Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
ஏனக்கா குருவியக்கா ஐயர ஐயர் எண்டுறீங்கள்......... டொக்டர டொக்டர் எண்டுறீங்கள்...............ஆசிரியர ஆசிரியர் எண்டுறீங்கள்....... இந்துக்கள இந்துக்கள் எண்டுறீங்கள்....கிறிஸ்தவர கிறிஸ்தவர் எண்டுறீங்கள்.......சிங்களவன் எண்டுறீங்கள்.....முஸ்லீம் எண்டுறீங்கள்.....வண்ணான் எண்டும் கட்டாடி எண்டும் இருக்கிற உவமானத்த சொன்னா ஏத்துக்கிறீங்களில்ல..... ஏதோ மனசில கறையிருக்கிற படியாத்தானே அத ஏத்துக்க முடியல.....
எதுக்கு சாதிய கீழ்தரமா பாக்குறீங்கள்?????? சாதியே இல்லையெண்டு சொல்லுறீங்களா அப்ப???????
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
குருவி.... தேசிய எழுச்சியின் பின் சாதியின் கொடுமை ஓரளவு குறைந்திருக்கிறது...
யாழ் வைபமாலை யிலிருந்து யாழின் அமைப்பு முறையை கூறியிருந்தேன்
அவ்வளவுதான்... இனிமாலவாது தெரியாததை தெரிந்த கொள்ள பழகும்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
poonai_kuddy Wrote:ஏனக்கா குருவியக்கா ஐயர ஐயர் எண்டுறீங்கள்......... டொக்டர டொக்டர் எண்டுறீங்கள்...............ஆசிரியர ஆசிரியர் எண்டுறீங்கள்....... இந்துக்கள இந்துக்கள் எண்டுறீங்கள்....கிறிஸ்தவர கிறிஸ்தவர் எண்டுறீங்கள்.......சிங்களவன் எண்டுறீங்கள்.....முஸ்லீம் எண்டுறீங்கள்.....வண்ணான் எண்டும் கட்டாடி எண்டும் இருக்கிற உவமானத்த சொன்னா ஏத்துக்கிறீங்களில்ல..... ஏதோ மனசில கறையிருக்கிற படியாத்தானே அத ஏத்துக்க முடியல.....
எதுக்கு சாதிய கீழ்தரமா பாக்குறீங்கள்?????? சாதியே இல்லையெண்டு சொல்லுறீங்களா அப்ப???????
சாதி இருக்கோ இல்லையோ..வளர்க்கப்படத் தேவையில்லை..! டாக்டர் என்பதை வைத்தியசாலைக்கு வெளியில் காவுவதை.. நாங்கள் விரும்பவில்லை..! படித்த பட்டத்தை..அதற்குரிய இடத்துக்கு வெளியில் காவுவதை விரும்பவில்லை..! சிங்களவன்.. இனம்...அதை அவர்களே அடையாளப்படுத்தப் பாவிக்கிறார்கள்..அதில் தவறில்லை..! ஆனால் சாதி ஒரு சமூகத்துக்குள் மனிதர்களை தொழில்ரீதியில் பிரிந்து வேறுபடுத்தி அடக்குமுறைக்குள் வைக்கும் கீழ்த்தரமான செயல்...! அவர்களின் மன உணர்வுகளை உள்வாங்க மறுக்கும் மனித நேயமற்ற காட்டுமிராண்டித்தனம்..! அதை உவமை என்ற பெயரில் கவிதைகளின் ஏன் காவ வேண்டும்..!
மனசில கறை இல்லை..உங்களைப் போல எங்களைப் போல..அன்றி அவர்கள் எல்லோரும் மனிதர்கள்..! இனத்துவப் பாகுபாட்டுக்கு அப்பால் சாதியம் கொடுமையானது...! அது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்..! மீள உச்சரிக்கப்படுதல் அவசியமில்லை..!

hock: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
stalin Wrote:குருவி.... தேசிய எழுச்சியின் பின் சாதியின் கொடுமை ஓரளவு குறைந்திருக்கிறது...
யாழ் வைபமாலை யிலிருந்து யாழின் அமைப்பு முறையை கூறியிருந்தேன்
அவ்வளவுதான்... இனிமாலவாது தெரியாததை தெரிந்த கொள்ள பழகும்
அந்த அமைப்பு முறை அவசியமில்லை..இங்கு...! அது வைபவமாலையோடு சாமாதிக்கு போகட்டும்...! எங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை...அவை..!

hock: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பாரதி கூட சாதிகள் இல்லையடி பாப்பா என்றானே தவிர இன்னென்ன சாதிகள் இல்லையடி என்றவில்லை..! அப்படிக் குறிப்பிடுவதே அவற்றை மீள் அடையாளமுடிவதுக்கு சமன்...!
பார்ப்பர்ணியம் பேசிய போதும் பிராமணர்களை சாதி அடிப்படையில் எள்ளி நகையாடினீர்கள்..! இப்போ ஒன்னொரு உதாரணம்..! குறிப்பிட்ட கவிதையில் தரப்பட்ட உவமை இக்காலத்துக்குப் பெருத்தமானதல்ல..! இன்று அது வழக்கிலும் இல்லை...! பழைய பல்லவிகளை பாடுவோர்தான் அதுக்கு சிங் சக் போடினம்..! சாதிய உச்சரிப்பு தண்டனைக்குரிய குற்றம்..! அதுக்கு அவர் ஒருவர் விளக்கம் கொடுகிறார்..ஏனென்றால் அப்போதானாம் சாதியம் பற்றி தெளிவு வரும் என்று...! இல்லாத ஒன்றை நீங்கள் ஏன் தெளிய வைக்கிறீர்கள்...அதைக் காவ நிக்கிறீர்கள்..! சாதி இல்லை என்ற பின் ஏன் உச்சரிக்க வேண்டும்..இருப்பதாகக் காட்ட வேண்டும்..உவமை மூலம்..! விட்டொழியுங்கள் அது பற்றிய அனைத்து வெளிப்பாட்டு வடிவங்களையும்..அப்போ சாதி தன்பாட்டில் மறைந்திடும்..! எல்லாம் நீங்கள் உருவ்வாக்கியதுதான்..ஒழிக்க வேண்டிய நீங்களே காவுகிறீர்கள்..எப்படி ஒழிப்பது என்று பதில் கேள்வி வேறு..! :evil: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
முட்டையை விட்டாச்சு. இப்ப மயிரைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்.
சாதியம் இல்லை என்று சொல்லுபவர்கள் தீக்கோழி மணலுக்குள் தலையைப் புதைத்த மாதிரியாக வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் கிட்டடியில் நடந்த சம்பவங்கள், தற்போதும் நடக்கும் சம்பவங்களை இங்கு விளக்குப் போட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை.
கண்டால் கட்டாடி என்றும் காணாட்டி வண்ணான் என்றும் உவமிப்பது தற்போதும் நிலவுகின்றது, அதுவும் புலத்தில். அதப் பாவிக்க வேண்டும்/வேண்டாம் என்று தீர்மானிப்பது படைப்பாளி ஒழிய மற்றவர்கள் அல்லர். எவர் எப்படி நினைப்பாரோ என்று படைப்பாளி எழுத வெளிக்கிட்டால் வெற்றுக் கோஷம்தான் மிஞ்சும், போலியான வார்த்தைஜாலம்தான் வந்து சேரும்.
<b> . .</b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
சாதியைப் பற்றிக் கதைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது எந்தச் சட்டத்தில் உள்ளது? சாதியம் ஒன்றும் விலக்கப்பட்ட விடயம் அல்ல, பல இடங்களில் விவாதிக்கப்படும் ஒன்றுதான். இந்தத் தலைப்புக்குள் விவாதிக்காமல் நித்யாவின் கவிதைகளை மட்டும் அலசுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
<b> . .</b>
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
டாக்டர் சிவத்தம்பி அவர்கள் சாதியஅமைப்புகள் எப்படி இருந்தன எப்படி மாற்ற பெற்றன எனஅண்மையில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் யாழ்ப்பாணவைபமாலையிலிருந்து ஆதாரங்களை விளக்கியிருந்தார்
<b>***</b>
இனிமேல் உங்கள் லீலைகளை தொடருங்கள்....நான் மட்டுறத்தினரைத்தான் விளக்கம் கேட்டன்
நானும் மினக்கெட்டு கதைக்கிறன்...ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னது போல.........சம்பந்தமில்லாதவர்களுடன் சண்டை அல்லது விவாதம் என்ன வேண்டி கிடக்கிறது என்று.....
<b>*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது -வலைஞன்</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:சாதியைப் பற்றிக் கதைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பது எந்தச் சட்டத்தில் உள்ளது? சாதியம் ஒன்றும் விலக்கப்பட்ட விடயம் அல்ல, பல இடங்களில் விவாதிக்கப்படும் ஒன்றுதான். இந்தத் தலைப்புக்குள் விவாதிக்காமல் நித்யாவின் கவிதைகளை மட்டும் அலசுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
போராட்டக் காலத்துக்கு முன்னர்...இப்படி விவாப் பொருளாக இருந்த சாதியம் விவாததைத் தாண்டி ஒழிப்புக் கட்டத்துக்கு வந்து தசாப்தங்கள் கடந்தாயிற்று..! ஈழத்தைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில்...சாதிய உச்சரிப்பு தண்டனைக்குரிய குற்றம்..! அதற்காக தண்டனை அனுபவித்தவர்கள் பலர்..! சாதியத்தை இன்னும் உச்சரிப்பது என்பது அவசியமற்றது..! இன்று இங்கு வைக்கப்பட்ட விபரங்கள் யாழ்ப்பாண வைபவமாலையில் இருந்து எடுக்கப்பட்ட கடைந்தெடுத்த சாதிய முறையைப் பறைசாற்றும் உதாரணங்களே..! இவை ஏன் காவப்படுகின்றன இன்னும்..???! என்ன தேவை இருக்கிறது..! விவாதித்து சாதிக்க முடியாததைத்தான் போராட்ட சக்திகள் களைய முற்பட்டனர்..! அவர்களும் சாதியத்தை விவாதப் பொருளாக்கி விளிப்பூட்ட முனைந்தும் அது சாத்தியப்படாத போதே...கட்டாய சாதி ஒழிப்புக்கு வந்தனர்..!
இன்று..சாதி..இதை தீர்மானிப்பவர்கள் யார்..! மேற்குடியினர்..! அவர்கள் தான் இன்றும் தங்கள் பெருமைக்காக இதை மறைமுகமாக உச்சரிக்கின்றனரே தவிர இவை வெளிப்படையாக வழக்கில் இல்லை..! மேற்குநாடுகளில் எப்படி நிறத்துவோசம் கட்டுப்படவில்லை என்பதை தமிழர்கள் நங்கு அறிவார்கள்..அதன் பாதிப்பை அறிந்து இனத்துவேசிகளில் இருந்து பாதுகாக்கும் சட்டங்களை தேடி ஓடும் தமிழர்கள்..சாதிய உச்சரிப்பில் இருந்து கூட தம்மை விலக்கி வைக்க முற்படாமை என்பது முழுப் பிற்போக்குத்தனமானது...! சாதியம் பேசி அதை ஒழிப்பதாக அரசியல் நடத்திய சங்கரி போன்றோர் இங்கும் தலையெடுத்திருப்பதையே இவ்வாதங்கள் காட்டுகிறது..! குறிப்பாக யாழ் நூல்நுலையத் திறப்பு விழாத் தொடர்பிலும் சங்கரிக்கு உதவியது சாதிய உச்சரிப்பே...அதேதான் இங்கும் தொடர்கிறது..! நன்றி உங்கள் உங்கள் உண்மை முகங்களை வெளிக்காட்டுவதற்கு..!
பேசாப் பொருளாக்கி மறைப்பதிலும் பேசும் பொருளாக்கி விழிப்புணர்வு படுத்துகிறோம் என்ற போர்வையில்...விளம்பரப்படுத்துகிறீர்கள் என்பது உண்மை...! காரணம்...இது பேசிப் பேசி அழிந்ததாக வரலாறில்லை...! பேசாது அழிக்க முனையப்பட்டதாகவே வரலாறு...! கடந்த காலம் உதாரணமாகட்டும்..! :twisted:
நித்தியாவுக்கு வேறு உவமை கிடைக்காது சாதியத்தை கையில் எடுத்தது அவரால் அதன் பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை என்பதாகக் காட்ட என்று கூறுவோர்...ஏன் அந்த நித்தியா சாதியக் கூறுகளை உச்சரிக்காமலே அதைச் சொல்ல முனையவில்லை என்பதைப் பற்றி சிந்திப்பவர்களாக இல்லை..! கவிதை என்று பெண்ணின் உறுப்புக்களை ரசிப்பதை எழுதி அதையே புரட்சி என்று காட்டியோர்...இப்போ சாதியம் பேசிப்பேசியே அதையும் ஒழிக்க முற்படுவது ஆச்சரியமான விடயமல்ல..! தொடருங்கள் எங்கே உங்கள் நிறைவு என்று நோக்கலாம்..! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
stalin Wrote:டாக்டர் சிவத்தம்பி அவர்கள் சாதியஅமைப்புகள் எப்படி இருந்தன எப்படி மாற்ற பெற்றன எனஅண்மையில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் யாழ்ப்பாணவைபமாலையிலிருந்து ஆதாரங்களை விளக்கியிருந்தார்
******
இனிமேல் உங்கள் லீலைகளை தொடருங்கள்....நான் மட்டுறத்தினரைத்தான் விளக்கம் கேட்டன்
நானும் மினக்கெட்டு கதைக்கிறன்...ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னது போல.........சம்பந்தமில்லாதவர்களுடன் சண்டை அல்லது விவாதம் என்ன வேண்டி கிடக்கிறது என்று.....
அந்த நூலின் பெயரைச் சொன்னால் அவர் என்ன தேவைக்காக அந்த நூலை வெளியிட்டார் என்று சொல்லலாம்..! நிச்சயமாக நீங்கள் செய்தது போல சாதிப் பரப்புரைக்காக இருக்காது..!
சம்பந்தமில்லாதவர்கள் நீங்கள் தான்...இன்றைய சாதியம் மறந்த இளைய சமூகத்துள் சாதியத்தை சம்பந்தப்படுத நினைக்கும்.. சம்பந்தமில்லா அலுவல் பார்க்கிறீர்கள்..! :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
தமிழர்கள் இன்னும் சாதியத்தின் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பது சத்தியமானது. தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாக இப்போதும் சாதியம் உள்ளது. சகலரும் சரிசமமாக சென்று வழிபட அனுமதி மறுக்கும் கோயிலகள் தற்போதும் யாழில் உள்ளன. இல்லை இல்லையென்று சொன்னால் எதுவும் இல்லாமல் போகாது.
நித்யாவின் கவிதைப் பக்கத்திற்கு எப்படியாவது பூட்டுப் போட வைக்கவேண்டும் என்ற அழல் குணத்தைக் கைவிட்டால் நல்லது என்று நினைக்கின்றேன். மேலே எழுத விருப்பமில்லை. நித்யா புதிதாக எழுதினால் மீண்டும் வருகின்றேன்.
<b> . .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kirubans Wrote:தமிழர்கள் இன்னும் சாதியத்தின் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பது சத்தியமானது. தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாக இப்போதும் சாதியம் உள்ளது. சகலரும் சரிசமமாக சென்று வழிபட அனுமதி மறுக்கும் கோயிலகள் தற்போதும் யாழில் உள்ளன. இல்லை இல்லையென்று சொன்னால் எதுவும் இல்லாமல் போகாது.
<b>நித்யாவின் கவிதைப் பக்கத்திற்கு எப்படியாவது பூட்டுப் போட வைக்கவேண்டும் என்ற அழல் குணத்தைக் கைவிட்டால் நல்லது என்று நினைக்கின்றேன். மேலே எழுத விருப்பமில்லை. நித்யா புதிதாக எழுதினால் மீண்டும் வருகின்றேன்</b>.
முதலில் இப்படியான கொழுவல் போக்கான கருத்தைத் தவிருங்கள்..உங்கள் உண்மை முகம் பற்றி எங்களுக்கு தெரியும்...!
நித்தியா சாதியக் கூறுகளை உச்சரிப்பதை தவிர்த்திருக்கலாம் என்பதே எங்கள் கருத்து...அதை நேற்றே சுட்டிக்காட்டினோம்..! அத்தோடு எமது வாதம் முடிந்திருந்தது..! கீழ்சாதி உயர்சாதி பாகுபாடு இதற்குள் புகுத்தப்பட்டது அவசியமில்லாத ஒன்று...! அது தேவைக்கு அப்பால்பட்டது..! அது சாதிய ஒழிப்புக்கு எதிரான செயலும் கூட...!
இங்கு நாங்கள் சாதி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று எங்கும் சொல்லவில்லை..சும்மா ஒரு கருத்தை வைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கற்பனைக்கு நினைச்சிட்டு எழுதுவதில் பயனில்லை..! பேசப்படுவதை ஆராய்ந்து எழுதுங்கள்..! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>