![]() |
|
இளம்பெண் தனியே வாழலாமா ? ? ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இளம்பெண் தனியே வாழலாமா ? ? ? (/showthread.php?tid=7619) |
இளம்பெண் தனியே வாழலாம - shanmuhi - 01-07-2004 <b>திருமணம் முடிக்காத இளம்பெண் பெற்றேரை விட்டு தனியாக இப்புலம்பெயர் மண்ணில் வாழலாமா ? படிப்பு சம்பந்தமாக அல்லது தொழில் நிமித்தமாக அல்லது பெற்றோருடன் ஏற்படுகின்ற பிரச்சனையாகவும் இருக்கலாம். இப்படியான நிகழ்வுகளை எம் தமிழ் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா ? இதனால் இளம்பெண்ணுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்பதை சற்று ஆராய்வோமா ? ? ?</b> - aathipan - 01-07-2004 எந்த தவறும் செய்யாகவரை / தவறு இடம்பெறாதவரை / கலாச்சாரம் மறந்து போகாதவரை திருமணமாகாத பெண் தனியே வாழலாம். பல்கலைக்கழகங்களில் படிக்கும் பெண்கள் சிலர் அப்படித்தான் இருக்கவேண்டி உள்ளது. பெற்றோருடன் பிரச்னை ஏற்பட்டால் அது எந்த வகையான பிரச்சனை என ஆராய்ந்து தான் சொல்லமுடியும். ஓன்றே ஒன்று இப்பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் தான் பாவம். தவறாக ஒன்றும் எண்ணவேண்டாம். வெகு விரைவில் இப்பெண்கள் இந்த இளைஞர்களுக்கு திருமணமுறிவு( டைவேர்ஸ்) கொடுத்து விடுவார்கள். மற்றபடி பெண்கள் சுதந்திரத்தை எல்லோரும் ஆதரிக்கிறோம். அன்பான என் சகோதரிகள் கோபிக்கவேண்டாம். நான் உங்கள் மனதைநோகடிக்க எழுதவில்லை. - sethu - 01-07-2004 hock: hock:
- shanthy - 01-07-2004 <!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->எந்த தவறும் செய்யாகவரை / தவறு இடம்பெறாதவரை / கலாச்சாரம் மறந்து போகாதவரை திருமணமாகாத பெண் தனியே வாழலாம். பல்கலைக்கழகங்களில் படிக்கும் பெண்கள் சிலர் அப்படித்தான் இருக்கவேண்டி உள்ளது. பெற்றோருடன் பிரச்னை ஏற்பட்டால் அது எந்த வகையான பிரச்சனை என ஆராய்ந்து தான் சொல்லமுடியும். ஓன்றே ஒன்று இப்பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் தான் பாவம். தவறாக ஒன்றும் எண்ணவேண்டாம். வெகு விரைவில் இப்பெண்கள் இந்த இளைஞர்களுக்கு திருமணமுறிவு( டைவேர்ஸ்) கொடுத்து விடுவார்கள். மற்றபடி பெண்கள் சுதந்திரத்தை எல்லோரும் ஆதரிக்கிறோம். அன்பான என் சகோதரிகள் கோபிக்கவேண்டாம். நான் உங்கள் மனதைநோகடிக்க எழுதவில்லை.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> hock: :roll: :?:
- kuruvikal - 01-07-2004 அதீபன் நல்ல கருத்து ஆனால் அதற்குள் ஏன் இவ்வளவு வினையம் என்பதுதான் புரியவில்லை...பெண்கள் என்றால் அவர்கள் மனம் குளிரத்தான் கருத்தெழுத வேண்டும் என்பது என்ன சட்டமா...உள்ளதை உள்ளபடி எழுதுங்கள்...தவறுவிட்டால் மன்னிப்புக் கோராலாம்...விடாமல் ஏன் இவ்வளவு வினையம்..! வளமான கருத்து துணிந்து எழுதியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்...அதுதான் யதார்த்தமும் கூட....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
- sOliyAn - 01-07-2004 ஏன் விவாகரத்துக் கொடுப்பார்கள்? அதற்கான காரணத்தையும் தரலாமே? சும்மா சாஸ்திரம் சொல்வதுபோல சொன்னால் சரியா? - aathipan - 01-08-2004 பெரும்பாலும் இத்தகைய பெண்கள் பெண்ணிய எண்ணம் மேலோங்கியவர்களாக இருப்பார்கள் என்;பது என் பொதுவான ஊகம். இத்தகையபெண்கள் கவரிமான் சாதி என்று கூடச்சொல்லலாம். கவரிமான் அதன் ஒரு முடிவிழுந்தால் கூட இறந்;து போகுமாம். (இதில் எவ்வளவு உண்மைஉள்ளது என்று தெரியாது). அதைப்;போல இப்பெண்;களும் ஏதாவது சின்ன பிரச்சனை குடும்பத்தில் ஏற்பட்டாலும் கோட்டில் நிற்பார்கள். இவர்களுடன் குடும்பம் நடத்தும் ஆண்கள் எவ்வளவுதான் இறங்கிப்போனாலும் புதிது புதிதாய் பிரச்சனைகளை கண்டுபிடிப்பார்கள் இத்தகையபெண்கள். நான் எல்லாப்பெண்களையும் சொல்லவில்லை ஏன் என்றால் எனக்கு தெரிந்து ஒரு யுவதி வெளிநாடு வந்து சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு ஏற்பட்ட சில தொந்தரவு காரணமாக தனியாக சென்றுவிட்டார். இப்போது நன்றாகத்தான - sethu - 01-08-2004 ஆதிபன் உங்களின்பாடு எப்படி இப்ப இது எல்லாம் அனுபவமோ அல்லது அயல்வீட்டு புதினமோ ஆனாலும் பெண்களை அதிகம் கொச்சைப்படுத்திறமாதிரி எனக்கு தெரியுறமாதிரி கிடந்தாலும் அது உங்கள் கருத்து என்பதால் வரவேற்கிறேன். - Paranee - 01-08-2004 கவரி மான் என்று ஓன்று இல்லை அது கற்பனை மான் - kuruvikal - 01-08-2004 தனித்து வாழும் இளம் பெண்கள் எனப்படுவோர் நாணையம் கட்டாத வண்டில் மாடுகள் போன்றோர்....இவர்களின் உண்மையான நோக்கம் தங்களின் சமூக அங்கீகாரமற்ற செயல்களுக்கு தாங்களே தங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் வாழ்வதும் ஆகும்...இவர்கள் ஒன்றும் பெண் விடுதலை என்ற மாயை தேடிகள் அல்ல....தேடுவதாக வேடம் போட்டு நாடகம் காட்டும் வேடதாரிகள்...! திருமணம் செய்து கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் கட்டுப்பட்டு வாழுதல் என்பது, பெற்றோரிடமும் பாடசாலையிலும் முறையே பணிவு, தாழ்மை, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை என்பவற்றைத் தெளிவாகக் நன்மை தீமைகளுக்கூடு பகுத்துணர்ந்து கற்றுக் கொண்ட எவருக்கும் மிக மிக மகிழ்வான விடையமே....ஆனால் இப்படியான அடங்காப்பிடாரிகளுக்கு அவர்கள் வாழும் கற்பனை உலகில் மற்றவர்களின் கருத்துகளுக்கு, கேள்விக்கு மதிப்பளிக்கும் பக்குவம் வருமா என்ன....அப்போ விவாகரத்துத்தான் தீர்வு....! இப்படியானவர்களிடம் சந்தேகம் என்பது கோலோங்கி நிற்கும். சந்தேகம் என்ற தேடலுக்கு விரைந்து விடைகாண வேண்டும் அதற்கு மனம் திறந்த கலந்துரையாடல்கள், அன்பான பேச்சுவார்த்தைகள், பரஸ்பர புரிந்துணர்வுகள், ஒளிவு மறைவிற்றி பேசும் பழகும் உள்ளம் என்று பல நற்குணங்கள் அவசியம்....உண்மையில் நாம் அவற்றை எம் பெற்றோரிடம் சகோதரங்களிடம் நல்ல சுற்றத்திடம் பாடசாலைச் சமூகத்திடம் இருந்து உள்வாங்கிக் கொள்கின்றோம்....ஆனால் தனித்து பட்டியின்றி நாணையம் இன்றி வாழும் கட்டாக்காலிகளிடம் இது எப்படிச் சாத்தியம் ஆகும்...! இன்று நாகரீகத்தின் உச்சியில் இருப்பதாக எண்ணி வாழும் மேற்குல தமிழ் வாரிசுகளுக்கு எது நம்மை எது தீமை என்று கூடப் பகுத்தறியும் திறனே கிடையாது...அப்படி இருக்கையில் எப்படி சமூக வாழ்வியலுக்குத் தேவையான நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும்...???! ஆனால் எந்தச் சமூகமாக இருந்தாலும் அது நாகரீக வாழ்வியலையே அங்கீகரித்து நிற்கிறது....உதாரணத்துக்கு லண்டன் வரும் கிளிங்டன் மனைவியுடன் தான் வருகிறார் கள்ளக் காதலிகளுடன் அல்ல...சுற்றுலாச் செல்லும் வில்லியம் தந்தை சாள்சுடன் தான் செல்கிறார் டேற்ரிக் செய்த பெண்களுடன் அல்ல....சமூகம் உங்களின் செயலுக்கு பாராமுகம் காட்டுகிறது என்பது உங்களின் அநாகரிகத்துக்கான அங்கீகாரமல்ல என்பதைப் புரிந்து கொண்டால் சமூக வாழ்வியலின் தேவையை உணர்ந்து கொள்வீர்கள்....!அதன் பின் இப்படியான கேள்விகள் எழ வாய்ப்பிருக்காது என்றுதான் நினைக்கின்றோம். ஆனால் அது சாத்தியமா....சாத்தியமாகும் ஆனால் அது தனிமனித ஆளுமையிலும், திறனிலும், வாழும் வளரும் சூழலிலும், தேடி நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும் பண்பிலும், அன்பால் மற்றவர்களை அரவணைக்கும் இயல்பிலும், சந்தேகங்களுக்கு அப்பால் யதார்த்தைத் தேடும் உணர்விலும் தங்கி உள்ளது என்பதும் உண்மை....! இவையெல்லாம் சமூக வாழ்வியலின் பலன்கள் இது தனித்திருப்போருக்கு எப்படிக் கிடைக்கும்.....??! அப்படி இருப்போரை பேசாமல் செவ்வாய்கனுப்பி ஆராய்ச்சி செய்யப்பயன்படுத்தலாம் வேறேதும் செய்ய முடியாது...அல்லது அவர்கள் அப்படியே வாழ்ந்து விட்டுப் போகட்டும் நாம் ஏன் கவலைப்படுவான்.....! திருந்தாக் கூட்டம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- aathipan - 01-08-2004 தனியே வாழும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அப்படியில்லாமல் பெற்றோருடன் வாழும் சில ஆண்களுக்;கும் பொருந்தும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் மட்டும் மோசமானவர்கள் இல்லை. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முதலே ஆண்கள் இதையெல்லாம் செய்;தநல்லவர்கள் - kuruvikal - 01-08-2004 அதுவும் உண்மை.. ஆனால் இந்தத் தலைப்புக்குள் அது அடங்காததால் இங்கு அடக்கப்படவில்லை....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- anpagam - 01-09-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தனியே வாழும் ஆண்களுக்கும் இது பொருந்தும். அப்படியில்லாமல் பெற்றோருடன் வாழும் சில ஆண்களுக்கும் பொருந்தும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் மட்டும் மோசமானவர்கள் இல்லை. அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முதலே ஆண்கள் இதையெல்லாம் செய்தநல்லவர்கள் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> உண்மை உண்மை உண்மை... <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அதுவும் உண்மை.. ஆனால் இந்தத் தலைப்புக்குள் அது அடங்காததால் இங்கு அடக்கப்படவில்லை....! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நழுவல் நழுவல் நழுவல்... :?: :!: :roll: :mrgreen: - shanthy - 01-09-2004 <!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->பெரும்பாலும் இத்தகைய பெண்கள் பெண்ணிய எண்ணம் மேலோங்கியவர்களாக இருப்பார்கள் என்;பது என் பொதுவான ஊகம். இத்தகையபெண்கள் கவரிமான் சாதி என்று கூடச்சொல்லலாம். கவரிமான் அதன் ஒரு முடிவிழுந்தால் கூட இறந்;து போகுமாம். (இதில் எவ்வளவு உண்மைஉள்ளது என்று தெரியாது). அதைப்;போல இப்பெண்;களும் ஏதாவது சின்ன பிரச்சனை குடும்பத்தில் ஏற்பட்டாலும் கோட்டில் நிற்பார்கள். இவர்களுடன் குடும்பம் நடத்தும் ஆண்கள் எவ்வளவுதான் இறங்கிப்போனாலும் புதிது புதிதாய் பிரச்சனைகளை கண்டுபிடிப்பார்கள் இத்தகையபெண்கள். நான் எல்லாப்பெண்களையும் சொல்லவில்லை ஏன் என்றால் எனக்கு தெரிந்து ஒரு யுவதி வெளிநாடு வந்து சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கி இருந்தார். அங்கு ஏற்பட்ட சில தொந்தரவு காரணமாக தனியாக சென்றுவிட்டார். இப்போது நன்றாகத்தான<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இதன் பிரகாரம் உங்களின் இறுதி நிறுவல் என்ன ஆதிபன் ???? அதென்ன ஆதிபன் எந்தத்தலைப்பை எடுத்தாலும் அடுத்தவீட்டுப் பிரச்சனையும் , அங்கால் வீட்டுப் பிரச்சனையையும் து}க்கிக்கொண்டுவந்து நிக்கிறீங்கள் ? hock:
- shanthy - 01-09-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அதுவும் உண்மை.. ஆனால் இந்தத் தலைப்புக்குள் அது அடங்காததால் இங்கு அடக்கப்படவில்லை....! :twisted: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இது குருவியின் கருத்தாச்சே விழுந்தாலும் மண் ஒட்டாமல் எழும்பிவிடும் சாதுரியம் மிக்க ஆளல்லவா. :evil: - shanthy - 01-09-2004 <!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->கவரி மான் என்று ஓன்று இல்லை அது கற்பனை மான்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பரணி எந்த மானைப்பற்றிச் சொல்றீங்கள் ???? :oops: - shanthy - 01-09-2004 கவரிமான் , கத்தரிக்காய் தத்துவத்தைச் சொட்ட வைத்துச் சாகடிக்கும் கூட்டமாக என்னைவிடு , உன்னைவிடு இழுத்தடித்து , விழுந்தெழும்பி.... பெண்ணின் பிரச்சனையென்றால் இந்தப் பையன்களுக்கெல்லாம் உடன் நீளும் கைகள் மட்டுமல்ல காதுகளும் படுகூர்மை.... எழுத்துலகில் பெண்வருகை , எழுத்தறிவில் பெண்வருகை , வான்முட்டி விமானமோட்டும் வல்லமைப் பெண் எழுகை , வையமே நோக்கும் வகை களம் ஏகிக்காவியப் பெண்புதுமை.... இத்தனையும் நடக்கும் உலகில் இவர்களுக்கென்ன குறையாம்....? எதைச்சொல்ல எடுத்தாலும் இதுதான் இவர் வேதம். வீட்டுப்படி விட்டிறங்க முடியாமல் வாய் திறந்து தன்துயர் உரைக்கும் வலுவின்றி ஒருகூட்டம். வையமெல்லாம் சுற்றிவந்தும் விடியலின்றிச் சாகின்ற பிணவாழ்வில் வதையும் பெண்களின் வகை புரியா வல்லவர்கள் எருமைத் தோலில் எல்லாமே மரப்புத்தான். 'நாணயமில்லாத மாடுகள் நாடகமாடும் வேடதாரிகள் அடங்காப் பிடாரிகள் ஆட வெளிக்கிட்ட கூத்திச்சிகள் மாயை தேடி ஓடும் மாயப்பேய்கள்" சொல்லில் தேன்தடவி கொல்லும் விடம் மிக்க வித்துவச் சொற்களுக்கு விசுவாசம் அதிகம் - இவர் வாயிலிருந்து மீள்வதென்றால் மறுஜென்மம் போதாது. ஆணென்றால் அங்கு புதிதாயேதோ முளைத்தது போல் பெரும் எடுப்பு. பெண்ணென்றால் எங்கும் படிதாண்டா விரதைகளாயே இன்னும் பார்வைகளின் நீளம்.... எப்ப இவர் வாய் திருந்தி ஆண்பெண் பேதமிவர் மறப்பாரோ அதுவரைக்கும் இந்த அவதாரர் வாய்களிலிலே எட்டாமல் பெண்ணிருக்கட்டும். 09.01.04. - shanmuhi - 01-09-2004 மிக மிக... அருமையான கவிதை. ஒரு கணம் மெய் மறந்தேன். வாழ்த்துக்கள் - kuruvikal - 01-09-2004 புண்படு விழிகொண்டு மான் விழியென்றார் தோலும் தசையும் எலும்பும் நிறை முகமதை சந்திர வதனம் என்றார் நகம் நீண்டு ஊத்தை ஆடங்கும் விரல் கொண்டு காந்தல் என்றார் பெண்ணென்றால் ரோஜாவாம் முள்ளாம் மூடர்கள் கதை சொல்வர் அவளும் மனிதன் என்று நாம் சொல்கிறோம்.....! மனிதன் என்றால் எதுவும் ஆகும் படை கொண்டு நாடு காக்கலாம் விமானமோட்டி தேசங்கள் பறக்கலாம் பல்கலையில் பல பட்டங்கள் ஈட்டலாம் குசினிதனில் நல்ல சமையலும் செய்யலாம் ஆனால்.... பெண் என்று இவை செய்தால் ஏதோ அதிசயம் செய்வதாய் ஏன் நினைப்பு....?????! அப்போ பெண்கள் மானிடர் அல்லவோ....???? ஆய்வுச் சாலையில் குரங்கொன்று இவை செய்தால் அதிசயம் தான் எம்மோடு கூடிவாழும் சகோதரி இவை செய்தால் அது அவள் திறமையல்லோ....?! ஏன் அதற்குள் சாயங்கள் பூசி விடுதலைப் பெண்...விழித்த பெண் என்று இன்னும் சொற்கள் கொண்டு அவளை வேறு காட்டி நிற்கின்றீர்....?! இப்போ புரிகிறதா பெண்ணை மனிதனாய்க் காட்டாமல் இன்னும் அதிசயப் பிறவியாய் சித்தரிப்பது யாரென்று....! மனிதன் சமூக விலங்கு அதற்குள் ஆணும் பெண்ணும் அங்கமாய் அடக்கி நின்று ஒத்தகருத்தால் நாகரிகம் என்ற மனிதனை மனிதனாய் வாழச் சொல்லும் வழி பற்றி வாழ்வது சிறப்பு....! நாம் அது சொல்ல நீவீர் எம்மில் குறை காண்பீர் அது ஒன்றும் பெரிதல்ல அநாகரிகமே உமக்கெல்லாம் விடுதலைக்கு வழிகாட்டும் போது....! பாவம்.... திறமையால் வெற்றி காணும் நம் சகோதரிகள் முயற்சிதனை மாயச் சொற்களால் மலினப்படுத்தாதீர்....! அது ஒன்றும் செய்யும் அவளின் ஆளுமை பெருக்கி அவள் மனிதனாய் நாகரிகம் காத்து தலை நிமிர்ந்து நிற்க....! ஆண் அவள் துணை ஒரு போதும் எதிரியல்ல....! பெண்ணெப்பதற்காய் விழுந்தடிக்கும் அர்ப்பங்கள் அல்ல நாம்.....! மாயையால் அவள் மனம் கட்டி மாஜாயாலம் காட்டுவதை களைவதே நம் நோக்கம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- aathipan - 01-09-2004 நல்லகவிதைகள் இரண்டு கிடைத்ததில் மகிழ்ச்சி |