Yarl Forum
உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்! (/showthread.php?tid=205)

Pages: 1 2


உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்! - Vasan - 04-15-2006

உங்கள் கருத்து
அவசியம் வாக்களியுங்கள்!

ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் தற்பொழுது நிற்கிறது.. சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒரு புறம். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி சர்வதேச அழுத்தம் மறு புறம்.

அன்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்


http://www.webeelam.com/


- Vasan - 04-15-2006

உங்கள் கருத்துக்களை http://www.webeelam.com/
இணையத்தளத்தில் தெரிவிக்கலாம்


- Subiththiran - 04-15-2006

காலம் தாழ்த்தக்கூடாது
இந்த நான்கு வருடத்தில் துரோகிகள் அதிகமானதும், நாட்டுப்பற்றாளர்கள், போராளிகள், தளபதிகள், பொதுமக்கள், என பலரை இழந்ததும் தான் மிச்சம்.
வேறு எந்த பலனும் தமிழ் மக்களுக்கு இல்லை.


- Vasan - 04-17-2006

75 வீதமானமக்கள் தமிழீழமக்களை காப்பதர்க்காக தமிழீழவிடுதலைப்புலிகள் போரைதுவங்கவேண்டும் என கருதுகின்றனர்
www.webeelam.com


- uoorkkruvi - 04-17-2006

தம்பி வாசன் மிச்ச 25 வீதமும் ஏன் தலைகீழா நிக்குதுகள்.


- ukraj - 04-17-2006

நீங்கள் வாக்களித்தவுடன் புலிகள் உடன போரை தொடங்க போகினம். உங்கட கட்டளையை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கினம்.
சிறுபிள்ளைத்தனம்.
சற்று உலகத்தை பாருங்கள்.
சர்வதேசமும் இலங்கையரசும் என்ன செய்கின்றன?


- gowrybalan - 04-17-2006

வணக்கம்...
இங்கு இருந்து கொண்டு ..அரசியல் பேசுவது பிடிக்காது இருந்தாலும்....
இன்றைய கால கட்டத்தில்..சர்வதேசத்தின் அழுத்தங்கள் பற்றி சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கும் அதே நேரத்தில்..
நாட்டில் நடக்கும் படு கொலைகளை பார்க்கும் போது..வீணாக இப்படி செத்துமடிவதை விட சண்டை தொடங்குவது மேல் எனத்தோன்றுகின்றது.....இல்லை எனில் பேச்சுவார்த்தை முடியும் முன்னர் தமிழீழத்தில் தமிழ் மக்கள் இருப்பார்களா தெரியாது...அதன்பின்னர் பேச்சுவார்த்தையால் என்ன பலன்????
அத்துடன் சர்வதேசத்தின் அழுத்தம்....தமிழன் குரல்வளையைத்தான் கூடுதலாக நசுக்குகின்றது.....
இது எனது கருத்து..சரியா..தவறா ..? நீங்கள்தான் சொல்ல வேண்டும் Arrow
நன்றி


- Vasampu - 04-17-2006

<i><b>கௌரிபாலன்</b>

உங்கள் கருத்து சரியா தப்பா என்று நீங்கள் தான் சீர்து}க்கிப் பார்க்க வேண்டும். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்கு சுதந்திரம் உங்களுக்கு உண்டு.

அதுபோல் தற்போதைய நிலையில் எது வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை எம்மைவிட தாயகத்தில் வாழும் சொந்தங்களுக்கே உண்டு. ஏனெனில் முதலில் நன்மையடைவதும் பாதிக்கப்படுவதும் அவர்கள் தான்</i>


- வினித் - 04-17-2006

Quote:அதுபோல் தற்போதைய நிலையில் எது வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை எம்மைவிட தாயகத்தில் வாழும் சொந்தங்களுக்கே உண்டு. ஏனெனில் முதலில் நன்மையடைவதும் பாதிக்கப்படுவதும் அவர்கள் தான்



<i>அடியே என்ட செல்லம் வசம்பு</i>



அந்த மக்கள் தான் போராட்டத்தில் தற்போது வலிய வந்து இனைகிறார்களாம் தெரியாதோ?

அந்த மக்கள் தான் சொல்ல்கிறார்கள் அடிக்க சொல்லி
மக்கள் ஆதராவு இல்லவிட்டால் ஒரு கன்னிவெடியும் வெடிகாதுடி வென்னைய்.............


இது என்ன எண்டால் அண்ணன் எப்ப போவன் தின்னை எப்ப காலியாகும் என்று காத்து இருக்கிற மாதிரி ஒரு கருத்து.......


- Ilayathambi - 04-17-2006

இது ஒரு கருத்துக்கணிப்பு. இதைப் பார்த்துவிட்டு விடுதலைப்புலிகள் சண்டையை தொடங்க மாட்டார்கள். ஆனால் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது, அல்லவா? பெரும்பான்மையான மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்று தெரிகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.


- kurukaalapoovan - 04-17-2006

நேற்று நடந்த நிலவரத்தில் சொல்லப்பட்ட கருத்து ஒன்று:
சிங்களத்தரப்பும், போராட்டத்திற்கு எதிரா ஏனைய சக்திகளும் இதுவரை காலமும் செய்து வந்த பிரச்சாரம் புலிகள் தான் யுத்தத்தை விரும்புகிறார்கள், புலிகள் தான் கடந்த காலத்தில் போச்சுக்களை குளப்பி யுத்தத்தை ஆரம்பித்தார்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக.
எனவே இந்த முறை மக்களின் எழுச்சிகள், அவர்களிடம் போச்சுக்கள் மூலம் தீர்வை பெறமுடியாது என்று நம்பிக்கையிழந்து செலும் மாற்றங்களை என்பவற்றை சர்வதேசம் அவதானித்து அறிந்து கொள்ளவேணும்.

நடந்து முடிந்தவற்றை இருதரப்பாரும் சொல்லும் போது அதை அவர்களுடைய பிரச்சாரத்திலிருந்து வேறுபடுத்திப்பார்பதில் 3ஆம் தரப்பிற்கு சிக்கல்கள் இருக்கு. ஆனால் நிகழ்காலத்தில் நடப்பவற்றை 3ஆம் தரப்பு குளப்பமின்றி அவதானித்து முடிவுகளிற்கு வருவதற்கு சந்தர்பமாக இந்த பொறுமையிருக்கிறது.


- Ilayathambi - 04-18-2006

எங்கள் எல்லோருக்கும் சமாதானம்தான் வேண்டும். எந்த ஒரு மனிதனும் கொல்லப்படாத சமாதானம் வேண்டும். ஆனால் இப்பொழுது என்ன நடக்கின்றது. தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். ஆகவே விடுதலைப்புலிகள் தமிழினத்தை காப்பாற்றவும் தமிழீழத்தில் சமாதானத்தை கொண்டு வரவும் யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும். இதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

www.webeelam.com இணயத்தில் மீண்டும் சுதந்திரப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்று வாக்களிப்பவர்களும் அப்படித்தான் நினைப்பார்கள்.


- uoorkkruvi - 04-20-2006

தம்பி ராசா இளையதம்பி தமிழ்நாடு என்னத்திலை இருந்து விடுதலை பெற வேண்டும்.
சினிமாவிலை இருந்தா?
அரசியல்வாதிகளிடமிருந்தா?


- Ilayathambi - 04-20-2006

<b>இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக வேண்டும்</b>

அரசியல்வாதிகள் சினிமா எல்லாம் தமிழ்நாட்டின் உள்விடயம்


- kurukaalapoovan - 04-20-2006

இளையதம்பி, நீங்கள் தமிழ்நாட்டு தமிழரா இல்லை ஈழத்தமிழரா?


- Thala - 04-20-2006

kurukaalapoovan Wrote:இளையதம்பி, நீங்கள் தமிழ்நாட்டு தமிழரா இல்லை ஈழத்தமிழரா?

தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்கள்...??? அவருக்கு சமாதி... சா.... தூபி கட்டப்போறீங்களா....??? ஆ..ஆ..ஆ :evil:


- kurukaalapoovan - 04-20-2006

எது தேவையோ அதைக் கட்டுவம் :mrgreen:


- Thala - 04-20-2006

kurukaalapoovan Wrote:எது தேவையோ அதைக் கட்டுவம் :mrgreen:

தெளிவாகத்தான் இருக்கிறீங்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Ilayathambi - 04-20-2006

எந்த நாடாக இருந்தால் என்ன? இரண்டுமே தமிழரின் தாயகம். என்னை "தமிழன்" என்று அடையாளப்படுத்துவதையே விரும்புகிறேன்.



- kurukaalapoovan - 04-20-2006

இளையதம்பி, இரண்டும் தமிழரின் தாயகம் என்று தெரியும். நீர் தமிழன் இல்லை என்றா கேட்டேன்? தமிழ்நாடு இந்தியாவிடம் இருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்று கூறுவதற்கு எங்கிருந்து உரிமை பெற்றீர்கள்?

நீர் தமிழ்நாட்டுத் தமிழனா?