Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'>
<b>கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!
படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!
கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!
மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!
அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!</b>
கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!
அதற்குள்ள ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இப்ப வேறை சூறாவளியாம். :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மாதங்கள் ஓடினதுதான் மிச்சம்...மனக்காயங்கள் ஆற்ற யாருமில்லாமல் எத்தனை உறவுகள் வேகுகின்றன..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வரும் 26ம் திகதியோடு சரியாக ஒரு வருடம் புூர்த்தியும் ஆகப் போகுது. எங்கள் சனத்துக்கு பொது அமைப்புக்கள் கொடுத்ததை வைத்து தான் சமாளிக்குதுகள். இப்படி எத்தனை காலத்துக்கு காலத்தை ஓட்டுகின்றது? :roll:
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வரும் 26ம் திகதியோடு சரியாக ஒரு வருடம் புூர்த்தியும் ஆகப் போகுது. எங்கள் சனத்துக்கு பொது அமைப்புக்கள் கொடுத்ததை வைத்து தான் சமாளிக்குதுகள். இப்படி எத்தனை காலத்துக்கு காலத்தை ஓட்டுகின்றது? :roll:
[size=14] ' '
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகளே உங்கள் கவிதை காந்த கால வலியை நினைவுகூர்கிறது. இப்போது புயல் எச்சரிக்கை கிடைத்துள்ளதாக செய்திகள் இணையத்தில் இருக்கிறன. அது எத்தகைய பாதிப்பை கொண்டு வருமோ?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
[quote=kuruvikal]<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'>
அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...![/b]
கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!
எத்தனையோ சிறுவர்களையும் பெரியவர்களையும் அனாதையாக்கி விட்டு போன சுனாமியின் ஒரு வருட நினைவு கவிதை வலிக்கின்றது
சுனாமியின் பாதிப்பு இன்னும் அடங்கலை அதற்குள் இன்னுமொரு சூறாவளியா?
Posts: 488
Threads: 45
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:மாதங்கள் ஓடினதுதான் மிச்சம்...மனக்காயங்கள் ஆற்ற யாருமில்லாமல் எத்தனை உறவுகள் வேகுகின்றன..! 
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வலி வலி குருவிகளே கண்ணீர் வலி
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
[quote=kuruvikal]<img src='http://kuruvikal.yarl.net/archives/tsunami_31.jpg' border='0' alt='user posted image'>
<b>கடலிடை ஒரு குழப்பம்
கலைந்தது அமைதி
கறுவி எழுந்தவள் பேசினால்
"சுனாமி" அலைகளால்..!
சில மணித்துளிகளில்
கரை தொட்டவள்
ஆடினாள் ஊழியக்கூத்து..!
படுக்கையில் உறங்கியோரும்
பள்ளி போனோரும்
பசியினில் தவித்தோரும்
பண்டிகை கண்டோரும்
பாதையில் பயணித்தோரும்
பார்த்திருக்க பரிதவிக்க
பாதியில் போயினர்
பரலோகம்...!
கட்டியணைத்தபடி
கட்டுக்கலைந்தபடி
கட்டுடல் சிதைந்தபடி
கரையெங்கும் பிணக்கோலம்..!
கண் முன்னே காவியங்கள்
அலையோடு அள்ளுப்பட
கைகள் இருந்தும்
கருவி இருந்தும்
கையாலாகாதவர்களாய் உறவுகள்..!
பாசப்பிணைப்புக்கள் அறுபட
அன்புறவுகள் முறிபட
கதறி அழக்கூட அவகாசம் இன்றி
பாவிகளான பந்தங்கள்
அப்படி ஒரு அலங்கோலம்..!
மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!
அள்ளிக் கொடுத்ததுவும்
கிள்ளிக் கொடுத்ததுவும்
கிடைப்பதற்குள் எட்டிப்பறித்ததுவும்
ஏமாற்றியதுவும்
பொருளும் பவிசும்
போனதுக்கு ஈடாகுமோ...??!
கொட்டிக் கொடுத்தது கூட
கைக்கெட்டா நிலை..!
கொட்டாவிகள் மலிவாக
மனதுக்குள் உள்ள வலிக்கு
மருந்தென்ன....
அங்கலாய்ப்பு..!!!
இன்னும் எத்தனை ஆண்டுகள்
அவலத்தின் வலி...
தீருமோ அது...???!
கூத்தடித்த கடலே விடை கொடு...!</b>
கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மனித உறவுகளுக்காக...!
வலிகளை வலிமையான வரிகள் கொண்டு விவரித்து பாட குருவிகளுக்கா வார்த்தைப் பஞ்சம். எங்கள் வாழ்வின் வளிநெடுகில் அவலம். அவலத்துள் அவலங்கள் கண்டு கொதிக்கின்ற குருவிகளே. தமிழன் என்பதனால் பொதுவான கட்டமைப்பைக் கூட புதைகுழியில் புதைத்துவிட்டு தமிழனை பதைக்க விட்ட சிங்கள இனவெறி பிடித்த பேய்களிடம் கேட்கவேண்டிய கேள்விகளை, சுனாமியிடம் கேட்டு பயன் என்ன?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
புயல் அபாயம் போய்விட்டதாக செய்திகளில் படித்தேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை நாம் ஏறக்குறைய மறந்துவ்விட்டோம் பலர் இன்னும் எதிவித உதவியும் கிடைக்காமல் அவதியுறுவதாக பாதிக்கப்பட பிரதேசங்களுக்கு போய் வந்த சிலர் சொன்னார்கள்.
அவர்களை நினைவூட்டிய கவிதைக்கு நன்றி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 98
Threads: 2
Joined: Sep 2005
Reputation:
0
salut
கவிதை அருமை
சிந்திக்க வைத்தது
கவிதை
...!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
"ஆழிப்பேரலையால் 14 ஆயிரத்து 300 பேர் காவுகொள்ளப்பட்ட தேசம். 3000 பேர் வரை காணமல் போன தேசம்.
52 மருத்துவ நிலையங்கள், 57 கல்விக்கூடங்கள், 50 ஆயிரத்துக்கும் அதிக வீடுகள் அழிக்கப்பட்டும், துடைத்தெறியப்பட்டதுமான தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அதிலிருந்து மீளவேண்டும் என்ற நிலை அடுத்த கட்டம் இருக்கிறது."
http://www.eelampage.com/?cn=22666
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>