kuruvikal Wrote:சரியான வரலாறு தெரியாட்டி அப்ப எதை வச்சு நீங்கள் எழுதுறதில நியாயம் அல்லது நல்ல கருத்து இருக்கென்று முடிவு செய்யுறீங்க....?????
நா எனக்கு தெரிஞ்சதை எழுதுறேன் தப்பா இருந்தா சொல்லுங்கன்னு எத்தினி வாட்டி சொல்லுறேன். எல்லாமே சரியா தெரிஞ்சா ஏன் நா மத்தவங்க கருத்த கேக்கணும்? நா எனக்கு தெரிஞ்சதை எழுதுறேன் நீங்க உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க அதுதானே கருத்துக்குக்களம். கேள்வியே கேக்காம ஏத்துகனும் அப்பிடின்னு நினைக்காதீங்க. அது கருத்துக்களம் கிடையாது.
kuruvikal Wrote:சும்மா தேர்தலில நிண்டு வெள்ளை வேட்டி கட்டினாப் போல தலைவர்கள் ஆக முடியாது...குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர் அம் மக்களின் துயரங்களை கஷ்டங்களை நீக்க நல்ல முயற்சிகள் செய்ய வேண்டும்...அதுவும் எந்தப் பாகுபாடும் இல்லாமலே...!....?????
உண்மை.
kuruvikal Wrote:ஆறுமுகம் தொண்டமான் தனித்துக் கேட்டாலும் UNP இல தமிழர்கள் நிண்டு கேட்டாலும் வாக்குகள் விழுகுதுதானே....ஆனா மக்கள் ஏனோ தானோ என்று தான் வாக்குப் போடுகிறார்களே தவிர எந்த நம்பிக்கையிலும் அல்ல...இவர்களைவிட மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரையே நாம் தலைவர் என்போம்...அப்படியாராவது இருக்கிறார்களா.....??????! பாவம் அந்த மக்கள்...தங்கள் கையால் தாங்களே தங்கள் தலையில் மண்ணள்ளிப் போடும் நிலையில்....! தெரிந்தும் தவிர்க்க முடியாத நிலையில்....!...
நல்ல தலைவர் இல்லைன்னா சாபக்கேடுதான்.
kuruvikal Wrote:அதுதான் சன நாய் அகத்தின் மந்திரஜாலமே....!
அப்பிடின்னா ஐனநாயகம் வேணாம் சர்வாதிகாரம் தான் வேணுமுன்னு சொல்றீங்களா?
kuruvikal Wrote:நீங்கள் ஏன் ஆறுமுகம் தொண்டமானையே முதன்மைப்படுத்துகிறீர்கள்.....????
நா ஆறுமுகம் தொண்டமானை முதன்மைப்படுத்தலை. யார் என்ன கேட்டிருக்காருன்னு முழுசா மேலை படிங்க. யாழ் அவங்க தான் அவர் பேரை சொல்லி கேட்டிருக்கார்.
kuruvikal Wrote:மலைய மக்கள் தமிழீழம் கேட்கவில்லை ஆனால் தமிழீழத்திலும் வாழ்கிறார்கள்....அது உலகிற்கு சமீபத்திய இடைக்கால தீர்வுத் திட்டத்தில் தெளிவாக காட்டி இருக்கு.....தமிழீழப் பிரச்சனை மேடையில் தான்... திம்புவில்... மலைய மக்களின் பிரஜா உரிமை பற்றி பேசப்பட்டது....நாம் தமிழர்களே அன்றி பிரதேசத்தால் எமக்குள் வேறுபாடில்லை...இதை BBC உணரும் வரை BBC க்கு அரசியல் தெளிவு வராது..சிங்களவர்கள் மலையகத்தில் வேறுபட்ட அரசியல் பின்னணியில் வாழ்ந்தாலும் சிங்களவர்களாகத்தான் இருக்கின்றனர்...அதே போல கொழும்பு கண்டி என்று அவர்கள் பிரதேச அரசியல் பேசுவதில்லை...தயவு செய்து BBC உங்கள் தெளிவற்ற அரசியல் சிந்தனைகளை இங்கு விதைக்காதீர்கள்....
தமிழங்களை பிரிக்ககூடாது எல்லா தமிழங்களும் ஒன்னுதான். ஆனா துரதிஸ்வசமா பிரிஞ்சுதான் இருக்காங்க. எத்தினை பேர் மலையக மக்களை சேத்துக்கிறாங்க? மலையத்தில்ல போய் பாருங்க ஒரு பக்கம் அவங்க தலைவங்களும் மத்தப்பக்கம் இலங்கை தமிழ்ங்களும் அவங்களை போட்டு சுரண்டுறதை. சிங்களவங்களை பத்தி சொல்லவேண்டியதில்ல. இன்னும் மலையக மக்களை மத்த தமிழங்க தோட்டக்காட்டான் அப்பிடின்னு தான் கூப்பிடுறாங்க?
முதல்ல மலையக மக்களுக்கு அடிப்படை பிரைச்சனைகளை தீர்க்கணும். சோறும், வீடும், உடுப்பும் குடுக்கணும். அதுக்கு அப்புறம் தான் மத்ததெல்லாம். இது என் தனிப்பட்ட கருத்து.
மலையக மக்கள் பத்தி நா இங்க ஆரம்பிக்கலை. யாழ் அவங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்.
யாழ்/yarl Wrote:இதே கேள்வியை ஏன் ஆறுமுகம் தொண்டைமான கேட்கவில்லை..?
நீங்களே யாழ் கேள்விக்கு பதில் சொல்லுங்க.
kuruvikal Wrote:மலையக மக்கள் உங்களிடம் அல்லது அவர்கள் தலைவர்களிடம் சொன்னார்களா எங்களுக்கு தனிநாடு கேட்க வேண்டாம் என்று.....??????????
அது எனக்கு சரியா தெரியாது. தெரிஞ்சவரைக்கும் கேக்கலை.