Yarl Forum
சமுதாயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: (தீவிர) இலக்கியம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=32)
+--- Thread: சமுதாயம் (/showthread.php?tid=2661)

Pages: 1 2 3 4

சமுதாயம் - Nithya - 11-01-2005

<b>சமுதாயம்</b>

சிறுமி என நினைத்து
வேடிக்கையாய் பல விடயம் பேசி
என் முதுகின்பின்னால்
முரண்பட்டு

கண்டால் கட்டாடி
காணாட்டால்
வண்ணான் என
கரைந்து..

இறந்த காலத்தால் - என்
நிகழ்காலம் இறப்பித்து

போடு போடு இன்னும் பல சூடு
நான் திரும்பி பார்க்காத வரையில்
சிறுமிதான்..!!

பி. எஸ் : கடுகின் காரம் மறந்த சமுதாயம்

- SUNDHAL - 11-01-2005

ம்ம்ம்ம்ம் சூப்ர்ரா இருக்கு ஒலிவடிவத்தை எப்பிடி கேட்ப்பது...?

- Birundan - 11-01-2005

கண்டால் கட்டாடி
காணாட்டால்
வண்ணான் என
கரைந்து..

இதன் பொருள் என்ன?

- Nithya - 11-01-2005

Birundan Wrote:கண்டால் கட்டாடி
காணாட்டால்
வண்ணான் என
கரைந்து..

இதன் பொருள் என்ன?

கண்டால்
"கட்டாடி வந்திருக்கார்
உடுப்புக் கொண்டுவா" என்பார்

காணவில்லை என்றால்
"இந்த வண்ணான்
என்ன செய்து கொண்டு இருக்கிறானோ"
என்பார்..

புரிகிறதா வித்தியாசம்??

- Rasikai - 11-01-2005

சமுகத்தை பற்றிய கவி நன்று வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

- Birundan - 11-02-2005

Nithya Wrote:
Birundan Wrote:கண்டால் கட்டாடி
காணாட்டால்
வண்ணான் என
கரைந்து..

இதன் பொருள் என்ன?

கண்டால்
"கட்டாடி வந்திருக்கார்
உடுப்புக் கொண்டுவா" என்பார்

காணவில்லை என்றால்
"இந்த வண்ணான்
என்ன செய்து கொண்டு இருக்கிறானோ"
என்பார்..

புரிகிறதா வித்தியாசம்??

இது இரண்டுமே தொழில்முறைப் பெயர்கள் இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கட்டாடி என்பதை உயர்வாகவும்,
வண்ணான் என்பதை இகழ்வாகவும் கருகிறீர்களா?

- kuruvikal - 11-02-2005

Birundan Wrote:

பிருந்தன்... இது தென்மராட்சி வழக்கு...! அங்கு அப்படித்தான் சொல்வார்கள்..! யாழ் நகரைப் பொறுத்தவரை... லோன்றி அப்படி என்றுதான் சொல்லுறது..! இதில் சரி தவறு நமக்குத் தெரியாது..! தொழில்முறை சாதிப்பாகுபாட்டுக்கு குறியீடுகள் இவை என்பது என்னவோ உண்மைதான்..அதையேன் இவங்க எடுத்தாங்க...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :?:

- Nithya - 11-02-2005

Birundan Wrote:இது இரண்டுமே தொழில்முறைப் பெயர்கள் இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கட்டாடி என்பதை உயர்வாகவும்,
வண்ணான் என்பதை இகழ்வாகவும் கருகிறீர்களா?

வித்தியாசம் உண்ட
என்னால்தான்
விவரிக்க முடியவில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Nithya - 11-02-2005

kuruvikal Wrote:[quote=Birundan][quote="Nithya
என்பார்..

பிருந்தன்... இது தென்மராட்சி வழக்கு...! அங்கு அப்படித்தான் சொல்வார்கள்..! யாழ் நகரைப் பொறுத்தவரை... லோன்றி அப்படி என்றுதான் சொல்லுறது..! இதில் சரி தவறு நமக்குத் தெரியாது..! தொழில்முறை சாதிப்பாகுபாட்டுக்கு குறியீடுகள் இவை என்பது என்னவோ உண்மைதான்..அதையேன் இவங்க எடுத்தாங்க...???! <!--emo&:P--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :?:

கட்டாடிக்கு முன்னால்
வண்ணான் என்று
குறிப்பிட மாட்டார்கள் ..!!

"என் முதுகின்பின்னால்
முரண்பட்டு "

என்று குறிப்பிடடேனே..

எது எப்படியோ வழக்கொழிக்கப்பட வேண்டிய சொற்கள் அவை என்பதையே சொன்னோம்...! நாம் ஏன் வழக்கில் நுகர்வான்...மீட்டுவான்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

Re: சமுதாயம் - poonai_kuddy - 11-02-2005

Nithya Wrote:சமுதாயம்

சிறுமி என நினைத்து
வேடிக்கையாய் பல விடயம் பேசி
என் முதுகின்பின்னால்
முரண்பட்டு

கண்டால் கட்டாடி
காணாட்டால்
வண்ணான் என
கரைந்து..

இறந்த காலத்தால் - என்
நிகழ்காலம் இறப்பித்து

போடு போடு இன்னும் பல சூடு
நான் திரும்பி பார்க்காத வரையில்
சிறுமிதான்..!!

பி. எஸ் : கடுகின் காரம் மறந்த சமுதாயம்

நல்ல கவிதையக்கா.... கட்டாடி எண்டுறது என்னெண்டு இப்பதான் நான் தெரிஞ்சு கொண்டனான் அக்கா....சமுதாய சிந்தனையள் உங்களிட்ட நிறைய இருக்கக்கா.....

திரும்பிப் பார்க்காத வரையில் சிறுமி என்றால்.....திரும்பிப் பார்த்தால் கிழவியா? (சும்மா பகிடிக்கக்கா)

எங்கட சமுதாயத்தின்ர சாக்கடை மனசை சுருக்கமா ஆனா விளக்கமா சொல்லியிருக்கிறீங்கள். நிறைய எழுதுங்கோ அக்கா

- Mathan - 11-02-2005

Birundan Wrote:இது இரண்டுமே தொழில்முறைப் பெயர்கள் இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? கட்டாடி என்பதை உயர்வாகவும்,
வண்ணான் என்பதை இகழ்வாகவும் கருகிறீர்களா?

வண்ணான் என்று அழைப்பதை சலவை தொழில் செய்பவர்கள் இழிவாக நினைப்பதாகவும் அப்படி அழைப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றும் படித்தேன், தவிர கட்டாடி என்ற சொல்லும் இணையத்தில் தான் அறிந்து கொண்டேன், அந்த சொல்லை அவர்கள் தாழ்வாக கருதுவதில்லையாம், அதனால் கண்முன்னால் காணும் போது கட்டாடி என்று அழைபவர்கள் காணாத சமயத்தில் அவர்களை குறித்து பேசும் போது வண்ணான் என்ற சொல்லை உபயோகிப்பார்களாம். இந்த சொற்கள் நித்தியாவின் கவிதையில் புறங்கூறுதல் பண்பை குறிப்பிடுகின்றது என்று நினைக்கின்றேன்,

- Mathan - 11-02-2005

kuruvikal Wrote:பிருந்தன்... இது தென்மராட்சி வழக்கு...! அங்கு அப்படித்தான் சொல்வார்கள்..! யாழ் நகரைப் பொறுத்தவரை... லோன்றி அப்படி என்றுதான் சொல்லுறது..!

யாழ் நகர் பகுதிகளில் எனக்கு தெரிந்து கட்டாடி பாவனையில் இல்லை, அதிகமாக டோபி என்று குறிப்பிட்டாலும் வண்ணான் என்ற சொல்லும் ஓரளவு பாவனையில் உண்டு. வண்ணார்பண்ணை என்ற இடம் அந்த பெயர் குறித்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

- அருவி - 11-02-2005

Mathan Wrote:

யாழில் நானும் கேள்விப்பட்டிருக்கன்
அதுசரி கட்டாடியா அல்லது கட்டாளியா?

- Mathan - 11-02-2005

அருவி Wrote:கட்டாடியா அல்லது கட்டாளியா?

கட்டாடி என்று தான் வாசித்தேன்

- kuruvikal - 11-02-2005

Mathan Wrote:
kuruvikal Wrote:பிருந்தன்... இது தென்மராட்சி வழக்கு...! அங்கு அப்படித்தான் சொல்வார்கள்..! யாழ் நகரைப் பொறுத்தவரை... லோன்றி அப்படி என்றுதான் சொல்லுறது..!

யாழ் நகர் பகுதிகளில் எனக்கு தெரிந்து கட்டாடி பாவனையில் இல்லை, அதிகமாக டோபி என்று குறிப்பிட்டாலும் வண்ணான் என்ற சொல்லும் ஓரளவு பாவனையில் உண்டு. வண்ணார்பண்ணை என்ற இடம் அந்த பெயர் குறித்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அதைத்தான் சொன்னம் மதன்..தென்மராட்சியில் கட்டாடி என்பார்கள் என்று...! யாழ் நகரில் லோன்றி...அதுதான் எங்கள் சூழலில் அதிகம் பாவிக்கப்பட்டது..! டோபியும் உண்டு..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- அருவி - 11-02-2005

இதப் பார்த்தவுடன் இலங்கையின் அதிபர் இரணசிங்க பிரேமதாச ஞாபகம் வந்தார். தென்னிலங்கையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து தன் முயற்சியால் நாட்டின் அதியுயர் பதவிக்கு வந்தவர்.

- stalin - 11-02-2005

யாழ்வைபமாலையின் படி ,,உயர் சாதியர் , உயர் சாதியல்லார் இழி சாதியினர் என சாதிவகை படுத்தியிருந்தனர்... அதன் படி உயர் சாதியல்லதார் என்ற பிரிவில் வண்ணார் என்ற பிரிவு இருக்கிறது

இந்த வண்ணார் என்பவர் உடுப்புக்கள் தோய்ப்பவர் மட்டுமன்றி...அந்த நாட்களில் திருமணம், மரணவீடு காது குத்தல் கோயில் திருவிழாக்களில் மிக தேவையானவராக இருந்தார்

உயர்சாதியினருக்கு குடிமக்கள் ஆக இருந்தாலும் முகத்துக்கு நேரை வாங்க கட்டாடியார் என மரியாதையாக கூறுவார்கள் போகவிட்டு வணணான் சாதி சொல்லை வைத்தே கதைப்பார்கள்

நித்யா முதுகுக்கு பின்னால் கதைப்பதற்கு எடுத்த உவமை சரியானதே

டோபி லோன்றி என்பன தமிழ் சொற்களா??

- Mathan - 11-02-2005

விளக்கத்துக்கு நன்றி ஸ்டாலின். யாழ்நகரை அண்டிய பகுதிகளில் கூடுதலாக டோபி என்ற சொல்லுதான் புழக்கத்தில் இருந்தது. டோபி தமிழ் சொல் அல்ல என்பது உண்மை தான். முதுகுக்கு பின்னால் பேசுவதை உவமிக்க அவர் சொன்னதாகதான் நான் நினைத்தேன்.

அது சரி இப்போதும் திருமணம், மரணவீடு காது குத்தல் கோயில் திருவிழாக்களுக்கு சலவை தொழிலாளர்கள் அழைக்கப்டுகிறார்கள் தானே? தாயகத்தை சொல்கின்றேன்

- kuruvikal - 11-02-2005

Mathan Wrote:விளக்கத்துக்கு நன்றி ஸ்டாலின். யாழ்நகரை அண்டிய பகுதிகளில் கூடுதலாக டோபி என்ற சொல்லுதான் புழக்கத்தில் இருந்தது. டோபி தமிழ் சொல் அல்ல என்பது உண்மை தான். முதுகுக்கு பின்னால் பேசுவதை உவமிக்க அவர் சொன்னதாகதான் நான் நினைத்தேன்.

அது சரி இப்போதும் திருமணம், மரணவீடு காது குத்தல் கோயில் திருவிழாக்களுக்கு சலவை தொழிலாளர்கள் அழைக்கப்டுகிறார்கள் தானே? தாயகத்தை சொல்கின்றேன்

முதுகுக்குப் பின்னால் சொல்வதைச் சொல்ல... உவமை சாதி... நல்லது..! அதுக்கு வரைவிலக்கணம் வேற..! இதுக்க சாதி ஒழிப்பு முழக்கம்..! முன்னர் இதே களத்தில் சேது சாதி உச்சரித்ததுக்காக எச்சரிக்கை செய்யப்பட்டதை மறக்க முடியாது...! Confusedhock: :roll: Idea

இதுக்கு வேறு உவமையா... கைம்பெண்ணைப் பழிப்பதைச் சொல்லி இருக்கலாம்... அல்லது முதிர்கன்னிகளைக் கையாண்டிருக்கலாம்...???! ஏன் சாதியம்..அதன் வடு இன்னும் பதிக்கப்பட வேண்டும் என்பதாலா...??! :roll: Idea