புண்படு விழிகொண்டு
மான் விழியென்றார்
தோலும் தசையும்
எலும்பும் நிறை முகமதை
சந்திர வதனம் என்றார்
நகம் நீண்டு ஊத்தை ஆடங்கும்
விரல் கொண்டு காந்தல் என்றார்
பெண்ணென்றால் ரோஜாவாம் முள்ளாம்
மூடர்கள் கதை சொல்வர்
அவளும் மனிதன் என்று
நாம் சொல்கிறோம்.....!
மனிதன் என்றால்
எதுவும் ஆகும்
படை கொண்டு நாடு காக்கலாம்
விமானமோட்டி தேசங்கள் பறக்கலாம்
பல்கலையில் பல பட்டங்கள் ஈட்டலாம்
குசினிதனில் நல்ல சமையலும் செய்யலாம்
ஆனால்....
பெண் என்று
இவை செய்தால்
ஏதோ அதிசயம் செய்வதாய்
ஏன் நினைப்பு....?????!
அப்போ
பெண்கள் மானிடர் அல்லவோ....????
ஆய்வுச் சாலையில் குரங்கொன்று
இவை செய்தால் அதிசயம் தான்
எம்மோடு கூடிவாழும் சகோதரி
இவை செய்தால்
அது அவள் திறமையல்லோ....?!
ஏன் அதற்குள் சாயங்கள் பூசி
விடுதலைப் பெண்...விழித்த பெண் என்று
இன்னும் சொற்கள் கொண்டு
அவளை வேறு காட்டி நிற்கின்றீர்....?!
இப்போ புரிகிறதா
பெண்ணை மனிதனாய்க் காட்டாமல்
இன்னும் அதிசயப் பிறவியாய்
சித்தரிப்பது யாரென்று....!
மனிதன்
சமூக விலங்கு
அதற்குள்
ஆணும் பெண்ணும்
அங்கமாய் அடக்கி நின்று
ஒத்தகருத்தால்
நாகரிகம் என்ற
மனிதனை மனிதனாய்
வாழச் சொல்லும் வழி பற்றி
வாழ்வது சிறப்பு....!
நாம் அது சொல்ல
நீவீர் எம்மில் குறை காண்பீர்
அது ஒன்றும் பெரிதல்ல
அநாகரிகமே உமக்கெல்லாம்
விடுதலைக்கு வழிகாட்டும் போது....!
பாவம்....
திறமையால் வெற்றி காணும்
நம் சகோதரிகள் முயற்சிதனை
மாயச் சொற்களால்
மலினப்படுத்தாதீர்....!
அது ஒன்றும் செய்யும்
அவளின் ஆளுமை பெருக்கி
அவள் மனிதனாய்
நாகரிகம் காத்து
தலை நிமிர்ந்து நிற்க....!
ஆண் அவள் துணை
ஒரு போதும் எதிரியல்ல....!
பெண்ணெப்பதற்காய் விழுந்தடிக்கும்
அர்ப்பங்கள் அல்ல நாம்.....!
மாயையால் அவள் மனம் கட்டி
மாஜாயாலம் காட்டுவதை
களைவதே நம் நோக்கம்....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>