12-14-2005, 09:31 AM
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் (வயது 84) ஐயா சென்னையில் இன்று புதன்கிழமை காலமானார்.
இந்தியத் தொடருந்து துறையில் பணியாற்றி 1974 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் பெரியார் கொள்கைகளின் மீது தீவிரமான ஈடுபாட்டோடு இயங்கியவர்.
தமிழீழத் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளாகி தமிழ்நாட்டுக்கு சென்ற காலத்தில் தமிழீழத் தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாக உறுதுணையாக இயங்கியவர்.
ராஜீவ் காந்தி வழக்கு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கடுமையான ஒடுக்குமுறைகள் தீவிரமாக இருந்த போது தமிழ்நாடு காவல்துறையால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்ட குண்டு சாந்தனுக்கு துணிச்சலோடு அடைக்கலம் கொடுத்தவர் ஆனந்தராஜ் ஐயா.
ஆனால் காவல்துறையினர் ஆனந்தராஜ் ஐயாவினது இல்லத்தை முற்றுகையிட்டனர். குண்டு சாந்தன் சயனைட் அருந்தி உயிர் நீத்தார். அதன் பின்னர் ஆனந்தராஜ் ஐயா கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டுக் காவல்துறையினர் முதுமை வயதிலும் அவரை சித்திரவதை செய்த போதும் கூட "நான் ஒரு பெரியார் தொண்டன். ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக உயிரையும் இழப்பேனே தவிர இலட்சியத்தை இழக்கமாட்டேன்" என்று தெரிவித்துவிட்டு சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டார். குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 10 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் பிணையில் விடுதலையானார்.
சென்னை சிறப்பு நீதிமன்றம் நடைபெற்ற இந்த வழக்கில் தடா சட்டத்தின் கீழ் ஆனந்தராஜ் ஐயாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதை ஏற்று இரண்டரை ஆண்டுகாலம் சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். பின்னர் இந்தியத் தலைமை நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் ஆனந்தராஜ் ஐயா விடுதலை செய்யப்பட்டார்.
ஆனந்தராஜ் ஐயாவை விடுதலை செய்த இந்தியத் தலைமை நீதிமன்றம், "பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்டுகிறவர் மீதான குற்றம் நிரூபிக்காத வரையில் அவருக்கு அடைக்கலம் கொடுப்பது தவறும் இல்லை. அது பயங்கரவாதச் செயலும் இல்லை" என்று சிறப்புமிக்கத் தீர்ப்பை அளித்தது.
திருச்சி கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் ஐயா, குண்டு சாந்தன் மறைவுக்குப் பின்னர் "இந்த இல்லத்தில்தான் குண்டு சாந்தன் இறந்தார்" என்றும் தன் இல்லத்துக்கு "தமிழ் நல்உலகம் கூறும் தம்பி பிரபாகரன் இல்லம்" என்றும் கல்வெட்டில் செதுக்கி முதுமையான வயதிலும் உறுதியான தமிழீழப் பற்றாளராக விளங்கினார். தனது இல்லத்தில் தமிழீழத் தேசிய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையிலான துப்பாக்கியும் தொப்பியுமான இலட்சிணையைப் பொறித்து தான் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளன் என்பதை பகிரங்கப்படுத்தி விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுக் களத்தில் தீவிரமாக இயங்கியனார் அவர்.
ஆனந்தராஜ் ஐயாவின் மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, வீரவணக்கம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
பற்றுறுதிமிக்க ஒரு பெரியார் தொண்டராகத் திகழ்ந்தவர். குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கு நடைபெற்ற போது தன்னுடைய விடுதலைக்காக, நான் குண்டு சாந்தனுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்று நீதிமன்றில் கூறமாட்டேன் என்று தெரிவித்ததோடு நான்தான் குண்டுசாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்தேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர் பெரியவர் ஆனந்தராஜ் ஐயா. ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றவர்.
தான் பிணையில் விடுதலையான பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசுகையிலும் கூட, என்னுடைய வீடு என்பது தமிழின இன உணர்வாளர்களுக்கான வீடு. எத்தனை அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து தமிழின உணர்வாளர்களுக்கும் அடைக்கலம் கொடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர்.
இந்தியத் தலைமை நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட போதும் கூட தனது விடுதலைப் புலிகளின் ஆதரவுச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து தம்பி பிரபாகரன் பிறந்த நாளன்று தேனிசை செல்லப்பா மற்றும் எம்மைப் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சிகளை செய்து கொண்டே இருந்தார்.
ஒரு உறுதியான இலட்சியவாதி மறைந்துவிட்டார். இன்றைய இளைஞர்களுக்கு கொள்கையில் எப்படி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஒரு முன்மாதிரியான வழிகாட்டியாக இருந்தவர் ஆனந்தராஜ் ஐயா. பெரியவர் ஆனந்தராஜ் ஐயாவினது மறைவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
புதினம்

" "