Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:இளையதம்பி, இரண்டும் தமிழரின் தாயகம் என்று தெரியும். நீர் தமிழன் இல்லை என்றா கேட்டேன்? தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்று கூறுவதற்கு எங்கிருந்து உரிமை பெற்றீர்கள்?
நீர் தமிழ்நாட்டுத் தமிழனா?
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற வேண்டாம் எங்கள் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடம் இருந்து விடுதலை பெற்றால் போதும்( அதுவும் அடங்காபிடாரி ஜெயலலிதாவிடம் முதல்)
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 25
Threads: 2
Joined: Apr 2006
Reputation:
0
தமிழீழம் சிறிலங்காவிடம் இருந்தும் தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்தும் விடுதலை பெற வேண்டும். இதை சொல்வதற்கு உலகின் எட்டுக் கோடி தமிழர்களுக்கும் உரிமை உண்டு. என் இனம் விடுதலை பெற வேண்டும் என்று விரும்புவதற்கு நான் யாரிடம் அனுமதி பெற வேண்டும்?[b]
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
தமிழ்நாட்டு மக்களுக்கு அநீதிகள் இளைக்கப்பட்டால் அங்கிருந்து குரல் வரவேண்டும். அல்லது மறைமுக உணர்வுகளாவது தென்பட வேண்டும். தமக்குள்ள அநீதிகளை எதிர்த்து போராடும் அளவிற்கு தமிழ்நாட்டு மக்களுக்கு தெம்பு இருக்கின்றது என நினைக்கின்றேன்.
உப்படியான கருத்துக்கள் தான் இந்தியா இன்னமும் ஈழப்போராட்டத்தை அச்சத்துடன் பார்ப்பதற்கு காரணமாகும். தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் நாம் உதவி செய்ய வேண்டும். ஆனால் சும்மா இந்த நேரங்களில் உப்படியான கதைகள் தான் பிரச்சனைகளைக் கொடுக்கின்றன.
[size=14] ' '
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
இளையதம்பி,
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆரம்பித்தது இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகள் தமிழரின் தாயகப் பிரதேசங்கள் என்பதால் அல்ல. போராட்டம் ஆரம்பித்தது முதல் அது வழர்ந்து தேசியவிடுதலைப் போராட்டமாக பரிணாமம் பெறக் காரணம் மக்கள் ஆதரவு. பூரண மக்கள் ஆதரவிற்கு காரணம் அவர்களின் ஒன்றுபட்ட அனுபவங்கள். அதாவது திட்டமிட்ட குடியேற்றங்கள், மொழியுரிமைப் பறிப்புகள், இனரீதியான அடக்குமுறைகள், சம உரிமையற்ற ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள். இவற்றை ஜனநாயகரீதியாக தட்டிக்கேட்ட பொழுது வன்முறையாக கிடைத்த பதில்கள் கட்டவிள்த்துவிடப்பட்ட இனபடுகொலைகள்.
உலகத்திலுள்ள இனங்களெல்லாம் இனம் அடிப்படையே காரணமாக வைத்து தமது தாயகபிரதேசங்களிற்கு விடுதலை பெற வெளிக்கிட்டால் நிலமை என்ன?
எமது போராட்டம் ஆரம்பித்தது சிங்கள இனவாதத்தினால் அதற்கு தீர்வு தான் வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
பொரும்பான்மை சிங்கள இனவாதம் தமிழருக்கு சம உரிமை கொடுத்து மரியாதையோடு இணைந்து வாழும் பக்குவத்தை அடையவில்லை. அதாவது சிங்கள இனவாதத்திலிருந்து அடக்கு முறைகளிலிருந்து விடுவித்து சுயமான ஆட்சியில் மரியாதையாக வாழத்தான் போராட்டம் நடக்கிறது. இனரீதியாக எமது தாயகம் ஆனபடியால் பிரிந்து செல்ல வேண்டும் என்ற மிதவாத நோக்கோடு அல்ல.
எந்தப்பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும் (இராணுவரீதியிலே அல்லது பேச்சுவார்த்தையிலே) எமது ஆட்சியில் வரவேண்டும் என்பது எமது தாயகக் கோட்பாட்டிலிருந்து நியாயப்படுத்தப்படுகிறது.
இனரீதியாக மொழி அடிப்படயில் கலாச்சாரரீதியில் எமக்கு தனித்துவம் இருக்கு நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல நாம் உரிமைகோரும் பகுதிகளின் பூர்வீகர்கள் என்ற வாதங்கள் வருகிறது.
நீர் பிறநாட்டவருக்கு ஈழத்தமிழரின் போராட்டத்தை விளங்கப்படுத்தி நியாயப்படுத்தும் போது மொட்டையாக எங்கடை தாயகத்தை நாங்கள் அடிச்சு பிடிக்க போராட்டம் நடத்துறம் எண்டால் உம்மை ஒரு பிற்போக்குவாதியாக மிதவாதியாக மாத்திரமல்ல ஒரு பயங்கரவாதியாக கூடப்பார்ப்பார்கள்.
எனவே தமிழ்நாட்டு இந்தியாவிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று சொல்ல உலகத்தமிழன் என்ற சார்பின் உரிமையிருக்கு என்று பினாத்தாதையும். என்இனம் விடுதலை பெறவேண்டும் என்று மொட்டையாக உளறாதையும். யார் என்னத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று கொஞ்சம் சிந்தியும்.