Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இங்கு பலதரப்பட்ட பிரிவில் படிப்பவர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் இருப்பீர்கள்.
ஏன் நீங்கள் இங்கு computer program அதாவது computer language such as java, pascal, C , C++ etc
பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை இங்கு சொல்லக்கூடாது
அத்துடன் ஏதாவது சந்தேகம் மற்றவர்களுக்கு இருந்தாலும் தீர்த்து வைக்க கூடாது?
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இது மிகவும் பிரியோசனமான வெப்சைட் for PHP language.
http://www.htmlite.com/PHPintro.php
<b> .. .. !!</b>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
கோதாரி இன்னும் pascal பாவிக்கிற படிக்கிற ஆக்கள் இருக்கினமே?
:? நீங்கள் இலத்திரனியல் படிக்கிறியள் எண்டு சொன்னமாதிரி இருந்து. இப்ப மென்பொருள் பொறியியல் php இல நிக்குறியள் :roll:
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:கோதாரி இன்னும் pascal பாவிக்கிற படிக்கிற ஆக்கள் இருக்கினமே?
:? நீங்கள் இலத்திரனியல் படிக்கிறியள் எண்டு சொன்னமாதிரி இருந்து. இப்ப மென்பொருள் பொறியியல் php இல நிக்குறியள் :roll:
ம்ம் குருக்ச் ம்ம் பாடசாலைகளில் படிப்பிக்கிறார்கள் என நினைக்கிறேன். 5 வருடங்களுக்கு முதல் நான் pascal படித்தேன்.
ம்ம் நான் இலத்திரனியல் தான் படிக்கிறேன். அதுலயும் C++ , Jaava courses எடுக்கனும்.
<b> .. .. !!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கோதாரி இன்னும் pascal பாவிக்கிற படிக்கிற ஆக்கள் இருக்கினமே?
2 வருடத்திற்கு முதல் நாங்க படிச்சம். அறுத்திட்டாங்க. :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
இங்கும் அப்படித்தான், அதிகமான பாடங்களுக்கு முதல் ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு கணனி மொழிகள் படிக்க வேண்டும். எனக்கு c++ கே தூக்கம் தூக்கமா வந்துது, அறுவை.எப்பட முடியும் என்று இருந்துது. இதில எங்கட வாத்தி வேற நேரத்துக்கு வகுப்ப முடிக்காம அறுக்கும் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=15]
..
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ஆ அப்படியா? நீங்கள் என்ன படிக்கிறீர்கள் தூயா? ம்ம் எனக்கும் C++ பிடிக்காது
<b> .. .. !!</b>
Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
அத்துடன் இவைகளும் பரவலாக பாவிக்கப்படுகிறது
visual Basic
Power Builder
Oracle(Database Programming)
SQL
VB.NET
ASP.NET
XML
Perl
AWK - A programming Language uses Batch Process Method
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
Object oriented programming பிடிக்கவில்லையோ இல்லை C++ மாத்திரம் தான் பிடிக்கவில்லையோ?
C அனுபவம் உள்ளவைக்கு C++ இன்ரை object oriented கட்டுப்பாடுகள் கடியள் பிடிக்கிறேல்லை அது தான் கேக்கிறன்.
hw படிக்கிற வேலையிற ஆக்கள் ஆரும் இருக்கிறயளே?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:..... எனக் கோஷமிட்டுக் கொண்டு கடைக்கண்கள் கச்சையை நோக்கட்டும்.
குறுக்கால போவன் அந்த ..... பிளாங்ல என்ன வரணும். :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
களவிதிகள் காப்புரிமை போன்ற கப்சாவுகள் காரணமாக அதை வெளிப்படையாக சொல்ல முடியாமைக்கு மனம் வருந்துகிறோம். 8)
எப்பவும் உங்களுக்கு விடயத்தை திசை திருப்பி அரட்டையாக்கிறதே வேலையாப் போச்சு. கணனி மொழிக்கும் உந்த பூராயக் கேள்விக்கும் என் சம்பந்தமுங்கோ? :? :roll:
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்ப வில்லங்கம் என்றியள் சரி சரி வேணாம். விதிகள் மதிக்கப்படட்டும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:Object oriented programming பிடிக்கவில்லையோ இல்லை C++ மாத்திரம் தான் பிடிக்கவில்லையோ?
C அனுபவம் உள்ளவைக்கு C++ இன்ரை object oriented கட்டுப்பாடுகள் கடியள் பிடிக்கிறேல்லை அது தான் கேக்கிறன்.
என்னவோ எப்படிதான் படிச்சாலும் அவையள் தாற கேள்வியை செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கு
http://www.vbcity.com/forums/faq.asp
ஏதாவது உதவி தெவை என்றால் இங்கு போயும் கேக்கலாம்
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
இங்கு jaava book ஐ தரவிறக்கம் செய்யலாம். மிகவும் பிரியோசனமான புத்தகம்
http://www.bruceeckels.com/contents/complete20.php
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>விஷுவல் பேசிக் (VB) - ஓர் அறிமுகம்</b>
கணிப்பொறித்துறையில் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்து, பலராலும் உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு மென்பொருள்தான் இந்த விஷுவல் பேசிக் (VB). இன்றும் பலர் இந்த மென் பொருளை உபயோகிப்பதன் ரகசியம் இதன் எளிமையும், சகல வசதிகளையும் பெற்று, தேவைக்கேற்ப உபயோகப்படுத்தப்படும் அதன் வளைந்து கொடுக்கும் தன்மையும்தான்.
விஷுவல் பேசிக் (VB) செயல்படும் முறை
விஷூவல் பேசிக் ஏன் ஒரு சிறந்த மொழி?
விஷூவல் பேசிக் மூலம் மென்பொருள் தயாரிக்கும் முறை
யஆ உபயோகிக்கும் முறை
விசுவல் பேசிக் வசதிகள்
புரோகிராம் எழுதும் முறை
கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி. கணிப்பொறி நிறுவனங்களாக இருந்தாலும் சரி. அனைவரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் இந்த விஷுவல் பேசிக் (VB) தான். ஏனென்றால் எந்த விதமான Project தயாரிக்க வேண்டுமானாலும் எந்தவிதமான அலுவலகமாக இருந்தாலும், எப்படிப்பட்ட அடிப்படையில் தகவல்கள் இருந்தாலும் இந்த விஷுவல் பேசிக் (VB) ஒரு கலங்கரை விளக்கம் போல், நன்கு வழி காட்டுகிறது.
இந்த விஷுவல் பேசிக் (VB) பொருத்தவரை, இதன் எளிய வடிவமைப்பும், உபயோகிப்பதற்கு வசதியான அதன் செயல்பாடுகளும், தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளும் அதன் திறனும், எந்த விதமான நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில் மென்பொருள் தயாரிக்கப்பயன்படும் அதன் குணமும், சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இன்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினோமானால் விஷுவல் பேசிக் (VB) படித்தவர்களின் எண்ணிக்கையும் அல்லது விஷுவல் பேசிக் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் எந்தஐயமும் இல்லை.
விஷுவல்(Visual) என்பது என்ன?
பொதுவாக நமது கண்ணுக்கு புலப்படும் எதையுமே நாம் விஷுவல் என்று அழைப்பது வழக்கம். அதனைத் தொடர்ந்து இந்த விஷுவல் பேசிக்(VB) மொழியைக் கொண்டு, ஒரு project தயாரிக்க வேண்டுமானால், அதனை உருவாக்கும் போது, அதன் முழு வெளிப்பாட்டையும், நன்றாக தெரிந்து கொள்ளும் வகையிலே இந்த விஷுவல் பேசிக் (VB) அமைந்துள்ளது.
எந்த புரோகிராம் உருவாக்கப் போகிறோமோ, அதனை முன் கூட்டியே உணரும் வகையிலே அல்லது முன்னமே அறிந்து கொள்ளும் வகையிலே இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனை விஷுவல் என்று அழைக்கிறோம். அடிப்படையிலே ஒரு மென்பொருள் தயாரிக்க உதவும் அனைத்து அம்சங்களும் இருப்பதால், இதனை யஐநமஅக VISUAL BASIC (VB) என்று அழைக்கிறோம். இதனைக் கொண்டு தயாரிக்கும் program-களை VISUAL Program என்று அழைக்கலாம். இந்த விஷுவல் பேசிக் (VB) தற்போது VB 6.0 என்ற பெயரில் வெளிவந்து உபயோகத்தில் உள்ளது.
விஷுவல் பேசிக் (VB) தனித்தன்மை
சாதாரணமாக நாம் புரோகிராம் எழுதும் பொழுது எந்த மொழியிலும் மேலிருந்து கீழாக, அதாவது TOP-DOWN approach முறையை பயன்படுத்தி எழுதுவது வழக்கம். எந்த ஒரு வேலையைச் செய்வதாக இருந்தாலும், புரோகிராமின் முதல் வரியிலிருந்து கட்டளையை செயல்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த VB வந்த பிறகு தனித்தன்மை வாய்ந்த புரோகிராம் எழுதும் முறை (independent coding) பழக்கத்தில் வந்தது.
ஏனென்றால் புரோகிராமில் உள்ள எந்த செயலுக்கும் தனித்தனியான முறையில் சிறிய, சிறிய அளவிலான புரோகிராம்கள் (Piece of Program) எழுதி அவற்றை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தி பயனடையும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல விதமான வேலைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து வேலைகளைச் செய்யும் விதமாக (Integrated Environment) இது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரே திரையில், புரோகிராம்களை வடிவமைத்தல், சிறு, சிறு மாற்றங்களை செய்து கொள்ளுதல் (EDIT) உப யோகத்திற்கேற்ப மாற்றிய மைத்தல் (Compile) மற்றும் தவறுகளை சரி செய்து கொள்ளுதல் (DEBUG) போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்ய முடியும்.
மற்றொரு தனித்தன்மையாக கருதப்படுவது இதன் Device independence என்ற கொள்கையாகும். அதாவது, சாதாரணமாக இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் WINDOWS ஆகும். இந்த மென் பொருளை எந்த ஒரு விதமாக கணினியிலும் உபயோகிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சில ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், சில கம்ப்ïட்டர்களில் பயன்படுத்த முடியாத வண்ணம் அமைக்கப்பட்டு இருக்கும்.
இதை மனதில் கொண்டு இந்த விஷுவல் பேசிக் (VB) ஆனது பொதுவான வகையில் புரோகிராம் வரிகளை கொண்டதாக அமைந்துள்ளது. எந்தவிதமான கம்ப்ïட்டர் ஹார்டுவேர்களை இயக்கும் விதமாக புரோகிராம் எழுதியிருந்தாலும், மற்ற விதமான ஹார்டுவேர்களை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக புரோகிராம் எழுதும் போது ஏட பிரிண்டரை இயக்கி சில வேலைகளை செய்வதாக புரோகிராம் வரிகள் எழுதப்பட்டு இருக்கும். ஆனால் EPSON போன்ற மற்ற விதமான பிரிண்டர்களை உபயோகிக்கும் போது அவற்றையும் புரிந்து கொண்டு செயல்படும் விதத்திலே அமைக்கப்பட்டுள்ளது. இதையே Device Independence என்று அழைக்கிறோம்.
மற்றதொரு முக்கியமான தனித்தன்மை (பிளாட்பார்ம்) Platform Dependence என்பதாகும். இதை ஒரு பயன் என்று கூறுவதை விட, இதை ஒரு குறையாகவே கருத வேண்டும். ஏனென்றால், கணிப்பொறி துறையில் Platform என்று சொல்வது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதை பொருளாகக் கொண்டுள்ளது. இதை மனதில் கொண்டு பார்த்தோமேயானால், ஒரு புரோகிராம் கொண்டு உருவாக்கிய மென் பொருளை மற்றொரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்ïட்டரில் இயக்க முடியாது.
உதாரணமாக விண்டோஸ் (WINDOWS) என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்ïட்டரில் உருவாக்கிய புரோகிராம்களை UNIX மற்றும் LINUX போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்ïட்டரில் இயக்க முடியாது. Platform Independence என்பது எந்த ஒரு கம்ப்ïட்டரில் எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும், அதனைக் கொண்டு உருவாக்கிய மென்பொருளை எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயக்கினாலும், அதை செயல்படுத்த முடியும். உதாரணமாக ஜாவா (JAVA) என்ற கணிப்பொறி மொழி.
ஆனால் விஷுவல் பேசிக் (VB) என்பது WINDOWS என்ற பிளார்ட்பார்ம் கொண்டு இயக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை UNIX மற்றும் LINUX போன்ற ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்ïட்டர்களில் பயன்படுத்த முடியாது. WINDOWS உள்ள கம்ப்ïட்டரில் மட்டுமே, விஷுவல் பேசிக் (VB) உபயோகப்படுத்தப்பட்டு வருவதால், அதனை Platform Depenvence என்று அழைக்கிறோம்.
விஷுவல் பேசிக் வகைகள்
1. மேலோட்டமாக கற்றுக் கொள்வதற்கு (Learing Edition)
இந்த வகை விஷுவல் பேசிக் (VB) முறையில், எவ்வாறு விஷுவல் பேசிக் (VB)-யை கையாள்வது, எப்படி சிறிய Program-களை எழுதுவது, கட்டுப்பாடுகளை கையாள்வது போன்றவற்றையே செய்ய முடியும். இது போன்ற வெளியீடுகளை Internet மூலம் இலவசமாக பெற முடியும்.
2. முழுமையான விஷுவல் பேசிக் (Professional Edtion)
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதன் எல்லா விதமான தேவைகளையும், கம்ப்ïட்டர் கொண்டு கட்டுப்படுத்தும் போது, விஷுவல் பேசிக் (VB) முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த முறையிலான விஷுவல் பேசிக் (VB) கூடுதலாக பல கண்ட்ரோல்களைப் பெற்றுள்ளதால், அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
3. ஆழமாக விஷுவல் பேசிக் கற்றல் (Enterprise Edtion)
இந்த விதமான விஷுவல் பேசிக் (VB) மூலம் அனைத்து விதமான பயன்பாடுகளுடன் கூடுதலான பல சிறப்பம்சங்களை பெற்றதாக இந்த வெளியீடு அமைந்துள்ளது. கூடுதலான பல கண்ட்ரோல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக Transaction Server, Visual Source Safe மற்றும் SNA Server போன்றவை இந்த வெளியீட்டில் மட்டுமே சேர்க்கப்பட்டு உள்ளதாகும்.
இறுதியாக விஷுவல் பேசிக் (VB) மூலம் நாம் அடையும் பயன்கள் என்னவென்று காணலாம்.
விஷுவல் பேசிக் பயன்கள்
1.விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது போன்ற Menu மற்றும் Buttons போன்ற கட்டுப்பாடு கொண்ட வசதிகளை நாமே விஷுவல் பேசிக் (VB) மூலம் Program- ஆக எழுதி பெற முடியும்.
2. Textfile மற்றும் Database போன்றவற்றை புதிதாக உருவாக்கவும், ஏற்கனவே உள்ள தகவல்களை எளிதாக எடுக்கவும் பயன்படுத்தவும் முடியும்.
3. Windows ஆப்பரேட்டிங் கொண்டு இயக்கும் எந்தவிதமான ஹார்டு வேர்களையும் விஷுவல் பேசிக்கொண்டு கட்டு படுத்த முடியும்.
4. Bitmap பைல்களையும், Meta பைல்களையும், மற்றும் பலவிதமான படங்கள் கொண்ட பைல்களையும் எளிதாக கையாள முடியும்.
5. S & L, Dbase, MS Access போன்றவற்றின் மூலம் தகவல்களை உருவாக்கவும், பயன் படுத்தவும் எளிமையான முறையில் கையாளவும் முடியும்.
6. OLE-(object Linking Embedding)என்ற மென்பொருள் கொண்டு மற்ற கம்ïட்டர் மொழிகள் கொண்டு எழுதப் பட்ட புரோம்களையும் இதனு டன் இணைத்து செயல்படுத்த முடியும்.
7. Modem - உதவியுடன், internet வசதியுடன் உலகளா விய அளவில் VBயை மற்ற மொழிகளில் உள்ள தகவல்களை எடுத்து உபயோகிக்கும் வண்ணம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.
பேராசிரியர்.
சூ.ஆரோக்கியசாமி,
தலைவர், கணிப்பொறி அறிவியல் துறை,
எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி,
கோயம்புத்தூர்-641006.
நன்றி மாலைமலர்
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>விஷுவல் பேசிக் (VB) செயல்படும் முறை</b>
சாதாரணமாக கம்ப்ïட்டர் மொழிகளை Procedure Oriented மற்றும் Object Oriented என்று 2 வகைகளாகப் பிரிக்கலாம். Procedure Oriented என்ற முறையில் ஒரு புரோகிராமில் உள்ள முதல் வரி முதல் கடைசி வரி வரை அனைத்தும் சேர்ந்து பல வேலைகளை ஒன்றாகச் செய்யும்.
ஆனால் இந்த விஷுவல் பேசிக் (VB) என்பது Object Oriented என்ற முறையை பின்பற்றி, கொடுத்த வேலையை மட்டும் செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனையே Event Driven Program என்று அழைக்கிறோம். அதாவது, ஒரு வேலையைச் செய்ய, சிறிய அளவிலான புரோம்கிராம் வரிகளை எழுதி செயல்பட வைக்க முடியும்.
விஷுவல் பேசிக் (VB) வரலாறு
1990-ம் ஆண்டுதான் முதன் முதலில் விஷுவல் பேசிக் (VB) என்கிற கணிப்பொறி மொழி உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் வெளிவந்த இந்த விஷுவல் பேசிக் (VB), VB 4.0 என்று அழைக்கப்பட்டது. இதன் ஆரம்ப கால கட்டத்திலேயே, அதிக அளவிலான புரோகிராமர்களையும், பயன்பாட்டாளர்களையும் கவர்ந்து இழுத்த பெருமை இந்த விஷுவல் பேசிக்குக்கு (VB) உண்டு. இந்த விஷுவல் பேசிக் (VB)-யைக் கொண்டு மிக விரைவாக மென் பொருட்களைத் தயாரிக்கும் பண்புகள் உள்ளதால் இதனை Rapid Application Development (RAD) SYSTEM என்றும் அழைக்கலாம்.
ஒரு கால கட்டத்தில் C அல்லது C++ போன்ற கணிப்பொறி மொழிகளை உபயோகித்து புரோகிராம்களை எழுதினால், Mouse போன்ற Input Device கொண்டு Click செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நூற்றுக்கணக்கான வரிகளைக் கொண்டு புரோகிராம் எழுத வேண்டும். ஆனால் இந்த விஷுவல் பேசிக் வெளிவந்த பிறகு, இரண்டே வரிகளில் புரோகிராம் எழுதி அதே வேலைகளைச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.
இன்று பரபரப்பாக பேசப்படும் சி-ஷார்ப் (C#) போன்ற மென் பொருட்கள் விஷுவல் பேசிக் என்ற மொழியின் அடிப்படை கட்டமைப்பை கொண்டே அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து விதமான மக்களும் இந்த விஷுவல் பேசிக்தான் உபயோகிப்பார்கள் என்ற நிலையையும் இன்று மக்கள் மனதிலே ஏற்படுத்தியுள்ளது.
இந்த VB வெளிவருதற்கு முன் FOXBASE மற்றும் FOXPRO என்ற மென் பொருட்களே மிகவும் பிரபல மடைந்து காணப்பட்டது. அதன் பின்னர்தான் இந்த விஷுவல் பேசிக் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுவிட்டது. இன்று எந்த விதமான கணிப்பொறி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் அனைவரும் அதிகம் ஆர்வம் காட்டுவது இந்த விஷுவல் பேசிக்தான்.
ஒரு கல்லூரியிலோ அல்லது கணிப்பொறி பயிற்றுவிக்கும் கணிப்பொறி மையங்களிலோ சரி, இன்றைய மாணவ, மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டுவது இந்த விஷுவல் பேசிக் (VB) படிப்புக்குத்தான். குறிப்பாக C# மற்றும் விஷுவல் பேசிக் (VB) படிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. இதன் எளிமையான வேலைப்பாடுகளும், எளிதில் கற்றுக்கொள்ள வசதியாக இருப்பது மட்டும் காரணமல்ல.
மாறாக அதிக அளவிலே வேலை வாய்ப்புகள் பெற்றுத் தருவதும் இதன் முக்கிய காரணமாகும். இன்று கணிப்பொறித்துறையிலே பலவிதமான பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் இருந்து வந்தாலும், இவையனைத்திலும் விஷுவல் பேசிக் (VB) கட்டாயமாக பயன்படுத்தப்படும் வகையிலேதான் பாடத்திட்டங்கள் கூட அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷுவல் பேசிக் (VB)-கை தொடர்ந்து விஷுவல் ஸ்டூடியோ 7 என்ற மென் பொருள் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. இது ஒரு விஷுவல் பேசிக்-ன் அடுத்த வாரிசாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து VB.Net என்ற மென்பொருளும் தற்போது அதிகம் பிரபலமடைந்து காணப்படுகிறது. இன்று பல்கலைக்கழக பாடத்திட்டமாக இருந்தாலும் சரி, கணிப்பொறிப் பயிற்சிகளை அளிக்கும் பயிற்சி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அதிகம் அவர்கள் முன்னுரிமை கொடுத்து மாணவர்களை படிக்கச் செய்வது இந்த .Net என்ற தொழில் நுட்பத்தைத்தான்.
பேராசிரியர்.
சூ.ஆரோக்கியசாமி,
நன்றி மாலைமலர்
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி ரசிகை தகவலுக்கு... விஷவல் பேசிக் பற்றி பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.. நீங்கள் சொன்னது போல் முன்பு c இல்லாட்டி c+ க்கு தான் மாரியதை. இப்போ இதை தான் கூட பயன்படுத்துகின்றார்கள்
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>விஷூவல் பேசிக் ஏன் ஒரு சிறந்த மொழி?</b>
விஷூவல் பேசிக் மற்ற கணினி மொழிகளை விட எளிதாக கற்றுக் கொள்ளவும், விரைவாக பயன்படுத்தவும் தகுந்த வசதிகளை கொண்டுள்ளது என்பதனாலேயே இன்று பலர் இந்த மொழியைப் பயன்படுத்தி ஆர்வமுடன் பல மென் பொருள்களை உருவாக்குகிறார்கள்.
சாதாரணமாக புரோகிராம் எழுதும் போது ஏதாவது தவறு நேர்ந்தால் அதை சரியான முறையில், சரியான நேரத்தில் சுட்டிக்காட்டும் கணினி மொழிதான் உபயோகிப்பாளர்களிடம் அதிகம் வரவேற்பை பெறும். அந்த வரிசையில் இந்த விஷூவல் பேசிக் (VB) தவறுகளை சரியாக சுட்டிக்காட்ட வல்ல ஒரு நல்ல மென் பொருள் ஆகும்.
மேலும், C, C++ மற்றும் ஜாவா போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்தி புரோகிராம் எழுதும் போது, அவற்றில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்று அறிய அதை Compile செய்து பார்க்க வேண்டும். அதாவது Compile செய்யும் போதுதான், புரோகிராம் வரிகளை ஒவ்வொன்றாகப் படித்து தவறுகளை அறிய முடியும்.
அவ்வாறு சுட்டிக்காட்டும் ஒவ்வொரு தவறுகளையும் சரி செய்த பிறகு மீண்டும் Compile செய்து பார்க்க வேண்டும். இப்படிச் செய்து கொண்டே இருக்கும் போது தவறுகளே இல்லை என்ற நிலை வரும் போது அந்த புரோகிராம் இயக்குவதற்கு சரியான நிலையில் இருக்கும். இவ்வாறு செய்வதால், ஒரு புரோகிராமை இயக்க அதிக நேரம் பிடிப்பதோடு, உபயோகிப்பாளர்கள் சற்று மனம் தளர வாய்ப்பை ஏற்படுத்தும்.
ஆனால் விஷூவல் பேசிக் புரோகிராம் எழுதும்போது ஏதாவது தவறு நேர்ந்தால் அதை உடனடியாக உபயோகிப்பாளருக்கு சுட்டிக்காட்டி, தவறுகளை அப்பொழுதே மாற்றியமைத்துக் கொள்ள இது வழி வகுக்கிறது.
சாதாரணமாக விஷூவல் பேசிக் புரோகிராம் எழுதுபவர்கள் "Syntax Error" என்று சொல்லக்கூடிய சொற்கள் சம்பந்தமான சிறிய தவறுகளைத்தான் அதிகம் செய்வார்கள். இது போன்ற தவறுகளை நாம் புரோகிராம் உருவாக்கும் போதே சரி செய்து கொள்ள முடியும். மேலும் புரோகிராமை இயக்கும் போது சில Logical Error என்று சொல்லக்கூடிய இலக்கணப் பிழையைச் செய்ய நேரிடும். இது போன்ற தவறுகளையும் விஷூவல் பேசிக் சரியான முறையில் சுட்டிக்காட்டி, அதனைச் சரி செய்ய உதவி செய்யும்.
இவ்வாறு எளிய முறையிலான பல வசதிகளைப் பெற்றிருப்பதாலும், உபயோகிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் பல பண்புகளைக் கொண்டிருப்பதாலும் இன்று இந்த மொழி அனைத்து தரப்பு கணினி உபயோகிப்பாளர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று விளங்குகிறது.
விஷூவல்பேசிக் இயக்க பயன்படும் CLIENT/SERVER என்ற தொழில் நுட்பம் பற்றி கீழே காணலாம்.
CLIENT/SERVER தொழில் நுட்பம்
நாம் கம்ïட்டரை பயன்படுத்தும் போது ஒரு மென்பொருள் சம்பந்தமான இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டுமானால், அதற்கு இந்த CLIENT/SERVER என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முதலாளி பல தொழிலாளிகளைக் கொண்டு அலுவலகங்களில் பல வேலைகளைச் செய்வது போல், கணிப்பொறித் துறையிலும், ஒரு முதலாளி (SEVER) கம்ப்ïட்டர் பல தொழிலாளி (CLIENT) கம்ப்ïட்டர்களை தன்னுடன் இணைத்து பல வேலைகளை ஒரே நேரத்தில் இயக்க உறுதுணை புரியும்.
இகஐஉசப என்னும் கம்ப்ïட்டர் மூலம், சர்வர் (SEVER) என்னும் கம்ப்ïட்டரில் உள்ள தகவல்களையோ, அல்லது புரோகிராம்களையோ தேவையான போது எடுத்துக் கொள்ளவும், அதனை இயக்கவும் முடியும். இது போன்ற CLIENT கம்ப்ïட்டர்கள் சில சமயம் பல மைல்களுக்கு அப்பால் கூட இருக்கும். ஆனாலும் அதிக தொலைவை பொருட்படுத்தாமல் SEVER கம்ப்ïட்டரில் உள்ள தகவல்களை எடுத்து செயலாற்ற முடியும்.
ஒரு SEVER கம்ப்ïட்டரானது CLIENT கம்ப்ïட்டரின் தன்மையையும், அதற்கு தேவையான தகவல்களையும் மற்றும் அவற்றுக்கு தேவையான மென்பொருள்களையும் வைத்து தன்னிடம் உள்ள புரோகிராம்களையோ, அல்லது பைல்களையோ (FILE) பகிர்ந்து அளிக்கும் (DISTRIBUTED SYSTEM) இது போன்று உள்ள தொழில் நுட்பத்தால் தகவல்களை அனுப்பும் போது NETWORK TRAFFIC வெகுவாக குறைக்கப்படுகிறது.
ஏனென்றால், ஒவ்வொரு CLIENT கம்ப்ïட்டரும் தனக்கு தேவையான புரோகிராம்களையும், பைல் (FILE) மற்றும் தகவல்கள் (DATA) அனைத்தையும் பெற்றுக் கொண்ட பிறகுதானே அனைத்தையும் இயக்கிக் கொள்கிறது.
மேலே உள்ள வரைபடத்தில் (படம்-2) உள்ளபடி ஒரு CLIENT தனது தேவைகளை கேள்விகள் (QUERY) மூலமாக SERVER கம்ப்ïட்டருக்கு அனுப்பும். அனைத்து விதமான கேள்விகளுக்கும், SERVER கம்ப்ïட்டர் பதிலை கொடுக்கும். ஒருவர் தனக்கு தேவையான புரோகிராமை எழுதி, அதனை CLIENT கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைத்து இயக்கினால் அது CLIENT புரோகிராம் எனவும், புரோகிராம்களை எழுதி அதை NETWORK மூலம் இயக்கினால் அதை SERVER புரோகிராம் எனவும் அழைக் கலாம்.
ஒரு சரியான CLIENT/SER VER தொழில் நுட்பம், எவ்வாறு SERVER உதவியுடன் இயக்கப்படுகிறது என்பதை அருகில் உள்ள படத்தில் (படம்-2) காணலாம். இந்த முறை மூலம் ஒரு நிறுவனத்தின் கம்ப்ïட்டரில் உள்ள APPLICATION அதாவது அந்த நிறுவனத்தின் இயங்கும் மென்பொருள் தனக்கு தேவையான தகவல்களை, SERVER கம்ப்ïட்டரிடம் கேட்கும் பொழுது, அதை SERVER கம்ப்ïட்டர், பைல்களை பாதுகாத்து வைத்திருக்கும் APPLICATION-க்கு சென்று எடுத்து CLIENT அந்த APPLICATION இயக்கும் போது வழங்குகிறது.
CLIENT/SERVER அமைப்பு
இந்த CLIENT/SERVER அமைப்பு இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
1. 2 அடுக்கு அமைப்பு (TWO-TIER ARCHITECTURE)
ஒரு CLIENT கம்ப்ïட்டரானது SERVER கம்ப்ïட்டருடன் நேரிடையாக தொடர்பு கொள்ளும் முறைதான் இரண்டு அடுக்கு அமைப்பு என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால் இவை இரண்டிற்கும் இடையே எந்த விதமான இடைப்பட்ட பாகங்களும் இல்லை. இது போன்ற முறையினால் அதிக அளவிலான பலன்களை பெற முடியாது ஏனென்றால் எல்லா விதமான கேள்விகளுக்கும் மற்றும் அனைத்து விதமான வேலைகளையும் இவை இரண்டும் நேரிடையாகவே செய்வதால் மென்பொருள்களில் ஏற்படும் சில மாற்றங்களை இவற்றால் சரி வர செய்ய முடிவதில்லை.
2. மூன்று அடுக்கு அமைப்பு (3-TIER ARCHITECTURE)
இந்த முறை மூலம் ஒரு CLIENT கம்ப்ïட்டருக்கும் மற்றும் SERVER கம்ப்ïட்டருக்கும் இடையில் Transation Server என்ற ஒரு இணைப்பு மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மென் பொருள் மூலம் SERVER கம்ப்ïட்டரையும்,CLIENT கம்ப்ïட்டரையும் எல்லா விதமான வேலைகளுக்கும் சரியான முறையில் இயக்க உதவுகிறது.
இவற்றில் முதல் அடுக்கு என்பது CLIENT, இரண்டாவது அடுக்கு என்பது SERVER ஆகவும், மூன்றாவது அடுக்கு SERVER என்பது MIDDLE WARE என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது CLIENT கம்ப்ïட்டரில் Wep Browser போன்ற மென்பொருளையும், SERVER கம்ப்ïட்டரில் DBMS போன்ற SOL SERVER மென் பொருள்களையும், இவை இரண்டையும் இணைக்கும் இடைப் பட்ட அடுக்கு மென் பொருளாக Activeserver page scripts போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற CLIENT/SERVER முறையில் இயங்கும் கம்ப்ïட்டர் மையங்களில்தான் இந்த விசுவல் பேசிக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
SERVER என்பது என்ன?
ஒரு SERVER என்பது NETWORK என்ற இணைப்பு மூலம் பல கம்ப்ïட்டர்களை (CLIENT) இணைத்து, அவற்றிற்கு தேவையான பல தகவல்களையும், உதவிகளையும் வழங்குவதோடு, அவற்றிற்கு பாதுகாப்பும், கட்டுப்பாடும் விதித்து ஒரு நல்ல தலைவனாகவும், முதலாளியாகவும் செயல்படும் ஒரு கம்ப்ïட்டர் ஆகும். இந்த SERVER ஆனது பல வகைகளாக பிரிக்கப்பட்டு, செயல்படுத்தபப்படுகிறது. உதாரணமாக FILE SERVER , APPLICATION SERVER, DATA BASE SERVER, E-MAIL SERVER மற்றும் COMMUNICATION SERVER போன்றவைகளாகும். இது போன்ற SERVER-L NETWORK மூலம் பல CLIENT கம்ப்ïட்டர்களை இணைத்து NETWORK ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் அனைத்து வேலைகளையும் செய்கிறது. தற்சமயம் அதிக உபயோகத்தில் உள்ள NETWORK OPERATING SYSTEM -கள் யாதெனில் NOVELL NET WARE, WINDOWS NT மற்றும் UNIX போன்றவைகளாகும். VB SCRIPT என்ற மென்பொருள் உதவியுடன்,ஒரு SERVER ஆனது ACTIVE SERVER PAGE(ASP) என்ற ஒரு பகுதியை உருவாக்கி எல்லாவிதமான CLIENT கம்ப்ïட்டர்களுடனும் தொடர்பு கொண்டு, அவற்றின் INPUT சம்பந்தமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கிறது.
CLIENT என்றால் என்ன?
ஒரு CLIENT என்பது NETWORK என்ற இணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்ïட்டர் ஆகும். மேலும் ஒவ்வொரு CLIENT கம்ப்ïட்டரும் தனக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள WINDOW மூலம் தகவல்களை அளிக்க முடியும். ஒரு நிறுவனத்திற்கு தேவையான மென்பொருள் ஒன்றை தயாரிப்பதாக வைத்துக் கொண்டால் அந்த மென்பொருளுக்கு தேவையான INPUT சம்பந்தமான தகவல்களை FORM என்று சொல்லக் கூடிய தகவல்களை அளிக்கும் திரைகளை உருவாக்குவதற்கும் இது பயன்படும். மேலும் விஷூவல் பேசிக் 6.0 என்ற மென்பொருள் மூலம் ஒரு CLIENT தனக்கு வேண்டிய அளவில் கம்ப்ïட்டர் திரையை மாற்றியமைத்து பல கட்டளைகளைப் பிறப்பித்து, அதிக அளவிலான பல வேலைகளைச் செய்ய முடியும்.
பேராசிரியர்.
சூ.ஆரோக்கியசாமி,
நன்றி மாலைமலர்
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>விஷூவல் பேசிக் மூலம் மென்பொருள் தயாரிக்கும் முறை</b>
1. முதலில் என்ன முறையிலான மென்பொருள் தயாரிக்க வேண்டும் எனபதற்கான தேவைகளை கண்டறிய வேண்டும். (PROBLEM IDENTIFY)
2. நாம் எடுத்துக் கொண்ட வேலையை முடிக்க, கம்ப்ïட்டர் திரை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் (Appearance of the screen).
3. நமக்குத் தேவையான Objects மற்றும் மாடல்களை, மெனுக்கள் (Menu) மற்றும் கட்டளை பிறப்பிக்கும் பெட்டிகள் (COMMAND buttons) போன்றவற்றை கம்ப்ïட்டர் திரையில் வரைய வேண்டும்.
4. அவ்வாறு வரையப்பட்ட கட்டளை பட்டன்களைப் பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வசதியாக, அதில் ஒரு பெயரையும், தகுந்த கலரையும், சரியான வடிவத்தையும் கொடுக்க வேண்டும் (Design).
5. இப்பொழுது விஷூவல் பேசிக் மூலம் புரோகிராம் எழுதி ஒவ்வொரு பட்டனையும் இயக்கும் போது ஒவ்வொரு வேலையைச் செய்யும் விதமாக, கட்டளைகளை அமைக்க வேண்டும்.
6. தற்பொழுது, இந்த விஷூவல் பேசிக் புரோகிராமை இயக்கி நாம் எதிர்பார்த்த மாதிரி வேலை செய்கிறதா, என்று சரி பார்க்க வேண்டும். (Excution of the program)
7. அவ்வாறு இயக்கும் போது ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அவற்றை சரியான விதத்தில் நிவர்த்தி செய்ய வேண்டும் (DEBUGLING).
இது போன்று இந்த 7 முறைகளையும் கையாண்டு விஷூவல் பேசிக் புரோகிராம் எழுதும் முறைதான் Development cycle என்று அழைக்கப்படுகிறது.
CLIENT/ SERVER இயங்கும் முறை
இந்த முறை மூலம் நஉதயஉத கம்ப்ïட்டரையும் பல SERVER கம்ப்ïட்டரையும் இணைத்து புராசஸிங் (PROCESS) வேலைகளை பகிர்ந்து செய்து கொள்ள வழிவகை செய்கிறது. ஒரு CLIENT தனக்கு தேவையான வசதிகளை SERVER -இடம் கேட்க வேண்டும். அதற்கு, அந்த SERVER கம்ப்ïட்டர் தேவையான தகவல்களையும், மற்ற உதவிகளையும் வழங்க வேண்டும்.
பேராசிரியர்.
சூ.ஆரோக்கியசாமி,
நன்றி மாலைமலர்
<b> .. .. !!</b>
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
நல்ல விளக்கம் தான் அதுவும் தமிழில் கொடுத்து இருக்கிறீங்க ... சுப்பராக கொப்பி பண்ணி இணைச்சு யாழ் இணைய அங்கத்தவர்களுக்கும் பிரயோசனப்படுத்தி இருக்கிறீங்க
நன்றி
|