Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணனி மொழிகள் (Program)
#21
நன்றி......நன்றி...........நன்றி இரசிகை.....
தொடரட்டும் உங்கள் பணி.

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
Reply
#22
<b>VBஉபயோகிக்கும் முறை</b>

நம்முடைய விசுவல்பேசிக் புரோகிராம் இயங்கும் போது கணிப்பொறித்திரையில் நாம் காண்பது தான் User interface என்று சொல்லக் கூடிய ஒரு உபயோகிக்கும் முறையாகும். இந்த User interface என்பது மிகவும் விரிவான நிலையில் கலருடன் கூடிய ஒரு வடிவில் விண்டோவை உருவாக்கி, அதன் மூலம் VB புரோ கிராமை இயக்கும் விதமாக அமைந்திருக்கும். சாதாரண மாக இந்த User interface மூலம் நாம் பெறுவது படிவம் (FORMS) மற்றும் ஆப்ஜெக்ட் (OB T) என்பவைகளா கும். இந்த படிவம் (FORMS) என்பது கணிப்பொறி திரை யில் காணும் ஒரு WINDOW ஆகும். விசுவல்பேசிக் புரோ கிராம் எப்பொழுதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட FORM-களை கொண்டதாக அமைந்திருக்கும்.

இது போன்ற படிவத்தில் (FORMS) சாதாரணமாக பல விதமான ஞஸங்க்ஷஞ்-கள் அமைந்திருக்கும். உதாரண மாக கட்டளை பட்டன் (COMMAND BUTTON), ஸ்க்ரோல் பார் (SCROLL BAR), ஆப்சன் பட்டன் (OPTION BUTTON) அல்லது செக் பாக்ஸ் (CHECK BOX). இந்த ஆப்ஜெக்ட் மூலம் புரோ கிராம்களை இயக்குவதற்கு தேவையான கட்டளைகளை பிறப்பிக்க முடியும்.

<b>கட்டளை முறைகளை அமைக்கும் முறை</b>

ஒவ்வொரு முறை இந்த படிவத்தை (FORMS) நாம் உருவாக்கிய பிறகு அதில் நமக்குத் தேவையான ஆப் ஜெக்ட்டை தேவையான இடத்தில் வரைந்து கொள்ள வேண்டும். இந்த ஆப்ஜெக் டின் முக்கிய நோக்கமானது அதனுடைய பெயர், கலர், சைஸ் (SIZE), தகுந்த இடம் (LOCATION) மற்றும் அதன் தோற்றம் கணிப்பொறி திரை யிலே அமைந்திருக்கும் விதம் போன்றவற்றை உருவாக்க உதவுகிறது. ஒவ்வொரு ஆப் ஜெக்டும் ஒவ்வொரு விதமான வசதியை கொண்டதாக அமைந்திருக்கும்.

ஒவ்வொரு முறை நாம் ஆப்ஜெக்டை விசுவல்பேசிக் படிவத்தில் வரையும் பொழுது, அதற்குரிய குறைந்த அளவிலான மதிப்பு உடைய VALUEஒன்றை பதிவு செய்து வைத்திருக்கும். இது பதிவு செய்யப்பட்ட VALUE உப யோகப் படுத்த முடியாது. ஏனென்றால் இந்த ஆப் ஜெக்டை உபயோகப் படுத்த தேவையான VALUE பிறகு விசுவல்பேசிக் புரோகிராமை இயக்கும் போது பதிவு செய்து கொள்ளப்படும்.

<b>VB உபயோகிக்க தயார் படுத்தும் முறை</b>

விசுவல்பேசிக் என்ற மென் பொருள் நாம் உபயோகப் படுத்த ஆரம்பிக்கும் போது, அது IDE என்று சொல்லக் கூடிய INTEGRATED DEVELOPEMENT ENVIRONMENT என்ற ஒரு வச தியை அளிக்கிறது. இந்த முறை மூலம் உபயோகிப்பவர் களுக்கு தேவையான TOOL BAR< TOOL BOX< FORM WINDOW< PROJECT EXPLORER WINDOW< PROPERTIES WINDOWமற்றும் CODE WINDOW போன்ற வசதிகளை இது வழங்குகிறது.

விசுவல்பேசிக்கை நாம் கம்ப்ïட்டரில் உபயோகப் படுத்த ஆரம்பிக்கும் போது கடை பிடிக்க வேண்டிய முறை கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

1.கணிப்பொறி திரையில் இடது கை புறத்தின் கீழே உள்ள START என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

2.உடனே ஒரு POP UP என்று சொல்லக்கூடிய பல விதமான உபயோக மென் பொருள்கள் வரிசையாக திரையிலே காணப்படும்.

3. PROGRAM என்று சொல்லக்கூடிய வசதியினை கிளிக் செய்தால் மறுபடியும் ஒரு பெரிய மெனு (MANU) திரையில் தோன்றும்.

4. அந்த மெனுவில் (MANU) நாம் விசுவல்பேசிக் 6 என்ற பட்டனை கிளிக் செய்தால் VB இப்பொழுது உபயோகத்திற்கு தயாரான நிலையில் இருக்கும்.

நாம் விசுவல்பேசிக்கில் நுழைந்த உடன் முதன் முதலாக நமக்கு கிடைப்பது NEW PROJECT DIALOG BOX என்று சொல்லக்கூடிய ஒரு வசதியாகும். இதன் மூலம் அனைத்து விதமான பைல் (FILE) வகைளையும் புதிதாக உருவாக்கும் வண்ணம் காட்சியளிக்கும். அதில் மூன்று வகையான தேர்ந்தெடுக்கும் முறை உள்ளது.

1.புதியது (NEW)- விசுவல் பேசிக்கில் செயல்படுத்த பல வகையான பைல்களில் (FILE) ஒரு புதிய வகை பைலை தேர்ந்தெடுக்க இது உதவுகிறது.

பழையது (EXISTING)- நாம் ஏற்கனவே தயாரித்து கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைத்திருக்கும் ஒரு பைலையோ (FILE) அல்லது புராஜக்டையோ (PROJECT) தேர்ந்தெடுத்து, அதை அப்ப டியே உபயோகிக்கவோ அல்லது ஏதேனும் மாற்றம் (EDIT) செய்து கொள் ளவோ இது உதவுகிறது.

3.தற்போதையது (PRESENT)- மிக அண்மையில் நாம் உருவாக்கிய அல்லது பயன்படுத்திய புராஜக்டை யும், அதன் பாதை வழி (PATH) போன்றவற்றையும் தேர்ந் தெடுத்து பயன்படுத்தலாம்.

பேராசிரியர்.
சூ.ஆரோக்கியசாமி,
நன்றி மாலைமலர்
<b> .. .. !!</b>
Reply
#23
ரசிகையக்க நல்ல வேலை செய்யுறியள.எங்களுக்குப் பள்ளிக்கூடத்திலயே யாவா பஸ்கால் ரியுறிங்க எல்லாம் படிப்பிச்சவை.படிச்சுட்டுப் போனா யுனில கஸ்டமா இருக்காது என்று நினைக்கிறன்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
ரசிகை அக்கா
நீங்க இப்படி பயனுள்ள கட்டுரையை தான் இணைக்கிறீர்கள் ..நன்றிகள்.. இணைப்பில் இணைக்க முதல் நீங்கள் செய்து பாத்தா இணைக்கிறீர்கள் அப்படி செய்து பாத்து இணைப்பதாயின் இடைக்கிடை படங்கள் இணைத்தால் இன்னும் பயன் உள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பீடு ஏன் என்றால் எனக்கும் VB தெரியும் ஆனால் இந்த தமிழை படங்கள் இன்றி வாசிக்க எதுவும் விளங்குது இல்ல
நன்றி
Reply
#25
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
ஓகே சோபனா இவை நான் செய்து பார்த்து போடவில்லை. செய்து பார்க்கும் போது படத்துடன் விளக்கம் போடுகிறேன்.
<b> .. .. !!</b>
Reply
#27
நன்றி ரசிகை இந்த தகவலை இணைத்தமைக்கு.
சோபானா சொன்னது போல் தமிழில் எழுதும் போது சில விடயங்கள் விளங்காது தான். நாம் செய்து பார்க்கும்போது கூடிய விளக்கம் கிடைக்கும்.

Reply
#28
நீங்கள் எல்லோரும் இப்போதும் VB 6.0 பற்றி கதைக்கிறீர்கள் ஆனால் VB 6.0 க்குப் பிறகு அடுத்த வேர்சன் VB.NET என்று ஏப்போதோ வந்துவிட்டது. VB.NET மிகவும் நிலையானதும் பாதுகாப்பானதுமாகும் முன்னைய வேர்சனைவிட. தற்போது அனேகமானவர்கள் இதைத்தான் பாவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
Reply
#29
நீங்கள் சொல்வது சரியே பாண்டியன் ஆனால் விபி 6 தான் பாடசாலைகளில் படிப்பிக்கிறார்கள்.
<b> .. .. !!</b>
Reply
#30
Rasikai Wrote:நீங்கள் சொல்வது சரியே பாண்டியன் ஆனால் விபி 6 தான் பாடசாலைகளில் படிப்பிக்கிறார்கள்.

நீங்கள் VB 6.0 படிப்பதில் பிரச்சினையில்லை ஆனால் VB.NET இல் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். மற்றையது இப்போ எங்கு பார்த்தாலும் .NET க்கு நிறைய வேலை வாய்ப்புகளும் இருக்கிறது. எனவே படிக்கும்போது புதியவைகளை படித்தீர்களானால் நிறைய நன்மையுன்டு. இனி வரப்போகும் புதிய version களும் இதைசார்ந்தே இருக்கும்.
நீங்கள் ஏன் உங்களது பாடசாலையில் இதை விளக்கி முயற்சி பண்ணக்கூடாது.
மற்றது நான் தரும் web site க்கு போய் பாருங்கள் நிறைய விடயம் கிடைக்கும் VB 6.0 அல்லது .NET எதுவேன்டுமானாலும்.

www.planet-source-code.com
Reply
#31
paandiyan Wrote:

ஆமாம் பாண்டியன் நீங்கள் கூறியது போல் .net க்குத்தான் இப்போது நிறைய வேலைவாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் VB6 நன்கு தெரிந்தால் .NET விளங்கிக்கொள்வதில் என்ன பிரச்சினை வரும் என்கிறீர்கள்...net ல் கொஞ்சம் விளக்கங்களும் பயன்பாடுகளும் கூடுதலாக இருக்கின்றன
Reply
#32
paandiyan Wrote:நீங்கள் VB 6.0 படிப்பதில் பிரச்சினையில்லை ஆனால் VB.NET இல் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். மற்றையது இப்போ எங்கு பார்த்தாலும் .NET க்கு நிறைய வேலை வாய்ப்புகளும் இருக்கிறது. எனவே படிக்கும்போது புதியவைகளை படித்தீர்களானால் நிறைய நன்மையுன்டு. இனி வரப்போகும் புதிய version களும் இதைசார்ந்தே இருக்கும்.
நீங்கள் ஏன் உங்களது பாடசாலையில் இதை விளக்கி முயற்சி பண்ணக்கூடாது.மற்றது நான் தரும் web site க்கு போய் பாருங்கள் நிறைய விடயம் கிடைக்கும் VB 6.0 அல்லது .NET எதுவேன்டுமானாலும்.

www.planet-source-code.com

நன்றி பாண்டியன் இணைப்புக்கு. ம்ம் நீங்கள் சொல்வது சரியே. ஆமா VB 6 க்கும் NET க்கு கனக்க வித்தியாசமா? :roll:
<b> .. .. !!</b>
Reply
#33
Rasikai Wrote:

இதிலுள்ள இணைப்பில் VB.6.0 க்கும் VB.NET க்கும் உள்ள வித்தியாசங்களை எழுதியிருக்கிறது பாருங்கள்.

http://www.vbdotnetheaven.com/Code/Apr2003/006.asp
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)