03-25-2006, 05:38 PM
<b>புற்று நோயாலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும்,
அவதிப் படும் நம் உறவுகள், இவர்களுக்கு நாங்கள் உதவி செய்வோமா..? பார்த்திட்டு உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க..!</b>
<b>அடிப்படை வசதிகளின்றி யாழ். மருத்துவமனையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவு - நெருக்கடியில் நோயாளர்கள் </b>
<img src='http://img232.imageshack.us/img232/8613/cancerhospital5ih.jpg' border='0' alt='user posted image'>
யாழ் போதனா வைத்தியசாலையின் புற்று நோயாளர் சிகிச்சைப்பிரிவு <b>அடிப்படை வசதிகள் ஏதுமின்றி </b>இயங்கி வருவதன் காரணமாக இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றனர்.
யாழ். குடாநாடடில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவரது தொகை அன்மைக்காலமாக அதிக ரித்து வருவதன காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவிற்கு சிகிச்சைப் பெற வருவோரின் தொகையும் அதிகரித்துள்ளது. எனினும் புற்று நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் தொகைக்கு ஏற்ற விதத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவும் அதற்கான வைத்திய <b>விடுதியும் போதிய வசதிகளுடன் அமைந்திருக்கவில்லை.</b> குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப்பிரிவில் <b>புற்றுநேய் சிகிச்சைகளுக்கு பயண்படுத்தக் கூடிய நவீன தொழில் நுட்ப உபகரணங்கள், கருவிகள் எதுவும் இல்லாது உள்ளது. </b>
இதைவிட யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவிலும், புற்றுநோய் சிகிச்சை விடுதியிலும் பாதியளவு இடவசதிகள் இல்லாது உள்ளது. குறிப்பாக விடுதியில் சுமார் 150 இற்கு மேற்பட்ட நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்ற போதும் இங்குள்ள விடுதியிலும் <b>30 இற்கும் குறைவான நோயாளர் படுக்கைக் கட்டில்கள் உள்ளன. </b>
இதனால் ஏராளமான நோயாளர்கள் தரையிலேயே படுத்துக்கிடந்து தமக்குரிய சிகிச்சைகளை பெற வேண்டியுள்ளது. அத்துடன் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ள நோயாளர்கள் கூட அரைகுறை சிகிச்சைகளுடன் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்ற நிலையும் உள்ளது.
அத்துடன் வைத்திய விடுதிகுள் கானப்படுகின்ற இடவசதியினத்தால் மிக ஒடுக்கமான வைத்திய விடுதியில் நோயாளர் சிகிச்சைக்கட்டில்களை மிக நெருக்கமாக அடுக்கி அவற்றில் வைத்தே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளர்கள் நெருக்கமாக தங்கி இருப்பதால் ஏற்படக் கூடிய பிற தொற்று நோய்பாதிப்புக்களும் ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளது.
இதை விட இந்தப்புற்று நோயாளர் சிகிச்சை விடுதிக்கான மலசலகூடம் விடுதிக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அம் மலசல கூடத்தை பயன்படுத்துவதற்கு நோயாளர்கள் அவலங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக புற்று நோயாள் கடுமையாக பீடிக் கப்பட்ட ஒரு நோயாளி மலசல கூடத்தை பயன்படுத்த வேண்டுமாயின் அவரை தள்ளு வண்டியிலோ அல்லது ஏனையவர்களின் உதவியுடன் நீண்ட தூரத்திற்கு அப்பால் அழைத்து வந்து மலசல கூடத்தை பயன்படுத்த செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது.
இப்படியாக போதனா வைத்திய சாலையின் புற்று நோயாளர் வைத்திய விடுதியின் வசதியினங்களால் இங்கு சிகிச்சை பெறவரும் நோயாளாகள் பெரும் பாதிப்புக்களை எதிர் கொள்கின்றனர். எனினும் இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு புற்று நோயாளர்களுக்கான
வைத்தியப்பிரிவையும் விடுதியையும் விஸ்தரிப்புச் செய்ய யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று நோயாளாகளாலும், சமூக நலன் விரும்பிகளாலும் குற்றம் சாட்டப்படுகிறது
<b>நன்றி-சங்கதி</b>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->