Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிதாக குடியேறுதல்
#21
ஓ...லண்டனிலை ..மற்ற இடங்களை விட....எல்லாபாட்டுக்கும் வளைக்கலாம்....என்பது...உண்மைதான்....அதுவும்....எவ்வளவு நாளைக்கெண்டதுதான் பிரச்சனை
Reply
#22
அப்படி இல்லை. எந்த நாட்டில் இருந்து வந்தாலும், ஆங்கிலப்பாசை என்றபடியால் இலகுவாக தங்கள் வாழ்க்கையை இசைவாக்க படுத்திக்கொள்ள கூடியதாக இருக்கிறது.


இதே ஒருவர் டென்மார்க் அல்லது நோர்வே க்கு சென்று இலகுவாக வாழ்க்கையை அமைத்து விடமுடியாது
Reply
#23
என்னப்பா சொந்தமா வீடு வேண்டி வைச்சிருக்கிறதுக்கு சுவிசிலை இத்தனை கட்டுப்பாடுகளா?

எங்கடை ஜனநாயகவாதிகள் மெத்தப் படிச்ச அறிவாளிகள் HRW இக்கு சாட்சியம் குடுக்கலாமே? பயங்கரவாத பட்டியலிலை சுவிஸ் அரசாங்கத்தையும் சேக்கிறதுக்கு அறிவுரை சொல்லாமே?

கனடாவிலை ஒருத்தர் ஊடகத்துக்குச் சொன்னாராம் தமிழீழ கணிச் சட்டம் "draconian" போன்றது என்று. மற்றநாடுகளில் சட்டங்களை மதித்து வாழுகிறார்கள். ஆனால் எங்கள் பிரதேசங்களில் வந்தவுடன் சுயநலத்தோடு மட்டும் தான் யோசிக்கினம்.
Reply
#24
kurukaalapoovan Wrote:என்னப்பா சொந்தமா வீடு வேண்டி வைச்சிருக்கிறதுக்கு சுவிசிலை இத்தனை கட்டுப்பாடுகளா?

[size=15]மேலே நான் எழுதியதில் ஒரு சிறு திருத்தம்.

நான் தெளிவாக எழுதாததால் அது தப்பான அர்த்தத்தை தந்துவிடும் என்றே கருதுகிறேன்.

இங்கே (சுவிஸில்) வீடு வாங்குவோர்களில் பெரும்பாலோரால் முழுப்பணத்தையும் ஒரே முறையில் செலுத்தக் கூடிய நிலையில் இல்லை.
எனவே
அவர்கள் தமது பென்சன்(ஓய்வூதிய) பணத்தையும்
வங்கிக் கடனையும் இணைந்து பெற்றே வீடுகளை வாங்குகிறார்கள்.

அப்படி வாங்கும் வீடுகளை அவர்கள் <b>வாடகைக்கு விட்டு</b>
வங்கிகளுக்கு செலுத்தும் கடன் தொகையை கட்டாமல் விட்டால்
வங்கிகளால் அந்த வீடுகளை பறிமுதல் செய்ய முடியாது.

காரணம் வீடுகளில் வாடகைக்கு தங்கியிருப்போரை
வீட்டை விட்டு எழுப்பும் உரிமை வங்கிக்கு கிடையாது.

உரிமையாளர்கள் வீட்டில் இருந்தால் மாத்திரமே
அவர்களிடமிருந்து வீட்டை பறிமுதல் செய்ய முடியும்.
இது ஒரு சட்டத்துக்குட்பட்ட பிரச்சனை.............

[b]முழுத் தொகையும் கட்டிவிட்டால் அவர்கள்
அவர்களது வீட்டை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ சுவிஸில் எந்தத் தடையுமில்லை.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)