திரிஷாவின் தாராளம்
<img src='http://img366.imageshack.us/img366/8528/trisha484506ad.jpg' border='0' alt='user posted image'>
விஜய் மற்றும் அவரது அப்பாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் திரிஷா, தனது தாராளத்தால்
தாராளம் என்றதும் கண்டக்க ¬மண்டக்க கற்பனையை ஓட்டி விடாதீர்கள். மேட்டரை தொடர்ந்து படியுங்கள்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகப் போகும் ஆதி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா என்பது தெரிந்த சேதி.
ஆதி படத்தில் திரிஷாவை ஹீரோயினாகப் போடலாம் என்று விஜய் தான் ரெகமண்ட் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து திரிஷாவைத் தொடர்பு கொண்ட எஸ்.ஏ.சி. கால்ஷீட் கேட்டுள்ளார். உடனே ரெடி என்று கூறியுள்ளார் திரிஷா.
அத்தோடு நில்லாமல் எஸ்.ஏ.சியை நேரிலும் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது படத்தின் கதை உள்ளிட்ட விவரங்களைக் கூறிய எஸ்.ஏ.சி, சரிம்மா, சம்பளம் எவ்வளவு வேணும் என்று கேட்டுள்ளார்.
அதைக் கேட்ட திரிஷா, அதெல்லாம் உங்க இஷ்டம், நீங்களாக பார்த்து எவ்வளவு கொடுத்தாலும் ஓ.கே.தான் என்று பெருந்தன்மையாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் எஸ்.ஏ.சி. அசந்து விட்டாராம். அப்படி இல்லை திரிஷா, இப்போது உன்னோட மார்க்கெட் வேறு, அந்த மார்க்கெட் படி தானே கொடுக்க முடியும் என்று எஸ்.ஏ.சி. கூற, அதெல்லாம் மத்தவங்களுக்குத் தான்.
உங்களிடம் அப்படிக் கேட்க முடியாது என்று கூறி மேலும் மேலும் இன்ப அதிர்ச்சியை கூட்டியுள்ளார் திரிஷா.
அப்போது பார்த்து விஜய்யும் வந்து சேர, திரிஷா கூறியதை அவரிடம் கூறியுள்ளார் எஸ்.ஏ.சி. அப்படியா என்று ஆச்சரியத்துடன் பார்த்த விஜய்யைப் பார்த்து திரிஷா,
உங்களோட நடித்த கில்லி சூப்பர் டூப்பர் ஹிட். திருப்பாச்சியும் பிரமாண்டமான வெற்றிப் படம். இந்த இரண்டு பட்களும் தான் எனக்கு தெலுங்கில் பெரிய இடத்தைப் பெற உதவியது.
<img src='http://img366.imageshack.us/img366/4523/trishavij254507lo.jpg' border='0' alt='user posted image'>
[b]உங்களிடம் போய் பேரம் பேசலாமோ என்று கேட்க அதை விஜய்யால் மறுக்க ¬முடியவில்லையாம்.
திரிஷாவின் தாராள மனதைப் பார்த்து அசந்து போன எஸ்.ஏ.சி. ஒரே செக்கில் பேமண்ட்டை கொடுத்து தன் பங்குக்கு திரிஷாவை அசத்தி விட்டாராம்.
இப்படி மாறி மாறி மூன்று பேரும் அசந்து போனதை தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்து போய் வருகிறாராம் திரிஷா. வழக்கம் போல இந்தப் படத்திலும் திரிஷாவின் துள்ளாட்டம், தூளாக இருக்குமாம்.
கில்லி, திருப்பாச்சியில் போட்ட ஆட்டத்தை விட இரண்டு மடங்கு தூக்கலாக கொடுக்கப் போகிறார்களாம் விஜய்யும், திரிஷாவும்.
அதேசமயம் கிளாமர் கூடுதலாக இருக்காத வகையிலும் பார்த்துக் கொள்வார்களாம். காரணம், விஜய் படங்களை இப்போது குழந்தைகளும் பார்க்கிறார்களே என்கிறது விஜய் வட்டாரம்!
அப்படிப் போடு!
http://thatstamil.indiainfo.com/specials/c...ls/trisha7.html