Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
உங்கள் நளினம் நல்லா விளங்குகிறது.
என்ன பிபிஸி(தாத்தா).
அன்பகம் இதுக்கெல்லாம் போய் கவலைப்படலாமா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நல்ல கேள்வி B.B.C யார் சொன்னது முஸ்லிம்கள் சுயாட்சி கேட்பது தவறு என்று தனி அலகு,தனி மாநிலம், தனி நாடு வேண்டுமானாலும் கேட்கட்டும் அது அவர்கள் உரிமை ஆனால் காகம் கூடுகட்ட களவாக முட்டையிட்ட ஒரே காரணத்தை வைத்து குயில் காகக்கூட்டில் பங்கு கேட்கலாகாது இது எங்கள் போராட்டம் நாங்கள் வியர்வைக்கு பதிலாக இரத்தம் சிந்தி வளர்த்த சுதந்திரப்பயிர் இது இதில் எள்ளளவும் நாங்கள் விட்டுக்கொடுக்கத்தயார் இல்லை
முஸ்லிம்கள் குடியிருக்கும் ஒரே காரணத்திற்காக அம்பாறையையோ,புத்தளத்தையோ கேட்டால் தருவதற்கு எம்மால் முடியாது ஏனென்றால் அவை இன்னும் எமக்கு சொந்தமாகவில்லை நாங்களும் இன்னும் போராடிக்கொண்டுதானிருக்கிறோம்
எனவே எங்கள் போராட்டத்தில் குளிர்காய்ந்துவிட்டு இராணுவத்துடன் சேர்ந்து எம்மக்களை அழித்துவிட்டு இன்று வந்து சுயாட்சி சம பிரதிநிதித்துவம் என்று கேட்பது என்ன நியாயம் போராடுங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இல்லை சிறுபான்மை இனத்துக்கு உரிமைகளை தரமறுக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக உங்கள் குரல் ஒலிக்க வேண்டியது பேச்சுவார்த்தை மேசையில் அல்ல களத்தில்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
முஸ்லிம்கள் இன்று சொல்கிறார்கள் தாம் தனி இனம் தமக்கு என்று தனி கலாச்சாரம் மொழி எல்லாம் உண்டு என்று உண்மைதான் அதவிட அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு உண்மை தமிழர்கள் தமது உரிமைக்காக ஆயுதம் தூக்க முன்னர் அரசியல் ரீதியாக போராடிய போது இது தமிழர்களுக்கான தனிநாட்டு போராட்டமாக இருக்கவில்லை சிறுபான்மை மக்களது(தமிழ்,முஸ்லிம்,மற்றும் )உரிமைகளை வென்றெடுப்பதற்காண போராட்டமாகத்தான் இருந்தது அன்று இந்த முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஏன் இதனை அவர்கள் அப்போதே கேட்கவில்லை? தாங்கள் தனி இனம் தமக்கு என்று உரிமை வேண்டும் என்பது ஏன் அப்போதே உறைக்கவில்லை?
சரி அப்போது தான் அவர்களுக்கு இந்த இனம் உரிமை என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளுவோம் பின்னர் பேசிப்பயன் இல்லை என்று தெரிந்தவுடன் தமிழர்கள் ஆயுதம் தூக்கினார்களே அன்றே இவர்களும் தனியாக(இப்போது வைத்திருக்கிறார்களே சில குழுக்கள் அப்படி)போராட்டம் அரம்பித்திருக்கலாமே?ஏன் செய்யவில்லை இவர்கள் செய்ததெல்லம் அரசாங்கத்திற்கு வால் பிடித்ததும் போட்ட ஆமா போட்டதும் தான்
சரி அன்று கூட இவர்களுக்கு ரோசம் வீரம் எதுவும் வரவில்லை என்று வைத்துகொள்வோம் பின்னர் எமது போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு இந்திய இராணுவம் கூட வந்ததே அவர்களுக்காவது நாலு அடி அடித்திருக்கலாமே இது என்னுடைய மண் இங்கு வேற்று நாட்டான் நீ எப்படி வரலாம் என்று? ஏன் அடிக்கவில்லை?
சரி அன்று கூட உங்களுக்கு வீரம் வரவில்லையென வைத்துக்கொள்வோம் அதன் பின்னர் 1,2,3, என ஈழப்போர் பரிணாமம் எடுத்ததே அப்போது எல்லாம் நீங்கள் என்ன செய்தீர்கள் அப்போது கூட பேச்சு வார்த்தைகள் நடந்ததே ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை? அன்றெல்ல்லாம் உங்களிற்கு தேவைப்படாத தனி அலகும் சுதந்திரமும் இன்றேன் தேவைப்படுகிறது
இது எமக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை எமது எமது உரிமைகளை பிரச்சனைகளை பேசித்தீர்த்துக்கொள்கிறோம் இதில் உன்களுக்கு இடம் இல்லை உங்களுக்கு வேண்டுமானால் போராடுங்கள் தமிழர் ஆதரவு மட்டுமல்ல புலிகள் ஆதரவு கூட உங்களுக்கு கிடைக்கும் அன்று உங்கள் குரலை செவிமடுத்து சர்வதேசம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அன்று அரசாங்கத்துடன் பேசுங்கள் நாங்கள் வருகிறோம் இன்னும் உரிமை கேட்கவல்ல மூன்றாந்தரப்பு மத்தியஸ்தராக
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
இருந்த பகுதிகளை நாங்கள் தாரை வார்க்கவில்லை ஆக்கிரமித்தார்கள் அடித்தோம் போராடினோம் இன்று பேச்சு வார்த்தையென்று நாங்கள் பிச்சை கேட்கவில்லை வந்தார்கள் வரவேற்றோம் இனியும் அடித்தால் திருப்பி அடிப்போம்
மடிந்தாலும் மறவனாக மடிவோமன்றி தந்ததை வாங்கிவிட்டு வாலாட்டுபவர்களாக இல்லை
இன்னும் வெல்லவில்லை வெற்றியும் தூரத்திலில்லை
தாத்தா உங்கள் சண்டையை கருத்துக்கள பொறுப்பாளர்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் கருத்துக்கு பதிலை மட்டும் எழுதுங்கள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
என்ன நாடு நாடாக போய் சண்டை காணும் தயவு செய்து சமாதானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கோ என்று கேட்டமோ? நாட்டு மக்களை வகை தொகையின்றி அழிப்பது பொறுக்காமல் தான் நேசக்கரம் நீட்டினோம் ஏன் சிங்களவனுக்கு துணிவிருந்தால் மறுத்திருக்கலாமே
நாங்கள் வீரம் பேசத்தான் செய்வோம் அப்பு ஏனென்றால் தாயின் முலைப்பல் அப்படி
அத்துடன் பொறுப்பளர்கள்டன் என்னை முடிச்சு போட வேண்டாம் உங்களுடன் எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை கருத்துவிரோதம் தான் நீங்கள் எழ்துவதற்கு மறுப்பு சொவேனேயொழிய மறைக்கமாட்டேன்(மறுப்பு நாகரிகமாக வந்தால் மாத்திரம் ஏனெனில் இக்களத்தில் எழுதுவது ஒரு 30 பேர் இருக்குமா? ஆனால் தினமும் 300 பேர் பார்ப்பார்கள் அவர்களுக்காக அம்மணம் தான் யதார்த்தம் தாத்தா அதுக்காக
காட்டமுடியாது )
அதுசரி களப்பொறுப்பாளர்கஆளுக்கு மாத்திரம் தான் இன உணர்வு இருக்குமோ
வேண்டுமானால் மதி என்று ஒரு களம் ஆரம்பியுங்கள் முதல் ஆளாக நான் சேர்கிறேன் எந்த வெட்டுமிலாமல் உங்கள் சாத்தான் வேதம் ஓதலாம்
பதில் சொல்ல நான் இருக்கிறேன்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நாங்கள் நாடு நாடாக போய் கேட்பது எம்மக்களிடம் உதவி தான்
அகதி அந்தஸ்து கேட்கவில்லை
எங்கே உமக்கு தான் எல்லாம் தெரியும் என்றால் ஆதாரத்துடன் எடுத்து வையும் பார்ப்போம்
அழிவும் இறப்பும் சுதந்திரப் போராட்டங்களுக்கு புதிதல்ல ஆயிரமாயிரமாய் இறப்பு வரும் எனப்பயந்தால் இந்தியா கூட சுதந்திரப் போராட்டத்தில் இறங்கியிருக்காது
எங்கே இழப்பின்றி சுதந்திரம் வாங்கிய நாடு சொல்லுங்கள் பார்ப்போம்
இந்தியர் இலங்கை வந்த போது தலையில் தூக்கி கொண்டாடியவர் நாமல்ல தாத்தா உங்களை போன்ற அடிவருடிகளும் அவன் போட்ட மாவுக்கு அடிபட்டவர்களும் தான்
சிங்களவனாக இருந்தாலும் தன் நாட்டில் வேற்று நாட்டன் வருவதை விரும்பாமல் துப்பாக்கியால் அடித்தானே கடற்படை சிப்பாய் அவன் வீரன் தாத்தா
நீரே உமக்கு இருக்கும் உரிமையை வைத்து எழுதியதை அழிக்கிறீர் சேர்க்கிறீர் உம்மாலேயே ஒரு கொள்கையில் நிற்கமுடியவில்லை நீர் சாத்தான் வேதம் பற்றி சொல்கிறீரா
அது சரி எனக்கு எப்ப மொடெறேறர் பதவி தந்தார்கள்?
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
ஒரு அரசியல் தலைவர் ஈழ மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்ற முறையில் அவரை வாழ்த்தினோம் ஆனால் நீர் தான் எங்கள் கடவுள் என்று போற்றவில்லை அது உங்கள் வேலை
வாங்கிறதையும் வாங்கித்திண்டிட்டு வாய்ச்சாலம் பேசுறது
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தாத்தா பொய்யை எத்தனை முறை சொன்னாலும் எங்கே சொன்னாலும் எந்த வடிவில் சொன்னாலும் அது பொய்தான் அதை ஏன் இந்தக்களத்தில் எழுதுவான் ஏன் பொறுப்பாளர்களுடன் வாதிடுவான் நிறைய சிங்கள தளங்கள் ஏன் ஈ.பி.டி.பி.யின் தளம் கூட இருக்கிறதே அங்கே எழுதலாமே எனது கேள்வியே வெட்ட வெட்ட எழுதவேண்டும் என்ற உங்கள் உணர்வு அதுதான் தாத்தா போராட்ட குணம் அதை தானே நாங்களும் செய்கிறோம் வெட்டுகளுகாக நீங்களும் எழுதாமல் விடவில்லை வீழ்வோம் என தெரிந்தும் நாங்கள் போராடாமல் விடவில்லை அவர்கள் வெட்டுவார்கள் என தெரிந்துமே எழுதுகிறீர்களெ ஏன் தாத்தா இங்கே எழுத வேண்டும் என என்ன கட்டாயம்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
அப்பு உங்களுக்கு பதில் எழுதியவாறு ஆராய்ந்து பார்த்ததில் ஒன்று தெரிந்து கொண்டேன் தாத்தா மதிவதனன் யார் என்று நடக்கட்டும் நாடகம் இன்னும் யார் யாரெல்லாம் கண்டு பிடித்திருப்பார்களோ?
அதெப்படி உங்களால் மட்டும்...............................................
\" \"
Posts: 169
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
நான்கூட கண்டுபுடிச்சிக்கிட்டேன்.
ஆமா மதிதாத்தா யாரு? :|