Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பு மண்ணில்...!?
#61
[quote=Mathivathanan][quote=Mathivathanan] [size=18]மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?

யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..

தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..

பொறுங்கோ ஒவ்வொரு நாளும் பதுமன் சொர்ணம்,தமிழ்ச்செல்வன்,இன்னும் ரமேஸ்,பால்ராஜ் எல்லோரும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று எல்லோருக்கும் கவலை ஒவ்வொரு நாளும் நடுனிலைமை ஊடகங்களான சக்தி, B.B.C ஐ கூட்டிக்கொண்டுவந்து
அடையாள அணிவகுப்பு நடத்தச் சொல்லுவம்


ஒவ்வொரு நாளும் காட்டவேண்டும் இல்லாட்டி ஒரு நாள் காட்டி விட்டு ஒளிச்சுப் போடுவாங்கள் இப்போ சமாதான காலம் தானே எல்லோரும் சண்டைக்குப் போகாமல் சும்மா தானே இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஐந்து நிமிடம் பத்திரிகைகளுக்கு முன்னால் வந்து போனால் என்ன
\" \"
Reply
#62
Mathivathanan Wrote:
Eelavan Wrote:
Kanthar Wrote:[quote=Eelavan]....................அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு

என்ர ராசா ஈழம்
உது அந்தநாள் நடந்த சுதுமலை கூட்டத்துக்கும் பொருந்தும் எண்டால்....
நான் விட்டுடுவனோ..

ஓமோம் சுதுமலைக் கூட்டத்துக்கு குஞ்சியாச்சி செத்துப் போனா என்று ஒப்பாரி வைச்சுத் தான் ஆள் சேர்த்தவங்கள்
<span style='color:brown'>நீங்கள் இப்ப செய்யிற கருணா ஒப்பாரிமாதிரியோ..?
</span>

ஆடு நனையுதென்று ஓநாய் தான் ஒப்பாரி வைக்கும் நாங்கள் எதுக்கு வைக்கவேணும்
அது தான் தெரியுதே முதலைக் கண்ணீர் விடுறது யார் ஊளையிடுறது யார் என்று
\" \"
Reply
#63
Eelavan Wrote:[quote=Mathivathanan][quote=Mathivathanan] <span style='color:brown'>மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?

யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..

தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..

பொறுங்கோ ஒவ்வொரு நாளும் பதுமன் சொர்ணம்,தமிழ்ச்செல்வன்,இன்னும் ரமேஸ்,பால்ராஜ் எல்லோரும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று எல்லோருக்கும் கவலை ஒவ்வொரு நாளும் நடுனிலைமை ஊடகங்களான சக்தி, B.B.C ஐ கூட்டிக்கொண்டுவந்து
அடையாள அணிவகுப்பு நடத்தச் சொல்லுவம்


ஒவ்வொரு நாளும் காட்டவேண்டும் இல்லாட்டி ஒரு நாள் காட்டி விட்டு ஒளிச்சுப் போடுவாங்கள் இப்போ சமாதான காலம் தானே எல்லோரும் சண்டைக்குப் போகாமல் சும்மா தானே இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும் ஒரு ஐந்து நிமிடம் பத்திரிகைகளுக்கு முன்னால் வந்து போனால் என்ன
[size=18]ஈழவன் கேள்வியை கொட்டைஎழுத்தில் போட்டும் விளங்க மறுக்கிறீர்கள்.. திரும்பவும் ஒருமுறை வாசித்துவிட்டு கேள்விக்கான பதிலை தாருங்கள்..</span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#64
Eelavan Wrote:
Mathivathanan Wrote:
Eelavan Wrote:
Kanthar Wrote:[quote=Eelavan]....................அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு

என்ர ராசா ஈழம்
உது அந்தநாள் நடந்த சுதுமலை கூட்டத்துக்கும் பொருந்தும் எண்டால்....
நான் விட்டுடுவனோ..

ஓமோம் சுதுமலைக் கூட்டத்துக்கு குஞ்சியாச்சி செத்துப் போனா என்று ஒப்பாரி வைச்சுத் தான் ஆள் சேர்த்தவங்கள்
<span style='color:brown'>நீங்கள் இப்ப செய்யிற கருணா ஒப்பாரிமாதிரியோ..?
</span>

ஆடு நனையுதென்று ஓநாய் தான் ஒப்பாரி வைக்கும் நாங்கள் எதுக்கு வைக்கவேணும்
அது தான் தெரியுதே முதலைக் கண்ணீர் விடுறது யார் ஊளையிடுறது யார் என்று
<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் இணையம் உங்கள் சார்பான இணையமாயிருந்தாலும்.. வாசகர்கள்தானே எதையும் தீர்மானிப்பது.. எனவே தீர்ப்பை அவர்களிடம் விட்டுவிடுவோம் ஈழவன்.. நன்றி</span>
Truth 'll prevail
Reply
#65
Eelavan Wrote:......அன்னை பூபதி நினைவுக்கு கூடிய கூட்டத்தை கருணாவுக்கு கூடிய கூட்டம் என்று சொல்லும் B.B.C ஒரு நடுனிலைமை ஊடகம் என்று நீங்கள் சொல்லித் தான் நம்ப வேண்டி இருக்கு

Eelavan Wrote:ஓமோம் சுதுமலைக் கூட்டத்துக்கு குஞ்சியாச்சி செத்துப் போனா என்று ஒப்பாரி வைச்சுத் தான் ஆள் சேர்த்தவங்கள்

ஓம் ஓம் அதெண்டால் உண்மைதான்
அதுவெண்டால் என்ன இதுவெண்டால் என்ன
எல்லாம் ஆள் சேர்ப்புத்தான்
அவரவர் வேற வேற வியாக்கியானத்தை குடுக்கிறம்
தங்கட வசதிக்கு தக்கமாதிரி
Reply
#66
நாம் விளங்கித் தான் சொன்னேன் நீங்கள் தான் விளங்காமல் கேட்கிறீர்கள் இப்போது பதுமன் திருகோணமலை போய்விட்டாரா என்று கேட்பீர்கள் அதற்கு நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் பதுமனே நேரில் பேட்டி கொடுக்க வேண்டும் பிறகு நாளைக்கு தமிழ்செல்வன் வன்னியிலை இருக்கிறாரோ இல்லையோ என்று கேட்பீர்கள் அதற்கு தமிழ்ச்செல்வன் பேட்டி கொடுக்கவேண்டும் அதுக்குப் பதிலாக ஆளடையாள அணிவகுப்பு வைத்தால் சந்தேகமான எல்லோரும் நிற்கிறார்களா இல்லையா என்று பார்த்துத் திருப்திப் பட்டுக்கொள்ளலாம் இல்லையா?
\" \"
Reply
#67
ம்ம் ஆளாளுக்கு தக்கமாதிரி வியாக்கியானம் குடுத்து ஆள் சேர்த்து விடுதலைப் போராட்டம் நடத்துறதுக்குப் பதிலாக நாலைஞ்சு தென்னம்பிள்ளை வாங்கி நட்டிட்டு பூக்குதோ காய்க்குதோ என்று பாத்துக் கொண்டிருக்கலாம்

நீங்கள் ஆயிரத்துக்கும் வியாக்கியானம் குடுப்பியள் கேட்டுக் கொண்டிருக்கிறவன் ..............
\" \"
Reply
#68
[quote=Eelavan]நாம் விளங்கித் தான் சொன்னேன் நீங்கள் தான் விளங்காமல் கேட்கிறீர்கள் இப்போது பதுமன் திருகோணமலை போய்விட்டாரா என்று கேட்பீர்கள் அதற்கு நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் பதுமனே நேரில் பேட்டி கொடுக்க வேண்டும் பிறகு நாளைக்கு தமிழ்செல்வன் வன்னியிலை இருக்கிறாரோ இல்லையோ என்று கேட்பீர்கள் அதற்கு தமிழ்ச்செல்வன் பேட்டி கொடுக்கவேண்டும் அதுக்குப் பதிலாக ஆளடையாள அணிவகுப்பு வைத்தால் சந்தேகமான எல்லோரும் நிற்கிறார்களா இல்லையா என்று பார்த்துத் திருப்திப் பட்டுக்கொள்ளலாம் இல்லையா?[/quote][quote=Mathivathanan] <span style='color:brown'>மீண்டும் கேட்கிறேன்.. இரானுவ உலங்குவானூர்தியில் போவதாக திட்டமிட்டபடி பதுமன் திருகோணமலைக்கு சென்றாரா..?

யாராவது தெரிந்தவர்கள் பதில் தாருங்களேன்.. பத்திரிகையாளருக்கு பிரத்தியேக சந்திப்பு ஏற்படுத்தி முக்கியமாக சொல்லப்பட்ட செய்தி இந்த உலங்கு வானூர்தியில் செல்கின்றார் என்ற செய்தி..

தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் அனுப்புங்கள்..
[size=18]தற்போது கேட்ட கேள்விக்குப் பதில் தெரிந்தால் சொல்லுங்கள் அது போதும்..</span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#69
[quote=Eelavan].... ...நாலைஞ்சு தென்னம்பிள்ளை வாங்கி நட்டிட்டு பூக்குதோ காய்க்குதோ என்று பாத்துக் கொண்டிருக்கலாம்

சரியா சொன்னியல்
'மண் மீட்பு' எண்டதுக்கு இண்டைக்குத்தான் காரணம் விழங்கிச்சுது
தென்னம்பிள்ளை நடத்தான்...எண்டு!
நல்லம் நல்லம் செய்யுங்கோ.....
தாய்மாருக்கு பிள்ளையல் போனாலும் உந்த பிள்ளையாவது மிச்சும்..
Reply
#70
[quote=Kanthar][quote=Eelavan].... ...நாலைஞ்சு தென்னம்பிள்ளை வாங்கி நட்டிட்டு பூக்குதோ காய்க்குதோ என்று பாத்துக் கொண்டிருக்கலாம்

[size=18]சரியா சொன்னியள்
'மண் மீட்பு' எண்டதுக்கு இண்டைக்குத்தான் காரணம் விளங்கிச்சுது
தென்னம்பிள்ளை நடத்தான்...எண்டு!
நல்லம் நல்லம் செய்யுங்கோ.....
தாய்மாருக்கு பிள்ளையள் போனாலும் உந்த பிள்ளையாவது மிச்சும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#71
அதுவும் சரிதான்
தென்னம்பிள்ளை வைக்கவும் சொந்தமா ஒரு நாலுகுழி நிலம் வேணும் பாருங்கோ

வைச்சிருந்த வடலியையும் வெட்டிப் போட்டான் என்று நாங்கள் குரைபடுறம் தென்னம்பிள்ளை வைச்சால் உங்களைவிடப் பிரயோசனமாயிருக்கும் என்று நீங்களே குரைபடுறியள்

எல்லாம் நீங்கள் சொல்லித் தந்ததுதானே உங்களுக்குத் தேவைபடும்பொழுது துவக்குத் தூக்கவும் தேவைப்படாத போது தென்னம்பிள்ளை வைக்கவும் சொல்லுறியள்
\" \"
Reply
#72
<span style='font-size:25pt;line-height:100%'>இருந்த வடலிக்குள்ளை நீங்கள் அவங்களை கொண்டுவந்து இருத்திப்போட்டு அவங்கள் புடுங்கி எறியுறாங்கள் எண்டால் தகுமோ..?

எங்கடை நிலம் எங்களுக்குச் சொந்தமான நிலம் என்னண்டு அவங்களுக்குப் போனது.. நீங்கள் வித்துப்போட்டு இப்ப கதையளக்கிறியள்.. என்ன..?</span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#73
<b>தமிழகத்திலிருந்து யோ.திருவள்ளுவர் எழுதிய:
கருணாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்</b>


அன்பு திரு.கருணா அவர்களுக்கு,

தமிழகத்து தமிழனின் வணக்கம். இந்த செய்தி தாங்கிவரும் என் கடிதம் பல லட்சம் தமிழர்களின் உணர்வலைகள். ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றை என் 13 வயது முதல் கவனமாக அறிந்து வருகிற எனக்கு, உங்களது கடந்தகால வீரம்செறிந்த வரலாறு வியக்க வைத்தது உண்மை. கடந்த காலத்தில் நீங்கள் ஒரு இலட்சியம் மிக்க போர் வீரன் என்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது. இந்த மாதம் இடியென வந்த உங்கள் செய்திகளை படித்து வேதனை கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இந்த கடிதம் உங்களுக்கு.

ஈழத்து போராட்டங்களில் நேரடியாக எந்த பங்கும் ஆற்றாதவன் என்ற நிலையில் நின்று உங்கள் இந்த பிரதேச வாதத்தை பார்க்கும் போது எனக்கு உங்களிடம் சில கேள்விகள் எழுகிறது. தமிழீழம் என்ற ஒரு வரையறுக்கப்பட்ட எல்லையை (தாயகத்தை) மீட்டெடுக்கவே இதுவரை போராட்டங்களில் பல ஆயிரம் பொதுமக்களும,; போராளிகளும் உயிரை தியாகம் செய்தார்கள். அவர்கள் மட்டும் ஊர், பிரதேசம,; மாவட்டம், வட்டம் என பிரிந்து போயிருந்தால் இன்று நீங்களும் பாதுகாப்பற்று அலைந்திருப்பீர்கள் அல்லது கல்லறையில் கருக்கப்பட்டிருப்பீர்கள். இதை தெரிந்தும் ஒன்றும் அறியாத விடலைப் பெடியன் போல ஒரு போராளியாய் இருந்த நீங்கள கிணறு வெட்ட புறப்பட்ட புூதமாய்; மாறிய இரகசியம் என்ன?

உங்கள் பேட்டிகளில் படித்த விடயங்களில் சில சம்பந்தமான கேள்விகள்:

1) வன்னிக்கு 1000 வீரர்களை அனுப்ப தலைமை கேட்டதாகவும், அந்த போராளிகளை பலிகொடுக்காமல் காப்பாற்றவும் வேண்டி இந்த முடிவு எடுத்ததாக சொல்லியிருக்கிறீர்கள். இது உண்மை என்றால் எதற்கு ஒரு உப்பு சப்பில்லாத உழுத்துபோன பிரதேச வாதம் தேவைப்படுகிறது உங்களுக்கு? போராட்ட களத்தில் படைகளை அதன் தேவைகளுக்கு ஏற்ப தந்திரமாக நகர்த்துவதில் தான் வெற்றி இருக்கிறது என்பதை அறியாத அப்பாவியில்லை நீங்கள். எதுவாக இருந்தாலும் கட்டளைகளை கடைப்பிடிப்பது தான் ஒரு படையணியின் ஒழுக்கம்.

தலைமை உங்களை விசாரிக்க அழைத்ததன் பேரில் ஏற்பட்ட உயிர் பயம் தான் இன்று நீங்கள் விளையாடும் இந்த சறுக்கல்கள் என்பது உங்களுக்கும், உங்கள் நெருக்கமானவர்களுக்கும் மட்டுமல்ல உலகத்துக்கே தெரிந்த இரகசியம். போராளிக்கு இருக்க கூடாத உயிர்பயம் உங்களில் முளைவிட என்ன காரணம்?

2) தமிழீழ தேசியத் தலைமை அதிகாரத்தை பிரித்து கொடுக்காமல், தான் இடும் கட்டளைகளை செயல்படுத்துவதாக கூறியிருக்கிறீர்கள். இது தான் ஒரு போராட்ட வரலாற்றில் மிக பாதுகாப்பான தந்திரோபாயங்களை தரவல்லது என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் இருப்பது ஒரு விடுதலை பெற்ற சூழல் இல்லை என்பதை மறந்து விட்டீர்களா?

உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் போராளிகளுக்கு கட்டளை பிறப்பிப்பது நீங்கள் தானே? அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தான் நீங்கள் அவர்களை கட்டுப்பாடில் வைத்திருப்பதன் இரகசியம் என்ன என்பது உங்களுக்கு மட்டுமா தெரியும்?

3) உளவுப்பிரிவுப் பொறுப்பாளர், காவல்த்துறை பொறுப்பாளர், நிதிப் பொறுப்பாளர் என இந்த மூவரையும் நீக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளீர்கள். ஒரேயொரு கேள்வி. எதற்காக இவர்களை பார்த்து அச்சம் கொள்கிறீர்கள்? உங்கள் மடியில் கனமில்லை என்றால் எதற்கு இந்த பயம் கலந்த சிறுபிள்ளைத்தனமான கோரிக்கைகள்?

4) ஆயுதங்களை பி.பி.சி நிருபருக்கு காட்டுவதற்காக மீனகம் முகாமை நீங்கள் திறந்தது உங்களது இயலாமையையும், பரிதாபம் கலந்த பய உணர்வையும் எதிரிக்கும் காட்டியிருக்கிறது. உங்களை கடந்தகால புகைப்படத்தில் பார்க்கும் போதெல்லம் ஒரு கம்பீரம் தெரியும், இப்போதைய பி.பி.சி புகைப்படத்தை பார்த்தபோது ஒரு குறுநரியின் நடை தெரிகிறது.

5) நேர்காணலொன்றில், பல வரலாறுகளை படித்ததாக சொல்லியிருந்தீர்கள்;. கியுூபாவின் விடுதலைப் போராட்டதையும் அதில் பிடல் காஸ்ட்ரோ, செகுவேரா இவர்களது அளவுகடந்த பற்றுறுதியையும், நட்பையும், தலைமை முறையையும் ஒருமுறை படியுங்கள். கல்நெஞ்சம் கொண்டாலும் நீங்கள் உண்மை போராளி என்றால் உங்கள் செயலுக்கு கண்ணீர் விடுவீர்கள்!

உங்களது இந்த தரம்தாழ்ந்த செயலால் பாதிப்பு பல இலட்சோப இலட்சம் தமிழ் மக்களுக்கு. நீங்கள் உங்கள் நிலையை உணர்ந்து மாற்றிக்கொள்ளாவிட்டால் உங்களது தலைமுறைக்கும் இதன் பழி வந்து சேரும். தலைமுறை எல்லாம் தலைகவிழ்ந்து நடப்பது தான் மானம்மிகு போராளிக்கு அழகா? இன்று அருகில் இருந்து ஆதரவு தரும் வல்லமை மிக்க உங்களது புதிய நண்பர்கள் உங்களை விட நல்ல இடம் கிடைத்ததும் உங்களை முதல் பலி கொடுப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

கடைசியாக எனது எளிய ஆலோசனை உங்களை இந்த சிக்கலிலிருந்து விடுவித்துக்கொள்ள. பொது மன்னிப்பை ஏற்று விசாரணைக்கு உட்பட்டு நியாயமாக நடந்துகோள்ளுங்கள். தமிழ் மக்கள் உங்களது உயிரையும் மிச்சமிருக்கும் மானத்தையும் காப்பற்றுவார்கள்.

துரோகி என்ற பட்டம் சுமந்து வசதியாக வேதனையில் வாழ்வதை விட, திருந்தி மன்னிக்கப்பட்டவன் என்பது மேலான இடம். தமிழீழ தேசத்தில் மன்னிப்பு என்ற ஒரு அத்தியாயத்தை துவக்கி வையுங்கள் அதில் புடம் போடப்படும் முதல் போராளியாக.

இல்லையேல் துரோகி என்ற இழிச்சொல் சுமந்து உங்களது குடும்பம், தலைமுறையை பழிச்சொல்லுக்கு இரையாக்குங்கள். முடிவு உங்களிடம். வரலாற்றில் நீங்கள் எந்த பக்கத்தில் என்பது உங்களது இப்போதைய முடிவு தான் தீர்மானிக்கும்.

யோ.திருவள்ளுவர்
தமிழகத்திலிருந்து
நன்றி : தமிழ்நாதம்
Reply
#74
<b>சிறையிலிருந்து ஒரு கடிதம் </b>


எம் அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கு...

அன்புள்ள எங்கள் தமிழ் உறவுகளுக்கு வந்தனங்களுடன் தமிழர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தென்னிலங்கைச் சிறையில் அரசியல் கைதிகள் கைதிகள் என்கிற பெயருடன் சமாதான சூழ்நிலையிலும் சிறைவாசம் அனுபவிக்கும் உங்கள் உறவுகள் மிகுந்த மனவேதனையுடன் எழுதும் அன்பு மடல்.

இன்று எமது ஈழத்தமிழ் தேசத்தில் உருவாகியுள்ள பிரிவினைப்பேச்சு பிளவுகளினால் ஏற்பட்டுள்ள கவலைக்குரிய விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து தினம் தினம் மனவேதனையினால் புழுங்கிடழுகின்றோம்.

தமிழர்கள் ஆகிய எங்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு பலம்பொருந்திய பேரினவாத சக்திகளினால் அடக்கி ஒடுக்கப்பட்டு நலிவுற்று எங்கள் இனம் கிடந்தபோது தமிழர்களின் மானத்தைக் காப்பாற்றி எங்கள் இனத்தை மானத்துடன் தலைநிமிரச் செய்த எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்குதமிழ் எனும் உணர்ச்சி பிரவாகம் மிகுந்த நிகழ்வில் தேசியத்தலைவரின் உருவப்படங்களை உங்கள் கரங்களில் சுமந்து - ஏகோபித்த குரலாய் எங்கள் தலைவர் எங்கள் தலைவர் என்று நீங்கள் ஆக்ரோசித்ததை கேட்டு இன்புற்று ஆனந்தக்கண்ணீர் வடித்தோம்.

இனி எங்கள் தமிழ் இனத்தின் ஒற்றுமையை எந்தப் பலவானாலும் சீரழித்து சீர்குலைக்கவே முடியாது என்று உறுதிபுூண்டிருந்தோம். எங்கள் தாயகத்தின் வீரத்தையும், ஒற்றுமையையும் உரிமைக்கான உறுதிப் போராட்டத்தையும் எங்கள் தலைவரின் ஆளுமையையும் கண்ட உலகத்தமிழர்களும் ஏனையோரும் பிரமித்து நின்றார்கள். மகிழ்ந்தோம் ஆனால் இன்று?

எங்கள் தலைவரின் உருவப்படங்களிற்கு, தமிழ் தேசியத் தலைவரை தெய்வமாக மதித்து புூஐpக்கின்ற உங்கள் மத்தியில் உள்ள ஒருசில விஷமிகளின் து}ண்டுதலின் காரணமாக தீயிட்டு கொளுத்துகின்றார்கள். எங்கள் இதயங்கள் சுக்குநு}றாக நொருங்கி கண்ணீர் வடிக்கின்றது. இவ்வாறான அபகீர்த்தியான - கொடுரமான - செயல்தனை உங்கள் மத்தியில் உள்ள ஒருவரே செய்யும்போது இதை நீங்கள் எவருமே தட்டிக்கேட்காமல் இருப்பது ஏன்? மானமுள்ள, உணர்வுள்ள தமிழர்கள் ஆகிய நாங்கள் இவ்வாறான துர்ச்செயல்களைக் கண்டு கண்ணீர் வடிப்பது எங்கள் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கண்கெட்டவர்களிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. கீரியும் பாம்புமாக இருந்தாலும் இந்தவோர் விடயத்தில் பேரினவாத சக்திகள் தங்களுக்கு இடையிலான ஒற்றுமையை காட்டாமல் இல்லை. இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதற்கு யார் பொறுப்பு?

இதற்கான முழுப்பொறுப்பினையும் இன்று வடக்கு-கிழக்கு பிரிவினைவாதத்தினை, எதுவுமே அறியாத மக்கள் மத்தியில் பரப்பி தனது சுயலாபத்திற்காக பிழையான வழியில் மக்களை வழிநடத்திச் செல்லும் கருணா அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.


கருணா அவர்களே!


நீங்கள் தமிழர்கள் ஆகிய எங்களது உரிமைக்காக போராடினீர்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளுகின்றோம். உங்களை மதிக்கின்றோம். ஆனால், இன்று உங்களுடைய இன்னோரன்ன பிழைகளை மறைப்பதற்காக கிழக்கு மாகாண மக்களைப் பலி கடாக்களாக்க நினைக்கின்றீர்களே. இது நியாயமா?

வடகிழக்கு பிரிவினையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு உங்களுடைய இத்தகைய செயல்பாடுகள் வலுச்சேர்க்கும் என்பதனை நீங்கள உணரவில்லையா?

சமாதானம் உருவாகி ஈழத்தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மைகளும் கிடைக்கப்பெறாத இந்த தருணத்தில், நீங்கள் இத்தகைய பிரதேசவாத சிந்தனையுடன் செயற்படுவதன் உள்நோக்கம் என்ன? ஒரே தலைவன் என்கின்ற கொள்கையின் கீழ் தமிழர்களுக்கான விடுதலை உரிமைப் போராட்டத்தில் தங்களை இணைத்து, தங்களுடைய இன்னுயிரை தலைவனின் ஒரே கொள்கைக்காக ஈந்த மாவீரர்களை இன்று நீங்கள் பிரதேசவாத அடிப்படையில் பிரித்துப்பேசுவது சரிதானா? தியாக உணர்வுடன் மடிந்த மாவீரர்களுடைய ஆத்மா களங்கம்உறாதா?

நீங்கள், ஒரு அந்நிய சக்திக்கு விலை போயிருக்கக்கூடும் என்கின்ற கருத்து இங்குள்ள சிங்களவர்களிடையேயும் நிலவுகின்றது. நீங்கள் இவ்வாறு விலை போய் இருந்தால் தங்களுக்கே வெற்றி என்கிற எண்ணத்துடன் அவர்கள் இன்புற்றிருக்கின்றார்கள். நீங்கள் அந்நிய சக்திக்கு விலைபோய் இருக்கக்கூடும் என்பதற்கு அவர்கள் கூறும் காரணம் உங்களுக்குச் சார்பாக உங்களை ஆதரித்து ஆர்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தும் எதுவுமே அறியாத பாமர மக்கள் செய்யும் அறியாத்தன செயல்களே!

இவ்வளவு காலமும் உலகில் உள்ள மானமுடைய தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தெய்வமாக புூஐpத்த எங்கள் தலைவரின் உருவப்படங்களை உங்களுடைய மறைமுக து}ண்டுதலினால் அல்லது கட்டாய வற்புறுத்தலின் அடிப்படையினால் தீயிட்டு கொளுத்துகின்றார்கள். இதற்கு மக்களுடைய தீயவழிச்செயல் மனமாற்றத்திற்கு நீங்கள் அந்நிய சக்திக்கு விலைபோய் மக்களை தீயவழியில் வழி நடத்துகின்றீர்களாம். உங்களுடைய அறிக்கைகளும், வெளிநாட்டு ஊடகங்கள், அரச ஊடகங்களுடனான தொடர்புகளும் சிங்கள மக்களுடைய கருத்துக்களை நிருபித்துள்ளன.

நீங்கள் மாத்தையா தேசத்துரோகி என்கின்றீர்கள் அப்படியென்றால் நீங்கள் யார்? இன்று கிழக்கு மாகாணத்திற்கென ஏதோ ஏதோவெல்லாம் முன்வைத்து இவற்றையெல்லாம் எங்கள் தலைவர் தரவில்லை பிரதேசபேதம் பார்க்கின்றார். எங்கள் மாகாணத்தை புறக்கணிக்கின்றார் என்று நீங்கள் மக்கள் மத்தியில் கூறி, எதுவுமே அறியாத பாமர மக்களை குழப்புகின்றீர்களே நீங்கள் இப்போது கிழக்கு மாகாணத்திற்கான மறுக்கப்பட்ட உரிமைகள் என்கின்ற பெயரில் தமிழ்த் தேசிய தலைமை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீங்கள் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்ட ஏன் தவறினீர்கள்? நீங்கள் இப்போது முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களிடையே ஒருசில யதார்த்த உண்மைகள் இருப்பதாக கருத்தில் எடுத்துக்கொள்ள முனைந்தாலும் நீங்கள் ஏன் இதற்காக பிரதேசவாதத்தை முன்வைத்தீர்கள்? இன்று மக்கள் மத்தியில் நீங்கள் உயர்வாக பேசப்படுவதற்கு உங்களுக்கு பக்கத்துணையாக நின்று களமாடிய கிழக்கு மாகாண தளபதிகள் கூட, உங்களுடைய இன்றைய பிரதேசவாத கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது தலைமைப்பீடத்தை நாடியுள்ளனர். இவ்வேளையில் நீங்கள் மாத்திரம் ஏதோ ஓர் உள்நோக்குடன் தனி மனிதனாக இதை ஏன் மக்கள் மத்தியில் திணித்து அவர்களை குழப்பியடிக்கின்றீர்கள்?

இன்றைய சமாதான சூழ்நிலையை உங்களுடைய இந்த பிரதேசவாத பிரசாரச் செயற்பாட்டினால் கேள்விக்குறியாக உள்ளது. உங்களுடைய இத்தகைய நயவஞ்சகச் செயலினால் மீண்டுமோர் யுத்தம் மூண்டு - எங்கள் தமிழ் தாயகத்தில் இரத்த ஆறு ஓடுமேயானால், இது நீங்கள் எங்கள் உயிர் தமிழ் இனத்திற்கு செய்த கொடிய கோரத்துரோகம் ஆகும். இதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். இறுதியாக உங்களிடம் ஒன்று கூறுகின்றோம் எங்கள் தமிழ் இனத்தை அந்நியனுக்கு விலைபேசி விற்றுவிடலாம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.


கிழக்கின் அன்பார்ந்த புத்திஐPவிகளே!


எதையுமே ஆராய்ந்து உணர்ந்து, தவறானவற்றை சுட்டிக்காட்டி ஒரு சமூகத்தை நல்வழியில் வழிநடத்தும் பாரிய பொறுப்பு உங்களையே சார்ந்தது. இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் கிழக்கு வாழ் மக்கள் உண்மையான யதார்த்தத்தை புரியவைத்து அவர்களை விழிப்படையச் செய்ய வேண்டியது உங்கள் ஒவ்வொருவருடைய தலையான கடமையாகும். இன்று நீங்கள் உயிருக்குப் பயந்து வாயடைத்து மௌனிகளாக இருப்பது சரிதானா? உரிமைப் போராட்டத்தின் ஆழமான வேரோடிய நிதர்சன உண்மைகளை பாமர மக்களுக்கு உணரச் செய்யுங்கள்.

ஆகவே புத்திஐPவிகளே! உங்களிடம் இரந்து கேட்கின்றோம். இச்சூழ்நிலை சுமூகமாக வேண்டுமேயானால் நீங்கள், உங்களுடைய மக்களுக்கு உண்மை நிலவரத்தை புரியவைத்து நீதி, நியாய யதார்த்த உண்மையின் பக்கம் மக்களை வழிநடத்துங்கள்.


புலம்பெயர்ந்த அன்புறவுகளே!


உங்கள் தேசப்பற்றையும், நாட்டுணர்வையும் சிரம்தாழ்த்தி ஆராதிக்கின்றோம். இன்றைய ஈழ நிலவரத்தின் யதார்த்த உண்மை உங்களிற்கு நிதர்சனமாகும் என்று நம்புகின்றோம். பிரதேசவாதத்தின் அடிப்படையில் இங்கு நிலவுகின்ற பிரச்சனையின் காரணமாக நீங்கள் குழப்பம் அடைந்து விடாதீர்கள்.

எங்கள் அன்பார்ந்த புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே! இங்கு நிலவுகின்ற கபடத்தனத்துடன் கூடிய பொய்யான பிரதேசவாத அடிப்படையற்ற கருத்துக்களுக்குள் நீங்களும் உள்வாங்கப்படாமல் எம்தேசத்தின் விடிவிற்காக போராடும் எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களையே என்றும்போல் என்றென்றும் நேசிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம். இங்கு நிலவுகின்ற உண்மையான நிலவரத்தை இங்குள்ள எங்கள் உறவுகள் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.


பொறுப்புவாய்ந்த அரசசார்பான தமிழ் ஊடகங்களுக்கு


அன்பானவர்களே! தயவுசெய்து இன்றைய நிலைமையில் உங்களுடைய பொறுப்பற்ற செயல்களினால் மக்கள் மத்தியில் வீணான பிரச்சினைகளை வளர்த்துவிட ஏதுவாக இராதீர்கள். உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்த்து பிரச்சினைகளை மேலும் மேலும் வளர்க்கும் சக்தியாகவில்லாமல், மக்களுக்கு உண்மைகளை புரியவைத்து மக்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் சக்தியாக செயற்படுங்கள்.


அன்பானவர்களே!


நாங்கள் இந்த சிறைக்கூண்டுக்குள் இருந்து இவ்வாறு எழுதுவதனால் நாங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்று பிழையான கண்ணோட்டத்துடன் தயவுசெய்து எங்களை நோக்க வேண்டாம். இன்று எமது தமிழ் தாயகத்தில் உருவாகி இருக்கின்ற இந்த பிரச்சனையினால் மிகவும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் நாங்கள். கைது செய்யப்பட்டு இவ்வளவு காலமும் இங்குள்ள அதிகாரிகளிடம் ஒற்றுமையான சமூகத்தை சார்ந்தவர்கள் என்கின்ற மதிப்பும், மரியாதையும் எங்களுக்கு இருந்தனர். ஆனால், இன்று இங்குள்ள அதிகாரிகள் எங்களை மிகவும் மிகவும் கேவலமாக உற்றுநோக்குகின்றார்கள்.

இப்போதைய குழறுபடிகளினால் எங்களுக்கு எப்போதுமே விடுதலை கிடைக்கவே போவதில்லை என எங்களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றார்கள். இத்தகைய உளத்தாக்கங்களின் காரணமாகவேதான் இந்த மடலை நாங்கள் உங்கள் எல்லோருக்கும் எழுதுகின்றோம்.

எங்களுடைய மன ஆதங்க உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்படுவீர்கள் என நம்பி இருக்கின்றோம். இன்றைய காலகட்டத்திலும் எங்கள் தமிழ் இனத்திற்கு விடிவு கிடைக்காவிடின் இனி எப்போதுமே கிடைக்கப்போவது இல்லை. தந்தை செல்வா அவர்கள் தமிழ் இனத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று கூறியது உண்மையாகவே போய்விடும். அந்நிய சக்திக்கு விலை போனவர்களுடைய கருத்துக்களிற்கு செவிமடுக்காமல் உண்மையின் பக்கமே உங்கள் எல்லோரது பயணமும் இருக்கட்டும்.


இப்படிக்கு,
தமிழ் அரசியல் கைதிகள், களுத்துறை சிறைச்சாலை.


1. பரணிதரன் (2194) 2. கே.றொபேட் (4825) 3. ஆர்.மகேசன் (3426) 4. எஸ்.சிவகுமார் (27104) 5. வி.வரதாரஐன் (5747


நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (21.03.04) & தமிழ்நாதம்
Reply
#75
<b>கருணா மீது மட்டு-அம்பாறை மாவட்ட மக்கள் அதிருப்தி</b>


( ஐ.பி.சி தமிழ் ஞாயிற்றுக்கிழமை, 21 மார்ச் 2004, 7:19 ஈழம் )

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள முன்னாள் தளபதி கருணா மீது மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்கள் படிப்படியாக அதிருப்தியடைந்து வருதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை மீது பல பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதனை மக்கள் நம்புமாறு செய்வதற்கு முயன்று வந்த கருணாவும், அவரது ஆதரவாளர்களும் இப்போது மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்து வருவதையும் அறியமுடிகிறது.

தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளான வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசம், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் ஆகிய கோரிக்கைகளுக்கு எதிராக கருணாவின் ஆதரவாளர்கள் வெளியிட்டு வந்த கருத்துக்கள் காரணமாக, கருணாவின் உண்மைத் தோற்றத்தை மட்டக்களப்பு வாழ் மக்கள் அறிந்து கொண்டுவிட்டதாகவும் மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனது தவறுகளை மறைப்பதற்காக கருணா ஆதரவாளர்களால் கிளப்பிவிடப்பட்ட பிரதேச வாதமும் தற்போது மழுங்கிவிட்டதாகவும் அறியக் கிடைத்துள்ளது.தியாக தீபம் அன்னை புூபதியின் நினைவாக நடாத்தப்பட்ட எழுச்சிப் பேரணியை, திடிரென கருணா ஆதரவுப் பேரணியாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான கரிகாலன், ரமேஷ், பொட்டம்மான் ஆகியோருக்கு எதிரான போராட்டமாகவும் மாற்றுவதற்கு கருணாவின் ஆதரவாளர்கள் முயற்சிகள் எடுத்தமையாலும், பேரணியில் கலந்துகொண்ட மக்கள் விசனம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்னை புூபதியின் நினைவாக ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் பேரணியை, கருணா ஆதரவுப் பேரணியாக லண்டன் பி.பி.சி. உட்பட பல உள்ளுர், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : புதினம்.கொம்
Reply
#76
<b>குழப்பத்தில் கருணா குழு</b>


துரோகத்தின் உச்சியில் நின்று சாதனை புரிந்திருக்கும் கருணாவும் அவரது கும்பலும் இப்போது ஆப்பிழுத்த குரங்குகளாக நின்று தவிக்கிறார்கள் என்பது தெளிவாகி வருகிறது. ஈழத்தமிழ் மக்களால் துரோகி என்று வெறுத்தொதுக்கப்பட்டது மட்டுமல்லாமல்இ நம்பியிருந்த பல தரப்புகளினாலும் கைவிடப்பட்ட நிலையில் கருணாவும் அவரது அடியாள்களும்இ என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் நாளொரு பேட்டியும் பொழுதொரு குழுப்பமுமாக நின்று திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.


கருணாவின் காட்டிக் கொடுப்புக்குக் காரணமாக அமைந்த அடிப்படை அம்சங்கள் அனைத்தும் உள்ளுரிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் தமிழர்களுக்கு அம்பலமாகிவிட்டதால் கருணா கும்பலை ஈழத்தமிழ்ச் சமுதாயம் சரியாக அடையாளம் கண்டு ஒதுக்கியது மட்டுமல்லஇ வெறுக்கவும் தொடங்கிவிட்டது. ஈழத்தமிழர்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தமிழ் ஊடகங்களும் கருணாவின் நயவஞ்சகச் செயலுக்குத் துணைபோக மறுத்ததுமல்லாமல்இ அவரின் உண்மைச் சொரூபத்தைப் புட்டுப்புட்டுக்காட்டவும் தொடங்கிவிட்டன. அதனால் ஏற்பட்ட கோபத்தினால் மட்டக்களப்புஇ அம்பாறைக்கு விநியோகத்துக்குப் போகும் தமிழ்ப் பத்திரிகைகளை - ஆயுதத்தைக்காட்டி மிரட்டி - விநியோகிக்க விடாமல் தடுத்திருக்கின்றது அக்கும்பல்.


பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம். அதுபோன்று மட்டக்களப்புஇ அம்பாறைக்குச் செல்லும் - உண்மையை விளம்பும் - பத்திரிகைகளை விநியோகிக்கவிடாமல் தடை செய்துவிட்டால் உண்மையை மூடிமறைத்துவிடலாம் என்று கருணா கூட்டம் கனவு காண்கின்றது. உண்மையை - யதார்த்தத்தை - புரிந்துகொள்ளாத இதே போக்கில்தான் - கிழக்குத் தமிழர்களையும் உண்மையை மறைத்துஇ பிழையான வழியில் கொண்டு நடத்தலாம் - என்ற பகற்கனவில்தான் தமக்குக் கிடைத்த கிழக்குத் தளபதி என்ற பதவியைத் துரோகத்தனத்துக்கும் நயவஞ்சகத்துக்கும் வாய்ப்பான போக்கில் பயன்படுத்த முயன்றிருக்கின்றார் கருணா.
ஆள்வைத்து பத்திரிகைகளைத் தனது பிரதேசத்துக்கு வரவிடாமல் தடுத்துஇ மிரட்டிஇ பத்திரிகையாளர்களை எதிர்த்த கருணா கூட்டம்இ தமக்கும் அந்தச் செயலுக்கும் தொடர்பேதுமில்லை என்று இப்போது வெளியுலகத்துக்கு கயிறு விடுகின்றது.


"தமிழீழம் பகற்கனவுஇ தமிழர் தாயகம் என்ற பேச்சுக்கு இடமில்லைஇ பிரபாகரன் தமிழரின் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார்" என்று கடந்த இருவாரங்களாக இந்திய மற்றும் தென்னிலங்கைப் பேரினவாதிகளின் ஊடகங்கள் மூலம் பிதற்றிய கருணாஇ கிழக்குத் தமிழ் மக்களுக்கு வேறு வேடம் போட முயல்கிறார். நேற்றுமுன்தினம் அன்னை பூபதியின் நினைவு நிகழ்வில் பேசிய கருணாவின் எடுபிடியான விசுஇ நாங்கள் தமிழீழப்போராட்டத்துக்குத் துரோகம் செய்யமாட்டோம் - என்கிறார்.


மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை அழைத்து "தமிழ்த் தாயகம் குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது பேசக்கூடாதுஇ மட்டக்களப்புஇ அம்பாறை அபிவிருத்தி குறித்து மட்டுமே பேசவேண்டும்" - என்றும் மிரட்டிய கருணா குழுஇ அந்தப்போக்கு கிழக்கு மக்களால் அடியோடு நிராகரிக்கப்படும் என்பது புரியத் தொடங்கியதும்இ இப்போதுஇ அப்படி அறிவுறுத்தல் ஏதும் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்களிடம்இ தெரிவிக்கப்படவில்லை என்று பச்சைப் பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றது. தனித்து இயங்குவது என்ற துரோக நடவடிக்கைக்குக் கருணா தயாரானதும் தமக்கு ஆதரவு தேடுவதற்காகத் தென்னிலங்கையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கஇ இலங்கை அரசு போன்ற பல தரப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தத் துடியாய்த் துடித்தார். அதற்காகப் பல வழிகளாலும் முயன்றார். அவர்களோடு இணைந்து செயற்படுவதன் மூலம் தனது துரோகத்தன நடவடிக்கைகளை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று அவர் கனவு கண்டார்.


அரசுடனும் ஜனாதிபதியுடனும் தொடர்புகொள்ள அவர் பட்டபாட்டை செய்தி ஊடகங்கள் அப்போதே அம்பலப்படுத்தின. ஒரு தமிழினத் துரோகியுடன் சக வாசம் வைத்துஇ மோசமான விளைவுகளை எதிர்கொள்ள அத்தரப்புக்கள் விரும்பவில்லை என்ற செய்தியும் அப்போதே வெளியாகின. இப்போது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே அதைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தியதும் வழமை போல முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கமுயலும் தமது அணியின் முயற்சியை அவர் அவிட்டு விட்டிருக்கின்றார். ஜனாதிபதியுடன் தொடர்புகொள்ளத் தாங்கள் முயற்சியே எடுக்கவில்லை என்கிறார் கருணா கும்பலின் பேச்சாளர் வரதர்.


இப்படித் தங்களின் ஒவ்வொரு முயற்சியும் தோற்றுப்போய்இ உண்மைகள் அம்பலமாகத் தொடங்கியதும்இ என்ன செய்கின்றோம்இ என்ன கூறுகின்றோம் என்பது புரியாமல் குழப்பமான பேட்டிகளையும் தகவல்களையும் அளிப்பதோடுஇ குழப்பமான செயல்களையும் புரியத் தலைப்பட்டுள்ளது கருணா கூட்டம். மட்டு.இ அம்பாறை தளபதியாக இருந்துகொண்டு கருணா புரிந்த குற்றங்களை மூடி மறைப்பதற்காக இன விடுதலைப் போராட்டத்தையே விலைபேசி ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குளறுபடிகள் கருணா கும்பலை இன்று குழப்பத்தின் உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றது என்பதே உண்மை.

நன்றி: உதயன் (21-03-2004)
Reply
#77
அவுஸ்திரேலியா.. கனடா.. பிரித்தானியா.. எண்டு எல்லாரும் வெளிநாடுகளிலையிருந்துதான் கண்டனம் தெரிவிக்கினம்.. மட்டக்களப்பிலையிருந்து எழுதிறதா வன்னியிலையிருந்து வதந்தி பரப்பிறார் ஒருத்தர்.. மட்டக்களப்புக்குப்போய் செய்தி சேகரிச்சு எழுதிறவன் எல்லாரும் பொய்சொல்லுறாங்கள் எண்டு அதுக்குமேலை பிரச்சாரம்.. இந்தளவுக்கும் அம்மான் முதலிலை சொன்ன கேட்டதுகள் நியாயமாத்தான் எனக்குப் படுகிது.. இப்ப பதுமனையும் காணேல்லை.. இனி யாழ்ப்பாணத்தான் யாராவது இப்பிடி கேள்விகேட்டால்த்தான் கொஞ்சமெண்டாலும் உறைக்குமாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#78
Mathivathanan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>இருந்த வடலிக்குள்ளை நீங்கள் அவங்களை கொண்டுவந்து இருத்திப்போட்டு அவங்கள் புடுங்கி எறியுறாங்கள் எண்டால் தகுமோ..?

எங்கடை நிலம் எங்களுக்குச் சொந்தமான நிலம் என்னண்டு அவங்களுக்குப் போனது.. நீங்கள் வித்துப்போட்டு இப்ப கதையளக்கிறியள்.. என்ன..?</span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அட்ரா சக்கையெண்டானாம்
காட்டுக் கிளாக்காயும் கண்கெட்ட ஓணாணும் கோர்த்துக் குலாவினது என்பதற்கு அர்த்தம் படிப்பித்ததே நீங்கள் அவர்களுடன் கூடிச் செய்த வேலைகள் தான் இன்று நாங்கள் விற்ற கதை சொல்கிறீர்கள்
என்ன தாத்தா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றால் இல்லை என்று ஆகிவிடுமா

குந்தியிருக்கும் நிலமும் உன்னுடையதல்ல எனது என்று அவர்கள் சொல்ல அடுத்தவேளைக் கஞ்சிக்காய் ஆமாம் போட்ட நீங்கள் விற்றது நாங்கள் என்று சொல்கிறீர்களா?
வடலிக்குள் வர விட்டது நீங்கள் வந்தவ்ன் கள்ளைக் குடித்துவிட்டு பனையோடு காணியையும் பறித்தபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது நீங்கள்

ஒன்றா இருந்த காணிகளை கூறு போட்டு விற்றது நீங்கள்
செய்வதெல்லாவற்றையும் செய்து போட்டு பறி கொடுத்ததை மீட்க நாங்கள் ஆயுதம் தூக்கினால் குய்யோ முறையோ என்று கத்துகிறீர்கள்

காணி வேணுமானால் சற்றே விலகியிரும் பிள்ளாய் என்று நந்தனார் பாணியில் சொல்கிறோம்

அடித்துப் பறித்தோ பேசியோ காணியை நாங்கள் வாங்குகின்றோம் அன்று வாருங்கள் என்ரை காணி என்று அப்பு ஆச்சி உறவெல்லாம் சொல்லி அன்று உமக்குச் சேரவேண்டியது நிச்சயம் கிடைக்கும்.
\" \"
Reply
#79
கொண்டுவற்து இருத்தினது நீங்கள்.. இதைத்தான் இப்ப 3 வருஷமா விளங்கப்படுத்திறன்.. ஆயுதம் தூக்கித்தான் கொண்டுவந்து இருத்தினது.. இந்தியனையும் நீங்கள்தான் கொண்டுவந்து இருத்தினது.. நீங்களே எல்லாத்தையும் கோப்புப்பண்ணிப் போட்டுக்கிடக்கு.. அவங்களா வந்து இருக்கேல்லை.. எல்லாம் ஆயுதம் தூக்கி நீங்கள் கொண்டுவந்து இருத்தினது..
நீங்கள் ஆயுதத்தை போட்டிட்டு மக்களுக்குமுன்னாலை நில்லுங்கோ பாப்பம்.. அப்பத் தெரியும் யாருடைய காணி யார் என்னசெய்ததெண்டு அதுகளே உங்களுக்கு படிப்பிக்குங்கள் ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#80
<img src='http://www.thinakural.com/2004/March/21%20Sunday/front.gif' border='0' alt='user posted image'>


விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் தோன்றியிருக்கும் நெருக்கடிý குறித்து தென்னிலங்கையின் பிரதான அரசியல் முகாம்கள் ஆரம்பத்தில் 'நிதானமான" போக்கைக் கடைப்பிடிýத்திருந்த போதிலும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வியாழக்கிழமை பிரிட்டிýர்; ஒலிபரப்புக் கூýட்டுத்தாபனத்தின் (பி.பி.சி.) கொழும்புச் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசனுக்கு அளித்திருக்கும் பேட்டிýயில் தெரிவித்திருக்கும் சில கருத்துகள் அந்த நெருக்கடிýயை தங்களுக்குச் சாதகமான முறையில் 'பயன்படுத்துவதற்கான" முனைப்பை வெளிக்காட்ட அவரது முகாம் ஆரம்பித்திருப்பதை உணர்த்துவதாக இருக்கின்றன.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிýருக்கும் முன்னாள் மட்டக்களப்பு- அம்பாறை விசேட தளபதி கருணா, தன்னுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அதற்குப் பதிலளிக்க தான் மறுத்துவிட்டதாகவும் பி.பி.சி. பேட்டிýயில் தெரிவித்திருந்த திருமதி குமாரதுங்க தேர்தலுக்குப் பிறகு அரசாங்கம் விடுதலைப் புலிகளின் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட" தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் விவகாரங்களைக் கையாள வேண்டிýயிருக்கும். ஆனால், கருணாவுடன் விவகாரங்களைக் கையாளுவதற்கான வழிவகைகளையும் அரசாங்கம் கண்டறிய வேண்டிýயேயிருக்கும் என்றும் குறிப்பிட்டிýருக்கிறார்.

கருணாவுடனான தகராறை அடுத்து விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இரு வாரங்களுக்கு முன்னர் வன்னி கிளிநொச்சியில் நடத்திய விசேட செய்தியாளர்கள் மாநாட்டிýல் அவ்வியக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கருணா இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவித்திருந்தாலும், வன்னியிலிருந்து விடுதலைப் புலிகள் தரப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர்வதற்கு தாமதிப்பதை கருணாவின் 'பலமாக" திருமதி குமாரதுங்கவின் முகாம் நினைப்பது போல் தோன்றுகிறது. இதன் பிரதிபலிப்பே திருமதி குமாரதுங்க தனது பேட்டிýயில், அரசாங்கம் கருணாவுடன் விவகாரங்களைக் கையாளவேண்டிýய வழிவகைகளையும் கண்டறிய வேண்டிýயிருக்கும் என்று தெரிவித்த கூýற்று என, கருதுவதற்குக் காரணம் இருக்கிறது.

கருணாவின் செயற்பாடுகளினால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் தோன்றியிருக்கும் நெருக்கடிýக்கு இரத்தம் சிந்தாமல் தீர்வைக் காண்பதில் பற்றுறுதி கொண்டிýருப்பதாக அதன் தலைமைத்துவம் திரும்பத் திரும்ப கூýறி வருகின்றபோதிலும் இயக்கத்திற்குள் பெரும் மோதலை இந்த நெருக்கடிý உருவாக்கக் கூýடும் என்று தான் நம்புவதாகவும், இறுதியில் விடுதலைப் புலிகள் பலவீனமடைவர் என்றும் திருமதி குமாரதுங்க கூýறியிருக்கிறார்.

பலம் பொருந்திய நிலையில் உள்ள விடுதலைப் புலிகளுடன் அல்ல பலவீனமான நிலையில் இருக்கக் கூýடிýய ஒரு விடுதலைப் புலிகளுடன் தான் தங்களுக்கு அனுகூýலமான முறையில் 'சமாதானப் பேச்சுவார்த்தைகளை" முன்னெடுக்கக் கூýடிýயதாக இருக்கும் என்ற தென்னிலங்கை சிங்கள அரசியல் வர்க்கத்தினர் மத்தியிலான 'பாரம்பரிய நம்பிக்கையை" அடிýப்படையாகக் கொண்டு நோக்குகையில் திருமதி குமாரதுங்கவின் இக்கருத்துகளும், எதிர்பார்ப்புகளும் ஒன்றும் புதிரானவையல்ல என்று சில அரசியல் அவதானிகள் கூýறுகின்றனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் மத்தியில் தோன்றியிருக்கும் நெருக்கடிýயை 'கட்சியரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக" கொழும்பு அரசியல் முகாம்கள் பயன்படுத்த நினைத்து மேற்கொள்ளக்கூýடிýய எந்தச் சாகசமுமே நெருக்கடிýயை மேலும் தீவிரமடையச் செய்யும் என்று பிரபல அரசியல் அவதானியும், கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை தலைவருமான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட, எச்சரித்திருப்பதை இங்கு சுட்டிýக்காட்டுவது பொருத்தமானது.

இது இவ்வாறிருக்க கருணாவின் விவகாரத்தின் பின்னணியில் இருக்கக் கூýடிýய வெளிநாட்டுச் சக்திகள் குறித்து அரசியல் அவதானிகள் எனப்படுவோர் பலவித சந்தேகங்களைக் கிளப்பியிருந்தாலும் தங்களுக்கு ஆபத்தில்லாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்த வெளிச் சக்திகளை வெளிப்படையாக இனம் காட்டுவதற்கு அவர்கள் தயாரில்லை என்றாலும், பின்னணியில் இருக்கக் கூýடிýய வெளிச் சக்திகளில் சிலவற்றை விடுதலைப் புலிகள் அண்மைய சில சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே கூýறத் தயங்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இது இவ்வாறிருக்க கருணா விவகாரத்தைப் பயன்படுத்த முயற்சிக்கக்கூýடிýய தென்னிலங்கை அரசியல் சக்திகள், மீண்டும் ஒரு போர் மூýலம் விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான எண்ணமொன்றைக் கொண்டிýருப்பதாகவும் பேசப்படுகிறது.

கருணா விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டு நிற்பதாலும், அவருக்குப் பின்னால் கணிசமான 'போராளிகள்" தற்போதைய நிலையில் இருப்பதாலும், இலங்கைப் படைகளுக்கு சாதகமானதொரு நிலையைக் கிழக்கில் ஏற்படுத்திக் கொண்டு வடக்கு முனையில் மாத்திரம் போரை வன்னி நோக்கித் திசை திருப்பி, விடுதலைப்புலிகளை ஒடுக்க முடிýயும் என்ற இந்த தென்னிலங்கைச் சக்திகளுக்கு ஒரு வெளிநாட்டுத் தரப்பினால் ஆலோசனை கூýறப்பட்டுள்ளதாக, தன்னை இனங்காட்டிýக் கொள்ளவேண்டாமெனக் கேட்டுக்கொண்ட மேற்குலக இராஜதந்திர வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

கிழக்கு முனையை அமைதியாக வைத்திருப்பதற்கு கருணாவைப் பயன்படுத்துவதில் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கும் என்று நம்புவதற்கு காரணமெதுவுமில்லை.

நன்றி : தினக்குரல். (21.03.2004)
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)