02-19-2006, 10:48 AM
<b>புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்குதிரும்ப வேண்டும் என்கிறது ஜே.வி.பி.</b>
போரின் காரணமாக வட கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்ததையிட்டு ஆழ்ந்த கவலை கொள்வதாக அறிவித்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அம்மக்களை மீண்டும் இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1970 களில் ஆரம்பமாகி 30 வருடங்களாக நடந்து வரும் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் அவசியமின்றி உயிரிழக்க நேரிட்டது. நாம் இதை நிறுத்த வேண்டும். இந்த யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் நடக்கும் யுத்தத்தினால் அங்கு வசித்த தமிழ் மக்கள் கூட பெருமளவில் மேல் மாகாணத்திற்கு இடம் பெயர்ந்தனர். அதன் போது இங்கிருப்பவர்கள் அத் தமிழ் மக்களை ஏற்றுக் கொண்டதுடன் தமிழ் மக்கள் அதன் பின்னர் அவர்களின் ஜனநாயக உரிமையையும் மற்றும் சமத்துவத்தையும் அனுபவிக்க முடிந்துள்ளது.
சிலர் நாட்டை விட்டு சென்றமையை இட்டு ஜே.வி.பி. கவலை கொள்கிறது. எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அவர்களை மீண்டும் இலங்கை வருமாறு மிகுந்த வேதனையுடன் அழைக்கிறோம்.
இலங்கையிலுள்ள சகல மக்களுக்கும் அவர்களது உரிமைகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் போது நிலவும் சகல தடைகளும் நீக்கப்படுவதை நோக்காகக் கொண்டு ஜெனீவா பேச்சுகள் அமைய வேண்டும்.
ஏனைய நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இலங்கையில் வேறுபட்ட இன மற்றும் மத அணியினருக்கு முழுமையான மொழி மற்றும் மத உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. வேறுபட்ட இனங்களை துரத்துவதுடன்இ அதன் கீழிருக்குமொரு இனத்தவரின் அப்பாவி சிறுவர்களின் உரிமைகளையும் மனித உரிமையையும் மீறும் ஹிட்லர் போன்று ஏகாதிபத்திய நிர்வாகத்தை செய்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய பாதிப்பாகவுள்ளது.
அடிப்படை சுதந்திரம் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பிரஜைகள் இந் நாட்டில் இல்லையென்பதை உறுதிப்படுத்துவதே ஜெனீவா பேச்சுகளின் பிரதான தேவையென வெகுவாக நம்புவதாக ஜே.வி.பி. தனது தரப்பு கருத்தை முன் வைத்திருக்கிறது.
thinakkural

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&