Yarl Forum
ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனம் (/showthread.php?tid=2700)

Pages: 1 2


ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனம் - AJeevan - 10-29-2005

<span style='font-size:22pt;line-height:100%'><img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/topimage.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழர்களின் ஆசனம்</b>
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும்
எளிதாக செய்யக் கூடிய ஆசனம் சூரிய நமஸ்காரம்.
கதிரோனைப் போற்றி வணங்கி அவனது அருளை,
ஆசிகளைப் பெறும் விதத்திலும், கதிரவனிடமிருந்து
சக்தியை இழுத்து வாங்கிக் கொள்ளும் விதத்திலும் அமைந்திருப்பதால்
சூர்ய நமஸ்காரம் என்று பெயர் வந்தது.
கதிரவனைத் தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில்
அவனுக்கு நன்றி கூறி சக்திகளைப் பெற்று கொள்ளும்
அடிப்படையில் இந்த ஆசனங்கள் அமைந்திருப்பதால்
இதை தமிழர்களின் ஆசனம் என்று கொள்ளலாம்.
<img src='http://www.fit2.de/thaiyoga/sonnengruss.gif' border='0' alt='user posted image'>
<b>சூர்ய நமஸ்கார -ஆசன நிலைகள்</b>
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose1.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-1
முதல்படியாக இரு கைகளையும் அழகுறக் குவித்துக்
கும்பிடும் நிலையில் நிற்கவும்.
பிறகு நேரே கண்களைப் பார்க்கும்படி அமைக்கவும்.
மூச்சை உள்ளே நன்கு இழுத்து மார்பை மேலே ஏற்றி
(வயிற்றை யும் லேசாக மேலேற்றி) கும்பிடும் கைகளை மார்பை ஒட்டி வைத்துக் கொண்டு
அமைதியாக நிமிர்ந்து நிற்கவும்.

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose2.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-2
கைகளை உயர்த்தி உடலை முடிந்த அளவு பின்னால்
வளைக்கவும்

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose3.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி -3
அடுத்து மூச்சை வெளியே விட்டவாறே உடலைக்
குனியச் செய்து, கைகளைக் கால்களுக்கு முன்பாக
தரையில் (உள்ளங்கை பதியுமாறு) வைக்கவும்.

கவனம் - மூட்டுக்களோ, கைகளோ சற்றும் வளையலாகாது.
முகம் லேசாக முழங்கால்களைத் தொட்டபடியும் இருக்கலாம்.

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/4.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose4.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-4
கைகளை அப்படியே (தரையில் வைத்த நிலையிலேயே)
இருத்தி, வலது காலின் முழங்காலை மட்டும் முன்னால்
மடக்கி, இடது காலை பின்னால் வளையாமல்
நன்கு நீட்டவும். பிறகு காலை நகர்த்தாமல்
மார்பை உயர்த்தி முதுகையும்,
கழுத்தையும் மூச்சை உள்ளுக்கிழுத்த வாறே
சற்று பின்புறமாக வளைத்திட வேண்டும்.
பார்வை நேராக இருக்கட்டும்.

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/5.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose5.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-5
வலது காலையும், இடதுக் காலையும் பின்னோக்கிக்
சேர்த்து நீட்டி (குதிகால் மேலே உயர்ந்து) கைளை
மட்டும் அப்படியே வைத்திருக்கவும்.
முகம் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது உடலின் மற்ற பாகங்கள் தரைக்கு
மேலே தூக்கி நிற்க, உள்ளங்கையையும்,
பாதங்களின் விரல்களும் மட்டுமே தரையைத்
தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு முக்கோண அமைப்பு வர வேண்டும்.
உடலின் பாரம் முழுவதும் கைகளின் மீது விழ வேண்டும்.
(அதற்காக முக்க வேண்டாம்) எந்த ஒரு பாகமும் வளையலாகாது (முட்டிகள் உள்பட)
இந்த ஆசன நிலை முழுவதும் மூச்சை
தம் கட்டி உள்ளேயே வைத்திருப்பது அவசியம்.

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/6.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose6.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-6
அடுத்தபடி முழங்கைகளையும், முழங்கால்களையும்
சற்றே கீழிறக்கிய நிலையில் பிருஷ்டப் பகுதி மட்டும்
தரையிலிருந்து மேலே தூக்கி நிற்கட்டும்.
உள்ளங்கை முதலில் மற்ற பாகங்கள் தரையைத்
லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும்.
இந்த நிலையில் மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/7.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose7.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-7
ஏழாவது நிலையாக மூச்சை நன்கு உள்ளிழுத்தவாறே
தலையையும், மார்பையும் மேலே நிமிர்த்தவும்.
தலையை கூடிய வரை பின்னே வளைக்கவும்.
உடலின் கனத்தை உள்ளங்கைகளிலும்,
முழங்காலிலும் படும்படி அமைக்கவும்

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/8.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose5.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-8
அடுத்தபடி, கை கால்கள் முந்திய நிலையில் அப்படியே
இருத்தி வைத்து, பிருஷ்ட பாகத்தை மட்டும் முடிந்த
வரை மேலே உயர்த்திடுங்கள்.
அதை மேலே உயர்த்தும் போது, குதிகால்களை
நன்கு தரையில் அழுத்தி வைத்துக் கொள்க.
முக வாய்க்கட்டையை மார்பை ஒட்டி வைத்துக் கொள்க.
தலையை உட்புறமாகத் தொங்க விடுங்கள்.
முழங்கால்கள் (முட்டிகள்) சற்றும் வளையலாகாது.
இந்த நிலையில் மூச்சை வெளி விடாமல் தம் கட்டி
உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இரு நொடிகள் இந்நிலையில்
(முக்கோணம் போல) நிற்கவும்

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/9.jpg' border='0' alt='user posted image'>
பயிற்சி-9
அடுத்ததாக, இடது காலை மட்டும் முன் வைத்து
இரண்டு கைகளுக்கு நடுவில் தரையில் வைத்து விடுங்கள்.
வலதுக் காலை பின்னால் நன்கு (முட்டி மடியாமல்)
நீட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சி 9 நிலையிலும் மூச்சை தம் பிடித்து
உள்ளேயே மார்பு விம்ம (வெளியே விடாமல்)
வைத்திருக்க வேண்டும்.

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/3.jpg' border='0' alt='user posted image'>
பயிற்சி-10
அடுத்து வலது காலை இடது காலோடு சேர்த்து
ஒட்டியிருக்குமாறு வைத்து, பிருஷ்ட பாகத்தை மேலே
தூக்கி உள்ளங்கைகள் தரையில் பதிய குனிந்து நிற்க
வேண்டும். தலை உட்புறமாக குனிய வேண்டும்.
இந்த ஆசன நிலையும் 3-வது ஆசன நிலையும் ஒன்றேதான்.
இப்போது மூச்சை வெளியே விட்டு விட வேண்டும்.


<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/11.jpg' border='0' alt='user posted image'>
பயிற்சி-11
படத்தில் காட்டியபடி, கைகளை மேலே உயர்த்திய
நிலையில் நின்று கொண்டு,
முடிந்த அளவுக்கு உடம்பை பின்னாலே வளைக்கவும்.
தலை நிமிர்ந்து நேராக மேலே பார்க்கட்டும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கலாம்.
பின்னர் நிமிர்ந்து வெளி விடலாம்.

<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/12.jpg' border='0' alt='user posted image'>
பயிற்சி-12
கடைசியாக நின்ற நிலை அதாவது மூச்சை அமைதியாக
உள்ளுக்குள் இழுத்தவாறே இரண்டு கைகளையும்
கும்பிட்ட நிலையில் அழகுற நிற்கவும்.
பிறகு மூச்சை வெளியிட்டு ஓய்வு எடுக்கவும்.

இப்படி பன்னிரண்டு நிலைகளையும் வரிசை தவறாமல்,
தாறு மாறாக குனிந்து வளைந்து இடையில் ஓய்வெடுத்தல்
என்று முறையில்லாமல் செய்யக் கூடாது.
ஒழுங்காக செய்தால்தான் சூரிய நமஸ்காரத்தின் முழுப்
பயனும் கிட்டும்.
இதற்குள் ரத்த ஓட்டச் சுற்று இரண்டு மூன்று சீரான
நேர்ச் சுற்றுகள் சுற்றியிருக்கும்.
இதில் 12 நிலைகளுக்கும் மூச்சை உள்ளிழுக்கும்
முறைகள் முக்கியம்.
கவனித்து செய்யுங்கள்.


<b>பலன்கள்:-</b>
உடலின் எல்லாப் பாகங்களும், உள்ளூறுப்புக்களுமே
நல்ல பயன்களை எய்துகின்றன. இதன் சிறப்பு இப்போது விளங்குகின்றதா?

மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி
பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.

நாடிகளெல்லாம் பலமடைகின்றன.
அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து
உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப்
படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.
நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப்
பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி
ஒழுங்காகச் செயலாற்று கின்றன. ஒருவித நோயும்
மனிதனை அண்டவே அண்டாது.
<img src='http://img471.imageshack.us/img471/892/serieajeevan6vb.jpg' border='0' alt='user posted image'>


நன்றி: தினகரன் மற்றும் சில ஆங்கில பகுதிகள்.........<img src='http://www.seasonsindia.com/healthfitness/images/surya10.gif' border='0' alt='user posted image'></span>


- samsan - 10-31-2005

நன்றி அஜீவன் அண்ணா படங்களுடன் கூடிய விளக்கத்திற்கு.


- samsan - 10-31-2005

நன்றி அஜீவன் அண்ணா படங்களுடன் கூடிய விளக்கத்திற்கு.


- samsan - 10-31-2005

இதைபோல் தொடர்ந்த பல ஆசனமுறைகளை எழுதுங்கள்.


- RaMa - 10-31-2005

நன்றி தகவலுக்கு அஐிவன்


- Rasikai - 10-31-2005

நன்றி அண்ணா தங்கள் செய்கிறீர்களா>? :wink:


- AJeevan - 11-09-2005

Rasikai Wrote:நன்றி அண்ணா தங்கள் செய்கிறீர்களா>? :wink:
ஆம்
அதுவே இன்றைய இயக்கத்துக்கு வழி செய்கிறது ரசிகை.

சூரிய நமஸ்காரத்தில் முழு உடலும் வளைவதற்கான செயல் முறைகள் அடங்கி இருக்கிறது.
இது மல்ட்டி விட்டமின் போன்றது.
அடுத்த ஆசனங்கள் தனித் தனி பலன்களைத் தர வல்லது.
ஆண்-பெண்-குழந்தைகள் எனும் பாகுபாடு இன்றி செய்யக் கூடியது.

அடுத்த ஆசனங்களை பின்னர் தருகிறேன் சாம்சன்.


- Rasikai - 11-09-2005

நல்லது அஜீவன் அண்ணா ம்ம் மிகுதியை விரைவில் எதிர் பார்க்கிறோம்


- Vishnu - 11-10-2005

மிகவும் பயனுள்ள தகவலை இணைத்தமைக்கு நன்றி அஜீவன் அண்ணா....


- AJeevan - 11-12-2005

<span style='color:brown'><b>அல்சரா?
பத்த பத்மாசனம் செய்யுங்க...</b>
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/mar/patha_asanam.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.sivananda.org/montevideo/om/images/padmasana.jpg' border='0' alt='user posted image'>
பத்த பத்மாசனம் என்பது பத்மாசனத்தின் ஒரு வகை ஆகும். ஒரு விரிப்பின் மீது அமர்ந்தபடி கால்கள் இரண்டையும் நன்கு நீட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு வலது காலை மடித்து இடது தொடை மீது வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல இடது காலை மடித்து வலது தொடை மீது வையுங்கள்.
அதன்பின்னர் முதுகின் பின்புறம் கைகளைக் கொண்டு போய் வலது கையின் முதல் 3 விரல்களால் வலதுகால் கட்டை விரலையும்,
இடது கையின் முதல் 3 விரல்களால் இடது கால் கட்டை விரலையும் நன்றhக பிடித்துக் கொள்ளுங்கள்.

இதன் பிறகு முகவாய்க் கட்டையை மார்பின் மேல் ஒட்டி வைத்து புருவ மத்திப் பகுதிக் கண்களை மூடி பார்வையைச் செலுத்தி ஓம், ஓம் என்று உச்சரித்து தியானம் செய்யுங்கள். (உங்கள் மனதுக்கு பிடித்தமான மந்திரத்தை சொல்லலாம்)

ஐந்து நிமிடம் முதல் ஏழு நிமிடம் வரையாவது இதுபோன்று அமைதி நிலையில் இருந்தால் அபார மான பலன்கள் கிட்டும்.
எப்பேர்பட்ட பிரச்சினைகளும் அற்புதமான வழிகளில் தீர்ந்து விடுவதை நீங்களே அனுபவரீதியாக உணருவீர்கள்.

இந்த ஆசனத்தை செய்யும்போது உட்கார்ந்த நிலையில் உடம்பை நேரான நிலையில் வைத்து நன்றாக நிமிர்வது மிகவும் அவசியம்.
சாதாரண மூச்சுக் கூட போதுமானது.
என்றாலும் பிராணாயாம முறைப்படி மூச்சிழுத்து வெளியே விட்டால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.

பலன்கள்

இந்த ஆசனத்தினால் அடிவயிற்றில் ஏற்படக் கூடிய சகல விதமான நோய்களும் பறந்து விடும்.
முக்கியமாக சொல்வதானால் மூலம், பவுத்திரம், அல்சர், வயிற்றில் விட்டு விட்டு வரும் வலிகள் யாவும் மறைந்து விடும்.

இதை கர்ப்பிணி பெண்கள் தவிர்த்து மற்ற பெண்கள் செய்யலாம்.

நன்றி: தினகரன்</span>


- AJeevan - 11-15-2005

<span style='color:blue'><b>சிறுநீர் கல் அடைப்பு
தொந்தரவு நீங்க...</b>
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/mar/patha_K_asanam.jpg' border='0' alt='user posted image'>
தரை விரிப்பின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்.
பிறகு இரு கைகளையும் முன்புற மாக நீட்டி, இரண்டு கால்களையும் பின்புறம் மடித்திடுங்கள்.
இப்போது வலது காலின் குதிங்கால் வலது தொடைச் சந்திப்பிலும்,
இடது காலின் குதிங்கால் இடது தொடைச் சந்திப்பிலும் ஒட்டும்படியாக மடித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் இரு உள்ளங்கால்களும் எதிரெதிராக அமைந்திருப்பதைக் காணலாம்.

பிறகு இடது கையால் உங்களுடைய இடது உள்ளங்காலையும்,
வலது கையால் வலது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தலையை நன்கு குனிந்து கால்களின் முன்னால் தரையில் தலையை வைக்கப் பழகுங்கள்.
ஆரம்பத்தில் இப்படி குனிவது சிரமம்தான்.

ஆனாலும் பிற ஆசனங்களை பழகப் பழக தலையும் நன்கு குனிய வரும்.
பின்பு எளிதாக தலையை உள்ளங்கால்கள் மீதே வைக்கப் பழகி விட முடியும்.
இந்த ஆசனத்தை செய்யும் போது பின்புறம் மேலே எழும்பி வரக்கூடும்.
அதை மேலே தூக்காமல் இருககப் பழக வேண்டும். ஆசனம் செய்யும் போது சாதாரண மூச்சே போதுமானது.
அதிகம் இழுத்து மூச்சு விட வேண்டாம்.

<b>பலன்கள்</b>

இந்த ஆசனம் மூலம் சிறுநீரகத்தின் கோளாறு எதுவாக இருந்தாலும் சரியாகி விடும்.
அதன் உள்ளே உள்ள சுத்திகரிப்பு சக்தி கூடி வரும்.
இரத்த ஓட்டம் சீராகி வரும்.
எந்தக் கடுமையான இருமலும் இந்த ஆசனத்தால் போய் விடும்.
அதுவே ஆசனத்தின் சிறப்பு.

சிலருக்கு மூத்திரக் கடுப்பு, பிருஷ்ட பாகத்தில் எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கலாம்.
அவர்கள் ஒழுங்காக இந்த ஆசனத்தை செய்து வந்தால் வலியும், எரிச்சலும் காணாமல் போய் விடும்.

சிறுநீரகத்தில் கல் அடைப்பு இடைஞ்சலும் நீங்கும்.

இந்த ஆசனம் பெண்களுக்கு அதிக பலன்களை தரும். முக்கியமாக மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு வரும் வலி, பிற கோளாறுகள் இதனால் மறைந்து விடும். கர்ப்பப்பை நல்ல திடகாத்திரமாக அமையும். பிரசவம் எளிதாக இருக்கும்.
ஆபரேஷன் கருவிகளை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.
குழந்தையும் பலமுடன் பிறக்கும்.

<b>கர்ப்பிணி பெண்கள் முதல் ஒரு மாதம் மட்டும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
இரண்டாம் மாதத்தில் இருந்து கண்டிப்பாக செய்யக் கூடாது.</b>

</span>

நன்றி: தினகரன்


- RaMa - 11-16-2005

நன்றி அஐிவன் படங்களுடன் கூடிய விளக்கங்களுக்கு


- Rasikai - 11-16-2005

மிகவும் பயனுள்ள தகவலை இணைத்தமைக்கு நன்றி அஜீவன் அண்ணா....


- AJeevan - 11-18-2005

[size=15]<b>பெண்களுக்கான ஆசனங்கள்

குப்புற படுத்துச் செய்யும் ஆசனங்கள்
<img src='http://www.dinakaran.com/health/women_yoha/2005/aug/yoga.jpg' border='0' alt='user posted image'>
[b]புஜங்காசனம்</b>

நல்ல பாம்பு படம் எடுப்பது போல் தோற்றமளிக்கும். இதில் முதுகெலும்பு பின்புறம் வளைகிறது. சர்ப்பாசனம் என்றும் கூறலாம்.

<b>செய்முறை.</b>

குப்புறப்படுக்கவும், கால்களை இரண்டும் சேர்ந்து இருக்கட்டும். முகவாய்க் கட்டை தரையில் படிந்திருக்க வேண்டும். இரு உள்ளங்களைகளையும் மார்புக்கு அருகில் பக்க வாட்டில் வைத்து அழுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக் கொண்டு பாம்பு படம் எடுப்பது போல மெதுவாக தலையை யும், மார்பையும் படிப்படியாக உயர்த்தவும்.

தொப்புளுக்கு கீழ் உள்ள பாகம் தரையில் படிந்திருக்க வேண்டும். இந்நிலையில் 30 விநாடிகள் இருக்கலாம். பிறகு மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரலாம். இதை 2 முறை செய்தால் போதும்.

<b>பயன்கள் :</b>
பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.


<img src='http://www.dinakaran.com/health/daily/2005/aug/14/yoga.jpg' border='0' alt='user posted image'>
<b>அர்த்த சலபாசனம்</b>

அர்த்த என்றால் பாதி என்று பொருள்.

குப்புறப்படுத்து கைகளை பக்கவாட்டில் கால்களை ஒட்டி வைத்துப் பிறகு ஒரு காலை முடிந்த வரை பின்னோக்கி தூக்கவும். முட்டி வளையக் கூடாது. உள்ளங்கைகள் பூமியைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இதே நிலையில் 15 விநாடி இருந்து விட்டு பிறகு மெதுவாக காலை கீழே இறக்கி இப்போது மாற்றுக் காலை தூக்கிச் செய்யவும். இவ்விதம் இரண்டு முறை செய்யலாம்.

<b>பயன்கள்</b>

சலபாசனம் செய்வது எளிதாகிறது.

கிட்னியும், காதும் பலப்படும்.

தொப்பையும் கரையும்.

<b>உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள் </b>
<img src='http://www.dinakaran.com/health/women_yoha/2005/nov/janu.jpg' border='0' alt='user posted image'>
<b>ஜானு சிரசாசனம்</b>

இரண்டு கால்களையும் நீட்டி நேராக உட்கார்ந்து வலது காலை மடக்கி குதிகால் ஆசன வாயில் படும்படி வைக்கவும். பிறகு மெதுவாக முன் நோக்கி வளைந்து இரு கைகளாலும் இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம் இடது கால் மூட்டைத் தொட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடி இருந்து பிறகு வலது காலை நீட்டி இடது காலை மடக்கி முன்போலச் செய்யவும். ஒவ்வொரு காலையும் 2 முறை செய்ய வேண்டும்.

<b>பலன்</b>

1. எருவாய், கருவாய் பகுதிகளிலுள்ள நரம்பு மண்டலங்களும் தசைகளும் வலிமை பெறுகிறது.

2. இது செய்தால் கெட்ட பழக்கங்கள் நீங்கி விடும்.

3. நீரழிவு நோய்க்கு மிக முக்கியமான ஆசனம்

4. பெண்களுக்கு கருப்பை மற்றும் அது சம்பந்தமான கோளாறுகள் நீங்கி விடும்.

5. உடல் எடை, தொந்தி குறைகிறது.

<b>குறிப்பு </b>

1. குதிகால் மீது உட்காரக் கூடாது.

2. அடிமுதுகு, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.

நன்றி: தினகரன்


- vasisutha - 11-19-2005

நன்றி அஜிவன் அண்ணா..
இதை அதிகாலையில் எழும்பித்தான்
செய்ய வேண்டும் என கூறுகிறார்களே.. உண்மையா?


- AJeevan - 11-19-2005

<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->நன்றி அஜிவன் அண்ணா..
இதை அதிகாலையில் எழும்பித்தான்
செய்ய வேண்டும் என கூறுகிறார்களே.. உண்மையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இல்லை.
மாலையிலும் செய்யலாம்.

ஆனாலும் ஆகக் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டு இருக்க வேண்டும்.

காலையில் மனம் அமைதியாக இருக்கிறது.
மாலை வேளைகளில் பல வேலைகள் காரணமாக மனம் அல்லல் படுவதால் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என நினைக்கின்றனர்.

யோகாசிரமங்களில்
காலை - மாலை இரு வேளைகளும் பயிற்சி நடைபெறுகிறது.

மாலையில் காலையை விட அதிகமாக உடல் வளைந்து கொடுக்கிறது.
காரணம் நாம் பல வேலைகளைச் செய்வதால்
மாலையில் ஆசனங்களைச் செய்வது
காலையை விட இலகுவாக இருக்கிறது.

<b>உடற்பயிற்சி போல் வேகமாக ஆசனங்களைச் செய்யக் கூடாது.</b>

எவ்வளவு மெதுவாக மனதை ஒரு நிலைப்படுத்தி
மூச்சை இழுத்து விட்டு பயிற்சியில் ஈடுபடுகிறோமோ அது அந்த அளவு
அதிக பலனைத் தருகிறது.

மனதை ஒரு நிலைப்படுத்த முடியாதவர்கள்
மெடிடேசன் இசையொன்றை கேட்டவாறு
யோகாசனப் பயிற்சியில் ஈடுபடலாம்.

பலர் உடற் பயிற்சிகளைச் செய்யும் போது தண்ணீர் குடிப்பதுண்டு.
என்னைப் பொறுத்த வரை அது தவறு.
<b>யோகாசனம் செய்யும் போது கட்டாயமாக எதுவும் பருகக் கூடாது.</b>

ஆசனங்களைத் தொடங்க 15 - 20 நிடத்துக்கு முன் அல்லது முடிந்து 15 - 20 நிமிடத்துக்கு பின் தண்ணீர் அல்லது ஏதாவது ஒரு பானத்தை பருகலாம்.

இப்படியான நேரங்களில் தாகம் ஏற்படுமானால்
யோகாசனங்களை குறைத்து செய்வதே நல்லது.
கொஞ்சம் காலத்தில் உடலும் - மனமும் பழகிவிடும்.
அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம்.

வேக உலகத்தில்
<b>காலையில் சூரியநமஸ்காரம் செய்வது இலகுவானது.</b>
அடுத்த ஆசனங்களை காலையில் முடியாவிடில் மாலையில் செய்யலாம்.


- அனிதா - 11-19-2005

ஆகா படங்களுடன் கூடிய தகவலை இங்கு இணைத்தமைக்கு நன்றி அஜீவன் அண்ணா...


- கீதா - 11-19-2005

மிக பயனுள்ள தகவலை இணைத்தமைக்கு நன்றி அஜீவன் அண்ணா...


- ப்ரியசகி - 11-20-2005

ரொம்ப நன்றி அஜீவன்..படங்களோடு ரொம்ப விளக்கமாக இருக்கு. நான் கூட டீவில் பார்ப்பேன்..அம்மா செய்யச்சொல்லி சொல்லுறவா..பட்..தொடர்ந்து செய்ய கஷ்டமாக இருக்கு..அதுக்கு ஏதும் வழி இருக்கா? :roll:


- AJeevan - 11-20-2005

ப்ரியசகி Wrote:ரொம்ப நன்றி அஜீவன்..படங்களோடு ரொம்ப விளக்கமாக இருக்கு. நான் கூட டீவில் பார்ப்பேன்..அம்மா செய்யச்சொல்லி சொல்லுறவா..பட்..தொடர்ந்து செய்ய கஷ்டமாக இருக்கு..அதுக்கு ஏதும் வழி இருக்கா? :roll:

சூரிய நமஸ்காரம்தான் இலகுவானது.
ஒரு சில நிமிடங்கள் செலவழித்தாலே போதும்.

ஆரம்பத்தில் ஆசனங்களைச் செய்வோர் மற்ற ஆசனங்கள் ஒவ்வொன்றையும் குறைந்தது 3 முதல் 6 முறையாவது செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தை ஆரம்பத்தில் செய்யத் தொடங்கினால் அதற்கு 10-15 நிமிடங்கள் போதும்.
பின்னர் காலத்தையும் முறைகளையும் அதிகரித்துக் கொள்ளலாம்.

ஒரு ஆர்வம்வந்து விட்டால்
பின்னர் உங்களுக்கு அது பெரிதாகத் தெரியாது.
நாம் கணணி முன் இருப்பது போல ஆகிவிடும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இருந்தாலும் நல்ல யோகாசன புத்தகங்களை படித்தால்
உங்களுக்கு தேவையானதை அதிலிருந்து பெறலாம்.
அதுவே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
<img src='http://www.girinathyoga.com/admin/images/bookauthor/AR_Ft.jpg' border='0' alt='user posted image'>
இறையடி சேர்ந்த எனது
<b>யோகாசன குரு சுத்தரம் </b>அவர்களின்
புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பாருங்கள்.
அவை பலருக்கு பயன் தரும்.

http://www.girinathyoga.com/
http://www.girinathyoga.com/books.asp