Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தவரின் மண்! திரைப்படம்!
#41
குமுதத்தில் வாசித்தபடியால் நான் நடிகர் சந்திரசேகரினைப்பிழையாக நினைத்துள்ளேன். சுட்டிக்காட்டிய சண் அவர்களுக்கு நன்றி. தமிழகத்தினைச்சேர்ந்த தமிழ் பேசும் பார்ப்பணர்கள் பொதுவாக ஈழத்தமிழ் மொழியினை 'சிங்களத்தமிழ்' என்று தான் கூறுவார்கள்.

'மண்' படத்தில் நடித்த நடிகர் சுகுமார், தமிழகத்தில் வெற்றிகரமாக ஒடிய 'காதல்' என்ற படத்தில் நகைச்சுவைப்பாத்திரத்தில் நடிகர் வடிவேலின் சாயலில் நடித்திருந்தது பலருக்குத் தெரியும். இவர் இலங்கை மலையகத்தமிழர், பிறகு வன்னியில் கணகாலம் வாழ்ந்து, தற்பொழுது தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழகத் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

'மண்' படம் இன்னும் அவுஸ்திரேலியாவில் காண்பிக்கப்படாததினால் நான் பாக்கவில்லை. வரும் மாதங்களில் சிட்னியில் காண்பிக்கப்படவுள்ளது.
! ?
'' .. ?
! ?.
Reply
#42
மாற்று, கனவுகள் நிஜமானால் என்ற
திரைப்படங்களை இயக்கி அனுபவம் பெற்ற
புதியவன் இயக்கிய மற்றொரு திரைப்படம்
ஹமண்'. இத்திரைப்படத்தை விமர்சிக்க எனக்கு
ஒன்றுமில்லை. ஒரு வரியில் சொல்வதானால்
"சிறுபிள்ளைத்தனமான ஒரு திரைப்படம்.'

இத்திரைப்படம் பற்றி ஏதும் எழுதத்தான்
வேண்டுமா, எழுதுவதென்றால் என்ன எழுது
வது, எப்படி எழுதுவது, என்றெல்லாம் பொறுப்
பாசிரியரும், ஆசிரியர் குழுவில் மூவரும்
இணைந்து உரையாடினோம். திரைப்படம்
காட்சிப்படுத்தப்பட்ட அந்தத் தினத்து இரவு,
விடிய வரைக்கும் கூட எங்களது கதையாடலில்
இது ஒரு விசயமாக இருந்தது. அந்த விதத்தில்
இது பாதித்திருந்தது. எப்படியென்று
சொல்கின்றேன்.

வன்னியில் கனகராசன் குளத்தில் நடக்கின்ற
கதைதான் இத்திரைப்படம். 83 இனப்
படுகொலையில் மலையகத்திலிருந்து ஒரு
குடும்பம் வன்னிக்கு இடம் பெயர்கின்றது.
"தோட்டக்காட்டார்" என்ற இழிசொல்லுடன் அக்
குடும்பம் படும் அவமானமும் இன்னலும்
ஊடுபாவாக இத்திரைப்படத்தில் ஓடுகிறது.
சேர்ந்தாற் போல மலையக இளம் பெண்ணை
வன்னி இளைஞன் காதலிப்பதும, கர்ப்பமாக்கு
வதும் கைவிட்டு ஓடுவதும் சுமார் 18 வருடங்களின்
பின் (16,18 என்றெல்லாம் எங்களைக் குழப்பு
கிறார்கள்) ஏமாற்றிய வன்னி இளைஞன்
இலண்டனிலிருந்து ஊருக்கு வந்தபோது
அவனது மகனான விடுதலைப் புலி இயக்கப்
போராளியால் சுட்டுக் கொல்லப்படுவதுடன்
திரைப்படம் நிறைவுறுகிறது.

தெளிவற்ற, மிகப் பலவீனமான திரைப்படப்
பிரதி எங்களை நன்றாகவே குழப்பி விடுகிறது.
காட்சி அமைப்புகளும் அப்படியே அமைந்து
விடுகின்றன. சில உதாரணங்களைப் பார்ப்
போமோ வன்னிப் பாடசாலை ஒன்றில் க.பொ.
த. சாதாரண தரம் படிக்கின்ற மாணவ மாணவி
யர் சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர்
ஒன்றாகவே பாடசாலை செல்கின்றார்கள்.
அவர்களுக்குள்ளும் ஆசிரியருடனும் இரட்டை
அர்த்த வசனங்கள் தாராளமாகவே புழங்கு
கின்றன. வன்னி மாணவர்கள் பியர் குடித்து
விட்டு பாடசாலைக்கு வருகிறார்கள். பின்னேரங்
களில் கள்ளு குடிக்கப் போகிறார்கள். "கவிதை
வாசித்து கவிழ்த்து விடப்பட்ட' மலையக
இளம்பெண் திருமணத்திற்கு முன் உடலுறவில்
ஈடுபட்டதற்கு எவ்வித மனக்கிலேசமும்
அடையவில்லை. பனடோல் குடித்தோ பப்பாசிக்
காய் சாப்பிட்டோ கருவைக் கலைத்து விடலாம்
என்கிறாள். ஆனால் கரு உருவானபோது
ஹகுய்யோ முறையோ' என்று குமுறுகிறாள். அந்த
இளைஞனை குற்றம் சாட்டுகிறாள். அரசியலால்
சுூழப்பட்ட வன்னிப் பிரதேசத்தில் ஒருவருக்கும்
அரசியல் ஒரு பிரச்சினையாக இல்லை.
காதல்தான் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு
தேசமாக போராளிகளின் நிர்வாகத்தில் வன்னி
வந்த பிறகு, தென்னந்தோப்பில் பகிரங்கமான
இடத்தில், சாராயம் குடித்து ஆண்களும் பெண்
களும் பைலா ஆடுகிறார்கள். அவர்களில்
போராளிகளும் இருக்கின்றனர். விடுங்கள்-
ஆயிரம் குறைகள் இருக்கின்றன. எல்லாவற்றை
யும் அடுக்க இடம் போதாது.

என் கேள்வி வேறொன்று. இப்படித் திரைப்
படங்கள் எடுக்கத்தான் வேண்டுமா? இத்திரைப்
படம் தயாரிப்பதற்கான செலவு நு}றாயிரம்
பவுண்ஸ் என்று இயக்குனர் புதியவன் சொன்ன
தாக ஒருவர் சொன்னார். இவ்வளவு செலவில்
இப்படி ஒரு திரைப்படம் தயாரிப்பது மிகப்
பிழையான முன்னுதாரணம் ஆகி விடாதா?
ஒன்றை இந்த இடத்தில் நாம் உணர
வேண்டும். ஆயிரம் குறைகள் இருந்தாலும,
இப்பொழுதுதானே குழந்தை அது தவழத்தானே
பார்க்கும். அதற்கிடையில் எழும்பி நடக்க
வேண்டும் என்று அவசரப்பட்டால் அது எங்ஙனம்
சாத்தியம் என்று யாரேனும் சொல்வாரானால,
அடியோடு நான் அந்த வாதத்தை மறுப்பேன்.

ஈழத் தமிழர்களால் 60களில் தோட்டக்காரி
சமுதாயம் என்ற திரைப்படங்களில் தொடங்கி
சுமார் அரை நு}ற்றாண்டு ஆகி விடுகின்ற
ஞஉலையில் அது தவμம் தானே என்றால், அந்தக்
குழந்தையில் ஏதோ பிழை இருக்கின்றது. அது
சவலைக் குழந்தை. அப்படித்தான் நினைக்க
வேண்டும்.

ஆனால் அப்படியல்ல. திரைப்படம் என்பது
உன்னதமான கலை என்பது ஒருபுறமிருக்க,
அது பணத்தை அதிகம் கொட்ட வேண்டிய
கலையும் கூட. கொட்டிய பணத்தை திரும்ப
எடுக்க வேண்டும். ஆக, திரைப்படங்களுக்கு
சந்தை நிலவரத்துக்காக சமரசம் செய்வதென்ற
ல்ல, தரமான படைப்பாகப் கொடுக்க வேண்டிய
தேவை உண்டு. எனவே குறைந்த செலவில்
தரமான திரைப்படத்தை உருவாக்குவது பற்றி
நாம் யோசிக்க வேண்டும்.

இது எங்களால் இயலுமா? 1930களில் ஆரம்
பித்த தமிழ் நாட்டுத் திரைப்படம், இப்போதுதான்
சிறந்த திரைப்படங்களைத் தருகின்ற களமாக
ஆகி வருகின்றது. இத்தனைக்கும் சந்தை
நிலவரம் உச்சத்தில் இருக்கின்ற ஒரு களம்
அது. அதற்கே இவ்வளவு காலம் எடுக்கிறது.
இந்தப் பக்கத்தையும் நம் கவனத்தில் கொள்ள
வேண்டும்.

இறுதியாக புதியவனுக்கு ஓர் அட்வைஸ்.
அறிவுஜீவியாக புதியவன் இதனைக் கேட்பாரோ
என்னவோ. என்றாலும் சொல்வது எமது கடமை.
திரைப்படப் படைப்பு தொடர்பான உங்கள்
ஆர்வம் எமக்குப் புரிகிறது. தமிழீழத்திலும்
திரைப்படம் ஒரு படைப்பாக நன்கு வளர்கின்
றது. அங்கு செல்ல உங்களுக்குத் தயக்கம்
இருக்கலாம். தமிழ்நாட்டுக்குச் சென்றுஇ ஒரு
திரைப்பட இயக்குனருக்கு உதவியாளராகப்
பணிபுரிந்து இக்கலவையப் பற்றி ஓரளவுக்
காவது கற்று திரைப்படங்களைப் படைக்க
முயலுங்கள். மணிரத்னம்இ பாலா. சேரன.
சீமான, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், தங்கர்
பச்சான், சுசி கணேசன், விக்ஷ்ணுவர்த்தன,
அமீர் போன்றோரை நான் சிபார்சு செய்வேன்.
முயற்சி செய்யுங்கள். பப்பாவில் ஏற்றுபவர்களை
உங்களை விட்டு அகல நிற்கச் செய்யுங்கள்.
-சேயோன்

நன்றி : ஒரு பேப்பர்
Reply
#43
மண்ணைப் பற்றி கட்டிவைச்ச கோட்டையை ஒரு பேப்பர் சேயோன் உடைச்சுக் கொட்டிட்டார். லண்டனிலை மண்ணைப் பாத்த கனபேரின் அபிப்பிராயமும் சேயோனினதுதான். ஆனால் புதியவன் இதையெல்லாம் கோபிக்காது நல்ல படங்களை எடுக்க வேண்டும்.
:::: . ( - )::::
Reply
#44
ஒரு பேப்பரில் வந்த விமர்சனத்தை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் மஞ்சு! விமர்சனம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் சேயொனின் விமர்சனத்தை நான் நிச்சயமாக ஒரு விமர்சனமாக எடுத்தக்கொள்ள மாட்டேன். காரணம் அவர் மிக அவசர அவசரமாக ஒரு பேப்பரில் வைத்தது விமரல்சமே அல்ல, மாறாக பழிக்குப் பழிவாங்க ஒரு சந்தர்பமாக பாவித்ததே.

புதியவன் சில மாதங்களுக்கு முன் திரு சேயொனின் உண்மைப் பெயரிற்கு உரியவரை ஒர நாவல் சம்பந்தமாக விவாதித்தன் பழி வாங்கலே மேற்கண்ட விமர்சனம். மேலே கூறிய விமர்சனங்கள் அவரின தனியான கருத்து ஆதை நான் மறுதலிக்க வரவில்லை.
ஆனால் சேயோன் தனக்கே உரிய பாணியில் சிண்டு முடியும் வேலை செய்ய வந்தமையே அவரின் பிறபோக்கு தனமான விமர்சனத்தை தௌ;ள தெளிவாக்கி நிற்கிறது.

ஒரு படத்தை விமர்சிப்பவர் அந்த படத்தின் முடிவையே அல்லது கடையோட்டத்தையோ சொல்வது அழகல்ல. அது மட்டுமல்லாது நான் அப்படியான எந்த ஒரு விமரிசனத்தையும் நான் எங்கும் வாசித்தில்லை. பராவாயில்லை சேயொன் இதையாவது கொப்பியடிக்காது விட்டாரே அதுவே ஆறுதல். படத்தில் மகன் விடுதலைப் புலி உறுப்பினரின் அங்கத்தவர் என்று ஒரு இடத்திலும் காட்டப்படவே அல்லது பேசப்படவோ இல்லை. ஆனால் அது சேயோனுக்கு புரிய நியாயமில்லை. காரணம் படம்ட ஆரம்பித்த கணத்திலிருந்து திரு செயோன் படம் பார்க்கவில்லை. அருகில் இரந்த நபருடன் ஏதோ சூடாக விவாதித்துக்கொண்டிரந்தார். இவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் படம் பார்பது பற்றி எந்த வித அக்கறையும் இல்லாது. ஆனாலும் உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறோம்.

இந்த செயோன் அவரக்ள கனவுகள் நிஜமானால் படத்தை பாரக்காமலே இந்த பெயரிலை படம் வைத்தால் அரும் பாப்பினமோ எண்டு எழுதினர். பரவாயில்லை இந்த முறை படத்தியட்டருக்காவது வந்து குந்தியிருந்ருது போட்டு போனாரே அதே நல்ல விசியம் தானே.

சேயோன் அவர்களின் விமர்சனம் ஒரு விசமத்தானமாக இருந்தாலும் அதில் சில நல்ல விசியங்களையும் சொல்லியிருக்கிறார். ஆனால் அது நடைபெற நாம் சேயோனைதான் பிடிக்க வேண்டும். அதாவது அவர் சொன்ன இயக்குனர்களிடம் போய் உதவியாளராக இருப்பதற்கு ஐயா சேயோன் தயவு செய்து புதியவுனக்கு உதவுங்கள். அங்கை வரிசையிலை தமிழ் நாட்டு கலைஞர்கள் நிக்கினம். எப்படியாவது உங்கடை செல்வாக்கை பாவித்து இடையிலை புகுத்தி விடுங்கோ!

இது வரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்த மண் படத்தில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஆனால் திரு சேயோன் அவர்கள் கூறிய குறைபாடுகளை அந்த ரசிகர்கள் வைக்கவி;ல்லை. அவர்கள் படத்தின் ஆழத்தை புரிந்து தரமான விமர்சனங்களை வைத்தார்கள். அது மட்டுமல்லாது தென்னிந்தியாவில் நமது திரைபடம் ஒன்று திரையிட வேண்டுமாயின் அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை அப் படத்தை தயாரித்தவர்களுக்கு மட்டுமே புரியும். அதையும் தெரிந்து கேட்டு விட்டு விமர்சனம் வைத்திருக்கலாம். அதற்கு எங்கே உங்களுக்க நேரம். ஒரு வரன் வளர முற்பட்டால் அவனை எப்படி அடிச்சு விழுத்தாலம் என்பதில் நீங்கள் எவ்வளவு ஆராக்கியமானவர் என்பதை நாம் நன்கே அறிவேம். இருந்தாலும் புதியவன் வெகு விரைவில் உங்கள் விமர்சனத்திற்கு பதிலை தருவார் என நம்புகிறேன்!
Reply
#45
இங்கு சண் என்ற பெயரில் எழுதியுள்ளது இந்த படத்தின் இயக்குனர் சண் அதாவது புதியவன் என நம்புகிறேன். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்த விமர்சனத்தை இங்கு பதிவு செய்தவன் என்ற வகையிலும் இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையிலும் சில கருத்துக்களை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.

சேயோனுக்கும் சண்ணுக்கும் (புதியவன்) இடையிலான பிரச்சனைகள பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால் சேயோனின் விமர்சனத்துடன் ஒத்திசைவான கருத்துக்கள் இருந்தமையால்தான் அதனை இங்கு பதிவாக்கினேன்.

புதியகாற்று, பொன்மணி, நான் உங்கள் தோழன், வாடைக்காற்று, கோமாளிகள், ஏமாளிகள், அனுராகம், நாடுபோற்ற வாழக என பல ஈழத்து திரப்படங்களையும் எண்ணற் சிங்கள (தரமான) திரைப்படங்களையும் பார்த்தவன் என்ற வகையில் மண் படம் பெருத்த ஏமாற்றத்தையே தந்தது. இத்தனைக்கும் விருது பெற தகுதியான படம், திரைப்படவிழாவுக்கு போகிறது என மண்ணாங்கடடியை சர்க்கரையாக்கும் கருத்துக்களும் இங்கு முன்பு பதியப்பட்டது.

விடுதலைப்புலிகள் என்ற பெயர் படத்தில் பாவிக்கப்படாவிட்டாலும், 83லிருந்து 18 வருடத்துக்குபிறகு கனகராசன் குளம் யாருடைய ஆழுகைக்குட்பட்டுள்ளது என்பது 7-8 வயது குழந்தைகளுக்கும் தெரிந்த விடயம்.

நான் முன்பு குறிப்பிட்ட ஈழத்து தமிழ்ப்படங்களை பாரக்கும் போதெல்லாம் ஈழத்து திரைப்படம் வளர்ந்து சிங்கள சினிமா போல் திரைப்படவிழாக்களுக்கு தெரிவாகி விருது பெறும் என நம்பியிருந்தேன். மண் மாதிரி படங்கள் தொடர்ந்து தயாரானால். அது இந்த யுகத்தில் நிறைவேறும் மாதிரி தெரியவில்லை. சரி கலைபடம் எடுக்கவில்லை, தென்னிந்தியாவில் திரையிடும்படியா இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது?

மறுபடியம் கூறுகிறேன் எந்த காழ்ப்புணர்ச்சியிலும் இதனை கூறவில்லை. எனது கருத்துக்கள் சரியா தவறா என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக ஒரு தடவையாவது படத்தை பாருங்கள்.
Reply
#46
எங்களுடைய ஆக்களின் இலக்கியமோ கலையோ இன்னும் வளராமைக்கு காரணமே விமர்சனங்களை ஏற்காதது தான். இதைத்தான் புதியவனும் செய்கிறார்.

சேயோனின் இயற்கையான குணம் முன்னேறுபவர்களை முளையிலேலே புடுங்கி எறிவது. தன்னை மிஞ்சிவிடுவார்கள் மற்றவர்கள் என்ற குணம் அவர் வானொலியில் இருந்த காலம் முதல் இப்பவும் தொடருது. அதை விடுங்கோ. புதியவனின் மண் படத்தைப் பற்றி சொன்னதிலை கனக்க சரிதான்.

இந்தியத் திரையரங்குகளை நம்பி படம் எடுத்தீர்களானால் நீங்கள் உருப்பட்டமாதிரித்தான். முதல் ஈழத்தவர்களுக்கு உங்கள் திறமைகளை திரையிடுங்கோ உங்களுக்கு வெற்றி ஈழத்தவரிடமிருந்து வரும்.

மஞ்சு ,
சிங்களப் படங்களின் தரத்துக்கு தமிழ்ப்படங்களும் வர வேணுமெண்டு ஆசைதான். மண்போல படமெடுக்கும் கலைஞர்களுக்கு சேயோன் போன்றவர்களை அறிமுகம் செய்துவிடுங்கோ. விருதுகள் வரும்.

விமர்சனங்களை ஏற்று தங்கள் படைப்புக்களை தந்தால் ஈழத்தவர்களின் முன்னும் உலகத்தின் முன்னும் ஈழத்தவர் திரைப்படங்கள் பேசப்படும்.
:::: . ( - )::::
Reply
#47
மன்னிக்கவும் நான் சண் தான் ஆனால் புதியவன் அல்ல. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் நிச்சயமாக புதியவனுக்க உண்டு. காரணம் நான் அவருட்ன நெருங்கி பழகும் ஒருவர். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெட்டத் தெளிவாக தெரிகிறது. ஒரு வேளை புதியவன் ஒரு பிரபல இயக்கணருட்ன வேலை செய்துவிட்டு இந்த படத்தை எடுத்திருந்தால் விமர்சனம் வித்தியாசமாக வந்திருக்குமோ என்னவோ! தமிழ் நாட்டில் இந்த படத்தை திரையிட்டபோது வந்த விமர்சளங்களுக்கும் நம்மவர்கள் இங்கு கொடுக்கும் விமர்சங்ககுளுக்கும் உள்ள இடைவெளி தான் என்னை இப்படி சிந்திக்க வைத்தது. இந்த படம் ஒரு கூட்டு முயற்சி! இந்த படத்தின் வெற்றி தோல்விகள் வெளிவர சில தாமதங்கள் ஆகும். இந்த படம் பற்றிய எனது விமர்சனத்தை புதியவனுக்க கூறியபோது அவர் எனக்கு கொடுத்த விளக்கம் இந்த படத்தை இந்தியாவில் போட வேண்டுமாயின் சில காட்சிகளை நிக்க வேண்டும். அதில் முக்கியமானது கடைசி காட்சியில் தமிழீழ காவல் துறையிடம் மகன் சரணடைவது. இந்த காட்சியை அவர்கள் படமாக்கியபோதும் அதை படத்pல் சேர்க முடியவில்லை. காரணம் இந்த படம் ஒர இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பு. இந்திய தணிக்கை குழு புூதக் கண்ணாடி வைத்து இந்த படத்தை பார்த்தார்கள். ஆனால் படத்தில் மகன் மிக தெளிவாக ஒரு வார்ததை கூறுகிறனர். அதை படத்தை கவனமாக பார்த்தவர்களுக்கு நிச்சயம் விளங்கும்.

சேயோன் படத்தை பார்த அன்று அவர்கள் அருகில் தான் நான் இருந்தோன். படம் ஆரம்பித்தது முதல் முடியம் வரை வள வள என்று கதைத்து மற்றவர்களையும் குளப்பி விட்டு தான் தோன்றி தனமாக விமர்pத்ததை தான் என்னால் பொறுக்க முடியவில்லை. படத்தை ஒழுங்காக பாரக்காது சாட்டு மேனிக்கு வந்து குந்தியிருந்து விட்டு விமர்சனம் செய்தால் யாருக்கு தான் கோபம் வராது.

ஒவ்வரு மன0pதருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். ஒருவருக்கு பிடித்தது ஒருவருக்க பழடிக்காது இது யதாரத்தம். எனவே படம்ட பற்றிய விமர்சனங்கள் வரவேண்டும் இது நல்லதோ கெட்டதோ அதை ஏற்க அவர்கள் தயார். அனால் அதை இதய சுத்தியுடன் செய்ய வேண்டும்.
Reply
#48
புதியவனுக்கும் சண் எனத்தான் அழைக்கப்படுகிறார் என்பதால் ஒரு ஊகத்தில் எழுதினேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும். புதியவன், சேயோன் என்ற இரண்டு நபர்களையும் தவிர்த்து மண் பற்றி பார்ப்போம். திரும்ப திரும்ப சேயோன் சரியாக படத்தை பார்க்கவில்லை என்பதை விடுத்து அவர் தனது விமர்சனத்தில் முன்வைத்துள்ள கருத்துக்களை படத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி விளக்கியிருக்கலாம்.

இந்தியாவில்; திரையிடவேண்டுமென்பதற்காக சில காட்சிகளை நீக்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள். இது கூட்டுத்தயாரிப்பு என்பது ஆரம்பம் முதலே தெரிந்திருக்கும். அப்படியானால் ஏன் அரசியலை வலிய திணித்தீர்கள்?

தமிழ் நாட்டுகாரர் ஒருவரின் விமர்சனத்துக்கும் இங்கு நிச்சயம் வித்தியாசமிருக்கும். மணிரத்தினத்தின் "கன்னத்தில் முத்தமிட்டாலில்" மாங்குளத்தில் மலை தெரிகிறது. இது பற்றி பெரும்பாலான தமிழ்நாட்டுக்காரர்களுக்கு பிரச்சனையில்லை. ஏனெனில் அவர்களுக்கு எங்கள் தாயகம் பற்றி தெரியாது. இந்தியாவுக்கு போகாத ஒருவருக்கு மரினா கடற்கரைக்கு அருகில் பனி படர்ந்த மலைத்தொடரை காட்டினாலும் அது அவரை பெரிதும் பாதிக்காது. ஆனால் எங்களது நாட்டையே நடைமுறை யதார்த்தத்துக்கு புறமடபாக காட்டினால் என்ன செய்கிறத படம் வியாபாரமாக வேண்டுமே என பொறுத்துக்கொள்ள முடியாமலிருக்கிறது.

ஒரு ஓலெவல் படிக்கிற மாணவன் (கதாநாயகன்) ஒரு பெண்ணுடன் பழகி, அவளை கர்ப்பமாக்கி, திருமணத்துக்கும் நாள் குறித்துவிட்டு தனது தந்தையாருடனும் உறவினனுடன் பஸ் ஒன்றில் ஊரைவிட்டு தப்பி போகிறான். பஸ்சில் அவளை ஏமாற்றியது பற்றி பலமாககூறி சிரித்து சந்தோசப்படுகிறான். என்னை பொறுத்தவரையில் இந்த இடத்தில் இயக்குனர் பெயிலாகி விடுகிறார். இத்தனை குருரமனம் எந்த மாணவனுககும் இருந்தாக நான் இதுவரை கேள்வி;ப்படவில்லை. கற்பனை கதைதான் ஆனால் இந்த படத்தை வெறும் மசாலாப்படமாக பார்க்க மனம் வரவில்லை.

தமிழ் நாட்டில் காட்டவேண்டும் என்பதற்காகவே படம் இவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்றால் அது ஈழத்தமிழரின் மனதில் இடம்பிடிக்கமுடியாது. கடைசியில் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் நடுவில் நிற்கிறத மண்.

1960 களில் சிங்கள திரைப்படத்துறைக்கு இலங்கையில் சவாலாக இருந்தவை அங்கு வெளியிட்ப்பட்ட இந்தி திரைப்படங்கள் என நான் படித்திருக்கிறேன். அந்த வியாபார போடடியில் பொலிவுூட் படங்களை போல சிங்களப்படங்களை தயாரிக்க தொடங்கியிருந்தால். இன்றய சிங்கள சினிமா போல கலைத்திறனுடன் இருந்திருக்காது. மாறாக காலவெள்ளத்தில் அடியுண்டு போயிருக்கும். இலங்கைக்கு ஜோ அபேவிக்கிரம போன்ற தரமான நடிகர்களும், லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் முதற்கொண்டு பிரசன்ன விதானகே வரை கீர்த்திமிக்க இயக்குனர்களகூட கிடைத்திருக்கமாட்டார்கள்.

இந்த விமர்சனங்களை ஆரோக்கியமானதாக ஏற்றுக்கொண்டு புதியவன் முன்னேறவேண்டும் அதுவே எனது அவா. மற்றயபடி இழுத்து விழுத்தி வேடிக்கை பார்க்கும் எண்ணம் துளியும் என்னிடமில்லை.

- மஞ்சு
Reply
#49
ஒரு மண்ணும் விழங்கேல்லை :roll:
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#50
sathiri Wrote:ஒரு மண்ணும் விழங்கேல்லை :roll:

உங்களுக்கு ஒரு வெத்திலை காணாதோ விளங்க ? எதுக்கும் டென்மாக் அம்மளாச்சியிட்டை ஒருக்கா வலம் போய் வாங்கோ எல்லா மண்ணம் விளங்கும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)