமும், முரளி விரும்பவில்லையென்றால் அவர் ஆஸ்திரேலியா செல்ல வேண்டியதில்லை என்று அறிவித்து விட்டனர்.

பாடிலைன் (bodyline) தொடருக்குப் பின்னர் அரசுகளுக்கிடையில் பிரச்சினை வருமளவிற்கு சென்றுள்ளது முரளிதரன் விஷயத்தில்தான்!

[b]வாசகர் ஒருவர் எழுதிய கேள்வியும் அதற்கு கட்டுரையாளர் எழுதிய பதிலும் ....

[b]முரளிதரன் பந்துவீசுகிறாரா? மாங்கா அடிக்கிறாரா? உங்கள் கருத்தென்ன?

By writerpara, at 10:30

மாங்கா அடிக்கிறார் என்று சொல்ல மாட்டேன்! ஆனால் வீசுவது சரியான முறையில் அல்ல என்பது என் கருத்து. இதை ஏற்பதென்பது அனைத்து நாடுகளும் ஒன்றாக ஐசிசியில் ஒத்துக்கொண்டால்தான்... இதற்கு முன், பலமுறை விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அப்படி மாறிய விதிகள் அனைவருக்கும் சரிசமமாக உதவி புரிய வேண்டும்.

By Badri, at 19:59
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#39
இன்னும் 24 நாட்களில் நடைபெறவுள்ள ஜரோப்பியகிண்ண
உதைபந்தாட்டத்தின் இறுதிச்சுற்று
போத்துக்கலில் நடைபெறவுள்ளன இதில் போத்துக்கல் உட்பட 16 நாடுகள் மோதவுள்ளன இம்முறை போத்துக்கல் தமது சொந்தநாட்டில்
விளையாடி வெற்றிபெறுமா அல்லது முன்னையவெற்றிங்கிண்ணங்களைப்பெற்ற நாடுகளான நெதர்லாந்து பிரான்ஸ் ஜேர்மனி டென்மார்க் ரஸ்யா ஸ்பெயின் செக்கோ இத்தாலி அல்லது இங்கிலாந்து முதல்முறையாக கிண்ணத்தை கைப்பற்றுமா? தொடரும்
Reply
#40
முரளிதரனை பாதுகாப்பதற்கும் சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் உதவியை இலங்கை பிரதமர் கோரியுள்ளார். இது அரசியல் அல்ல என்றும் இலங்கை குடிமகன் ஒருவரின் உரிமையை பாதுகாக்கும் முயற்சி என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள் ஆங்கிலத்தில் . . .

http://www.expressindia.com/cricket/fullie...ontent_id=47261
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)