Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐந்தறிவுகள்...!
#21
அதெப்படி குதிரைக்குக் கட்டலாம் அதற்கும் வாழ்வுரிமை இருக்கிறது தானே?
கட்டுபவனுக்கும் கட்டப் படுபவனுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறதோ அதுதான் குதிரைக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்
\" \"
Reply
#22
குதிரைக்கு வாழ்வுரிமை நிச்சயமாக உண்டு இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நீங்க சொன்ன மாதிரியே கட்டுபவன் நோக்கம் நல்லதாக இருந்தால் குதிரைக்கு கட்டலாம் இல்லை கட்டாமலும் விடலாம்.
ஆனால் பகுத்தறிவு உள்ள மனுசனுக்கு கட்ட கூடாது. அவன் சுயமாகவே முடிவெடுக்க வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#23
சரி குதிரைக்குக் கட்டலாம் ஏனென்றால் அதற்குப் பகுத்தறிவு இல்லை ஆனால் மட்டை கட்டுகிறார்கள் எனத் தெரிந்து கொண்டே ஒரு கூட்டம் சும்மா இருக்கிறது என்றால் அவர்கள் பார்வைப்படி அதில் நியாயம் இருக்கின்றது என்று அர்த்தமா இல்லையா?
\" \"
Reply
#24
[quote=Eelavan]சரி குதிரைக்குக் கட்டலாம் ஏனென்றால் அதற்குப் பகுத்தறிவு இல்லை ஆனால் <b>மட்டை கட்டுகிறார்கள் எனத் தெரிந்து கொண்டே ஒரு கூட்டம் சும்மா இருக்கிறது என்றால் அவர்கள் பார்வைப்படி அதில் நியாயம் இருக்கின்றது என்று அர்த்தமா இல்லையா?</b>

அதுல பலவிதமான சாத்தியகூறு இருக்கு ஈழவன்.

1) நீங்க சொன்னமாதிரியே அதில நியாயம் இருக்கின்றதுன்னு சும்மா இருக்கலாம்.

2) நியாய/அநியாயம் தெரிய, மாற்று கருத்துகளை அறிய சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கலாம்

3) வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டிருக்கலாம். (அழுத்தம் காரணமாக)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#25
Eelavan Wrote:சரி குதிரைக்குக் கட்டலாம் ஏனென்றால் அதற்குப் பகுத்தறிவு இல்லை ஆனால் மட்டை கட்டுகிறார்கள் எனத் தெரிந்து கொண்டே ஒரு கூட்டம் சும்மா இருக்கிறது என்றால் அவர்கள் பார்வைப்படி அதில் நியாயம் இருக்கின்றது என்று அர்த்தமா இல்லையா?
சுட்டுப்போடுவாங்கள் எண்ட பயம் தான் ஒரு கூட்டம் சும்மா இருப்பதற்குக் காரணம்
Idea
Truth 'll prevail
Reply
#26
சுட்டுப் போடுவாங்கள் என்று பயந்து சும்மா இருக்க இது என்ன நாயா பூனையா தாத்தா? மனிதன் தாத்தா
நீங்கள் சொன்ன சுடுபவர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா? இவர்கள் மத்தியில் பிறந்து இவர்களுடன் வளர்ந்தவர்கள்,இவர்களால் வளர்க்கப் பட்டவர்கள்
5 பேர் சுடுவார்கள் என்ற பயத்தில் 50 பேர் வாளாவிருக்கின்றனர் என்றால் அவர்களுக்கு பகுத்தறிவு எங்கே போனது
எனவே இப்படிப்பட்டவர்களுக்கு மட்டை கட்டுவது சரி என்று நீங்களே சொல்கிறீர்கள் பிறகு ஏன் மட்டை கட்டுவது பற்றி கவலைப் படுகிறீர்கள்

உங்கள் கருத்துப்படி மட்டை கட்டுபவர் நோக்கம் சரி என்றால் மட்டை கட்டுவது சரி அப்படித்தானே B.B.C ஒருவர் இருவர் அல்ல லட்சக்கணக்கானவர்கள் இந்தத் தேசிய மட்டையை கட்டிக் கொண்டு ஒரு நேர்கோட்டில் போக முயற்சிக்கின்றனர் என்றால் அதில் தவறு இல்லை என்கிறீர் அப்படித்தானே
\" \"
Reply
#27
எதுக்கும் ஆயுதத்தை எறிஞ்சுபோட்டு உந்த மட்டைக்கதை கதையுங்கோ.. அப்பத்தான் புரியும்.. Idea
Truth 'll prevail
Reply
#28
நான் வைத்திருக்கும் ஆயுதம் எழுதுகோல் அதனை எறிந்தால் "மட்டைக்கதை" கதைக்கமுடியாது "மடக்கதை" தான் கதைக்க முடியும்
நீங்கள் சொல்பவர்கள் ஆயுதத்தை எறிந்தால் கட்டிய மட்டையை மட்டுமல்ல கட்டும் துணியையும் உருவிடுவார் உங்கள் ஆட்கள்
\" \"
Reply
#29
துணி(வு) இல்லையா அவர்களிடம்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#30
Eelavan Wrote:உங்கள் கருத்துப்படி மட்டை கட்டுபவர் நோக்கம் சரி என்றால் மட்டை கட்டுவது சரி அப்படித்தானே B.B.C ஒருவர் இருவர் அல்ல லட்சக்கணக்கானவர்கள் இந்தத் தேசிய மட்டையை கட்டிக் கொண்டு ஒரு நேர்கோட்டில் போக முயற்சிக்கின்றனர் என்றால் அதில் தவறு இல்லை என்கிறீர் அப்படித்தானே

BBC Wrote:பகுத்தறிவு உள்ள மனுசனுக்கு கட்ட கூடாது. அவன் சுயமாகவே முடிவெடுக்க வேண்டும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#31
நண்பரே இறைவன் படைப்பில் உயிர்களெல்லாம் சமம் அப்படியிருக்க குதிரைக்கு மட்டையைக் கட்டும் உரிமையை உமக்குத் தந்தது எது உமது ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு

வளர்ந்த மனிதனுக்கும் ஆறறிவுதான் வளரும் குழந்தைக்கும் ஆறறிவுதான் அப்படியிருக்க குழந்தையைப் பெற்றோர் மட்டை கட்டித்தான் வளர்க்கின்றனர் இங்கு நான் மட்டை கட்டுவது என்பது வெறுமனே மட்டையை அல்லது மூக்கணாங்கயிற்றைக் கட்டுவது இல்லை அவர்களுக்குத் தேவையானது அவர்கள் செல்லவேண்டிய பாதை எல்லாவற்றையும் தீர்மானிக்கும் உரிமையை பெற்றோருக்குக் கொடுத்தது யார் உறவு அதனால் வந்த உரிமை இவை இரண்டுமே பெற்றோரின் இந்தச்செயலை நியாயப்படுத்துகின்றன

வெறுமனே கட்டிவிட்டு அடித்து விரட்டுவதற்கு தேசியம் என்பது மட்டையில்லை அதனைத் தான் நான் சொன்னேன் அது ஒரு உணர்வு பாசம்,நேசம் போன்று அதுவும் ஒரு உணர்வு அந்த உணர்வு மங்கிவிடும் நேரத்தில் அல்லது அதற்குப் பாதகம் வரும் நேரத்தில் தாயனவள் தன் குழந்தையை அடித்து வளர்ப்பது போல் எம்மத்தியில் பிறந்து எம்மோடு வளர்ந்த எம்மவர்கள் அவ்வுணர்வை தூண்ட முயல்கின்றனர் தேசியம் தேசிய இனம் அழிந்துவிடாது காட்க முயற்சிக்கின்றனர் இது நிறையப் பேருக்குப் புரியும் ஒத்துக்கொள்வார்கள் சிலர் குழந்தைகள் போல சண்டித்தனம் செய்வர் அது அது பகுத்தறிவை பயன் படுத்தும் அளவைப் பொறுத்து

இவர்கள் தான் தாத்தா சொல்லும் மட்டை கட்டுபவர்கள் அது விடுதலைப்புலிகளாவும் இருக்கலாம் வேறு எந்த இயக்கமாகவும் இருக்கலாம் அந்தக் கருத்திலேயே நோக்கம் நல்லதெனில் மனிதருக்கும் மட்டை கட்டலாம் என்று சொன்னேன்

இல்லையில்லை குதிரைக்குக் கட்டலாம் மனிதருக்குக் கட்டமுடியாது என்று திரும்பவும் சொன்னால் எனது பதில் திரும்பவும் சொல்கிறேன்
குதிரைக்கு மட்டுமல்ல எந்தவொரு உயிரினத்திற்கும் கட்டமுடியாது
\" \"
Reply
#32
துப்பாக்கியை.. ஆயுதத்தை எறிஞ்சால் தெரியும் யாருக்கு யார் எதை கட்டுவதென்பது..
Idea Arrow Arrow
Truth 'll prevail
Reply
#33
பூனைக்கு யார் மணி கட்டுவதென்றா கேட்கிறீர்கள்?
அதைத்தானே சொன்னேன் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகுமென்று காத்திருக்கிறியளாக்கும்
\" \"
Reply
#34
Eelavan Wrote:அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகுமென்று காத்திருக்கிறியளாக்கும்

இப்போதுள்ள நிலைமை அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்ற நிலைமை தான். எல்லாம் அதிகாரப்போட்டி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)