Posts: 189
Threads: 4
Joined: Jul 2004
Reputation:
0
[quote="AJeevan.
ஆனாலும் ஆகக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டு இருக்க வேண்டும்.
ஆசனங்களைத் தொடங்க 15 - 20 நிடத்துக்கு முன் அல்லது முடிந்து 15 - 20 நிமிடத்துக்கு பின் தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை பருகலாம்.
[/quote]
15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன்பு தண்ணி குடித்தீர்களானால் யோகா செய்வதென்பது மிகவும் கஷ்டமான காரியமாகிவிடும். ஆகக்குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்பு குடிப்பதே சிறந்தது. அதேபோல் சாப்பாட்டை குறைந்த்து மூண்று மணித்தியாலத்திற்கு முன்பாக எடுப்பதும் யோகா செய்ய உதவியாக இருக்கும். எனெனில் எமது உடல் இலேசாக உள்ளபோதுதான் யோகா செய்வது ஈசியாக்கப்படும்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி பாண்டியன்.
இது ஆரம்ப கால யோகயாச்சார்யர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.
[b]இருப்பினும் விஞ்ஞான ரீதியாக மாறிவரும் யோகா பயிற்சிகளில் இவை மாறி வருவது பலருக்கு தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.
வேகமாக ஓடும் இந்த விஞ்ஞான கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
அதை ஓரிரு வரிகளில் தெளிவுறுத்த முடியாது.
[b]அதை விளக்கமாக தெளிவுறுத்துவது புதிதாக யோகப்பயிற்சிகளில் ஈடுபடுவோரது மன அதைரியத்தை தவிர்க்கும்.
எனவே அதை தெளிவுபடுத்துவது எனது கடமை என நினைக்கிறேன்.
அதை அடுத்து எழுதுகிறேன்.
நன்றி.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.fit2.de/thaiyoga/sonnengruss.gif' border='0' alt='user posted image'>
[size=15][b]சூர்ய நமஸ்கார -ஆசன நிலைகள்- மூச்சு பயிற்சியுடன் கீழே.........
<img src='http://img259.imageshack.us/img259/2093/suriyanamskarajeevan3wa.png' border='0' alt='user posted image'>
Position No. 1 - Breath Normally
Position No. 2 - Breath In
Position No. 3 - Breath Out
Position No. 4 - Breath Normal
<img src='http://img259.imageshack.us/img259/9429/surya2ajeevan9eh.gif' border='0' alt='user posted image'>
Position No. 5 - Breath In and Retain
Position No. 6 - Breath Out
Position No. 7 - Breath In
<img src='http://img259.imageshack.us/img259/5968/surya3ajeevan3av.gif' border='0' alt='user posted image'>
Position No. 8 - Breath Out
Position No. 9 - Breath In
Position No. 10 - Breath Out
Position No. 11 - Breath In
Position No. 12 - Breath Normally
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<b>காலையிலா மாலையிலா?</b>
அதிகாலை படுக்கையை விட்டு எழுந்ததும் சரீரம் விறைப்பாய் இருக்கும்.
யோகாசனங்களை செய்வோருக்கு காலையில் ஆசனங்கள் செய்வது கடினமாக இருக்கும்.
மாலையில் ஆசனங்களை செய்வது இலகுவாக இருக்கும்.
எனவே காலையிலா மாலையிலா ஆசனங்களை செய்வது என தீர்மானிப்பது பயிற்சியாளரைப் பொறுத்தது.
<b>உணவுக்கு முன்</b>
வயிற்றில் உணவில்லாத போதுதான் ஆசனங்கள் செய்வது நல்லது.
சோற்றுப் பையுள் ஆகாரம் சென்றதும் அதை ஜீரணிக்கச் செய்வதற்கு வயிற்றின் ரசங்கள் உண்டாகி கலந்து செமிக்க வைப்பதற்கு வெகு நேரமெடுக்கிறது.
தேகப்பயிற்சியில் அங்கங்களுக்கு போதுமான இரத்தம் போகாவிட்டால் அது பலமடைவதற்கு பதிலாக பலகீனப்படுகிறது.
எனவே இலகுவான ஆகாரம் உண்ட பின் 1-2 மணித்தியாலத்துக்கு பின் பயிற்சி செய்யலாம்.
இருப்பினும் கனத்த சாப்பாடாக இருந்தால் 4 மணி நேரத்துள் பயிற்சி செய்வது நல்லதல்ல.
இப்படியான சாப்பாடுகளின் பின் 6 மணி நேரம் கழித்து யோகாசனங்களை செய்வது உசிதம்.
இருந்த போதும் ஐரோப்பியர்கள் மிதமாகவே உண்கிறார்கள்.
வேகமான உலகில் இவர்களுக்கு நேரம் கிடைப்பதே அரிது.
இப்படியானவர்களால் காலை 4 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு பயிற்சி செய்ய முடியுமா?
தொடரும்..........
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin--><img src='http://www.fit2.de/thaiyoga/sonnengruss.gif' border='0' alt='user posted image'>
[size=15][b]சூர்ய நமஸ்கார -ஆசன நிலைகள்- மூச்சு பயிற்சியுடன் கீழே.........
<img src='http://img259.imageshack.us/img259/2093/suriyanamskarajeevan3wa.png' border='0' alt='user posted image'>
Position No. 1 - Breath Normally
Position No. 2 - Breath In
Position No. 3 - Breath Out
Position No. 4 - Breath Normal
<img src='http://img259.imageshack.us/img259/9429/surya2ajeevan9eh.gif' border='0' alt='user posted image'>
Position No. 5 - Breath In and Retain
Position No. 6 - Breath Out
Position No. 7 - Breath In
<img src='http://img259.imageshack.us/img259/5968/surya3ajeevan3av.gif' border='0' alt='user posted image'>
Position No. 8 - Breath Out
Position No. 9 - Breath In
Position No. 10 - Breath Out
Position No. 11 - Breath In
Position No. 12 - Breath Normally<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=15]யோகாசனம் செய்யுமுன் படங்களையும் மூச்சு விட வேண்டிய
தருணங்களையும் மனதில் பதிய வைத்து கொள்ள முயலுங்கள்.
ஆரம்பத்தில்
மூச்சுப் பயிற்சியை செய்யாமல்
சாதாரணமாக உடற்பயிற்சி போல் ஒவ்வொரு நிலைகளையும் செய்ய முயலுங்கள். அவை முதலில் மனதில் பதியட்டும்.
அதுவரை மூச்சுப் பயிற்சியைக் கருத்தில் கொள்ள வேண்டாம்.
சூரிய நமஸ்கார படத்தை கூட நீங்கள் பயிற்சி செய்யும் இடத்தில்
உங்கள் பார்வையில் தெரியும்படி பிரிண்ட் போட்டுத் தொங்கவிடலாம்.
இந்த அசைவுகளும் பயிற்சியும் ஓரளவு வரும் போது
மூச்சுப் பியற்சியை சேர்த்துக் கொள்ளலாம்.
இது நான் தொடங்கிய முறை..........
உங்கள் எண்ணம் வேறாக இருந்தால் அதையும் செயல்படுத்திப் பார்க்கலாம்.
இதை எழுதும் போது
ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.........
அதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
யோகா பற்றிய ஒரு புத்தகம் என் கையிலிருந்ததை ஒரு குரவாட்சிய மாது(பழைய யூகோஸ்லியாவின் ஒரு பகுதி) முன்னொரு முறை பார்த்து விட்டு
என்னிடம் சொன்னார்.
இது எமது சயமத்துக்கு ஆகாது.
ஐயோ.........
நீ ஏன் இந்தக் கறுமங்களைப் படிக்கிறாய் என்று...........
நான் சிரித்து விட்டுச் சொன்னேன்.
இது ஒருவிதத்தில் உடற் பயிற்சி
மறு புறத்தே மனப்பயிற்சி.
தேவாலயங்களில் பிரத்தனையின் போது
எழுந்து நிற்கிறார்கள்
உட்காருகிறார்கள்
முழந்தாளிடுகிறார்கள்.............
இந்துக் கோயில்களில்
நிற்கிறார்கள்
உட்காருகிறார்கள்
கீழே விழுந்து வணங்குகிறார்கள்
உருளுகிறார்கள்
இஸ்லாமியர்கள்
ஐந்து வேளைத் தொழுகை என்று
நிற்கிறார்கள்
உட்காருகிறார்கள்
கீழே விழுந்து நமாஸ் செய்கிறார்கள்
பெளத்தர்கள்
நிற்கிறார்கள்
உட்காருகிறார்கள்
கீழே குனிந்து வணங்குகிறார்கள்
உட்கார்ந்து மனதை ஒருநிலைப்படுத்துகிறார்கள்.
மனிதனின் செயல்பாட்டுக்கு தேவையான
உடல் - உளப் பயிற்சிகள்தான் இவை.
இறை தூதர்களால் மக்களுக்கு
வரமாகக் இவை அருளப்பட்டது.
அவற்றை பலர் பின்பற்றுவதில்லைதான்.
காரணம் நாம் இப்போது பலமாகவும் - நலமாகவும் இருப்பதால்........
வயோதிபமும் - நோயும் வந்த பின்
பிசியோ தெரப்பிக்கு போகும் போது
உடம்பென்ன மனசே உழைக்க மறுக்கிறது.
அப்போது வருந்தி என்ன பயன்.
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் என்ன?
ஒரு நாளும் வளையாது என்று...........
சிலரிடம் சில தவறான கருத்துகள் இருக்கவே செய்கிறது.
அதற்கு காரணம் நமது மூன்னோர் விதைத்த மூட நம்பிக்கைகள்.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
படங்களோடு ரொம்ப விளக்கமாக இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் அஜீவன் அண்ணா
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
அஐிவன் ஒவ்வொருமாதமும் காசு கட்டி உடற்பயிற்சிக்கு செல்லும் நான் இப்போ உங்கள் பயிற்சி முறையை கடைப்பிடிக்கின்றென்... நன்றிகள்.....
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
RaMa Wrote:அஐிவன் ஒவ்வொருமாதமும் காசு கட்டி உடற்பயிற்சிக்கு செல்லும் நான் இப்போ உங்கள் பயிற்சி முறையை கடைப்பிடிக்கின்றென்... நன்றிகள்.....
நன்றி ரமா.........
என் மனதுக்கு பட்ட ஒரு விடயத்தை சொல்லலாமென நினைக்கிறேன்.
நான் வீட்டில் யோகசனங்களை செய்தாலும்.
நேரம் கிடைக்கும் சமயங்களில் வாரத்தில் 2-3 முறையாவது
Physical Fitness Centerக்கு போவேன்.
எனவே யோகாசனங்களை செய்யும் போது உடற்பயிற்சிக்கு செல்வதை நிறுத்த வேண்டியதில்லை.
அங்கும்
<img src='http://www.physical.ch/photogallery/taebo/taebo5.jpg' border='0' alt='user posted image'>
<b>Power Yoga (Mind & Body)
TriloChi (Mind & Body)</b>
போன்றவற்றை ஐரோப்பியர்கள் செய்கிறார்கள்.
http://www.physical.ch/
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<b><span style='color:green'>பூரண அமைதி- ஆனந்தத்தை தரும் ஆசனங்கள்
மனிதர்களுக்கு அமைதியையும், நிலைத்த ஆனந்தத்தையும் கொடுக்கும் ஆசனங்களே பவன முக்தாசனம். அவர்களை ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்பவை. ஆசனங்களைப் பற்றி ஒன்றுமே தொpயாத கத்துக்குட்டிகள் கூட இந்த ஆசனத்தை செய்யலாம். நல்ல பலன் கொடுக்கும். என்ன நோய் வந்தாலும் காப்பாற்றும். பவன முக்தாசனம் உடம்பை சிக்கென்று இளமையாக வைத்திருக்கும்.
பவன முக்தாசனத்தை 45 நிலைகளாக பிரித்துக் கொண்டு செய்ய வேண்டும். அதில் ஒவ்வொரு வகையையும் குறைந்து 3 அல்லது 4 முறை செய்தால் போதுமானது. இந்த 45 வகையான ஆசனங்களையும் செய்து வரும் மனிதர்கள் தெளிந்த சிந்தனை, பூரண நலம், முகப்பொலிவுடன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று தமிழ் யோகாசன நூல்கள் கூறுகின்றன. இது தவிர ஆஸ்துமா, இதய நோய்கள், நீரழிவு, மூலம், தசைவலிகள் உள்ளிட்ட நோய்களையும் இந்த ஆசனம் அறவே அகற்றி விடுகிறது.
45 வகை பவன முக்தாசனங்களையும் ஒழுங்காக செய்யும் பட்சத்தில் உடம்பில் உள்ள எல்லா நரம்பு மண்டலங்களும், பித்த நாடி, கபநாடி, வாத நாடி முதலான அனைத்து நாடிகளும் சீரடைந்து ஒழுங்காக மனிதனுக்கு அடங்கி வேலை செய்வதானால் ரத்த ஓட்டம் சீராக அமையும். ஆகையால் சாதாரண மனிதர்களுக்கு மிகச்சிறந்த பலன் கிடைக்கும்.
என்னடா இது, பவன முக்தாசனத்தை பற்றி இவ்வளவு தூரம் சொல்கிறார்களே* ஆசனம் செய்யும் முறை பற்றி சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ பவன முக்தாசனம் செய்யும் முறை.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/bavan_4.jpg' border='0' alt='user posted image'>
1. சாதாரணமாக காலை நீட்டியபடி உட்கார்ந்து கொள்ளுங்கள்
2. பிறகு கால் விரல்களை மட்டும் முன்னால் வளையுங்கள்
3. கால் விரல்களை மட்டும் பின்னால் வளைக்கவும்
4. கால் பாதங்களை முன்னால் வளையுங்கள்
5. கால் பாதங்களை பின்னால் வளைக்கவும்
6. வலதுக்காலை இடது தொடை மீது வைத்து பாதத்தை மட்டும் கைகளால் முன்னும் பின்னும் மெதுவாகத் திருகி விடுங்கள். அதேப் போன்று வலக்காலையும் திருகி விடவும்.
7. கால்களை இடது பக்கமும், வலது பக்கமும் மெதுவாகத் திருப்பவும்
8. இடதுக் காலையும், வலதுக் காலையும் மாறி மாறி மெதுவாக பிருஷ்ட பாகம் நோக்கி இழுக்கவும்
9. கைகளைத் தொடையில் அண்டக் கொடுத்துக் கொண்டு கால்கள் ஒவ்வொன்றையும் மெதுவாக மேலே மாறி மாறி தூக்கி இறக்குங்கள்
10. கால்களை அகலமாக விரித்துக் கொண்டு கைகளை பக்கவாட்டில் நீட்டி இடது கால் பெருவிரலை வலதுக் கையால் தொடுங்கள்
11. கைகளை நேராக நீட்டி, கை விரல்களைப் பின் பக்கமாக வளைக்கவும்
12. விரல்களை இறுக மூடுங்கள். இப்போது உடலின் மற்ற பாகங்கள் தளர்வான நிலையில் இருக்கட்டும்
13. இரு கைகளையும் நீட்டிய நிலையில் முன்னும் பின்னும் நன்றாக சுற்றவும்.
14. விரல்களை மூடியவாறு (மணிக்கட்டு வரை) முன்னும் பின்னும் வளைக்கவும். பின்னர் பக்கவாட்டில் சுற்றவும்
15. கை விரல்களை நன்றாக மூடிக் கொண்டு முன் பக்கமும், பின் பக்கமும் மடக்கி நீட்டவும்.
16. கைகளை, விரல்களை மூடிய நிலையிலேயே மடக்கி தோள் பட்டை பக்கமாக முன்னும் பின்னும் தள்ளவும்
17. கைகளை மூடி மடக்கிய நிலையிலேயே உடலை இப்போது பின்னே சாய்க்கவும்
18. கைகளை முன்னால் நீட்டி முன்புறமாகக் குனிந்திடுங்கள்.
19. உடம்பை இடது பக்கமும், வலது பக்கமும் வளைத்துக் கொள்ளுங்கள்
20. கழுத்தை வலதுப் பக்கம் திருப்புங்கள்
21. கழுத்தை முன் பக்கமும், பின் பக்கமும் சாதாரணமாக வளைக்கவும்,
[b]அவசரப் பட வேண்டாம். நிதானமாக செய்தால் போதும். எல்லா ஆசனங்களையும் மூச்சிழுத்தபடியே செய்யுங்கள்</b>
22. தலையை பின்னால் வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும். அதே நிலையில் 2 நொடிகள் இருந்திடுங்கள்.
23. தலையை இப்போது நிதானமாக முன்புறம் வளைத்து மூச்சை வெளியிடவும். அப்படியே 2 நொடிகள் இருக்கவும்.
24. கைகளை முன்புறம் நீட்டியபடி கால்களை (ஒரு காலை முன்பக்கமும், மறுகாலை பின்பக்கமும் மடக்கி) மூச்சை வெளியிட்டு, தரையில் படுக்கவும்
25. ஒரு காலை மடக்கி மறுகாலை நீட்டி, கைகளை நீட்டிய நிலையில் மூச்சை வெளியே விட்டபடியே விரிப்பின் மேலே படுத்துக் கொள்ளுங்கள்
26. இரு கால்களையும் முன்புறம் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு கைகளை மேலே உயர்த்திக் கொண்டே மூச்சை வெளியே விட்டவாறு முன்புறம் குனிந்து படுக்கவும். பின் மூச்சை உள்ளே இழுத்தவாறு அதே நிலையில் எழுந்திருங்கள்.
27. கால்களை பின்னால் நீட்டி கைகளைப் பக்கத்தில் வைத்து, தலையை பின்னால் வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும்
28. குழந்தை தவழுவது போல கைகளையும், முழங்காலையும் அமைத்துக் கொண்டு மூச்சை வெளியே விட்ட நிலையில் முதுகெலும்பை சற்றே வளைக்கவும்
29. உடலை அமைத்துக் கொண்டு மூச்சை வெளியே விட்டபடியே வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டு முதுகெலும்பை மேல்புறமாக வளைக்கவும்
30. கால்களை ஒரு சேரத் தூக்கி மூச்சை தம் கட்டுங்கள்.
31. கால்களை தூக்கி நிலையில் கால் பெருவிரல் கைகளில் இறுகப் பிடித்து படுக்கவும்
32. வலது காலை மடக்கி அதைக் கைகளால் வயிற்றுடன் இறுகக் கட்டவும். பின்னர் மூச்சை வெளி யிடவும். அதே போல இடதுக் காலையும் மடக்கி கட்டவும்
33. இரு கால்களையும் முன்பு செய்தது போல சேர்ந்தே வயிற்றுடன் கைகளால் இறுகக் கட்டவும். (இதனால் தொந்தி கரையும்)
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/bavan_3.jpg' border='0' alt='user posted image'>
34. பிறகு குத்திட்டு உட்கார்ந்த நிலையில் கால்களைப் படத்தில் காட்டியபடி இறுக கட்டவும். இப்போது மூச்சை வெளியே விடவும்
35. மண்டியிட்டு அமர்ந்த நிலையில் கால் மூட்டுக்களின் மேல் கைகளை வைத்து (தொடைகளை சற்று அகட்டி வைத்து கொள்ளுங்கள்) மூச்சை வெளியிட்ட நிலையில் வயிற்றை மெதுவாக எக்கி எக்கி விடவும் ( வயிற்று சதைகள் இளக்கம் கொடுக்கும்)
36. மண்டியிட்டு உட்கார்ந்த நிலையில் நாக்கை முடிந்த அளவு வெளியே நீட்டிப் பின்னர் உள்ளே இழுக்கவும். ( இதற்கு 3 நொடிகள் எடுத்துக் கொள்ளலாம்)
37. மண்டியிட்டு உட்கார்ந்து கைப் பாதங்களைத் தரையில் ஊன்றி, தலையைப் பின்னால் வளைத்து மூச்சை உள்ளே இழுக்கவும். பிறகு தலை நிமிர்த்தி மூச்சை வெளியே விடவும்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/bavan_2.jpg' border='0' alt='user posted image'>
38. அதே நிலையில் (மண்டியிட்டு) அமர்ந்து கைகளைக் கும்பிட்டபடி தலையை மட்டும் பின்னால் வளைத்து மூச்சை வெளியே விடவும்
39. மண்டியிட்டு அமர்ந்து தலையை நேராக நிமிர்த்தி மூச்சை வெளியே விட்டபடி கைகளைக் கீழே தாழ்த்தி வைக்கவும்
40. மண்டியிட்ட அதே நிலையில் கைகளை உயர்த்தியபடி மூச்சை உள்ளே இழுக்கவும்
41. தலையை மட்டும் குனிந்து கைகளைக் கீழே இறக்கி மூச்சை வெளியே விடவும்
42. குனிந்தபடி நின்று மூச்சை வெளியே விட்டபடி கைகளால் தரையைத் தொடவும். பின்பு மூச்சை உள்ளே இழுத்தவாறு நேராக நிமிரவும்
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/bavan_1.jpg' border='0' alt='user posted image'>
43. வலது காலில் நின்று கொண்டு கைகளை உயரேத் தூக்கி கும்பிடவும் (நெற்றிப் பொட்டில் மனதை ஒருமுகப்படுத்தி ஓம் என்று ஒருநிலைப்படுத்துங்கள். பிறகு இடது காலை மடக்கி குதிகாலை ஆசன வாயில் படும்படி மடக்கி வைக்க வேண்டும். பின்பு இடதுக் காலில் நிற்கவும்
44. வலது காலில் நின்று கொண்டு கைகளை உயர்த்தி கும்பிட்ட நிலையில் நிற்கவும், மூச்சிழுக்கவும். பின்பு இடது காலை கீழிறக்கி வலது தொடையின் மீது அழுத்தி மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை வெளியிட்டவாறே பிறகு காலை ஊன்றி கையைக் கீழே மெதுவாக இறக்கவும். பின்பு இதேபோல இடது காலில் நில்லுங்கள்.
45. முதலில் குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். பிறகு மூச்சை முழுவதும் வெளியே விட்ட நிலையில் உடல் முழுவதையும் நன்றhக தளர்;த்தி விட்டுக் கொண்டு இளக்கி அழகுற இளைப்பாறவும். இந்த கடைசி ஆசனத்தை அனைவரும் அவசியம் செய்ய வேண்டும்.
<b>மேற்கண்ட அனைத்து வகையான ஆசனங்களை செய்யும் போது உடலின் எல்லா பாகங்களையும் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.</b>
இந்த 45 வகை ஆசனங்களையும் செய்வதற்கு 25 நிமிடங்கள் வரை ஆகலாம். இந்த ஆசனத்தை பெண்களும், சிறுவர்களும் எளிதாக செய்யலாம்.</span>
நன்றி: தினகரன்
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<b>யோகா அழகு. யோகமும் அழகும் சேர்ந்தால் அதுதான் லீனா கிங்கர். சென்னையின் இளம் யோகா மாஸ்டர்! </b>
டிஸ்கொதே, பியூட்டி பார்லர், ஷாப்பிங்னு பறந்துட்டு இருக்கிற மாடர்ன் பெண்கள் மத்தியில் வித்தியாசமாக யோகாவைத் தேர்ந்தெடுத்தது எப்படி லீனா? என்றால், தேவதையாகச் சிரிக்கிறார்.
<img src='http://www.vikatan.com/av/2005/dec/11122005/p18b.jpg' border='0' alt='user posted image'>
மனசு, உடம்பு இரண்டுமே எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கும் பெண் நான். எந்த வசதிகளுக்கும் குறைச்சல் இல்லாத வாழ்க்கை. ஆனா, மனசு மட்டும் ஏதோ ஒண்ணைத் தேடிட்டே இருந்தது. நடனத்தின் மீது காதல் வர, பரதநாட்டியம், குச்சுப்புடி என ஒரு ரவுண்ட் போனேன். அடுத்தது, கராத்தே. அது முடிந்ததும் களறி கற்க, திருச்சூர் பக்கம், சாக்கோடு கிராமம் போனேன்.
<img src='http://www.vikatan.com/av/2005/dec/11122005/p18.jpg' border='0' alt='user posted image'>
களறி பயிற்சி செய்யும்போது, தவறி விழுந்து காலில் பயங்கர அடி. மூன்று மாதங்கள் படுக்கையில் கிடந்தேன். டான்ஸர் ஆகணும், கராத்தே சாம்பியன் ஆகணும், களறியில் ஜெயிக்கணும்னு என்னென்னவோ கனவுகளோட இருந்த எனக்கு, எல்லாமே ஒரே நாளில் முடிந்துபோன மாதிரி இருந்தது. அப்போது தான், கோயமுத்தூரில் இருக்கிற சுவாமிஜி சிவானந்தா யோகப் பயிற்சி மையம் பற்றி கேள்விப்பட்டேன். யோகா கற்கப் போனேன். முதல் மாதத்தில் உடல் வலியை மறந்தேன். அடுத்த மாதம், மன வலியும் போயேபோச்சு. யோகாவின் அருமை புரியவர, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என முறையாகப் பயின்ற யோகாவை சொல்லித்தர ஆரம்பித்தேன்.
<img src='http://img530.imageshack.us/img530/3984/p18a6si.jpg' border='0' alt='user posted image'>
ஏழை அநாதைக் குழந்தைகளுக்கு முதலில் யோகா சொல்லித் தந்தேன். வாழ்க்கையின் இன்னொரு பக்கம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. ஆறுதல் இல்லாமல், ஆதரவு இல்லாமல், அன்பு என்றால் என்னவென்றே அறியாமல் மனச்சுமைகளுடன் இருக்கிற எத்தனையோ பேருக்கு யோகா பயிற்சியும் தியானமும் ஒரு நல்ல மருந்து எனப் புரிந்துகொண்டேன். இனி, யோகா கற்றுத் தருவதே என் வாழ்க்கையின் குறிக்கோள் என முடிவுக்கு வந்தேன்.
சென்னையில் ஒரு யோகா மையம் அமைப்பதே என் கனவு என்கிறார் லீனா கிங்கர், ஒளிரும் விழிகளுடன்!
\ பா.ராஜநாராயணன்,
படங்கள்: ஜி.வெங்கட்ராம்
(விகடன்)
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/mar/peedasanam.jpg' border='0' alt='user posted image'>
<b>இடுப்புக்கு வலிமை அளிக்கும் பீடாசனம்</b>
பீடாசனம் செய்வது மிகவும் எளிது. முதலில் இரண்டு பாதங்களை சேர்த்து வைத்து, விரிப்பின் மேலே விறைப்பாக நிற்கவும், பிறகு இடுப்பின் இருபுறங்களிலும் உங்கள் கைகளை நேராக ஊன்றிக் கொள்ளுங்கள். பின்பு முழங்கால்களைச் சற்றே மடிந்து ஒரு பீடத்தில் உட்காரப் போவது போல் நிற்கவும். ( ஒரு உயரமான நாற்காலி மீது அமருவதற்கு என்ன நிலையில் இருக்க வேண்டுமோ, அதேப் போன்ற பாவனை தான்) அந்த நிலையில் உங்களுடைய இரண்டு தொடைகளை யும் ஒரே சமமான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். ( ஒரு கை ஏறி ஒரு கை இறங்கி இருக்கக் கூடாது)
முழங்கால் முட்டி மட்டுமே வளையலாம். உடலின் மற்ற பாகங்கள் விறைப்பாகவே இருந்திட வேண்டும். இடுப்பிலிருக்கும் கைகளையும் அகற்றவே கூடாது.
பலன்கள்.
1. இந்த ஆசனம் இடுப்பு, முழங்கால்கள், பாதங்கள் ஆகியவற்றுக்கு நல்ல வலிமையை கொடுக்கும்.
2. தொடைகள் கெட்டியாகவும், உறுதியாகவும் அமையும்.
3. கெண்டைக்கால் தசைப் பகுதிகள் வலிமை அடையும்.
4. கைகளுக்கும் இதுஒரு புதுவிதமான பயிற்சி.
- தினகரன்
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
படங்களுடன் கூடிய தகவலை இங்கு இணைத்தமைக்கு நன்றி அஜீவன் அண்ணா...
<b> .. .. !!</b>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[size=15]<img src='http://www.onlinebangalore.com/images/heal/yoga/matsya.jpg' border='0' alt='user posted image'>
<b>மார்புக்கூட்டை விரிக்கும் மச்சாசனம்</b>
தரையில் அமர்ந்து பத்மாசனம் நிலையில் அமரவும்.
பின்பு கால்களை பிரிக்காமல் அப்படியே பின்புறம் சாய்ந்து படுத்துக் கொள்க.
இரண்டு கால் மூட்டுக் களும் சற்றும் விலகாமல் தரையில் நன்றாக பதிந்து இருக்க வேண்டும்.
<img src='http://www.yogarasa.net/images/fish.jpg' border='0' alt='user posted image'>
முழங்கால்களைப் பின்புறம் தரையில் ஊன்றி முதுகைச் சற்றே வளைத்து,
மார்பு மற்றும் இடுப்புப் பகுதி மேல் உயர தலை உச்சி நிலை மட்டும் தரையில் சாய்ந்து தொடும் வகையில் படுக்கவும்.
கைகளால் பின்பு இருகால் கட்டை விரல்களையும் அழுத்தமாக பிடித்துக் கொள்ளுங்கள்.
<img src='http://img449.imageshack.us/img449/6983/matsyasana8yn.jpg' border='0' alt='user posted image'>
அப்போதும் கூட பத்மாசனம் கலையக் கூடாது.
இது மிகவும் முக்கியம்.
இப்படியே 1 நிமிடம் செய்யுங்கள்.
சாதாரணமாக மூச்சு விட்டால் போதும்.
<b>பயன்கள் </b>
மார்புக்கூடு அகன்று விரியும். பிட்யூட்டரி, தைராய்டு, நுரையீரல் ஆகியவற்றின் வேலைகளைச் சீராக்கி, துரிதப்படுத்துகின்றது.
இரத்த ஓட்டம் ஒழுங்காக அமைகிறது.
இந்த ஆசனம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, ஷயம், இருமல் போன்ற கோளாறுகளை நன்கு குணப்படுத்தும்.
சிறுவர், சிறுமியருக்கு ஏற்ற ஆசனம் இதுவாகும்.
Posts: 65
Threads: 0
Joined: May 2005
Reputation:
0
Posts: 65
Threads: 0
Joined: May 2005
Reputation:
0
Posts: 65
Threads: 0
Joined: May 2005
Reputation:
0
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி படங்களுடன் கூடிய தகவல்களுக்கு ... ஆனால் இப்படி இருந்து பழகவே பல நாட்கள் செல்லும் என்று நினைக்கின்றேன். :roll: :roll:
|