Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#41
புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்கள் என்ற தனது அணிக்காக மதுரன் அவர்கள் கருத்து வைத்துச்சென்றுள்ளார். அவரது கருத்தைப்பார்ப்போம்.

இணையத்தின் பயனால் புலம் பெயர் வாழ் தமிழ் இளைஞர்கள் சமூகத்தில் கொடி கட்டிப்பறக்கிறார்கள் அப்படி
என்று கூறும் மதுரன். நம் இளையோர்கள் அன்னப்பறவை போல தமக்கு பயனுள்ளவற்றையே உண்பார்கள். அதுமட்டும் அல்ல அவர்களே நமது எதிர்காலத்தூண்கள் அப்படி என்று புலம் பெயர் வாழ் இளையோரை பாராட்டி, நம் இளையோர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதை சாதுரியமாக முடிப்பார்கள் என்று கூறிச்செல்கிறார். எங்கே நமது இளையோர் கொடிகட்டிப்பறக்கிறார்கள் என்ற கருத்திற்கு என்ன பதில் வருகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போமே.

புளுகர் பொன்னையா அவர்கள் எதிரணியினர் தலைப்பை விளங்கிக்கொள்ளவில்லை என்று கூறிய கருத்திற்கு மறுதலித்து தலைப்பை விளங்கித்தான் ஐயா கருத்து வைக்க வந்துள்ளோம் அப்படி என்று கூறுகிறார்.

இன்னொன்றைக்கேட்கிறார்.. வயல் விதைத்த ஒருவன் வயலில் பாம்பு பூச்சி வருமே என்னைத்தீண்டுமே என்று
பயந்தால்.. அந்தப்பயத்தினால் வயலில் இறங்காமல் விட்டால் நிலைமை என்ன?? அப்படி என்று கேக்கிறார்.
பயப்பிடாமல் களத்தில் இறங்கினால் தான் அறுவடை செய்ய முடியும் என்கிறார். இணையத்தில் தீமை இருக்கு
அப்படி என்று நீங்க ஒதுங்கினால் இணையம் தரும் நன்மையை அறுவடை செய்ய முடியுமா அப்படி என்று
கேக்கிறாரோ.

கடைசியாக ஒரு சில இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்றதை ஒத்துக்கொண்டு.. அதற்காக ஒட்டுமொத்த இளையோரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நாங்கள் தயார் இல்லை என்று கூறி அமர்கிறார். அவரைத்தொடர்ந்து புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
நடுவர்கள் தமிழினி அவர்களே செல்வமுத்து அவர்களே... எமதணித் தலைவர் அவர்களுக்கும் எமது அணியினருக்கும் எனது மகிழ்ச்சியான வணக்கங்கள்... எதிரணியில் தோல்வியின் விளிம்பில் விளிபிதுங்க இருப்பவர்களுக்கும் என் அண்பான வணக்கம்......

அமெரிக்க ராணுவத்தால் தகவல் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டு பின் வெகுசனப்பாவனைக்கு விடப்பட்ட இணையஊடகத்தால் <b>புலம் பெயர் இளைஞர்கள் நன்மைஅடைகிறார்களா அல்லது சீரளிந்து போகிறார்களா..??</b>

எதிரணித் தலைவர் இளைஞன் உழைப்பாளியாய் ஒரு கவிஞனாய் உயர்ந்த இந்த சஞ்சீவ் என்கின்ற இளையோன்... இணையத்தால் உயரவில்லை சொந்த உழைப்பால் போற்றப்படுகிறார்... என்பதுதானே உண்மை...

தலைவர் அவர்களே...! இளையோருக்கு இந்த இணையங்கள் புதிதாக ஓண்றையும் செய்துவிடவில்லை... வானொலிகளும்,தொலைக்காட்ச்சிகளிலும், பத்திரிகையிலும், நூல்நிலையங்களிலும் நாங்கள் பெற்றுக் கொண்டதை இப்போ இணையத்தில் பெறுகின்றனர்... அதனால் இளைஞருக்கு எந்தப்பயனும் இல்லை வேண்டுமானால் சோம்பேறித்தனத்தை பெற்று சீரளிக்கப் படுகிறார்கள்.......

ஆனாலும் எங்கும் அலைவதற்கு அவசியமில்லாமல் முதியவர்களிற்கு இணையம் உதவியும் செய்யலாம்.... உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களால் ஒரே இடத்தில் இருந்து பெறப்படும் தகவல்களானது அவர்களிற்கு உதவியும் ஆகும்...

வேண்டுமானால் இணைய ஊடக தொழில் நுட்பங்கள் ஒரு வளர்ந்த முதிர்ந்த புலம்பெயர் வியாபாரிக்கு உதவலாம், தொழில் உதவியாளருக்கு, உத்தியோகத்தர்களுக்கு அல்லது பொறியியலாளருக்கு உதவுகிறது.... அதனால் வளர்ந்துவரும் இளைஞன் பயன் அடைகிறார்களா எண்றால் இல்லை என்பதே பதிலாக வருகிறது......

<b>புலம்பெயர் நாட்டில் புலம் பெயர்ந்ததால் கணனி அறிவற்ற பெற்றோர் அல்லது இணைய அறிவில் போதிய தகமை இல்லாத பெற்றோராய் இருப்பவர்களால் பிள்ளைகளின் நடவடிக்கைகள் அறியப்படாமலேயே இருக்கிறது.... இது புலம் பெயர் இளைஞர் இணைய உலாவில் என்ன செய்கிறாய் எண்று கேள்வி கேட்கப்படாதவர்களாய் உலாவர உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..... [u]இது ஒரு கட்டாக்காலி மாட்டின் நிலைமைக்கு ஒப்பானது....
அவர்களால்(இளையோரால்) எங்கு வேண்டுமானாலும் மேயலாம்... அசைபோடலாம்.... எது வேண்டுமானாலும் செய்யலாம்....</b>


இளைஞருக்கு உதவாத அல்லது உதவுவதாய் சொல்லப்படும் இணையம்.... இளையோரை சோம்பேறிகள் ஆக்குகின்றது நடுவர் அவர்களே.....!.. ஊர் எல்லாம் திரிந்து ஆசிரியர்கள் நூல் நிலையங்கள் எல்லாம் அலைந்து பெறவேண்டிய இந்த தகவல்கள் விரல்நுணியில் பெறப்படுவதாலும்... வெட்டி ஒட்டுவதாலும்... படித்தபாடம் மனதில் நிற்பதும் இல்லை... இலகுவாய் பெற்ற தகவலின் பெறுமதி தெரிவதும் இல்லை... அதுவே அந்த இளைஞனைச் சீரளிக்கிறது... புதிதாய் அந்த இளைஞன் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை இணையத்தை நம்பியே வாழ்க்கை நடாத்தி சீரளிகிறான்....!


நேரங்களைச் செலவளிக்காமல் வினாடிகளில் கல்வித்தகவல்களைப் பெற்ற மாணவர், மிகுதி நேரங்களை வீணாகச் செலவளிக்கப் புறப்படுகிறார்கள்... குறிக்கோள் இல்லாத பயணங்களை ஆரம்பிக்கிறார்கள்...... இதோடு ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்......
<b>சும்மா இருக்கும் மனமே சாத்தானின் ஊறைவிடம்...</b> எண்ற வகையில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபட வளிவகுத்தது இணையங்களே....! அவர்களைச் சீரளிக்கிறது...

தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்களின் முடிவில்.... மதகுகளில் இருந்து அல்லது விளையாட்டுத் திடல்களில், தோழிவீடுகளில், உறவாடி விளையாடி தங்களின் பொழுது போக்கி அளவளாவிக் கூடிக்களித்த இளைஞர் புலம் பெயர் நாட்டில் தனியான இணைய சற் ரூம் களில். காலத்தைப் போக்குகிறார்கள். மதகுகளில், தோழிவீடுகளில் இருந்த இளைஞர் பெற்ற பயன் சற்றூம்கள் தருவதில்லை அங்கு அவர்கள் பெற்ற வாழ்வாதாரத்துடன் கூடிய புரிந்துணர்வை, தலைமைப்பண்பை, நட்புணர்வை மனிதநேயத்தை, இணையங்கள் தருவதில்லை அதவிட வக்கிரங்களையே தோற்றுவிக்கிறது என்பதுதான் உண்மை. [u]நேரிடையாய் கண்ணியவானாய் இருக்கும் இளைஞர்கள் முகம் தெரியாமல் கண்ணியமாய் இருப்பதிலை என்பதை மறுக்க முடியுமா என்ன...????



எனது அணியின் உறுப்பினர் ப்ரியசகி சொன்னது போல இணையம் அந்த இளைஞருக்கு ஒரு போதைப் பொருள் ஆகிவிட்டது.... விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்... எப்போதும் அதன் சிந்தனையாய் அலையும் துன்பத்துக்கும் உள்ளாகிறான்... இந்த துன்பம் இனையத்தால் வந்ததே...
இது இளையசமுதாயத்தின் சீரளிவின் ஆரம்பம்தான்... இன்னும் முடியவில்லை தொடர்கிறது......

நடுவர் அவர்களே இதற்க்குமுன் எதிரணி உருப்பினர் சினேகிதி அவர்களின் வாதத்தைப் பற்றி கொஞ்சம் கேலிசெய்தேன்.... அவர் இளையோர் தாய் தந்தை எல்லாரையும் கணனி படிக்கச் சொல்லி அறிவுரை வளங்கினார் அது சாத்தியமா எண்று...! அப்போ அவர் ஒரு விடயம் கேட்டார்


<b>எதிரணி உறுப்பினர் சினேகிதியின் கூற்று:-</b> என் பெற்றோருக்கு கணனி தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே.

<b>கொட்டுப் போகவில்லை எண்று, யார் சொன்னார்கள்...... ????</b>

இராவணன் அண்ணா வெட்டிய வெட்டுக்கள் சொல்லும்..... இளையோர் கட்டுப்பாடானவர்களா எண்று... அவர்களோடு சேர்வதால் வெட்டு வாங்கிய முதியோரைக் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் இளையோரைப்பற்றி... ஆனி 29, 2005 11:50 am தொடங்கிவைக்கப்பட்டு இதுவரை 21 பக்கங்கள் தாண்டி விட்ட கருத்துக்களில் மாற்றம் பகுதி சொல்லும்... யாழில் நீங்கள் செய்யும் குழப்படிகள். ... இணையத்தில் அதுவும் யாழில் நீங்கள் யாரும் கெட்டுப்போகக் கூடாது எண்ற நல்ல நோக்கில் அமைக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் இளையோரைக்காக்க எவ்வளவு கடினப்படுகிறோம் எண்று.....

<b>இணைய உலாவுக்காய் வரும் இளையோர் தறிகெடாமல் இருக்க தடை போட்டு மட்டுறுத்தினர்களை நிறுத்தி சீரளியாமல் தடுத்த, தடுக்கும், யாழ்கள நிறுவுனர் மோகன் அண்ணாவிற்கு எமது அணிசார்பாக நண்றிகள்....! </b>

என் அணிக்கு வலுச்சேர்க்க என்னை அழைத்த ரசிகைக்கும் உற்று நோக்கும் நடுவர்களுக்கும்... ஊக்கமளித்த என் அணியினருக்கும் நண்றி கூறி முடிக்கிறேன்.... வணக்கம்... !
::
Reply
#43
இணைய ஊடகத்தால் புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக வாதாட வந்திருக்கும் தல அவர்கள். தானே ஒரு தீர்ப்பை கூறிவிட்டார். தீர்ப்பை கடைசில பார்ப்பம் இப்ப ஏன் வீணான பிரச்சனையை.

புலம் பெயர்வாழ் தமிழ் இளையோருக்கு இந்த இணையமானது புதிதாக எந்த நன்மையையும் செய்யவில்லை என்று கோடிட்டுக்காட்டுகிறார். இணையமானது புதிதாக எதையும் தந்துவிடவில்லை வானொலி தொலைக்காட்சி என்று இதர ஊடகங்கள் நமக்கு அழித்ததையே தருகின்றது. சோம்பேறித்தனத்தையும் சேத்து தருகிறது என்கிறார். இதை எதிரணியினர் ஏற்றுக்கொள்கிறீர்களா..?? மற்ற ஊடகங்கள் தராத எத்தனை சிறப்புகளை இணையம் தருகிறது எங்கே பதில் வருகிறதா பொறுத்திருந்து பார்ப்போம். எங்கே தொடர்ந்து கருத்தைப்பார்ப்போமே..

எதிரணித்தலைவர் கூட உழைப்பால் தான் முன்னேறினார் இணையத்தால் அல்ல.. உழைப்பிருந்தால் தான் முன்னேறலாம் என்கிறார்.

உடல் தளர்ந்து போய் இருக்கும் முதியவர்களுக்கு இணையம் பயன்படலாம் ஒரே இடத்தில் இருந்து தங்கள் வேலையைச் செய்ய என்கிறார். இளையோர் ஓடியாடி பெற்றால் தான் அவர்களுக்கு உடல் உழைப்பு அப்படி என்கிறார். பொன்னான நேரத்தை இணையம் சேமிக்கிறது அல்லவா என்ன சொல்கிறீர்கள்.??

இணையமானது முதிர்ந்த ஒரு வியாபாரிக்கு உதவலாம் இன்னும் உத்தியோகத்தருக்கு உதவலாம் அவர்கள் நன்மை அடைவார்கள் அப்படி என்கிறார். இளையோருக்கு உதவாது என்கிறார்.... இளையோர்கள் வியாபாரிகளாய் இருக்க கூடாதோ..?? கேள்வி வருகிறது.

கணணியறிவற்ற பெற்றோர்கள் மத்தியல் இணையத்தில் உலாவரும் இளையோர்கள் கட்டாக்காலி மாட்டுக்கு ஒப்பாக திரிகிறார்கள். எங்கும் மேயலாம் எங்கும் அசைபோடலாம் அப்படி என்கிறார். உங்க எல்லாரையும் கட்டாக்காலி மாடுகள் என்கிறார்.. கேளுங்களேன்.

சும்மா இருக்கும் மனமே சாத்தானின் ஊறைவிடம்... என்று கூறும் தல அவர்கள். இணையமானது இளையோரை சோம்பேறியாக்குது தேவையில்லாத நடவடிக்கையில் ஈடுபட வழிவகுக்குது அப்படி என்கிறார்.

மதகுகள் விளையாட்டுத்திடல்கள் தோழியர் வீடுகள் என்று உறவாடி மகிழ்ந்த நம் இளையோருக்கு இணைய சற்றூம்கள் அதே பயன் தருவதுண்டா அப்படி என்று கேக்கிறார். அந்த மதகடி கடலையை இன்னும் மறக்கிறதாய் இல்லைப்பாருங்க. நேரடி வாழ்வில் கண்ணியவானாய் இருக்கும் ஒரு இளைஞன் முகம் தெரியாமல் கண்ணியவானாய் இருப்பதில்லை என்கிறார.?? ஏன் கண்ணியத்திற்கு என்ன நடந்தது என்று கேக்கிறார்களா பார்ப்போமே...


<b> என் பெற்றோருக்கு கணனி தெரியாதுதான் ஆனால் நான் யாழுக்கு வாறதால கெட்டுப்போகேல்லத்தானே. </b>
எதிரணி உறுப்பினர் கூற்று என்று போட்டு விட்டு கேக்கிறார்.. யாழ் வாறதால கெட்டுப்போகவில்லை என்று யார் சொன்னார்கள். இராவணன் அவர்கள் வெட்டிய கருத்துக்கள் சொல்லும் நம் இளையோர் கட்டுப்பாடானவர்களா என்று.. என்கிறார். கடைசில யாழுக்கு வாறவங்க கெட்டுப்போறாங்க அப்படி என்றிட்டார். தல அவர்களே.. 21 பக்கத்தை தாண்டிய அந்தப்பிரிவில்.. நகர்த்தப்பட்டது பெயர்மாற்றப்பட்டது ஆங்கிலத்தில் தலைப்பு.. தலைப்பு மாற்றப்பட்டவை.. பற்பல விடயங்கள் இருக்கின்ற கவனித்துப்பாருங்கள். அவையாவும் கட்டுப்படாததால் வந்தவை அல்ல.. யாழ் இளையோரைக்காக்க மட்டுறுத்தினர்கள் கடினப்படினம் என்று கவலைப்பட்டு தனது கருத்தை நிறைவு செய்கிறார். அடுத்ததாக இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#44
<b>இந்த இணையப் பட்டி மன்றத்தின் நடுவர்களே,எதிரணியினரே,எமதணியினரே,கள உறவுகளே அனைவருக்கும் பணிவன்பான வணக்கங்கள்..</b>

அன்புக்குரியோரே,
சில வெளிப்படை உண்மைகளைக் கூட
"வெளிச்சம் போட்டுக் காட்டினால்தான்" சிலர் ஏற்றுக்கொள்வோம் என்று, இக் களத்திலும் இருப்பது அவலமானது;வேதனையானது;
யாரைச் சொல்கிறேன் என்பது இணைய உரையாடல்கள்/கருத்தாடல்கள் மூலம் நற்றமிழ் சொல்லடல்கள் கண்டுணர்ந்த உங்களுக்குப் புரிந்து இருக்கும்.

நண்பர்களே,
இப் பட்டி மன்றம் நடந்து கொண்டிருப்பது
"கற்பில் சிறந்தவள் சீதையா கண்ணகியா" என்று "மணித் துளிகளால் காசளந்த களம்" அல்ல;
புலம் பெயர்ந்த இளையர் சமூகத்தினிடையே
"தொழினுட்ப பாய்ச்சலுடன்" இயைந்த நல் உறவைக் கட்டியெழுப்ப பல் பரிமானங்களோடு நற்களம் திறந்த யாழ் களம்...
இதுக்கு மேலும் "நன்மையை" விளக்க வேண்டுமா....

பாவம்,"வாழைப்பழத்தை உரித்துத் தந்தால்தான் சாப்பிடுவோம்" என அடம் பிடிக்கும் மிகச் சிலருக்காக தொடர்ந்து பார்ப்போம்....

சரி,சரி..புலம் பெயரந்த இளையர் இணையத்தால் நன்மையே பெற்றாலும்,"இல்லை இல்லை சீரழிகிறார்கள்" என்ற "தவறான கண்ணோட்டத்துடன்" இருக்கும் அன்பு உறவுகளை மதித்து, அவர்களுக்குச் "சரியான பார்வையைக் காட்ட" சமூக அக்கறையோடு காட்டும் ஊடகம் அச் சிலர் "குற்றம் சாட்டும்" இணைய ஊடகமே என்பதை அவர்கள் தங்களைத் தாங்களே "கிள்ளியேனும்" உணர்ந்து கொள்ளட்டும்.....

{இவ்வாறான கருத்தாடலை பிற ஊடகங்களில் செய்வதானால் புவியல் எல்லைகளின் வரையரை,தொடர்பாடல் செலவீனங்கள்,நேர விரயங்கள்,ஏனையோரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமை...என பல்வேறு "சீரழிவுகளை" இணையம் என்ற ஊடகமே "சுத்தப் படுத்தி" இலாவகமாக்கிவிடுகிறது என்பதை "நடுவு நிலைமையோடு" கவனியுங்கள் எங்கள் அன்புக்குரியோரே}

"இணைய ஊடகத்தால் புலம்பெயர்ந்த இளையர் சமூகம் சீரழிகிறது" என்று வாய்கிழியப் "பயங்கரவாதக் கூச்சல் போடும்" எதிரணிப் பண்பாளர்கள்(?) தாம் தமது கருத்தைக் "கருத்துச் சுதந்திரத்துடன்" முன்வைக்கும் ஊடகம் என்ன என்பதை உங்களுக்கு "ஆமாப் போடும்' அன்பர்களிடம் கேட்டேனும் அடிக்கடி நினைவுபடுத்துங்கள்.

அத்தகு இணைய ஊடகமா புலம் பெயர்ந்த இளையரைச் சீரழிக்கிறது என்கிறீர்கள்..?
நீதியை மறைத்து அநீதியை ஏத்தும் உங்களை "அலரி மாளிகைகளும்" " றா றா" க்களும் "வரவேற்கக்கூடும்.ஆனால்,சதா "விழிப்புணர்ச்சியோடும்" அரசியல் முதிர்ச்சியோடும் இருக்கும் யாழ் கள உறவுகள் "தக்கது அறிவார்கள்"....

சரி,
இவ்வளவு உண்மைகளை முன்வைத்த பின்பும் "வெற்று வேக்காட்டு" "விதண்டா வாதங்களை" வைத்து எல்லோரது நேரங்களையும் "வன்கவர்வு" செய்யப் போகிறீர்களா...???

தனது "கருத்து" என்று சொல்லிக் கொண்டு வந்த தல{இப்படியான "அர்தமான" பெயர்களையும்,"அரிதர"(மேக்கப்) படங்களைத் தமது கருத்தாடல் பெயர்களில் போடும் "இரசனை"க்கெல்லாம் "சிந்தனைக் குருடாக்கும்" தென்னிந்திய சினிமாதான் காரணமே ஒழிய இணையம் அல்ல என்பதை "இணையம் சீரழிக்கிறது" என்று "விதண்டா வாதம்" செயும் "பண்பாளர்கள்" உணர்வார்கள்}

மேலும், வாதப் பலவீனத்தை மறைக்க
"வஞ்சப் புகழ்ச்சி"இலும் இறங்கிவிட்டார் என்பதை
எமது அணி உறுப்பினர் மீதான "தனி நபர் துதி பாடல்" காட்டுகிறது.குறிப்பாக, "சலுகைகளால்" விலை பேசும் "அவலமான துன்பியல் வரலாற்றை" தனது "வாதத்தில்"(?) ஆரம்பதிலே முன்வைத்து, தமது அணியின் தோல்விக்கான "கட்டியம்" கூறுகிறார்.

"மதவடி கலாசாரத்தை" மீளப் போட்டு "பண்பாட்டுச் சிரழிவுக்கு" ஆலாபணை செய்கிறார்....நடுவர்கள் உறவுகள் இவ்வாவறானவற்றை நுணுக்கமாக கவனிப்பார்கள் என்பதை அவர் அறியார் போலும்.சீரழிவைக் கதைக்க வந்தவராகத் தன்னை இனம் காட்டியவரே அச் சீரழிவை ஊக்குவிப்பது "அமைதி காப்பதாக சொல்லி வந்தவர்(கள்) ஆக்கிரமிப்புக்குத் துணை போவது போல" அபாய சமிக்கை காட்டுகிறது...

வெளிப் பார்வையாளராக நிற்கும் மூத்தோர்(மோகன் அண்ணா)இனைக் கூடத் தமது "விதண்டா வாதங்கள்"க்காக, அவர்து நற் பணிகளுக்குக் கூட "சாயம்" பூசும் எதிரணி நண்பர் வாதத்தை திசை திருப்புவது எமது அணியின் வெற்றியின் உறுதியை மெறுகேற்றுகிறது.

தத்தமது 'சோம்பேறித் தனங்களுக்கு" எல்லோரையும் "பொதுப்படையாக" எடுத்துக் கொள்வது சினப்பிளைத்தனம்;கருத்தாளரின் "கருத்தாடலின் சோம்பேறித்தனத்தை" காட்டுகிறது என்பதை நடுவர்களும், சிந்தனைமிக்க உறவுகளும் இனங்கண்டிருப்பார்கள் என்பது உறுதி.

"தல" அவர்கள் குழப்பியடிகிறார் என்பதற்கு மேலும் எடுத்துக்காட்டுத்தான் இணையத்தால் நேரம் விரையம் ஆகிறது என்பது.தலைகீழாய்ப் பார்த்துக் குழப்புகிறார்;குழம்புகிறார்.

இணையம் மூலம் தான் நேரம் மிகவும் சேமிக்கப் படுகிறது...எம்முடைய அறிவுப்பரப்பை விசாலப் படுத்த "அறிவுத் தேடல்" பரப்பு சர்வதேச வியாபகம் பெறுகிறது...கருத்து மயக்கம் உளவர்களைத் தெளிவு படுத்த முடிகிறது..

{தல கூறிய பல "ஊதிப் பெருப்பித்த" அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எமது சில வரிகளூடகவே பொய்ப்பிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்}

"கண்ணியம்" என்பது
"நேரத்திற்கும் இடத்திற்கும் மாறுபடும்" என்பதை உங்கள் வாதத்தின்(?) மூலம்தான் நாம் அறிந்தோம்...
அட,இவ்வளவு காலமும் எதிரணி நண்பர்களை எவ்வளவு கண்ணியமிக்கவர்களாக எண்ணியிருந்தோம்....
இதை மேலும் விளக்க எமது கண்ணியம் இடங்கொடுக்கவில்லை உறவுகளே..

ஆக மொத்தத்தில்,
வெளிப்படை உண்மையை மேலும் மேலும் "உண்மை" என்று நீருபிக்க / வாதாட வேண்டியிருப்பதை எண்ணி என்ன மேலும் சொல்ல இருக்கிறது....
என்றாலும் உண்மையை உண்மை என்றே அழுத்தி உரைக்கிறோம்....என்பதை ஆணித்தரமாகக் கூறி,
"சத்தியம் வெல்லும்" என்ற எதிர்பார்ப்புடன்,
வரவேற்ற ரசிகை மற்றும் ஏனைய உறவுகளுக்கு நன்றி கூறி,
நீதியை நம்பி விடை பெறுகிறேன்[/color].
"
"
Reply
#45
இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் நன்மை அடைகிறார்கள் என்ற தனது அணிக்காக கருத்து வைக்க வந்த மேகநாதன். எதிரணியினர் வெளிப்படை உண்மைகளைக்கூட வெளிச்சம் போட்டுக் காட்டினால் தான் ஏற்றுக்கொள்வார்கள் அப்படி என்று ஆரம்பிக்கிறார். எங்கே தொடர்ந்து தான் பார்ப்போமே.. என்னத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் என்பதை....

சொல்கிறார் இந்தப்பட்டி மன்றமானது கற்பில் சிறந்தவள் சீதையா கண்ணகியா என்றது அல்ல.. (இப்ப பலரும் கற்பென்றா என்ன என்று கேக்கிறாங்க நீங்க வேறை ) தொழில் நுட்பப்பாய்ச்சலோட இயந்த உறவுகளை கட்டி எழுப்ப நற்களம் தந்த யாழ் ஒரு இணையம் தானே இதற்கு மேல் நன்மையை விளக்க வேண்டுமா என்கிறார்

இணைய ஊடகத்தால் புலம் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் அப்படி என்று வாதாடுபவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் இணையத்தை குற்றம் சாட்டுகிறார்கள் அவர்களை மதித்து சமூக அக்கறையுடன் சரியான பார்வையைக்காட்டுவது எது அப்படி என்று கேக்கிறார்..?? நீங்கள் குற்றம் சாட்டும் இணையம் தானாம் காட்டுது அப்படி என்கிறார். சே சே என்ன பழக்கம் இது நன்மையை அனுபவிச்சுக் கொண்டும் குற்றம் சாட்டலாமோ அப்படி என்று கேக்கிறார் மேகநாதன். பார்ப்போமே என்ன பதில் வருகிறது என்று...

ம் எதிரணியினரை கேட்கிறார் வாய் கிழிய பேசும் உங்களுக்கு கருத்தை சுதந்திரமாக வைக்க உதவிய ஊடகம் எது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். என்ன பதில் சொல்கிறீர்கள். ?? பார்ப்போமே..

இவ்வளவு உண்மைகளை வைத்த பின்னும் ஏன் விதண்டா வாதம் பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள் அப்படி என்று கேக்கிறார். (இதே கேள்வியை அடுத்த அணியினரும் கேக்கிறார்கள் போலிருக்கே)

தொடர்ந்து தல அவர்களது பெயர் பற்றிக்கேக்கிறார். (அது அவர் சொந்த விருப்பம் விட்டு விடலாம்). தொடர்ந்து கேக்கிறார்.. அமெரிக்காவை துணைக்கு இழுத்து பயம் காட்டி தங்களது வாதத்திற்கு பலம் சேத்து தங்களது வாதம் அநீதியானது பலவீனமானது என்பதை உணர்த்திவிட்டார் அப்படி என்கிறார். (அமெரிக்கா என்றால் அநீதி என்று அர்த்தமா என்ன?? சரி சரி இரண்டு அணியினரும் அமெரிக்கா இணையத்தை உருவாக்கியது அப்படி என்று கூறியதாக நினைவு)

மதவடி நினைவுகள் சுகமாய் கூறினார்கள் சிலர்.. இவர் அதை பண்பாட்டுச் சீரழிவு என்று கூறிவிட்டார். இந்த மதவடி தானே.. பயிற்சி நிலையம் எதுக்கு என்று கேக்றியளா.. தம்.. சைட் இப்படி பலவற்றிற்கு அப்படியா..?? அதைத்தான் சொல்கிறார் போல..

இணையத்தால் இளையோர் சோம்பேறி ஆகிறார்கள் என்ற கருத்துக்கு பதில் வைக்கையில்.. உங்கட சோம்பேறித்தனத்தை பொதுப்படையாக எடுத்துக்கொள்வது சின்னப்பிள்ளைத்தனமானது அப்படி என்கிறார். உங்கட அனுபவத்தை ஏன் எல்லா இளையோருக்கும் பிரதியிடுறியள் என்று கேக்கிறார் போல.

இணையமானது எங்கள் நேரத்தை மிச்சப்படுத்த.. அறிவுப்பரப்பை விசாலப்படுத்த.. என்று இணையம் பலவழிகளில் உதவுகிறது.. இணையத்தால் கருத்து மயக்கம் உள்ளவர்களை தெளிவுபடுத்தக்கூட முடிகிறது என்கிறார்...

இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் இதை அழுத்தி உரைக்கிறோம் என்று கூறி அமரும் மேகநாதனைத் தொடர்ந்து புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#46
(மக் ரெஸ்ட் 1 2 3 அட என்ர மக்கின்ர சவுண்ட எதிரணியினர் சார்பான ஒலியமைப்பாளர் குறைச்சு வச்சிருக்கிறார்...இதை முதல் நிறுத்தனும்... :evilSmile

பட்டிமன்றத்தை மீள நினைவுக்கு கொண்டு வந்து அதை ஒழுங்கமைத்து சிறப்புற நெறிப்படுத்தும் இரசிகை அவர்களே! நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்ற மாதிரி பேச வெளிக்கிட்டம் ஏதாவது பேசி முழுப்பூசனிக்காயை சோற்றில புதைப்பம் என்று பகல் கனவு கண்டுகொண்டு எதிரணியில் இருக்கும் நண்பர்களே! ஐயோ எல்லா வேலையும் முடிச்சு இணையத்தில அரட்டை அடிப்பம் என்று சொல்லி வந்தால் அதில நடுவர் என்று சொல்லி என்ர நேரத்தை விரையமாக்கு கின்றனரே என்ற ஏக்கத்துடன் எதிரணிக்கும் எமதணிக்கும் இடையே நோர்வே மாதிரி திரியும் நடுவர்களே! உண்மை இது தான் யாதார்த்தம் இது தான் புரியாத அறிவிலிகளே! புரிந்து கொள்ளுங்கள் இணையத்தால் இளைஞர்கள் சீரழிது கொள்கிறது என்று ஆணித்தரமாகவும் ஆழமாகவும் வாதாட வந்திருக்கும் எனதணி நண்பர்களே!
எங்கள் சமூகத்தின் தொன்று தொட்ட பழக்கத்தில் ஒன்றான புதினம் பார்க்கிறது (புதினம் இணையத்தை பார்த்தே தான் தீரணும் என்று முணுமுணுக்காதீங்க, அது வேற இது வேற) அந்த வகையில் யாழ் களத்தை சுற்றி வரும் வாசகர்களே! அனைவருக்கும் இனிய இந்நேர வணக்கங்கள்.
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?
அருமையான தொரு தலைப்பு நன்மையடைகின்றனரா? அல்லது சீரழிந்து போகின்றார்களா? நன்மையடைகின்றனர் என்று பலர் இங்கே வாதாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு நன்மை என்பதன் வரைவிலக்கனம் புரியவில்லை. இணைய ஊடகத்துக்குள் பல பிரிவுகள் உண்டு அதனடிப்படையில் இளைஞர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பது என்ன? இளைஞர்களை சோம்பொறி ஆக்கி இளைஞர்களை சீரழிக்கும் ஒரு வித கிருமியே இணைய ஊடகமாகும். நோய் பிடிக்கும் முதல் தான் இதற்க்கு சிகிச்சையளிக்க முடியும் வந்த பின் எந்த சிகிச்சையும் பலனளிக்காது. இதற்க்கு இணைய நிலையங்களிலும்..வேலைக்கு போன இடத்தில் வேலை மறந்து தகவல் பரிமாறியில் அலவளாவுவோரையும் குறிப்பிடலாம். இணையம் இளைஞரை சீரழிக்கிறது என்றால் அது மிகையாகாது. எந்த அளவுக்கு இணையம் நன்மையை தருகின்றதோ அதை விட இரு மடங்கு தீமையை இணையம் இளைஞர்களுக்கு வழங்கி அவர்களை சீரழிக்கின்றது. குறிப்பிட்டு சொல்வதானால்..

<b>தேடலற்ற தன்மையை உருவாக்குகின்றது</b>
பள்ளியில் பாடத்திட்டத்தின் படி ஒப்படைகளை வழங்கும் போது புத்தகத்தை வாசி அல்லது பத்திரிகையை படி என்று சொன்னால் மாணவன் இங்கே என்ன செய்கிறான்? இணையத்தில் ஒட்டி விடுகிறான் இது அவனது தேடலை குறைக்க வில்லையா? ஆராயும் வாசித்து அறியும் பழக்கத்தை தடுக்கவில்லையா? இந்த பிரதி செய்து ஒட்டுவதால் பல்கலைக்கழககங்களில் இருந்தும் கல்லூரிகளில் இருந்தும் பல மாணவர்கள் இடை நிறுத்தப்படுகின்றனர். தேடலற்ற ஆக்கங்களால் மாணவர்களை சோம்பொறியாக்கி அவர்களை சுயமாக சிந்திக இந்த இணைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை. ஒரு புத்தகத்தின் சுருக்கத்தை எழுதச் சொன்னால் அதனை இணையத்தில் இருந்து பெற்று ஆசிரியரிடம் வழங்குகின்றனர் இந்த இணையம் அந்த மாணவர்களை எவ்வளவு சீரழிக்கிறது பாருங்கள்.
<b>புதிய தொரு கலாச்சார சூழலை உருவாக்குகின்றது</b>
இணையத்தில் தற்போது புதிய கலாச்சார புற நிலை ஒன்று உருவாகியிருக்கின்றது. எங்கள் அணித்தலைவர் சொன்னது போல தமிழில் கருத்தாடுபவர்கள் மிக மிக குறைவாக உள்ளனர். அப்படியிருக்கையில் உலகலவிய ரீதியில் தமிழ் மொழி இணையப்பாவனையில் இரண்டாவது மொழியாக இருந்து என்ன பலன்? சீரழிவு என்பதை எல்லோரும் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறீர்கள். சீரழிவு என்பது அவன் நடையுடை பாவனை வரை இணையத்தால் மாற்றப்படுகின்றது. தகவல் பரிமாறியில் ஸ்ரீலங்காவில் இருக்கும் தங்கையை / அக்காவை காதல் புரிகின்றான்...கனடாவில் இருக்கும் அண்ணன்/தம்பி இந்த கலாச்சாரம் தான் நன்மையா? இது தான் இளைஞர்களுக்கு இணையம் வழங்கும் நன்மையா? முகம் தெரிய முகவரி தெரிய உறவுகளை உறவாக்கி கொண்டுள்ளோம் என்று யாழில் நீங்கள் பெருமை கொள்கின்றீர்களே இங்கு களத்தில் இருக்கும் எத்தினை பேரது உண்மை விபரம் தெரியும்? அந்த நம்பிக்கை ஏன் இன்னும் வளரவில்லை? இணையம் சீரழிக்கவில்லை என்றால் உங்கள் சொந்த பெயர்களில் உங்கள் சொந்த படத்தை இட்டு கருத்து வைப்பதில் என்ன தயக்கம்? உங்களுக்கே தெரிகின்றது. இந்த இணையம் ஒரு விஷம் என்று பின் எதற்க்கு வாதட வருகின்றீர்கள் அது நன்மையளிக்கின்றது என்று? யாகூ குழுக்களில் பல தமிழ் குழுக்களை பார்த்தேன் மகிழ்ச்சி தான் ஆனால் அவற்றில் அரை வாசி ஆபசங்களுக்கு முன்னூரிமை கொடுத்திருப்பது வெட்க கேடல்லவா? எமது சமூகத்துக்கு கேவலமல்லவா? ( இதை இல்லை என்று வாதாடும் கூட்டம் யாழ் களத்தில் இருக்கின்றது என்று எனக்கு தெரியும் ஏன் எதிரணி தலைவர் கூட வாதாடாலாம் ஆனால் யாதார்தம் எதுவோ அது தான் வெளிப்படும்) பெண்களை அவர்களுக்கு தெரியமல் கவர்ச்சியாக படமெடுத்து இணையத்தில் இணைப்பவர் யார்?அவற்றை இரசித்து பார்ப்பவர்கள் யார்? இது தான் இணையத்தின் நன்மையா? உங்கள் உற்றவருக்கு இப்படியோரு நிலை ஏற்ப்பட்டால் நீங்கள் அதை நன்மை என்பீர்களா? (அதற்காய் எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்தது என்று கருதாதீர்கள்) அண்மையில் கூட ஒரு செய்தியை இணையத்தில படித்தேன் ஒரு உயர் கல்வி நிலைய மாணவர்கள் மற்ற மாணவர்களின் நிழற்ப்படங்களை அவர்களுக்கு தெரியாமல் இணையத்தில் பல்வேறு வடிவத்தில் போட்டுள்ளனர். அது அந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதா? இது தான் இணையம் இளையவருக்கு தந்த நன்மையா? நிழற்ப்படங்களை கிராபிக்ஸ் செய்து அவற்றை இணையத்தில் போடும் புதிய கலாச்சாரம் இளைஞர்களுக்கு நன்மையா? சினிமா நடிகைகளின் படங்களை நிர்வாணமாக இணையங்களில் போடுவதும் இளைஞர்களுக்கு நன்மையா? ஈழ விடுதலை போரின் மாற்றுக்கருத்தாளர் என்றபோர்வைக்குள் எத்தனை இளைஞர்கள் இணையத்தில் அரசியல் செய்கின்றனர்? இது ஈழத்துக்கும் இளைஞருக்கும் நல்ல சமிக்கையா? இது தான் சீரழிவு சீரழிவிலிருந்து பிறக்கும் எந்த நன்மையும் தீமையே!
<b>பணத்தை/நேரத்தை விரையமரக்குகின்றது</b>
பள்ளியில் கொடுக்கப்படும் பாடங்களை செய்யாது தகவல் பரிமாறியில் நேரத்தை செலவு செய்யும் எத்தனை மாணவர்கள் உள்ளனர். இது அவர்களின் எதிர் காலத்துக்கு நன்மையா? வீட்டில் இணையதொடுப்பு இல்லை எனில் நெற்கபேகளுக்கு காசு கொடுத்து இணையத்தை பாவிக்கும் எத்தனை இளைஞரை கண்டிடுக்கின்றேன். ஏன் பள்ளியில் வகுப்புக்களை புறக்கணித்து விட்டு நூலகங்களில் எம்.எஸ்.என் பாவிக்கும் எத்தனை தமிழ் மாணவர்களை கனடிய பள்ளி களில் கண்டிருக்கின்றேன். இவற்றிற்க்கு நானும் விதிவிலக்கல்ல. இது இளைஞர்களுக்கு நன்மையா? புதிய கண்டுபிடிப்புக்களை அதாவது மென் பொருட்களை கண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கு அதனூடாக வருமானத்தை பெற இந்த இணையம் அனுமதிப்பில்லை. காரணம் அதற்க்குரிய சீரியல் இலக்கங்கள் இணையத்தில தாராளமாக பெற்றுக் கொள்ளலாம். இது அதை உருவாக்கிய இளைஞனை பாதிக்காதா?


<b>விஸ்னு எழுதியதிலிருந்து.....
நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம்.</b>
நடுவர் அவர்களே! மனக்கட்டுப்பாடு எங்கிருந்து வருகின்றது? ஒரு பொருளை விற்பதற்க்கு ஏன் விளம்பரம் செய்கின்றனர்? அப்படி விளம்பரம் செய்வதால் மனக்கட்டுப்பாட்டை உடைத்து அதை வாங்கு வார்கள் என்று தெரிந்து தானே!..விளம்பரத்தை பார்த்து பொருட்களை வாங்குவதில்லை என்று எந்த புலத்தவராவது கூறுவார்களா? அப்படி தான் இந்த இணைமும் நீங்கள் ஒரு இணையத்துக்கு போகும் போது அந்த இணையத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கும் விளம்பரமே உங்கள் மனக்கட்டுப்பாட்டை உடைத்து சீரழிக்கின்றது. மனக்கட்டுப்பாட்டை இணையம் உடைக்கின்றது. என்பதை விஸ்னு அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
<b>அஜீவன் அவர்கள் எழுதியதிலிருந்து...
எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,
அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி! </b>
நடுவர் அவர்களே! இது எழுதப்படாத விதியல்ல ,ஒரு முயற்ச்சி செய்தால்....அதில் தீமையிருந்தால்.. அதை சுட்டிக்காட்ட வேண்டியது கடமை இது குறையல்ல பிழைகளை தவறுகளை சீரழிவுகளை சுட்டிக்காட்டுகின்றோம்... முடிந்தால் எதிர்த்து வாதாடுங்கள் மாற்று வழியை சொல்லுங்கள்...முடியவில்லையா மன்னிக்க தவறாய் சொல்லி விட்டோம் என்று பாதையை விட்டு நகருங்கள்.... இப்படி சொல்லி சொல்லியே பலரது கருத்துக்களை எமது சமூகம் ஏளனமாய் பார்க்கின்றது. இணையம் சீரழிக்கின்றது என்று நாங்கள் சொல்கின்றோம். இல்லை நீ கண்டாயா என்று கேட்டால்...நாம் என்ன செய்ய முடியும்.. சீரழிக்கின்றதா..? என்று ஆராய வேண்டாமா? அதை ஆரய விடாமல் அந்த நேரத்தை யாருடனாவது சற் பண்ண செலவழிக்கின்றனர் போல எதிரணியினர்.

<b>வர்னன் அவர்களது கருத்திலிருந்து...
நீங்க சொன்ன 2 வது வகை தமிங்கிலம் பேசுபவர்கள்தான் கனடாவின் சரித்திரம் கண்டிராத ஒரு பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள்! </b>
வர்னன் அது இன உணர்வு... இதற்க்கும் இணையத்துக்கும் என்ன தொடர்பு? இணையம் இளையவரை சீரழிக்கின்றது என்று தானே சொன்னோம். எத்தினை போர் சற்றூமில் ஒரு மாதிரியும் நேரே ஒரு மாதிரியும் இருக்கின்றனர். அப்படி ஏன் இவர்கள் இருக்க கூடாது? நீங்கள் கூட வர்னன் என்று புனைபெயரில் இங்கும், சொந்தமாக மற்ற பெயரில் இதற்க்கு நேர் எதிரான கருத்துடன் இருக்க மாட்டீர்கள் என்பதற்க்கு என்ன உத்தரவாதம்? கணனி என்ற அழகிய பெட்டியை மட்டும் பார்ப்பவராக நீங்கள் இருக்கின்றீர்கள். ஆனால் நாமோ.. கணனியில் இருக்கும் இணையத்துக்குள் இறைந்து கிடக்கும் தீமைகளை பார்க்கின்றோம்..

* <b>இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா? </b>
நல்லதொரு வினா வர்னன் இணையம் தொடங்க முதல் காதல் இருந்தது. ஆனால்..அதற்க்கு பேர் தான் காதல் இப்போது இணையத்தில் வருவது காதலல்ல.. காமத்திலிருந்து காதல் வருகின்றது என்று இணையத்தில் காதல் செய்கின்றனர் பலர். நள்ளிரவில் 12 மணிக்கு வெப்காமில குடும்பம் நடத்தும் காதலர்களை யார் உருவாக்கினார்கள்?

*<b>இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா? </b>
சத்தியமாக உங்கள் கருத்தை ஏற்க்கின்றேன். அப்படியான காலத்தில் நண்பர்களோடு அதைப்பற்றி பேசினார்கள். ஆனால் இணையம் வந்தவுடன் நண்பாகளின்றி அவற்றை நேரடியாக அறிகின்றனர்...அவற்றில் நேரடியாக ஈடுபடுகின்றனர்...

<b>
*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?</b>
<i>வர்னன் நாற்றத்துக்கும் வாசனைக்கும் வித்தியாசத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்...</i>

<b>காகங்கள் கறுப்பானவை-ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!
என்பது போல் உள்ளது! </b>
அட அட என்ன தத்துவம்... உங்களுக்கு நன்மை மட்டும் தெரிந்தால் இணையம் புலத்து தமிழ் இளையோருக்கு நன்மை பயக்கிறது என்று ஆகிவிடுவா?

<b>உண்ணும் உணவில் இருந்து - ஒரு சிலரின் உயிர்வாழ்வு வரை சில அம்சங்கள் பிறருக்கு தீங்காய் இருக்கிறது! அதனால் உணவே கூடாது என்று ஒதுக்கி வைக்கிறோமா?</b>
வர்னன் உணவை உண்டால் மரணம் நிச்சயம் என்றால் நீங்கள் உணவருந்து வீர்களா? இல்லை தானே அதே போல தான் இணையத்தில் தீங்கு இருக்கிறது அவற்றை தவிருங்கள் என்கின்றோம் இல்லை அவையேல்லாம் எமக்கு நன்மை என்று நீங்கள் வாதாடுகின்றீர் அப்படியாயின் நாங்கள் சீரழிவு என்பது உங்கள் அணியினருக்கு நன்மையாய் தெரிகின்றதா? அந்த அளவிற்க்கு இணையம் உங்களை சீரழித்து விட்டதா?
<b>ஆனால்... ஒரு வேளை உங்கள் முடிவு இளையோர்க்கு இணையதளங்கள் சீரழிவுதான் என்று அமைந்தால்-- புதுயுகத்துடன் போட்டி போட்டு ஓடும் இளையவர்களின் கால்களுக்கு குறுக்கே தடையாய் அது அமைந்துவிடுமோ- அவர்கள் ஆற்றலை முடக்கி போட்டுவிடுமோ?என்ற ஒரு சந்தேகத்தைஎன்னுள் நானே எழுப்பி -</b>இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள்? சீரழிக்கின்றது என்று தீர்ப்பு வழங்கி இளையோரை திருத்தி விடாதீர்கள் என்றா?

மேகநாதன் அவர்களது கருத்திலிருந்து...
<b>பாவம்,"வாழைப்பழத்தை உரித்துத் தந்தால்தான் சாப்பிடுவோம்" என அடம் பிடிக்கும் மிகச் சிலருக்காக தொடர்ந்து பார்ப்போம்....</b>
நீங்கள் இப்பவும் உரித்து கொடுபதில் நிற்க்கின்றீர்கள் ஆனால் இணையமோ வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்து விடுவது போல தீயவற்றை இளையவர்கள் முன் கொண்டு செல்கின்றது....

<b>எதிரணியினரை கேட்கிறார் வாய் கிழிய பேசும் உங்களுக்கு கருத்தை சுதந்திரமாக வைக்க உதவிய ஊடகம் எது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். . ??</b>
ஐயா மேகநாதன் அவர்களே! நடுவர் அவர்களே! நீங்கள் இணையத்தில் கருத்தெழுத முதல் வேறு எந்த ஊடகத்திலும் கருத்து வைக்கவில்லையா? பத்திரிகையில் சுகந்திரமாக நீங்கள் எழுதியது இல்லையா? ஏன் வானலைகளில் நீங்கள் சுகந்திரமாக பேசியதில்லையா? மேக நாதன் எந் உலகத்தில் இருக்கிறார். இந்த இணையம் வரமுதல் நீங்கள் உங்கள் ஆக்கங்களை கருத்துக்களை வெளியே சொல்லவில்லையா? அப்படியாயின் அது உங்கள் அறியாமை. நீங்கள் இருந்த சூழல் உங்களுக்கு அப்படியா சந்தர்ப்பத்தை வழங்கா விட்டால் அனைவருக்கும் அப்படியா?

இறுதியாக... கண்மூடிக்கொண்டு பூனை பால் குடித்தால் அது இருட்டாகாது என்பதை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும். இணையம் புலத்து தமிழ் இஞைர்களை சீரழிக்கிறது என்பதில் இணையத்தை புரிந்து கொண்ட எவருக்கும் இரண்டு கருத்து இருக்காது. நிறைகுடம் ஒரு போது தளம்பாது ... இணையத்தை முழுமையாக அறியாத எதிரணியினரின் அதை அறிந்து விட்டு வாதாட வருமாறு அன்போடு வேண்டி...

<b>ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.</b>
நல்ல கண்டு பிடிப்பை இளைஞன் அவர்கள் கண்டு பிடித்திருக்கின்றார்..அதையே நானும் சொல்கின்றேன். துரும்பும் சீரழிக்க கூடிய நிலையிலே எங்கள் இளைஞர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களை இணையம் இலகுவில் சீரழிக்கின்றது. எனவே உங்கள் பழமொழியும் இணையம் இளையவரை சீரழிக்கிறது என்றே சொல்கிறது.
என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்..
நன்றி
வணக்கம்...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
முழுப்பூசனிக்காயை சோற்றில புதைப்பம் என்று பகல் கனவு கண்கின்ற எதிரணியினரே நடுவர்களே எனதணியினரே என்று வணக்கத்துடன் ஆரம்பிக்க்கின்றார் நிதர்சன். தொடர்ந்து என்ன தான் சொல்கிறார் பார்ப்போம். (என்ன இன்னும் இந்த முழுப் பூசனிக்காய்க்கதை வரவில்லையே என்று யோசிச்சிட்டிருந்தன் வந்திட்டு..)
இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தலைப்பின் கீழ் வாதாடுவோருக்கு நன்மை என்பதன் வரைவிலக்கணம் புரியவில்லை அப்படி என்கிறார். நன்மையின் வரைவிலக்கணத்தை அவராவது சொன்னாரா..?? பார்ப்போம்.

இணையமானது தேடலற்ற தன்மையை உருவாக்குகின்றது என்கிறார். இணையத்தில் இருப்பவற்றை பிரதி செய்து கொடுப்பதால் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் இடைநிறுத்தப்படுகிறார்கள். இது வாசிப்புப்பழக்கத்தை தடுக்கிறது என்கிறார். இது நன்மையா என்று கேக்கிறார்.

இணையமானது புதியதொரு கலாச்சார சூழலை உருவாக்குகிறது என்கிறார். எப்படி என்றால்.. இலங்கையில் இருக்கும் தங்கையை அல்லது அக்காவை கனடாவில் இருக்கும் அண்ணன் அல்லது தம்பி முகம் தெரியாது சரியான அறிமுகம் இல்லாது காதலிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது என்கிறார். எதிர் முனையில் இருப்பவர் யார் என்று தெரியாமலே இந்த கலாச்சார சீரழிவு நடக்கிறது என்கிறார்.

இன்னொன்றைச் சொல்கிறார் பெண்களை அவர்களுக்கு தெரியமல் கவர்ச்சியாக படமெடுத்து இணையத்தில் இணைப்பவர் யார்?அவற்றை இரசித்து பார்ப்பவர்கள் யார்? எல்லாம் இளையோர்கள் தான் என்கிறார்.

மற்றொரு முக்கிய கருத்தைச்சொல்கிறார் ஈழ விடுதலை போரின் மாற்றுக்கருத்தாளர் என்றபோர்வைக்குள் எத்தனை இளைஞர்கள் இணையத்தில் அரசியல் செய்கின்றனர்? இது ஈழத்துக்கும் இளைஞருக்கும் நல்ல சமிக்கையா? இது தான் சீரழிவு சீரழிவிலிருந்து பிறக்கும் எந்த நன்மையும் தீமையே! அப்படி என்று அறிதியிட்டுக்கூறுகிறார்.

இந்த இணையமானது இளையோரின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறது என்கிறார் பள்ளிகளில் பாடங்களிற்கு மட்டம் போட்டு நூல் நிலையங்களிலல் எம் எஸ் என்னில் அரட்டை அடித்ததாக தனது அனுபவத்தை பகிர்ந்து செல்கிறார். இது இளையோருக்கு நன்மையா என்றும் கேக்கிறார். இன்ரர் நெட் இணைப்பு பெற பணம் செலவழியுது... அது இல்லாதவர்கள் இன்ரர் நெட் கபேக்கு போக பணம் செலவழியுது என்கிறார்.

எதிரணியினர் வைத்த கருத்துக்களை வெட்டும் விதமாக வந்த கருத்துக்களை பார்ப்போம்.

இணையத்திற்கு அடிமையாவதற்கு மனக்கட்டுப்பாடின்மையே காரணம் என்று வைக்கப்பட்ட வாதத்திற்கு பதில் வைக்கிறார். எவ்வளவு தான் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் அதை உடைக்க விளம்பரங்கள் செய்து சீரழிவுப்பாதையை நோக்கி இணையம் இழுக்கிறது இளையோரை என்கிறார்.

இணையம் இளையோரை சென்றடைய முன்னர் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா. என்ற கேள்விக்கு பதில் தருகிறார். முதல் காதல் இருந்தது அதற்குப்பெயர் தான் காதல். இப்போது இணையம் நல்லிரவு 12 மணிக்கு வெப்காமில் குடும்பம் நடத்தும் காதலர்களை உருவாக்கியுள்ளது என்கிறார்.? இது காதலா என்கிறார்..?? வெப்காமிலையும் குடும்பம் நடத்தலாமா.. :wink:

காகங்கள் கறுப்பானவை - ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள் !!
( எங்காவது லோப்புத்தகத்தில இது இருக்கா..)

தொடர்ந்து சொல்கிறார்.. உங்களுக்கு இணையம் தருகின்ற நன்மைகளை மட்டும் தெரிந்ததால் இணையம் புலத்து இளையோருக்கு நன்மை பயக்கிறது என்று ஆகிவிடுமா..?? என்று கேக்கிறார். எதிரணியினரை..

தொடர்ந்து இணைய ஊடகம் கருத்தை சுதந்திரமாக வைக்க உதவுகிறது என்ற கேள்விக்கு பதில் வைக்கையில்் இதற்கு முதல் பத்திரிக்கையில் சுதந்திரமாக நீங்கள் எழுதியதில்லையா? என்று கேக்கிறார். இல்லையாயின் நீங்கள் இருந்த சூழல் அப்படி ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு தராவிட்டால் அனைவருக்கும் அப்படியா என்று கேக்கிறார்.

இலங்கையில் சுதந்திரமாய் கருத்து வைத்து காணாமல் போன பல பத்திரிகையாளர் இருக்கிறார்கள். இணையத்தில் கருத்து வைத்து பாதிக்கப்பட்டவர்கள் உண்டா என்று கேக்கிறார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.

இணையத்தை புரிந்து கொண்ட எவருக்கும் இணையம் இளையோரை சீரழிக்கிறது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது என்று கூறும் நிதர்சன்.

<b>ஆக்க நினைப்பவர்க்கு இணையம் என்றும் ஊக்க சக்தி - சீரழிய நினைப்பவரை சிறு துரும்பும் சீரழிக்கும்.</b>
என்ற வரியை மேற்கோளாக ஏடுத்து சிறு துரும்பும் சீரழிக்கிற நிலையில் தான் இளையோர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணையம் சீரழிக்கிறது என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்கிறார்...

இணைய ஊடகத்தால் புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனதணிக்கு பலம் சேர்க்கும் பல கருத்துக்களை வைத்து பல கருத்துக்களை வெட்டிப்பேசிச் செல்லும் நிதர்சன் அவர்களைத் தொடர்ந்து புலம் பெயர் வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடத்தால் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
வணக்கம் நடுவர் அவர்களே ...மற்றும் சபையோர் யாவருக்கும் வணக்கம்
புலம் பெயர் இளைஞனுக்கு நன்மை பயக்கிறது என்பதனை எமது அணியைச் சேர்ந்தவர்கள் அழகாகக விளக்கியிருநதார்கள்....
ஒரு உருவாக்கம் செய்வதற்க்கு ஊக்குவிப்பதற்க்கு இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.அதை புல இளைஞன் கடைப்பிடித்து நன்மை அடைகிறான்...ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது. இலமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளி கொணரமுடிகிறது .முன்னரென்றால் சின்னபயலே உனக்கு புரியாதாடா என்று உந்த அரை குறை விற்ப்பனர்கள் அவனது கனவுகளை இலைமறைகாயான திறமைகளை முளையிலையே நசுக்கிவிடுவார்கள்..
அண்மையில் சினிமா சம்பந்தமான கொசுறு செய்தி வாசித்தேன்.காதல் கடிதம் புலம் பெயர் இளைஞர்களால் தாயரிக்கப்படும் படம்...அப்படத்தின் கவிஞன் இசையைப்பாளர் உதயாவை இணையத்தில் சந்தித்து தனது ஆற்றலை காட்டி வாய்பை பெற்றார் கூறப்படுகிறது...பலரது உண்மையான திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவுகிறது கோடம் பாக்கத்தின் கதவுகளை மீறி உட்புகுவதற்க்கு கஸ்டப்படுவேளையில் புல இளைஞனுக்கு தனது ஆக்க சக்தியை வெளியிட கை கொடுக்கிறது .இதே போன்றே லண்டன் ஈழ தமிழ் ஆகாஸ் என்ற நடிகரும் சுகாசினியிடம் இணயம் போல தொடர்பு கொண்டு வாய்ப்பு பெற்றாரென்று கூறப்படுகிறது.
இந்த முன்னாள் இளைஞர்கள் இன்றைய நடுத்தர வயது, முதியவர்கள் இவர்கள் காட்சியறையிலையே மட்டும் கம்பியுட்டர் பார்த்து பிரமித்து இருப்பார்கள் இணையத்தை கூட நாசா வுக்கும் பென்ரகனுக்குமுள்ள விசயமாகத்தான் கண்டிருப்பார்கள் ஏதோ அப்பலோ கலம் சந்திரன் இறங்கவது போன்ற விசயமாகத்தான் நினைத்திருப்பார்கள் .ஆனால் இன்றைய புல இளைஞன் பங்கு சந்தையென்ன வியாபாரம் கொடுக்கல் வாங்கல்கள் என்ன உலகத்தில் முன்னேறிய நுணுக்கங்களென்ன தனது சிறிய மவுசால் வீட்டுக்குள்ளையே உலகத்தை காட்டி பிரமிக்க வைக்கிறான் அவனுக்கு கிடைத்த வரப்பிரசாதமாயே நான் நினைக்கிறன்.
நடுவர் அவர்களே புல இளைஞன் இணையத்தில் நன்மை பெறுகிறானென்ற கூற்றுக்கு வலு சேர்ப்பதற்க்கு தாயகத்தின் நிலமை கூறலாமென்று நினைக்கிறேன்... தாயகத்தில் சிறுவயதிலிருந்து கபொத உயர்தரம் வரை வெறும் ஒப்பிப்பிப்பதையூடாகவும் மீள் நினைவு செய்யுமுறையையூடாகவும் பாடவிதானத்துக்குட்பட்ட தூடாகவும் தான் கல்வியாக தந்து கொண்டிருந்தார்கள்...ஆனால் பல்கலை செல்லும் போது தான் அங்கே புதிய கல்வி முறை காத்திருக்கிறது அங்கே பேராசிரியர் சிறியவழி நடத்தலையே தருகிறார் மிகுதி அவனே தரவுகளே தேடி தொடரபாடல்கள் மூலமும் தானே கற்று கொள்ள வேண்டியவனாகிறான் .இந்த தீடிரென்ற ஏற்படும் புதியமுறைக்கு சிரமத்துக்குள்ளாகிறாகிறார்கள்.கபொத உய்ர்தரத்தில் திறமை சித்தி பெற்றவர் கூட பல்கலை கழகத்தில் ஒளிர்விட முடியாததைக்கண்டிருக்கிறோம்........ஆனால் புலஇளைஞனுக்கோ இணையோத்தோடு இணைந்து இளமையிலிருந்து கல்வி பயில்வதால் உருவாக்கத்துக்கு மிகவும் பயனுள்ளதாகிறது.

புலஇளஞன் இணையத்தில் உலகதரவுகளை பெற்று தான்கல்வி பெறுவதன் மட்டுமன்றி தான் சார்ந்த தாயக சமுதாயத்துடனும் பகிர்ந்து கொள்கிறான்..விமான தொழில்நுட்ப அறிவு,பலகாலகட்டத்து யுத்த சம்பந்தமான அறிவு புலனாய்வுசம்பந்தபட்ட அறிவுகளை புல சூழலில் இருக்கு சாதகமான் அம்சங்களோடு பெற்று தாயக உறவுகளோடு பகிர்ந்து கொள் வதன் மூலம் தமிழ் தேசியத்துக்கூட வலுவூட்டிக்கொள்கிறான்
நடுவர அவர்களே இப்படி இணையம் மூலம் பல நன்மைகளை பெறும் இளைஞனை எதிரர் அணியினர் எல்லோரும் திரும்ப திரும்ப இதைத்தான் கூறுகிறார்கள்... ஆபாச படம் பார்த்தல் டேறறிங் சாற்றிங் செய்தல் ...கெட்டு போதல்... கெட்டு போதல்என்று கூக்கிரலிடுகிறார்கள் .இவர்கள் சொல்லும் கெடுதலை என்பது பற்றி இவர்களே திரும்ப திரும்ப நினைத்துக்கொண்டு தஙகளை கண்டு தாங்களே பயந்து கொண்டு மற்றவர்களை பயப்படுத்துகிறார்கள் .......என்னங்க கெட்டுபோதல் உங்கள் முன் மண்டை வெளித்து காதோரத்து நரை வரும்வரை நாடி நரம்பு களின் துடிப்புகளை வக்கிரங்களாய் மாத்தி வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு உள்ளுக்குள் நெருப்பாக எரிந்து கொண்டு கெட்டு போகவில்லை .. புலத்து நான் காணும் இளைஞன் தெளிவாய் இருக்கிறான்.....அத்துடன் உங்களைப்போல ஏமாளியாக இல்லாமல் பாலவினை நோய் பற்றியும் கர்ப்ப தடை பற்றியும் வடிவாக தெரிந்து வைத்திருக்கிறான் .....
அன்றைய முன்னாள் இளைஞன் இன்றைய நடுத்தர முதியவர்கள் அடல்ஸ் ஒன்லி ஆங்கிலபடத்தில் வரும் அரை குறை வெட்டுகளுடன் வரும் ஒரு இரு நிமிடகாட்சிக்கூட தங்கள் வக்கிரத்தை தீர்த்து கொள்ள ஆ வென்று காத்திருப்பார்கள்....புலத்தில் தெருவோரத்து காதல் ஜோடி யொன்று முத்தமிட்டு அரவணித்து இருக்கும் நிலையை கண்டால் கூட நாகரிகம் கருதி மறு புறம் திரும்பி கொள்கிறான் இந்த புலத்து இளைஞனுக்கு அதை பார்க்கிற வக்கிர அவாவில்லை இந்த புல சுழலில் அவனது அவனுக்குரிய முத்தங்கள் யதார்த்தமாயிருக்கின்றன ......இங்ஙே கெட்டு போகுதலுக்கு இடமில்லை புலத்தில் நான் காணும இளைஞன் தெளிவாய் இருக்கிறான் நடுவர் அவர்களே...

ஆபாச படம் பாரக்க வேண்டிய அவசியம் நடுத்தர முதியவர்களுக்கு சில வேளை ஏற்படலாம்.... உறங்கு நிலையிலிருப்பதை உருகல் நிலைக்கு கொண்டு வருவதற்க்கு ...உதை பார்த்து கெட்டு போகும் நிலையில் புலத்து இளைஞன் இல்லை அவனது வயதுக்கு அவனது நாள நரம்புகளில் பிரச்சனை எழ வாய்ப்பில்லை அவனுக்கு இந்த புலசூழல் சாதகம்சமும் கூட....இப்படி இந்த புலத்து இளைஞன் ஆக்கசக்திக்கு தன்னை பயன்படுத்தும்வதோடுமல்லாமல் இதற்க்கு அடுத்தபடியான வளர்ச்சியிலும் பங்களிப்பானென கூறிக்கொள்கிறேன்
இதில் வாய்ப்பளித்த ரசிகை அவர்கட்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சபையோருக்கு வணக்கம் கூறி விடை பெறுகிறேன் நன்றி...
Reply
#49
அனைவருக்கும் எனது வணக்கம்.

ஒரு விடயத்தை நன்றாக விளங்கிக்கொண்டால் அதனை எப்படியாவது மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். அதுபோல்தான் ஸ்ராலினும் செய்திருக்கிறார்.

ஓர் உருவாக்கம் செய்வதற்கும், ஊக்குவிப்பதற்கும் இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது என்று ஆரம்பித்து அவற்றிற்கு ஊதாரணங்களாக "காதல் கடிதம்" படத்தையும், இலண்டன் ஆகாஸையும் எடுத்துக்காட்டினார். ஆனால் நடுத்தர வயதுடையவர்களையும், முதியவர்களையும் பார்த்து சிறிது நையாண்டி செய்வதுபோல் தெரிகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி இன்றைய இளஞர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான் அதற்காக மேற்கூறியவர்களைச் சாடுவது முறையாகுமா? யாரிடமிருந்து என்ன பதில் வருகிறதென்று பார்ப்போம்.

தாயகத்து பல்கலைக்கழக இளைஞர்களையும், புலத்து பல்கலைக்கழக இளைஞர்களையும் ஒப்பிட்டார். அதேவேளை இவர்கள் இணையத்தால் பெறும் நன்மையையும் விளக்கினார். தேசியத்துக்கு வலுவுூட்டுவதாகக் கூறினார். ஆனால் எதிரணியினர் திரும்பத்திரும்ப ஒன்றையே கூறி கூக்குரலிடுகிறார்கள் என்றார். இவருடைய விளக்கம் தலை வெளித்தவர்களையும், தலைமுடி காதோரம் வெளுத்தவர்களையும், வேட்டி கட்டுபவர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதுபோலவும் இருக்கிறது. எதிரணியினர் பதில் என்ன?

மீண்டும் முன்னாள் இளைஞர்களையும், நடுத்தர முதியவர்களையும் பார்த்து ஆங்கிலப்பட ஆபாசக் காட்சிகளையும், புலத்து தெருவோர முத்தங்களையும் ஒப்பிடுகிறார். இவற்றைப் பார்த்துவிட்டு புலத்தில் இளைஞர்கள் கெட்டுப்போக வாய்ப்பில்லை, மற்றவர்களே கெட்டுப்போகிறார்கள் என்கிறார். புலச்சுூழல் இளைஞர்களுக்கு சாதகமும்கூட என்கிறார். அவற்றை ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி, வளரச்சிக்குப் பங்களிப்பான் என்று முடித்துள்ளார். இனி வரப்போகும் நபர் எப்படித் தன் வாதத்தை வைக்கிறார் என்று பார்ப்போம்.

சில இடங்களில் அவரது தமிழ் தெளிவில்லாமல் இருக்கின்றது. நல்ல தமிழில் தருவதற்கு அவருக்கு தட்டச்சு அனுபவம் போதாமல் சிறிது சங்கடப்பட்டுத்தான் பட்டிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்திருக்கிறர். நான் ஆரம்பத்தில் கூறியதுபோல் ஒரு விடயத்தை விளக்குவதற்கு நல்ல மொழியறிவு அவசியமில்லை. ஆனால் தெளிவாக இருந்தால் அனைவருக்கும் இலகுவாக இருக்கும்.

தனது வாதத்தை வைத்த ஸ்ராலினுக்கு எனது பாராட்டுக்கள். எதிர் அணியிலிருந்து அடுத்தவர் வந்து தனது வாதத்தை முன்வைக்குமாறு அழைக்கிறேன்.

Reply
#50
[size=18]"வணக்கம் வணக்கம் பல முறை சொன்னேன்.
சபையோர் முன்னால் தமிழ் மொழி முன்னால்.
இது தேன் போன்ற உயிரான தமிழில்
இளையோர்கள் நாம் தரும் பட்டிமன்றம்."
(என்ன இது வெறும் காற்று தான் வருகுது)

நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று நிருபிக்கும் நக்கீரர் பரம்பரையில் வந்து உதித்த நம்ம நடுவப் பெருமக்களாகிய திரு செல்வமுத்து அவர்களுக்கும் தமிழினி அவர்களுக்கும்! திரைக்கு பின்னால் நின்று தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் அன்பு சகோதரி இரசிகைக்கும்! ஓடி ஓடியே எத்தனை பதக்கங்களை வென்றாலும் இந்த பட்டிமன்றத்திலும் தங்க பதக்கம் நமக்கே என்று சொல்லி நம்மையும் ஓட வைத்திருக்கும் எமதணி தலைவர் அவர்களே! சோழி அண்ணாவின் ஓட்டத்திற்கு இணையாக வெற்றி பெறும் நோக்குடன் ஓடிக்கொண்டிருக்கும் எமதணி உறுப்பினர்களுக்கும்! கொமாண்டோக்கள் என்றும் சிப்பாய்கள் என்றும் சொல்லிக்கொண்டு கொமடியன்ஸ்கள் போலும் சின்னப்பிள்ளைகள் போலவும் பாட்டி வடை சுட்ட கதையை திருப்பி திருப்பி நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டு இருக்கும் எதிரணி தலைவர் அவர்களுக்கும்! அவர் அணி உறுப்பினர்களுக்கும்! நல்லதொரு பட்டிமன்றத்தை இங்கு நடத்த அனுமதித்த களப் பொறுப்பாளார் திரு மோகன் அண்ணா அவர்களுக்கும் எனது முதற் கண் காலை (மாலை இரவு) வணக்கங்கள் _/\_

நடுவர்களே! பட்டிமன்ற தலையங்கத்தையே எதிரணியினருக்கு நமது அணி உறுப்பினர்கள் எல்லோரும் ஞாபகப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றோம். புலம் பெயர்ந்து வாழும் இளையோர் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? சீரழிந்து போகின்றார்களா? என்பது தான் தலைப்பு

நடுவர்களே! வழமையான எதிரணின் பாணியில் இணையத்தின் நன்மைகள் சிலவற்றை சொல்லியிருக்கிறார்.. <b>இணையத்தின் நன்மை தீமைகளை பற்றி நாங்கள் இங்கு வாதாட வரவில்லை. பதிலாக புலம்பெயர்ந்த இளையோர்கள் இணையதால் நன்மை அடைகிறார்களா இல்லையா?? என்று தான் வாதிட வந்திருக்கிறோம் என்று எமதணியினர் போதும் போதும் என்ற அளவுக்கு சொல்லிவிட்டனர். இருப்பினும் எதிரணியினர் அதை எந்த அளவுக்கு உள்வாங்கி கொண்டனர் என்பது அவர்களது கருத்துகளில் இருந்து தெரிகிறது.</b>

நடுவர்களே! இந்த இணையத்தால் நாம் அடைந்த பயன்களிற்கு உங்கள் வலக்கையில் உள்ள விரல்களே போதும் எண்ணுவதற்கு. தீமைகளை இங்கு எழுத தான் எனக்கு ஆசை. ஆனால் அது இலங்கையை எரித்த அனுமாரின் வால் போல் நீண்டு கொண்டு போகும் என்ற பயத்தில் தான் சில தீமைகளை மட்டும் இங்கு சுட்டிக்காட்ட வந்திருக்கின்றேன்.

நடுவர்களே! எதிரணியினர் கூறுகின்றார்கள்; படிப்பதற்கு பல தேடுதல்கள் செய்வதற்கு இணையம் இலகுவாக இருக்கின்றதாம். ஆமாம் எனது அருமை நகைச்சுவை மன்னர்களே உங்கள் அப்பு ஆச்சி காலத்தில் எல்லாம் இந்த படிப்பிற்கு தேவையான தேடுதல்கள் எங்கிருந்து பெறப்பட்டன? அப்போ அவர்கள் வைத்தியர்களாகவோ நல்ல வக்கீலாகவோ வரவில்லையா? இப்போ பாடசாலைக்கான தேடுதல் என்று சொல்லி விட்டு இளைஞர்கள் வேறு எல்லாவற்றையும் தேடுகின்றார்கள் இணையத்தில் படிப்பை தவிர.

<b>இணையத்தின் நன்மைகளை பற்றி சொல்லிய ஸ்டாலின், இந்த நன்மைகளை இளையோர் முறையாக பயன் படுத்தி நன்மை அடைகிறார்கள் என்று சொல்லிவிட்டு, உதாரணமாக காதல் கடித தயாரிப்பாளர்களையும், திரைப்பட நடிகர் ஆகாஸையும் சுட்டிக்காட்டினார்.</b>

புலத்தில் இணையத்தைப் பயன்படுத்தும் எத்தனையோ இளையவர்கள் இருக்கிறார்கள். யாரோ ஓரிருவர் இவ்வாறு முன்னேறி விட்டார்கள் என்று சொல்லி... எல்லா இளையவர்களும் அப்படித்தான் என்று கூற வருகிறார் நண்பர். இது எவ்வகையில் பொருத்தமாகும்? இணையத்தின் சீரழிவுகளால் ஏற்படும் பிரச்சினைகள் அவற்றின்; விளைவுகளால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி புலம்பெயர் நாடுகளில் வெளியாகும் பத்திரிகைகளில் நாளாந்தம் காண்கிறோம்.


அம்மா: பிள்ளை வந்து சாப்பிட்டு கொம்பியுட்டரில் இருக்கலாம் தானே

பிள்ளை: நோ மம்மி எனக்கு நிறைய வேலை கொம்பியுட்டரில் செய்யணும்.நான் பின்னார் சாப்பிடுகின்றேன்

எம்எஸ்என்னில் நண்பர்: எங்கை போட்டாய் எங்கை போட்டாய் (என்று எழுதிகின்றார்)

பிள்ளை: அம்மா சாப்பிடச்சொல்லி வந்தா நான் பள்ளிக்கூட வேலை செய்வதாக சொல்லி அனுப்பி விட்டேன். நீ சொல்லு அப்ப நீ இன்னும் சாப்பிடலையா?

இது தான் இப்ப பல வீட்டில் நடக்கும் உரையாடல். நடுவர்களே! பிள்ளை அழகாக சுத்த தமிழில் எம்எஸ்என்னில் கதைத்தால் கூட கண்டுபிடிக்க முடியாதளவுக்கு பல புலம்பெயர்ந்த பெற்றோர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் கண்ணுக்கு பிள்ளைகள் படிக்கின்றார்கள் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அந்தப்பிள்ளைகள் செய்யும் லொள்ளுகள் நம்மளை மாதிரி இளையோரிற்குத் தானே தெரியும். வெளியில் போக அனுமதி கிடைக்காத சமயத்திலும் கூட யாரை சந்திக்க நினைத்தார்களோ அவர்களை நேரில் சந்திப்பதை போல் கதைப்பதற்கு வழி வகுக்கின்றது இந்த இணையம். <b>இணையத்தின் எம் எஸ் என் க்கு பின்னால் இருந்து பெற்றோருக்கு காதில் பூ வைத்து விட்டு சாட்டிங்கில் ஈடுபடுபவர்கள் இளையவர்களே.. ஆபாசப்படங்களை அதிகம் பரிமாறி, மற்றயவர்களின் வாழ்க்கையையும் அவ்வப்போது சீரழித்து விடுபவர்கள் இளையோர்கள் தான் நடுவர் அவர்களே... கிழக்கில் சூரியன் உதிக்கிறது என்பதற்கு உதாரணம் தேவையில்லை. நடைமுறையில் நடப்பவற்றை பார்த்தாலே போதுமானது என்று நினைக்கிறேன்.</b>

இளையோரால் இணையத்தினால் நேரத்தைச் சேமிக்கமுடிகிறது என்று எதிரணியினர் சொல்கிறார்களே..! அதனால் இளையோருக்கு நன்மையா கிட்டுகிறது...??? எந்த வகையில் அவர்கள் அதனை தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்?;. குழு மோதல்களிற்கும்;, பணமோசடிக்கும், தீய பழக்கவழக்கத்துக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் அவர்களை அடிமையாக்க அல்லவா இந்த மேலதிக விடயங்கள் பயன்படுகின்றன.! இதுவே அவர்களின் கல்வியை அடியோடு பறிக்கக் காரணமும் ஆகின்றது. அதாவது சேமிக்கப்படும் நிமிடங்களால் அவர்கள்; சீரழிக்கப்படுகிறார்கள்....

நடுவர்களே! இணையம் இளையோரை வாழவைக்கும் கண்ணுக்குத் தெரியா தெய்வமாம். ஏதிரணி அறிவுக்கொழுந்துகளே! அந்த தெய்வத்தை காட்டும் கணினிக்குப் பூமாலை சாத்தி, கற்பூரம் காட்டி அருகிலேயே உண்டியல் வையுங்கள். பிழைத்துக்கொள்வீர்கள்.

<b>இணைய அறிமுகமே இளையோருக்கு வரப்பிரசாதம் போல் என்று நினைக்கும் எதிரணியினர்... இணையம் ஒரு ஊடகம் அதனால் இளையோரை ஆக்க முடிவதில்லை.... ஊக்கம் உள்ள இளைஞனுக்கு தகவல்களை வழங்குகிறது அதைவைத்து திறமையானவன் உயர்கிறான்.... ஆனால் எல்லோரையும் (திறமை இல்லதாவனையும்) சீரழிக்கக் கூடியதாய் இணையம் இருக்கிறது, எல்லோரையும் சீரழிக்கிறது.</b>

நடுவர்கள் அவர்களே! இணையத்தால் எத்தனை பேருக்கு மன உளைச்சல்கள் அதிகமாகின்றது தெரியுமா? இணையத்தில் கதைக்கும் போது நமது உணர்ச்சிகளை வார்த்தைகளால் வடிப்பது கடினம். அப்படி முகநயங்களை போட்டு எழுதினாலும் தகவல்கள் பிழையான கருத்தை கொள்கின்றது. அதனால் தான் இந்த களத்தில் கூட எவ்வளவு சண்டைகள் சச்சரவுகள்? ஏற்கனவே கூறப்பட்ட ஒரு உதாரணம் தான் இருப்பினும் இங்கே கூறுவது பொருத்தமானது என்று நினைக்கிறேன். <b>யாழ் போன்ற நல்ல இணையத்தளங்கள் எத்தனை இளையோர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள்?? புதியவர்கள் எத்தனை பேர் தொடர்சியாக நிலைத்து நிற்கிறார்கள் என்று பாருங்கள்? அதே வேளை கீழ்தரமான வாதங்களில் ஈடுபடும் தளங்களுக்கு எத்தனை இளையோர் செல்கிறார்கள் என்று பாருங்கள்?? ஏற்கனவே இது பற்றிய புள்ளிவிபரங்கள் எமதணியினரால் கூறப்பட்டுள்ளது</b>
ஸ்டாலின் கூறியது:-
ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது. இலைமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளிக்கொணரமுடிகிறது
.

நடுவர் அவர்களே.... அக்காலத்தில் இசை அமைத்தோர் தாம் கற்றுக்கொண்டதோடு.. தமது முயற்சி... தமது புதிய எண்ணங்களை சேர்த்து தரமான இசையை வழங்கினார்கள். எமது பாரம்பரிய முறைகள் அழியாமல் பாதுகாத்தார்கள். ஆனால் இப்போது ஸ்டாலின் கூறியது போல செய்கின்றபடியால் தான் தரமான எமது பாரம்பரிய பாடல்கள் நமக்கு கிடைப்பதில்லை. மாறாக களவாடப்பட்ட... களவாடப்பட்ட மெட்டுகளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்ட பாடல்கள் தான் நமக்குக் கிடைக்கின்றன.. இவை அனைத்துமே மேலைதேய பாணியில் அமைந்தவை தான். இந்திய திரையிசையாகட்டும், அல்லது புலத்தில் உருவாகும் நம்மவர் ஆக்கங்களாகட்டும் மேலைதேய ஆக்கங்களின் செல்வாக்கு மிக மிக அதிகமாக இருப்பதை எதிர் அணியினர் மறுக்க முடியுமா?? ஈழத்தில் அதிகம் இணைய பாவனை இல்லை. அங்கிருந்து உருவாகும் ஆக்கங்களில் நமது பாரம்பரியம் அழியாமல் பாதுக்காக்கப்பட்டு நமது எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதைத்தானும் எதிர் அணியினர் மறுக்க முடியுமா??

வாதத்தின் பல இடங்களில் நடுத்தரவயது உடையவர்களை சற்று தாக்கி பேசியிருக்கிறார்.... எதற்காக அவர் அப்படியான ஒரு தொனியில் பேசினார் என்று அறிய முடியவில்லை. ஆனால் நான் கூறுகிறேன். <b>இணையத்தில் தமிழ் சார்ந்த விடயங்களை அதிகம் பேசி.... கட்டுரைகள் எழுதி... தமிழை, தமிழ் பாரம்பரியதை வளர்க்க அதிகம் பாடுபடுபவர்கள் நடுத்தரவயதுக்காரர்கள் தான் என்பதை எதிர் அணியினர் ஏன் புரிந்துகொள்ளவில்லை? </b>இளையோர்களால் உருவாக்கப்படும் அதிகமான தளங்கள் திரையிசைப்பாடல், படங்கள், நடிகர்களின் படங்கள் தான் கணப்படுகின்றன என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். பல இளையோர் இணையத்தால் மேலைதேய பாரம்பரியங்களிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அவற்றை தடுத்து நிறுத்த நடுத்தரவயதுக்காரர் போராடுவதால் தான் அவர்களுக்கு இப்படியான ஒரு அவப்பெயரோ என்னவோ??

ஸ்டாலின் கூறியது:-
க.பொ.த உயர்தரத்தில் திறமைச் சித்தி பெற்றவர் கூட பல்கலை கழகத்தில் ஒளிர்விட முடியாததைக்கண்டிருக்கிறோம்........ஆனால் புலஇளைஞனுக்கோ இணையத்தோடு இணைந்து இளமையிலிருந்து கல்வி பயில்வதால் உருவாக்கத்துக்கு மிகவும் பயனுள்ளதாகிறது
.

பாடசாலை தேவைகளுக்காக மாணவர்கள் இணையத்தில் தேடல்களை மேற்கொள்வது பற்றி ஏற்கனவே வாதங்கள் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன... இதுபற்றி இன்னும் அதிகம் பேசத்தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். இணையத்தில் இலகுவாக தகவல்களை பெற்றுக்கொண்டு.. அதை முழுமையாக வாசிக்காமலே கொப்பியடித்து பயன் பெறும் புலம்பெயர்ந்த மாணவன் எப்படி தேடலற்ற ஒரு மாணவனாகிப்போகிறான் என்பது பற்றி எமதணியினர் கூறிவிட்டார்கள். இருப்பினும் ஈழத்து மாணவன் சிரமத்துக்குள்ளாகின்றான் என்று கூறுகிறார் நண்பர்.

<b>முட்டி மோதுபவனே புத்திசாலி ஆகிறான். எல்லாமே இலகுவாக கிடைக்கும் என்றால். வாழ்வில் சுவையும் இருக்காது முன்னேற்றமும் இருக்காது</b>.
ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட முயல்கிறேன். ஈழத்து மாணவன் சிரமத்துக்கு மத்தியில் தேடல்களை மேற்கொண்டு படிக்கிறான். புலம் பெயர்ந்த மாணவனும் உயர் தொழில் நுட்பவசதியுடன் படிக்கிறான். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பார்ப்போமே ஆனால்.. புலம் பெயர்ந்த மாணவன் உயர் தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ள போதும். ஒரு பிரச்சினையை எதிர் நோக்குவதிலும், புத்திக்கூர்மையிலும் ஈழத்து மாணவனே சிறந்துவிளங்குறான். மொத்தத்தில் புலம் பெயர்ந்த இளையோர் இணையத்தால் தேடலற்ற பாடசாலை ஒப்படைகளை சுயமாக எழுதாமல் கொப்பி அடித்து விட்டு சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்று நான் கூறுகிறேன்.

ஆபாசப் படங்கள், சாட்டிங், டேற்றிங் பற்றி கூறிய நண்பர்... வயது முதிர்ந்தவர்களை தேவையில்லாமல் சாடியிருக்கிறார், நடுவரவர்கள் சொன்னதுபோல நையாண்டி செய்திருக்கிறார். அத்துடன் இவற்றை வயது முதியவர்கள்தான் செய்கிறார்கள்... புலம் பெயாந்த் நாட்டில்; தான் காணும் இளையவன் தெளிவாக இருக்கிறான் என்று கூறி.. தெளிவில்லாத.. நடைமுறையில் இல்லாத... நம்பமுடியாத ஒரு கருத்தை சொல்லி சென்றிருக்கிறார். ஒரு பிழையான கருத்தை எதிர் அணியினரை நையாண்டி செய்து சத்தம் போட்டு கூறிவிட்டால். அது சரியென்று ஆகிவிடாது.


அன்றைய முன்னாள் இளைஞன் இன்றைய நடுத்தர முதியவர்கள் அடல்ஸ் ஒன்லி ஆங்கிலபடத்தில் வரும் அரை குறை வெட்டுகளுடன் வரும் ஒரு இரு நிமிடக்காட்சி கூட தங்கள் வக்கிரத்தை தீர்த்து கொள்ள ஆ வென்று காத்திருப்பார்கள்....புலத்தில் தெருவோரத்து காதல் ஜோடியொன்று முத்தமிட்டு அரவணித்து இருக்கும் நிலையை கண்டால் கூட நாகரிகம் கருதி மறு புறம் திரும்பி கொள்கிறான் ...

உதாரணமாக இன்று பியர் சாப்பிடுவது.... கோலா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. ஆனால் அன்று பியர் சாப்பிடுவது ஒருபெரும் குற்றச்செயல். அது போலத்தான் அன்றைய ஒருசில நிமிட காட்சிகள் வக்கிர உணர்வுக்கு தீனி போட்டது. ஆனால் இன்று அப்படி இல்லை. அதனால் தான் தெருவோர காதல் ஜோடிகளை புலம் பெயர்ந்த இளையோர் திரும்பிப்பார்ப்பதில்லை என்பதை தவறாக சுட்டிக்காட்டிய நண்பர்.... தவறான கருத்தை அவரே தெளிவில்லாமல் கூறி சென்றிருக்கிறார்.

தான் காணும் இளையவன் தெளிவாக இருக்கிறான் என்று கூறும் இவர்.. புலம் பெயர் நாட்டில் தமிழர் கூடும் நிகழ்வுகளில் இடம் பெறும் காலாச்சார சீர்கேடுகளுக்கு என்ன சொல்ல போகிறார்?? அதுவும் இளையவனின் தெளிவான செயல் என்று கூறப்போகிறாரா என்ன??

<b>சிறிய அளவான நெருப்பு சமையலுக்குப் பயன் படுகிறது.... ஆனால் காய்கறிகளில் இருக்கும் சத்துக்களை இழப்பது போல, பெரிய நெருப்பு ஒரு வீட்டையே எரிப்பது போல, அல்லது ஒரு நகரையே எரிப்பது போலத்தான்... இணையமும் ஆக்கம் உள்ள ஒருசில அனுபவசாலிகளுக்கு திறமைசாலிகளுக்குப் பயன் பட்டாலும்... அது அனுபவம் இல்லாத புலம்பெயர் நாட்டில் பொழுது போக்கை குறியாக்கி வைத்திருக்கும் புலம் பெயர் இளையோரைச் சீரழிக்கின்றது.. சீரழிக்கின்றது. சீரழிக்கின்றது..</b>

பி.கு இணையத்தால் இளைஞருக்கு நன்மை என்று நடுவர்கள்; தீர்ப்பு கூறுவர்களானால் இந்த களத்தில் இருக்கும் அனைத்து மட்டுpறுத்தினர்களுக்கும் கட்டாய லீவு வழங்கி வீட்டிற்கு அனுப்புமாறு மோகன் அண்ணாவை கேட்டுக்கொள்கின்றேன்.

Reply
#51
வணக்கம்
"வணக்கம் வணக்கம் என்று இருமுறை சொல்லி.. இளையோர்கள் நாம் தரும் பட்டிமன்றம்" என்று ஆரம்பித்ததும் (வயதானவர்களை மறந்துவிட்டார் போலும்), எதிரணித்தலைவர் திருப்பித்திருப்பி வருவதாகக் குறிப்பிட்டிருப்பதும் (ஒருமுறைதானே களத்தினில் வந்தார்) அவர் சிறிது குழப்பத்துடனே ஆரம்பிப்பதுபோல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் சிறிது உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம். ஆனால் போகப்போக மிகவும் திறமையாகத் தன் வாதத்தை முன்வைத்தார்.

தலையங்கத்தை எதிரணியினருக்கு தாம் எல்லோரும் ஞாபகப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம் என்றார். நன்மை அணியினர் தாம் தலையங்கத்தை விளங்கித்தான் தம் கருத்துக்களை முன் வைக்கிறோம் என்று திரும்பத்திரும்பக் கூறினாலும் தீமை அணியினர் இல்லை, இல்லை என்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதனை பட்டிமன்றத்தை ஆரம்பத்திலிருந்து ஒழுங்காகப் படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

இணையத்தில் பாடசாலைகளுக்கான தேடுதல் என்று சொல்லிவிட்டு படிப்பைத்தவிர வேறு எல்லாவற்றையும் தேடுகின்றார்கள். உங்கள் அப்புவும், ஆச்சியும் எந்த இணையத்தில் தேடினார்கள் என்று அந்த நகைச்சுவை மன்னர்களிடம் கேட்கிறேன் என்று நறுக்காக் கேட்கிறார் ரமா?

ஓரிருவர் இணையத்தால் முன்னேறிவிட்டார்கள் என்பதற்காக எல்லோரும் முன்னேறிவிட்டார்கள் என்று கூறமுடியுமா? என்றும் கேட்கிறார். அப்போ "ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதமில்லை" என்கிறாரா?

பிள்ளைகள் எம் எஸ் என் இல் செய்யும் லொள்ளுகளுக்கு உதாரணம் காட்டினார். பெற்றோருக்குக் காதில் புூவை வைத்துவிட்டு தாமும் சிரழிந்து மற்றையவர்களையும் சீரழிக்கிறார்கள் என்றார். இவற்றை தன்னைப்போல் இளையோருக்குத்தான் தெரியும் என்றார். (பாம்பின் காலை பாம்புதானே அறியும்). இதனை அறியாத பெற்றோர்களை தனதணியில் முன்பு வந்தவர்கள்போல் தானும் சாடுகிறார். (பாவம் அந்தப் பெற்றோர்கள்).

இளையோரால் இணையத்தினால் நேரத்தைச் சேமிக்க முடிகிறது, ஊக்கமுள்ள இளைஞனுக்கு தகவல்களை வழங்குகிறது, அதை வைத்து திறமையானவன் உயர்கிறான் என்கின்ற நன்மை அணியினரின் வாதத்தை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டாலும் அதனால் அவர்கள் சீரழிகிறார்கள் என்றே திரும்பத்திரும்பக் கூறுகின்றார். ரமா கூறுவதுபோல் நன்மைகளைவிட தீமைகள் பன்மடங்காக இருக்கின்றனவா? நன்மை அணியினர்தான் இதற்குப் பதில் தரவேண்டும்.

இணையம் இளையோரை வாழவைக்கும் கண்ணுக்குத் தெரியாத தெய்வம் என்ற கூற்றிற்கு அப்படியானால் அதற்குப் புூமாலை சாத்தி, கற்புூரம் காட்டி, உண்டியல் வையுங்கள் என்று கொதிக்கிறார். "தெய்வம் என்றால் அது தெய்வம் வெறும் சிலை என்றால் அது சிலைதான்" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. கல்லை, காசை, மனிதரைத் தெய்வமாக மதிப்பவர்கள் இணையத்தை தெய்வமாக மதிப்பது தவறா? சரியா? பதில் தாருங்கள் எதிரணிப் பக்தர்களே!

இணையத்தால் உலகை எம் கைக்குள் கொண்டுவந்தாலும் எமது பாரம்பரிய இசை பாதுகாக்கப்படவில்லை, களவாடப்பட்ட மெட்டுக்களும், மாற்றங்கள் செய்யப்பட்ட மெட்டுக்களும், மேலைத்தேய ஆக்கங்களின் செல்வாக்குகளும்தான் அதிகமாக இருக்கின்றன என்று குமுறுகிறார். அதேவேளை நடுத்தரவயதுடையோர்தான் தமிழை, தமிழ்ப் பாரம்பரியத்தை வளர்க்க அதிகம் பாடுபடுகின்றார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

இணையம் இல்லாவிடில் தேடல் அதிகமாகும், புத்திக்கூர்மையும் அதிகமாகும் என்றும், இணையத்தால் இளையோர் சோம்பேறிகளாகின்றார்கள் என்றும் கூறுகின்றார். தெளிவில்லா இவர்களால் தமிழர் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் இடம்பெறும் கலாச்சார சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.

தான் ஒரு பெண் என்பதாலோ என்னவோ தனது உதாரணங்களை சமையல் அறைவரை கொண்டு செல்கிறார். இணையத்தை ஆக்கமுள்ள ஒருசில அனுபவசாலிகளுக்கு சமையலுக்குப் பயன்படும் அளவான நெருப்புக்கும், அனுபவம் இல்லாத புலம்பெயர் நாட்டில் பொழுதுபோக்கை குறியாக்கி வைத்திருக்கும் புலம் பெயர் இளையோரை வீட்டையும், நகரத்தையும் எரிக்கும் பெரியதொரு நெருப்புக்கும் ஒப்பிட்டு சீரழிக்கிறது, சீரழிக்கிறது, சீரழிக்கிறது என்று மூன்று முறை சீறுகின்றார். "அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்" என்பதாலா? இந்த அம்மி நகருமா பொறுத்திருந்து பார்ப்போம்.

ரமா வயதால் இளையவர்தான் ஆனால் பட்டிமன்றத்தில் எப்படி வாதாடவேண்டும் என்கின்ற அனுபவத்தில் முதியவர்போல் தெரிகிறது. இறுதிவரை இடியுடன் கூடிய மழை பொழிந்ததுபோல் தன் வாதத்தினை முன்வைத்தார். எதிரணியினருக்கு தனது தமிழால் நல்ல சாட்டையடி கொடுத்த அதேவேளையில் நடுவர்களாகிய எமக்கும் ஓர் அடி பட்டதுபோல் உணர்ந்தேன். பி.கு வில் நன்மை அணிக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கினால் மட்டுறுத்தினர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதுதான் அது. நல்ல வாதம் செய்தவர் ஏன் ஒரு மிரட்டலையும் விட்டுச்சென்றார்? முகத்தாரும், தலவும் அவரை தட்டிக்கொடுப்பதுபோலவும் இருக்கிறது. ம்! நாம் நடுவர்கள்தான்!

அடுத்து நன்மை அணியிலிருந்து வருபவர் யார்? வருக, வந்து உங்கள் வாதத்தைத் தருக.
நன்றி.

Reply
#52
அன்பிற்கும், பண்பிற்கும் உறைவிடமாக என்றுமே நடு நிலை தவறாது செயற்படும் நடுவர் பெரு மக்களே, மிகுந்த சிரமத்தின் மத்தியில் பல்வேறு குழப்பங்களுக்குள்ளே இந்தக் களத்திலே இதனை கஸ்ட்டப் பட்டு நெறிப் படுத்திக் கொண்டிருக்கும் ரசிகை அவர்களே,இந்தப் பட்டி மன்றத்திற்கு களம் அமைத்துக் கொடுத்த மோகன் அவர்களே ,சீரிய சிந்தனையும் அறிவாற்றலும் உடய எமது அணித் தலைவர் கவிக் கூர் இழஞ்சன் அவர்களே,வெற்றி அணியின் நண்பர்களே, தோல்வியை எதிர் பார்த்து நடுவர்களின் நடு நிலமயைச் சந்தேகிக்கும் எதிரணி விதண்டாவாதிகளே அனைவருக்கும் எனது முதற் கண் வணக்கம்.



இங்கே இணயத்தின் நன்மைகளை மீண்டும் பட்டியல் இட்டு உங்கள் பொறுமையைச் சோதிக்க நான் விரும்பவில்லை. நடுவர் அவர்களே நீங்கள் தீர்ப்புச் சொல்லும் நேரம் நெருங்கி வருவதால் எதிரணி அன்பர்கள் தலைப்பைப் பற்றிச் சொன்ன சில விடயங்களை சற்று விரிவாக ஆராய்ந்து, அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.அவர்கள் மீண்டும் மீண்டும் தலைப்பைப் பாருங்கள் தலைப்பை பாருங்கள் என்று கூறுகிறார்களே ஒழிய அவர்கள் தலைப்பைச் சரியாகப் புரிந்து கொண்டனரா?



இங்கே விவாததிற்கான தலைப்புத் தான் என்ன?புலம் பெயர்ந்து வாழும் இளயோர் இணய ஊடகத்தால் சீரழிகின்றனரா? நன்மயடைகின்றனரா? என்பது தானே?
இங்கே இணயம் என்பது ஏன் ஒரு ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது ,இதில் தானே இந்தக் கேள்விக்கான விடையும் உள்ளதே?இதனை இவர்கள் கவனித்து தான் இந்தப் பட்டி மன்றத்தில் வாதாடுகின்றனரா?ஊடகம் என்றால் என்ன?இதனை இரண்டாகப் பிரித்தால் ஊடு அகம் என்று வரும்.அதாவது தனக்கு ஊடாக தனது அகத்திலே தகவல்களைக் காவிச் செல்வது தானே ஊடகம்.இங்கே ஒரு முனையில் இடப்படுவதே இன்னொரு முனயில் எடுக்கப் படுகிறது.ஆகவே இங்கே சீரழிப்பவை என்று சொல்லப் படுபவை ஒரு முனையிலே இடப்பட்டு மறுமுனயிலே எடுக்கப் படுகிறது. நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?



இங்கே மனிதர்களே சீரழிக்கின்றனர் இணயம் அல்ல.சரி அப்படியானால் அதெப்படி நன்மை பயக்கிறது என்று வாதிட முடியும், என்று எதிரணி நன்பர்கள் ஒரு குதர்க்கமான கேள்வியைக் கேட்க முடியும்.இதற்கான பதிலை இணயம் என்னும் தொழில் நுட்பத்தை மற்றய ஊடகங்களின் தொழிற்பாட்டு முறமையுடன் ஒப்பிடுவதன் மூலம் பெற முடியும்.இந்த ஊடகத் தொழில் நுட்பமானது மற்றய எந்த ஊடகத்தையும் விட பெறுனருக்கு அதனைக் கட்டுப் படுத்தும் வல்லமையை வழங்குகின்றது .ஆகவே இங்கே பெறுனர் ஆனவர் சக்தி மிக்கவராக ஆக்கப் படுகிறார்.இந்த தீர்மானிக்கும் சக்தியை அவர் நன்மைக்குப் பாவித்தால் நன்மை அடைவார்.சீரழிவுக்குப் பாவித்தால் சீரழிகிறார்.இந்த தொழில் நுட்ப வல்லமையே இணயத்தின் வெற்றிக்கு இதன் பாவனை அதிகரிப்புக்கு இதன் பயன் பாட்டுக்கு அடிப்படயாக அமைகிறது.ஒரு தொலைக்காட்சியையோ அல்லது ஒரு பத்திரிகையையோ எடுத்துக் கொண்டாலோ அதில் வரும் தகவல்களை நெறிப் படுத்துபவராக அதன் செய்தி ஆசிரியர்கள் , நிருபர்கள் இருக்கிறார்கள்.இன்று புலத்தில் உள்ள ஒரு பத்திரிகையை எடுத்துக் கொண்டால் அதில் முதலில் ஒரு செய்தியைத் தேடிப் பிடிப்பதே கஸ்டமாக இருக்கிறது அப்படித் தேடிப் பிடித்தாலும் அது அனேகமாக ஒரு சினிமாச் செய்தியாகத் தான் இருக்கும்.தொலைக் காட்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் காலயில் ஒரு படம் மாலையில் ஒரு படம் பிறகு அழுதுவடியும் சின்னத்திரை அறுவைத் தொடர்கள்.இங்கே அறிவியலுக்கு சிந்தனை வளர்ச்சிக்கு ,சமூக வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? ஆனால் இணயதில் நாம் விரும்புவதை ஒரு சில சொடுக்குகளுக்குள் எம்மால் பெற முடிகிறது.அத்தோடு பெறப்படும் விடயமானது அந்த நிமிடதிற்கு பொருத்தமான விடயமாக இருகிறது.அத்தோடல்லாமல் பெறப்படும் தகவலை நாம் எமக்கு ஏற்றவாறு மாறுபாடு அடயச் செய்யக் கூடியதாக இருகிறது.ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் தகவலை உருமாற்றி அதனை எமக்கு பயன் உள்ள வழியில் மாற்றமடயச் செய்யக் கூடியதாக உள்ளது.அது மட்டுமா ஒருவர் தானே செய்திகளை ,படைப்பிலக்கியங்களை ஆக்கக் கூடிய வல்லமயை அது வளங்கி உள்ளது.இங்கே எதிரணியில் வாதாடும் அன்பர்கள் கவிதை எழுதக் கூட அது களம் அமைத்துக் கொடுத்துள்ளது.இதனை மறுதலித்து அவர்கள் வாதிடுவர் எனின் அவர்களை என்ன வென்று சொல்லுவது.இந்த இணயம் இல்லாது விடின் இன்று தமிழ் மணத்தில் பூத்துக் குலுங்கும் இழஞர்களின் படைப்புக்கள் அவர்களுக்குள்ளே வாழ்ந்து அல்லது பள்ளி மட்டைக் கொப்பிகளுக்குள்ளே புதைந்து மண்ணோடு மண்ணாகி இருக்கும்.இங்கே பெட்டை என்னும் ஒரு வலைப்பதிவாளர் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது,எனக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும் எண்ணங்களை எனது ஆளுமையை நான் வெளிப்படுத்தாமல் இது கால வரையும் புளுங்கிக் கொண்டு இருந்தேன்.இப்போது எனது எண்ணங்களை வெளிக் கொணர எனக்கென்று ஒரு ஊடகம்,எனக்கென்று ஒரு களம் எனக்குக் கிடைத்திருகிறது என்கிறார்.ஏனெனில் படைப்பிலக்கியம் எனப்படுவது அமைப்பு ரீதியாக அல்லது தனி மனித செல்வாக்கு,பண பலம் உடயவர்களின் ஆதிக்கதுக்குள் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருந்து வந்துள்ளது.இன்று இணயத்தின் வரவால் இந்த தடைகள் உடைக்கப்பட்டு ஒருவரின் ஆக்கத் திறமையே படைப்பதற்கான திறவுகோலாக உருமாறி உள்ளது.இன்று தமிழ் மணத்திலே உள்ள தொழில் நுட்பமானது வாசகரின் பரிந்துரைகளுக்கு ஏற்ப ஒரு ஆக்கத்தை மேலுளுப்ப வைக்கக் கூடியதாக உள்ளது.இதனைச் சாத்தியப் பட வைத்தது இணயத் தொழில் நுட்பமே அன்றி வேறொன்றும் அல்ல.இந்த இழஞ்சர்களின் முன்னேற்றத்தை வெளிக் கொணர்ந்தது இணயம் என்னும் தொழில் நுட்பமே அன்றி வேறொன்றும் அல்ல.



ஆகவே இங்கே இணயம் என்னும் தொழில் நுட்பமானது ஒருவருக்கு அதிகூடிய வினைத்திறனை வளங்கி அவரின் செய்யற்பாட்டு ஆளுமையை அதிகரிக்க வைக்கிறது.இவ்வளவு வல்லமை படைத்த இந்த ஊடகத்தயே இங்கே சீரழிக்கிறது என்று வாதிட வந்து ,விதண்டாவாதமாக பேசிக் கொன்டிருகின்றனர் எதிர் அணியினர்.



இங்கே இழஞ்சர் தம்மைத் தாமே சீரழிக்கிறனரே தவிர ,இணயம் அவர்களைச் சீரழிக்கவில்லை ,அதனால் சீரழிக்கவும் முடியாது என்று ஆணித்திரமாக திடமாகக் கூற முடியும் நடுவர் அவர்களே.அதன் தொழில் நுட்பத் திறன் ஆனது மற்றய ஊடகங்களை விட நன்மை பயற்க வல்ல இயல்புகளை தன்னகத்தே கொண்டது.அதன் நன்மைகளைப் பயன் படுத்துவது அதனைப் பாவிப்பவர் கைகளிலேயே தங்கி உள்ளது.ஆகவே இணயத்தை குறை கூறி, அம்பை நோகாமால் ,அதனை எய்த மனிதரை நோக்கி உங்கள் சுட்டு விரலைக் காட்டுங்கள்,என்று கூறி ,இந்த வாய்ப்பை அழித்த யாழ்க் களத்திற்கு நன்றி கூறி,பொறுமையாக இருந்து இந்தத் தலைப்பில் மட்டுறுதினர்களுக்கு வேலை எதுவும் இன்றி கருத்தாடிய அனைவருக்கும் நன்றி கூறுவதோடு ,ரமா அவர்கள் சுட்டிக் காட்டிய படி இந்தத் தலைப்பில் எவ்வாறு மட்டுறுதினருக்கு வேலை இல்லாமல் நாம் கருத்தாடினொமோ அவ்வாறே எல்லாத் தலைப்புக்குள்ளும் நாம் கருத்தாடினால் மட்டுறுதினர்கள் இங்கு தேவயே இல்லை என்று கூறி,இது ஒன்றே மிகத் தெழிவாக எமக்கு மனிதர்களே சீரழிவுக்குக் காரணம் ஆகுகின்றனர் ,இணயம் அல்ல என்பதை உணர்த்துகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .இதனை உங்கள் சிந்தையில் நிலை நிறுத்தி நடுவர் அவர்களே உங்கள் தீர்ப்பை வழங்குவீர்கள் என்கின்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்,

நன்றி,
வணக்கம்.
Reply
#53
வணக்கம்
நாரதர் வந்து கலகத்தை உண்டாக்குவார் என்று எதிர்பார்த்தேன் வந்துவிட்டார். கூடவே கலகத்தையும் உருவாக்க ஏதாவது கொண்டுவந்தாரா என்று பார்ப்போம்.

"கவிக் கூர் இழஞ்சன்" யார் இவர்? ஓ! அணித் தலைவரையா இப்படி அழைக்கிறார். சரி, சரி.

இக்களத்திலே வந்து கருத்துக்கூறிய பலரைப்போலவே இவரும் தலைப்பைப்பற்றிய சந்தேகம் இன்னும் சிலருக்கு இருக்கின்றது என்று அதனை விளக்க முயன்றார். இணையம் என்பது ஏன் ஓர் ஊடகம் என்று சொல்லப்பட்டுள்ளது? என்ற கேள்வியிலேயே விடையும் உள்ளது என்றார். எதிரணியினருக்கு தலைப்பைத் தெளிவுபடுத்த "ஊடு, அகம்" என்றால் என்ன என்ற விளக்கத்துடன் ஆரம்பித்தார். இந்த ஊடகத்தை நன்மைக்குப் பாவித்துப் பயனடைவதும், தீமைக்குப் பாவித்துச் சீரழிவதும் இதனைப் பாவிப்பவரையே பொறுத்தது என்று கூறினார்.

புலத்திலே உள்ள பத்திரிகைகளில் ஒரு செய்தியைத் தேடிப்பிடிப்பதே கடினமாக இருக்கிறது என்றார். அப்படிப் பிடித்தாலும் அது ஒரு சினிமாச் செய்தியாகத்தான் இருக்கும் என்றார். இது உண்மையா? அல்லது தன் கலகத்தை ஆரம்பிக்க எடுத்த ஓர் கணையா?

தொலைக்காட்சியையும் திட்டுகிறார். சின்னத்திரை அறுவைத் தொடர்களும், தினம் இரண்டு சினிமாப் படங்களையும் தவிர அறிவியல் சிந்தனை வளர்ச்சிக்கு, சமூக வளர்ச்சிக்கு என்ன இருக்கிறது? என்று கேட்டார். (இவைகள் இல்லாவிட்டால் இங்கே பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்றும் கேள்விப்பட்டேன். இவைகள் இருப்பதாலும் பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்றும் கேள்விப்படுகிறேன்.) இவற்றோடு இணைய ஊடகத்தை ஒப்பிடுகிறார்.

இணைய ஊடகம் இலகுவாக தகவல்களைத் தருகின்றது. தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும், படைப்பிலக்கியங்களை ஆக்கவும், அவற்றை பலரும் படிக்கக்கூடியதாக பணச்செலவுகள் ஏதுமின்றி பார்வைக்கு வைக்கவும் களம் அமைத்துக் கொடுத்ததாகவும், இன்றைய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு இணைய தொழில்நுட்பமே காரணம் என்று ஆனந்திக்கிறார்.

மீண்டும் இறுதியில் ஆவதும், அழிவதும் இதனைப் பாவிப்பவர் கைகளிலேதான் இருக்கின்றது என்றும், இணைய ஊடகத்தை ஆக்கியவர்களைக் குறைகூறுவதுபோல் நிறைவுசெய்திருக்கின்றார். எதிரணியினரே இதற்கு உங்கள் பதில் என்ன?

நாரதர் தனது வாதத்தை தனது பாணியிலே அழகாகச் செய்தார். நாரதரரும் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் விட்டிருந்தாலும் வாதத்தின் முடிவில் இந்த வாய்ப்பை "அழித்த" யாழ் களத்திற்கு நன்றி கூறி முடித்துள்ளார். "அளித்த", "அழித்த" இரண்டும் மாறுபட்ட கருத்துடைய சொற்கள். ழ, ள வை இடம்மாறி எழுதினால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்? பலருக்கு இந்த ழ, ள, ல என்பன பிரச்சினையாகத்தான் இருக்கிறது. சபையிலே கதைத்தால் உடனே திருத்திக்கொள்ளலாம். ஆனால் இங்கே எழுதிவிட்டால் ஒருபோதும் அழியாது அல்லவா? மன்னிக்கவும். இவைகளைக் குறைகூற விரும்பாவிட்டாலும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும் முடியவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.

அடுத்து தீமை அணியிலிருந்து வருபவர் யார்? இனி வரப்போகும் புூனைக்குட்டியும், மற்றவர்களும் சண்டை போடாமல் ஒழுங்கில் வந்து என்ன பதில் கூறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.

Reply
#54
இந்தப் பட்டிமன்றத்தை தலைமை தாங்கி நடத்தும் நடுவர்களே! இதை நடத்துவதற்கு ஆவன செய்த களப் பொறுப்பாளர்களே! மட்டுறுத்தினர்களே, எனது மற்றும் எதிரணி உறவுகளே, பார்வையாளர்களே அனைவருக்கும் முதற்கண் வணக்கங்கள்!

ஒரு இளைஞனை தொலைக்காட்சிகளும், வானொலிகளும் சீரழித்து விட்டன. எனவே இணையம் சீரழிக்குமா என்று கவலைப்படத் தேவையில்லை என்று எதிரணியினர் விளம்புகின்றனர். ஆனால் அதிக விகிதமான இளைய சமுதாயத்தை சீரழிவின் பால் தள்ளியது இணையம் என்பதை இதனுள் மறைக்க முனைகின்றனர்.

எதிரணியினர் சீரழிவான விடயங்களை, சினிமா மீதோ, அல்லது தொலைக்காட்சி மீதோ, பத்திரிகை மீதோ போட்டு விட்டு, தப்பிக்கும் முறையைப் பார்க்கும் போது இணையத்திற்கும், இணையம் சாராத ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ளும் அளவிற்கு........... முடியாமல் இருக்கின்றதோ என்ற வருத்தம் ஏற்படுகின்றது.

கட்டுப்பாடுகள் தான் ஒரு மனிதனை நல்வழிப்படுத்துகின்றன.அதனால் தான் ஒவ்வொரு நாடுகளும் தமக்கென சட்டதிட்டங்களை வரையறை செய்து வைத்திருக்கின்றன. நல்வழியில் செல்லக்கூடியதாக இருந்தால் உலகில் எவ்வித சட்டங்களும் தேவையில்லை. இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் உலகத்தில் உள்ள கட்டுப்பாடற்ற, நினைத்ததைப் பகிரக் கூடிய ஊடகம் என்றால் அது இணையம் தான். இணையத்தினூடாக என்னவென்றாலும் செய்து கொள்ளமுடியும்.

தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளிவரும் எவ்விதமான நடவடிக்கைகளையும், அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் கட்டுப்படுத்தவோ, அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியும். சமீபத்தில் மைக்கல் ஜக்சனின் சகோதரி செய்த அசிங்கமான ஒளிபரப்பால் அவ் தொலைக்காட்சி நிலையத்துக்கு அமெரிக்க அரசாங்கம் விளக்கம் கேட்டது நல்ல சான்று. ஏனென்றால் மற்றய ஊடகங்கள் எல்லாம் சட்டவிதிகளுக்கு அமைவாகத் தான் செயற்பட வேண்டியவை. ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் தான் செயற்பட முடியும்.

ஆனால் இணையம் என்பது கட்டாக்காலி போன்றது. கட்டுப்பாடுகள் இல்லாத எதுவுமே, ஒழுங்கான வரையறைக்குள் அடங்காது. உலகில் உள்ள பல லட்சம் தளங்களைக் கட்டுப்படுத்தவோ, அல்லது ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட மடல்களைப் பிரித்துப் பார்ப்பதோ முடியாத காரியம். எனவே மேலெழுந்தவாரியாக சீரழிவிற்கு இணையம் சாராத ஊடகங்களின் மேல் போட்டுவிட்டு தப்பிப்பது ஏற்புடையதாக இருக்கப் போவதில்லை. .

ஆதலால்<b> புலம்பெயர்வாழ்வில் இளைய சமுதாயத்துக்கு மற்றவர்களுக்கு இல்லாத விசேட தன்மை கிடைத்துவிடும் என்று காட்ட முனைவது ஏற்புடையதல்ல.</b>முடியும், முடியாது என்பது எல்லாம் வாதத்திற்காக மட்டுமே! எத்தனை பேரால் அது முடிந்தது என்று மார்தட்ட முடிந்தது என்றால் தான் அது யதார்த்தம்!! எதிரணியினால் அது முடியுமா?
Quote:"முப்பது நாற்பது வயசெல்லாம் இளையரில்லையாம்.உங்களுக்கொரு விசயம் தெரியுமோ ஆபாச தளங்களுக்குப் போன ஒரு 40 வயசாள் தன் மனனவியை தான் பார்த்த படங்கள் போல பார்க்க ஆசைப்பட்டு இப்ப விவாகாரத்து ஆயிட்டுது. "
தவளையும் தன் வாயால் கெடுமென்றால் இப்படித் தானா? பாதிப்பெல்லாம், 30,40 வயதுக்கு மேலே தான் வயதிற்கு பிறகு தான் என்பது அப்படியே புூச்சுத்துவது போல இருக்கின்றது.இளைய சமுதாயம் தவறுகளை பகுத்தறிவது போலவும், வயது வந்தவர்கள் தான் பன்னாடை போன்றவர்கள் என்றும் வாதிடுவது வேடிக்கையாக இல்லை??


பிரியோசனமாகப் பாவித்தால் பிரியோசனம் என்று அடிக்கடி எதிரணியினர் அடிக்கடி சொல்லுகின்றனர். அதற்கு ஆதாரப்படுத்தமுடியாத மூன்றாம் மனிதனைக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரியாசனமாக இளைய சமுதாயம் பயன்படுத்துகின்றதா என்பதற்கு யாழ்களத்தை உதாரணமாகக் கொள்ளமுடியும்.

யாழ்களத்தில் வழங்கப்பட்ட கருத்துக்களின் எண்ணிக்கை 2லட்சத்தை நெருங்குகின்றது. அதிலே கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை எத்தனை பேர் பிரியோசனமாகப் பாவித்தார்கள்? "தகவலுக்கு நன்றி", "முகக்குறிகள்", அரட்டைகள்,"தனிநபர் தாக்குதல்கள்." என்பவற்றைத் தான் இந்தப் பிரியோசனப்படுத்தும் இளைய சமுதாயம் அதிகமாகப் பாவித்திருப்பது கண்கூடு. மோகன் அண்ணாவின் எதிர்பார்ப்பை எத்தனை பேர் பிரியோசனமாகப் பாவித்திருக்கின்றீர்கள்?

Quote:"கூத்தடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் டிஸ்கோ இருக்கிறது. டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... ! "

நடக்கலாம். நாம் அதை மறுக்கவில்லையே, அவைகளும் குற்றவாளிக் கூண்டில் தான் நிற்கின்றன. நாம் விவாதிப்பது இளைய தமிழ்சமுதாயத்துக்கு இணையம் செய்ய பாதிப்பை மட்டும் தான்.அவற்றின் குற்றத்தை வேணுமென்றால் உங்களுக்காக பிரிதொரு விவாதத்தில் விவாதிப்போமே!!!

அவ்வாறே மதில் மேல் இருந்து கொண்டு செய்ததைத் தானே இணையத்தில் செய்ய இருக்கின்றனர் என்றவகையில் சிலபேர் நியாயப்படுத்த முனைந்திருந்தனர். மதில்மேல் இருந்து செய்தவை எல்லாம் சரியானவை என்று யார் சொன்னது? அது கூட சமூகசீரழிவின் வெளிப்பாடு தானே? மேலும் மதில் மேல் இருந்தவர்களை கட்டுப்படுத்துவதற்கென்று சமூகசூழல் இருந்தது! ஆனால் இணையத்தைக் கட்டுப்படுத்த யார் உள்ளனர்?
Quote:சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா???
எம்எஸ்என் தனது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கு அங்கு சில பாலியல் துஸ்பிரயோக விடயங்கள் பரிமாறப்படுவதால் தான் அது நிறுத்தப்படுவதாகவும் மைக்ரோ சொவ் விளக்கம் கொடுத்திருந்தது. எனவே விஸ்ணு அவர்களே நீங்கள் சொன்னது போல புது பதிப்பு(வேசன்) கொண்டு வருவதற்காக இருந்தால் 2 வருடமாக அது முடக்கப்பட்டிருக்கத் தேவையில்லையே! புது பதிப்பை முடக்கப்படாமல் தான் இணைப்பார்களே தவிர இப்படி நிரந்தரமாக நிறுத்தி விட்டல்ல. எனவே அதைப் புூசி மொழுகுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை.

அனித்தா அவர்கள் சொன்னார்கள். யாகு அரட்டை அறையில் முன்பு பட்டிமன்றம் எல்லாம் நடந்ததாக. அது எவ்வகையில் உண்மை என்று உறுதிப்படுத்த முடியாது. ஆனாலும் புலம்பெயர்வாழ் தமிழர்கள் அமைத்து வைத்திருக்கும் தமிழ் பிரிவில் 2002ம் ஆண்டு முதல் நான் இருந்திருக்கின்றேன். அங்கே என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. எதைப்பற்றி பேசுகின்றார்கள் என்று எனக்குத் தெரியும். அதை இங்கே சொன்னால் அது அசிங்கம்.

Quote:அஜீவன் அண்ணாவின் வாததிறனை பார்த்து வியந்து போய்விட்டாராம் - ஆக அவரின் வாதமும் அதில் இருந்த எமது அணிக்கு சார்ப்பான கருத்துக்களும் தன்னை வாயடைக்க வைத்துவிட்டதாக மறைமுகமாக ஒத்து கொள்கின்றார்.
நிச்சயமாக மதன். ஒரு சமூகத்தை சீரழிக்கும் விடயத்தை இவ்வளவு அழகாக முடிமறைக்கும் திறமையைக் கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை. பாதிப்புக்களை எவ்வளவு லாவமாக மூடி மறைக்கின்றீர்கள்.

Quote:நீங்க சொன்ன 2 வது வகை தமிங்கிலம் பேசுபவர்கள்தான் கனடாவின் சரித்திரம் கண்டிராத ஒரு பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள்!
இது முதற்கட்டம்.. நான் இங்கேதான் என் நினைவுதெரிந்தவரை இருக்கிறேன். ஆனால் இனம் முக்கியம் ... இதுக்கும் சிங்கள அரசாங்கம் பதில் சொல்லாவிடில் இன்னும் தீவிரமாக எம் போராட்டத்தை முன்னெடுப்போம்! .............................................................
...............இந்த இங்க பிறந்து வளர்ந்த இளையோர்தானே அதை செய்தாங்க.
அப்போ எங்கே போனிங்க நீங்க?
அவர்கள் பார்த்திராத இணையதளங்களா?
அது அவர்கள் பாதையை திசை திருப்பிச்சா?
குடிகாரன் ஒருவன் டாக்டர் ஆக இருக்கமுடியாதா? அவன் நாட்டுக்கு சேவை ஆற்றுபவன் மறுப்பதற்கில்லை. ஆனால் குடி என்ற போதை அவன் வாழ்வைச் சீரழித்து இருக்கின்றது அல்லவே. இது போலத் தான் வர்ணன் கேட்ட பொங்குதமிழில் இணைந்த கூட்டம் பற்றியதும், சுனாமிக்கு உதவிய இளைஞர் பற்றியதும். இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பவன் பொங்குதமிழுக்கு வரமாட்டான் என்று யார் சொன்னது? நமக்குள்ள பிரச்சனை புலம்பெயர்வாழ்வில் இணையத்தின் பிரதிபலிப்பு மட்டும் தான்.

நண்பர் குறுக்ஸ் என்னதான் நன்மை பற்றிப் பெருமை பேச வந்தாலும் தவிர்க்க முடியாமல், இடையிடையே, தீமைகளுக்கு உதாரணம் காட்டுவது உண்மைகள் மறைக்கமுடியாதவை என்பதைச் சுட்டி நிற்கின்றது.
Quote:இந்தக் களத்தில் பகிரப்பட்ட ஒரு அனுபவம். குறிப்பிட்ட ஒரு பிள்ளையின் பெற்றோர் மகள் எம்எஸ்என் இல் ஆண்களை மாத்திரம் நண்பர்களாக சேர்த்து வைத்திருந்தாள். பல்வேறு பட்ட படங்களை பரிமாறினாள். அதை அறிந்ததால் பெற்றோர் இணைய இணைப்பை துண்டித்து விட்டார்கள். ஆனால் அதை நேரடியாக செய்தால் பிள்ளை கேவித்துவிடும் என்று கணனிக்கு இணைய இணைப்பு வழங்கும் கடத்தியில் தில்லு முல்லுச் செய்துதார்கள் என்று.
இங்கே பல்வேறுபட்ட படங்களைப் பகிந்தாள் என்பது கூட தீமைகளைச் சுட்டி நிற்கின்றதல்லவா!! மேலும் அப் பிள்ளையின் பெற்றோர் கண்டுபிடித்தபடியால் அப் பிள்ளையை ஓரளவேனும் காப்பாற்ற முடிந்தது. ஆனால் இதை உணராத பெற்றோர்கள் எத்தனை பேர்கள் உள்ளனர். இவர்களுக்கு புரிய வைக்க கதிர்காமக் கந்தன் தான் துணை புரிய வேண்டும். முருகா!!!
இப்படியே விடுவாரா நண்பர் குறுக்ஸ். எனி எம்மை ஆக்கிரமிக்கப் போகும் இணையத்தின் இன்னுமொரு பயங்கரத்தையும் சுட்டிக் காட்டுகின்றார்.நாம் சந்திக்கப் போகும் அடுத்த பயங்கரம் அது.
Quote: "இன்னுமொரு 5...10 வருடங்களில் கைத் தொலைபேசியில் இணையத்திற்கு செல்லக்கூடியது என்பது சர்வசாதாரணமாகப் போகிறது. அது மாத்திரமல்ல தொலைக்காட்சி உரையாடல் (video conference) கூடச் செய்யலாம். தனியே பேச்சு எழுத்துக்கள் மாத்திரம் அல்ல பங்குபற்றுபவர்களின் அசையும் படங்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். இங்கே ஒருவரின் வக்கிர எண்ணங்கள் இன்னெருவரினால் அறைக்குள் மாத்திரம் ஒளிந்திருந்து பகிரப்படப்போவதில்லை அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் ஒளித்துவைக்கும் கைத்தொலைபேசியால் எங்கும் என்னேரமும் நிறைவேற்றலாம். "
ஆக, இப்போது புலம்பெயர்வாழ் இளையசமுதாயம் கேவலம் கணனியால் கைக்கொள்ளப்படும் இணையத்தால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் கைத்தொலைபேசியில் பாவிக்கப்படும் இணையத்தால் தான் பாதிக்கப்படப் போகின்றார்களாம். ரெம்ப லொள்ளுத் தான் உங்களுக்கு குறுக்ஸ்!!!

வேண்டிய வாதத்தை தங்களால் சொல்ல முடியாவிட்டால் மற்றவர்களை விதண்டாவாதிகளாக காட்டுவது தவிர்க்க முடியாது தான். ஆனால் விதாண்டாவாதம் பற்றியே பட்டிமன்றத்தை கொண்டு சென்றிருப்பது மேகநாதன் செய்திருக்கும் அழகு. தனிநபர் தாக்குதல்கள் என்று சொன்னபடியே எம் அணியினைரை தாக்கி கதைப்பது எல்லாம் ஏற்புடையதாகத் தெரியவில்லை. இப்படி முகந்தெரியாதபடி தனிநபர் தாக்குதல் செய்வது கூட இணையத்தின் தீமைகளை தமிழ்சமுதாயம் தெளிவாகப் பின்பற்றுகின்றது என்பதற்கு சான்று.
Quote:விமான தொழில்நுட்ப அறிவு பலகாலகட்டத்து யுத்த சம்பந்தமான அறிவு புலனாய்வுசம்பந்தபட்ட அறிவுகளை புல சூழலில் இருக்கு சாதகமான் அம்சங்களோடு பெற்று தாயக உறவுகளோடு பகிர்ந்து கொள் வதன் மூலம் தமிழ் தேசியத்துக்கூட வலுவூட்டிக்கொள்கிறான்.
உங்கள் வாதம் சிறப்பாக அமையவேண்டும் என்றால் போராட்டத்தையும் இணைத்துக் கதைப்பது இயல்பு தான். ஆனால் அதற்காக இப்படியா??
தேசியத் தலைவர் போராட்டத்தில் குதித்தபோதோ, அல்லது இராணுவ தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுவதற்கோ இணையத்தைப் பாவித்தனர் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம். ஜயா!! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இணைய ஊடகம் என்று வந்தது எல்லாம் இந்த சமாதானகாலத்திற்கு பிற்பட்டகாலத்தில் தான். நீங்கள் வேணுமென்றால் மறந்திருக்கலாம். யுத்தம் நடந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இணையப் பாவனையைக் கொண்டிருக்கவில்லை. அப்போது புலிகளினால் தொலைபேசிச் செய்தி என்று சிறிய ஒரு செய்திப்பக்கம் மட்டும் தான் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டன. அப்போது எல்லாம் போராட்டத்துக்கு பெறப்பட்ட வியுகங்களுக்கு இணையம் ஒன்றும் சொந்தக்காரர் கிடையாது.
மேலும் யுத்தநிறுத்தகாலப்பகுதி வரமுன்பு கொல்லப்பட்ட கேணல் சங்கர் அவர்கள் விமாப்படைக்கான கட்டமைப்புக்களை செய்துமுடித்திருந்த பின்பு தான் வீரச்சாவடைந்தார். எனவே தலைவர் சொல்வது போல இயற்கை தான் வழிகாட்டியே தவிர, இணையம் அல்ல. தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள்!!

புதினமாக இருக்கட்டும், சங்கிதியாக இருக்கட்டும் அவை கூட இந்த சமாதான கால ஒப்பந்த்தின் பின்னரான வெளியீடுகளே!!இணையத்திற்கு முன்பெல்லாம் தேசியம் வளரவில்லையா?

Quote:நிலமை இவ்வாறு இருக்க அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?
மற்றவர்கள் எல்லாம் தலைப்பை விட்டு, இணையத்தின் நன்மை பற்றிப் புலம்பிக் கொண்டிருக்க, நாரதர், ஒருபடி மேலே சென்று இணையம் தப்பில்லை. எய்தவனில் தான் தப்பு என்கின்றார். அவருக்கு அவர் பாணியில் சொன்னால் தான் புரியும் என நினைக்கின்றேன். நாம் யாழ்பாணவீதி ஒன்றில் போகின்றோம். வழியில் கல் ஒன்று காலில் தட்டி விட்டது. நாம் உடனே கால் விரலை வெட்டிவிடுவோம். ஏனென்றால் ஏய்தவன் இருக்க அம்பை நோகலாமா? கல் வழியில் பேசாமல் தானே இருந்தது. நாம் தானே போய் மோதினோம்.

இப்படித் தான் இருக்கின்றது அவரது வாதம். இணையம் பாவிப்பவரில் தான் தப்பாம். இணையத்தில் தப்பில்லையாம்.தலைப்பை விட்டு கடைசியில் இணையத்தை நியாயப்படுத்தும் அளவிற்கு எதிரணியினர் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தான் எனக்கு புலப்படுகின்றது.

இப்படியே விவாதித்தால் மட்டுறுத்தினர் தேவையில்லை என்கின்றார். வரவேற்கின்றோம் நாரதர். ஆனால் அது உங்களால் முடியுமா? இங்கே மட்டறுத்தனர்களுடன் முரண்டு பிடிப்பதிலும், தணிக்கை செய்யப்படும் கருத்துக்களிலும் எமது ஆக்கங்களும் முக்கியமாக உமது கருத்துக்களும் அடங்குகின்றன என்பதை மறுக்கமுடியுமா? வெறுமனே தேவையில்லை என்று கதைத்தால் மட்டும் போதாது. <b>அவற்றை யதார்த்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அது தான் தலைப்பு சொல்லும் பிரச்சனையே!!</b>

இதை விட ஒரு காலத்தில் சீனசமுதாயம் எப்படி நேரத்தை பயன்படுத்துகின்றன என்றும், தமிழ்சமுதயம் ஏன் அரட்டைகளிலும், வேறுவழிகளிலும் நேரத்தைச் செலவழிக்கின்றன என்று எம் மக்களின் உண்மை நிலையை புடம் போட்டுக் காட்டியவர்கள் நாரதரும், குறுக்கால போவானும் என்பதை நினைவு கூறுகின்றேன்.

இதனால் அரட்டை அடிப்பதை கண்டித்த உங்களை களத்தின் பல உறுப்பினர்கள் கோபித்துக் கொண்டதையும் கண்கூடாகக் கண்டிருக்கின்றேன். பிற்பட்ட காலப்பகுதியில் நீங்களும் அவ் அரட்டைகளுடன் ஒன்றித்துப் போனதையும் நாம் அறிவோம். பெரும்பான்மை புலம்பெயர் சமுதயத்தை இணையத்தினூடு அச்சந்தர்ப்பத்தில் அடையாளம் கண்டிருக்கும் நீங்கள், தலைப்பிற்காக வாதாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையைக் கண்டு வேதனையடைகின்றேன்.

இந்த வாதங்கள் எல்லாவற்றையும் தாண்டி, இணையத்தின் பாதிப்பைக் காட்ட வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளின் அரசங்கத்தில் இணையத்தின் பயன்பாடு பற்றி ராய்ட்டர் எழுதிய செய்தி, இது சிலநாட்களுக்கு முன்பு தான் வந்தது. <b> "வீடுகளில் இணைய இணைப்புக்கு ஏன் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை விதித்துள்ளனர் என்ற கேள்விக்கு நிசாந்தன் அலோசியஸ் அளித்த பதில்:ஒழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். அதனால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. கணணி சேர்வர் ஊடாக இணையப் பயன்பாட்டை நாம் கண்காணித்து வருகிறோம்" </b>
இதுவே இணையத்தின் பாதிப்பை புலிகள் உணர்ந்த விதத்தைச் சுட்டிக் காட்டும். இணையத்தைப் பற்றிய உண்மையான முகத்தைப் போட்டுக் காட்டும். கட்டுப்பாடுகளை செம்மையாகக் கடைப்பிடிக்கும் விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பரப்பிலேயே, இணையத்தின் பிரதிபலிப்புக்களை கட்டுப்படுத்துகின்றமை அதன் பாதிப்புக்களை உணர்ந்தபடியால் தான். ஆனால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வாழும் புலம்பெயர் இளம்சமுதாயத்திற்கு இணையப் பாதிப்பில் இருந்து தப்புவார்கள் என்பது மறைக்கப்படும் வேதனை!!
ஒரு குடம் நஞ்சில் ஒரு துளி பாலுக்காக அவ் நஞ்சையே அருந்துவது போலத் தான் உங்கள் வாதம். இல்லை!! ஒரு குடம்பாலில் தான் ஒரு துளி நஞ்சு கலந்துள்ளது என்று நீஙகள் சொன்னாலும் கூட அது எமக்கு அழிவைத் தான் தரப்போகின்றது.


எனவே வாதம் என்றபெயரில் இணையத்தின் பாதிப்புக்களை மூடி மறைக்காதீர்கள். அது எம் இளம் சமுதாயம் மேலும்மேலும் சீரழிந்து போவதற்கு இப்படியான மூடி மறைக்கப்படும் வாதங்கள் தான் காரணமாக தமிழ் உலகம் கட்டாயம் சுட்டி நிற்கும்

நன்றி!!!
[size=14] ' '
Reply
#55
து}யவன்! பெயருக்கேற்றற்போல் து}ய பல கருத்துக்களை வைத்திருக்கிறார்.

இளைய சமுதாயத்தின் சீரழிவுகள் பலவிதமாக இருந்தாலும் கட்டாக்காலி போன்ற இணையத்தின் சீரழிவே பெரும்பான்மையானவை என்றும், ஆனால் எதிரணியினர் அவற்றை மூடிமறைக்க முயல்கின்றனர் என்றும், இணையத்திற்கும் இணையம் சாராத ஊடகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டையே இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ஆரம்பத்தில் குமுறுகின்றார்;.

40 வயதுடைய ஒருவர் ஆபாசமாகப் பார்க்க ஆசைப்பட்ட விடயத்தை விளக்கி "தவளையும் தன் வாயால் கெடும்" என்று ஒரு பழமொழியையும் சேர்த்திருந்தார். பாதிப்பெல்லாம் 30, 40 வயதிற்கு பிறகுதான் என்று காதிலே புூச்சுத்துகிறார் என்றார். இது "நுணலும் தன் வாயால் கெடும்" என்றுதான் வரும் என்று எண்ணுகிறேன். ஆனால் கருத்து ஒன்றுதான்.

யாழ் களத்தை உதாரணம் காட்டி, இரண்டு இலட்சத்தை நெருங்கிவிட்ட கருத்துக்களை எழுதியவர்கள் எல்லோரும் பிரயோசனமாகப் பாவித்தார்களா? பாவிக்கவில்லை! தனிநபர் தாக்குதல்கள், முகக்குறிப்புகள், வீணான அரட்டைகள் போன்றவற்றையே அதிகமாகப் பாவித்திருக்கிறார்கள் என்று அதிகமானோரைச் சாடுகிறார். (இனிமேல் கருத்தெழுதுவோர் கட்டாயம் கவனிக்கவேண்டும்.)

முன்னர் மதில்மேலிருந்து செய்தவற்றைத்தானே இப்போது இணையத்தில் செய்ய இருக்கின்றனர் என்ற எதிரணியினரின் வாதத்தை மதில் மேலிருந்து செய்தவை எல்லாம் சரியானவையா? அதுகூட சமூக சீரழிவின் வெளிப்பாடுதானே என்கிறார். மதில் மேலிருந்து செய்ததெல்லாம் இணையத்தில் செய்யலாமா? ம்! யோசிக்கவேண்டி உள்ளது. முன்னர் மதில் மேலிருந்தவர்களில் சிலர் இப்போது புலத்தில் மிக உயர்ந்த நிலையில் (மீண்டும் மதிலில் அல்ல) இருக்கின்றார்களே! (இதனை எதிரணியினர் தமக்குச் சார்பாக எடுக்கவேண்டாம்).

எம்.எஸ்.என் தமது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். அதிலே உண்மை இருக்கத்தான் செய்கிறது. இது முன்னர் அறிந்த செய்திதான். தமிழ் பிரிவு பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

இவருடைய வாதம் அருமையாகத்தான் உள்ளது. அதைவிட அஜீவன் அண்ணாவின் வாதத்திறமையைப் பார்த்து வியந்த மதனுடைய மூடி மறைக்கும் விவாதத்திறமை இவரையே வியக்கவைத்துவிட்டது என்கிறார். எதிரணியினர் நன்மை பற்றிப்பேசினாலும் தீமை அணிக்கும் உரம் சேர்க்கும் வாதங்களையும் வழங்குகிறார்கள் என்று மகிழ்கிறார். அப்படித்தானா?

தமது ஆண் நண்பர்களையே வைத்திருக்கும் மகள், அவர்களுடன் பல்வேறு படங்களைப் பரிமாறினாள் என்று அறிந்ததும் அவளுடைய பெற்றோர்கள் இணைய இணைப்பில் தில்லுமுல்லுகள் செய்து துண்டித்தார்கள் என்றார். இவற்றை உணராமல் இருக்கின்ற பெற்றோர்களை கதிர்காமக் கந்தன்தான் காப்பாற்றவேண்டும் என்றும் கடவுளை வேண்டுகிறார். கந்தன் "தகப்பன் சுவாமி" என்று பெயர் பெற்றவன். தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்தவன். அதேபோன்று யாராவது அமைந்துவிட்டால்? எதிரணியினர் கூறுவதுதான் என்ன?

இணையத்தின் முன்னேற்றம் இன்னும் 5, 10 வருடங்களில் மேலும் அதிகமாகிவிடும் என்ற குறுக்காலைபோவானின் கருத்திற்கு அப்படியென்றால் இந்த சீரழிவு 5, 10 வருடங்களில் இன்னும் அதிகமாகும் என்று அந்த வாதத்தை தமதணிக்குச் சார்பாக எடுக்கின்றாரா? சும்மா லொள்ளு விடவேண்டாம், விதண்டாவாதம் செய்யவேண்டாம், தனிநபர் தாக்குதல் என்ற போர்வையில் தமது அணியினரையே தாக்கவேண்டாம் என்று தமது அணியின் சார்பாக எச்சரிக்கின்றாரா?

இணையம் இல்லாமலே தமிழ்த்தேசியம் வளர்ந்தது. தமிழ்த்தேசிய போராட்டகால வழிகாட்டலுக்கும், வியுூகங்களுக்கும் இணையம் அல்ல இயற்கைதான் வழிகாட்டியாக இருந்தது என்று சமாதான காலத்திற்கு முந்தியவற்றை நினைவுூட்டுகின்றார்.

இணையமான சடப்பொருளை யாழ்ப்பாணவீதியில் இருக்கும் கல் ஒன்றிற்கு ஒப்பிட்டு தனது கால் விரலுடன் சேர்த்து வாதிக்கின்றார். நாரதரும், குறுக்காலைபோவானும் முன்னர் தமிழ்ச்சமூகம் தமது பொன்னான நேரத்தை மண்ணாக்குகிறார்கள் என்று புடம்போட்டுக்காட்டியவர்கள் என்பதை நினைவுூட்டி, அனைத்தையும் அறிந்து வைத்திருந்தும் அதனை விடுத்து எதையெதையோ செய்கிறார்கள் என்று வேதனைப்படுகின்றார்.

இவருடைய எல்லா வாதங்களின் சிகரமாக, அண்மையில் கட்டுப்பாடுகளை செம்மையாகக் கடைப்பிடிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சிப்பரப்பிலே இணையத்தின் பாதிப்பை அறிந்ததால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்களுக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை என்ற செய்தியினை ஆதாரம் காட்டி தனது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.

து}யவன் தனது வாதத்தின்போது ஆங்காகங்கே சிலவற்றை அனைவருக்கும் நினைவுூட்டினார், சில வேளைகளில் எச்சரித்தார், சிலரை சாடினார், குமுறினார், மகிழ்ந்தார், வேதனைப்பட்டார். மிகவும் திறமையாக தன் வாதத்தினை முன்வைத்தார். எதிரணியினருக்கு உண்மைகளை மூடி மறைக்கவேண்டாம் என்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் எடுத்துரைத்தார்.

"வாதம் செய்வது என் கடமை - அதில்
வழியை காண்பது உன் திறமை"

யாரோ, யாருக்கோ சொன்ன அழகான வரிகள்.

எங்கே எதிரணியினர் வந்து என்ன கூறப்போகின்றார்கள் என்று பார்ப்போம்.
நன்றி.

Reply
#56
எல்லோருக்கும் வணக்கம்

பிருந்தன் பங்குபற்றாததால் நான் இதில் பங்க்கு பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டி விட்டது. சரி வாதத்துக்கு வருவோம்.

இணைய்த்தால் இளையோர் நன்மையடைக்கிறார்கள்... என்று சொல்ல முற்படும் அதே வேளை. இளையவர் தூயவன், தல அவர்கள் கூறிய சில பிழையான கருத்துக்களை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படுகின்றது.
<b>
தல கூறியது:-
எதிரணித் தலைவர் இளைஞன் உழைப்பாளியாய் ஒரு கவிஞனாய் உயர்ந்த இந்த சஞ்சீவ் என்கின்ற இளையோன்... இணையத்தால் உயரவில்லை சொந்த உழைப்பால் போற்றப்படுகிறார்... என்பதுதானே உண்மை...</b>
இணையத்தால் மட்டுமே புலம்பெயர்ந்த இளைஞர்கள் உயர்கிறார்கள் என்றோ உயர்ந்தார்கள் என்றோ நாம் சொல்லவில்லை. இணையம் என்பது இளைஞர்களின் சிந்தனைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்கிறோம். அவர்களின் உழைப்புக்கு பக்கதுணையாக இருக்கிறது (பக்கதுணையாக இருக்கிற ஏனைய காரணிகளோடு) என்றே சொல்கிறோம். தல அவர்கள் எழுதிய மேற்கண்ட கருத்தின் மூலம் ஒரு உண்மையை தெளிவாக ஒத்துக்கொள்கிறார். சொந்த உழைப்பால் அதாவது சொந்தச் செயற்பாட்டால் தான் ஒருவர் போற்றப்படுகிறார். அப்படியாயின் அதிலிருந்து இன்னொன்றையும் நாம் விடையாகப் பெறலாம். அது யாதெனின், ஒருவர் தனது சொந்த செயற்பாட்டால் தான் தீமையடைகிறார் அல்லது சீரழிந்து போகிறார் என்பதே அது ஆகும். இது இப்படியிருக்க இணையத்தின்மீது உங்கள் பாவங்களை சுமத்துவது எந்தவகை நியாயம் என்று சொல்லுங்கள்.

எதிரணியினரின் வாதங்கள் எப்படியிருக்கிறதென்றால் எல்லாக் குற்றங்களையும் தாம் செய்துவிட்டு கடவுளின் மேல் பழியைப் போடுவதைப் போல் உள்ளது. தமது பிழைகளால் தாம் அனுபவிக்கிற துன்பத்துக்கெல்லாம் "எல்லாம் அவன் செயல்" என்று அடி முட்டாள்தனமாக சொல்லிவிட்டு தம்மை பொம்மைகளாகக் காட்டிக்கொள்ளும் எதிரணியனரை என்னவென்பது?


<b>தல கூறியது:-
தலைவர் அவர்களே...! இளையோருக்கு இந்த இணையங்கள் புதிதாக ஓண்றையும் செய்துவிடவில்லை... வானொலிகளும்,தொலைக்காட்ச்சிகளிலும், பத்திரிகையிலும், நூல்நிலையங்களிலும் நாங்கள் பெற்றுக் கொண்டதை இப்போ இணையத்தில் பெறுகின்றனர்... அதனால் இளைஞருக்கு எந்தப்பயனும் இல்லை வேண்டுமானால் சோம்பேறித்தனத்தை பெற்று சீரளிக்கப் படுகிறார்கள்.......</b>

தல அவர்கள் தனது வாதத்தின் மூலம் தெட்டத் தெளிவாக பல வாக்குமூலங்களை அளித்துள்ளார். இணையம் ஒன்றையும் புதிதாக செய்துவிடவில்லை என்று அவர் குறிப்பிடுவதன் மூலம் ஏற்கனவே சீரழிந்து போய் இருக்கிறவர்களை மேலும் சீரழிக்கவில்லையென்று அல்லது தீமைகளை செய்யவில்லை என்று சொல்கிறார்.

வானொலிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், நூல்நிலையங்களும் ஒன்றாய் உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? - உங்கள் மூளைக் கலன்களின் மீது சத்தியம் செய்யுங்கள்!!! பணம் செலவழித்து எத்தனை பத்திரிகைகளைத்தான் வாங்குவது? அதிலும் எமக்கு அவசியமற்ற தகவல்களையும் சேர்த்து வாங்குகிறோம். ஆனால் இணையத்தில் வேகமாக பத்திரிகைச் செய்திகளைப் பெற்றுக்கொள்கிறோம் - பல்வேறு தரப்பு நியாயங்களையும் அறிந்துகொள்கிறோம் - எமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து படிக்கிறோம் - பணச்செலவு மிச்சம் - உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்கிறோம்.

சோம்பேறித்தனத்தை இணையம் தான் இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது போல சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டிகளின் முன்னிருந்து பெறாத சோம்பேறித்தனமா? ஐயா சோம்பேறித்தனமென்பது உங்கள் உங்கள் மனம், உடல் சார்ந்தது. அதை வழிநடத்தவேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது - இணையத்திடமில்லை. எங்கள் அணியில் நாரதர் தெளிவாக ஒரு கருத்தை முன்வைத்தார். செய்வதெல்லாம் செய்திட்டு "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்று கல்லை நோக்கி கைகாட்டுவீர்கள் - ஏனென்றால் கல் திருப்பிக் கதைக்காது என்கிற நம்பிக்கையில்.

<b>தூயவன் கூறியது:-
இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் உலகத்தில் உள்ள கட்டுப்பாடற்ற, நினைத்ததைப் பகிரக் கூடிய ஊடகம் என்றால் அது இணையம் தான். இணையத்தினூடாக என்னவென்றாலும் செய்து கொள்ளமுடியும். தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளிவரும் எவ்விதமான நடவடிக்கைகளையும், அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் கட்டுப்படுத்தவோ, அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ முடியும். சமீபத்தில் மைக்கல் ஜக்சனின் சகோதரி செய்த அசிங்கமான ஒளிபரப்பால் அவ் தொலைக்காட்சி நிலையத்துக்கு அமெரிக்க அரசாங்கம் விளக்கம் கேட்டது நல்ல சான்று.</b>

தூயவன் சொல்கிறார்.... இணையத்தை எந்த அரசாங்கமும் கட்டுப்படுத்துவது இல்லை... என்ன என்றாலும் வெளியிடலாம்... ஆனால் மற்றய ஊடகங்கள் அப்படி இல்லை. அந்தந்த நாட்டு அரசால் கட்டுப்படுத்த படுகிறது என்கிறார். இப்படி கூறுவதன் மூலம் மற்றய ஊடகங்களை விட இணையம் இளையோரை சீரழிக்கிறது என்று கூற வருகிறார். அது தவறானது.... மற்றய ஊடகங்கள் போலவே இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றன... உதாரணமாக அரபு நாடுகளில் பாலியல் சம்பந்தமான தளங்களுக்கு தடை இருக்கிறது. ஏன் தமிழ் நாட்டிலும் பாலியல் தளங்களை தடை செய்ய நடவெடிக்கை எடுக்கவுள்ளார்கள் ( ஆதாரமில்லாத செய்தி என்று சொல்ல வேண்டாம். அண்மையில் ஜெயா கூறியது தான் )
மிக அண்மையில் GOOGLE க்கும் சீனா நாட்டுக்கும் ஒரு கருத்து வேறு பாடு பற்றி அனேகமானோர் கேள்விபட்டு இருக்கலாம். இதை விட அனேகமான நாடுகளில்.. ஒருவரின் இணைய நடவடிக்கைகள்.. அந்த நாட்டு பொலீசாரினால் சேகரிக்கப்பட்டு.. கோப்பாக பேணப்படுகின்றன. எப்போது அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரோ... அப்போது அவரை பிடிப்பதற்கு அவை வழிவகுக்கும். ஆகவே தூயவன் சொல்வது போல மற்றய ஊடகங்கள் கட்டுப்படுத்த படுகின்றன.. இணையம் கட்டுபடுத்த படுவதில்லை என்பது தவறானது.

<b>தூயவன் கூறியது :-
ஆனால் இணையம் என்பது கட்டாக்காலி போன்றது. கட்டுப்பாடுகள் இல்லாத எதுவுமே, ஒழுங்கான வரையறைக்குள் அடங்காது. உலகில் உள்ள பல லட்சம் தளங்களைக் கட்டுப்படுத்தவோ, அல்லது ஒவ்வொரு நபர்களின் தனிப்பட்ட மடல்களைப் பிரித்துப் பார்ப்பதோ முடியாத காரியம் </b>

அப்படி சொல்ல முடியாது. ஒரு தளத்தை ஒரு நாட்டில் தடை செய்தால். அது அந்த நாட்டில் வேலை செய்யாது. அப்படி செய்ய முடியும். ஒரு நாட்டில் உள்ள கருத்துக்கு எதிரான தகவல்களை தேடி பெற முடியாது செய்யவேண்டும் என்று அரசு விரும்பினால். Google போன்ற தேடல் தளங்களுடன் பேசி அதை செய்து கொள்ளலாம். அயிரக்கணக்கான மடல்களை பிரித்துபடிப்பது கடினம் தான். ஆனால் ஒரு வேலை தளத்தில் தனி மடல் பார்த்தால்.. அல்லது அனுப்பினால்.. அதை மேலதிகாரிகள் பார்வையிடலாம். உங்களது இணைய புரொவீடர்களால் உங்கள் தனிமடல்கள் பார்வையிடப்படலாம். எல்லா தனிமடல்களையும் பார்ப்பது நேரவிரயம் தான். தெரிவு செய்யபட்ட மடல்களை மட்டுமே. அவ்வாறு மடல்களை தெரிவு செய்வதற்கும் சில முறைகளை கையாளுகிறார்கள்.

விஸ்ணு கூறியது:-
சீரழிவால் தான் MSN சாட் தளம் பொது அரட்டையை நிறுத்தி இருப்பதாக எங்கே சொல்லப்பட்டது?? எம் எஸ் என் மஸெஞ்சர்கள் எப்போதுதடைசெய்ய போகிறார்கள்... அல்லது புதிதாக ஒரு வேர்ஸனை கொண்டுவரப்போகிறார்களாமா???

<b>அதுக்கு தூயவன் கூறியது:-
எம்எஸ்என் தனது பகிரங்க அரட்டை அறையை மூடியதற்கு அங்கு சில பாலியல் துஸ்பிரயோக விடயங்கள் பரிமாறப்படுவதால் தான் அது நிறுத்தப்படுவதாகவும் மைக்ரோ சொவ் விளக்கம் கொடுத்திருந்தது. எனவே விஸ்ணு அவர்களே நீங்கள் சொன்னது போல புது பதிப்பு(வேசன்) கொண்டு வருவதற்காக இருந்தால் 2 வருடமாக அது முடக்கப்பட்டிருக்கத் தேவையில்லையே! புது பதிப்பை முடக்கப்படாமல் தான் இணைப்பார்களே தவிர இப்படி நிரந்தரமாக நிறுத்தி விட்டல்ல. எனவே அதைப் புூசி மொழுகுவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. </b>

தயவு செய்து கருத்துக்களை வடிவாக வாசியுங்கள். எம் எஸ் என் சாட் தளம் வேறு, எம் எஸ் என் மஸெஞ்சர் வேறு. சாட் தளத்தை பாலியல் பரிமாற்றங்கள் காரணமாக மூடிய மைக்ரோ சொப்ற்... ஏன் மஸெஞ்சர்களை மூடாமல் புதிய புதிய வேர்சனை அறிமுகம் செய்கிறது. இதுதான் விஸ்ணு கூறியது. தூயவனுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மசெஞ்சர்கள் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறவில்லையா?? உண்மையில் பார்த்தால் மெஸெஞ்சர்ளில் தான் இதற்கான வாய்ப்புகள் அதிகம் ( வீடியோ வசதியை இங்கே சொல்லாம் )

<b>தூயவன் கூறியது:-
தேசியத் தலைவர் போராட்டத்தில் குதித்தபோதோ, அல்லது இராணுவ தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுவதற்கோ இணையத்தைப் பாவித்தனர் என்பது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம். ஜயா!! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இணைய ஊடகம் என்று வந்தது எல்லாம் இந்த சமாதானகாலத்திற்கு பிற்பட்டகாலத்தில் தான். நீங்கள் வேணுமென்றால் மறந்திருக்கலாம். யுத்தம் நடந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இணையப் பாவனையைக் கொண்டிருக்கவில்லை.
புதினமாக இருக்கட்டும், சங்கிதியாக இருக்கட்டும் அவை கூட இந்த சமாதான கால ஒப்பந்த்தின் பின்னரான வெளியீடுகளே!!இணையத்திற்கு முன்பெல்லாம் தேசியம் வளரவில்லையா? </b>

நன்றாக சொன்னீர்கள்... எமதணியினர் ஏன் இணையத்தால் மட்டுமா இளையோர் கெட்டார்கள்.. தொலைகாட்சி, இன்னும் மற்றும் ஊடகங்களால் அவர்கள் கெடவில்லையா என்று சொன்ன போது நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை பாருங்கள்...

<b>தூயவன் கூறியது:-
நாம் விவாதிப்பது இளைய தமிழ்சமுதாயத்துக்கு இணையம் செய்ய பாதிப்பை மட்டும் தான்.அவற்றின் குற்றத்தை வேணுமென்றால் உங்களுக்காக பிரிதொரு விவாதத்தில் விவாதிப்போமே!!!</b>

அது போலத்தான்.... தூயவன் இணையம் இல்லாத காலங்களில் தேசியம் வளரவில்லை என்று யார் சொன்னது?? இப்போது இணையப்பயன்பாடு தேசியத்தின் வளர்ச்சியில் இன்னும் ஒரு தோள் குடுத்து இருக்கிறது... என்று தான் நாம் கூறுகிறோம்...


<b>தூயவன் கூறியது :-
யாழ்பாணவீதி ஒன்றில் போகின்றோம். வழியில் கல் ஒன்று காலில் தட்டி விட்டது. நாம் உடனே கால் விரலை வெட்டிவிடுவோம். ஏனென்றால் ஏய்தவன் இருக்க அம்பை நோகலாமா? கல் வழியில் பேசாமல் தானே இருந்தது. நாம் தானே போய் மோதினோம். </b>

யாழ் வீதியில் வெறு வேலையாக அவசரமாக போகும் போது எதிரே இருக்கும் கல்லில் நாம் கவனிக்காமல் தான் மோதுகிறோம் தூயவன். இதில் நான் சொல்ல வருவது 2 விடயம்... வேறு வெலையாக போகும் போது தான் நமக்கு குறுக்கே கல் இருக்கிறது. நாம் கவனிக்காமல் தான் கல்லில் மோதுகிறோம். யாரும் காலையில் எழுந்து யாழ் வீதில கல் இருக்காம் தூயவன் சொன்னவர்.. அதில மோதுவம் என்று போவதில்லை. வேறு வேலையாக செல்லும் போது குறுக்கே வருவது அது.
ஆனால்.... இணையத்தில் ஆபாசத்தளங்கள் கணணியை இயக்கி இணையத்துக்குள் பாடசாலை ஒப்படை செய்ய போகும் போது தானாக வருவதில்லை. இளையோர்கள் தாமாகவே அங்கே போகிறார்கள். அப்படி இல்லை தாமாகவே விளம்பரங்கள் தோன்றுகின்றன என்று யாரோ சொன்ன நினைவு. நீங்கள் முதலில் அப்படியான தளங்களுக்கு போய் இருந்தால் தான் அப்படியான விளம்பரங்கள் தோன்றும். அல்லது ஆபாச தளங்களின் உறவு தளங்களுக்கு போனால் தான் அப்படியான கற்கள் உங்களுக்கு தோன்றும். அதை விட ஆபாசங்களை தடை செய்ய கணணிகளில் முடியும் . அப்படியான விடயங்களை மேற்கொண்டு அப்படியான கற்களை நீங்கள் அப்புறப்படுத்தலாம். ஆகவே தூயவன் நாரதர் சொல்ல நினைத்தது..... இணையத்தில் கல் தானாக எமது முன் தோன்றுவதில்லை... யாழ் வீதி மாதிரி. நாமாக தான் தேடி போகிறோம். இணையத்தில் சடப்பொருட்கள் இல்லாத நாம் தான் ஆபாசங்களை.... சீர்கேடுகளை தேடிப்போகிறோம். இப்போது நாரதர் கூறியதை பாருங்கள் உங்களுக்கு சரியாக தோன்றும்.

நாரதர் கூறியது:-
அந்த ஊடகத்தை அதாவது ஒரு சடப் பொருளை எவ்வாறு நாம் இங்கே சீரழிப்பதற்கான காரணி ஆக்க முடியும்?எப்படி அது எம்மைச் சீரழிகிறது என்று கூற முடியும்?எய்தவன் இருக்க அம்பை நோகலாமோ?

இங்கே எய்தவன்.. தானாக சீர்கேடுகளை தேடும் இளையவன். ஆகவே இணையம் சீரழிக்கவில்லை. கெடுகிறேன் பந்தயம்பிடி என்று திரியும் இளையவர்கள் தான் தாமாகவே கெட்டு போகிறார்கள். இணையத்தில் அறிவு பசியை போக்குபவர்கள் பயன் பெற்று மேலே சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

<b>தூயவன் கூறியது:-
நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கருதுகின்றனர். அதனால் வீடுகளுக்கான இணைய இணைப்புக்கு அனுமதி அளிக்கவில்லை </b>

தூயவன் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எதிர் வரும் காலங்களிலும் இப்படி இணையத்தை விடுதலைப்புலிகள் தடை செய்ய போவதில்லை. தேசியத்தை வளர்க்கும் தளங்கள் எத்தனை ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.. என்பது உங்களுக்கு தெரியாதா?? புலிகளின் குரல் முதல்.. எத்தனையோ தேசிய தகவல்களை பெறக்கூடிய இணையத்தை ஈழத்தில் பார்க்க முடியாமல் போகுமா என்ன?? ஒரு புல நாட்டில்.. அந்த நாட்டு கொள்கைக்கு எதிரான தளங்கள் இயங்குவதை தடை செய்யலாம். ( உதாரணமாக அரபு நாடுகளில் ஆபாசத்தளங்களுக்கு தடை ) அதே போல ஈழத்தில் அப்படியான வசதி கிடைக்கும் போதுநிட்சயமாக தேசி பண்பாட்டுக்கு மீறியவை தணிக்கை செய்யப்பட்டு.... இணைய பயன் பாடு கிடைக்கும்.


<b>தல கூறியது:-
ஆனாலும் எங்கும் அலைவதற்கு அவசியமில்லாமல் முதியவர்களிற்கு இணையம் உதவியும் செய்யலாம்.... உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களால் ஒரே இடத்தில் இருந்து பெறப்படும் தகவல்களானது அவர்களிற்கு உதவியும் ஆகும்... </b>

ஆக தல சொன்னதிலிருந்து மிகமுக்குியமான ஒரு விடயத்தை நாம் விடையாகப் பெறமுடியும். உடல் தளர்ந்து நடமாட கடினமான முதியவர்களுக்கு நன்மைபுரிகிறது இணையம் என்கிறார். ஆகவே, அதேபோல உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கு இணையம் மாபெரும் துணையாக இருக்கிறது என்பதை எதிரணியினர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
<b>
தல கூறியது:-
வேண்டுமானால் இணைய ஊடக தொழில் நுட்பங்கள் ஒரு வளர்ந்த முதிர்ந்த புலம்பெயர் வியாபாரிக்கு உதவலாம், தொழில் உதவியாளருக்கு, உத்தியோகத்தர்களுக்கு அல்லது பொறியியலாளருக்கு உதவுகிறது.... அதனால் வளர்ந்துவரும் இளைஞன் பயன் அடைகிறார்களா எண்றால் இல்லை என்பதே பதிலாக வருகிறது......</b>

இந்த ஆண்டுக்குரிய மிகப்பெரிய நகைச்சுவை (சிறந்த நகைச்சுவை 2006). அதென்ன முதிர்ந்த வியாபாரி? முதிர்ந்த வியாபாரி இளைஞராக இருக்க முடியாதா? - தொழில் உதவியாளர்களும், பணியாளர்களும், பொறியியலாளர்களும் இளைஞர்களாக இருக்க முடியாதா? -இவர்களின் தொழில்ரீதியான செயற்பாடுகளுக்கு இணையம் தன்னாலான பங்களிப்பை செய்யவில்லையா?

<b>தல கூறியது:-
புலம்பெயர் நாட்டில் புலம் பெயர்ந்ததால் கணனி அறிவற்ற பெற்றோர் அல்லது இணைய அறிவில் போதிய தகமை இல்லாத பெற்றோராய் இருப்பவர்களால் பிள்ளைகளின் நடவடிக்கைகள் அறியப்படாமலேயே இருக்கிறது.... இது புலம் பெயர் இளைஞர் இணைய உலாவில் என்ன செய்கிறாய் எண்று கேள்வி கேட்கப்படாதவர்களாய் உலாவர உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை..... இது ஒரு கட்டாக்காலி மாட்டின் நிலைமைக்கு ஒப்பானது.... அவர்களால்(இளையோரால்) எங்கு வேண்டுமானாலும் மேயலாம்... அசைபோடலாம்.... எது வேண்டுமானாலும் செய்யலாம்....</b>

புலம்பெயர்ந்ததால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாசிக்கும் பெற்றோர்களுக்கு அறிவில்லையா? நல்ல கண்டுபிடிப்பு. ஐயா நடுவர் அவர்களே, சிற்றுந்து ஓட்டத் தெரியாத பெற்றோர்கள் நிறைய பேர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். அவர்களுக்கு புலம்பெயர் சிற்றுந்து ஓட்டுனருக்கான விதிமுறைகள் தெரியாது தான். ஆனாலும் சிற்றுந்தில் பயணிக்கும் போது "கவனமா ஓட்டு தம்பி", "பார்த்துப் போ ராசா", "சிவப்பு விழுந்திட்டு", "வேகத்த கொஞ்சம் குறை" போன்ற பல அறிவுரைகளைக் கேட்கலாம். ஆக ஆபத்துகள் இருக்குமிடத்து அறிவுரைகளையும் கண்காணிப்புகளையும் பெற்றோர்கள் செய்யட்டும், செய்யத் தவறின் அது இணையத்தின் தவறல்ல. கடவுள் சிலையில் தலையைக் கொண்டு போய் முட்டினாலும் ஆபத்துத்தான்.

<b>தல கூறியது:-
இளைஞருக்கு உதவாத அல்லது உதவுவதாய் சொல்லப்படும் இணையம்.... இளையோரை சோம்பேறிகள் ஆக்குகின்றது நடுவர் அவர்களே.....!.. ஊர் எல்லாம் திரிந்து ஆசிரியர்கள் நூல் நிலையங்கள் எல்லாம் அலைந்து பெறவேண்டிய இந்த தகவல்கள் விரல்நுணியில் பெறப்படுவதாலும்... வெட்டி ஒட்டுவதாலும்... படித்தபாடம் மனதில் நிற்பதும் இல்லை... இலகுவாய் பெற்ற தகவலின் பெறுமதி தெரிவதும் இல்லை... அதுவே அந்த இளைஞனைச் சீரளிக்கிறது... புதிதாய் அந்த இளைஞன் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லை இணையத்தை நம்பியே வாழ்க்கை நடாத்தி சீரளிகிறான்....!</b>

புத்தகத்தில வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது கடினம். இணையத்தில் வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது மிக இலகு. வேகமாகவும், நேரம் செலவளிக்காமலும் தகவல்களையும் பயனுள்ள விடயங்களையும் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா? படித்தபாடம் மனதில் நிற்பதற்கு அது எவ்வளவு வேகமாக கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. பாடம் பிடித்ததாக இருக்குவேண்டும். படிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்குவேண்டும். அப்பதான் பாடம் மனதில் நிற்கும். இலகுவாகக் கிடைப்பது உங்களுக்கு பொறுக்கவில்லையா? அப்படியென்றால் எதையும் சிக்கலானதாகவும், சிரமப்பட்டதாகவும் செய்யத்தான் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? தன்நம்பிக்கையை இணையம் வளர்க்கவில்லை என்று சும்மா மேலோட்டமாக சொன்னால் எப்படி? பக்கத்தில் இருந்து பரீட்சை எழுதும் நண்பனின் திறமையில் நம்பிக்கை வைத்து பரீட்சை எழுதுகிற இளைஞர்கள் போன்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இணையம் தன்நம்பிக்கையை வளர்க்கவில்லை என்றுதானே சொன்னீர்கள். தன்நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று சொல்லாதவரையில் சீரழிந்துபோகவில்லை என்பதாக உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.


<b>தல கூறியது:-
நேரங்களைச் செலவளிக்காமல் வினாடிகளில் கல்வித்தகவல்களைப் பெற்ற மாணவர், மிகுதி நேரங்களை வீணாகச் செலவளிக்கப் புறப்படுகிறார்கள்... குறிக்கோள் இல்லாத பயணங்களை ஆரம்பிக்கிறார்கள்...... இதோடு ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்......
சும்மா இருக்கும் மனமே சாத்தானின் உறைவிடம்... எண்ற வகையில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபட வளிவகுத்தது இணையங்களே....! அவர்களைச் சீரளிக்கிறது... </b>

சித்தர் தல அவர்களே நேரங்களை செலவளிக்காமல் கல்வித்தகவல்களை வேகமாக மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. மிகுதி இருக்கிற நேரங்களில் குறிக்கோளில்லாத பயணங்களைத் தொடர்கிறார்கள் என்றால் அது அவர்களின் இயல்பான குணாம்சமே. அப்படியென்றால் வேகமாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா?


<b>தல கூறியது:-
தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புக்களின் முடிவில்.... மதகுகளில் இருந்து அல்லது விளையாட்டுத் திடல்களில், தோழிவீடுகளில், உறவாடி விளையாடி தங்களின் பொழுது போக்கி அளவளாவிக் கூடிக்களித்த இளைஞர் புலம் பெயர் நாட்டில் தனியான இணைய சற் ரூம் களில். காலத்தைப் போக்குகிறார்கள். மதகுகளில், தோழிவீடுகளில் இருந்த இளைஞர் பெற்ற பயன் சற்றூம்கள் தருவதில்லை அங்கு அவர்கள் பெற்ற வாழ்வாதாரத்துடன் கூடிய புரிந்துணர்வை, தலைமைப்பண்பை, நட்புணர்வை மனிதநேயத்தை, இணையங்கள் தருவதில்லை அதவிட வக்கிரங்களையே தோற்றுவிக்கிறது என்பதுதான் உண்மை. நேரிடையாய் கண்ணியவானாய் இருக்கும் இளைஞர்கள் முகம் தெரியாமல் கண்ணியமாய் இருப்பதிலை என்பதை மறுக்க முடியுமா என்ன...???? </b>

கண்ணியவான தல அவர்களே, முகம் தெரியாத நீங்கள் கண்ணியமில்லாமலா இருக்கிறீர்கள்? எத்தனை தடவை தான் நாம் சொல்வது வக்கிரங்கள் இணையத்தால் தோன்றவில்லை, உங்கள் மனதிலிருந்து தோன்றுகின்றன என்று? கனடாவில், யேர்மனியில், இலண்டனில், பிரான்சில் என்று பல்வேறு நாடுகளில் இருக்கும் இளைஞர்களோடு புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள இணையம் எப்படித் துணைபுரிகின்றது என்பதை யாழ்களமூடாக உங்களால் அறிந்துகொள்ளமுடியவில்லையா? நட்புணர்வை வளர்த்துக்கொள்வதில் எம்எஸ்என் துரிததூதர் போன்றவை எப்படியான பங்கை ஆற்றுகின்றன என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் இல்லை என்று நினைக்கிறேன். வெளி உலகத்தில நடப்பவை எல்லாவற்றையும் இணையமும் செய்யவேண்டும் என்று எதற்கு எதிர்பார்க்கிறீர்கள்? தமது பள்ளி மற்றும் தொழில் சார் தேவைகளுக்கும் பொழுதுபோக்கு விடயங்களுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் நன்மையும் அடைகிறார்கள். அவர்கள் ஒன்றும் நாள்முழுக்க இணையத்துக்குள் குடும்பம் நடத்தவில்லை.

<b>தல கூறியது:-
எனது அணியின் உறுப்பினர் ப்ரியசகி சொன்னது போல இணையம் அந்த இளைஞருக்கு ஒரு போதைப் பொருள் ஆகிவிட்டது.... விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்... எப்போதும் அதன் சிந்தனையாய் அலையும் துன்பத்துக்கும் உள்ளாகிறான்... இந்த துன்பம் இனையத்தால் வந்ததே...
இது இளையசமுதாயத்தின் சீரளிவின் ஆரம்பம்தான்... இன்னும் முடியவில்லை தொடர்கிறது...... </b>

சமூகச் சிந்தனையாளர் தல அவர்களே உங்கள் அதிசயமான சமூக ஆய்வுக்கு நன்றி. எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதற்கு நாம் அடிமைப்பட்டுப்போகிறோம். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே". இணையம் இளைஞருக்கு போதைப் பொருள் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள். எதனால் இணையம் போதைப்பொருள் ஆகிறது? அதிகமாக அதில் அவனை ஈர்க்கிற ஒரு சக்தி இருக்கிறது. இதன் பொருள் என்ன? அவன் இயல்பாய் இருப்பதற்கு தேவையான ஒரு சக்தி வெளியுலகத்தில் அவனுக்கு குறைந்து போயுள்ளது என்பது தானே? வெளியுலகில் அவன் இயல்பாய் இருப்பதற்கான சூழல் இருந்திருக்குமானால் இணையத்துக்குள் மூழ்கிப் போவதற்கு அவனுக்கு என்ன தேவையிருக்கிறது? ஆக தவறுகள் புறச்சூழலால் நிகழ்கிறதே ஒழிய இணையத்தால் அல்ல.


<b>தல கூறியது:-
இராவணன் அண்ணா வெட்டிய வெட்டுக்கள் சொல்லும்..... இளையோர் கட்டுப்பாடானவர்களா எண்று... அவர்களோடு சேர்வதால் வெட்டு வாங்கிய முதியோரைக் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் இளையோரைப்பற்றி... ஆனி 29, 2005 11:50 am தொடங்கிவைக்கப்பட்டு இதுவரை 21 பக்கங்கள் தாண்டி விட்ட கருத்துக்களில் மாற்றம் பகுதி சொல்லும்... யாழில் நீங்கள் செய்யும் குழப்படிகள். ... இணையத்தில் அதுவும் யாழில் நீங்கள் யாரும் கெட்டுப்போகக் கூடாது எண்ற நல்ல நோக்கில் அமைக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் இளையோரைக்காக்க எவ்வளவு கடினப்படுகிறோம் எண்று.....</b>

தல(வெறும்) அவர்களே இராவணன் வெட்டிய வெட்டுக்களில் தெரிவது இணையத்தின் சீரழிவுகள் அல்ல - ஒவ்வொரு களஉறுப்பினர்களின் தனப்பட்ட பண்பு. இணையமில்லாமல் ஒரு கருத்தாடலை ஒரு அறையில் வைத்து நடத்தினால் இதைவிட மோசமான விளைவுகளை (வன்முறைகள், ஆயுதங்களுடனான சண்டைகள்) சந்திக்க நேரிடும் என்பதை உணர்க. அப்படியான பாதிப்புகளிலிருந்து காத்து எதுவித இரத்தமும், காயமும் இன்றி ஒரு கருத்தாடலை நடத்த துணைபுரிகிறது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

<b>தல கூறியது:-
இணைய உலாவுக்காய் வரும் இளையோர் தறிகெடாமல் இருக்க தடை போட்டு மட்டுறுத்தினர்களை நிறுத்தி சீரளியாமல் தடுத்த, தடுக்கும், யாழ்கள நிறுவுனர் மோகன் அண்ணாவிற்கு எமது அணிசார்பாக நண்றிகள்....!</b>

மீண்டும் மீண்டும் வாக்குமூலங்களை அளித்து எமது அணியின் நியாயத்தை வலுப்படுத்த உதவிபுரிந்த எதிரணி நண்பர் தல அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள். அவரே ஒத்துக்கொள்கிறார்: எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சீரழியாமல் கட்டுப்படுத்துவதற்கும் அதனூடாக நன்மையடைவதற்கும் சில சட்டதிட்டங்கள், வரையறைகள் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை எடுத்துக்கொள்வோம். அந்த நாட்டில் வன்முறை, களவு, பாலியல் தொல்லைகள் என்று பல குற்றச்செயல்கள் இருக்கின்றன. அதற்காக அந்த நாடே சரியில்லை, அந்த நாட்டால் நன்மையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். குற்றங்களுக்கு பின்னாலிருப்பது நாடு (மக்களில்லாமல் நாடு இல்லை) அல்ல நாட்டுமக்கள். அதேபோலத்தான் இணையத்தில் நீங்கள் குறிப்பிடும் ஒருசில சீரழிவுகளுக்கு பின்னாலிருப்பது இணையமில்லை, மாறாக அந்த இணையத்தின் பயனர்கள் தான் என்பதை புரிந்துகொள்க. நாட்டில் சில விடயங்களை பயன்படுத்த சில சட்டவரைமுறைகள் இருப்பதுபோல, வீட்டிலும் இணையப்பாவனைக்கான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்.

இறுதியாக இணையத்தால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர்கள் சீரழிந்து போகவில்லை, சிறக்கிறார்கள் என்பதைக் கூறி விடைபெறுகிறேன்
<b> .. .. !!</b>
Reply
#57
து}யவனின் வாதங்களைப் படித்துமுடித்தபோது இடியோடு கூடிய மழை பெய்து ஓய்ந்ததுபோல் இருந்தது ஆனால் இரசிகையின் வாதங்களைப் படித்து முடித்தபோது இடியோடு கூடிய மழையுடன் புயலும் வீசி ஓய்ந்தது போலிருக்கின்றது. ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அல்ல. வாதத்திறமை அப்படியிருந்தது. து}யவன், தல இருவரின் தலைகளிலும் இடி விழப்போகின்றதோ என்றும் எண்ணத்தோன்றியது.

உலகத்திலுள்ள அனைத்து ஊடகங்களுமே ஒன்றாக உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? பொன்னான நேரமும், பெருந்தொகையான பணமும் இதனால் மிச்சமாகின்றதே. ஒருவரின் சொந்த செயற்பாடுதான் அவரின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் இதனை விடுத்து இணையத்தின்மீது பாவங்களைச் சுமத்துவது எந்தவிதத்திலும் நியாமில்லை என்று அவரது அணியினர் முன்னர் எடுத்து முன்வைத்த கருத்தை இன்னும் ஆணித்தரமாக வைத்தார்.

மற்றைய ஊடகங்களைப்போல் இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றது என்றும், இணையத்தின் கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவார்கள் என்று அதற்கு உதாரணங்களையும் தந்தார்.

எம்.எஸ்.என் பகிரங்க அரட்டை அறை வேறு, எம்.எஸ்.என் மெஸெஞ்சர் வேறு என்று து}யவன் எழுதிய கருத்திற்கு விளக்கம் கூறினார். முன்னர் இணையம் இல்லாமல் தேசியம் வளர்ந்தாலும் இணையம் இப்போது தேசிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கின்றது என்றார். இப்போது இணையத்தை வீடுகளில் தடைசெய்திருக்கும் விடுதலைப்புலிகள் எதிர்காலத்தில் தடைசெய்யமாட்டார்கள் என்றார்.

யாழ்ப்பாண வீதியில் காலில் தட்டிய கல்லிற்கும் நல்ல விளக்கம் கொடுத்தார். தாம் முன்னேறவேண்டும் என்று தமது அறிவுப்பசிக்குத் தீனியைத்தேடும் இளையோர் இணையத்தினால் பயனடைகிறார்கள், தமது எதிர்காலத்தை எள்ளளவும் எண்ணாது சீரழிக்கும் என்று தெரிந்தும் தாமாகவே இணையத்தில் அப்படியான தளங்களுக்குச் செல்வோர் சீரழிகிறார்கள் என்று உறுதியாகக் கூறுகிறார்.

புலத்தில் வாழும் சில பெற்றோர்கள் கணனி அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதிகமானோர் அதன் நன்மை தீமைகளை அறிந்தவர்களாக இருக்கின்றார்கள் என்றார். மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவில்லையே தவிர தன்னம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று எதிரணியினர் கூறாத வகையில் அவர்கள் சீரழியவில்லை என்பது தெரிகிறது என்றார். வேகமாகத் தகவல்களைப் பெற்று தமது வேலைகளைச் செய்யும் மாணவர்கள் மிகுதி நேரத்தை வீணாக்குவது அவர்களின் இயல்பான குணமேயன்றி வேறொன்றுமில்லை என்கிறார்.

மதகுகளில், தோழியர் வீடுகளில் பெற்ற பயன்களை இணையம் தருவதில்லை, அவனைக் கண்ணியமானவனாக இருக்கவும் அது விடுவதில்லை என்ற எதிரணியினரை நோக்கி மீண்டும் அவையெல்லாம் உங்கள் மனங்களைப் பொறுத்தது என்றும், உலெகெங்கும் சிதறி வாழும் எம் உறவுகளுடன் புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்ளவும், கல்வி வளர்ச்சிக்கும், தொழில் விருத்திக்கும், பொழுபோக்குகள் போன்றவற்றிற்குமே இணையத்தைப் பயன்படுத்துகிறார்களேயன்றி அவர்கள் அங்கே குடும்பம் நடத்தவில்லை என்று ஒரு குத்தல் போடுகிறார்.

எதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எனவே இணையப் பாவனைக்கும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து நன்மையடையுங்கள் என்று அனைவருக்கும் மிகவும் அழுத்தமாகக் கூறி தனது வாதத்தை நிறைவுசெய்தார்.

இரசிகை எதிரணியினரை சித்தர் என்றும், சமூக சிந்தனையாளர் என்றும், கண்ணியமானவரே என்றும் அவ்வப்போது அழைத்து இறுதியில் (வெறும்) தல அவர்களே! என்று விளிக்கிறார், தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கின்றார். இத்தனைபேரையும் அழைத்து ஓர் அறையுள் வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்தினால் எப்படி இருக்கும் என்று நானும் சில வேளைகளில் எண்ணியதுண்டு. அதே கருத்தை இரசிகையும் குறிப்பிட்டிருந்தார். ஆட்களை நேரில் கண்டவுடன் பட்டிமன்றம் வேண்டாம் ஒரு "பார்ட்டி" (Party) வைப்போம் என்றுதான் இளையோர் கேட்பார்கள் என்று நான் எண்ணினேன். ஆனால் இரசிகையோ கத்தியின்றி, இரத்தமின்றி அது நடந்திருக்காது என்றும், அதனைத் தடுத்தது இதனை நடாத்த துணைபோனதும் இந்த இணையமே என்று இணையத்தின் மேலுள்ள தனது காதலை வெளிப்படுத்துகின்றார்.

பட்டிமன்ற வாதம் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டதுபோல ஓர் உணர்வு என்னுள் எழுகின்றது. கத்தி, கோடரி இன்றி சொல்லம்புகளை மட்டும் வைத்துக்கொண்டு செய்யும் யுத்தம்தானே இது.

"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"

என்ற குறளும் நினைவிற்கு வருகின்றது. அப்படியொன்றும் யாரும் மனதில் வைத்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். இவையெல்லாம் ஆரோக்கியமான போட்டிகள்தானே. நல்லதொரு இளம் சந்ததியினரை உருவாக்கவேண்டும் என்கின்ற ஆசையினால் நாம் செய்கின்ற அன்புச் சண்டைகள்தானே. இல்லையா?

சரி, எதிரணியிலிருந்து யார் வரப்போகிறார்? ஓ! புூனைக்குட்டியா? வாங்க. வந்து உங்கள் வாதத்தை முன் வையுங்கள்.
நன்றி.

Reply
#58
<b>அ) தொடக்கம்

ஆ) சீரழிவுகள்
1. உடலியல் தாக்கங்கள்
2. உளவியல் தாக்கங்கள்
3. ஒழுக்கவியல் தாக்கங்கள்
4. சமூகவியல் தாக்கங்கள்
5. பிற தாக்கங்கள்

இ) உதாரணங்கள்

ஈ) எதிர்வாதங்கள்

உ) முடிவு

ஊ) நன்றி</b>


<i>(!) குறித்துக்கொள்க
(?) சரியானதா?</i>
Reply
#59
<b>அ) தொடக்கம்</b>

அனைவருக்கும் வணக்கம்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா (சீரழிந்துபோகிறார்களா) என்பதே இந்தப் பட்டிமன்ற விவாதத்துக்குரிய கேள்வி. இணைய ஊடகமானது பொதுவான பார்வையில் அல்லது வெளித்தோற்றப் பார்வையில் நன்மையளிக்கும் (!) ஊடகமாகத் திகழ்கின்ற போதிலும், அதன் பயன்பாட்டுத் (அல்லது பயனர்) தளத்தில் இளையோரை சீரழிந்துபோகச் செய்வதற்கு சாதகமான ஊடகமாகவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. "நெருப்பில்லாமல் புகையாது" என்பார்கள். காரணம் இல்லாமல் கேள்வி எழாது. இணைய ஊடகத்தால் இளையோர் சீரழிந்துபோகிறார்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால், அதன் பொருள் என்ன? இணைய ஊடகத்தாலான சீரழிவுகளின் தாக்கம் எம்மவர் மத்தியில் வலுப்பெற்று வருகிறது என்பதுவே அது.

"கடவுள் இருக்கிறாரா? இல்லையா?" என்ற கேள்வி(சந்தேகம்) இரண்டு வகைகளில் எழுந்தது.
ஒன்று: அறிவியல் தளத்தில் சிந்தனைகளின் மோதல்களில் வெளிப்பட்டது.
இரண்டு: சமூகவியல் தளத்தில் சீரழிவுகளின் எதிர்வினைகளில் வெளிப்பட்டது.
ஆக மொத்தத்தில், இணையம் நோக்கி எழுப்பப்பட்டிருக்கிற யாழ்கள பட்டிமன்றக் கேள்வியும் இவ்விரு தளங்களிலிருந்துமே எழுப்பப்பட்டிருக்கிறது. எனவே அதற்கான விடையையும் அந்த இரு தளங்களில் இருந்தும் அணுகவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
Reply
#60
<b>ஆ) சீரழிவுகள்</b>

சீரழிவு என்றால் என்ன என்பதை முதலில் நோக்குவோம். சீர்+அழிவு=சீரழிவு: சமூகத்தின் சீரான ஆக்கபூர்வ(!) செயற்பாட்டில் நிகழ்த்தப்படுகிற அழிவு நோக்கிய மாற்றம். மாற்றம் எப்படி நிகழ்த்தப்படுகிறது? தாக்கங்களால். தாக்கங்கள் என்றால் என்ன? பாதிப்புகள். பாதிப்புகள் எல்லாம் சீரழிவை உண்பண்ணுவனவா? இல்லை. அப்படியென்றால் சீரழிவை உருவாக்கக்கூடிய பாதிப்புகளை எவ்வாறு அடையாளப்படுத்துவது? ஆக்கபூர்வமான விளைவுகளை உண்டுபண்ணாத அழிவுப்பாதையைத் திறந்துவிடுகிற பாதிப்புக்கள் என்றும், சமூகத்தின் முன்னேற்றத்தைக் கணக்கிலெடுக்காததும், சமூகத்தின் சிந்தனை வளர்ச்சிப்போக்கை குன்றச்செய்வதுமான பாதிப்புக்கள் என்றும் அடையாளப்படுத்தலாம்.

அந்த வகையில் இந்தக் கட்டுரையின் மூலம் அலசப்படவிருக்கிற சீரழிவுகளை நான்கு கருப்பொருட்களுக்குள் உள்ளடக்கலாம்.
ஒன்று: உடலியல் சார்ந்து ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.
இரண்டு: உளவியல் சார்ந்து இளையோர் சமூகத்தில் ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.
மூன்று: ஒழுக்கவியல் தளத்தில் ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.
நான்கு: முன்னையவை மூன்றினாலும் சமூகவியல் தளத்தில் ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.
ஐந்து: பொருளாதார நிலையில் ஏற்படுத்தப்படுகிற தாக்கங்கள்.

இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதிக விழுக்காடு இணையப் பாவனை கணனி(கணினி?) (மேசைக்கணனி, மடிக்கணனி) ஊடாகத்தான் நிகழ்த்தப்படுகிறது. அதற்கடுத்த இடத்தை கைத்தொலைபேசி வகிக்கிறது. அதற்கடுத்து பால்ம்(palm) போன்ற சாதனங்கள் வகிக்கின்றன. எனவே இவற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் (அழிவு நோக்கிய) இணையத்தின் பாதிப்புகளாக கணக்கிலெடுக்கவேண்டி உள்ளது.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)