Posts: 509
Threads: 71
Joined: Nov 2005
Reputation:
0
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஏனைய தேர்தல்களின் போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேல்மாகாண மக்கள் முன்னணி ஆகிய நான்கு தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதற்கமைய எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தமிழ் உறுப்பினர்கள் ஒரே கூட்டமைப்பாக புதிய சின்னத்துடன் போட்டியிடுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சிகளின் தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பி. சந்திரசேகரன் ,மனோகணேஷன், ஆர். சம்பந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் புதிய கூட்டமைப்பின் பெயர் சின்னம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
அட நல்ல விடயம் எல்லாம் நடக்குது காலம் கனிந்து வர எல்லாம் கூடிவரும் என்பார்கள் அப்படியான சம்பவங்களா இது....??
::
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
ம்ம் நேற்று கூட..ஆறுமுகம் தொண்டமான் என்பவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் பேட்டி அளிந்த்திருந்தார் ....
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
எங்கள் மக்களின்ர ஒற்றுமைதான் எங்கட உரிமைகளை வென்று எடுக்கும். அப்பிடிப் பார்க்கும் போது இது ஒரு மைல்க்கல் தாண்டப்படுகிறது..
:::::::::::::: :::::::::::::::
Posts: 361
Threads: 39
Joined: Dec 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>ம்ம்.. தற்போது தலைப்புச்செய்தியில் முதற்செய்தியாக ஆறுமுகம் தெண்டமான் மகிந்த ராஜபக்ஷவுடன் இரகசிய பேச்சுவார்த்தை என்று செய்தி சொல்லப்பட்டது.. நல்ல கூட்டமைப்புத்தான்..</span>
8
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
சரியா சொன்னீங்கள் சுகுமார் அண்ணா. உதுகளுக்கு தீக்கோழி மூளை, நீங்கள் சொல்லுற மாதிரி மண்ணுக்கை தலை புதைச்சுக் கொண்டு கண்டதையும் யதார்த்தம் தெரியாமல் எழுதுகினம்.
என்ன இருந்தாலும் 8ஆம் வகுப்பு அறிவு பிழைகளை மன்னிக்கச் சொல்லி கொண்டு திரியிறது உங்கடை பிழையில்லை கண்டியளோ.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
[quote=Sukumaran]<span style='font-size:25pt;line-height:100%'>ம்ம்.. தற்போது தலைப்புச்செய்தியில் முதற்செய்தியாக ஆறுமுகம் தெண்டமான் மகிந்த ராஜபக்ஷவுடன் இரகசிய பேச்சுவார்த்தை என்று செய்தி சொல்லப்பட்டது.. நல்ல கூட்டமைப்புத்தான்..</span>
சரியாக கஸ்ரப்படுகிறீங்கள் போல. சமாளிச்சுத்தான் ஆகணும்.
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் - ஜனாதிபதி இடையே கொழும்பில் சந்திப்பு
ஆறுமுகத் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகத் தொண்டமான் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நேற்றைய தினம் வன்னியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவை சந்தித்துவிட்டு இவர் கொழும்பு திரும்பியிருந்தார்.
இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் அவர்களின் அழைப்பின்பேரில் இன்று இந்தியா இல்லத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட விருந்து உபசரிப்பின்போது ஆறுமுகத் தொண்டமானுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த சந்திப்பு பற்றிய மேலதிக விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.
ஆனால் தமிழோசையிடம் பேசிய இலங்கை தொழிலாளர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான ஆர்.யோகராஜன், இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது என்றும், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சமாதான முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் சுமூகமான முறையில் இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது என்றும் தெரிவித்தார்.
BBC Thamiloosai
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
நேற்றைய த.தே.தொ இல் இடம்பெற்ற ஆறுமுகத்தினுடனான செவ்வியில், எமக்கேற்படும் சகல சந்தேகங்களையும் செவ்வி கண்ட வீராவினால் கேட்கப்பட்டது.
எவை எப்படியாயினும் வடகிழக்கு/மலையக உறவு ஒரு காலத்தின் தேவையே! இவ்வுறவு தமிழ்நாட்டிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் தமிழ்த்தேசிய எதிர்ப்பு காய்நகர்த்தல்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும்!!!!
" "
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
எமக்கு இஸ்ரேல் எனும் நாடு பல பாடங்களை சொல்லிச் செல்கின்றது. அந்த நாட்டின் பாதுகாப்பிற்கும்/உலக யூத மக்களின் பாதுகாப்பிற்குமாக இஸ்ரேலை நோக்கி யூத மக்கள் செல்ல வேண்டிய தேவையேற்பட்டது. பல பாரிய யூத குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இன்று இஸ்ரேலின் குடியேற்றங்களினால் ஏற்பட்டிருக்கும் சனத்தொகைப் பெருக்கமும், அந்நாட்டின் பாதுகாப்பிற்கும் பலமாகவுள்ளது.
இன்று பாரிய அளவில் களத்திலிருந்து மக்கள் புலம் பெயர்ந்த நிலையிலும், எம்மீழத்தின் பாதுகாப்பிற்காக மக்கள் தொகை பெருக வேண்டிய தேவையினாலும், இதே மலையக மக்களின் பாதுகாப்பிற்கு தமிழீழம் தான் அவர்களின் வாழ்விடமாக்கப் பட வேண்டிய தேவையுமுள்ளது. ஆகவே ஒரே மண்ணில் வாழப்போகும் ஓர் தாய் வயிற்றுப் பிள்ளைகளின் வழிகாட்டிகள் ஓரணியில் திரள்வது வரலாற்றுத் தேவையாகும்.
" "
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:8 ஆம் வகுப்பு மட்டு படிச்சிருக்கிறன் எண்டு காட்ட பின்னை எப்படிக் காணும் எழுதுறது?
நீரும் கேள்விஞானத்தை பயன்படுத்தி முன்னேறப் பாக்குறீரோ? :roll:
முயற்சி திருவினை ஆக்காது திருகுவலிதான் ஆக்கும் அண்ணா.!
:::::::::::::: :::::::::::::::
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
இங்கே "8ஆம் வகுப்பு" படிக்கிறன் அல்லது படிச்சிருக்கிறன் என்று தயவு செய்து எழுதாதீர்கள். ஏன் என்றால் ஆ...சங்கரிக்கு "8ஆம் வகுப்பு" என்றால் வலு பிரியம்.
(அவருக்கு ஆண்பால், பெண்பால் எல்லாம் தெரியாது)
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "