Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்
#21
<b>யுத்த நிறுத்த அமுலாக்கம் குறித்து மட்டுமே பேச்சுகள்: விடுதலைப் புலிகள் </b>

ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துடன் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாக மட்டுமே பேச்சுகள் நடத்தப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு ஆங்கில ஊடகமான த சண்டே லீடருக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் அளித்த நேர்காணல்:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரச படையினர் மீறியுள்ளனர். இதைத் தவிர வேறு எதுவும் பேசுவதற்கு இல்லை. ஆகவே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பாகத்தான் பேசப்படும்.

மட்டக்களப்பு - பொலன்னறுவ எல்லையில் வெலிக்கந்த பகுதியில் வடமுனையில் விடுதலைப் புலிகளின் மேஜர் கபிலன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் நாம் கவலை கொள்கிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கத்தைத் தவிர்த்த வேறு எந்த விடயங்களையும் பேச நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்துவது தொடர்பான பேச்சுகளுக்கு நாங்கள் தயாராக இல்லை. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் முதலில் ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்றார் தயா மாஸ்டர்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#22
<b>ஜெனீவாவில் பேசுவதை விட ஓஸ்லோவிலே பேசலாம்: மகிந்த மீது ஜாதிக ஹெல உறுமய சாடல் </b>

அமைதிப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த ஒப்புக்கொண்டதைவிட நோர்வேயின் ஓஸ்லோவிலே நடத்தியிருக்கலாம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஜாதிக ஹெல உறுமய சாடியுள்ளது.


இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் கமல் தேசப்பிரிய கூறியதாவது:

அமைதிப் பேச்சுகளில் அரசாங்கம் பங்கேற்பதற்கு முன்பாக 3 நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியது.

வன்முறைகளை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு என்பதில் இணக்கப்பாடு காண வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் மகிந்த ராஜபக்ச எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

தென்னிலங்கையின் இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் பேச்சுகள் நடத்தப்படும் என்று மகிந்த சிந்தனையில் தெரிவித்திருந்ததை மகிந்த ராஜபக்ச மீறியுள்ளார். மகிந்தவின் வெற்றிக்கு பங்காற்றியவர்கள் ஜே.வி.பி.யினரும் ஜாதிக ஹெல உறுமயவினரும்தான்.

ஆசிய நாடு ஒன்றில்தான் பேச்சு என்ற நிலையிலிருந்து மாறி ஜெனீவாவில் பேச்சுகள் நடத்த மகிந்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதை விட பேசாமல் நோர்வே தலைநகர் ஓஸ்லோவிலே நடத்திவிடலாம். கூட்டாட்சி முறையில் தீர்வு காண வலியுறுத்துகிற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டிருப்பது ஏற்க முடியாது.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்பதற்குக் காரணமாக இருந்த ஜி.எல்.பீரிசும் இப்போது அமைச்சரவையில் இணைய உள்ளார். ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என்று கூறி தேர்தலில் மக்களின் வாக்கைப் பெற்றவர் மகிந்த. இப்போது தனது நிலையிலிருந்து மாறி உள்ளார்.

ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பு உருவாக்கம், அதிஉயர்பாதுகாப்பு வலயம் அகற்றல், துணை ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவு ஆகியவற்றைச் செயற்படுத்துமாறு அரசாங்கத்துக்கு விடுதலைப் புலிகள் பாரிய அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளை ஜாதிக ஹெல உறுமய தோற்கடிக்கும் என்றார் அவர்.

ஜாதிக ஹெல உறுமயவின் உதய கம்மன்பில கூறியதாவது:

ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதைவிட ஓஸ்லோவிலேயே நடத்தலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் பேச்சுகள் நடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை பாதிக்கப்படும். இது சிறிலங்கா அரசாங்கத்துக்குப் பாதகமானது.

அமைதிப் பேச்சுகளை கொழும்பில்தான் முதலில் நடத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து வன்னிக்குப் பாதுகாப்பாகச் செல்ல முடிகின்ற போது பேச்சுகளையும் கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலே நடத்தலாம் என்றார் அவர்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#23
<i><b>பேச்சுவார்த்தையில் பங்கேற்பது தொடர்பாக ஜே.வி.பி. இன்னமும் தீர்மானிக்கவில்லை</b></i>

ஜெனீவாவில் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஜே.வி.பி. கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பாக எதுவிதத் தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க அழைப்பு விடுக்கப்பட்டால் அத் தருணத்தில் தீர்மானிப்போமென்றும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்

ஜெனீவாவில் இடம்பெறப்போகும் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமிருந்து எதுவித அழைப்பும் இதுவரையில் விடுக்கப்படவில்லை. அது தவிர ஜே.வி.பி. இது தொடர்பாக தீர்மானிக்கவும் இல்லை.

அவ்வாறு அழைப்பு விடுக்கப்படும் சூழலில் அந்த நேரம் என்ன தீர்மானம் எடுக்க வேண்டுமோ அதனை எடுப்போமெனத் தெரிவித்த அநுர திஸாநாயக்க எம்.பி. புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்தையும் இவ்வாறு உதாரணம் காட்டினார்.

புலிகளுக்கு எதிராக செயற்படும் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களைக் களையுமாறு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். அதனை அரசாங்கம் செய்யத் தவறினால் அதற்கு என்ன பதில் என்பதை அச்சந்தர்ப்பத்தில் தீர்மானிப்போம் என்றார்' இதனையே நானும் நினைவுபடுத்த விரும்புகிறேனென்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

<b>ஜாதிக ஹெல உறுமய</b>
இலங்கையிலேயே சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டுமென்ற ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை. எனவே ஜெனீவாவில் இடம்பெறப்போகும் பேச்சுவார்த்தைகளிலும் எமது பிரசன்னம் கிடையாது. ஜனாதிபதி அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்க மாட்டோம். நிராகரிப்போமென்றும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது

<b>தினக்குரல்</b>
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
<b>பேச்சுவார்த்தை அறிவிப்புக்குப் பின்னர் வன்முறைகள் குறைந்துவிட்டன: ஹக்ரூப் ஹொக்லெண்ட் </b>

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது முதல் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வன்முறைகள் குறைந்துவிட்டன என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளதாவது:

ஒரு மாதத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் இது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் 2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பின்னர் கடந்த டிசம்பர் மாதம்தான் மோசமான வன்முறைகள் ஏற்பட்டன. நூற்றுக்கும் அதிகமான பொதுமக்களும் அரச படையினரும் விடுதலைப் புலிகளும் உயிரிழந்தனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையே கேள்விக்குறியாக்கியிருந்தது.

இருப்பினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் சிறிலங்கா அரசாங்கமும் ஜெனீவாவில் அடுத்த மாதம் பேச்சுகள் நடத்துவதாக அறிவித்த நிலையில் வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளன. கண்காணிப்புக் குழுவினருக்கு நிம்மதி அளிக்கிறது.

கொழும்பில் கடந்த வாரம் நோர்வே சிறப்புத் தூதுவரும் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்மைச் சந்தித்த போது யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.

அமைதி முயற்சிகளின் அடுத்த நகர்வுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையாக ஜெனீவா பேச்சுகள் அமையும் என்று நம்புகிறோம்.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#25
<i><b>சமஷ்டி முறையில் தீர்வு காணலாம் என்ற நிலைப்பாடு பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்யும் - விமல் வீரவன்ச </b></i>

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் தீர்வுக்காணலாம் என்ற நிலைப்பாடு மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கவே வழிவகுக்கும் என ஜே வி பியின் பிரசார செயலர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலை ஒன்றை அரசாங்கம் எடுக்குமானால் அதனை தாம் எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜேவிபி அரசாங்கத்தின் அங்கம் அல்ல அது அதன் தனித்த நிலையிலேயே செயற்பட்டு வருகிறது.

மஹிந்த கொள்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவேண்டும் அதனை விடுத்து எவராவது வெளியில் இருந்து மஹிந்த கொள்கையை மாற்றி சமஷ்டி முறையை நடைமுறைப்படுத்த முனைந்தால் அதனை தமது கட்சி அனுமதிக்கப் போவதில்லை என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஒற்றையாட்சி கொள்கையின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறது. நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் சமாதான முயற்சிகளில் முன்னரை போன்று செயற்பட அனுமதிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே நாட்டினரை போர் நிறுத்த உடன்பாட்டின் சொந்தக்காரர்களாக கருதி வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணத்துங்கவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல்ரீதியாக தற்சமயம் தோற்கடிக்கப் பட்டுள்ளார்கள் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
லங்கா சிறீ
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
<b>பேச்சுக்கான உத்தேச திகதிகள்
புலிகள் தரப்புக்குத் தெரிவிப்பு
பெப்ரவரி 15,16 இல் அல்லது
21,22 இல் நடத்தத் திட்டம் </b>

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளைச் செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றிய நேரடிப் பேச்சு களை ஜெனீவாவில் நடத்துவதற்கான மூன்று தொகுதித் திகதிகள் பிரேரிக்கப்பட்டிருக் கின்றன.
பெப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் இந்தப் பேச்சுகளை நடத்த லாம் என்பதை சுவிற்ஸர்லாந்து அரசின் ஆலோசனையோடு அனுசரணையாளர்களான நோர்வேத் தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தி யிருக்கின்றனர் என அறியவருகின்றது.
பெப்ரவரி 15, 16இல் அல்லது, பெப்ர வரி 21, 22இல் அல்லது பெப்ரவரி 22,23இல் இந்தப் பேச்சுகளை ஜெனீவாவில் நடத்த லாம் என நோர்வே அனுசரணையாளர்கள் பிரேரித்திருக்கின்றனர்.
ஆனால், இத்திகதிகளில் எப்போது பேச்சை நடத்தலாம் என்பது குறித்து புலி களின் தலைமை இன்னும் திட்டவட்டமான பதில் எதையும் வெளிப்படையாக நோர் வேக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அறியவந்தது.
நேரடிப் பேச்சு நடத்துவதற்கு முதலில் அதற்கான புறச்சூழ்நிலை ஏற்படவேண்டும், தமிழர் தாயகத்தில் இராணுவக் கெடுபிடிகள், தாக்குதல்கள் போன்றவை இல்லாத அமைதி நிலைமை நீடிக்க÷வண்டும் எனப் புலிகளின் தலைமை கருதுவதாகத் தெரிகின் றது.
அத்தகைய நிலைமை நிலவுவதற்கான சாத்தியங்கள் தென்படமுதல் பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் அர்த்தமில்லை என்பதில் புலிகளின் தலைமை உறுதியாக இருப்பதாகவும் தெரிகின்றது.
எனவே, அரச படைகளின் தாக்குதல்கள், ஒட்டுப்படைகளின் அட்டகாசங்கள் போன் றவை தணிந்து, அந்தப் படைகளை அரசுத் தøலமை தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வருவது உறுதிப்படுத்தப்படுமானால், உத் தேச பேச்சுக்குப் பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று தொகுதித் திகதிகளில் ஒன்றைப் புலிகளின் தலைமை ஏற்று அதற்கு இணங்கக் கூடும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன

<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>
"
"
Reply
#27
<b>நோர்வேயின் புதிய விஷேட பிரதிநிதி ஜெனீவா பேச்சில் பங்குபற்றுவார்</b>

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக நோர்வே அரசினால் புதிய விஷேட தூதுவரொருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ஜெனீவா நகரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், நோர்வே அரசு இதற்காக விசேட தூதுவரொருவரை நியமித்துள்ளது.

ஆனால், சொல்ஹெய்ம் தொடர்ந்தும் சமாதான முயற்சிகளுக்கு பொறுப்பான நோர்வேயின் அனுசரணையாளராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய விஷேட பிரதிநிதி ஜெனீவா பேச்சில் கலந்து கொள்வாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது துணைப் படையினரின் ஆயுதங்களைக் களைவது மற்றும் உயர் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை மீண்டும் குடியமர அனுமதிப்பது என்பன குறித்தே பிரதானமாக ஆராயப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை சீராக அமுலாக்குவதன் மூலமே குடா நாட்டில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தலாம் எனவும் இதன் மூலமே படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரலாம் எனவும் சொல்ஹெய்முடனான சந்திப்பின் போது விடுதலைப் புலிகள் வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை, நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்துடன் லண்டனுக்கும் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் நடத்துவது குறித்து ஆராய்ந்ததாகவும் அதன் பின்னரே இலங்கைக்கு வந்து வன்னிக்கு சென்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததாகவும் தெரிய வருகிறது.

<i><b>தகவல் மூலம்-தினக்குரல்</b></i>
"
"
Reply
#28
<b>அரசியல் சந்தர்ப்பவாதத்தை
அமைதி முயற்சிகளில் காட்டாதீர்! </b>

""எமது ஆட்சிக் காலத்தில் நாம் புலிகளுடன் மேற்கொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன எனவும், அதனாலேயே யுத்த நிறுத்த மீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும், அதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறி வந்தவர் அப்போதைய பிரதமரும் இப்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ.

""இப்போது அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் எவ்வித திருத்தமும் செய்யாமலேயே அதை முற்றும் முழுதாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் புலிகளுடன் பேச்சு நடத்த அவர் முன்வந்திருக்கின்றார். இது அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நிரூபித்திருக்கின்றது'' இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் காட்டமாக கூறியிருக்கின்றார் எதிர்க்கட்சித்தலைவரும், ஐ.தே. கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.

ரணில் கூறுவது முற்றிலும் உண்மை. ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் மஹிந்த ராஜபக்ஷ அப்படித்தான் கூறிவந்தார். அவரோடு கூட்டுச் சேர்ந்திருந்த பௌத்த, சிங்கள மேலாண்மைவாத சக்திகள் அவரை அப்படித்தான் பேசவைத்தன. பேரினவாத நெருப்பை மூட்டி, அந்தச் சூட்டில் சிங்கள வாக்குகளை சுருட்டுவதற்காக மஹிந்த அப்படித்தான் (பௌத்த) சீலம் பேசினார்.
""பிரதமரான நான் கூட இந்த நாட்டின் ஒரு பகுதியான கிளிநொச்சிக்கு வன்னிக்கு போகமுடியாதுள்ளது. அப்படித் தடைவிதிக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியுமா? நான் ஜனாதிபதியானதும் அந்த ஒப்பந்தத்தை மாற்றியமைப்பேன். அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைச் சீர்செய்வோம்.'' என்றெல்லாம் சூளுரைத்தார் அப்போதய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.
இப்போது அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. முப்படைகளினதும் தளகர்த்தர். அரசின் தலைவர். அமைச்சரவையின் தலைவர். இவ்வளவு அதிகாரம் எல்லாம் இருந்தும் இப்போதும் கூட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அவரால் கிளிநொச்சிக்குச் செல்லத்தான் முடியவில்லை. "தலைவர் பிரபாகரனை நேரில் சென்று சந்திக்கவும் தயாராக இருக்கிறேன்' என்று தன்னைச் சந்திக்கும் பிரமுகர்களிடம் எல்லாம் அவரால் கூறத்தான் முடிகின்றதே தவிர, நேரில் அங்கு செல்லமுடியாது.
அப்படி அவர் தம் விருப்பப்படி அங்கு செல்வதை இப்போதும் தடைசெய்கின்ற அதே யுத்த நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளைத்தான் முழு அளவில் செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து மட்டும் புலிகளுடன் பேசுவதற்காகத் தமது அரசுப் பிரதிநிதிகளை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டியவராக இருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இதுதான் யதார்த்தம்.
தேர்தலில் வெல்லுவதற்காக யதார்த்தம் புரியாமல் அல்லது புரிந்தும் புரியாததுபோல பேசியதால் இப்போது " அரசியல் சந்தர்ப்பவாதி' என்று விமர்சிக்கப்படும் நிலைக்கு ஜனாதிபதி மஹிந்தர் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஒரு நான்கு மாத காலத்துக்குக்குள் தமது தவறான அரசியல் நிலைப்பாடு காரணமாக அவர் பெற்ற படிப்பினை இது.
அமைதிப் பேச்சுக்களை சமாதான முயற்சிகளை முன்நகர்த்துவதற்கு இந்தப்பட்டறிவு அவருக்கு நல்ல வழியைக் காட்டுவதாக இருக்கவேண்டும்.
தேர்தலில் வெல்வதற்காகப் போட்ட இரட்டை வேடம் அல்லது கைக்கொண்ட அரசியல் சந்தர்ப்பவாதம் அல்லது குள்ளத்தனமான அரசியல் சாணக்கியம் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற போராட்ட அமைப்பைக் கையாள உதவமாட்டாது என்பதை ஜனாதிபதி மஹிந்தர் புரிந்துகொண்டிருப்பாரோ தெரியவில்லை.
முள்ளை முள்ளால் எடுக்கும் இராஜதந்திரமும், இராணுவத் தந்திரமும் மிக்கவர்கள் புலிகள். எனவே, நேரடியாகப் பேசி, இணக்கம் கண்டு, கண்ட இணக்கத்தைச் செயல்படுத்தி, தீர்வை நோக்கி நகர்வதற்கு ஜனாதிபதி மஹிந்தவும், அவரது அரசும் தயாராக இருக்கவேண்டும். அந்தத் திடசங்கற்பத்துடனும், பற்றுறுதியுடனும்தான் அமைதிப் பேச்சுகளுக்கு அரசுத் தரப்பு வரவேண்டும்.
அதை விடுத்து காலங்காலமாகத் தமிழ்த் தலைமைகளை ஏமாற்றிய முன்னைய சிங்களத் தலைவர்கள் போல சந்தர்ப்பவாத எண்ணத்தோடு பேச்சு மேசைக்குத் தமது பிரதிநிதிகளை ஜனாதிபதி மஹிந்தர் அனுப்பி வைப்பாரேயானால், தமக்குத் தாமே முகத்தில் கரி பூசும் நிலையை அவர் எதிர்கொள்ள வேண்டிநேரிடும்.
தேர்தல் வெற்றிக்காகத் தாம் பூசிய அரசியல் சந்தர்ப்பவாதத்தை பேச்சு மேசைக்கு வரும்போது அழித்துவிட்டு, உண்மை முகத்தோடும் நேர்மைத் திறத்தோடும் அவரது தரப்பு வருமானால் அந்த அமைதி முயற்சிகளினால் ஏதேனும் உருப்படியான பலன் கிட்ட வாய்ப்புண்டு.

<i><b>ஆசிரியர் தலையங்கம்-உதயன் (31/01/2006)</b></i>[/i]
"
"
Reply
#29
<b>அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களுக்கும் இடம்: மகிந்த உறுதி </b>

இலங்கை அமைதிப் பேச்சுக்களில் முஸ்லிம்களும் இடம்பெறுவார்கள் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.


மகிந்தவின் அலரி மாளிகையில் அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மகிந்த இதைத் தெரிவித்தார்.

கௌரவமான அமைதியை உருவாக்கும் போது முஸ்லிம்களுக்கோ இதர இனத்தவருகோ எதிராக பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டோம் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் நன்மைக்காக வடக்கு கிழக்கில் மகாண தலைமைச் செயலகங்களின் கிளைகள் அம்பாறையில் அமைக்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்ச இந்த சந்திப்பின்போது அறிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்ட அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.எம்.சய்யீத், அமைச்சர் நஜிப் ஏ. மஜித், அமீர் அலி மற்றும் பொதுச் செயலாளர் ஒய்.எல்.எஸ். ஹமீத் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்படும் குழுவில் சட்டத்தரணி பைஸ் முஸ்தாபா இடம்பெறக் கூடும் என்றும் அனைத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#30
<b>ஜெனீவா பேச்சுக்களுக்கு 10 பேர் கொண்ட அரசாங்கக் குழு </b>
[புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:10 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
ஜெனீவாவில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளின் பெயர்கள் இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மகிந்தவின் அலரி மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


10 பேரைக் கொண்டதாக இக்குழு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் குழுவில் அமைச்சர்கள், அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் சில சட்டத்தரணிகள் இடம்பெறக் கூடும்.

அரச குழுவினரைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரல் தற்போது சிறிலங்கா சமாதான செயலகத்தினாலும் ஏனைய தரப்புகளினாலும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலை விடுதலைப் புலிகள் தயாரிக்கவில்லை என்றும் அது மக்களை திசை திருப்ப கிளப்பிவிடப்பட்டுள்ள வதந்தி என்றும் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி நிரலை அரசாங்கம், நோர்வே மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோர் கூட்டாக இணைந்தே தயாரிப்பார்கள். அதேநேரம் பேச்சுவார்த்தைகளை இம்மாதம் 21 மற்றும் 22 ஆம் நாட்களில் நடத்தலாம் என்று விடுதலைப் புலிகள் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிகழ்ச்சி நிரலுக்கென கல்விமான்களின் கருத்துக்கள் அறியப்பட்டு வருகின்றன என்றும் சிறிலங்கா அராசங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் குழுவில் அவர்களின் இராணுவப்பிரிவைச் சேர்ந்த ஜெயம் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத் தரப்பிலும் இராணுவ அதிகாரி ஒருவரை இணைத்துக் கொள்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#31
<b>நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சிறிலங்கா அரசாங்க குழு </b>
[வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 18:09 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜெனீவாவில் நடத்த உள்ள யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களுக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் குழுவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை வகிப்பார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

இக்குழுவில் இடம்பெற உள்ள இதர உறுப்பினர்களும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றார் அனுரா பிரியதர்சன யாப்பா.

இம்மாத இறுதியில் ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறும் என்றும் இப்பேச்சுகள் இருநாட்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்த அனுரா பிரியதர்சன யாப்பா, பேச்சுக்கள் நடைபெறும் நாள்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அரசாங்கக் குழுவுக்கு சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை வகிப்பார்.

<i><b> தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#32
<span style='color:darkred'><b>பேச்சுக்கான சூழமைவு என்ன?</b>

<b> ஞாபகன்</b>

தென்னிலங்கை ஆட்சியாளர்களான ஜே.வி.பி, ஹெல உறுமய மற்றும் சுதந்திரக் கட்சி கூட்டணியினர் தமிழ் மக்களை எந்த முறையில் அணுக வேண்டும் என்பதை சில வாரங்களுக்கு முன்பு வரை திட்டமிட்ட ஒரு முன்மொழிவாக வைத்திருந்தனர். அதனையே தேர்தல் பிரசார பொருளாகவும் கூட கொண்டு சென்றிருந்தனர். ஆனால், தமிழ் மக்களையோ விடுதலைப் புலிகளையோ அவர்கள் நினைத்த கோணத்தில் நெருங்கவோ அணுகவோ முடியாது என்பதை இப்போதாவது அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

இதனை ஜே.வி.பி, ஹெல உறுமய போன்றன விளங்கிக் கொண்டனவோ இல்லையோ மகிந்தராஜபக்ஷ மிகக் குருரமான முறையில் விளங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழர் தரப்பை எவ்வாறு அணுகலாம் என்று தனது நலனின்பால் நின்று மகிந்த போட்ட கணக்குக்கு மாறாக, தமிழர் தரப்பு அவரை எவ்வாறு அணுக வேண்டும் என்று தீர்மானித்து செயற்படுகின்றது.

தனது வெற்றிக்கு பின்னால் நின்ற சிங்களக் கடும்போக்குவாதிகளின் வழிகாட்டலில் அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக மகிந்த இராணுவ கட்டமைப்புக்களில் சில மாற்றங்களை மேற்கொண்டார். சிறிலங்கா இராணுவத் தளபதி, இராணுவப் புலனாய்வுத் தளபதி போன்றோர்களின் புதிய நியமனங்கள் தமிழர் தரப்புக்கு – மக்களுக்கு காட்டிய சமிக்ஞை திமிர்த்தனமானது என்பதில் ஐயமில்லை.

சமிக்ஞைகளோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் நடைமுறைப்படுத்திய படையியல் செயற்பாடுகளும் மோசமானவை. யதார்த்தத்தில் இருந்து வெகுதூரத்தில் நின்றுகொண்டு தமிழ் மக்களை அச்சுறுத்தி பணியவைக்கும் தந்திரோபாயத்தை கையாயத் தலைப்பட்டதன் விளைவை அவர்கள் அனுபவித்தார்கள். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது அப்பாவி தமிழ் மக்ககள் கொல்லப்பட்டதற்கு சமனாக தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த சிங்களச் சிப்பாய்களின் உயிர்களும் வாங்கப்பட நேர்ந்தது.

அதேநேரம் சர்வதேச ரீதியாக உதவி பெற்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று மகிந்த நம்பிய இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கையைவிட்டன. மகிந்த சூடியிருந்த எதிர்நிலைப்பாடுகள் எவையோ அவற்றையே அவர் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும் என்று அவை அழுத்தம் கொடுத்தன.

குறிப்பாக நோர்வேயை அனுசரணையாளர்களாக கொண்டு பேச்சுக்களை ஆரம்பிப்பதுதான் மகிந்த செய்யவேண்டிய காரியம் என்பதை அவர்கள் உறுதிபட வெளிக்காட்டினர். இது தமிழர் தரப்புக்கு முரண்பாடில்லாததாகவும் அமைந்த அதேவேளை ஐரோப்பிய நாடுகளை மையமாக கொண்டே பேச்சுக்களை நடத்த இயலும் என்று விடுதலைப்புலிகளின் விருப்பத்தையும் மதிப்பதாகவும் இருந்திருக்கின்றது.

இந்த சாதகமான அம்சங்கள் தான் கடந்;த வாரம் தேசியத் தலைவர் நோர்வே சமாதானத் தூதுவரும் அபிவிருத்தி அமைச்சருமான எரிக்சொல்ஹெய்ம் அவர்களை சந்தித்தபோது ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்க காரணமானது.

இந்தப் பேச்சுக்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை செம்மையாக அமுல்படுத்துவது பற்றியதாகவே அமையவுள்ளன. மகிந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஒற்றையாட்சிக்கும் அரசியல் யாப்புக்கும் முரணாக இருப்பதாகவும் அதை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரே மிகப்பெரிய முரண்பாட்டின் வடிவமாக இதனை எவ்வாறு முழுமையாக அமுல்படுத்துவது என்று பேசுவதற்று இணங்க வேண்டிய இராஜதந்திர சிக்கலுக்குள் அகப்பட்டிருக்கின்றார்.

அவர் பதவிக்கு வந்ததும் வடக்கு கிழக்கில் என்னென்ன இராணுவக் கெடுபிடிகளை ஆரம்பித்து வைத்தாரோ அவை எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வந்தால் தான் பேசமுடியும் என்ற ஒரு நிபந்தனையையும் ஏற்றுக்கொண்டு அமுல்செய்ய வேண்டியவராக இருக்கின்றார். அவ்வாறு செய்தாலே ஜெனீவா பேச்சுக்களுக்கு சாத்தியம் இருக்கும் என்ற மிகக் கடுமையான யதார்த்தம் அவருக்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது.

இதை செய்யாமல், பேச்சுக்களுக்காக ஜெனீவாவுக்கு போகாமல் விட்டால் அவரது படைகள் மிகக் கடுமையான பாடத்தை படிக்கும் என்பதும் இலங்கைத்தீவு விரைவிலேயே இரண்டு நாடுகளாக பிளந்துவிடும் என்பதும் தெனிவாகவே இப்போது அவருக்கு விளங்கியிருக்கின்றன. இதனை ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் விளங்கிக் கொண்டிருக்கின்றன. என்றாலும் அவர்கது இனவாதப் பழக்கதோசம் இன்னும் நோர்வேக்கு எதிரான நிலைப்பாடாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும், இவர்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையை கிழித்து வீசிவிட வேண்டும் என்று இன்னும் பேசுமளவுக்கு துணிச்சலுடன் இல்லை என்பது தமிழர் தரப்பின் வலுவை அவர்கள் உணர்ந்துள்ளமைக்கு சாட்சியமாகும்.

ஆனால், தென்னிலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளில் - இன அழிப்பு போரைத் தொடங்கும் முனைப்பில் இருந்து விலகிவிட்டதாக கருதமுடியாது. மானசீகமாக அது தமிழர் தரப்பு பலமிழந்து அழிந்து போகவேண்டும் என்ற சிந்தனையில் தான் இருக்கின்றது.

நோர்வே தூதுவர் சந்திப்பதற்று முன்வரை எந்தநேரத்திலும் போர் ஒன்று தொடங்கும் அதை எதிர்கொள்ளவேண்டும் என்ற தயார்ப்படுத்தலில் இருந்திருக்கின்றன. போரொன்றை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கான திட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றன. தைப்பொங்கல் தினத்துக்கு பின் போர் ஒன்று வெடிக்கும் என்று தென்னிலங்கை சிங்கள ஊடகங்களும் அவதானிகளும் எதிர்வு கூறி படைகளை உசார் நிலைக்குட்படுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால், எதிர்பார்த்தது போல விடுதலைப் புலிகள் அத்ததையதொரு கட்டத்துக்குள் பிரவேசிக்காததால் விரக்தி நிலைக்குட்பட்டனர் என்றே கருதவேண்டும். வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் இன்னொரு போர் தொடர்பில் மிகுந்த கிலேசத்துடனும் மனவுளைச்சலுடனும் இருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், போரின் மூலம் பிழைப்பு நடத்தும் தென்னிலங்கையின் சில சக்திகள் போரொன்றுக்கான எதிர்பார்ப்புடன் அதிலும் தமிழர் தரப்பின் அழிவை வரவேற்கும் மனப்பாங்குடன் காத்திருக்கின்றன. இதன் வெளிப்பாடாகவே கடந்த வாரத்தில் மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் கிளைமோர் தாக்குதல் இடம் பெற்றதாகவும் அதில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சிக்கியதாகவும் செய்தி வெளியிடும் அளவுக்கு குரூரமான கற்பனை வளத்துடன் இருந்தன.

இந்த செய்தியுடன் யுத்தம் ஒன்று வெடிக்கப்போவதாக முடிவெடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சிறிலங்காவுக்கு திரும்ப இருந்த முடிவை லண்டன் விமான நிலையத்தில் வைத்து மாற்றிக் கொண்டமையும் தென்னிலங்கை என்ன மனோபாவத்துடன் இருக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

இப்போது ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்துவதற்கான தயார்ப்படுத்தலில் சிறிலங்கா அரசு இருக்கின்றது. உண்மையில் ஜெனீவாவில் என்ன பேசப்பட வேண்டும் என்பதும் என்ன முடிவை அரசு கூற வேண்டும் என்பதும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன.

புரிந்துணர்வு உடன்படிக்கையை இருதரப்பும் செம்மையான முறையில் அமுல்படுத்துவது என்பது தான் பேச்சின் பொருள். குறிப்பாக சிறிலங்கா அரசும் படைகளும் உடன்படிக்கையின் படி உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேறி மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழி சமைத்தல், ஒட்டுப்படைகளினை அகற்றுதல் என்பனவே பிரதான விடயங்கள். இதனை செய்ய முடியுமா இல்லையா என்பதையே சிறிலங்கா ஜெனீவாவில் வைத்து விடுதலைப் புலிகளிடம் கூற வேண்டும்.

இதற்கு மகிந்த அரசு தயார் என்றால் எத்தனை நாள்களுக்குள் செய்து முடிக்கும் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னைய பேச்சுக்களில் இழுத்தடித்த வரலாற்றை இந்த பேச்சுக்களிலும் சிறிலங்கா அரசு தொடர முடியாது.

ஏனெனில், தமிழர் தரப்பு தமிழீழத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்க தயாரான வேளையிலேயே இந்தப் பேச்சுக்கான சூழமைவு ஏற்பட்டிருக்கின்றது.</span>

<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு-</b></i><b>வாரவெளியீடு(ஆசிரியர் தலையங்கம்)</b>
"
"
Reply
#33
<b>ஜனீவா பேச்சு பெப் 15இல் என்ற அரசின் அறிவிப்புக்கு புலிகள் மறுப்பு </b>

ஜெனீவாவில் பெப்ரவரி 15ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், எங்களது அரசியல் ஆலோசகரும் எமது பேச்சுக்குழுவிற்கு தலைமை வகிப்பவருமான அன்ரன் பாலசிங்கம், அனுசரணையாளர்களுடன் இது தொடர்பாக நாளாந்தம் பேசி வருகிறார். ஆனால் பேச்சுக்களுக்கான நாள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகத்தில் தேடுதல்களும் சுற்றிவளைப்புக்களும் தொடர்கின்றன. மக்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இன்று கூட அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பேச்சுக்களுக்கான இயல்பு நிலைமையை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். நிலைமை இன்னமும் அப்படியே தான் இருக்கிறன என்றார் புலித்தேவன்.

முன்னதாக கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறிலங்கா வர்த்தகத்துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ஜெனீவாவில் 15ஆம் நாளன்று பேச்சுக்கள் நடைபெறும் என்று என்னிடம் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். நானும் பேச்சுக்குழுவில் உள்ளேன். ஜெனீவாவுக்கு இங்கிருந்து 14ஆம் நாள் புறப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டனர் என்று அரசாங்கமும் இராணுவமும் தெரிவித்து வருவது குறித்து விடுதலைப்புலிகள் கடும் சினமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தலுக்கு அரசாங்கமே காரணம் என்றும் புலிகள் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply
#34
<i><b>ஜெனீவா பேச்சுக்கு செல்லும் அரசாங்க தூதுக்குழுவில் மாற்றம் ஏற்படும் சாத்தியம்</b>

ஜெனீவாவில் நடைபெறவுள்ள அரசு விடுதலைப் புலிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கான திகதியை குறித்தொதுக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்களென அறிவிக்கப்பட்ட குழுவில் மாற்றங்கள் நிகழக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்கள் கடத்தப்பட்டதனால் சர்வதேசளவில் தோன்றியிருக்கும் எதிர்மறைக் கருத்துகள் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலேயே பேச்சுகளுக்கான திகதியை நிர்ணயிப்பதில் இழுபறி நிலையேற்பட்டுள்ளது.

அரச தூதுக்குழுவில் இடம்பெறுபவர்களை தெரிவு செய்வதில் அசௌகரியத்தை எதிர்நோக்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தற்போது ஜெனீவாவுக்கு செல்லும் தூதுக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களை பற்றி வரும் விமர்சனங்கள் காரணமாக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டவர்களை மாற்றம் செய்வது குறித்து சிந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[i]அதேவேளை ஜெனீவா செல்லும் அரச குழுவில் இடம்பிடித்துள்ள ஒருவர் தற்போது எழுந்துள்ள சூழ்நிலை குறித்து கூறுகையில்</i>

ஜெனீவா செல்லும் அரச தூதுக் குழுவினரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவே தெரிவு செய்தார். இக்குழுபற்றிய எதிர்வாதங்களும் உள்ளன. இதனால் சில சமயங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரச குழுவில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

குறிப்பாக அமைச்சர் <b>ரோகித போகல்லாகம </b>நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொருவர் நியமிக்கப்படலாம். உண்மையில் கூறினால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அரச குழு இறுதியான குழுவல்லவென்று கூறமுடியும்.

அத்துடன் சட்டநிபுணர் <b>பாயிஸ் முஸ்தபா </b>அரச தூதுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து வட கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடத்திலும் வேறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

வட கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்களில் ஒருவரே அரச குழுவில் இடம்பெற வேண்டுமென்பதையே அம் முஸ்லிம் தலைவர்கள் விரும்புகின்றனர். சட்டநிபுணர் <b>பாயிஸ் முஸ்தபா </b>கூட முஸ்லிம் சமூகத்தின் ஆதரவின்றேல் அரச தூதுக்குழுவிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தூதுக்குழுவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதென்றார்.

thinakkural
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
<b>ஜெனீவாப் பேச்சு வார்த்தை உடனடியாக சாத்தியமில்லை</b>

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவால் தமிழர் புனர் வாழ்வுக்கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ள இந்நிலையில் சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களுக்கு உடனடியாக சாத்தியமில்லை என்று விடுதலைப் புலிகளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் மனிதாபிமான பணிகளை முன்னின்று மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் விடுவிக்கப்பட்ட இருவர் தெரிவித்துள்ள தகவல்களின்படி கடத்தியவர்கள் இராணுவத்துடன் இயங்கும் ஆயுதக்குழுக்கள்தான் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.ரெஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த கடத்தலால் தமிழ்மக்கள் பீதியும் குழப்பமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்துடன் இப்போது எப்படி பேச்சு நடத்தமுடியும். பெப்ரவரி 15 என்று தெரிவிக்கப்பட்டு வரும் பேச்சுக்கான காலக்கெடுவில் புலிகள் பேச்சில் கலந்து கொள்ள முடியாது. அப்படியானால் இம்மாத இறுதியில் அதற்கான சாத்தியம் உண்டா என்பது குறித்து ஆராயலாம்.

விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுக்களில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் அதற்கான சூழ்நிலையை முற்றாக சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் கடத்தல் சம்பவத்தால் பேச்சு குறித்து உடனடியான முடிவு ஒன்றுக்கும் தற்போதைக்கு வர முடியாது உள்ளது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையில் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டதை கண்டித்து கிளிநொச்சியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பர நாதன் தெரிவிக்கையில்:-

தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் பேச்சு மேசைக்கு தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை ஒருபோதும் அனுப்பமாட்டார்கள் என்றிருந்தார்.

ஆனால், புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தல் விடயம் ஜெனீவா பேச்சுக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சிறிலங்கா படைத்துறை அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியா கூறியிருக்கிறார்.

<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply
#36
<b>ஜெனீவா பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் முட்டுக்கட்டை

<i>ஓரிரு தினங்களில் நோர்வே தூதுவர் வன்னி செல்லும் சாத்தியம்</i></b>

அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனீவா பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை நிலையை நீக்குவதற்காக விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்காக இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஓரிரு தினங்களில் இவரது வன்னிப் பயணம் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவா நகரில் இம்மாதம் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் நடத்த தாம் தயாராய் இருப்பதாக அரசாங்கம் நோர்வே ஊடாக விடுதலைப் புலிகளுக்கு அறிவித்துள்ளது.

ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ளபடி 15 ஆம், 16 ஆம் திகதிகளில் ஜெனீவாப் பேச்சுவார்த்தையை நடத்த தாம் தயாரில்லை என தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிப்பதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரொருவர்,

தமது இயக்கம் ஜெனீவாவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராய் இருப்பதாகவும் ஆனால், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களது கடத்தல் சம்பவமானது, பேச்சுக்கான புறச் சூழ்நிலையை மிக மோசமாக பாதிப்படையச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் பேச்சுகளை ஜெனீவாவில் மீள ஆரம்பிக்க தாம் தயார் என புலிகள் நோர்வே மூலம் அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரிவித்த பின்னரும் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரால் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இதனால், தமிழ் மக்கள் பதற்றமடைந்துள்ளதுடன் குழப்பமடைந்துமுள்ளனர். எனவே, அரசாங்கத்துடன் 15 ஆம் திகதி பேச்சு நடத்துவதென்பது முடியாத காரியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், துணை இராணுவக் குழுக்களே ஜெனீவாப் பேச்சுகளை ஆரம்பிப்பதில் முட்டுக் கட்டையாகவுள்ளன. எனவே, அவர்களது ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.

சமாதான பேச்சுகளின் போது, யுத்த நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவது பற்றியே பிரதானமாக பேசப்படவுள்ளது. அந்த உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாரில்லை. அப்படி அவர்கள் திருத்த முற்படுவார்களேயானால், பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனீவாப் பேச்சுக்கான திகதியை நிர்ணயிப்பதில் குழப்பநிலை தோன்றியுள்ளது.

இம் மாத நடுப்பகுதியில் இந்தப் பேச்சுகள் நடைபெறுமென முதலில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது இம் மாதம் பிற்பகுதியிலாவது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையிலேயே தற்போதைய சூழ்நிலையின் இறுக்கத்தை தணிக்கும் நோக்கில் நோர்வே தூதுவர் வன்னி சென்று புலிகளின் தலைவர்களுடன் பேசுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுகளை எங்கு நடத்துவது என்ற சர்ச்சைக்கு நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தீர்வு கண்ட நிலையில் தற்போதைய சர்ச்சைக்கு ஹான்ஸ் பிரட்ஸ்கார் தீர்வு காண்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

<i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i>
"
"
Reply
#37
<span style='color:green'><b>ஜெனீவாவில் பெப்ரவரி 22 இல் பேச்சு: நோர்வே அறிவிப்பு </b>

ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே பெப்ரவரி 22ஆம் நாள் பேச்சுக்கள் நடைபெறும் என்று நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.


நோர்வே வெளிவிவகார அமைச்சு இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நோர்வே அனுசரணையுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜெனீவாவில் பெப்ரவரி 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன.

ஜெனீவா பேச்சுக்களுக்கு நோர்வே நாட்டை அனுசரணையாளராக இருக்க சிறிலங்கா அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இப்பேச்சுக்கள் நடைபெற உள்ளன.

கடந்த 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இருதரப்பு உயர்நிலையில் நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இது.

"இரு தரப்பினரும் பாதுகாப்பு நிலைமைகளை வலுப்படுத்துவது தொடர்பாக சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டமை நல்ல விடயம்" என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

"அனுசரணையாளர் பணியை முன்னெடுக்கும் நோர்வே நடைமுறைச் சாத்தியமான தீர்வை உருவாக்குவதற்கு உதவி வழங்கும். யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீதான அழுத்தத்தைக் குறைக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளும்".

"இப்பேச்சுக்கள் குறுகியதானது என்றாலும் அமைதிப் பேச்சுக்களை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு மிகவும் முக்கியமான நடவடிக்கை. பேச்சுக்கள் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்." என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

நோர்வே குழுவுக்கு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தலைமை வகிப்பார். அக்குழுவில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கர், விதார் ஹெல்கிசன் ஆகியோர் இடம் பெறுவர்.

இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்டும் பேச்சுக்களில் பங்கேற்பார்.

அமைதி முயற்சிகளில் சுவிஸ் அரசாங்கம் மிகவும் ஆதரவு வழங்கி வருவதால் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்" என்றும் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லண்டனில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் நோர்வே சிறப்புத் தூதுவருமான அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் பேச்சுக்களுக்கான நாள் தொடர்பில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இப்பேச்சுக்களின் முடிவில் நோர்வே அரசாங்கம் சார்பில் பேச்சுக்களுக்கான நாள் அறிவிக்கப்பட்டது.</span>

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#38
<b>ஜெனீவா பேச்சுக்களுக்கு விடுதலைப் புலிகள் சார்பில் 6 பேர் குழு பங்கேற்பு </b>

ஜெனீவாவில் பெப்ரவரி 22 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கத்துடன் நடைபெறும் யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளின் சார்பில் 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு ஊடகத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தொலைபேசியூடாக அளித்த நேர்காணல்:

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான ஜெயம், சமாதான செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன் ஆகியோரும் இக்குழுவிற்கு செயலாளராக அடேல் பாலசிங்கமும் பங்கேற்பார்கள்.

பேச்சுக்களுக்கான நாள் குறித்த விவரம் எமது தலைமைப்பீடத்துக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர் ஜெனீவாவுக்கு எமது குழுவினர் புறப்படுவதற்கான அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படும்.

சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுக்களில் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் தரப்பினர் என்ன நிலைப்பாட்டை பேச்சுவர்த்தையில் முன்வைப்பர் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க இயலாது.

விடுதலைப் புலிகளின் விளக்கமறியலில் உள்ள இரு சிறிலங்கா காவல்துறையினரை விடுதலை செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகள் நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்றார் தயா மாஸ்டர்.

<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
Reply
#39
<b>அரசாங்க பேச்சுக்குழுவிற்கு பயிற்சியளிக்க இந்திய அரசியல் ஆய்வாளர் நாராயணசாமி இன்று கொழும்பு வருகை </b>


ஜெனீவாப் பேச்சுக்களில் பங்கு பற்றும் சிறிலங்கா அரச தரப்புக் குழுவிகருக்கான பயிற்சிகள் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியை வழங்கவுள்ள இந்தியாவின் அரசியல் ஆய்வாளர் நாராயனசாமி இன்று கொழும்பு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுக்களில் பங்கு கொள்ளும் அரசதரப்பு குழுவினருக்கு உளவியல் பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்சியாளர்களின் பட்டியலில் இந்திய அரசியல் ஆய்வாளர் நாராயணசாமி, எஸ்.எஸ்.குணசேகர மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளனார்.

விடுதலைப் புலிகளின் இராஜதந்திர நகர்விற்கு ஈடுகொடுக்க முடியாது வெளிநாட்டு ஆலோசகர்களையும் உள்வாங்கி பேச்சுக்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் சிறிலங்கா அரசு இருக்கும்போது இந்தப் பேச்சுப்களில் விடுதலைப்புலிகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு அரச தரப்பு எந்தளவிற்கு இணங்கும் என்பதில் பலத்த கேள்விகள் எழுவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனார். அரச தரப்புப் பேச்சுக்குழுவிற்கு ஜே.வி.பி. யினால் பயிற்சிகள் வழங்கப்படுவதானது இவ்வாறான கேள்விகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பேச்சுக்களின்போது எடுக்கப்படும் தீர்மானங்களை தன்னுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்தே எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரசுத் தலைவர் பேச்சுக்குழுவிற்கு ஏற்கனவே அறிவித்திருப்பதானது தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் எந்தளவு இதய சுத்தியுடன் சிறிலங்கா அரசு செயற்படுகிறது என்பதை தெளிவாக காட்டுவதாகவும் நோக்கர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
Reply
#40
<b>ஜெனிவாப் பேச்சுகள் கடுமையாக இருக்கும்
சொல்ஹெய்மின் கருத்து இது</b>

ஜெனிவாப்பேச்சுகள் கடுமையாக இருக்கும் என்கிறார் நோர்வே அனுசரணைக் குழுவின் பொறுப்பாளரும் அந்நாட்டு அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம்.
உத்தேச ஜெனிவாப் பேச்சுகள் தொடர்பாக நோர்வே வெளிவிவகார அமைச்சு விடுத்த அறிக்கையிலேயே இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நேற்று எரிக் சொல்ஹெய்ம் அன்டன் பாலசிங்கம் சந்திப்பையடுத்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:
பெப்ரவரி 22 23ஆம் திகதிகளில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுகளுக்கு நோர்வே அனுசரணை வழங்கும்.
இலங்கையில் பிணக்கோடு தொடர்புபட்ட தரப்புகளான இலங்கை அரசும் புலிகளும் பெப்ரவரி 22 23இல் ஜெனிவாவில் நடைபெறும் பேச்சுகளுக்கு அனுசரணை வழங்கும்படி நோர்வேயை கேட்டுள்ளன.
2002 பெப்ரவரி 22 ஆம் திகதி கையெழுத்தான யுத்த நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கத்தை எப்படி மேம்படச்செய்யலாம் என்பது பற்றி இருதரப்பினரும் கலந்துரையாடுவர்.
மூன்றாண்டு காலத்தில் இத்தகைய உயர்மட்டத்தில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்தடவையாகும்.
""மோசமடைந்திருக்கும் பாதுகாப்பு நிலைமையை எவ்வாறு சீர்செய்வது என்பது குறித்து உயர்மட்டத்தில் கலந்துரையாட தரப்புகள் இணங்கியிருப்பது மிகச் சாதகமான அம்சமாகும்'' என்கிறார் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்.

""நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் யுத்த நிறுத்தத்தை அதிலிருந்து விடுவிப்பதற்கான யதார்த்த பூர்வமான தீர்வை தரப்புகள் எட்டுவதற்கு அனுசரணையாளர் என்ற முறையில் நோர்வே தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்''.

""அமைதி முயற்சிகளை மீண்டும் சாதகமான தடத்துக்கு கொண்டுவரும் திசையில் ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க அடியை தரப்புகள் முன்னெடுத்து வைக்கின்றன. அத்தோடு பேச்சுகள் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்''. என்றார் சொல்ஹெய்ம்.
நோர்வே பிரதிநிதிகள் குழுவுக்கு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தலைமை வகிப்பார். அக்குழுவில் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும், விடார் ஹெல்கிசனும் இடம்பெறுவர். இலங்கை கண்காணிப்புக்குழுவின் தலைவர் ஹக்ரூப் ஹொக்லண்டும் பிரசன்னமாகியிருப்பார்.

""அமைதி முயற்சிகளுக்கு எப்போதும் சுவிட்ஸர்லாந்து அளித்துவரும் மிகுந்த ஆதரவுப் போக்குக் காரணமாகவே சந்திப்புக்கு ஜெனிவாவை தரப்புகள் தெரிவுசெய்தன'' என்று மேலும் தெரிவித்தார் அமைச்சர் சொல்ஹெய்ம்.
இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>
"
"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)