![]() |
|
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் (/showthread.php?tid=1194) |
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் - மேகநாதன் - 01-26-2006 <b>மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்: ஐ.நா. செயலாளர் நாயகம் வரவேற்பு </b> இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் வரவேற்றுள்ளார். நியூயோர்க்கில் கோபி அனானின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜர்ரிக் வெளியிட்ட அறிக்கை: நோர்வே அரசாங்கத்தின் முயற்சியால் பெப்ரவரி மத்தியில் இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளன. 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்பு நடத்தப்படுகிற முதலாவது நேரடிப் பேச்சுக்கள் இவை. தற்போது மேற்கொள்ளப்படும் விரைவான அமைதி முயற்சிகள் இலங்கையின் வடக்கு - கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் முழு அளவில் செயற்படுத்தப்படும். இலங்கையின் அமைதித் தீர்வு ஏற்படும் என்ற புதிய நம்பிக்கை அந்நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கோபி அனான் தெரிவித்துள்ளார். <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - மேகநாதன் - 01-26-2006 <b>ஜெனீவாவில் பேச்சுக்களை ஏற்கிறோம்: மகிந்த ராஜபக்ச </b> யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை சுவிஸ் ஜெனீவாவில் நடத்துவதை நாம் ஏற்கிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்சவை சந்தித்த நோர்வே எரிக் சொல்ஹெய்ம், புலிகளின் நிலைப்பாட்டை விளக்கினார். எரிக் சொல்ஹெய்முடனான சந்திப்புக்குப் பின்னர் சர்வதேச செய்தி ஸ்தாபனமான ஏ.பி. நிறுவனத்துக்கு மகிந்த அளித்த நேர்காணலில், பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்காக தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனையை நாம் ஏற்கிறோம் என்றார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய எரிக் சொல்ஹெய்ம், தற்போதைய சிக்கலான நிலைமைகளை இருதரப்பினரும் குறைத்து மதிப்பிடவில்லை என்றும் சுவிஸ் அரசாங்கத்துடனான ஆலோசனைகளுக்குப் பின்னர் பேச்சுகளுக்கான நாள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மகிந்தவுடனான எரிக் சொல்ஹெய்மின் நேற்றைய சந்திப்புக்குப் பின்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அரசாங்கப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது: நோர்வேயின் முயற்சியில் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினர் விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வருவதற்கான எமது நகர்வுகளுக்கு ஆதரவளித்தனர். இலங்கை மக்களுக்கு தற்போது பாரிய நிம்மதி ஏற்பட்டுள்ளது. படுகொலைகள் தற்போது நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது. அமைதி முயற்சிகள் தற்போது சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன. முதல் கட்டப் பேச்சுகளில் யுத்த நிறுத்த அமலாக்கம் தொடர்பாகவும் படுகொலைகளை நிறுத்துதல் தொடர்பாகவும் விவாதிக்கப்படும். பேச்சுக்கான இடத்தையும் நாளையும் சுவிஸ் அரசுடனான ஆலோசனைக்குப் பின்னர் நோர்வே வெளியிடும் என்றார் நிமல சிறிபால டி சில்வா. <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - மேகநாதன் - 01-26-2006 <b>விடுதலைப் புலிகளின் முடிவை ஸ்ரீலங்கா அரசாங்கம் முழுமனத்துடன் வரவேற்கின்றதாம் - நிமால் சிறிபால டி சில்வா </b> சமாதான முன்னெடுப்பு பேச்சுக்களை சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடத்துவதென்ற அரசாங்கத்தின் முன்மொழிவினை தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளதை அரசாங்கம் முழுமனதுடன் வரவேற்கின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தெரிவித்துள்ளார். இதேநேரம் சமாதானப் பேச்சுக்களை உடனடியாக காலதாமதமின்றி தொடங்குவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும். தற்போதைய சூழ்நிலையில் சமாதான முன்னெடுப்புகள் விரைவாக முன்னெடுக்கவேண்டிய தேவை நாட்டுக்கு எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே நேரம் முன்னதாக நோர்வே நாட்டின் அபிவிருத்தி அமைச்சரும், சிறப்புத் தூதவருமான எரிக் சொல்ஹெய்மை அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ சந்தித்துப் பேசியபோதே அவர் ஜெனிவாவில் சமாதான பேச்சகளை அரம்பிக்கலாம் என தெரிவித்ததாகவும் அதனைத் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசு தலைவர் செயலகத்தில நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத்தெரிவித்துள்ளார் <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i> - மேகநாதன் - 01-26-2006 <b>ஜெனீவா பேச்சுக்களைத் தவறவிட்டால் அதன்பிறகு பேச்சுக்கள் சாத்தியமேயில்லை - மத்தியகிழக்கு ஊடகம் </b> நோர்வே ஏற்பாட்டாளரின் அணுசரணையில் ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையை மத்திய கிழக்கின் முதன்மை ஆங்கில இதழான அரப் நியூஸ் வரவேற்று அசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்தி;ற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது வரவேற்ககூடியது ஆனாலும் அது இலகுவில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயமல்ல. கடந்த ஒரு மாதக்காலப்பகுதியில் நூறுக்கும் அதிகமான படைத்தரப்பினரும் அதேநேரம் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திய நிலையிலேயெ தற்சமயம் ஜெனீவா செல்ல இணங்கியுள்ளனர். படையினருக்கு எதிரான தாக்குதல்களை தாம் நடத்தவில்லை மக்கள் படையினரே நடத்துவதாக தமிழிழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் அரசாங்கத்திற்கு தமிழர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.. இவ்வாறான நிலையிலேயே நோர்வேயின் சமாதான தூதர் எரிக்சொல்ஹெய்ம் சமாதான பணியாற்ற வேண்டியுள்ளது. எனவே அவரை யாரும் குற்றம் கூறமுடியாது. ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இனி ஒருதடவை இரண்டு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு உடன்படவைப்பது இயலாத காரியமாகும் எனத் தெரிவித்துள்ள அரப் நியூஸ் ஊடக இதழ் தமிழிழ விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் ஒருமித்த கருத்து ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இரண்டு தரப்பில் எந்த தரப்பும் போர் ஒன்றில் வெற்றிபெறப்போவதில்லை என்றும் மத்திய கிழக்கின் முதன்மை ஆங்கில இதழான அரப் நியூஸ் எதிர்வுகூறியுள்ளது <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>[/b] - மேகநாதன் - 01-26-2006 <b>இரண்டு தரப்பும் பேச்சுக்கு இணங்கியதற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரும் வரவேற்பு!</b> தமிழீழ விடுதலைப் புலிகளும், ஸ்ரீலங்கா அரசாங்கமும், போர்நிறுத்த உடன்பாடு தொடர்பா க பேச்சுகளை நடத்த முன்வந்ததை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு வரவேற்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீலங்காவுக்கான போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், பேச்சுகளை நடத்த தமிழீழ விடுதலைப்புலிகளும், ஸ்ரீ லங்கா அரசாங்கமும் முன்வந்துள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்றே நாம் வலியுறுத்தி வந்தோம். பேச்சுகள் அரம்பிக்காது விடின் மீண்டும் ஓர் போர் வெடிக்கும் என்பது பெரும் உண்மையே. எனினும் தற்போது இரண்டு தரப்பினரும் பேச்சுக்களுக்கு உடன்பட்டிருப்பது சகல தரப்பினருக்கும் மன ஆறுதலை அளிக்கின்றது. எனினும் இதற்கு மேலும் பல்வேறு விடயங்களை இரண்டு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு மிகவும் பொறுமை காக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i> - மேகநாதன் - 01-26-2006 <b>ஜெனீவாவில் பேச்சு: சுவிஸ் அரசாங்கம் வரவேற்பு </b> சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுக்கள் சுவிசின் ஜெனீவாவில் நடத்தப்படுவதை சுவிஸ் அரசாங்கம் வரவேற்றுள்ளது. சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தப் பேச்சுக்களை சுவிசில் நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த முடிவை சுவிஸ் அரசாங்கம் வரவேற்கிறது. தற்போதைய பிரச்சனைகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோர்வே மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தப் பேச்சுக்கள் விரைவில் நடைபெறவும் சுவிஸ் அரசாங்கம் முழுமையான ஆதரவளிக்கும். சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் கடந்த 2 மாதங்களில் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அதிகரித்து நிலைமை மோசமடைந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதின் மூலம் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் முறிவடைந்துள்ள அமைதிப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படக் கூடும். நோர்வே அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகளை சுவிஸ் அரசாங்கம் ஆதரிக்கிறது. ஆதலால்தான் சுவிஸ் நாட்டில் பேச்சுகளை நடத்தலாம் என்று நோர்வே தானாகவே அறிவித்தது. அமைதி முயற்சிகளில் சுவிஸ் அரசாங்கம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவும் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் இலங்கையில் மேற்கொள்ளப்படவும் இது நல்ல சந்தர்ப்பம் என்றும் சுவிஸ் அரசாங்கத்தினது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - மேகநாதன் - 01-26-2006 <b>மீண்டும் பேச்சுக்கள்: அமெரிக்கா வரவேற்பு </b> இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்குவதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் பேச்சாளர் சென் மக்கொர்மக் வாசிங்டனில் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் பேச்சுக்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரவேற்கிறது. அமைதி முயற்சிகளில் சாதகமான முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை நாம் பாராட்டுகிறோம். அமைதி முயற்சிகளில் நோர்வே மேற்கொள்ளும் அனுசரணைப் பணிகளுக்கு நாம் முழுமையாக ஆதரவளிக்கிறோம். அமெரிக்க பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன், கடந்த சனவரி 23 ஆம் நாள் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுக்கு திரும்பினால்தான் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் அரசியல் ஆயுதமாக வன்முறைகளையும் பயங்கரவாதச் செயற்பாடுகளையும் விடுதலைப் புலிகள் மேற்கொள்வதை கைவிடச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம்இ நோர்வே, ஜப்பான் ஆகியவை நிரந்தர அமைதி உருவாக பேச்சு மேசைக்கு இருதரப்பினரும் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. இலங்கை அமைதி முயற்சிகளில் அமெரிக்கா முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. ஆத்திரமூட்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் பொறுமை காத்திருந்த சிறிலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா பாராட்டுகிறது. அமைதி முயற்சிகளை முன்னெடுக்கும் அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு நாம் ஆதரவளிக்கிறோம். இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டை நாம் ஆதரிக்கிறோம். சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வன்முறைகளை உடனே முடிவுக்குக் கொண்டு வந்து யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகளை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சனை முடிவுக்கு வருவதைப் பார்க்கவே இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் விரும்புகிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அமைதியை உருவாக்கவும் அந்த நாட்டின் நிலைத்தன்மை நீடிக்கவும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. <b><i> தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b> - Mathuran - 01-26-2006 <img src='http://img513.imageshack.us/img513/9656/tamil2804sh.jpg' border='0' alt='user posted image'> <b>ஏரிக்சூல்கைம் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை வந்தடைந்த பொழுது அவரின் சமாதானக்குழு நம்பிக்கை இழந்தவர்களாய் இருந்தார்கள். பின்னர் ஒருமணி நேரம் கடந்த நிலையில் இலங்கயில் புதிய யுத்தத்திற்கான பயங்கரம் நீங்கியது.</b> என முதல்பக்க செய்தியாக்கியது டாக்ப்லாட.நு என்னும் நோர்வே இணைய நாளிதழ் ஒன்று. படம்: டாக்ப்லாடெ---> நன்றி - DV THAMILAN - 01-26-2006 சிறீலங்கா அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற இருப்பதையிட்டு சுவிஸர்லாந்து மகிழ்வடைவதுடன் இரண்டு தரப்பினரும் ஜெனிவாவில் பேசுவதாக முடிவெடுத்ததையிட்டு அவர்களை வரவேற்பதாகவும் சுவிஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை நோர்வேயின் அனுசரணைப்பணிகளை வெகுவாக பராட்டியுள்ள சுவிஸர்லாந்து அரசாங்கம், நோர்வே அனுசரணையின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்பமாகின்றமைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதேவேளை சுவிஸ் அரசு இலங்கை மக்களுக்கு சுபீட்சமான வாழ்வு கிடைக்க முழுமையாக ஒத்துழைக்கும் எனவும், அதேவேளை மனித உரிமைகள், அபிவிருத்திகள் என்பவற்றுக்கு உதவ தாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. - DV THAMILAN - 01-26-2006 பேச்சுவார்த்தையின் முன் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும், நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பில் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கும், சுவிற்சர்லாந்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த வகையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளை நீக்க புலிகள் இயக்கம் தன்னாலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது என்றே கூறலாம். அதாவது, விடுதலைப் புலிகள் இயக்கம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டதினால் பேச்சுக்கள் ஆரம்ப மாவதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதெனலாம். ஆனால், நேற்றைய சந்திப்பில் விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்பதாகவும், பேச்சுவார்த்தையின் போதும் ஆட்சியாளர்கள் கைக்கொள்ள வேண்டியதான சில நடவடிக்கைகளே பேச்சுவார்த்தையைத் தீர்மானிக்கும் என்பதை தெளிவாகவே சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது, தமிழர் தாயகத்தில் சிறிலங்கா ஆயுதப் படைத்தரப்பாலும், ஒட்டுக்குழுக்களாலும் நிகழ்த்தப்படும் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பது இதில் முதன்மையானதாகும். வேறுவிதமாகக் கூறுவதானால், விடுதலைப் புலிகள் இயக்கம் விட்டுக்கொடுப்புடன் பேச்சுவார்த்தைகளை சுவிஸில் நடத்த முன்வந்துள்ளமைக்கே தமிழ் மக்கள் மீதான அராஜகம் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும். மறுவளமாகக் கூறுவதானால், தமிழர் மீதான படுகொலைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்பதே புலிகளின் நிலைப்பாடாகும். அதனை அரசாங்கத் தரப்பு உடனடியாக - அதாவது விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்து அரசாங்கத் தரப்புக்கு எரிக் சூல்ஹெய்ம் தெரிவிக்கும் வேளையில் இருந்து உடனடியாக தெளிவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படாதுவிட்டால் சமாதானப் பேச்சு வார்த்தைகள் என்பது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குரியதே. அதாவது, தமிழர் தாயகத்தில் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்பது எரிக் சூல்ஹெய்ம் மூலமாகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டதொன்றாகியுள்ளது. இதனைத் தடுக்க மகிந்த ராஜபக்ஷ உறுதியுடன் மேற்கொள்ளாத வரை சமாதானப் பேச்சுக்கள் சாத்தியமாகமாட்டாது. இதற்கு அடுத்ததாக, சுவிற்ஸசர்லாந்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படினும், பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்த உடன்பாட்டின் விதிகள் அமுலாக்கமே பேசப்படும் விடயமாக இருக்கும் என்பதையும் விடுதலைப்புலிகள் வலியுறுத்தியுள்ளனர். அதாவது, போர் நிறுத்தத்தை அமுலாக்க அரசாங்கம் தவறியமையே இன்றைய நிலைக்குக் காரணம் என்பது புலிகளின் உறுதியான நிலைப்பாடாகும். ஆனால், போர் நிறுத்த உடன்பாடு சீராக அமுல்படுத்தப்படுதல் வேண்டும் என்பது விடுதலைப் புலிகளால் தற்பொழுதுதான் வலியுறுத்தப்படும் ஒன்றல்ல. யுத்த நிறுத்த உடன்பாடு மிகவும் நெருக்கடியானதொரு கட்டத்தை அடைந்ததற்கு யுத்தநிறுத்த உடன்பாட்டு அமுலாக்கம் அரசால் சீராகச் செய்யப்படாமையே காரணம் என்பது உலகின் பொதுவான அபிப்பிராயமாகும். அதிலும் குறிப்பாக, போர் நிறுத்த உடன்பாட்டு விதிகளின்படி ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு, அவர்கள் வடக்கு-கிழக்கிற்கு வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற விதி அமுல் செய்யப்படாமையே யுத்த நிறுத்த உடன்பாடு கேள்விக்குறியாகியமைக்குக் காரணம் என்பது வெளிப்படையானது. இதனைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து மேற்குலக நாடுகள் வரை உணர்ந்திருந்தன. இதன் காரணமாகவே அவை ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் எனவும், அவர்களை வடக்கு-கிழக்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வற்புறுத்தியிருந்தன. அதாவது, அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன. ஆகையினால், விடுதலைப்புலிகளுக்கும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை அரசாங் கத்தின் நடவடிக்கைகளே தீர்மானிப்பவையாக இருக்கும். ஒரு புறத்தில் இனப்படுகொலையை நடத்திக்கொண்டும் இன்னொரு புறத்தில் யுத்த நிறுத்த உடன்பாட்டை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கையில் பேச்சு வார்த்தைகள் சாத்தியமாகப்போவதில்லை. அதிலும் குறிப்பாக பேச்சுவார்த்தை என்பது இனப்படுகொலைகள் நிறுத்தப்படுவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனின் மிகையாகாது. நன்றி: ஈழநாதம் http://www.tamilnaatham.com/editorial/eela...2006_JAN/26.htm - மேகநாதன் - 01-27-2006 <b>அமைதிப் பேச்சுக்கள்: இந்தியத் தூதுவர் வரவேற்பு </b> சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளதை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் வரவேற்றுள்ளார். கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்தியாவின் 57 ஆம் குடியரசு நாள் நிகழ்வில் அவர் பேசியதாவது: அனைத்து சமூகத்தவரும் ஏற்கக் கூடிய தீர்வைக் காண வேண்டியது அவசியம். வடக்கு கிழக்குப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில் தீர்வு காண முடியாது. தற்போது பிரச்சனைக்குத் தீர்வு இருதரப்பினரும் இணங்கியிருப்பது புதிய அத்தியாயம். இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு, ஐக்கியத்துக்கு ஆபத்து ஏற்படாத வகையிலான தீர்வைக் காண இந்தியா ஒத்துழைக்கும் என்றார் அவர். <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - மேகநாதன் - 01-27-2006 <b>ஜெனீவா பேச்சுக்கள்: தமிழ்க் கட்சிகள் வரவேற்பு </b> லங்கை யுத்த நிறுத்த அமுலாக்கம் தொடர்பான ஜெனீவா பேச்சுக்களை தமிழ்க் கட்சிகள் வரவேற்றுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா: நோர்வே தலைநகரில் ஓஸ்லோவில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் விட்டுக்கொடுத்து அரசாங்கத்தின் யோசனையை ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்பேச்சுகள் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் தொடங்கப்பட வேண்டும். பேச்சுக்களுக்கு முன்பாக தமிழர் தாயகத்தில் அனைத்து வடிவிலான படுகொலைகளும் நிறுத்தப்பட்டு இயல்புநிலை உருவாக்கப்பட வேண்டும். அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இடம்பெயர்ந்த மீளக் குடியேற உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். மீனவர்களும் விவசாயிகளும் இன்னமும் தங்களது தொழிலுக்குத் திரும்ப இயலாத நிலை உள்ளது. தமிழர் தாயகத்தில் இராணுவ ஒடுக்குமுறைகள் நீடித்து வருகின்றன. 15 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிமுகாம்களில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் இந்த உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்து 1.8-இன் கீழ் அனைத்து துணை ஆயுதக்குழுக்களினது ஆயுதங்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். புலனாய்வுத் துறையினரது செயற்பாடுகள் கைவிடப்பட வேண்டும் என்றார் அவர். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முத்து சிவலிங்கம்: பல ஆண்டுகளாக அமைதிப் பேச்சுகள் மீளத் தொடங்குமா என்ற கேள்வி இருந்தது. இந்த அசாதாரண நிலை முடிவுக்கு வந்துள்ளது. இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம் இது. அனைத்துக் கட்சிகளைப் போலவே இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம். அமைதிப் பேச்சுகளுக்கு முன்னதாக அனைத்துப் படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், கொள்ளைச் சம்பவங்கள் நிறுத்தபட வேண்டியது அவசியம் என்றார் அவர். <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - மேகநாதன் - 01-27-2006 <b>அடுத்தமாதம் 16ஆம்17ம் திகதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் - அமைச்சர் பிரியதர்சன யாப்பா</b> ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் பெப்ரவரி 16ம், 17ம் நாட்களில் ஜெனீவாவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்று அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பில் பேச்சுவார்த்தை குழு அறிவிக்கப்பட்டு;ள்ளது. அரசுதரப்பில் இதில் பங்கேற்போரின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இணக்கப்பாடு தொடர்பில் மகிநத ராஜபக்ச விரைவில் சர்வகட்சி மாநாட்டை கூட்டு அறிவிப்பார் எனவும் அவர் மேலும் அது குறித்துப் பேசுகையில் தெரிவித்தாக் <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i> - மேகநாதன் - 01-28-2006 <b>ஜெனீவா பேச்சு: ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு </b> இலங்கை யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கப் பேச்சுகள் ஜெனீவாவில் நடைபெற உள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. சிறிலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி ஜுலியன் வில்சன் கொழும்பில் வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சுவிசில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக பேச்சுகளை நடத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கிறது. இலங்கை இனப்பிரச்சனையின் தீர்வுக்காக நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நீண்டகாலம் தொடர்ந்து முன் முயற்சிகளை எடுத்து வருவதை நாம் பாராட்டுகிறோம். நோர்வேயின் அனுசரணைப் பணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழு ஆதரவளிக்கிறது. இலங்கையின் நிலமைகள் சீரடையவும் இனப்பிரச்சனைக்கு அமைதியான தீர்வு ஏற்படவும் இந்தப் பேச்சுகள் உதவும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை கொள்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது <i><b> தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> - மேகநாதன் - 01-28-2006 <b>யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுகள்: இங்கிலாந்து மகிழ்ச்சி </b> தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையே ஜெனீவாவில் யுத்த நிறுத்த அமுலாக்கப் பேச்சுகள் நடைபெறுவதை இங்கிலாந்து அரசாங்கம் வரவேற்றுள்ளது. இங்கிலாந்தின் வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அமைச்சு அலுவலகத்தின் கிம் ஹெளவெல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஜெனீவாவில் பெப்ரவரி மாதம் சந்தித்துப் பேச உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்கள் நடத்த உள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இது மிக முக்கியமான நடவடிக்கை. இலங்கை மக்கள் அமைதிக்கான சந்தர்ப்பத்தை விரும்புகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செயற்படுத்தி வன்முறைகளை முடிவுக்குக்கொண்டு வருவதன் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான சரியான சூழலை உருவாக்க முடியும். இது தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டு வரும் அனுசரணைப் பணிகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தமது முழுமையான ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது <b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b> - மேகநாதன் - 01-28-2006 <b>நம்பிக்கைச் சூழலை ஏற்படுத்த பல சுற்றுக்கள் பேச வேண்டும். </b> போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி ஒரு நம்பிக்கையான சூழலை ஏற்படுத்துவதானால் பல சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிச்சொ ல்ஹெய்ம் அவர்கள். தமிழீழ விடுதலைப்புலிகளுடனும், சிறிலங்கா அரசுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியாவிற்கு விளக்கமளிக்கும் முகமாக புதுடெல்லி சென்றிருந்த சொல்ஹெய்ம் அவர்கள் நேற்று செய்தியாளர்ளிடம் மேற்படி கருத்தைத் தெரிவித்தார். பொருளாதார விவகாரங்களோடு சுனாமி மீள் கட்டமைப்பு குறித்த விடயங்களோ பேச்சுவார்த்தைப் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த சொல்ஹெய்ம் இரு தரப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதானால் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. என்றார். அதே சமயம் போர் நிறுத்தக் கண்கணிப்புக் குழு வடக்குக் கிழக்கில் தமது பணிகளைச் செய்வதற்கு அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமே உரியது. இதனை அண்மையில் இரு தரப்பினரை யும் சந்தித்த போது வலியுறுத்தியுள்ளேன் என்றார். ஜெனீவா பேச்சு குறித்து கருத்துத் தெரிவித்த சொல்ஹெய்ம் எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் அல்லது இறுதிப் பகுதியில் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்படுமென்றார். இதேவேளை ஒன்றுபட்ட இ லங்கைக்குள் சகல இன மக்களும் சமத்துவமாக வாழ்வதற்கான தீர்வுக்கு இந்தியா தமது ஆதரவை வழங்கும் என சொல்ஹெய்மிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. <i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i> - மேகநாதன் - 01-28-2006 <b>தனது இலங்கை பயணம் குறித்து இந்திய அதிகாரிகளிற்கு சொல்ஹெய்ம் விளக்கம் </b> ஸ்ரீலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும், பேச்சுவார்த்தைகளை மீளவும் தொடங்க முன்வந்துள்ளமை குறித்து நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், ஸ்ரீலங்காவின் சமாதான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் மற்றும், இந்திய தேசிய பாதுகாப்பு அலோசகர் எம். நூராயணன் ஆகியோரிடம் விளக்கம் அளித்துள்ளார். புதுடில்லியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்புகளை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்த வெளியிட்ட எரிக் சொல்ஹெய்ம், இலங்கையின் அனைத்துத்தர மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து இறுதித்திர்வு ஒன்று காணப்படவெண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அமைதி முயற்சிகள் குறித்து இந்தியா தன்னிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போர் மூலம் ஒருபோதும் இனப்பிரச்சினைக்குத் திர்வுகாண முடியாது என்று இரண்டு தரப்பினரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் ஜெனிவாவில் பெப்ரவரி மாத மத்தியிலே பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். <i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i> - மேகநாதன் - 01-28-2006 [size=18]<b>ஜெனீவா செல்வதற்கு முன்னர் செய்ய வேண்டியது....?</b> பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்து முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகள் இயக்கமும் நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் தீவிர முயற்சிகளையடுத்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேசுவதற்கு இணங்கியிருக்கின்றன. கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த சொல்ஹெய்ம், சரியான திசையில் ஒரு அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று திருப்தி தெரிவித்திருக்கிறார். ஜெனீவாவில் பேசுவதற்கு விடுதலைப் புலிகள் தெரிவித்த இணக்கத்தை வரவேற்றிருக்கும் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சமாதானத்தைக் காண்பதற்கு அரசாங்கம் அதனால் இயன்ற சகலதையும் நிச்சயம் செய்யும் என்று அறிவித்திருக்கிறார். பெப்ரவரி நடுப்பகுதியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் இப் பேச்சுவார்த்தை 2003 ஏப்ரல் மாதம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பிறகு கொழும்பு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான முதல் நேரடிச் சந்திப்பாக அமையப் போகின்றது. ஆசிய நாடொன்றிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி ராஜபக்ஷ அடியெடுத்துக் கொடுத்த நிலைப்பாட்டைஅவரை விடவும் கூடுதல் முனைப்புடன் வலியுறுத் தி வந்த அவரது நேச அணிகளான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யும் ஜாதிக ஹெல உறுமயவும் இப்போது அவரது மன மாற்றத்தைகண்டிக்காமல் மௌனமாக இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவ்விரு கட்சிகளையும் தன்னுடன் ஒத்துழைக்குமாறு வழிக்குக் கொண்டு வருவதில் தற்போதைக்குஓரளவுக்கு வெற்றி கண்டிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் ,சமாதான முயற்சிகளுக்கு எதிராக தென்னிலங்கையின் முக்கிய அரசியல் சக்திகள் கிளம்பாதிருப்பதை ஜனாதிபதி உறுதி செய்திருக்கிறார் எனலாம். போர் நிறுத்த உடன்படிக்கை என்று ஒன்று உண்மையில் நடைமுறையில் இருக்கிறதா என்று வேறு யாருமல்ல, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரே கேள்வி கேட்கின்ற அளவுக்கு கடந்த சில வாரங்களாக வடக்கு, கிழக்கில் தீவிரமடைந்திருந்த வன்முறைகள் முற்றுமுழுதான போரை மூள வைத்து விடுமோ என்று மக்கள் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில் ,ஜெனீவா பேச்சுவார்த்தைக்கான இணக்கம் ஓரளவுமன ஆறுதலைத் தருகின்றது என்றாலும், இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து மிகையான நம்பிக்கை எதையும் வளர்த்துக் கொள்ள முடியாது என்ற யதார்த்தம் எம் முன்னால் விரிந்து கிடக்கின்றது. `இவை சமாதானப் பேச்சுவார்த்தைகள் அல்ல. போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளே' என்று சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றார். மு ட்டுக் கட்டை நிலையைத் தகர்ப்பதற்காகவே வடக்கு, கிழக்கின் தற்போதைய மோசமான நிலைவரங்களுக்கு மத்தியிலும் கூட, ஜெனீவாவில் பேசுவதற்கான ஜனாதிபதியின் விட்டுக் கொடுப்பை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டார்கள் என்று அவர்களின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கூறியிருக்கிறார். உண்மையில், அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான எந்தவொரு மார்க்கமும் இல்லாத ஒரு நிலையில், சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நோர்வே மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவே தற்போதைய இணக்கப்பாடு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த உடன்படிக்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் மாத்திரமே ஜெனீவாவில் ஆராயப்பட முடியும் என்பது தெட்டத் தெளிவானது. அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அனுசரணையாளர்களான நோர்வேத் தரப்பினர் இறங்கப் போகும் நிலையில், அடுத்துவரும் நாட்களில் வடக்கு, கிழக்கின் தற்போதைய வன்முறை நிகழ்வுப் போக்குகளில் தணிவு எற்பட்டால் மாத்திரமே ஜெனீவா சந்திப்பினால் ஏதாவது உருப்படியான விளைபயனைக் கொண்டுவர முடியும் என்பதை சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். பேச்சுவார்த்தைக்கான இடம் குறித்து இணக்கம் காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட தினத்தில் கூட வடக்கு, கிழக்கில் அப்பாவிக் குடிமக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படக் கூடிய சூழ்நிலை தோன்றாதிருப்பதை உறுதி செய்வதற்கான கைங்கரியங்களில் ஈடுபடுகின்ற சக்திகளும் இந்த குடிமக்கள் கொலையின் பின்னணியில் இருக்கின்றன. இந்நிலையில், ராய்ட்டர் செய்திச் சேவைக்கு சொல்ஹெய்ம் நேற்று வியாழக்கிழமை அளித்திருக்கும் பேட்டியொன்றில் தெரிவித்த கருத்து சகலரினதும் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், `தற்போதைய சமாதானச் செயன்முறைகளை சீர்குலைப்பதற்கு சில பிரகிருதிகள் முயற்சிக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது. தற்போதைய அனுகூலமான முயற்சிகளை மலினப்படுத்துவதற்கு வன்முறைகளைத் தூண்டுவதில் நாட்டம் கொண்ட சக்திகள் இருக்கின்றன. வன்முறைகளை நிறுத்துவதற்கு இருதரப்பினரும் தங்களாலான சகல முயற்சிகளையும் செய்ய வேண்டும். சமாதானச் செயன் முறைகளை தடம்புரட்டி விடுவதற்கு சீர்குலைவுச் சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று சொல்ஹெய்ம் கூறியிருக்கிறார். ஜெனீவாவில் சந்திப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்ற போதிலும், தற்போதைய வன்முறைகள் அநேகமாக தொடரவே செய்யுமென்று மக்கள் சர்வசாதாரணமாகப் பேசுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையேயான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு மார்க்கம் எதுவும் இல்லாத விபரீதத்தின் தவிர்க்க முடியாத விளைவே இது. வடக்கு, கிழக்கில் வன்முறைகள் நிறுத்தப்படாதவரை - குறிப்பாக, அப்பாவிக் குடிமக்கள் படுகொலை செய்யப்படும் கொடூரமான சம்பவங்களை நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாதவரை - சொல்ஹெய்மின் வருகையும் அவர் கொழும்பிலும் கிளிநொச்சியிலும் நடத்திய பேச்சுகளும் ஏற்படுத்திய சொற்ப நம்பிக்கை எந்தவித பாயனுமற்றதாகவே முடியும். பேச்சுவார்த்தைக்காக ஜெனீவா செல்வதற்கு முன்னதாக செய்யப்பட வேண்டியது எது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவையில்லை <i><b>ஆசிரியர் தலையங்கம்- தினக்குரல் (27/01/06)</b></i> [url] ]http://www.thinakural.com/New%20web%20site...orial.htm[/url] - மேகநாதன் - 01-28-2006 [size=18]<b>நிகழ்வுகள் தரப்போகும் விடைகள் </b> ""அமைதிப் பேச்சு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதில் தமக்குள்ள பற்றுறுதியை திடசங்கற்பத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயலில் வெளிக்காட்டி உறுதிப்படுத்து வதற்கு இது ஒரு பரீட்சைக் காலம். அதில் அவர் தேறுவாரா என்பது அடுத்துவரும் நாள்களிலும் வாரங்களிலும் தெளிவாகி விடும்.'' என்று நேற்று இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். அதை எழுதிய மை காய்வதற்குள் பரீட்சையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோட்டை விடப்போகின்றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. மட்டக்களப்பு வடமுனையில் விடுதலைப் புலிகள் மீது நடத் தப்பட்ட ஆர்.பி.ஜி. தாக்குதலும், அதில் மேஜர் கபிலன் என்ற போராளி கொல்லப்பட்டமையும் பரீட்சைக் களத்தை காலத்தை ஆரம்ப தினங்களிலேயே கோட்டை விட ஜனாதிபதியும் அவ ரது அரசினரும் தயாராகிவிட்டனர் என்ற எண்ணத்தையே தமிழர் தரப்புக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. ""இந்தத் தாக்குதல் சம்பவம் விடுதலைப் புலிகளின் கட் டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடந்துள்ளது. எங்களுக்கும் அதற் கும் தொடர்பு ஏதுமில்லை.'' என்று இராணுவப் பேச்சாளர் கூறும் விட்டேத்தியான பதிலைத் தெரிவித்தபடி, இத்தகைய அசம்பாவிதங்கள் தொடர அரசுத் தரப்பு அனுமதிக்குமானால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மட்டக்களப்பு வடமுனையில் நடைபெற்ற தாக்குதல் போல அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலும் இத்தகைய தாக்குதல்கள் அரசுப் படை களுக்கு எதிராக நடக்கவும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் அவை நடப்பதால் அதற்கும் தமக்கும், தொடர்பு ஏதுமில்லை என்று புலிகள் தரப்பு "ஸிம்பிளாக' கூறி விலக்கவும் அவை வழிகாட் டும் என்பதை அரசுத் தலைமை புரிந்துகெள்ளவேண்டும். கடந்த புதனன்று எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான நோர்வே அனுசரணைக் குழுவினரைத் தலைவர் பிரபாகரன் சந்தித்த பின்னர், அவர் சார்பில் புலிகளின் மதியுரைஞர் அன் ரன் பாலசிங்கம் ஓர் அறிவிப்பை விடுத்தார். ""அரச படைகளுக்கு எதிரான சகல வன்செயல்களையும் புலிகள் இயக்கம் நிறுத்துவதாகத் தலைவர் வே.பிரபாகரன் நோர்வே அனுசரணைத் தரப்புக்கும் அதன் ஊடாக இலங்கை அரசுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றார். '' என்று பாலசிங் கம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பகிரங்கமாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான கணத்திலிருந்து அந்த வாக்குறுதியில் புலிகள் அமைப்பு உறுதியாக இருப்பதைக் களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான உத்தரவுகள் தலைவர் பிரபா கரனிடமிருந்து பிராந்தியத் தளபதிகளுக்கு பறந்ததை அடுத்து அந்த உறுதிமொழி புலிகள் தரப்பினால் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால், புலிகளின் அந்த அறிவிப்புக்கு ஏற்ப தனது அர சுப் பக்கத்திலிருந்தும் வன்முறைகள் இடம்பெறாமல் தடுப்ப தற்கு ஜனாதிபதியும் அவரது அரசும் தயாரா என்பதே கேள்வி. மட்டு. வடமுனைத் தாக்குதல் இது விடயத்தில் அரசின் நிலைப்பாடு குறித்துப் பல்வேறு சந்தேகங்களைத் தமிழர் தரப் புக்கு எழுப்பியிருக்கின்றது. வன்முறைகளை நிறுத்துவதில் புலிகள் உறுதியான முடிவு ஒன்றை எடுத்துள்ளனர் என்ற அறிவிப்பு புலிகள் தரப்பிலிருந்து வெளியாகி 48 மணி நேரம் கடந்த பின்னரும், அத்தகைய முடிவை வரவேற்று அதேபோன்ற தீர்மானத்தை ஜனாதிபதியும் எடுத் துத் தமது படைகளுக்கு கடும் உத்தரவு விடுத்திருக்கிறார் என்ற பிரகடனம் அரசுத் தரப்பிலிருந்து வரவில்லை. அத்தகைய அறி விப்பு நேற்று மாலையே அரசுத்தரப்பிலிருந்து வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டது. அப்படி அறிவிப்பு வெளியானால் மட்டும் போதாது. அந்த அறிவிப்பில் உள்ள நிலைப்பாடு களத்தில் முழு அளவில் நடை முறைப்படுத்தப்படவும் வேண்டும். இத்தகைய முடிவு ஒன்றை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதில் விடுதலைப் புலிகளுக்கு உள்ள வலிமை அரசுத் தலைமைக்கு உண்டா என்பதும் சந்தேகத்திற்குரியதே. வன்முறைகளை முழு அளவில் நிறுத்துவதன் மூலம் அமை திப் பேச்சுகளை முன்னெடுப்பதற்கான புறச்சூழ் நிலையை உருவாக்குவதில் அரசு,புலிகள் ஆகிய இரண்டு தரப்புக்குமே பொறுப்பு கடப்பாடு உண்டு. அதற்கு, முதலில் இரு தரப்புத் தலைவர்களும் இதய சுத்தி யாக முழு மனதுடன் அத்தகைய தீர்மானத்துக்கு வர வேண் டும். அப்படி வந்துவிட்டாலும் அந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்துவதில் இரு தலைவர்களுக்கும் உள்ள இயலும் தன்மை வேறுபாடானது என்பதும் கவனிக்கத்தக்கது. புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை தனது இசைவின்றி இயக்கத்தில் அணுவும் அசையாது என்ற கடுமையான கட்டுப்பாட்டு அதிகாரத்தை வைத்திருப்பவர்; பேணுப வர். எனவே, தீர்மானத்தை எடுத்தார், உறுதியாக நடைமுறைப்படுத்துகிறார் என்பதை செயலில் அவரால் முழு அளவில் காட்ட முடிகிறது. ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்த வரை அரச படைகளின் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் உறுதியான மனப்பாங்கு இதயசுத்தி அவருக்கு உண்டா என்பது முதல் கேள்வி. அத்தகைய இதய சுத்தியான தீர்மானம் அவரிடம் இருந்தா லும் நாட்டின் முப்படைகள் மற்றும் பொலீஸின் தளகர்த்த ராக அவர் இருந்தாலும் அரச படைகளினதும், அவற்றின் புல னாய்வுத் துறைகளினதும், அந்தப் புலனாய்வுத்துறையின் வழி காட்டல்களில் இயங்குவதாகக் கருதப்படும் ஒட்டுப்படைகளி னதும் வன்முறை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, ஒடுக்கி தனது கைக்குள் அடக்கிவைத்திருக்கும் வலிமை அவருக்கு உண்டா என்பது இரண்டாவது கேள்வி. அடுத்துவரும் நாள்களில் களத்தில் இடம்பெறக் கூடிய சம்பவங்கள் இந்த இரண்டு கேள்விகளுக்கும் தீர்க்கமான பதி லைத் தரக்கூடும். <i><b>ஆசிரியர் தலையங்கம்-உதயன் (28/01/06)</b></i> - மேகநாதன் - 01-29-2006 <b>ஜெனீவா பேச்சு: சிறிலங்கா அரசாங்க குழுவில் 5 பேர்? </b> [சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:01 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி] ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் 5 பேர் கொண்ட குழு அறிவிக்கப்படக் கூடும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலோசகர் ஜயந்த தனபால, சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ஜோன் குணரத்ன ஆகியோர் இடம்பெறக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றிய அறிவிப்பு வெளியான பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படக் கூடும். அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் பற்றி நோர்வே அரசாங்கம், சுவிற்சர்லாந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்னர் பேச்சுவார்த்தைக்கான நாள் நிர்ணயிக்கப்படும் என அரசாங்கப் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். பெப்ரவரி மாதம் 14 ஆம் நாளுக்கும் 21 ஆம் நாளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் விடுதலைப் புலிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 3 நாட்களுக்கு இந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே சரியானதாக இருக்கும் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட எந்த அரசியல்வாதியும் இந்த அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் எரிக் சொல்ஹெய்மிடம் விடுதலைப் புலிகள் கூறியிருப்பதாகவும் நோர்வே தூதரகத்தை மேற்கோள் காட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. <i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i> |