Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்ச்சைக்குரிய தபால்தலை
#41
அடிதடி நான் விடயத்தை விட்டு விலகிச் செல்ல விரும்பவில்லை. ஆனால் உமது விதண்டாவாதத்தை விளக்கவே சிலதை குறிப்பிட வேண்டீ வந்தது.

பொட்டைப் பற்றி நான் சொன்னதைத்தானே ஏதோ எல்லாம் தெரிந்தவர் மாதிரி என்னை வடிவாகத் தெரிந்து கொண்டு கருத்தெழுதச் சொன்னீர்கள். இப்போ நீங்களே மற்றவர்களிடம் விளக்கம் கேட்கின்றீர்கள். சரி பொட்டைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள் பின் நான் பதிலளிக்கின்றேன்.
Reply
#42
பொட்டு போடும் இருபுருவங்களின் பகுதி third eye இருக்கும் இடம் கருதுவார்கள்... இந்த பகுதியுனூடாக power உள்ளவர்கள் ஆட்களை powerlessஆக்க முடியும் கருது கோள் உண்டு..அதை தடுப்பதற்க்காக அப்பகுதியில் பொட்டு போடுவதாக சிலர் கூறூவர்கள்
Reply
#43
Vasampu Wrote:அடிதடி பொட்டு தமிழரின் இந்து மத அடையாளம் தான். ஆனால் 100 வீதம் தமிழர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்களாகத்தான் முன்பு இருந்தார்கள். உம்மைப்போல் எதையும் அரைகுறையாக அறிந்து வைத்திருந்த சிலர் தமது வசதிகளுக்காக ( வேலை வீடு போன்றவற்றிற்காக ) அன்றும் மதம் மாறினார்கள். இன்றும் மதம் மாறுகின்றார்கள்.

வணக்கம் வசம்பு நீண்ட நாட்களிற்கு பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நீங்கள் மேலே குற்ப்பிட்ட விடயம் சரியானதா என அறிய ஆவலாக உள்ளேன் ஆதலால் இவ்வினாவினை இங்கே முன் வைக்கின்றேன்.

தமிழர்கள் இதுக்களா? காரணம் இந்து என்னும் சொல் கிரேக்கத்தில் இருந்து தான் வந்ததாக அறிஞ்ஞர்கள் கூறுகின்றார்கள். ஆதி காலத்து மனிதன் வளிபட்டது இயற்கையையே (சூரியனை, மரம், செடி, கொடி, (தானியம் தருகின்ற) வற்றை வணங்கி இருக்கின்றார்கள். அதே நேரம் இயற்கை அழிவுகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் இயற்கையை வளிபட்டு இருக்கின்றார்கள். இதற்கு உதாரணம். சிவப்பு இந்தியர்கள், சாமர்கள், குர்த்திஸ் இன மக்கள்( பழம் குடியினர்). ஆப்ரிக மக்கள், தமிழர்கள் இன்னும் பல பழங்குடிகள். பின்நாளில் உருவ வளிபாடும் தோன்றியிருக்கின்றது. இதன் அடிப்படையில் தமிழர்களை இந்துக்கள் என்றோ இல்லை வேறு மதத்தவர் என்றோ அழைத்துக்கொள்வது சரியா?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#44
Vasampu Wrote:அடிதடி நான் விடயத்தை விட்டு விலகிச் செல்ல விரும்பவில்லை. ஆனால் உமது விதண்டாவாதத்தை விளக்கவே சிலதை குறிப்பிட வேண்டீ வந்தது.

பொட்டைப் பற்றி நான் சொன்னதைத்தானே ஏதோ எல்லாம் தெரிந்தவர் மாதிரி என்னை வடிவாகத் தெரிந்து கொண்டு கருத்தெழுதச் சொன்னீர்கள். இப்போ நீங்களே மற்றவர்களிடம் விளக்கம் கேட்கின்றீர்கள். சரி பொட்டைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள் பின் நான் பதிலளிக்கின்றேன்.

வசம்பு: நான் விளக்கம் சொல்வதை விட யாழ் இனையத்தள வாசகர்கள் சொன்னால் நன்று, மேலும் என் மீது தனிப்பட்ட மோதலை தவிர்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன், பொட்டு அணிவது தமிழர்களின் மரபு. திருநூறு சைவ சமயத்தின் அடையாளம், ஆதலால் இவ் தபால்முத்திரையில் எவ்வித தவறும் இல்லை என்பது என் கருத்து.
Reply
#45
Mathan Wrote:இது குறித்து தொடர்ந்து விவாதிக்க விரும்பவில்லை என்று எழுதியிருந்தேன், இருந்தாலும் ஒரு விடயத்தை குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை, தயவு செய்து பதில் கருத்து எழுதும் போது அவதானமாக இருங்கள். அவை கிறிஸ்தவ மத நண்பர்களையோ அல்லது வேறு மத நண்பர்களையோ மனம் வருந்த செய்யும் கருத்துக்களாக இருக்க கூடாது, நன்றி

ஆனால் இந்துக்களின் மனம் நோகும்படி ஏதும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் நோகக்கூடாது. அப்படித்தானே?
Reply
#46
kuruvikal Wrote:இங்கு களத்தில் எத்தினை விதமாக இந்து மதந்தைப் பழித்தார்கள்..அப்போ எங்கோ போனது இந்த மதிப்பளிப்பு..??! உண்மையில் இது இரட்டை வேடத்தனமாகவே தெரிகிறது..! களத்தில் ஒரு நியாயம்..வெளிக்கு ஒரு நியாயமாக..!

கிறீஸ்மஸ் கொண்டாடுவது இன்ன மதந்தவர் என்றதிலும் அது எல்லோராலும் கொண்டாடப்படுவது என்பதே நாங்கள் தரிசித்தது..! நாங்களும் கரோல் கீதம் இசைத்து நத்தார் தாத்தா வேடம் போட்டு ஊர் சுற்றியதும் உண்டு..! சேர்ச் போனதும் உண்டு...கிரமமாக..!

அதுவும் மேற்கைப் பொறுத்தவரை அவர்கள் மதத்திற்கு என்றில்லாமல் இனத்துவ அடையாளங்களுக்கு முக்கியம் கொடுக்கின்றனர்..! அந்த முத்திரையைப் பார்க்கின்ற போது பொட்டு வைத்த ஒரு குடும்பத்துடன் வெள்ளையர்கள் கலந்திருப்பது போல இருக்கிறது..! உண்மை... மேற்கில் குறிப்பாக ஆசியர்கள் வெள்ளைகளோடு நெருங்கிப் பழகுவது குறைவு.. கறுப்புகள் பழகுவதைக் காட்டிலும் இவர்கள் குறைவு..! இப்படியான தனிமைப்படுத்தல்களே..பேர்மிங்காம்...பிரட்பேட் பகுதிகளில் கலவரங்கள் தோன்றக் காரணம்...! இவற்றை மையமாக வைத்து ஒற்றுமையை நட்புறவை சகோதரத்துவத்தை வலியுறுத்த அந்த தபால்தலையை றோயல் மெயில் வெளியிட்டிருக்கும்...உண்மையில் அது சிறந்ததே..!

மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதிலும் மனிதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே முதன்மைத் தேவை...! அப்போதுதான் ஒற்றுமை சகோதரத்துவம் வளரும்...! அமைதி தோன்றும்..புரிந்துணர்வு பெருகும்..! மதம் மதம் என்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதால் எந்த நன்மையும் இல்லை..மத அடையாளங்களால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன...??! எதுவுமே இல்லை...! வெறும் இனத்துவ அடையாளத்துக்காக மதத்தை காக்கிறார்கள்..மனிதம் தொலைய.. அது அவசியம் தானா...! மேற்கில் (சில நாடுகளைத் தவிர) இளைய தலைமுறையிடம் மத வெறித்தன்மை வெகுவாக குறைந்துவிட்டது..! இந்தியா இலங்கை மற்றும் முஸ்லீம் நாடுகளில் உள்ளது போன்ற மத வெறி இல்லை...அவர்களிடம்..! எனவே அவர்கள் இம்முத்திரையை மதவாதக் கண்ணோட்டத்தில் ................. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

மற்றவன் பழிக்கும்போது பதில் கூறாவிட்டால், பிறகு வேறு யாரும் பழிக்கும்போது பொத்திக் கொண்டிரு என்பது எவ்வகை நியாயம். அது இரட்டைவேடத் தன்மையல்ல. சிவன் கோவிலுக்கு போன கையோடு சேச்சுக்கு போய் முழந்தாளிடுவது தான் இரட்டை வேடத்தனம்.

கிறிஸ்மஸ் நேரம் நீங்கள் என்ன வேடம் போட்டீர்களோ, அது உங்கள் தப்பு. அதுக்காக நாம் எல்லாம் அதற்கு குடை பிடிக்கவேண்டிய தேவை இல்லை.

மதவாதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு தங்களின் மதம் மாறுபவர்களுக்கு காசை அள்ளிக் கொட்டிக் கொடுப்பது எவ்வகை. அதிலும் ஒரு காலத்தில் இந்து ஆலயங்களை தரைமட்டமாக்கி அழித்து அதன் மேல் சேச் கட்டியது எல்லாம் என்ன வென்று சொல்வது.
Reply
#47
Mathuran Wrote:தமிழர்கள் இதுக்களா? காரணம் இந்து என்னும் சொல் கிரேக்கத்தில் இருந்து தான் வந்ததாக அறிஞ்ஞர்கள் கூறுகின்றார்கள். ஆதி காலத்து மனிதன் வளிபட்டது இயற்கையையே (சூரியனை, மரம், செடி, கொடி, (தானியம் தருகின்ற) வற்றை வணங்கி இருக்கின்றார்கள். அதே நேரம் இயற்கை அழிவுகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் இயற்கையை வளிபட்டு இருக்கின்றார்கள். இதற்கு உதாரணம். சிவப்பு இந்தியர்கள், சாமர்கள், குர்த்திஸ் இன மக்கள்( பழம் குடியினர்). ஆப்ரிக மக்கள், தமிழர்கள் இன்னும் பல பழங்குடிகள். பின்நாளில் உருவ வளிபாடும் தோன்றியிருக்கின்றது. இதன் அடிப்படையில் தமிழர்களை இந்துக்கள் என்றோ இல்லை வேறு மதத்தவர் என்றோ அழைத்துக்கொள்வது சரியா?

ஏனய்யா இப்படி ஒரு அடிமைத்தனம்.

கிரேக்கர் வணங்கியதற்காக நாம் அவர்கள் வழி என்று தப்பாக ஏன் எடை போடுகின்றீர்கள். எம் வழியாக அவர்கள் இருக்க கூடாதா?

இந்துக்கள் என்பது இப்போது ஏற்றுக்கொண்ட சொல். ஆனால் இந்து மதத்தை சனாதனதர்மம் என்று தான் முன்பு அழைத்ததாக அறிந்திருக்கின்றேன்.

உங்களுக்காக:
யுூதர்களும் ஆரம்ப காலத்தில் கைகளால் தான் சாப்பிட்டார்களாம். எனவே நாமும் அவ்வழியாக இருக்க கூடுமோ? :roll: :roll:
Reply
#48
adithadi Wrote:தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள்? யாராவது விளக்க முடியும்மா?

பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.

அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது.

தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று. (அது போல் திருமணம் ஆகாதவர்கள் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.)
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#49
[b]இது 1998 ல் வெளிவந்த Hinduism Today இல் இடம் பெற்ற ஒரு கட்டுரையின் தமிழாக்கம்.

பொட்டு அல்லது திலகம் என்பதற்கு மங்கல அழகுச் சின்னமாக நெற்றியின் நடுவில் (புருவ மத்தியில்) குங்குமம் போன்றவற்றால் வைத்துக் கொள்ளும் சிறு வட்ட வடிவக் குறி என்கிறது தமிழ் அகராதி. அது அதற்கு மேல் எந்த விளக்கத்தையும் தரவில்லை. பொட்டு வைத்தல் என்பது இந்தியப் பண்பாட்டுக்குரிய முக்கிய அம்சமாகும். பெண்கள் மட்டுமல்ல ¬ண்களும் நெற்றியில் திலகமிடுவது நெடுங்காலமாக இந்திய மரபில் காணப்பட்டு வருகிறது.

தாம் சார்ந்த இந்து மதப் பிரிவின் அடையாளத்தைக் குறிப்பதற்காக ¬ண்கள் நெற்றியில் திலகமிடும் வழக்கம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நிலவி வந்திருக்கிறது. சக்தியை வழிபடும் சாக்தப் பிரிவினர் சிவந்த குங்குமத் திலகத்தாலும், வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்கள் U வடிவில் அமைந்த நாமம் எனப்படும் வெள்ளை நிறப் பொட்டாலும், சூரியனை உயர் தெய்வமாக வழிபடும் சௌர மதப்பிரிவினர் செஞ்சந்தனத்தாலான பொட்டாலும் தம்மை அடையாளப்படுத்தினர்.

இந்து சமய ரீதியாக பொட்டணிதல் என்பது ¬ண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான மரபாகும். பொட்டிடுவதற்குப் புருவமத்தி தெரிவு செய்யப்பட்டமைக்குச் சில காரணங்கள் கூறப்படுகின்றன. தியானம் செய்யும் போது பார்வையும் மனமும் புருவ மத்தியில் குவிந்து ஒடுங்குகிறது. அவ்வாறு ஒடுங்கும் போது அந்த இடத்தில் ஒருவித அழுத்தம் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், புறத்தில் இருந்து வரும் சக்திகளின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்காகவும் புருவ மத்தியில் பொட்டணிவதாகக் கூறப்படுகிறது.

உடலில் ஏழு சக்கரங்கள் சக்தி நிலைகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. பிறர் காணும் வகையில் வெளியில் தெரியும்படியாக அமைந்திருப்பது புருவ மத்தியில் அமைந்துள்ள ¬றாவது சக்கரம் மட்டுமே. இந்த சக்கரம் மூளை, நரம்புமண்டலம், காதுகள், நாசி, இடது கண் ¬கியவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும், புத்திக் கூர்மை, மனம், புத்தி, ¬ன்மசக்தி ¬கியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த புருவ மத்தியைப் பாதுகாப்பதும், அதன் சக்தியை அதிகரிக்கச் செய்வதும் முக்கியமானதாக எண்ணப்பட்டதால் அந்த இடத்தில் பொட்டு வைக்கும் மரபு ¬ரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெண்கள் பொட்டணிவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது பெண்களைத் தீய எண்ணத்துடன் பார்ப்பவரது பார்வையை அது தூய்மைப்படுத்துகிறது. ஒருவர் ஒரு பெண்ணின் கண்களை வேறுபட்ட எண்ணத்துடன் பார்க்கும் போது பொட்டு அவரது கவனத்தைத் திசை மாற்றுவதுடன், அது சிவனது மூன்றாவது கண்ணை நினைவூட்டுவதால் அவரது தீய எண்ணங்கள் மறைய உதவுவதாகவும் கூறப்படுகிறது.

ஞானக் கண்ணை அடையாளப்படுத்தும் பொட்டு அதை அணிபவருக்கு நல்லதிஷ்டத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

இந்து சமயம் பொட்டணிதல் பற்றி இவ்வாறு பல விதமான கருத்துக்களைக் கூறிய போதும் தமிழரைப் பொறுத்தவரையில் ¬ரம்பகாலத்தில் அழகுக்காகவே பெண்கள் திலகமிட்டதாக சங்க இலக்கியமான கலித்தொகையில் உள்ள சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரமும் அழகுக்காகப் பொட்டிடுதல் பற்றிக் குறிப்பிடுகிறது. நெற்றியில் பொட்டிடுதல் என்பது எப்போது பெண்களின் மங்கலச் சின்னமாகக் கருதப்பட ¬ரம்பித்தது என்பதும் தமிழ்ப் பண்பாட்டின் அம்சமாக அது எப்போது மாறியது என்பதும் தனியாக ¬ராயப்பட வேண்டிய விஷயங்களாகும். பண்டைக்கால ¬ரிய சமுகத்தில் திருமணத்தின் போது மணமகன் தனது இரத்தத்தை திருமணம் முடித்ததன் அடையாளமாக மணமகளின் நெற்றியில் பொட்டாக வைத்தது பற்றிச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கம் பின்னர் மணமகள் திருமணத்தின் போது சிவப்பு நிறத்தில் பொட்டணியும் முறைக்கு வித்திட்டிருக்கலாம்.

தமிழர் வாழ்வுடன் பல நிறங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அவற்றுள் சிவப்பு வெள்ளை நிறங்கள் முக்கியமானவை. சமூகவியல் ரீதியாக இந் நிறங்களுக்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. தமிழருக்குரிய சூடு, குளிர் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் இவ்விளக்கங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறம் குளிர்மையையும், சிவப்பு நிறம் சூட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இவ்வியல்புகளை வெளிப்படுத்தும் வகையிலேயே திருமணத்தின் போது ¬ண்களதும் பெண்களதும் ¬டைகள் தெரிவு செய்யப்படுகின்றன. ¬ண் குளிர்மையான இயல்பு உள்ளவனாகக் கருதப்படுவதால் வெள்ளை நிற ¬டை அணிகிறான், சந்தணத் திலகமிடுகிறான். பெண் சூடுள்ளவளாக எண்ணப்படுவதால் சிவப்பு நிறச் சேலையணிந்து சிவப்பு நிறத்தில் பொட்டிடுகிறாள். சிவப்பு நிறம் சூட்டை மட்டுமல்ல, குருதியின் நிறம் என்பதால் வளத்தையும் குறிக்கும். வளம் என்னும் போது அது சந்ததி விருத்தியைக் குறிக்கும். சந்ததியை உடல் ரிதியாக விருத்தி செய்யும் வளம் பெண்ணிடம் இருப்பதாலும், அது சூடான இயல்புள்ளது என்று கருதப்படும் காமத்துடன் தொடர்புள்ளதாலும் அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிவப்பு நிற ¬டையை அவள் திருமணத்தின் போது அணிகிறாள். அத்துடன் அன்றே அவள் முதன்முதல் சிவப்பு நிறத்தில் பொட்டணிகிறாள். திருமணத்தின் பின் சந்ததியை விருத்தி செய்யும் நிலைக்கு அவள் தயாராகிவிட்டாள் என்பதை அவளது சிவப்பு நிற திருமண சேலையும் பொட்டும் குறிப்பாகக் காட்டி நிற்கின்றன.

தமிழ் பெண்ணின் வளம் கற்பு நெறியுடனும் தொடர்பு பட்டிருக்கிறது அதனாலேயே கணவன் மரணணமடைய நேரிட்டால் அவள் தனது சிவப்பு நிறப் பொட்டை நீக்கித் தனது வளமின்மையைப் பிரதிபலிக்கிறாள். அதே போல அதன் பின் அவள் வெள்ளை நிறச் சேலையணிந்து குளிர்மையடைந்துவிட்ட நிலையைக் காட்டுகிறாள். எத்தனையோ நிறங்கள் இருக்க பொட்டுக்கு குருதி நிறமான சிவப்பு நிறம் தெரிவு செய்யப்பட்டமைக்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும்.

1930 களில் தமிழ் நாட்டிலிருந்து சஞ்சிகைகள் யாழ்ப்பாணத்திற்கு வர ¬ரம்பித்த பின்னர் இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்கள் பொட்டிடும் வழக்கத்தைப் பரந்த அளவில் ¬ரம்பித்திருக்கலாம். ¬யினும் காலப் போக்கில் இலங்கை அரசியலில் தமிழரைப் பாதிக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய பின்னர் பொட்டிடுதல் என்பது தமிழ் இனத்தைக் குறிப்பிடும் ஒரு குறியீடாக மாறியது. இதன் காரணமாகவே தமிழருக்கு எதிரான போக்கு கூர்மையடைந்த காலத்தில் கொழும்பில் வாழும் பெண்கள் தமது அடையாளத்தை மறைப்பதற்காக பொது இடங்களில் பொட்டிட்டுச் செல்வதைத் தவிர்த்தனர்.

வெளிநாட்டில் வாழ வந்த தமிழ் அல்லது இந்துப் பெண்கள், ஏன் பொட்டு அணிகிறீர்கள்? இதற்கு உங்கள் சமயத்தில் அல்லது பண்பாட்டில் ஏதும் முக்கியத்துவம் உள்ளதா? இது சாதியைக் குறிக்கும் அடையாளமா? என்று பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே பொட்டிடுதல் பற்றி அறிய விரும்புபவர்களுக்குச் சரியான விளக்கத்தை கொடுப்பதற்காக நாம் இதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளது. நான் சுவீடனில் வாழ்ந்த காலத்தில் இந்தக் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தது. ஒரு தடவை புகை வண்டியில் பிரயாணம் செய்த போது ஒருவர் எனது பொட்டைப் பார்த்து விட்டு விளக்கம் கேட்டார். திருமணமான பெண்களுக்கு இது ஒரு அடையாளமாக விளங்குவதாக நான் கூறியதும் அவர் உடனே கேட்டார் traffic light இல் உள்ள red light போல எதிரே வருபவரை இவள் திருமணமான பெண் தூரத்தில் நில் என்று எச்சரிக்கின்றதா இந்தச் சிவப்புப் பொட்டு? என்று. அது ஓரு வகையில் நல்ல விளக்கமாகவே எனக்குப் பட்டது.

இன்று அழகுக்காக பொட்டணியும் வழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் அதன் வடிவம் மட்டுமல்ல அளவும் மாறிவிட்டது. வட்டப் பொட்டு என்ற நிலை போய் சதுரம், மெல்லிய கோடு, நீள்வட்டம் (oval shape) நீர்த்துளி, சதுரம் போன்ற வடிவங்களிலும், பாம்பு, மயில், கிளி, ஏன் யானை வடிவத்தில் கூட பொட்டணியும் நாகரிகம் பரவியுள்ளது. இந்துக்கள் மட்டுமல்ல மற்றையோரும் விரும்பி அணியும் வகையில் நெற்றியிலும் உடலின் வேறு பல பாகங்களிலும் அணியும் விதமாக பல்வேறு வகைப் பொட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. பாடகியான Madonna ¬ரம்பித்து வைக்க 'No Doubt' என்ற பொப் குழுவின் தலைமைப் பாடகியான Gwen Stefani தனது அடையாளமாகவே (trademark) பொட்டை ஏற்றுள்ளார்.

பொட்டு ¬ரம்பத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பெண்களால் மட்டும் அணியப்பட்டது. இதனால் இந்நாடுகளுக்குச் செல்லாத பிறநாட்டவர் இது பற்றிச் சிறிதே அறிந்திருந்தனர். ¬னால் இந்திய இலங்கைப் பெண்கள் புலம் பெயர்ந்து வாழ ¬ரம்பித்ததிலிருந்து பொட்டு பல நாட்டவர் இனத்தவர் அறியும் ஒன்றாகி விட்டது. பெண்களின் ¬டை மாறிய போதும் பொட்டுக்களின் வர்ணங்களும் வடிவங்களும் மாறிய போதும் பொட்டணிதல் என்பது பெருமளவில் மாறவில்லை. பிறநாடுகளில் பிறந்து வளர்ந்த இளம் இந்திய இலங்கைப் பெண்கள் தமது பண்பாட்டின் பல விஷயங்களை கைவிட்டுவிட்ட போதும் விசேட தினங்களில் நவீன வடிவங்களில் வந்துள்ள பொட்டை அணிவதை விடவில்லை. ¬யினும் பொட்டு வைத்தலுடன் இணைந்துள்ள பல விளக்கங்கள், காரணங்கள் என்பன முற்றாக மறக்கப்பட்டு வெறும் அழகுக்காகவும் அடையாளத்துக்காகவுமே பொட்டு இன்று அணியப்படுகிறது.

அமெரிக்காவில் பல வருடங்களின் முன்னர் பொட்டு வைப்பவர்களுக்கு எதிரான இனவெறி இயக்கம் ஒன்று தோன்றியதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். Dot buster என்ற இந்த இயக்கம் பொட்டு வைத்தவர்களைத் தாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது. இந்தியர் அதிகமாக வாழ்ந்த மாநிலங்களில் தோன்றிய இந்த இயக்கம் பின் முக்கிய அமெரிக்க நகரங்களுக்குப் பரவியது. இது பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட போதும் அதனுடன் இணைந்த இனவெறியைப் பலர் மறந்து விடவில்லை. சில வருடங்களின் பின் இந்த எண்ணத்தை மாற்றும் நோக்கத்துடன் ஒரு 35 நிமிட வீடியோப் படம் எடுக்கப்பட்டது. அதன் தலைப்பு Just a Little Red Dot. இது ஒருவித தகவல் நாடக அதாவது Docudrama அமைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதே. இப்படத்தை உருவாக்கிய மித்ரா சென் என்ற இந்திய பெண் கனடாவில் உள்ள Toranto மாநிலத்தில் உள்ள Scarborough என்ற இடத்தில் உள்ள Tom' O'Shanter Junior என்ற அரச பாடசாலையில் ¬சிரியையாக இருந்தார். தனது வகுப்பறையில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படத்தை உருவாக்கினார். 1994 ம் ¬ண்டு மே மாதம் 20ம் தேதி இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த பார்வதி என்ற மாணவி அந்தப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்திருந்தாள். அவள் பொட்டு அணிந்திருந்த காரணத்தால் மற்றைய மாணவரால் ஏளனஞ் செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டாள். பின்னர் ¬சிரியையின் பிறந்ததினம் வந்த போது ஒவ்வொரு மாணவரும் அவருக்கு பரிசளித்தனர். அப்போது பார்வதி ஒரு packet பொட்டுகளை ¬சிரியையான மித்ராவுக்குப் பரிசளித்தாள். அவர் உடனே அவற்றில் ஒன்றை தனது நெற்றியில் அணிந்து கொண்டு அதன் பண்பாட்டு முக்கியத்துவம் பற்றி மாணவருக்கு விளக்கிக் கூறினார். அது அவர்களை அழகுபடுத்தும் என்பதைக் கேட்டவுடன் வகுப்பில் உள்ள மாணவிகள் ¬சிரியையிடம் பொட்டுக்களை வாங்கித் தமது நெற்றியில் அணிந்து கொண்டு விளையாட்டு மைதானத்துக்கு விளையாடச் சென்றனர்.

அங்கே அவர்களது ¬ர்வம் விரைவில் நசுக்கப்பட்டது. அவர்களது சகபாடிகள் அவற்றை Paki-dots உட்பட பல பெயர்களால் கேலி செய்தனர். அவர்களது மூர்க்கத்தனமான இனவெறியால் பாதிக்கப்பட்ட அவர்கள் வெட்கமடைந்தனர், அதிர்ச்சியுற்றனர், குழப்பமுற்றனர். இனவெறி என்றால் என்னவென்றறியாத அந்த 9, 10 வயதுப் பிள்ளைகள் உடனே தமது பொட்டுக்களை மனவருத்தத்துடன் அகற்றினர். ¬சிரியை அவர்களை இது பற்றி உரையாடும் படி கூறினார். «ô§À¡Ð அறிவுள்ள மாணவர்கள் சிலர், வேறுபட்ட தோற்றம், பண்பாடுகள் ¬கியவற்றை மதித்தல், சகிப்புத்தன்மை ¬கியன பற்றித் தமது பாடசாலைச் சகபாடிகளுக்கு, அறிவூட்டுதலின் அவசியம் பற்றிக் கூறினர். அந்த மாணவர்கள் பொட்டை cool-dots என அழைத்துத் தமது சகபாடிகளிடையே பிரபலியப்படுத்துவதில் வெற்றி கண்டனர். அப் பாடசாலையைச் சேர்ந்த ஏனைய ¬சிரியைகளும் பொட்டை அணிந்து அவர்களது ¬தரவைக் கொடுத்தனர். கேலி செய்தவர்கள் பொட்டு தமது பாடசாலையில் பெற்ற பிரபலியத்தைக் கண்ணுற்று தோல்வியை ஏற்று விலகினர்.

ஏற்கெனவே படத் தயாரிப்பில் அனுபவமுள்ள ¬சிரியையான மித்ரா சென் இந்த பொட்டு சம்பவம் ஒரு அறிவுட்டும் படத்திற்கு நல்ல வளமுள்ள அடிப்படை என்பதை உணர்ந்தார். எனவே இரண்டு வருட ஊதியமற்ற லீவை எடுத்துக் கொண்டு படத் தயாரிப்பில் இறங்கினார். இதற்காக அவர் பன்னிரண்டுக்கு மேற்பட்ட நாடுகளையும், இனங்களையும் சேர்ந்த 80 பிள்ளைகளைத் தெரிவு செய்து அவர்களை நடிகர்களாக்கினார். 1996ம் ¬ண்டு ஜூன் 25ம் தேதி அந்தப் படம் Ontario Science Centreல் திரையிடப்பட்ட போது அந்தப் படம் தெரிவித்த உள்ளார்ந்த செய்திக்காக மட்டுமல்ல சிறந்த பாத்திரப்படைப்பு, அதில் பயன்படுத்தப்பட்ட graphics, மிக அழகான இசை ¬கியவற்றிற்காக அப்படத்தின் இயக்குனரும் நடிகர்களும் பெரும் பாராட்டுதலைப் பெற்றனர். மனித உரிமைகள் நிர்வாக இயக்குனரான Dr Karen Mock என்பவர் இந்த சக்தி வாய்ந்த திரைப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் எமது பல்லின சமூகத்திற்கு மிக அவசியமான ஒருவரை ஒருவர் மதித்தல், சாதகமான செயற்பாடு ¬கியவற்றை ஊக்குவிக்கிறது என்று பாராட்டினார். அத் திரைப்படம் பல உயர் விருதுகளைப் பெற்றதுடன் பல அரச உயரதிகாரிகளின் பாராட்டுதல்களையும் பெற்றது.

1996 கோடை காலத்தில் Little Red Dot Club ஒன்று பிள்ளைகளின் முயற்சியால் உருவாகியது. அதன் இணை தலைவரான 13 வயது Mandy Pipher கூறியதாவது பகிர்தல், மற்றைய பண்பாடுகளை விளங்கி ஏற்றல் ¬கியவற்றை எமது சந்ததியினரை உணரச் செய்வதே இந்த கிளப்பின் நோக்கம். இவ்வாறு உணர்வதன் மூலம் நாம் வளர்ந்ததன் பின்னர் எந்த நாட்டிலிருந்து வந்தவராயினும் சரி எந்தவிதமான தோற்றம் கொண்டவராயினும் சரி அவர்களுடன் எவ்வித பிரச்சினைகளுமின்றி ஒத்து இயங்க முடியும். ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட இந்த club Toronto நகரத்தில் உள்ள பல்வேறு ¬ரம்ப பாடசாலைகளில் இது பற்றி 120க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. தமது நிகழ்ச்சிகள் சிறுவர்களில் ஏற்படுத்தும் சாதகமான பாதிப்பையிட்டு மகிழ்ச்சியடையும் Mandy நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்கள் தன்னிடம் வந்து பொட்டுக்களை கேட்பதாகக் கூறுகிறார். இந்த clubஐ நடத்துவதன் மூலம் அதன் அங்கத்தவர்கள் திட்டமிடல், பொது மேடைகளில் பேசுதல் அதற்கான பேச்சைத் தயாரித்தல், மானியத்துக்கு விண்ணப்பித்தல், வரவுசெலவு பட்டியலைத் தயாரித்தல் என பல்வேறு பயிற்சிகளையும் பெற்றனர். இந்த clubக்கு 1996ல் Trillium Foundation னில் இருந்து 10,000 டொலர்ஸ் மானியம் கிடைத்தது. கனடாவில் உள்ள இனவெறி எதிர்ப்பு நிறுவனங்களில் இது முக்கியமானதாக இயங்கி வந்தது.

நன்றி/பாஸ்கரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#50
Quote:திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது
.

எங்கடையாட்கள் என்னடா எண்டா இரண்டையுமே பெம்பிளைக் குடுத்திட்டு ஹாயாப் போகிறாங்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
Vaanampaadi Wrote:[quote=adithadi]தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள்? யாராவது விளக்க முடியும்மா?

பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.

அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது.

தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று. (அது போல் திருமணம் ஆகாதவர்கள் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.)

அம்புலிமாமா கோகுலம் வாசிச்சதன் விளைவுகள் இவை...அப்படியா..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
kuruvikal Wrote:
Vaanampaadi Wrote:[quote=adithadi]தமிழ் பெண்கள் ஏன் பொட்டு அணிகிறார்கள்? யாராவது விளக்க முடியும்மா?

பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன்.........................

அம்புலிமாமா கோகுலம் வாசிச்சதன் விளைவுகள் இவை...அப்படியா..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>அது இங்கிருந்து வந்திருக்கிறது குருவிகள்.</b>
http://iniyaislam.blogspot.com/2005/09/blo...og-post_14.html

பொட்டு வைத்தல்!

<b>பிறமதத்தின் கலாச்சாரம்</b>
<img src='http://i5.photobucket.com/albums/y199/sardhar/pottu.gif' border='0' alt='user posted image'>

Quote:பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.

அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது. உண்மையில் இதுதான் உண்மையான தமிழனின் பழக்கமாகும்.

மேலும் இது வரதட்சணையை ஊக்குவிக்கக் கூடிய செயலாகும். ஆண்களில் இதுபோன்ற கையாளாகாத, தன்னம்பிக்கையிழந்த இளைஞர்களையும் பெற்றோர்களையும் உருவாக்கக் கூடியதாகும். இச்செயலால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கேடுகளை தன்மானமுள்ள எந்த இளைஞனாலும் ஏன் எந்த மனிதனாலும் அங்கீகரிக்க முடியாது.

வரதட்சணையை பற்றி இஸ்லாம் பெண்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தெளிவான பாதையை வகுத்துள்ளது.

அல்லாஹ் தன் திருமறையில் நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் தொகையை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள் என்று கூறுகின்றான். (அல்குர்ஆன் : 4:4)

2) தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று. (அது போல் திருமணம் ஆகாதவர்கள் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.)

ஆனால் இஸ்லாம் திருகுர்ஆனில் 24:30.(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

24:31.இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக் அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

என்று இருவருக்கும் சேர்த்து பொதுவாக கட்டளையிடுகின்றது.

உங்களின் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையை கட்டுப்படுத்தும் கற்பைக் காக்கும் யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும் அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். என்று எமது இறைதூதரான முஹமது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம் : புகாரி

இந்த மனக்கட்டுப்பாடு முஸ்லிமான ஆண் பெண் எல்லோருக்கும் பொதுவான கட்டுப்பாடாகும். இதற்கெல்லாம் மேலாக இஸ்லாம் எந்த ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் எந்த ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் பின்பற்றி வாழவேண்டும் என்று கூறவேயில்லை. தனக்கென்று ஒரு கலாச்சாரம் தனக்கென்று ஒரு பண்பாட்டை உருவாக்கி வைத்து அதனடிப்படையில் முஸ்லிம்கள் வாழவேண்டும் என்று வழியுறுத்துகின்றது. அவர்கள்தான் உண்மையான முஸ்லிம்கள் என்று இஸ்லாம் சான்றும் கூறுகின்றது. அப்படி பின்பற்றி நடக்காதவர்களை முஸ்லிம்கள் இல்லையென்று எச்சரிக்கையும் செய்கின்றது.

நபி (ஸல்)அவர்கள் "யார் பிற சமூகத்தை பின்பற்றுகின்றார்களோ அவர்கள் என்னை சார்ந்தவர்கள் இல்லை" என கூறினார்கள்.

இஸ்லாத்தில் மனித வாழ்க்கைக்கு அவசியமான தேவையான சட்டங்கள் இல்லையென்றால் பிற மதத்துடைய சட்டங்கள் தேவைப்படும். ஆனால் மனித சமுதாயத்திற்கு தேவையான முழுமையான சட்டங்கள் பூரணமாக இறைதூதரின் மேற்பார்வையிலேயே லட்சக்கணக்கான தோழர்களுக்கு மத்தியில் அரஃபா மைதானத்தில் நான் கொண்டு வந்த இறைச் செய்தியை முழுமையாக பூர்த்தியாக்கிவிட்டேனா என்று கேட்டு, அந்த தோழர்கள் ஆம் என்று செல்ல அல்லாஹ்வே நீ சாட்சி, அல்லாஹ்வே நீ சாட்சி, அல்லாஹ்வே நீ சாட்சியென சாட்சி கூறி சரித்திரமாக்கப் பட்டவையாகும். இதை அல்லாஹ்வும் அங்கீகரித்த வரலாறு உலக வரலாற்றிலேயே இஸ்லாத்திற்கு மட்டுமே உள்ள தனி சிறப்புகளில் ஒரு அங்கமாகும்.

இதை அல்லாஹ் இவ்வாறு அங்கீகரிக்கின்றான்.

5:3 இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;

ஆக, எல்லாம் பூர்த்தியாக்கப்பட்ட மார்க்கத்தில் வேறு மதத்தின் கொள்கைகளை ஏற்று நடப்பது பவமட்டுமல்ல, இஸ்லாத்திலிருந்து தூரமாக்கக் கூடிய பாரதூரமான செயலாகும். (அல்லாஹ் காப்பாற்றுவானாக.)

அதுபோலவே இந்துவை ஒரு முஸ்லிம் பெண் திருமணம் செய்து கொள்வதும் வாழ்க்கையில் ஒருபோதும் ஒத்துவராத காரியமாகும் ஏனென்றால் இரண்டும் மதமும் இரு துருவங்களாகும். இரண்டும் இரண்டு தன்டவாளங்களைப் போன்றதாகும். அது என்றுமே ஒன்று சேராதது. காரணம் இஸ்லாம் மதம் உயிர் உள்ளவரை ஒரே இறைவனை வணங்கவேண்டும் என ஓரிறை கொள்கையை போதிக்கக் கூடியது ஆனால் இந்து மதம் அப்படியல்ல.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது ஏட்டளவில் மட்டும்தான். தெருவுக்கொரு தெய்வம் என்பது மாறி வீட்டுக்கொரு தெய்வமாகி விட்ட நிலையில் புதிய தம்பதிகளான இவர்கள் ஏதாவது ஒரு மதத்தை தேர்ந்து எடுக்க வேண்டிய நிலைக்கு நிர்பந்தமாக தள்ளப்படுகின்றனர். இல்லையென்றால் குழந்தைகளின் எதிர் காலம் பாதிக்கப்படும். அந்த குழந்தையை எந்த மதத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும், பள்ளிக்கூடத்தில் சேர்க்கவேண்டும் போன்ற சட்டப் பிரச்சனைகளையும் சிந்திக்க வேண்டியுள்ளன. மோகம் முப்பது நாட்கள் ஆசை அறுபது நாட்கள் என்பார்கள் ஆக தொன்நூறு நாட்கள் முடிந்த பிறகு சிந்திக்க வேண்டியதை இஸ்லாம் முன் கூட்டியே சிந்திக்க தூண்டுகின்றது.

- ஸாலிஹ் குலசை

இன்னுமொரு இணைப்பு:
http://womankind.yarl.net/archives/2004/06/10/182
Reply
#53
பயனுள்ள தகவைகள், நன்றி வானம்பாடி,.........................................
.

.
Reply
#54
தூயவன் Wrote:
kuruvikal Wrote:இங்கு களத்தில் எத்தினை விதமாக இந்து மதந்தைப் பழித்தார்கள்..அப்போ எங்கோ போனது இந்த மதிப்பளிப்பு..??! உண்மையில் இது இரட்டை வேடத்தனமாகவே தெரிகிறது..! களத்தில் ஒரு நியாயம்..வெளிக்கு ஒரு நியாயமாக..!

கிறீஸ்மஸ் கொண்டாடுவது இன்ன மதந்தவர் என்றதிலும் அது எல்லோராலும் கொண்டாடப்படுவது என்பதே நாங்கள் தரிசித்தது..! நாங்களும் கரோல் கீதம் இசைத்து நத்தார் தாத்தா வேடம் போட்டு ஊர் சுற்றியதும் உண்டு..! சேர்ச் போனதும் உண்டு...கிரமமாக..!

அதுவும் மேற்கைப் பொறுத்தவரை அவர்கள் மதத்திற்கு என்றில்லாமல் இனத்துவ அடையாளங்களுக்கு முக்கியம் கொடுக்கின்றனர்..! அந்த முத்திரையைப் பார்க்கின்ற போது பொட்டு வைத்த ஒரு குடும்பத்துடன் வெள்ளையர்கள் கலந்திருப்பது போல இருக்கிறது..! உண்மை... மேற்கில் குறிப்பாக ஆசியர்கள் வெள்ளைகளோடு நெருங்கிப் பழகுவது குறைவு.. கறுப்புகள் பழகுவதைக் காட்டிலும் இவர்கள் குறைவு..! இப்படியான தனிமைப்படுத்தல்களே..பேர்மிங்காம்...பிரட்பேட் பகுதிகளில் கலவரங்கள் தோன்றக் காரணம்...! இவற்றை மையமாக வைத்து ஒற்றுமையை நட்புறவை சகோதரத்துவத்தை வலியுறுத்த அந்த தபால்தலையை றோயல் மெயில் வெளியிட்டிருக்கும்...உண்மையில் அது சிறந்ததே..!

மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதிலும் மனிதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே முதன்மைத் தேவை...! அப்போதுதான் ஒற்றுமை சகோதரத்துவம் வளரும்...! அமைதி தோன்றும்..புரிந்துணர்வு பெருகும்..! மதம் மதம் என்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதால் எந்த நன்மையும் இல்லை..மத அடையாளங்களால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன...??! எதுவுமே இல்லை...! வெறும் இனத்துவ அடையாளத்துக்காக மதத்தை காக்கிறார்கள்..மனிதம் தொலைய.. அது அவசியம் தானா...! மேற்கில் (சில நாடுகளைத் தவிர) இளைய தலைமுறையிடம் மத வெறித்தன்மை வெகுவாக குறைந்துவிட்டது..! இந்தியா இலங்கை மற்றும் முஸ்லீம் நாடுகளில் உள்ளது போன்ற மத வெறி இல்லை...அவர்களிடம்..! எனவே அவர்கள் இம்முத்திரையை மதவாதக் கண்ணோட்டத்தில் ................. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

மற்றவன் பழிக்கும்போது பதில் கூறாவிட்டால், பிறகு வேறு யாரும் பழிக்கும்போது பொத்திக் கொண்டிரு என்பது எவ்வகை நியாயம். அது இரட்டைவேடத் தன்மையல்ல. சிவன் கோவிலுக்கு போன கையோடு சேச்சுக்கு போய் முழந்தாளிடுவது தான் இரட்டை வேடத்தனம்.

<b>கிறிஸ்மஸ் நேரம் நீங்கள் என்ன வேடம் போட்டீர்களோ, அது உங்கள் தப்பு. அதுக்காக நாம் எல்லாம் அதற்கு குடை பிடிக்கவேண்டிய தேவை இல்லை.</b>

மதவாதம் இல்லை என்று சொல்லிக் கொண்டு தங்களின் மதம் மாறுபவர்களுக்கு காசை அள்ளிக் கொட்டிக் கொடுப்பது எவ்வகை. அதிலும் ஒரு காலத்தில் இந்து ஆலயங்களை தரைமட்டமாக்கி அழித்து அதன் மேல் சேச் கட்டியது எல்லாம் என்ன வென்று சொல்வது.

நாங்கள் சேர்ச் போன போதும் கிறிஸ்மஸ் கொண்டாடிய போதும் கிறிஸ்தவனாக அல்லது கிறிஸ்தவளாக மாறவில்லை...அல்லது கொண்டாடக் கூடாது என்று எவரும் தடுக்கவும் இல்லை...! அதையே சுட்டிக்காட்டினோம்...! ஒரு பண்டிகையை கொண்டாடுவது தனிமனித சுதந்திரம்..! அதை பொட்டு வைச்சும் வேட்டி கட்டியும் கொண்டாடலாம்...அதில் தவறில்லை...காரணம்.. மனிதர்கள் ஓய்வெடுத்து ஒன்று கூடி தங்கள் தங்கள் உறவுகளோடு கலந்துறவாடி மகிழ்ந்திருக்கவும் சில நல்ல சிந்தனைகளை பகிர்ந்து உள்வாங்கவுமே...பண்டிகள் கொண்டாப்பட்டுகின்றன..! ஒரு கெற்றுகெதர் என்று கருதலாம்..!

பண்டிகைகள் இன்ன மதத்திற்கு என்று ஒதுக்குவதும் கொண்டாட மறுப்பதும்...அதற்குள் இல்லாத காரணங்களைச் செருகுவதுமே கண்டிக்கப்படனும்..!அதுவே மனிதர்களுக்குள் வேற்றுமையை பிரச்சனைகளை மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது..!

மதத்துக்காக கொண்டாடி இருந்தால் நிச்சயம் சேர்ச் போனதுக்கும் கிறிஸ்மஸ் கொண்டாடியதற்கும் வருந்தி இருப்போம்..! ஆனால் அங்கு மத வலியுறுத்தலுக்கு மேல் மனிதம் இருந்தது..! யாருக்கும் கூடிக்களிக்க வழியிருந்தது..! போர்காலத்தில் வெரித்தாச் வானொலி செய்த கடமையை எவரும் மறக்க முடியாது..! அது கிறிஸ்தவத்தை பரப்பினும்..கட்டாயப்படுத்தவில்லை..அதேவேளை மனிதத்தையும் பார்க்கிறது மத வேற்றுமைகளுக்கு அப்பால்..! இவன் இந்து முஸ்லீம் கிறீஸ்தவன் பெளத்தன் என்று பார்த்தா பழகுகின்றோம் இல்லையே...! எனவே... இதுவும் சாதி போல..அவசியமில்லாமல் மனிதர்களை அடையாளமிட்டு பிரச்சனைகளைத் தூண்டப் பயன்படுத்தப்படுகிறது..! அதுவே வேதனைக்குரிய விடயம்..! இதை உணர்த்தும் நோக்கமாக றோயல் மெயில் அந்த முத்திரையை வெளியிட்டு இருக்கலாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
நன்றி அஜீவன் அண்ணா.. வாசித்த உடனேயே புரிஞ்சிட்டு... ஏதோ எழுத்துக்கு எழுதப்பட்ட கட்டுரை என்று...அவ்வளவு மட்டமா எழுதி இருக்கு...!

சிவபெருமானையும் உமாதேவியாரையும்...அவைச்சு இன்னும் எத்தனை கதைகள் உருவாகப் போகுதோ..??! பிறகு அதையே மூடநம்பிக்கை என்று காட்டி தங்களை சீர்திருத்தவாதிகளாக காட்ட உதவும் எல்லா...! இதுதான் வலைப்பூக்களில் இப்போ அதிகம் நடக்கிறது..! காலத்துக்கு ஏற்ற ஆதாரபூர்வ ஆய்வுகள் தாங்கி வரும் ஆக்கங்கள் மிகக் குறைவு..! இப்படியான கற்பனைக் கட்டுரைகளை ஏன் ஆதாரங்களாகக் காட்டுகின்றனரோ தெரியவில்லை..! இதைக்காட்டி றோயல் மெயிலிடம் பொட்டுக்கு அடிபட்டால்..தூக்கி பொலீஸ் உள்ள வைச்சிடும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
[quote=kuruvikal]நன்றி அஜீவன் அண்ணா.. வாசித்த உடனேயே புரிஞ்சிட்டு... ஏதோ எழுத்துக்கு எழுதப்பட்ட கட்டுரை என்று...அவ்வளவு மட்டமா எழுதி இருக்கு...!

சிவபெருமானையும் உமாதேவியாரையும்...அவைச்சு இன்னும் எத்தனை கதைகள் உருவாகப் போகுதோ..??! பிறகு அதையே மூடநம்பிக்கை என்று காட்டி தங்களை சீர்திருத்தவாதிகளாக காட்ட உதவும் எல்லா...! இதுதான் வலைப்பூக்களில் இப்போ அதிகம் நடக்கிறது..! காலத்துக்கு ஏற்ற ஆதாரபூர்வ ஆய்வுகள் தாங்கி வரும் ஆக்கங்கள் மிகக் குறைவு..! இப்படியான கற்பனைக் கட்டுரைகளை ஏன் ஆதாரங்களாகக் காட்டுகின்றனரோ தெரியவில்லை..!

இதைக்காட்டி றோயல் மெயிலிடம்
<b>பொட்டுக்கு அடிபட்டால்..தூக்கி பொலீஸ் உள்ள வைச்சிடும்..</b>!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#57
MUGATHTHAR Wrote:
Quote:திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது

எங்கடையாட்கள் என்னடா எண்டா இரண்டையுமே பெம்பிளைக் குடுத்திட்டு ஹாயாப் போகிறாங்கள்

ஏன் பெண்களுக்கு மெட்டியும் போடுவது...அறியவில்லையோ கட்டுரையாளர்...! ஆண்களுக்கு மிஞ்சி...காதில கடுக்கன்..! கடுக்கன்..ஒளிவீசும் கற்கள் பதித்தாக இருக்கும்... பெண்கள் இலகுவாக அடையாளம் காண..திருமணமான ஆணை...! என்று சொல்லக் கேள்வி..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
இங்கே பலர் என்னிடம் கேள்விக்கணைகள் தொடுத்திருப்பதால் எல்லோருக்கும் பதிலளிக்கின்றேன்
<b>
குருவி:</b>
மதங்களைக்கடந்து மனிதம் பேணப்படவேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாறுபட்ட கருத்தும் கிடையாது. மனிதத்திற்கு அடிப்படையான தனமனித சுதந்திரமும் காக்கப்பட வேண்டுமென்பதே எனது அடிப்படை வாதம். றோயல் மெயிலுக்கு நீண்ட கால பாரம்பரியம் இருக்கலாம். அதற்காக அதன் தலைமைப் பொறுப்பிலிருப்போரெல்லாம் அதன் கௌரவத்தைப் பேணுபவர்களாகத்தான் இருப்பார்கள் என்று வாதிட முடியாது. பொதுவாக எல்லாச் சமயங்களும் அடிப்படையில் ஒரே விடயத்தைத்தான் போதிக்கின்றன. ஆனால் அச்சமயங்களை பரப்புவோரும் போதிப்போருமே தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு மற்றைய சமயத்தினரையும் வம்புக்கிழுக்கின்றார்கள். றோயல் மெயில் எல்லோரையும் அரவணைத்துச் செல்ல விரும்பியிருந்தால் ஒரு சிலுவை அணிந்த கிறிஸ்தவர் வேற்றுமதக் கடவுளை வணங்குவதுபோல் முத்திரை வெளியிட்டிருக்கலாமே?? அப்படிச் செய்திருந்தால் அது பாராட்டப்பட்டிருக்க வேண்டிய செயல். என்னை மற்றையோர் மதிக்கின்றார்கள் என்பதிலோ அல்லது நான் மற்றையோரையும் மதிக்கின்றேன் என்பதிலோ பெருந்தன்மை தெரிகின்றது. மற்றையோருக்கு போதனை செய்வதைவிட முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவதுதான் சிறப்பு.
களத்தில் இந்துமதம் விமர்சிக்கப்பட்டது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான் ஒரு வீட்டில் இரு சகோதர்கள் தமக்குள் அடிபட்டுக் கொள்வதற்கும் அதே இரு சகோதரர்களும் பக்கத்து வீட்டாருடன் சண்டையிடுவதற்கும் நிறைய வித்தியாசமுண்டு. தற்போதைய விடயம் ஊர் பார்க்க இடம்பெறும் தெருச்சண்டை. அதுவும் தன்பாட்டில் சும்மா இருப்போரை வம்புக்கிழுத்துள்ளார்கள். பாடசாலை நாட்களில் வெள்ளையுள்ளத்துடன் எத்தனையோ செய்கின்றோம. அதற்கு எந்தவித அர்த்தமும் கொள்ளாமல் ஆடிப்பாடி மகிழ்வதே எமது நோக்கமாகவும்pருந்தது. அதுபோல் மாற்றுசமய நிகழ்வுகள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்காமல் எம்மை மனமகிழ்வோடு பங்குபற்ற அனுமதித்த எமது பெற்றோர்கள் தான் சிறப்பானவர்கள். அந்தப் பெருந்தன்மை றோயல் மெயிலுக்கு ஏன் வரவில்லை.

<b>அடிதடி:</b>
பொதுவாகவே நான் கருத்தைக் கருத்தாலேயே எதிர் கொள்பவன். நீங்கள் தான் கருத்தை திசைதிருப்ப ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். பொட்டுப் பற்றி மற்றையோர் எழுதிய கருத்துக்களைப் படித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். எனவே தற்போது அது இந்துமத சின்னம்தான் என்று புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன். இனியும் உங்களுக்கு புரியவில்லையென்றால் ஒன்றுமே செய்யமுடியாது.

<b>மதுரன்:</b>
உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. சரி விடயத்திற்கு வருகின்றேன். இந்துமதம் என்பது தற்போது சைவம் வைணவம் போன்றவற்றை உள்ளடக்கியே குறிப்பிடப்படுகின்றன. இப்போது எவரும் எனதுமதம் சைவம் என்று குறிப்பிடுவதில்லை. இந்துமதமென்றே குறிப்பிடுகின்றார்கள். ஏன் தற்போதய தமிழ் இஸ்லாமிய கிறிஸ்தவ சகோதரர்களின் மூதாதையர் எந்த மதத்தை தழுவி இருந்தனர் என்று எண்ணுகின்றீர்கள்.

<b>அஜிவன்:</b>
நீங்கள் வினாவிற்கு விடையளிப்பதைவிட எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதிலேயே குறியாக உள்ளீர்கள். உங்கள் முதல் இணைப்பு அதனையே தெளிவாக்குகின்றது. ஒரு பச்சோந்தியின் சுயபுராணம்தான் அதில் இருக்கின்றது. பொலிஸார் பிடித்து உள்ளே போட்டுவிடுவார்கள் என்று புூச்சாண்டி காட்டுகின்றீர்கள். இது உங்களுக்கே கேவலமாக இல்லையா?? மிதிபடும் இனமாக நாம் வாழ்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி.
Reply
#59
Vasampu Wrote:இங்கே பலர் என்னிடம் கேள்விக்கணைகள் தொடுத்திருப்பதால் எல்லோருக்கும் பதிலளிக்கின்றேன்

மதுரன்:
உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. சுரி விடயத்திற்கு வருகின்றேன். இந்துமதம் என்பது தற்போது சைவம் வைணவம் போன்றவற்றையே உள்ளடக்கியே குறிப்பிடப்படுகின்றன. இப்போது எவரும் எனதுமதம் சைவம் என்று குறிப்பிடுவதில்லை. இந்துமதமென்றே குறிப்பிடுகின்றார்கள். ஏன் தற்போதய தமிழ் இஸ்லாமிய கிரிஸ்தவ சகோதரர்களின் மூதாதையர் எந்த மதத்தை தழுவி இருந்தனர் என்று எண்ணுகின்றீர்கள்.
வசம்பு உங்கள் பதிலுக்கு நன்றி.

நீங்கள் அளித்த பதிலில் இந்து மதத்தினை தவிர்ந்த ஏனைய சமயத்தவர்களின் பூர்வீகம் பற்றி வினாவியுள்ளீர்கள். ஆனால் நான் கேட்ட கேழ்வி வேறு. நான் கேட்ட கேள்வியை முடிந்தால் மீண்டும் ஒருமௌறை படித்து பாருங்கள். இதில் நான் எனதி வினாவினை இவ்வாறுதான் தொடுத்துள்ளேன். முடிந்தால் அதற்கு பதில் தாருங்கள். என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு ஒன்றில் மதம் தேவை இல்லை இல்லாது விடின் இயற்கை வளிபாடே சிறந்தது. நாம் உண்ணும் உணவே எம்மை வாழ வைக்கின்றது. அதனைத்தரும் சூரியன் தான் நமது சக்தி. அதனை வணக்கலாம். இயற்கை வளிபாடே சிறந்தது. என கருதுகின்றேன்.

நான் கேட்ட கேழ்வி:
தமிழர்களை இந்துக்கள் என்றோ இல்லை வேறு மதத்தவர் என்றோ அழைத்துக்கொள்வது சரியா?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#60
மதுரன்
எங்களுக்கப்பால் ஏதோ ஒரு சக்தி எம்மை வாழ வைக்கின்றது என்பதை ஒத்துக் கொண்டுள்ளீர்கள் அந்த அப்பாற்பட்ட சக்தியை ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு பெயர் கொண்டு வணங்குகின்றனர்.. நீங்கள் சொல்வதுபோல் சூரியனை வணங்குவதென்றால் சூரியனை புூமியை இயக்குவது யாரென்ற ஒரு கேள்வியும் வருகின்றதல்லவா. வெறும் உணவு உண்பதால் மட்டும் ஒருவர் உயிர் வாழ்ந்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரை மதமென்பது பெரும்பாலும் மனிதனை நல்வழிப்படுத்தவே பயன்படுகின்றது. நாம் ஏதாவது தவறு செய்தால் நாம் தண்டிக்கப்படுவோம் என்ற பயம் எமக்குள் இருக்கின்றது. இவற்றையெல்லாம் உதறிவிட்டு வாழத்தலைப்படுவோர் தான் எல்லாவற்றிற்கும் பயப்படாமல் அநியாயங்கள் அட்டூழியங்கள் செய்யத் தலைப்படுகின்றார்கள். நீங்கள் கேட்கலாம் சமயங்களைப் பின்பற்றுவோர் தவறு செய்யவில்லையா என்று? ஆம் அவர்களுள்ளும் தவறு செய்பவர்கள் உள்ளனர்.அவர்கள் அதற்குரிய தண்டனைகளை அனுபவிக்கின்றனர். சில தேவையில்லாத விடயங்களை விட்டுவிட்டு அடிப்படையில் மதங்கள் சொல்லும் சரியான முறையில் வாழவைதே சிறப்பானது.

ஆம் தமிழருக்கு மதம்சார்ந்த ஒரு அடையாளம் தேவைதான். ஆனால் அது எவ்விதத்திலும் மற்மறையோரை காயப்படுத்தாமலிருக்க வேண்டும்.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)