![]() |
|
புலம் பெயர்தவர்களே ரெடியாகுங்கோ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புலம் பெயர்தவர்களே ரெடியாகுங்கோ (/showthread.php?tid=797) |
புலம் பெயர்தவர்களே ரெடியாகுங்கோ - MUGATHTHAR - 02-19-2006 <b>புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்குதிரும்ப வேண்டும் என்கிறது ஜே.வி.பி.</b> போரின் காரணமாக வட கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்ததையிட்டு ஆழ்ந்த கவலை கொள்வதாக அறிவித்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அம்மக்களை மீண்டும் இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டில் ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1970 களில் ஆரம்பமாகி 30 வருடங்களாக நடந்து வரும் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் அவசியமின்றி உயிரிழக்க நேரிட்டது. நாம் இதை நிறுத்த வேண்டும். இந்த யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் நடக்கும் யுத்தத்தினால் அங்கு வசித்த தமிழ் மக்கள் கூட பெருமளவில் மேல் மாகாணத்திற்கு இடம் பெயர்ந்தனர். அதன் போது இங்கிருப்பவர்கள் அத் தமிழ் மக்களை ஏற்றுக் கொண்டதுடன் தமிழ் மக்கள் அதன் பின்னர் அவர்களின் ஜனநாயக உரிமையையும் மற்றும் சமத்துவத்தையும் அனுபவிக்க முடிந்துள்ளது. சிலர் நாட்டை விட்டு சென்றமையை இட்டு ஜே.வி.பி. கவலை கொள்கிறது. எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அவர்களை மீண்டும் இலங்கை வருமாறு மிகுந்த வேதனையுடன் அழைக்கிறோம். இலங்கையிலுள்ள சகல மக்களுக்கும் அவர்களது உரிமைகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் போது நிலவும் சகல தடைகளும் நீக்கப்படுவதை நோக்காகக் கொண்டு ஜெனீவா பேச்சுகள் அமைய வேண்டும். ஏனைய நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இலங்கையில் வேறுபட்ட இன மற்றும் மத அணியினருக்கு முழுமையான மொழி மற்றும் மத உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. வேறுபட்ட இனங்களை துரத்துவதுடன்இ அதன் கீழிருக்குமொரு இனத்தவரின் அப்பாவி சிறுவர்களின் உரிமைகளையும் மனித உரிமையையும் மீறும் ஹிட்லர் போன்று ஏகாதிபத்திய நிர்வாகத்தை செய்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய பாதிப்பாகவுள்ளது. அடிப்படை சுதந்திரம் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்ட இரண்டாம் வகுப்பு பிரஜைகள் இந் நாட்டில் இல்லையென்பதை உறுதிப்படுத்துவதே ஜெனீவா பேச்சுகளின் பிரதான தேவையென வெகுவாக நம்புவதாக ஜே.வி.பி. தனது தரப்பு கருத்தை முன் வைத்திருக்கிறது. thinakkural - Thala - 02-19-2006 ஒ... இங்க இருந்து போகேக்க உழைச்ச காசுகளைக் கொண்டு போய் அங்க வங்கியில வைப்பில இடுவீங்கள்தானே...! அன்னிய முதலீடுகள் குறைஞ்சிட்டுதாம் ஆகவே தமிழரின் பணத்தைக் கொண்டு அரசங்கம் வங்குரோத்தாகாமல் காக்க பாடுபடுகுனம் போல....! அரச ஆதரவாளர் "சுகுமார்"மட்டும்தான் ஜேவீப்பி யின் கோரிக்கையை ஏற்க்க தகுதியானவர்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-19-2006 அது என்ன ..... தமிழ் மக்கள் மீது அப்பிடியொரு அக்கறை ஜே.வி.பிக்கு சுனாமியாலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கென உருவாகப்பட்ட பொதுக்கட்டமைப்பைக் கூட நடைமுறைப்படுத்த விடாமல் கோட்டில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை பெற்ற ஒரு இனவாத அமைப்பு தீடிரென தமிழ் மக்கள் மீது அன்ப கொண்டுள்ளது எண்டால் என்ன காரணம் இப்போ பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் தாங்கள் இனவாதிகள் இல்லை எண்டு உலக அரங்கத்துக்கு காட்டுவதுக்காகத்தான் . . வேறை என்ன கரிசனை முதலிலை இத்தாலிக்கு நீர்கொழும்பிலை இருந்து பாஞ்சு போற சிங்களச் சனத்தை வெளிநாட்டுக்கு போக வேண்டாம் எண்டு நிறுத்தட்டும் பாப்பம் அதைச் செய்ய மாட்டினம் . .இதிலை வேடிக்கை என்னவெண்டால் உள்ளுராட்சி தேர்தலுக்கு வடக்கு கிழக்கு மாகாணக்களிலையும் போட்டியிடுகிறது இந்த சிவப்பு சட்டைக்காரர் சுனாமியடிச்சதுக்கு கொண்டு போண சாமான்களையே தடுத்து நிறுத்தினஆட்கள் இப்ப தேர்தல் பிரச்சாரத்துக்குப் போகப் போயினமாம் நடக்கிற காரியமா ? ? ? ? சும்மா இருக்கிற எங்களை சூடாக்கிற கதை எல்லோ கதைச்சுக் கொண்டு இருக்கிறாங்கள் . . .ய்கள்(குறைநினைக்காதைங்கோ கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டன்) - Birundan - 02-19-2006 ஜேவிபியின் தைலைவரும் வெளில இருந்தவர்தானே. இவ்வளவுகாலமும். :wink: - aathipan - 02-19-2006 Nஐவிபி உலகநாடுகளுக்கு நல்ல பிள்ளைக்கு நடிக்குது என்று நினைக்கிறன். - Selvamuthu - 02-19-2006 இது "ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத" கதைபோல இருக்கிறது. - Sukumaran - 02-19-2006 Thala Wrote:ஒ... இங்க இருந்து போகேக்க உழைச்ச காசுகளைக் கொண்டு போய் அங்க வங்கியில வைப்பில இடுவீங்கள்தானே...! அன்னிய முதலீடுகள் குறைஞ்சிட்டுதாம் ஆகவே தமிழரின் பணத்தைக் கொண்டு அரசங்கம் வங்குரோத்தாகாமல் காக்க பாடுபடுகுனம் போல....! AJeevan Wrote:இன்னுமொரு முக்கிய விடயம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 02-19-2006 இலங்கையில் இருந்தால் தானே தமிழ்மக்களை வாட்டி எடுக்கலாம். வெளிநாடு போனால் ஒன்டும் செய்ய இயலாதே அது தான் கவலை!! - kuruvikal - 02-19-2006 பெரும்பாலான புகழிடத் தமிழ்மக்களிடையே நிலவும் ஒற்றுமையும் தேசியத்தின் மீதான அக்கறையும் சிங்களவர்களை வயிற்றக் கலக்க வைப்பது புதிய விடயமல்ல..! சந்திரிக்கா அம்மையார் காலம் தொட்டு நடக்கிறது..! அதன் தொடர்ச்சியே இது..! ஜேவிபியை பற்றி தமிழர்கள் ஏன் அதிகம் அலட்டிக் கொள்ளனும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Shankarlaal - 02-19-2006 AJeevan Wrote:இன்னுமொரு முக்கிய விடயம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote][b]அஜீவன் எழுதியது என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதில அஜீவன் எங்கே எழுதியிருக்கிறார்?????????????????????</b> - jsrbavaan - 02-19-2006 உவங்கட கதையை கணக்கெடுக்கிறதே தப்பு.... - ANUMANTHAN - 02-19-2006 ஜே.வி.பி க்கு எனது பதில்! வடக்குகிழக்கில் இருந்து சிங்களராணுவத்தை முற்றாகவெளியேற்றுங்கோ நாங்கள் மறுநாளே தாய்மண்ணுக்கு திரும்பிவிடுவோம். - கறுப்பன் - 02-20-2006 முதல்ல நாட்டுக்குள்ள அகதியா இருக்கிறவங்களுக்கே வழி சொல்ல 4 வருசமா பேசியும் வழிய காணால... இதுக்குள்ள.... Quote:சிலர் நாட்டை விட்டு சென்றமையை இட்டு ஜே.வி.பி. கவலை கொள்கிறது. எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அவர்களை மீண்டும் இலங்கை வருமாறு மிகுந்த வேதனையுடன் அழைக்கிறோம் <b>என்னய்யா உங்க குசும்புக்கு ஒரு அளவே இல்லியா???</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 02-20-2006 அட அங்க போனாத்தானே எங்களிட்டைஇருக்கிறதை எடுத்துட்டு இன்னொரு இனஅழிப்பு செய்யலாம் இன்னொரு கூடுதல் ஆதாயம் வெளிநாட்டில இருந்து சத்தம் வராது சிங்கள இனஒடுக்குமுறை பற்றி :evil: - Unnavan - 02-22-2006 அடடா இந்த ஜே.வி.பி யை எல்லாம் கணக்கெடுத்தா மனுசன் உருப்பட முடியுமா? தமிழன் முதலிலை இந்த மாதிரி கதையளைக் கணக்கெடுக்கக் கூடாது. இவங்களின்ரை பேச்சு மோட்டுச் சிங்களவருக்குத் தான் சரி. நாங்கள் எங்கடை வழியிலை கவனமா இருந்தால் சரி. - putthan - 02-24-2006 ஜே.வி.பி யின் அழைப்பை ஏற்று சிட்னி வாழ் சிங்ககொடி தமிழர்கள் எல்லாம் நாடு செல்வதற்கு தயாராக உள்ளார்கள்.ஆனால் அவர்களுக்கு ஓரு கவலை பிள்ளைகளுக்கு சிங்களம் தெரியாது என்று.தங்கள் பிள்ளைகள் சிங்களம் படிக்கவில்லை என்றும் கவலைபடுகிறார்கள்.விரைவில் சிட்னியில் சிங்கள பாடசாலை தொடங்கினாலும் தொடங்குவார்கள்.தங்கள் பிள்ளைகள் சிங்களம் படித்து அங்கு கிரிக்கட் பந்தை பொறுக்குவதற்காக.பொறுக்கிய பந்தால் அடி வாங்கிய பின் எந்த கொடியை பிடிப்பார்கள் என்று நினைக்கின்றீர்கள்??? |