03-07-2006, 12:18 PM
கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு: காவல்துறை அதிகாரி தகவல்
செவ்வாய்கிழமை 7 மார்ச் 2006
கொழும்பின் வடபகுதியில் கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறார் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரி பிரியங்க விஜெநாயகெ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் கூறியதாவது:கடந்த பெப்ரவரி 22 ஆம் நாளன்று 12 வயது சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தை, வளர்ப்புத் தாயின் துணையுடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு மார்ச் 8 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடை வீதிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியை அவரது உறவினர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார். கடந்த பெப்ரவரி 22 ஆம் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு மார்ச் 8 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த பெப்ரவரி 20 ஆம் நாளன்று தனது பாட்டியின் வீட்டில் இருந்த 10 வயது சிறுமியை 64 வயது முதியவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார். இதனால் அந்தச் சிறுமியின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டு மார்ச் 8 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
http://www.nitharsanam.com/?art=15731

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&