Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றும் அவனுக்காகவே.....
#21
நன்றி வினீத் அண்ணா, அனி, நிலா, வர்ணன், ஜெனனி, விஷ்ணு அண்ணா, அன்ட் ரமாக்கா..

ம்ம் கற்பனை ஆக இருக்கும் வரைக்கும் எல்லாருக்கும் நல்லது தானே.. :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாருங்கோ ரசி அக்கா..5 வருடம் எண்ட கொஞ்சம் கோவிக்குறா.. :roll:


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ப்ரியசகி கவிதை காத்திருப்பை காட்டி நிற்கின்றது? 5 வருட காத்திருப்பா?  கடைசியில் அண்ணாவிற்கு போன் பண்ணி இருக்கிறியள். ஏன் கொட்டும் பனியில் ஐக்கற்பொக்கற்றுக்குள் கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறாய் என்று ஒரு அடி விழாதோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஹிஹி..நிண்டு தானே ஆக வேண்டும்..செல்வமுத்து அங்கிள் எழுதியதை வாசியுங்கள்..அப்போ புரியும் ரமாக்கா..அத்தோடு கீழே உள்ள படத்தை கொஞ்சம் உற்று பாருங்கள்.. :roll: Arrow
..
....
..!
Reply
#22
ப்ரியசகி!

கனடாவில் எப்படி என்று தெரியவில்லை. அதற்கு அங்கு உள்ளவர்களைத்தான் கேட்கவேண்டும்.

நான் வசிக்கும் இலண்டனில் பரவாயில்லை என்று நினைக்கிறேன். பஸ்ஸில் ஏறி மாதக்கணக்காகிவிட்டது.

ஒரு கவிஞனுக்கு கவி எழுதும் உந்துதல் இருக்கும்போது எதனைக்கண்டாலும் கவிதை வரும், காணாவிட்டாலும் வரும். இதனை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. உடனே ஓட்டிக்கொண்டிருக்கும் மோட்டார்வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டாவது எழுதி முடித்துவிடவேண்டும். காலம் தாழ்த்தினால் கவிதை ஊற்று வற்றிவிடும்.

தொடர்ந்து எழுதுங்கள். ப்ரியசகி என்றொரு பெரிய கவிஞர் எம்மிடையே வாழ்கின்றார் என்ற பெருமை பிற்காலத்தில் எமக்கு ஏற்படலாம்.

Reply
#23
நன்றி செல்வமுத்து அங்கிள்..என் மனதுக்கு உட்பட்ட மட்டில் ஓரளவு எழுதுவேன்..ஆனால் சில சமயம்..நம்ம யாழ் உறவுகள் அத்தோட வேறு கவிதைகள் வாசிக்கையில் அவர்களை போல எழுதும் ஆற்றலும் எனக்கு வர வேண்டும் என்று நினைப்பேன்..அதற்காக தான் இப்படி எழுதி எழுதி முயல்கிறேன்..தவறுகளை சொன்னால்..திருத்திக்கொள்ளலாம் இல்லையா.. :roll:

ஓ..நீங்கள்..லண்டனா..நான் கனடா என்று எழுதி விட்டேன்..மன்னியுங்கள்..ம்ம் இங்கு பஸ்ஸுக்கு ஓடி ஓடி தான் உடம்பை நல்ல மாதிரி வைத்திருக்கலாம்.. :evil:
..
....
..!
Reply
#24
ப்ரியசகி!

தவறு என்று சொல்வதற்கில்லை.

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்று சொல்வார்கள்.

"முயற்சி திருவினை ஆக்கும்" என்றும் சொல்வார்கள்.

"விடா முயற்சி வெற்றி தரும்" என்றும் சொல்வார்கள்.

எல்லாமே உண்மை!

வாழ்க்கையில் உயர்ந்தோரின் சரிதங்களைப் படித்தாலும் தெரியும்.

Reply
#25
வாழ்த்துக்கள் ப்ரியசகி மனதில் தோன்றுவதை உடன் வடித்து விடுங்கள். பிழைகள் ( எழுத்து ) இருந்தால் பின்பு திருத்திக் கொள்ளலாம் தானே.
<i><b> </b>


</i>
Reply
#26
Selvamuthu Wrote:ப்ரியசகி, கற்பனை நன்று.




ஒரு சந்தேகம். பஸ் நிலையத்தில் நின்றபோது எதிர்பார்த்தது எதனை? அந்த "அவனை" என்றது பஸ்ஸையா? அந்த அவனைக் காணவில்லை என்றதும்தானே அண்ணாவுக்கு தொலைபேசி அழைப்புச் செய்தீர்கள்? அப்படியென்றால் உங்கும் பஸ் நேரத்திற்கு வருவதில்லையா? சந்தேகம் வந்தது கேட்டேன். என் கற்பனை அப்படிப் போனது.
தயவுசெய்து யாரும் கடிக்க வரவேண்டாம்.

ம் பாருங்கள் ஆசிரியாருக்கும் மாணவருக்கும் உள்ள வித்தியாசத்தை. நாம் எல்லோரும் காதல் காதலனுக்கான காத்திருப்பு என்று நினைத்திருக்க ஆசிரியார் எங்கு போய் முடிச்சு போட்டிருக்கார். அவனை பஸ் என்று எவ்வளவு அருமையான கற்பனை பண்ணி இருக்கார். ஒரு சபாஷ் செல்வமுத்து ஆசிரியாருக்கு.

Reply
#27
நல்ல முயற்சி சகி. காதல் அனுபவத்தையும், காத்திருப்பின் சுகத்தையும்
கவிநயத்தோடு சொல்லியிருக்கிறீர்கள். இந்த தொடர் புள்ளிகளிடுவதை
(..........) தவிர்த்துக்கொள்ளுங்கள்.

Quote:கொட்டும் பனிக்குள் என்ன...
கோடை வெயிலில் என்ன.....
வீசும் காற்றில் என்ன....
மேனி நடுங்கும் சினோவில் என்ன...

சினோ என்பது பொருத்தமாக அமையவில்லையோ எனத் தோன்றுகிறது.
நீங்கள் எழுதியதை அப்படியே நான் எழுதுவதாக இருந்தால், பின்வருமாறு
சொற்களை அடுக்குவேன்:

கொட்டும் பனியென்ன
கோடை வெயிலென்ன
வீசும் காற்றென்ன
நடுங்கும் குளிரென்ன

Quote:நேரம் ஆக..நினைவுகள்...பறந்தன
பறவையிடம் கடன் வாங்கியதோ...சிறகுகளை..
தெரியவில்லை..

வாங்கியதோ என்று வராது, வாங்கினவோ என்பதே பொருத்தமாக இருக்கும்.

Quote:கனத்த இதயத்தோடும்
பனித்த கண்களோடும்
நல்ல வரிகள். ஆனால் ஏற்கனவே பல கவிதைகளில் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல்.

Quote:அவனை அன்று தான் சந்தித்தேன்
புலம் பெயர்ந்த நாட்டில்
முதல் முதல் பள்ளிக்கு செல்கையில்...
அந்த அழகிய காலை வேளையில்..
அழகிய உயரம்..
பளிச்சென்ற கண்கள்..
நிமிர்ந்த நடை..
அவன் வருகை...
"மன்மதன்" ஜோதிகா போலவே
ஆடியிருக்கலாம்...பாடியிருக்கலாம்
ஆனால் இல்லை..
ஏனோ படம் அப்போது வெளியாகியிருக்கவில்லை...
மன்மதன் ஜோதிகா அவசியமில்லாதது. காதல், காத்திருப்பு உணர்வோடு தொடர்ந்துவிட்டு
இடையில் "நக்கல்" உணர்வு அவசியமற்றதாகவே தோன்றுகிறது.

தொடக்கம் முடிவு(கிளைமாக்ஸ்) என்று கதைப்பாணியில்(சினிமாப்பாணியும் கூட) இருக்கிறது
கவிதை. நான் நடந்தேன் - நான் இருந்தேன் - கார் போனது - குயில் கூவியது - வானம் இருண்டது,
பனி கொட்டியது - நான் எழுந்தேன் - மறுபடி நான் நடந்தேன் - வீடு வந்தேன் - சாப்பிட்டேன் -
படுத்து உறங்கினேன் : இப்படித்தான் கவிதையை வடிவமைத்திருக்கிறீர்கள். இப்படி இருப்பது
கதையின் தோற்றத்தைத்தான் தரும். இது வாசிப்பவருக்கு சலிப்பைத் தரும். இதை சாதாரண
வாசகரும் எழுதுவார். கவிதை எழுதத் தெரியாதவரும் எழுதுவார். உங்களுக்கு ஒரு தங்கை
இருந்தால், இன்று பள்ளிக்கூடத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் இதே முறையில்
தான் சொல்லுவார். ஆனால், ஒரு கவிதை எழுதுபவராக உங்கள் பார்வையும், அதனை வெளிப்படுத்தும்
முறையும் மாறுபட்டதாக இருக்கவேண்டும். எனவே முடிந்தவரை இப்படியான தொடர்
நிகழ்வுகளையெல்லாம் சித்தரிப்பதையும், கிளைமாக்ஸ் போன்றவற்றை சொல்வதையும் தவிர்ப்பது
நல்லது. கவிதைகளை வாசித்து உள்வாங்கும் ஒரு வாசகனாக கவிதைக்கான, கவிதை பற்றிய
புரிதலோடு தரப்பட்ட கருத்துக்களே இவை. எனவே பொருத்தமென நீங்கள் கருதுபவற்றை எடுங்கள் -
மிகுதியை விடுங்கள். நன்றி.


Reply
#28
Vishnu Wrote:
வினித் Wrote:
Vishnu Wrote:கவிதை நன்று Confusedhock:


:wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உண்மையாகவா? :wink: :roll:



கண்ணுக்கு மை அழகு
கவிதையில் பொய் அழகு
என்று நினைக்கிறேன்.


எனக்கும் அப்படித் தான் இருக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#29
<b>மிக்க நன்றி இளைஞன்..உங்கள் அறிவுரைக்கு..
உங்கள் கருத்தை மனதில் கொண்டு அடுத்த கவியை கவி பாணியிலே எழுதுகிறேன்..
என்றாலும் உங்கள் உதவிக்கு ரொம்ப நன்றி</b>
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)