![]() |
|
நாங்கள் உதவி செய்வோமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நாங்கள் உதவி செய்வோமா? (/showthread.php?tid=436) |
நாங்கள் உதவி செய்வோமா? - அனிதா - 03-25-2006 <b>புற்று நோயாலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும், அவதிப் படும் நம் உறவுகள், இவர்களுக்கு நாங்கள் உதவி செய்வோமா..? பார்த்திட்டு உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க..!</b> <b>அடிப்படை வசதிகளின்றி யாழ். மருத்துவமனையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவு - நெருக்கடியில் நோயாளர்கள் </b> <img src='http://img232.imageshack.us/img232/8613/cancerhospital5ih.jpg' border='0' alt='user posted image'> யாழ் போதனா வைத்தியசாலையின் புற்று நோயாளர் சிகிச்சைப்பிரிவு <b>அடிப்படை வசதிகள் ஏதுமின்றி </b>இயங்கி வருவதன் காரணமாக இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகின்றனர். யாழ். குடாநாடடில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவரது தொகை அன்மைக்காலமாக அதிக ரித்து வருவதன காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவிற்கு சிகிச்சைப் பெற வருவோரின் தொகையும் அதிகரித்துள்ளது. எனினும் புற்று நோய் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் தொகைக்கு ஏற்ற விதத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவும் அதற்கான வைத்திய <b>விடுதியும் போதிய வசதிகளுடன் அமைந்திருக்கவில்லை.</b> குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப்பிரிவில் <b>புற்றுநேய் சிகிச்சைகளுக்கு பயண்படுத்தக் கூடிய நவீன தொழில் நுட்ப உபகரணங்கள், கருவிகள் எதுவும் இல்லாது உள்ளது. </b> இதைவிட யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவிலும், புற்றுநோய் சிகிச்சை விடுதியிலும் பாதியளவு இடவசதிகள் இல்லாது உள்ளது. குறிப்பாக விடுதியில் சுமார் 150 இற்கு மேற்பட்ட நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்ற போதும் இங்குள்ள விடுதியிலும் <b>30 இற்கும் குறைவான நோயாளர் படுக்கைக் கட்டில்கள் உள்ளன. </b> இதனால் ஏராளமான நோயாளர்கள் தரையிலேயே படுத்துக்கிடந்து தமக்குரிய சிகிச்சைகளை பெற வேண்டியுள்ளது. அத்துடன் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ள நோயாளர்கள் கூட அரைகுறை சிகிச்சைகளுடன் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்ற நிலையும் உள்ளது. அத்துடன் வைத்திய விடுதிகுள் கானப்படுகின்ற இடவசதியினத்தால் மிக ஒடுக்கமான வைத்திய விடுதியில் நோயாளர் சிகிச்சைக்கட்டில்களை மிக நெருக்கமாக அடுக்கி அவற்றில் வைத்தே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளர்கள் நெருக்கமாக தங்கி இருப்பதால் ஏற்படக் கூடிய பிற தொற்று நோய்பாதிப்புக்களும் ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளது. இதை விட இந்தப்புற்று நோயாளர் சிகிச்சை விடுதிக்கான மலசலகூடம் விடுதிக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அம் மலசல கூடத்தை பயன்படுத்துவதற்கு நோயாளர்கள் அவலங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக புற்று நோயாள் கடுமையாக பீடிக் கப்பட்ட ஒரு நோயாளி மலசல கூடத்தை பயன்படுத்த வேண்டுமாயின் அவரை தள்ளு வண்டியிலோ அல்லது ஏனையவர்களின் உதவியுடன் நீண்ட தூரத்திற்கு அப்பால் அழைத்து வந்து மலசல கூடத்தை பயன்படுத்த செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இப்படியாக போதனா வைத்திய சாலையின் புற்று நோயாளர் வைத்திய விடுதியின் வசதியினங்களால் இங்கு சிகிச்சை பெறவரும் நோயாளாகள் பெரும் பாதிப்புக்களை எதிர் கொள்கின்றனர். எனினும் இந்த நிலைமைகளை கவனத்தில் கொண்டு புற்று நோயாளர்களுக்கான வைத்தியப்பிரிவையும் விடுதியையும் விஸ்தரிப்புச் செய்ய யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று நோயாளாகளாலும், சமூக நலன் விரும்பிகளாலும் குற்றம் சாட்டப்படுகிறது <b>நன்றி-சங்கதி</b> - SUNDHAL - 03-25-2006 நன்றி அனி இனைத்தமைக்கு நானும் அதை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்...நாம வாழுகின்ற நாட்டில உள்ள தொண்டு நிறுவனங்களை இந்ம புகைப்படங்கள் ழூலம் அனுகி உதவி கேட்க்கலாம்.. எமது நாடுகளில் உள்ள ஆலயங்கள் ழூலம் உதவிகளை செய்ய சொல்லி கேட்டு பாக்கலாம்..இல்லை என்றால் பல்கலைகழக மாணவர்கள் நிகழ்ச்p ஒன்றை ஒழுங்கு படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை சேகரித்து அனுப்பலாம். நான் இங்கு முயற்ச்சி செய்கிறேன் அனி . - SUNDHAL - 03-25-2006 உண்மையில் அந்த செய்தியில் போடபட்டிருந்த படங்களை பாத்த பொழுது..மிகவும் கவலையாக இருந்தது.
- தூயா - 03-26-2006 SUNDHAL Wrote:நன்றி அனி இனைத்தமைக்கு நானும் அதை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்...நாம வாழுகின்ற நாட்டில உள்ள தொண்டு நிறுவனங்களை இந்ம புகைப்படங்கள் ழூலம் அனுகி உதவி கேட்க்கலாம்.. எமது நாடுகளில் உள்ள ஆலயங்கள் ழூலம் உதவிகளை செய்ய சொல்லி கேட்டு பாக்கலாம்..இல்லை என்றால் பல்கலைகழக மாணவர்கள் நிகழ்ச்p ஒன்றை ஒழுங்கு படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை சேகரித்து அனுப்பலாம். நான் இங்கு முயற்ச்சி செய்கிறேன் அனி . அவுஸ்திரேலியாவில் இருக்கிற சில ஆலயங்கள??? 8) - SUNDHAL - 03-26-2006 தூயா Wrote:SUNDHAL Wrote:நன்றி அனி இனைத்தமைக்கு நானும் அதை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்...நாம வாழுகின்ற நாட்டில உள்ள தொண்டு நிறுவனங்களை இந்ம புகைப்படங்கள் ழூலம் அனுகி உதவி கேட்க்கலாம்.. எமது நாடுகளில் உள்ள ஆலயங்கள் ழூலம் உதவிகளை செய்ய சொல்லி கேட்டு பாக்கலாம்..இல்லை என்றால் பல்கலைகழக மாணவர்கள் நிகழ்ச்p ஒன்றை ஒழுங்கு படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை சேகரித்து அனுப்பலாம். நான் இங்கு முயற்ச்சி செய்கிறேன் அனி . கேட்டு பாக்கிறது தானே தூயா... - RaMa - 03-26-2006 கட்டாயமாக செய்யவேண்டிய முயற்சி தான். எமது ஆலயங்களில் உதவி கேட்பதை விட பிற நாட்டு தொண்டு நிறுவனங்களிடம் உதவி கேட்கலாம். எமது மக்கள் கோயிலுக்கு கொண்டு போய் போடுவதை இப்படியான சீர்திருத்த பணிகளுக்கு செய்தால் எவ்வளவு நல்லாய் இருக்கும். அடிப்படை வசதி கூட இல்லமால் கஸ்டப்படுகின்றார்கள். பார்க்க கவலையாக இருக்கின்றது. எதாவது நிகழ்வுகளை செய்து அதில் வரும் காசை அனுப்புவது இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். - Sivakolunthu - 03-26-2006 நம்மட சனத்திட்டயே போறதவிட பிள்ள ரமா செல்லுற மாதிரி நாம வாழுற நாட்டைச்சேர்ந்த அல்லது வேறு உதவி நிறுவனங்களிட்ட போய் நம்மட பிரச்சினையயும் சொல்லி உதவி கேக்கிறதுதான் புத்திசாலித்தனம். நம்மட சனத்தக் குறை சொல்லக்கூடாது. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் உணர்வு மங்காம வாழுதுகள். அதுகள் கொட்டிக்குடுக்கிற படியாத்தானே நம்மட போரட்டத்தையும் கொண்டு இழுக்கக் கூடியமாதிரி இருக்குது. திரும்பவும் அதுகளிட்டயே போய் அதத்தா இதத்தா எண்டா அதுகளும் வாழுறத்துக்கு எங்க போறது. இந்த உதவி நிறுவனங்கள் இருக்கெல்லோ அவையள் அரசாங்கத்திட்டயும் இருந்து குறிப்பிட்ட அளவு நிதியளத் திரட்டீனம். அப்ப நாம கட்டுற வரில இருந்துதானே வாங்கப் போறம். அதவிட இன்னொண்டும் இருக்கு. அது என்னண்டா இப்பிடி பன்னாட்டு நிறுவனங்களையும் நம்ம பக்கம் வந்து பார் எண்டு இழுக்கேக்க நம்மட பிரச்சினையள நாமளும் நம்மால முடிஞ்ச அளவு வெளில காட்டலாமில்ல. அப்ப இந்த அரசுகளும் ஒருக்கா எட்டிப்பாக்க காரணம் இருக்கும். இது ஒரு அணிலின்ர முயற்சிதான் எண்டாலும் அதயும் செய்து பாக்கலாமே. இப்ப உலகம் நம்மள நோக்கிப் பார்வைய திருப்பினாலும் அத அழுத்தமா பதிய வைக்க ஒரு சின்ன முயற்சியாவும் இருக்குமில்ல. நம்மட சனமும் எத்தினைக்குத்தான் குடுக்கிறது. என்னெண்டாலும் நாம நம்மட சனம் செய்யணும் எண்டு பாத்து ஓடுறம். அதுகளும் எத்தின வழிலதான் செய்யுறது. - SUNDHAL - 03-26-2006 ஒரு நிகழ்வு ஒன்றை சிட்னியில் நடத்தி முடிந்த அளவு நிதி சேகரிக்கலாம் என்று இருக்கின்றோhம் யாழ் மருத்துவ மனையுடன் தொடர்பு கொள்வதற்க்கு முயற்ச்சிகளை எடுத்த இருக்கிறம்..மேலதிக விபரங்கள் தொடரும்.... - கந்தப்பு - 03-29-2006 தூயா Wrote:SUNDHAL Wrote:நன்றி அனி இனைத்தமைக்கு நானும் அதை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தேன்...நாம வாழுகின்ற நாட்டில உள்ள தொண்டு நிறுவனங்களை இந்ம புகைப்படங்கள் ழூலம் அனுகி உதவி கேட்க்கலாம்.. எமது நாடுகளில் உள்ள ஆலயங்கள் ழூலம் உதவிகளை செய்ய சொல்லி கேட்டு பாக்கலாம்..இல்லை என்றால் பல்கலைகழக மாணவர்கள் நிகழ்ச்p ஒன்றை ஒழுங்கு படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை சேகரித்து அனுப்பலாம். நான் இங்கு முயற்ச்சி செய்கிறேன் அனி . என்ன தூயா லொல்லா உமக்கு?. அவை தமிழகத்தினைச்சேர்ந்த கர்னாடக பாடகர்களை அழைத்து வந்து தான் நிகழ்ச்சிகள் நடத்துவினம். ஈழமாவது, அப்படி என்றால் என்னவென்று கேப்பினம். நாங்கள் ஒஸ்ரேலியன் என்று சொல்வினம். ஈழம் வேணுமென்றால் ஊரிலை இருந்திருக்கலாமே என்பினம்?.சுனாமிக்கு நிதி சேகரிக்கும் போது நடந்தது தெரியும்தானே?. ஒரு வேளை நடிகை மும்தாஜின் நாய்க்குட்டிக்கு வருத்தம் என்று கேட்டுப்பாருங்கோ, காசு கிடைக்கும். - தூயா - 03-29-2006 என்ன கந்தப்பு சிலதை தான் சொல்லி இருக்கின்றீர்கள்?? நானும் தெரியாத விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளலாம் என பார்த்தேன்... சிட்னி ---- கோவில் நாயன்மார்களின் புகழை யாராவது ஒருவர் உலகிற்கு சொல்லுங்களேன்... - Luckyluke - 03-29-2006 சென்னை கேன்சர் இன்ஸ்ட்டியூட்டுக்கு நிதி திரட்ட ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள்.... அது எப்படி என்றால் 20 ரூபாய் மதிப்பிலான ஒரு டிக்கெட் போல அச்சடித்து தமிழ்நாடெங்கும் இருக்கும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், துணிக்கடைகள் மற்றும் மக்கள் புழங்கும் இடங்களில் எல்லாம் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.... இது குறித்து பத்திரிகைகளில் விளம்பரமும் செய்கிறார்கள்... 20 ரூபாய் என்பது பெரியத் தொகை அல்ல மற்றும் இது கேன்சர் நோயாளிகளின் நலனுக்காக செலவிடப்படுகிறது என்பதால் நிறைய பேர் வாங்குகிறார்கள்.... நான் கூட தி. நகரில் ஷாப்பிங் செய்ய செல்லும்போதெல்லாம் 5 டிக்கெட்டுகள் வாங்குவதை பழக்கமாக கொண்டிருக்கிறேன்.... இதுபோல ஒரு திட்டத்தை அயல்நாடுகளில் வாழும் ஈழத்தவர்கள் நடைமுறைப்படுத்த முயற்சித்தால் என்ன? - Niththila - 03-29-2006 இந்த படங்களை பார்க்கம் போது மிகவும் கவலையாக இருந்தது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எமது மக்கள் கோயில்களில் செலவிடுற காசில ஒரு பகுதியை இப்படியான நோயாளர் நலன்களிற்காக செலவிடலாம்தானே ஆனால் இப்படி யோசிப்பவர்கள் சரியான குறைவு :oops: எனக்கு தெரிந்து லண்டனில CANE என்றொரு அமைப்பு இருக்கு அவை லக்கி சொன்ன மாதிரி டிக்கட் மூலம் நிதி திரட்டி வடக்கு கிழக்குக்கு அனுப்புகிறார்கள் நான் கூடஇவர்களது டிக்கட் விற்று கொடுத்திருக்கிறன் (விற்கும் ஏற்பட்ட பல அனுபவங்களால விற்பதை விட நாமே அவற்றை வாங்குறது பெட்டர் என்று நான் நினைக்கிறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )
- Niththila - 03-29-2006 இரண்டு தரம் பதிந்து விடடேன் மன்னிக்கவும் :oops: - Niththila - 03-29-2006 இணைப்புக்கு நன்றி அனி எம்மால கட்டாயம்உதவ முடியும் யாழ்களம் மூலம் கூட உதவலாம் அல்லது ஏற்கனவே இருக்கிற அமைப்புகள் மூலமும் உதவலாம் :wink: - கந்தப்பு - 03-30-2006 தூயா Wrote:என்ன கந்தப்பு சிலதை தான் சொல்லி இருக்கின்றீர்கள்?? நானும் தெரியாத விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளலாம் என பார்த்தேன்... சிட்னி ---- கோவில் நாயன்மார்களின் புகழை யாராவது ஒருவர் உலகிற்கு சொல்லுங்களேன்... என்ன பிள்ளை எனக்கு அடிவாங்கிகொடுக்க முயற்சியா?. சிட்னி நாயன்மார்களினைப்பற்றிக் கட்டாயம் சொல்லவேண்டும். இந்தப்பகுதியில் வேண்டாம். இங்கே எவ்வாறு நாங்கள் எமது பங்களிப்பினைச் செய்யலாம் என்பதினைப்பற்றி சிந்திப்போம். தம்பி சுண்டல், எப்ப நிகழ்ச்சிகள் வைக்கப்போறிர்கள் என்று ஒருக்காய்ச் சொல்லுங்கோ? - Niththila - 03-30-2006 நான் மேலே சொன்ன CANE அமைப்பினர் யாழ்ப்பாணத்தில ஒரு Hospice (இதுக்கு என்ன தமிழ் ) கட்டியுள்ளார்கள் புற்றுநோயால பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு இந்த அமைப்பினர்பற்றிய மேலதிக விபரம் வேணும் எனில் என்னுடன் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்க புற்று நோயால பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல யாழ் வைத்திய சாலையில் எல்லா நோயாளர்களும் வசதியின்மையால மிகவும் சிரமப்படுகினம் நம்மால முடிந்த அளவு உதவலாமே இப்படியான வேறு அமைப்புகள் உங்கள் நாடுகளிலும் இருந்தால் அவை பற்றிய விபரங்களை மோகன்அண்ணாவின் சம்மதத்துடன் இங்கு தந்தால் உதவ இலகுவாயிருக்குமே :wink: - SUNDHAL - 03-30-2006 கந்தப்பு Wrote:தூயா Wrote:என்ன கந்தப்பு சிலதை தான் சொல்லி இருக்கின்றீர்கள்?? நானும் தெரியாத விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளலாம் என பார்த்தேன்... சிட்னி ---- கோவில் நாயன்மார்களின் புகழை யாராவது ஒருவர் உலகிற்கு சொல்லுங்களேன்... நிச்சயமா அப்பு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 03-30-2006 தூயா Wrote:என்ன கந்தப்பு சிலதை தான் சொல்லி இருக்கின்றீர்கள்?? நானும் தெரியாத விடயங்கள் சிலவற்றை அறிந்துகொள்ளலாம் என பார்த்தேன்... சிட்னி ---- கோவில் நாயன்மார்களின் புகழை யாராவது ஒருவர் உலகிற்கு சொல்லுங்களேன்... எல்லாம் அந்த கணபதியானுக்கே வெளிச்சம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |