![]() |
|
புதிதாக குடியேறுதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புதிதாக குடியேறுதல் (/showthread.php?tid=170) Pages:
1
2
|
புதிதாக குடியேறுதல் - நேசன் - 04-17-2006 பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்....... இதனால் நன்மையா? தீமையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 04-17-2006 ஆங்கில மொழியை கற்றுக் கொள்ளுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செல்வது மாணவர்களாக நல்லது. ஆனால் அங்கை தான் நிரம்தரம் என்று செல்லி செல்லும் பொரும்பான்மையானவர்கள் தத்தமது ஜரோப்பிய நாட்டு சந்தர்பங்களை அறியாதவர்களாக செல்கிறார்கள் போலுள்ளது. எனைய மத்திய மற்றும் குறிப்பாக வட ஜரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது பிரித்தானியாவில் மனிதம் மலிந்திருக்கிறது. அங்கு தேவைக்கு அதிகமாக எல்லா இடங்களிலிருந்தும் வரவிரும்புகிறார்கள். இதற்கு சர்வதேச மொழி ஆங்கிலம் ஒரு காரணம். தேவைக்கு அதிகமாக வழங்கல் இருக்கும் போது மலிவாதல் இயற்கை. இங்கிலாந்து லண்டன் என்ற பிரம்மையை எடுத்துவிட்டு பார்த்தால் வாழ்கைத்தரம் எந்த வகையில் எனைய ஜரோப்பிய நாடுகளில் குறைவாக இருக்கிறது? மாறாக கூர்ந்து அவதானித்தால் பல விடையங்களில் சிறப்பாகத்தான் ஏனைய ஜரோப்பய நாடுகள் இருக்கு. இங்கிலாந்தின் காலனித்துவ எச்சங்கள் இன்னமும் எமக்குள் இருந்து இப்படியான முடிவுகளிற்கு உதவுது. இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை. - mathuka - 04-17-2006 சரியாகச் சொன்னீர்கள் குறுக்கலபோவான் அண்ணா - கந்தப்பு - 04-18-2006 ஆங்கிலத்தில் பேசினால்தான் மதிப்பா?. இருக்கிற நாடுகளின் மொழியினைப் படித்து முன்னுக்கு வரலாமே. அத்துடன் தாய் மொழி தமிழையும் படிக்க வேண்டும். ஆனால் எங்கட சனம் ஆங்கில மாயையினால் பிரான்ஸ், நோர்வே, ஜேர்மனி, சுவிஸில் இருந்து லண்டனுக்குப் போகிறார்கள் - நேசன் - 04-18-2006 ஆங்கிலம் தெரிந்தால் தமிழீழத்தில் வேலை வாய்ப்பு கூட வுரும் என்று எதிர்பார்க்கிறார்களா? - AJeevan - 04-18-2006 ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களே பெரும்பாலும் தற்போது ஆங்கிலம் நடை முறையிலுள்ள நாடுகளுக்கு செல்கின்றனர். ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை கிடைத்த ஒருவர் ஆகக் குறைந்தது 5 முதல் 6 வருடங்களுக்கு அந்த நாட்டை விட்டு வெளியேறி இருந்து விட்டு மீண்டும் வாழ்ந்த நாட்டுக்கு திரும்பலாம். அதன் பின்னர் குடியுரிமை பெற்ற நாட்டில் கொஞ்ச நாள் இருந்து விட்டு மீண்டும் அதே பாணியை தொடரலாம். வதிவிட உரிமை பெற்றவர்களால் இது முடியாது. இதை விட ஐரோப்பிய நாட்டு கல்வி முறைமை எம்மவர்களால் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. வெளிநாட்டு மாணவர்கள் திறமை அடிப்படையில் ஒரு சிலரால் முன்னேற முடிந்தாலும் <span style='color:red'>எல்லோராலும் முடிவதில்லை. அதற்கு காரணம் ஆசிரியர்களால் பழி வாங்கப்படுவதேயாகும். இதை பலர் வெளிப்படையாக சொல்ல அஞ்சுகின்றனர். ஆங்கில நாடுகளில் தமக்கு விரும்பிய கல்வியைத் தொடர முடிகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில நாடுகளைப் போல் இல்லாமல் இருக்கிறது. பணம் மட்டுமே வாழ்கை இல்லை. எனவே <b>அதிமாக குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாகவே இவர்கள் செல்கிறார்கள்.</b> இதை விடுத்து வீடுகள் சொத்துகள் வாங்கவென்று செல்வோரும் இல்லாமல் இல்லை.</span> _________________________________________________________________________________ ஒரு விடயத்தில் தேவையான கருத்துகள் எழுதுவதை விடுத்து தேவையற்றவற்றை எழுதுகிறீர்களே ஏன் :?: _________________________________________________________________________________ Re: புதிதாக குடியேறுதல் - வினித் - 04-18-2006 நேசன் Wrote:பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ்ர்கள் ஏன் லண்டனுக்கு இடம் பெயர்கிறார்கள்....... [b]<span style='font-size:25pt;line-height:100%'>எனது கருத்தும் நன்மைய்தான்</span> - narathar - 04-18-2006 அஜீவன், நீங்க சொன்ன 'பழிவாங்கல்' விளங்கவில்லை.இதை இன்று தான் நான் கேள்விப் படுகிறேன்,இதை மேலும் விரிவாக விளக்க முடியுமா?இது வெண்டுமென்றே நடத்தப்படும் இனப்பாகுபாடா? இங்கே இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்,பொதுவாகவே தெற்கு ஆசிய நாட்டவர், குறிப்பாக இந்தியர்,இலங்கையர் தமது குழந்தைகளின் கல்வியில் அதிக சிரந்தை எடுப்பதால் அவர்கள் கூடிய பெறுபேறுகளைப் பெற்று நல்ல பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகின்றனர். இதில் எந்தவிதமான இனத்துவப் பாகுபாடுமில்லை.ஆனால் இதில் வர்க்க ரீதியான பாகுபாடு உண்டு.காரணம் பிரித்தானியாவில் தனியார் பள்ளிகள் ஆகக் கூடிய மாணவர்களை ஒக்ஸ்போர்ட்,கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக் கழகங்களுக்கு அனுப்புகின்றன.இந்த தனியார் பாடசாலைகளில் ஒரு வருடத்திற்கு மட்டும் ஒன்பதினாயிரம் பவுன்ட்ஸ் வரை அறவிடுகிறார்கள்.இது வசதி படைதவர்களாலயே கட்டக் கூடிய தொகை. அடுத்தது இருக்கும் அரச பாடசாலைகளின் தரத்தில் வெகுவான வேறு பாடுகள் உண்டு.கிரமர் ஸ்கூல் என்னும் பரீட்சை வைத்து தெரிந்தெடுக்கும் பள்ளிக் கூடங்கள் முழு இங்கிலாந்திலும் ஒரு நூற்று ஐம்பதே இருக்கின்றன.இதற்கு தமது குழந்தைகளை அனுப்ப பல பெற்றோர் தனியார் ரீயுசன் சென்டர்களை நாடுகின்றனர்.இதிலும் குறிப்பாக ஆசிய பெற்றோரே பிள்ளைகளை அதிக அழுத்ததிற்கு உட்படுத்துகின்றனர்.மேற்கத்தியப் பெற்றோர் அவ்வளவாக இதனைச் செய்வதில்லை.அடுததாக கொம்ப்ரியென்சிவ் என்னும் அரச பாடசாலைகள் அந்த அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் மாணவர்களை உள் வாங்குகின்றன.இதுவும் ஒருவகை வர்க்க பிரிவினையூடாகவே நடை பெறுகிறது. நல்ல பாடசாலைகள் இருக்கும் சுற்று வட்டாரத்தில் வீடுகளின் விலைகள் கூடியே இருக்கிறது.இதனால் கூடிய விலை உள்ள இடங்களில் வீடுகளை வாங்கக் கூடியவரே ,இதனால் பயன் பெறுகின்றனர்.அதோடு நம்மவர் லண்டனை மையமாகவே வைத்து புலம் பெயருவதால் நல்ல பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் சாத்தியம் குறைகிறது.இதை விடுத்து லண்டனுக்கு வெளியால் உள்ள நல்ல பாடசாலைகளை அண்மித்து வீடுகளை வேண்டினால் பிள்ளயை நல்ல பாடசாலைக்கு அனுப்பும் சாத்தியம் கூடும்.அதே நேரம் வேலை எடுப்பது சிரமமாக இருக்கும்.இப்போது சிலர் இதற்காகவே லண்டனை விட்டு வெளி இடங்களில் குடி யேறுகின்றனர்.இது சம்பந்தமாக மேலும் தகவல் களை எங்கே பெற முடியும் என்று இங்கே இணைக்கிறேன் ,ஐரோப்பாவில் இருந்து இடம் பெயருபவர்களுக்கு உதவியாக இருக்கும். நான் அறிந்தவரை சில பேர் துணைவியையும் பிள்ளைகளையும் இங்கு அனுப்பிப் படிபிக்கிறார்கள்.அதோடு இங்கிலாந்துப் பல்கலை கழகங்களுக்கு வரும் வெளி நாட்டு மாணவர்களின் தொகையும் அதிகரித்துச் செல்கிறது.இனி வரும் ஆண்டுகளில் இது மும்மடங்காக கூடும் என்று சொல்லப் படுகிறது.தற்போது மட்டும் 300,000 வெளி நாட்டு மாணவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்கின்றனர். மேலும் இங்கிலாந்தில் செக்கெண்டரி பாடசாலைகளில் ப்ரென்ச்சையோ,ஜேர்மனயோ இரண்டாம் மொழியாகப் படிக்கலாம்.ஐரோப்பாவில் பின்னர் வேலை தேடுவதற்கும் ,தாம் வந்த நாட்டு மொழியைத் தொடர்ந்து படிப்பதற்கும் இது உதவி செய்கிறது. ஐரோப்பா இன்று ஒன்றாகி வரும் சூழலில் கல்வி,வேலை வாய்ப்பு என்பவற்றில் இருக்கும் சந்தர்ப்பங்களை புலம் பெயருவதன் மூலம் நிறை வேற்றிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. நாம் புலம் பெயர்ந்ததே இந்த வாய்ப்புக்களைப் பயன் படுத்தத் தானே,இதில இங்கிலாந்து என்றால் என்ன ஐரோப்பிய நாடுகள் என்றால் என்ன?இன்று கல்விக்காக இங்கிலாந்துக்கு வருபவர்கள், பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் மீண்டும் வேலை வாய்ப்புக்காக ஐரோப்பாவுக்குள் புலம் பெயரலாம்.இரு மொழித் தகமை இதற்கு வெகுவாக உதவும். - narathar - 04-18-2006 The schools system in England This page was created by the BBC. http://www.bbc.co.uk/dna/actionnetwork/A1181792 The best GCSE-level results This page shows the 215 schools in England in which 100% of the pupils at the end of Key Stage 4 achieved the Level 2 threshold - equivalent to five GCSEs at grade C or above. http://news.bbc.co.uk/1/hi/education/4625736.stm Schools that add the most value This page lists 197 schools in England with the best "value added" measures from Key Stage 2 to Key Stage 4. http://news.bbc.co.uk/1/hi/education/4625606.stm Top A-level results This page shows the top 200 institutions ranked on the basis of their pupils' performance in A/AS-level exams. http://news.bbc.co.uk/1/hi/education/4626134.stm How different areas performed There are wide variations in the performance of different areas of England in their schools' exam results. The table below shows 149 local authorities ranked on the basis of their schools' achievements in the proportion of students achieving the Level 2 threshold - equivalent to at least five GCSEs at grades A*-C http://news.bbc.co.uk/1/hi/education/4626172.stm லீக் டேபிள் என்பது பாடசாலை மாணவர்களின் கல்வித் தகமைகளின் அடிப்படையில் பாடசாலைகளை வரிசைப் படுதும் முறமை. நீங்கள் இருக்கும் இடத்தில் நல்ல பாடசாலைகளைக் கண்டு பிடிக்கவும், நல்ல பாடசாலைகள் இருக்கும் இடங்களைக் கண்டு பிடிக்கவும் இது உதவும்.இந்தப் பக்கத்தில் இது சம்பந்தமான தகவல்கள் உண்டு.வலது மூலயில் இருக்கும் பெட்டிகளில் உங்கள் போஸ்ட் கோட்டை இடுவதன் மூலம் உங்கள் இடத்தில் இருக்கும் பாடசாலைகளின் லீக் டேபிள் வரிசைக் கிரமத்தை நீங்கள் பெறலாம். League Tables http://news.bbc.co.uk/1/hi/education/leagu...les/default.stm - narathar - 04-18-2006 இலெவன் ப்லஸ் பரீட்ச்சை என்பது க்ரமர் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்காக பதினொரு வயதை எட்டிய மாணவர்களுக்கு நடத்தப்படும் பரீட்ச்சை.இது சம்பந்தமான அனைத்துத் தகவல்களும் இந்த கருத்துக் களதில் பெறலாம்.இதில் எந்தெந்த இடங்களில் க்ரமர் பாடசாலைகள் உள்ளன,அனுமதிப் பரீட்ச்சைக்கு தயார் படுத்தல், அனுமதிப் பரீட்ச்சை விபரங்கள் என்று எல்லாத் தகவல்களும் உள்ளன. http://www.elevenplusexams.co.uk/ 11 Plus Whilst the UK Government has its own definition of Key Stages, one Key Stage that cannot be taken lightly by parents is the decision on whether or not your child should attempt the competitive world of the 11 Plus examinations and scholarships. The examinations typically serve as part of the criteria for gaining entrance to both Grammar Schools and Senior Independent (Private) Schools, the precursor to Universities. Read more about Eleven Plus. - narathar - 04-18-2006 மிகவும் உபயோகமான , இங்கிலாந்தில் ஒரு இடத்தைப்பற்றி அறிய அதிகமாகப் பாவிக்கப் படும் இணயத் தளம். ஒரு போஸ்ட் கோட் இடத்தில் என்ன மாதிரியான ஆட்கள் வசிக்கிறார்கள்,(Neighbourhood profiles) ,என்ன மாதிரியான பாடசாலைகள் உள்ளன, வீட்டு விலைகள் என்ன மாதிரி உள்ளன, வசிக்கும் இடதிற்குக் கிட்ட உள்ள பாடசாலைகள் கடைகள்,வைத்திய சாலைகள் என்பன எங்கு உள்ளன போன்ற பல தகவல்கள் இந்தத்தளத்தில் இருந்து பெறலாம். http://www.upmystreet.com - sinnakuddy - 04-18-2006 நன்றி நாரதர் ...பயனுள்ள விசயங்களை அளித்துள்ளீர்கள்....uk குடி பெயரும் ஒருவர் லண்டனையே மைய வைத்து குடி பெயர்கிறார்...ஏனெனில்..வேலை வாய்ப்பு..பாடசாலை வீட்டு வசதி... போன்றவைகள் லண்டனை மீறிய நகரங்களை பற்றி தெரியாமையாகும்...முன்பு இங்கு இருப்பவர்களுக்கும் லண்டனை தவிர வேறு நகரங்களை பற்றி தெரியாமையால் புதிதாக குடிபெயரும் ஒருவர் லண்டனில் மட்டும் வாழ் வதற்குரிய கட்டாயத்துள்ளாகிறார்..... கிராமம் நகரம் சார்ந்த சூழலில் வாழ்ந்து பழ்க்கப்பட்ட ஐரோப்பிய தமிழ்கள் முதலில் முழு நகரமான லண்டன் வாழ்க்கைக்கு இயல்பூக்கமடைய கஸ்டப்படுகிறார்கள் வேறு நகரங்களில் இருக்கும் வீட்டு வசதி வேலை வாய்ப்பு கல்வி வசதி கலாச்சர பரிவர்த்தனை மையங்கள் போன்றவற்றை தெரிந்தவர்கள் கூறினால பிரியோசனமாயிருக்கும்.... - நேசன் - 04-18-2006 நாரதர் அருமை.நல்ல விசயங்களை தெரியப்படுத்தியிருக்கிறீர்கள். எனக்கே பிரயோசனமாக உள்ளது. - AJeevan - 04-18-2006 narathar Wrote:அஜீவன்,<span style='font-size:25pt;line-height:100%'>இனப்பாகுபாடு என்பதை விட இங்கு புலம் பெயர்ந்தவர்கள் கல்வி கற்று சிறப்பாகத் தேறினால் இவர்களது வேலைக்கு துண்டு விழுமோ என்ற அச்சம் இந்த நாட்டவர்களிடையே இருக்கிறது. இதனாலேயே ஆரம்ப கல்வி பெறும் குழந்தைகளை மனதளவில் தளர்ச்சியடையும் நடை முறைகளை ஆசிரியர்களே கையாள்கின்றனர். பெற்றோரால் அவற்றை புரிந்து கொள்ள முடிந்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் மனோ நிலையிலோ அல்லது மொழி அறிவு கொண்ட நிலையிலோ அவர்களும் இல்லை. இது குழந்தைகளை மனோதத்துவ ரீதியாக பாதிக்கிறது. இதனால் பலர் தமது முயற்சிகளை தளர்த்திக் கொள்கின்றனர். இந்த நிலையில் ஆங்கில கல்வி உள்ள நாடுகளுக்கு தற்காலிகமாக புலம் பெயர்வது வெற்றியாகவே அமையும். <b>இதற்கான பல தகவல்களை கொடுத்த நாரதருக்கு நன்றி ........</b> அதே வேளை நாரதர் சொல்லும் கருத்தே எனது கருத்துமாகும்.</span> narathar Wrote:ஐரோப்பா இன்று ஒன்றாகி வரும் சூழலில் கல்வி,வேலை வாய்ப்பு என்பவற்றில் இருக்கும் சந்தர்ப்பங்களை புலம் பெயருவதன் மூலம் நிறை வேற்றிக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. நாம் புலம் பெயர்ந்ததே இந்த வாய்ப்புக்களைப் பயன் படுத்தத் தானே,இதில இங்கிலாந்து என்றால் என்ன ஐரோப்பிய நாடுகள் என்றால் என்ன?இன்று கல்விக்காக இங்கிலாந்துக்கு வருபவர்கள், பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் மீண்டும் வேலை வாய்ப்புக்காக ஐரோப்பாவுக்குள் புலம் பெயரலாம்.இரு மொழித் தகமை இதற்கு வெகுவாக உதவும். [size=15]ஆம் தற்போதும் கல்விமான்கள் இந் நாடுகளுக்கு தேவைப்படும் போது விசேடமான முறையில் அவர்களை இந் நாடுகள் வரவழைத்து பயன் படுத்திக் கொள்கின்றன. இவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் மரியாதையும் நல்ல விதமாகவே இருக்கிறது. இந்த வருடம் சுவிஸுக்கு 12'000 கணணி நிபுணர்கள் தேவை. இருந்தாலும் இங்கு இத் தேவையை நிறைவு செய்ய கல்வி கற்பவர்கள் குறைவாகவே இருக்கின்றனர் என்று ஒரு அமைச்சர் அண்மையில் தொலைக் காட்சி பேட்டியொன்றில் குறிப்பிட்டார். இதுபோலவே ஏனைய வேலை வாய்ப்புகளுக்கும் உள்ளது............. இங்கு பிறந்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்களுக்கு இந்த கல்விப் பயணம் நிச்சயம் இவ்வகையில் மேன்மை தரும். இடையிடையே இந் நாடுகளுக்கு வந்து போவதனூடாக அந்த தொடர்புகள் அற்றும் போகாது. அதையும் சரியாக பயன் படுத்தினால் நாளைய ஐரோப்பாவில் வெற்றி பெற இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். நன்றி........... - kurukaalapoovan - 04-18-2006 எனக்கு நல்லா விளங்குது நாரதர் ஏன் பக்கம் பக்கமா லிங்க் குடுத்து பிரத்தானியாவை புறொமோட் பண்ணிறார் எண்டு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மற்ற ஜரோப்பாவிலை உழைச்ச காசெல்லாத்தையும் சுறுட்டிக் கொண்டு பிரித்தானியாவுக்கு வாங்கோ, வந்து 200 வருடம் பழைய வீட்டுக்கு 200 000 பவுண்ஸ் குடுத்து வேண்டுங்கோ மெற்றோ பொலிற்றன் யுனிவேசிற்களிலை ஓராட்டிப் போட்டு 3 வருடத்தாலை பட்டமளிப்பு விழா நடத்துவங்கள் எடுத்து பிறோம்பண்ணி கோலுக்கை போட்டுட்டு பெற்றோல்செட்டிலையும் ரெஸ்கோவிலையும் நில்லுங்கோ என்றார். அவருடைய வீட்டு விலை ஏறும் தானே உதுகள் எல்லாம் ஜரோப்பாவிலை இருந்து விழுந்து கட்டிக் கொண்டு வந்தா. அஜீவன் சொல்லுறதை பார்த்தா ஏனைய ஜரோப்பிய நாடுகளில் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தான் ஆசிரியர்மார் பாகுபாடு. பிரித்தானியாவிலை போய் டிகிறி வேண்டிக் கொண்டு வந்தா வேலை வாய்ப்புகளில் பாகுபாடு காட்டமாட்டாங்கள். இது எப்படி? :? ஜரோப்பிய நாடுகளில் மேற்படிப்பு என்பது பிரித்தானியாவை விட அதிகம் கட்டுப்படுத்தப்பட்டு தரம் பேணப்படுகிறது. மற்றது இலவசமும். அதனால் மேற்படிப்பை தொடர்வது என்பது திறமையின் அடிப்படையில். இங்கிலாந்தில் அந்தளவுக்கு கடினம் இல்லை AL காணாட்டி foundation என்று பீலாவிட்டு டிகிறி முடிக்கலாம். 3 வருடத்தில் ஓப்படை செய்து முடிய இளமானி முதுமானிப் பட்டம் மாதிரி கலானிதி பட்டம் குடுக்கிறாங்கள். 1 ஆய்வு அறிக்கை தானும் சர்வதேச தரத்தில் வெளியிட்டு அதை மகாநாட்டில் present பண்ணி defend பண்ண வேணும் என்ற கட்டாயம் இல்லை. ஏதோ படிச்சமாம் விழா வைச்சாங்களாம் பேப்பர் தந்தாங்களாம் பிறேம் பண்ணி மாட்டினமாம் எண்டால் போதுமா. படிச்ச துறையில் (அல்லது கொஞ்சம் சம்பந்தப்பட்ட துறையிலாவது)வேலை செய்கிறீர்களா என்பதும் முக்கியம். இந்தச் சிக்கல் பிரித்தானியாவில் நம்மவர் மத்தியில் அதிகம். கனடாவிலும் கொஞ்சம் பிரச்சனை தான். இன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து படிப்பீக்க என்று பிரித்தானியாவுக்கு படையெடுப்பவர்கள் வெற்றிகண்டார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ள 5...6 வருடங்கள் செல்லும். 10 வருடங்களிற்கு முன்னர் இங்கிலாந்தில் வைத்தியர்களிற்கு பற்றாக் குறையிருந்தது. எனவே, இலங்கை இந்தியா போன்ற நாட்டில் படித்து முடித்த வைத்தியர்கள் இங்கிலாந்தில் வைத்தியம் செய்வதற்கு தகமை அடைவதற்கு பிளப் பரீட்சையில் சித்தி அடைய வேணும் என்பது விதி-நடைமுறை. வைத்தியர்களிற்கு தட்டுப்பாடு இருக்கும் காலத்தில் பிளப் சித்தியடைந்தால் வேலை கிடைக்கும் என்பது யதார்த்தம் ஆனால் பிளப் நடத்துபவர்கள் எந்த காப்புறுதியும் தருவதில்லை நீங்கள் பிளப்பை முடித்தால் வேலை தருவோம் என்று. எம்மவர்கள் மத்தியில் நிலவிய விளக்கம் பிளப் முடித்தால் பிரித்தானியாவில் வைத்தியர் வேலை கரண்டீட் என்று. இப்பே நிலமை தலைகீழ், வேலை இல்லாத பிளப் வைத்தியர்கள் பற்றி பிபிசியில் கூட ஒரு நிகழ்ச்சி வந்திருந்தது. ஆனால் ஆண்டு தோறும் பிளப் எடுக்கும் வைத்தியர்கள் தொகை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கு ஏன் என்றால் தேவையை விட வழங்கல் கூட என்ற பின்னூட்டம் மக்களை சென்றடையவில்லை (காலம் எடுக்கும்). இந்த பரீட்சைக்கு தயார்ப்படுத்தலே ஒரு வியாபாரமாக ஈஸ்ற்காம் பகுதியில் நடக்குது. இதே போல்தான் இன்று படையெடுப்பவர்கள் பரவலாக வெற்றி கண்டார்களா இல்லை என்று அறிந்து கொள்ள பல வருடங்கள் செல்லும். இங்கிலாந்திற்கு கண்மூடித்தனமாக வருபவர்கள் பலர் தற்போதைய நாட்டில் கால்ஊன்றி நல்ல தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள் அல்ல. நாட்டை மாற்றினால் தீர்வு வரும் என்ற ஒரு அங்கலாய்ப்பு, விரக்த்தி? - காவடி - 04-18-2006 Quote:இடையிடையே இந் நாடுகளுக்கு வந்து போவதனூடாக அந்த தொடர்புகள் அற்றும் போகாது.ஐயோ.. அப்ப நாளைய தமிழீழம்.. ?? - narathar - 04-18-2006 ம் இங்கிலாந்தில் ஒப்படை செய்து பட்டப்படிப்பு படித்து, பின்னர் ஐரோப்பாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் அதே துறையில் வேலை செய்து நல்ல பதவியில் இருக்கும் யாழ்க் கள உறுப்பினர் ஒருவரைத்தெரியும் சொல்லட்டுமா குருக்ஸ். :wink: நான் சொன்னது எல்லாரும் லண்டனுக்க நுழையாமல் நீங்கள் வருவது உங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக என்றால், நல்ல பாடசாலைகளில் லண்டனுக்கு வெளியால சேருங்கோ.லண்டனுக்கு வெளியால வீடும் மலிவு, லண்டனில 200 ஆயிரம் பவுண்சுக்கு பெட்டி வீட்டில இருகிறதில,வசதியான வீட்டில , நல்ல பாடசாலையில பிள்ளை படிக்க இருக்கலாம்.பிரித்தானியாவில எந்தப் பாடசாலயில பிள்ளை படிச்சது என்பது எந்த பல்கலைக்கழகத்திற்கு , எந்தப் பட்டப் படிப்புக்கு பிள்ளை போகுது என்பதைத் தீர்மானிக்குது .குருக்ஸ் சொன்ன மாதிரி கனக்க பல்கலைக் கழகங்கள் இருக்குத் தான்.ஆனா நல்ல பல்கலைக் கழகங்களுக்கு உள்ளிட நல்ல பெறுபேறும், நல்ல பாடசாலையும் அவசியம். மேலும் படித்து முடித்தபின் வேலை எடுக்கும் போதும் எந்த பல்கலை கழகத்தில் படித்தார் என்பதுவும் எந்தத் துறையில் படித்தார் என்பதுவும், ஒருவர் பெறப் போகும் வேலையைத் தீர்மானிக்கிறது.அத்தோடு ஆங்கிலம் சர்வதேச வியாபார மொழியாக இருப்பதால் சர்வதேச ரீதியாக வேலை தேடுபவர்கள் அல்லது தமிழ் ஈழம்,இந்தியா,இலங்கை முதலிய நாடுகளுக்குச் சென்று வேலை பார்க்க இருப்பவர்களுக்கு இது உதவலாம்.இங்கே வரும் அனேக இந்திய மற்றும் சீன மாணவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்குச் சென்று வேலை எடுக்க இது உறுதுணையாக இருக்கிறது. மற்றபடி வருங்காலத்தில் மேற்குலகில் அவுட் சோசிங் போன்ற நடைமுறைகளால் பல வேலைகள் இல்லாமல் போகலாம்,ஆனால் நாடு விட்டு நாடு போக விரும்புபவர்களுக்கு வேலை இருந்து கொண்டு தான் இருக்கும்.ஐரோப்பாவில் இருந்து பாடாசலையுடன் கல்வியை நிறுத்தி விட்டு, துறைசாராத வேலைகளை குறைந்த சம்பளத்தில் செய்வதை விட ,இங்கிலாந்து வந்து பட்டப்படிப்பை மேற்கொள்வது , சர்வதேச ரீதியாக வேலை பெறக் கூடிய சாத்தியப் பாட்டை அதிகரிக்கிறது அல்லவா?இங்கே படித்த பலர் பெற்றோல் நிலையங்களில் வேலை செய்வதற்குக் காரணம் அவர்கள் லண்டனை விட்டு வெளியால் சென்று வேலை தேடாததே என்று நினைக்கிறேன்.இதைப் பற்றி குருக்ஸ் போன்றவர்களுக்குத் தான் அதிகம் தெரியும் என்று நினைகிறேன்.ஆகவே இதைப் பற்றி தெரிந்தவர்கள் மேலும் எழுதவும். மேலும் இங்கிலாந்தில் வைத்தியர்களுக்குத் தட்டுப் பாடு நிலவுகிறது.இன்றைய பிபிசி தகவலின் படி ஒரு குடும்ப வைத்தியர் 250.000 பவ்ன்ஸ் வரை ஒரு வருடத்தில் உழைக்கக் கூடிய சாதியப் பாடு இருப்பதாக கூறுகிறது.அதோடு இனி வைத்தியர்கள் இங்கே வேர்க் பெர்மிடில் தான் இனி உள்வர அனுமதிக்கப் படப் போகிறார்கள்.இது உள்ளூர் மற்றும் ஐரோப்பிய பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பைக் கூட்ட உதவுவதற்காக கொண்டுவரப் பட்டுள்ள நடைமுறை. எது எப்படியோ நமது தமிழ்ப் பிள்ளைகள் எங்கிருந்தாலும் நல்ல நிலைக்கு வர வேணும் என்ற எண்ணோத்தோடு தான் இதனை இங்கே எழுதுகிறேன் தத் ,தமக்கு எவ்வாறான சந்தர்ப்பங்கள் உள்ளன,தங்களது பிள்ளைகளின் விருப்பம் என்ன,அவர்களுக்கு என்ன என்ன திறமைகள் உள்ளன, அவர்களுக்கு என்ன துறையில் நாட்டம் இருக்கிறது என்பவற்றை ஒவ்வொரு பெற்றோரும் சீர்தூக்கிப் பார்த்து தத் தமக்கு அனுகூலமான முடிவுகளை எடுக்க வேண்டும். நீண்டகாலத் திட்டமிடல் என்பது இங்கே மிக அவசியம்.பிள்ளைகள் வந்த பின் குறுக்கால போவானும் இதனயே செய்வார் என்று நினக்கிறேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - AJeevan - 04-18-2006 காவடி Wrote:Quote:இடையிடையே இந் நாடுகளுக்கு வந்து போவதனூடாக அந்த தொடர்புகள் அற்றும் போகாது.ஐயோ.. அப்ப நாளைய தமிழீழம்.. ?? <span style='font-size:21pt;line-height:100%'>இங்கு உழைக்கும் பணமும் அறிவும் பயிற்சியும் தமிழீழத்தை பொன்னாக்கும். இன்றும் அது நடக்குதே!</span> - kurukaalapoovan - 04-20-2006 அஜீவன் சுவிஸ்சில் வீடு வேண்ட முடியாதா? ஏன் வீடுகள் சொத்துகள் வேண்ட பிரித்தானியாவிற்கு போக வேணும்? - AJeevan - 04-21-2006 kurukaalapoovan Wrote:அஜீவன் சுவிஸ்சில் வீடு வேண்ட முடியாதா? ஏன் வீடுகள் சொத்துகள் வேண்ட பிரித்தானியாவிற்கு போக வேணும்? <span style='font-size:21pt;line-height:100%'>இது காசு இருக்கிறவருடைய தனிப்பட்ட விடயம் என்றுதான் என் நினைப்பு குறுக்ஸ். இருந்தாலும் இங்கும் தமிழர்களில் அதிகம் பேர் சொந்த வீடு வாங்கியிருக்கிறார்கள். வீடு வாங்கினால் மட்டும் இங்கு போதாதே? இதை முறையாக பராமரிக்க போகும் செலவு அதிகம். அதை விட வீடு வாங்கின இடத்தை விட்டு தூர இடத்துக்கு ஒரு வேலை மாறினால் போய் வர போகும் செலவை விட வாடகை வீட்டில இருப்பது சுதந்திரம். இந்த வீடு வேணாம் எண்டால் இன்னொரு வீடு............. <b>சொந்த வீடு வாங்கி உடனே வாடகைக்கும் விட முடியாது. அப்படி ஒரு சட்டம் இங்க.</b> இங்கு ஏதாவது சுத்து மாத்து செய்தால் வீட்டை வேற அரசு எடுத்திடும். காசு கொடுத்து வீடு வாங்கி கடைசியல பராமரிக்க முடியாம அதை வயோதிபர் மடத்துக்கு எழுதிவிட்டு வயோதிபர் மடத்தில இருக்குதுகள் ஒரு சுவிஸ் கணவன்-மனைவி. இவர்களது மகள் என்னோடு வேலை செய்கிறாள். அவளிடம் நீ ஏன் அதை கேட்டு வாங்கக் கூடாது என்று கேட்டேன். ஐயோ.......... அதை பராமரிக்க என் சம்பளம் போதாதப்பா? எனக்கும் நாளைக்கு எங்க அப்பா அம்மா நிலைதான் நடக்கும் என்று சொல்லி வாடகை வீட்டில் இருக்கிறாள். ஆனாலும் அவள் பிலப்பைன் மணிலாவில் ஒரு வீடு வாங்கி விட்டிருக்கிறாள். அங்கே ஒரு குடும்பம் வேலைக்கு இருக்கிறார்கள். இவள் விடுமுறை காலங்களில் அங்குதான் போவாள். வயோதிப காலத்தில் அங்கு தங்க இருப்பதாக கூறுகிறாள். லண்டன்ல இந்த கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கலாம்? இப்படி .................... எவ்வளவோ எழுதலாம். :wink: </span> |