03-08-2006, 12:48 PM
விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து
துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள்
கொழும்பு, மார்ச்.8-
ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
விடுதலைப்புலிகள் போர்
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர்.
இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர்.
இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஜெனீவாவில் பேச்சு
இந்த நிலையில் ஜெனீவாவில் கடந்த வாரம் இலங்கை அரசு பிரதிநிதிகளுக்கும், விடுதலைப்புலி தலைவர்களுக்கும் இடையே, ஜெனீவா சமரச குழுவினர் முன்னிலையில் பேச்சு நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லைஎன்றாலும், முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
துப்பாக்கிகளின் வரைபடங்கள்
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விடுதலைப்புலி இயக்க தலைவர்கள் நேற்று கொழும்பு விமான நிலையத்துக்கு விமானம் மூலம் வந்து
சேர்ந்தனர்.
அப்போது அவர்கள் கொண்டுவந்த பொருட்களை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர்கள் கொண்டுவந்த பொருட்களின் இடையே துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய உயர்ரக கேமிராக்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் விளக்குகள், மற்றும் பல பொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றியதாக சுங்க இலாகா டைரக்டர் சரத் ஜெயதிலகே கூறினார்.
அதிவேக படகுகள்
இதைத்தொடர்ந்து விடுதலைப்புலி தலைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அதிவேக படகுகளின்உதிரி பாகங்கள், சிறிய ரக விமானங்களின் பாகங்கள், ராக்கெட் இணைக்கப்பட்ட குண்டுகள் ஆகியவற்றை ஏற்கனவே விமான பயணத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது வெளிப்பட்டது.
கடத்திகொண்டு வரப்பட்ட உதிரி பாகங்களை ஒன்றாக சேர்த்து, அதிவேகபோர் படகுகள், சிறிய விமானங்களை விடுதலைப்புலிகள் தயாரித்து இருப்பதும் தெரியவந்தது. விடுதலைப்புலிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
தினத்தந்தி

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->