Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
தன்னுடைய எண்ணப்பறவையை மனச்சிறையில் அடைத்துவிட்டு கதவைத்திறந்தவள் அம்மா உன்னைக் கூப்பிடுகிறா என்றுவிட்டு ஓடினாள். அவளும் அம்மாவிடம் சென்று என்னம்மா என்று கேட்டாள்.
பிள்ளை இதிலை இரு என்று அம்மா தனக்கு பக்கத்திலிருந்த கதிரையை காட்டினாள். பக்கத்திலிருந்தவளின் தலையை அம்மா தடவிக்கொடுத்து தலையை தன் மீது சாய்த்தாள்.
தலையை தடவியபடியே பிள்ளை உனக்கு இப்போ புரியாத வயசு நீ எதற்கும் ஆசைப்பட்டால் நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம். ஆனால் நீ எதையும் சரியாக சிந்தித்துப்பார். திடீர் முடிவு விபரீதத்தில்தான் முடியும். நீ யாரையாவது விரும்பினால் கூட நாங்கள் திருமணம் செய்து வைப்போம். தடையாக நிற்கமாட்டோம்.உனக்கே தெரியும் நீ ஒரு டாக்டர் ஆக வேண்டும் எம்முடைய பிரதேசத்தில் உள்ள மக்கள் சிகிச்சை பெறுவதற்காக எவ்வளவு சிரமப்படுகின்றார்கள். நீ எடுத்த இலட்சியத்தை முடி அதன்பிறகு உன் தன்ப்பட்ட வாழ்க்கையை தெரிவுசெய். என்று அன்பாக கூறினாள்.
கீதா தன்குள் யோசித்தபடி தலையை ஆட்டினாள்.
இரு நான் உனக்கு கோப்பி கொண்டு வாறன் என்று அம்மா குசினிக்குள் சென்றாள்.
கீதா தனக்குள் யோசித்தாள் அப்பா வந்தபோது காந்தன் ஒடிப்பொனாரே என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல். காந்தன் நல்லவரா கெட்டவரா? பிரச்சனை வரும்போது உதறிவிட்டு ஓடுவரா அல்லது.... தொடருங்கள்
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
தனது கருப்புநிலா எழுதிய கவி வரிகள் அவளின் மனதில் அடிக்கடி வந்து வந்து அலைமோதின. "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துக்களினால் காதல் கவி பாடுவோமா" என்ற வார்த்தைகள் மனதில் மீண்டும் வந்தபோது மீண்டும் மனதினுள் பட்டாம்புூச்சி பறந்தது. எதற்கும் சில வரிகள் எழுதிப் பார்ப்போம் அதிலிருந்தாவது அவனுடைய உண்மையான குணத்தை அறிய முடியுமா என்று எத்தனிப்போம் என்று எண்ணியபடி தனது பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.
பள்ளிக்கூடம் போகையில்
பக்கத்தில் வந்த கறுப்பு நிலாவே
மன்னிக்கவும்.... காந்தனே! கவியே!
எட்டு வயதாகுமுன்னமே என் சுட்டித்தங்கை
எட்டி எட்டிப் பார்க்கிறாள்
கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று!
பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்கிறார் அன்னை
டாக்டராகவே வரவேண்டும் என்கிறார் என்னை
எப்போதும் என்னருகில் இருந்து தட்டிக் கொடுப்பீர்களா?
அவ்வப்போது இன்றுபோல் தவிக்க விட்டுவிட்டு ஓடுவீர்களா?
ஒரு வார்த்தையாவது எழுதி மீண்டும் என் சைக்கிளின்
"கரியரில்" வைத்துவிடுங்கள்
இரவினில் சந்திப்பு வேண்டாம்
அதை என்னிடம் கேட்கவும் வேண்டாம்
வர முடியாது வெளியில் என்னால்
வந்தாலும் உங்களை தெளிவாகக் தெரியாது முன்னால்.
என்று தான் முதல்முதலாக வடித்த காதல் கவிவரிகளை எழுதிவிட்டு புத்தகத்தை மூடினாள். அந்த நேரம் பார்த்து அருகே காலடி கேட்டது.... தொடருங்கள்
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
கேட்டது காலடி ஒசை மட்டும் அல்ல அவளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதியின் ஒசையாக இருந்தது. அவசர அலுவலாக வந்த அம்மா அவள் எதோ குழப்பத்தில் இருப்பதாக அறிந்தாள். "கீதா நானும் அப்பாவும் எவ்வளவோ கஸ்டப்பட்டுத்தான் உங்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கின்றோம். உனது அக்கா எமது கஸ்டத்தை எல்லாம் உணராமால் தனக்கென்று ஒரு வாழ்வை தானே தேடிக்கிட்டு பட்ட கஷ்டம் எல்லாம் உனக்கு தெரியும் தானே. அவா எடுத்த முடிவால் அவாவின் வாழ்க்கையே இன்று முடிந்து விட்டுது. அதைப்போல் எனது மற்ற மகளின் வாழ்வும் பாழக நான் விரும்பலை. எமது அறியாமையினால் உன் அக்காவை தான் இழந்து விட்டோம். இனியும் ஒரு இழப்பை எனக்கோ உனது அப்பாவிற்கோ தாங்கும் சக்தி இல்லை." என்று கையெடுத்து கும்பிட்டார் அவளின் அன்னை. "அம்மா அம்மா என்ன இது? நான் உங்களின் மகள் அம்மா. எனக்கு உங்க இலட்சியங்கள் தான் முக்கியம். உங்களின் மெய்யான அன்பிற்கு முன்னால் என்னுடைய காதல் தூசு தான் அம்மா. என்னுடைய ஒவ்வொரு ஆசைகளையும் பார்த்து பார்த்து நிறைவேற்றி வைக்கும் உங்களுக்காக இந்த ஒரு ஆசையை நிறைவேற்ற கடவுள் தந்த பாக்கியமாகவே கருதுகின்றென். அம்மா எனது மனம் ஒரு நாள் அலைபாய்ந்தது உண்மை தான் அம்மா. ஆனால் அந்த காதலை திரும்பவும் நான் நினைக்கப்போவதில்லை. நீங்களாக வந்து என் மனதை கவர்ந்தவனை ஒப்படைக்கும் மட்டும் நான் உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிக் கொண்டு இருப்பேன் என்று உறுதியுடன் தாயின் கையைப்பற்றி கூறினாள். மகளின் உறுதியை கண்ட தாய் கண்ணை துடைத்துக்கொண்டே அடுக்களை பக்கம் போனாள்.
ஒரே நாளில் புத்து அந்நாளிலே கருகின தனது காதலுக்காக கடைசியாக ஒரு சொட்டு கண்ணீர் வடித்தாள் கீதா. அந்த சொட்டுக் கண்ணீர் அவள் ஆசைப்பட்டதெல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர் இவளின் காதலுக்கு மாரியாதை காட்டுவார்கள் என்பதை கூறி நிலத்தில் விழுந்து தெறித்தது
முற்றும்
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
என்ன ரமா இது கடைசியா எல்லா பெண்களும் பெற்றோருக்காண்டி எங்கடை காதலை தியாகம் செய்யிறம் எண்டு சொல்லி எங்களுக்கு அல்வா குடுக்கிற மாதிரியே முடிச்சிட்டியள் இன்னோரு காதலுக்கு மரியாதையா? ஆனா அதிலை காதல் ஜெயிக்குதே......... ஓ.....இதுவும் ஜெயிக்கும் எண்டு சொல்லுறியள் நன்றி ...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அங்கிள் என்ன கதையை ஒழுங்கா படிக்கலையா? இந்த பெற்றோர்கள் கீதாவை காதலை மறக்கச் சொல்ல வில்லை தானே. அதாவது அம்மா அப்பா எம்மீது இப்படி பாசமாய் இருக்கும் போது நாம் அவர்களுக்கு மாரியாதை செய்யணும் அதை வேளை காதலுக்கும் மாரியாதை செய்யணும்... இது குட்டிக்கதை தானே அங்கிள் .. மெக தொடர் என்றால் கீதாவின் படிப்பை முடித்து கலியாணத்தையும் கட்டி வைத்திருக்காலாம்.. இன்னொரு கதையில் கலியாணததை முடித்து வைத்திட்டால் போச்சு
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இந்த குட்டி தொடர் கதையின் முழுவதையும் சேர்த்து போடுகின்றென்..
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
ஒரு கதை
அதிகாலை நேரம் பறவைகள் தமது கூட்டில் இருந்து வரவேற்பு கீதம் இசைக்க காலை கதிரவன் கிழக்கு திசையில் இருந்து புமியை நோக்கி மெல்ல மெல்ல தவளத்தொடங்கினான் விவசாயிகள் கலப்பையை தோளில் சுமந்த வண்ணம் வயலை நோக்கிச் சென்றனர்.
கீதா படுக்கையில் புரண்டு படுத்தாள்.
ஏய் கீதா எழும்பு எழும்பு மணி என்னாகிறது??
இன்னும் என்ன தூக்கம் பாடசாலைக்கு கிளம்ப வேண்டும் என அம்மாவின் கூப்பாடோ வீதிவரை கேட்டது
இன்னும் ஒரு ஐந்து நிமிடம் அம்மா என்று மறுபக்கம் திரும்பி படுக்க ஆயத்தமாகும்போது "ம்ம் படு படு கொஞ்ச நேரத்தில் செம்பும் தண்ணியும் தான் வரும் முகத்திற்கு" என்ற வார்த்தையை கேட்டு தூள்ளி எழுந்தாள்
எழுந்து நேரத்தை பாத்தாள்இ நேரம் ஏழு மணி எட்டுமணிக்கு பாடசாலையில் இருக்க வேண்டும்இ இல்ல்லாவிடில் மொட்டைவாத்தி தலையில் டொக்கு டொக்கு என்று குட்டுவார். அதை நினைத்தபோதே தலை வலித்தது இ அவசரம் அவசரமாக குளித்துவிட்டு கண்ணாடியில் வந்து தை சீவத்தொடங்கினாள்இ அப்போதுதான் நினைவில் வந்தது எங்கே அவனை கானவில்லைஇ ஒவ்வரு நாளும் உடற்பயிற்ச்சிக்கு போயிற்று சரியாகஇ தான் தலை சீவும் நேரத்தில் அவன் அங்கு இருப்பான் தன் நன்பனுடன். அவள் மனது தவித்தது. எங்கே அவன். பொங்கும் பூங்குனலில் பாடல் போய் கொண்டிருந்தது "எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா"
அந்த பாடல் தனக்கென ஒலிப்பதாக உண்ர்ந்தாள். மீண்டும் அம்மாவின் அலறல் "என்ன கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாய்.. பள்ளிக்கூடம் போகும் முன் எதாவது உதவி செய்வோம் என்று நினைப்பு இல்லை எந்த நேரம் பார் கண்ணாடிக்கு முன்னால் தான்" என்று அம்மா புலம்பத்தொடங்கினாள். அம்மா எனக்கு நேரமாகிவிட்டது பின்னேரம் வந்து என் செல்ல அம்மாவிற்கு உதவி செய்கின்றேன் என்றவாறே முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு சாப்பாட்டு வோக்சையும் எடுத்துக்கொண்டு சைக்கிளை எடுத்தாள். அப்போ தான் தங்கை நேற்று சைக்கிளை எடுத்து காத்து போக வைத்திருந்தது தெரிந்து. இப்போ இதற்கு சண்டை போட்டால் நேரம் போய் விடும் பின்னார் வந்து அவாவை கவனிப்போம் என்று நினைத்து விட்டு சைக்கிளை உருட்டத் தொடங்கினாள் பக்கத்தில் உள்ள சைக்கிள் கடைக்கு. அந்த வெண்ணிலா எங்கையாவது கண்ணில் படக்கூடாதா என்று நினைத்துக்கொண்டே......
என்ன ஆச்சரியம் அவளின் வெண்ணிலா அதுதாங்க கறுப்புநிலாவாகிய காந்தன் சைக்கில் கடையில் பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்தான் தனது சைக்கிளுக்கு அவனைக்கண்டதும் ஏனோ தெரியவில்லை புதுசெருப்புப் போட்டு நடப்பதுபோல அவளின் கால்கள் தடுமாறிப் பின்னியது கிட்ட வந்து விட்டாள் கடைக்காரன் பஞ்சர் போட நேரமாகும் பின்னேரம் வந்து எடுக்கும் படி கூறினான் இப்ப என்ன செய்வது பள்ளிக்கூடத்துக்கு நடந்து போக நேரமாகி விடுமே யோசித்தபடி நடக்கத் தொடங்கினாள் பின்னால் ஏதோ சத்தம் காந்தன்தான் சைக்கிலில் வந்து கொண்டிருந்தான் அவனின் சைக்கிளுக்கு பெல்லைத்தவிர மற்றதெல்லாம் சத்தம் போட்டன கிட்ட வந்தவன் சைக்கிலை நிப்பாட்டி கேட்டான் "பள்ளிக்கு நேரமாகிவிட்டால் ஏறுங்கோ கொண்டு போய் விடுகிறேன்" எண்டு ஆயிரம் பட்டாம்பு|ச்சிகள் பறப்பது போல ஒரு பிரமை ஆனாலும் வெட்கம் புடுங்கித்தின்டது அவளை யோசித்தாள் போகலாமா?..வேண்டாமா..இஇ? என
சைக்கிளில் ஏறுவதா விடுவதா என்று அவளுக்குள் சில நிமிடங்கள் பெரும் போராட்டம் நடந்தது. முன்பின் தெரியாதஅவனுடைய சைக்கிளில் ஏறுவது தன் பெண்மைக்கு அழகில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் பின் ஒருவாறு சமாளித்துக்கொண்டு மன்னித்துக்கொள்ளுங்கள் நான் உங்களுடைய வண்டியில் ஏறமுடியாது. நான் நடந்து செல்கின்றேன். என்னை வற்புறுத்தாதீர்கள் என்றபோது அவனுக்குள்ளும் அவளைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் தோன்றியது.
சைக்களில் இருந்து இறங்கிக்கொண்டே நான் உங்களுடைய முடிவை மதிக்கின்றேன். உங்கள் முடிவு சரியான முடிவுதான் என்று சொன்னான். அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு அவளுடன் நடந்துகொண்டிருந்தான். அவளும் அவனுடன் பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள். தலையை குனிந்துகொண்டு அவனுடன் பேசிக்கொண்டு நடந்தவள் சற்றுத்தலையை துாக்கியபோது
சற்றுத்திகைத்துவிட்டாள் யார் அங்கே வந்துகொண்டிருப்பது அப்பாவா?
"ம்ம் அப்பா தான்" என்றவாறு நடையில் வேகத்தை கூட்டி அப்பா வந்த தீசையை நோக்கி நடந்தாள். பிள்ளைகளின் மேல் ஆசையாத நம்பிக்கை வைத்திருக்கும் அப்பா அதை பெரிதாக எண்ணவில்லை மாறாக "என்ன பிள்ளை சைக்கிளுக்கு என்ன நடந்தது ஏன் நடந்து போகின்றாய்?"என்று கேட்டார்... கீதாவும் சைக்கிள் கடையில் என்று கூறிவிட்டு "அப்பா எனக்கு நேரம் போய் கொண்டு இருக்கின்றது. என்னை இறக்கி விடுங்கோ ஓருக்கா என்று சொல்லி முன்னால் அமர்ந்தாள். அமர்ந்து கொண்டு தான் கடைக்கண்ணால் பின்னால் திருப்பி பார்த்தாள். என்ன ஆச்சரியம் அவளின் கருப்பு நிலா காந்தனை காணவில்லை..... இனியும் எப்போது காண கிடைக்கும் என்று நினைக்கையில் தான் அப்பா மெல்ல வாய் திறந்தார். "பிள்ளை
பிள்ளை வரேக்கை யாரோ பெடியன் பக்கத்திலை வந்தான் ஆரது? என்று கேட்டார் கீதாவோ தடுமாறியபடி எனக்குத் தெரியாதப்பா" என்றாள்
அப்பா : இல்லை பிள்ளை ஊர் கெட்டுப் போய் கிடக்கு வீண் கதைகள் வராமல் இருக்கவேணும் ஏற்கனவே உன்ரை கொக்கா செய்த வேலை தெரியும் தானே
கீதா : என்னப்பா நீங்கள் என்னை ஏதோ சந்தேகப்படுகிற மாதிரி கிடக்குது
அப்பா: ஏதோ சொல்லவேணும் போல கிடந்திச்சு சொன்னன் இனி நீங்கள் படிக்கிற பிள்ளையள் நல்லது கெட்டது தெரியும் தானே
பாடசாலை கிட்டியது இறங்கினாள் கீதா அன்று பாடசாலையில் படிப்பித்தது எதிலும் கவனம் செல்லவில்லை ஏன்தான் இண்டைக்கு இப்படி நடக்கிறதோ என் தன்னையே திட்டுக் கொண்டாள் பாடசாலை விட்டு தோழிகளுடன் கதைக்கவும் மனமில்லாமல் நடந்து வர வெளிக்கிட்டாள் சைக்கிள் கடையில் சைக்கிலை எடுக்கவேண்டும் எண்டதால் கொஞ்சம் வேகமாகவே நடந்தாள் சைக்கிள் கடையில் இவளின் சைக்கிலில் கையை வைத்தபடியே இருந்தான் காந்தன் இவளுக்கு மனம் படபடத்தது என்ன செய்வது ...மெல்ல மெல்ல கடையை நெருங்கிவிட்டாள்
கீதாவைக் கண்டவுடன் கடைக்காரன் சைக்கிளை எடுத்து வெளியில் விட்டு பிள்ளை அப்பா காசு தந்திட்டார் நீர் சைக்கிளை எடும் என்றார். நன்றி சொல்லிவிட்டு காந்தனை நேரிடையாக பார்க்க தைரியம் அற்று ஸ்கூல் பைக்கை பின் கரியரில் வைத்து பார்க்கும்போது தான் கவனித்தாள் கரியாரில் ஒரு கொப்பி இருப்பதைக் கவனித்தாள். காந்தனை மெதுவாக பார்க்க அவன் புன்னகைத்தான். வீட்டிற்குள் சென்று அந்த கொப்பியை எப்போ திறந்து பார்ப்போம் என்று இருந்தது. இடையில் இறங்கி பார்ப்போம் என்றாலும் ஊரில் எல்லோரும் தெரிந்தவர்கள் ஏன் வீண் வம்பு என்று வீட்டு ஒழுங்கைக்குள் வந்தாள். சைக்கிளை பலமாக மித்தித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். நேராக தனது அறைக்குள் சென்றாள். கொப்பியை திறந்து பார்த்தாள்.. என்ன அழகான படங்கள். அதற்கு கீழ் அழகான காதல் வரிகள். "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துகளினால் காதல் கவி பாடுவோமா" என்னும் வரிகளில் அவள் தன் நிலையே மறந்தாள். மெல்லிய துள்ளல் ஒன்றை மனதில் உணர்ந்தாள். இது தான் பட்டம்புச்சி பறக்கிறது என்பார்களா என்று எண்ணினாள். அப்போ யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு மெல்ல இவ்வுலகிற்கு வந்தாள். அக்கா கதவை திற என்றபடி அவளின் சுட்டி தங்கை வந்தாள்.
தன்னுடைய எண்ணப்பறவையை மனச்சிறையில் அடைத்துவிட்டு கதவைத்திறந்தவள் அம்மா உன்னைக் கூப்பிடுகிறா என்றுவிட்டு ஓடினாள். அவளும் அம்மாவிடம் சென்று என்னம்மா என்று கேட்டாள்.
பிள்ளை இதிலை இரு என்று அம்மா தனக்கு பக்கத்திலிருந்த கதிரையை காட்டினாள். பக்கத்திலிருந்தவளின் தலையை அம்மா தடவிக்கொடுத்து தலையை தன் மீது சாய்த்தாள்.
தலையை தடவியபடியே பிள்ளை உனக்கு இப்போ புரியாத வயசு நீ எதற்கும் ஆசைப்பட்டால் நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம். ஆனால் நீ எதையும் சரியாக சிந்தித்துப்பார். திடீர் முடிவு விபரீதத்தில்தான் முடியும். நீ யாரையாவது விரும்பினால் கூட நாங்கள் திருமணம் செய்து வைப்போம். தடையாக நிற்கமாட்டோம்.உனக்கே தெரியும் நீ ஒரு டாக்டர் ஆக வேண்டும் எம்முடைய பிரதேசத்தில் உள்ள மக்கள் சிகிச்சை பெறுவதற்காக எவ்வளவு சிரமப்படுகின்றார்கள். நீ எடுத்த இலட்சியத்தை முடி அதன்பிறகு உன் தன்ப்பட்ட வாழ்க்கையை தெரிவுசெய். என்று அன்பாக கூறினாள்.
கீதா தன்குள் யோசித்தபடி தலையை ஆட்டினாள்.
இரு நான் உனக்கு கோப்பி கொண்டு வாறன் என்று அம்மா குசினிக்குள் சென்றாள்.
கீதா தனக்குள் யோசித்தாள் அப்பா வந்தபோது காந்தன் ஒடிப்பொனாரே என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல். காந்தன் நல்லவரா கெட்டவரா? பிரச்சனை வரும்போது உதறிவிட்டு ஓடுவரா அல்லது....
தனது கருப்புநிலா எழுதிய கவி வரிகள் அவளின் மனதில் அடிக்கடி வந்து வந்து அலைமோதின. "சகியே கண்களால் பேசிய வார்த்தைகள் போதும் இனி எழுத்துக்களினால் காதல் கவி பாடுவோமா" என்ற வார்த்தைகள் மனதில் மீண்டும் வந்தபோது மீண்டும் மனதினுள் பட்டாம்புூச்சி பறந்தது. எதற்கும் சில வரிகள் எழுதிப் பார்ப்போம் அதிலிருந்தாவது அவனுடைய உண்மையான குணத்தை அறிய முடியுமா என்று எத்தனிப்போம் என்று எண்ணியபடி தனது பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தாள்.
பள்ளிக்கூடம் போகையில்
பக்கத்தில் வந்த கறுப்பு நிலாவே
மன்னிக்கவும்.... காந்தனே! கவியே!
எட்டு வயதாகுமுன்னமே என் சுட்டித்தங்கை
எட்டி எட்டிப் பார்க்கிறாள்
கடிதத்தில் என்ன எழுதுகிறேன் என்று!
பட்டப்படிப்பு படிக்கவேண்டும் என்கிறார் அன்னை
டாக்டராகவே வரவேண்டும் என்கிறார் என்னை
எப்போதும் என்னருகில் இருந்து தட்டிக் கொடுப்பீர்களா?
அவ்வப்போது இன்றுபோல் தவிக்க விட்டுவிட்டு ஓடுவீர்களா?
ஒரு வார்த்தையாவது எழுதி மீண்டும் என் சைக்கிளின்
"கரியரில்" வைத்துவிடுங்கள்
இரவினில் சந்திப்பு வேண்டாம்
அதை என்னிடம் கேட்கவும் வேண்டாம்
வர முடியாது வெளியில் என்னால்
வந்தாலும் உங்களை தெளிவாகக் தெரியாது முன்னால்.
என்று தான் முதல்முதலாக வடித்த காதல் கவிவரிகளை எழுதிவிட்டு புத்தகத்தை மூடினாள். அந்த நேரம் பார்த்து அருகே காலடி கேட்டது..
கேட்டது காலடி ஒசை மட்டும் அல்ல அவளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதியின் ஒசையாக இருந்தது. அவசர அலுவலாக வந்த அம்மா அவள் எதோ குழப்பத்தில் இருப்பதாக அறிந்தாள். "கீதா நானும் அப்பாவும் எவ்வளவோ கஸ்டப்பட்டுத்தான் உங்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கின்றோம். உனது அக்கா எமது கஸ்டத்தை எல்லாம் உணராமால் தனக்கென்று ஒரு வாழ்வை தானே தேடிக்கிட்டு பட்ட கஷ்டம் எல்லாம் உனக்கு தெரியும் தானே. அவா எடுத்த முடிவால் அவாவின் வாழ்க்கையே இன்று முடிந்து விட்டுது. அதைப்போல் எனது மற்ற மகளின் வாழ்வும் பாழக நான் விரும்பலை. எமது அறியாமையினால் உன் அக்காவை தான் இழந்து விட்டோம். இனியும் ஒரு இழப்பை எனக்கோ உனது அப்பாவிற்கோ தாங்கும் சக்தி இல்லை." என்று கையெடுத்து கும்பிட்டார் அவளின் அன்னை. "அம்மா அம்மா என்ன இது? நான் உங்களின் மகள் அம்மா. எனக்கு உங்க இலட்சியங்கள் தான் முக்கியம். உங்களின் மெய்யான அன்பிற்கு முன்னால் என்னுடைய காதல் தூசு தான் அம்மா. என்னுடைய ஒவ்வொரு ஆசைகளையும் பார்த்து பார்த்து நிறைவேற்றி வைக்கும் உங்களுக்காக இந்த ஒரு ஆசையை நிறைவேற்ற கடவுள் தந்த பாக்கியமாகவே கருதுகின்றென். அம்மா எனது மனம் ஒரு நாள் அலைபாய்ந்தது உண்மை தான் அம்மா. ஆனால் அந்த காதலை திரும்பவும் நான் நினைக்கப்போவதில்லை. நீங்களாக வந்து என் மனதை கவர்ந்தவனை ஒப்படைக்கும் மட்டும் நான் உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிக் கொண்டு இருப்பேன் என்று உறுதியுடன் தாயின் கையைப்பற்றி கூறினாள். மகளின் உறுதியை கண்ட தாய் கண்ணை துடைத்துக்கொண்டே அடுக்களை பக்கம் போனாள்.
ஒரே நாளில் புத்து அந்நாளிலே கருகின தனது காதலுக்காக கடைசியாக ஒரு சொட்டு கண்ணீர் வடித்தாள் கீதா. அந்த சொட்டுக் கண்ணீர் அவள் ஆசைப்பட்டதெல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்யும் பெற்றோர் இவளின் காதலுக்கு மாரியாதை காட்டுவார்கள் என்பதை கூறி நிலத்தில் விழுந்து தெறித்தது
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கதையை தொகுத்து இணைத்தமைக்கு நன்றி ரமா.
அனைவரும் இணைந்து எழுதிய கதை நல்லா இருக்கு,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
சிறு(குட்டிக்)கதை நன்றாக இருந்தது. எழுதியவர்களுக்கு பாராட்டுக்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
பாகம் 5 இனிதே நிறைவேறிற்று. இதில் பங்கு பற்றிய அனவருக்க்கும் நன்றிகள் வாழ்த்துக்கள். ம்ம்ம் கதையை தொகுத்து அளித்தமைக்கு நன்றிகள் றமா அப்படியே இந்த கதைக்கு ஒரு பெயரை போடவும்.
அடுத்த கதையை ஆரம்பியுங்கள்
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
எழுதி முடித்த கதையின் பெயர்::::::::: பெற்றோருக்கு மரியாதை...
எப்படி பெயர் கதையுடன் பொருந்துகின்றதா?
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
குட்டிக்கதை எப்போது வரும் இடையே புகுந்து எனது கைவரிசையையும் காட்டலாம் என்றிருந்தேன். எவருமே தொடங்குவதாக இல்லை. ஏன்?
நானே தொடங்குகிறேன். நகைச்சுவையை இன்னமும் அதிகமாகக்கலந்து எழுதுங்கள். "சிரிப்பு உடலுக்கு ஒர் ஆரோக்கியமான மருந்து" அல்லவா?
ஆறுமுகம் ஆசிரியர் தனது ஒரு முகத்தால் அங்குமிங்கும் பார்த்தார். யாரையுமே காணவில்லை. வகுப்பிற்கு மாணவர்கள் வருமுன்னமே தான் இரகசியமாகக் கொண்டுவந்த கவிதைப்புத்தகத்தை எடுத்து அதிலிருந்த ஒரு கவிதையை கரும்பலகையில் எழுதினார். இப்படியாக மற்றவர்களுடைய கவிதைகளைக் கொண்டுவந்து மாணவர்களுக்கு கற்பித்துவிட்டு அது தான் எழுதிய கவிதை என்று தம்பட்டம் அடிப்பதில் அவருக்கு மகிழ்ச்சி. (தொடருங்கள்.....)
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அன்றும் அப்படியே எழுதிவிட்டு மாணவரின் வருகைக்காக காத்திருந்தார். மணி அடித்தது.. மாணவர்கள் வரிசையாக வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். கரும்பலகையில் இருந்த கவிதையை வாசித்தபடியே இருக்கையில் அமர்ந்தார்கள் மாணவர்கள். கவிதையின் அற்புத வரிகளை கண்டு மாணவர்கள் ஆசிரியாருக்கு பாரட்டை தெரிவித்து விட்டு தமது கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனார். அப்போது தான் வகுப்பின் கிண்டல் மன்னன் கையை உயர்த்தினான்...
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
பெற்றோருக்கு மரியாதை.....அழகான குட்டிக்கவி..தந்தவர்கள் அனைவருக்கும் நன்றி...
..
....
..!
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
ஆறுமுகம் ஆசிரியருக்கு அவன் கையை உயர்த்துவது கடைக்கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாதவர்போல் திரும்பிப் பார்க்காது நின்றுகொண்டிருந்தார். திடீரென்று ஏதோ சத்தம் கேட்டது. எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர். தொடருங்கள்....
Posts: 208
Threads: 12
Joined: Apr 2005
Reputation:
0
"¬ÚÓ¸õ º¡÷, ¯í¸û ¸Å¢¨¾Â¢ø ¦º¡üÀ¢¨Æ ¯ñÎ" ±ýÈ¡ý «Åý, ¿ì¸£Ãý º¢Å¨ÉôÀ¡÷òÐ ÓÆí¸¢ÂÐ §À¡Ä
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
"யார் என்னைப் பெயர் சொல்லி அழைப்பவன்?" என்று கூறியபடி அவனைத் திரும்பிப்பார்த்து "நீ என்ன நாகேஷ் என்ற நினைப்போ இல்லை இல்லை நக்கீரன் என்ற நினைப்போ?" என்று சற்றுத் தடுமாறியபடியே கூறினார். இதனைக்கேட்டதும் எல்லோரும் ஒரே நேரத்தில் உரத்துச் சிரித்தனர்.
Posts: 744
Threads: 19
Joined: Nov 2004
Reputation:
0
உடன் கிண்டல்மன்னன் மூர்த்தி கூறினான் நான் நாகெஸும் இல்லை நக்கீரனும் இல்லை ஆனால் நீங்கள் எழுதிய கவிதையின் மூலபிரதி என்னிடம் உள்ளது. அதற்கும் நீங்கள் எழுதியதற்கும் இடையில் சொற்பிழைகள் உண்டு என்று தனது முலபிரதியை அவரிடம் நீட்டினான்.........
" "