Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாய்லாந்தில் பேச்சுக்கள் ஆரம்பமாக முன்பு அமைச்சர் மிலிந்த மொறகொட இந்தியாவுக்கு போயிருந்தார். அங்கே அவரிடம் செய்தியாளர்கள் இடைக்கால நிர்வாகம் பற்றிக் கேட்டார்கள். அதற்கவர் "சொற்பொறிக்குள் சிக்க வேண்டாம்" என்று பதில் கூறினார்.
இடைக்கால நிர்வாக சபை என்ற சொல்லும் சிங்கள வெகுசனங்களுக்குப் பீதியுூட்டும் ஒரு சொல்லாகிவிட்டபடியால் தான் மொறகொட அப்படிக் கூற வேண்டியிருந்தது.
இதன்படி அரசாங்கம் ஒன்றில் இடைக்கால நிர்வாக சபை என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு வேறொரு பெயரைப்பாவிக்கப் போகிறதா? அல்லது இடைக்கால நிர்வாக சபைக்குப் பதிலாக வேறொரு புதிய ஏற்பாட்டை உருவாக்கப்போகிறதா?
நடந்து முடிந்த முதற்சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் இதைத்தான் காட்டுகின்றன. சமாதானத்துக்கான சிலகூட்டுச் செயலணிகளை உருவாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உத்தேச இடைக்கால நிர்வாக சபைக்குரிய பொறுப்புக்களைச் சொரியலாக நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையே.
இப்படி சொற்பொறிக்குள் சிக்கிவிடாதிருக்கும் உத்திகள் ஒருபுறம்.
இன்னொருபுறம் தாய்லாந்தில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கூறியவை சொற்பொறுக்கிகளுக்கும் சொற்தொங்கிகளுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடத்தயார் என்று அவர் கூறியது கொழும்பிலும் சர்வதேச அளவிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொழும்பில் உள்ள சொற்பொறுக்கிகளும் சொற்தொங்கிகளும் கலாநிதி பாலசிங்கத்தின் சொற்களில் தொங்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் காலநிதி பாலசிங்கம் மிகவும் சமயோசிதமாகவும் சூசகமாகவும் ஒன்றைக் கூறியுள்ளார். தமிழர்களின் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஒப்புக்கொள்ளும் ஒரு இறுதித்தீர்வே பிரிவினைக்கு ஈடானதாயிருக்கும் என்பதே அது.
கொழும்பில் உள்ள சொற்பொறிக்கிகளும் சொற்தொங்கிகளும் அவசரத்தில் இதைத் தவறவிட்டுவிட்டது போலத் தோன்றுகிறது. அல்லது வழமைபோல இது ஒரு தந்திரமான மௌனமாயிருக்கலாம்.
அதேசமயம் ஜே.வி.பி. முன்பு பாடமாக்கிய மார்க்சிசத்தில் சில விசயங்களையாவது இன்னும் மறந்துவிடவில்லை என்பது போலக் கருத்துக்கூறியுள்ளது.
கலாநிதி பாலசிங்கம் கூறிய தமிழர்தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றின் அடிப்படையில் பிரிந்துபோகும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என்பதால் புலிகள் பிரிவினைக்கோரிக்கையை வேறு வழிகளில் முன்வைக்கின்றனர் என்று ஜே.வி.பி. கூறுகிறது.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய மிகவும் குரூரமான யதார்த்தம் என்னவென்றால்- தமிழர்களின் உயிரும் நிலமும் வாழ்வும் உரிமைகளும் இப்படி சொற்பொறிக்குள் சிக்கிவிடக்கூடிய அல்லது சொற்பொறுக்கிகள் சொற்தொங்கிகளிடம் சிக்கிவிடக் கூடிய அற்ப விவகாரங்களாகத்தான் இன்னமும் இருக்கின்றன என்பதே.
ஒரு தீர்வைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே கதைத்தால் இருக்கின்ற சுமூகநிலையும் கெட்டுப்போய்விடும் என்பதாற்தான் தீர்வைப்பற்றிய உரையாடலை ஒத்திவைக்கவும் இடையில் ஒரு இடைக்கால நிர்வாகத்தைப் பற்றிச் சிந்திப்பது என்றும் முதலில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்பொழுது இடைக்கால நிர்வாக சபையும் கூட சிங்களவருக்குப் பீதியுூட்டும் ஒன்றாகிவிட்டதுபோலத் தோன்றுகின்றது என்பதால் இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவதற்கு முன்னோடியாக மேலும் ஒரு இடைக்கால ஏற்பாடாக கூட்டுச் செயலணிகளை உருவாக்க முயல்வது போலத்தோன்றுகின்றது. அதாவது இடைக்கால நிர்வாக சபைக்கு முன்பாக மேலும் ஒரு இடைக்கால ஏற்பாடு.
இக்கூட்டுச் செயலணிகள் அதிகாரப் பகிர்வுக்கான கருநிலைச் செயற்பாட்டுத்தளங்களாய் அமையும் வாய்ப்புக்கள் அதிகம் தெரிகின்றன.
அரச செயலக வட்டாரங்களிலிருந்து வரும் தகவல் ஒன்றின்படி வடக்கு கிழக்கில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அரச அதிகாரிகளின் கூட்டங்கள் எல்லாவற்றிலும் புலிகளின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி ஒருவர் பிரசன்னமாயிருக்க வேண்டும் என்றும் இது பற்றிய விபரம் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளில் பதியப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஒரு அறிவுறுத்தல் சமாதானச் செயலகத்தின் இயக்குனர் பேணார்ட் குணதிலகவிடமிருந்து வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது நிர்வாக மட்டத்தில் முடிவுகளை எடுக்கும்போது புலிகளையும் பங்காளிகளாக்க அரசாங்கம் விரும்புவதையே காட்டுகிறது.
மெய்யான அர்த்தத்தில் கூறுவதாயிருந்தால் அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழ்ப் பகுதிகளில் புலிகள் அரசியல் வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்ட போதே அதிகாரப் பகிர்வு அதன் கருநிலையில் தொடங்கிவிட்டது. இப்பொழுது இரண்டாம் கட்டம் வெளிநாட்டு நிதியைப்பெறுவது பிரயோகிப்பது போன்றவற்றில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒருவித அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி யுத்தப் பிரதேசங்களில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளுக்குச் சுமார் 5000 லட்சம் அமெரிக்க டொலர்கள் தேவை.
மற்றது முழு அளவு இயல்புநிலையை உருவாக்குவதற்கான கூட்டுச் செயலணிகள் இவற்றின் வீச்செல்லை கண்ணிவெடிகளை அகற்றுவதிலிருந்து உயர்பாதுகாப்பு வலயங்களைப் பற்றிக் கதைப்பது வரை வரும். இது இராணுவமய நீக்கத்திற்கான செயற்பாட்டுத்தளமாக இருக்கும். யுத்தநிறுத்தத்தின் அடுத்த கட்டம் இராணுவ அர்த்தத்தில் இதிலிருந்து பயன்பொருத்தமான விதத்தில் தொடங்கும்.
இப்படிக் கூட்டுச் செயலணிகளை உருவாக்குவதன் மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கும் இடைக்கால நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப முடியும் என்று நம்ப இடமுண்டு. அதேசமயம் இடைக்கால நிர்வாக சபைக்குள் அடங்கும் அம்சங்களைச் சொரியலாகவும் படிப்படியாகவும் சமாதானத்துக்கு எதிரான சக்திகளின் கவனத்தை அதிகம் ஈர்க்காதவிதத்திலும் அமுல்ப்படுத்த முடியும் என்று அரசாங்கம் நம்புவது போலவும் தோன்றுகின்றது.
இது எதைக்காட்டுகிறது என்றால் இலங்கைத்தீவில் விஞ்ஞானபுூர்வமாகச் செய்யப்படும் சமாதானம் வெளிப்படையானதாக நேரடியானதாக இருப்பதற்குரிய வாய்ப்புக்கள் குறைவு என்பதையே.
சமாதானத்தின் வழியில் காணப்படும் தத்துக்களையும், சோதனைகளையும் கடப்பதற்கு அதிகம் கற்பனையும் தந்திரங்களும் உத்திகளும் தேவைப்படுகின்றன என்பதையே.
ஆனால் இது எதுவும் அரசாங்கம் ஒரு கட்டத்தில் சமாதானத்தை ஒரு தந்திரமாக அல்லது பொறியாகப் பாவிக்கக்கூடும் என்ற தமிழர்களின் இயல்பான அச்சத்தைப் பெருப் பிக்காமலும் இருக்கவேண்டும்.
நிலாந்தன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில்
சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.
குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து
நிலையில் ஆழ்ந்த உட்பொருள்
இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப்படுத்தப்பட்ட பரந்த பொருள்
ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப்பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்குமிடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல்மேற்கொள்ளப்படவேண்டிது.
பலம், பலவீனம், தோற்றமைவு, அறிவு, நடத்தை, திறமை என்பன ஒன்றிணைந்து தற்கருத்தை தோற்றுவிக்கும். "இது அப்பாவின் செல்லம்", "இது என்ரை திரவியம்" போன்ற பிணைப்பைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் சுழியன், கெட்டிக்காரன் போன்ற திறமையைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் குழந்தை மனதில் ஆக்கபுூர்வமான தற்கருத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்தி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதனு}டாக ஆளுமை விருத்திக்கு இட்டுச் செல்லும். மாறாக 'முட்டாள்', 'எருமை', 'தேவாங்கு' போன்ற சொற்பிரயோகங்கள் எதிர்மறைக் கருத்து நிலையை தோற்றுவித்து மன அழுத்தம், கோபம், ஒதுங்கிப்போகும் தன்மை என்பவற்றிற்கு இட்டுச் செல்லும்.
கண்டதையும் போட்டுடைக்கும் குழந்தையின் நடத்தைக்கு 'சுட்டித்தனம்' எனப்பெயரிட்டு குழந்தை எதிரிலேயே 'குளப்படிக் கந்தன்', 'முரட்டுச்சாமி' எனப் பெருமைப்படும் பெற்றோரோ பேரன் பேத்தியோ தமது செயல் ஊக்குவிக்கப்படுகின்றது என்ற மனோபாவத்தை குழந்தை மனதில் ஏற்படுத்தி, மேலும் மேலும் செய்யத்து}ண்டும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு தாம் வழி கோலுகின்றோம் என்ற யதார்த்தத்தை உணர மறந்து விடுகின்றனர். 'ஊத்தை, பினாட்டு, உறண்டை' போன்ற அசுத்தத்தைக் குறிக்கும் பிரயோகங்கள் சுத்தம் தொடர்பான கருத்து நிலையை மறக்கடித்து 'அழுக்கே சொர்க்கம்' என்ற மன நிலையை வளர்த்து விடக்கூடியது. 'கறுப்பி, மரமண்டையன், முழியன், கட்டைச்சி' போன்ற உருவமைப்பை குறிக்கப் பயன்படுத்தும் சொற்பதங்கள் குழந்தைக்குத் தன் தோற்றமைவு தொடர்பான தாழ்வுணர்ச்சிக்கே இட்டுச் செல்வது மட்டுமன்றி பல அபாயகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.
முழுக்க முழுக்க தகப்பனின் சாயலில் பிறந்த குழந்தையை அதனது பெயரில் அழைக்காது "மணியண்ணை வாங்கோ" என்று அதனது தகப்பனது பெயராலேயே அழைத்ததன் விளைவு தகப்பனின் பண்பற்ற தனத்தையும் குடிகாரக் குணத்தையும் சேர்த்தே குழந்தை உள்வாங்கிக் கொள்ள காரணமாயிருந்திருக்கின்றது. சில இடங்களில் தாம் பிறந்தகையுடனோ அல்லது சிலகாலம் செல்லவோ தாயை அல்லது தகப்பனை இழந்துவிடும் குழந்தையை "தாயைத்தின்னி" என்றோ "தேப்பனைத் தின்னி" என்றோ பெரியோர் கூப்பிடுவதைப் பார்க்கின்றோம். இது தாழ்வுணர்ச்சியை உருவாக்கி பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை நாம் உணரத் தவறிவிடுகின்றோம்.
தேடலுக்கு ஒரு வேட்டு
தன்னைத்தானே ஆராயும் நிலையை அடைதல் மனித வாழ்வில் பலருக்கு சாத்தியப்படுவதேயில்லை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை ஆராயும் பண்போ குழந்தைப்பருவத்தின் மூன்றாவது வயதில் தொடங்கி எட்டாவது வயதில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஏன், எதற்கு, எப்படி? என்ற வினாக்கள் மேதைகளையும் ஆட்டம் காண வைப்பவை. குழந்தையின் சொல்லாட்சியில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும் பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும்.
"மழை எப்படி பெய்யுது? கத்தி ஏன் வெட்டுது? நாய் ஏன் வாலையாட்டுது?" போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை. ஆகக்குறைந்தது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியையாவது "அப்படியாம் இப்படியாம்" என்று 'கேள்விச் செவியன்' நிலையில் இல்லாது காரண காரியத் தொடர்புடன் பதிலளிக்க முயற்சித்தால் குழந்தையின் துருவி ஆராயும் பண்பை தேடலுக்கான களமாக மாற்ற முடியும். பொருட்கள், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான தெளிவான இலகுவான விளக்கங்களைக் கொண்ட நு}ல்கள் நு}லகங்களில் நிரம்பி வழிகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். ரூசூ009;
ஆனால் பெரும்பாலும் நடப்பதுலு}.? கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "அலட்டல், தொணதொணப்பு, கிழட்டுக்கதை, அரியண்டம்" என்றும் அது போதாவிட்டால் "பிள்ளைபிடிகாரன் வாரான், புூதத்தைத் கூப்பிடுவன்" என்றும் அதுவும் போதாவிட்டால் "ஆக்கினை கூடிப்போச்சு, பள்ளிக்கு கெதியாச் சேர்த்தால்தான் சரி" என்றும் குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுவதாகும்.
துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே முயன்று உருவாக்கும் து}ண்டலை குழந்தையிடம் உருவாக்கக்கூடியது. கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுக்கும் பம்பரமோ, ஊதுகுழலோ வீடு வந்து சேர்வதற்கிடையில் அக்குவேறு ஆணிவேறாய்க் கழற்றப்பட்டிருப்பதும், மை தீர்ந்த ஒறெக்ஸ் பேனாவின் மேல்மூடியும் கீழ்மூடியும் அகற்றப்பட்டு உடற் பகுதிக்கு இறப்பர் வளையம் பொருத்தி தென்னம் ஈர்க்கு பயன்படுத்தி ஏவுகணை விடுவதும் புதிதாய் உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே என்பதை பலர் அறியும் வாய்ப்பு இல்லை.
இன்று பெரும்பாலும் வீடுகளையும் முன்பள்ளிகளையும் நிறைத்திருப்பது உருவாக்க சக்தியை து}ண்டாத பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களே. இதனால்தான் வாங்கிய சிறு காலத்துக்குள்ளேயே இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடுவாரற்றுக் கிடப்பதும், புதுப்புது உருவாக்கத்திறனுக்குக் களம் அமைக்கும் மண் விளையாட்டு பெற்றோர் தடைச்சட்டம் போட்டாலும் கூட குழந்தைப் பருவத்தின் மிகவும் விருப்புக்குரிய விளையாட்டாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உருவாக்கத்திறனை அதிகரிக்காத எதுவுமே குழந்தை மனதில் இடம்பிடிக்காது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.
முரண்களுக்கும்
முரண்களுக்குமிடையே
குழந்தையை வார்க்கும் முதலாவது பள்ளி குடும்பமென்றால் அதனைச் செப்பனிடும் அடுத்த பள்ளி பள்ளிக்கூடமே. குழந்தையின் துருவியாராயும் பண்பை, சந்தேகங்களை, தேடலைத் தீர்த்து வைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தை பிறந்த கையுடனேயே தமக்கிடையில் நு}றாயிரம் கோடி இணைப்புக்களை ஏற்படுத்தும் மூளையின் நியுூரோன்களில் பயன்படுத்தப்படாதவற்றை உடனே மூளை து}க்கி வீசிவிடுமாம். து}ண்டலை ஏற்படுத்தக் கூடிய சூழலும், அரவணைப்பும் எவ வளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு இந்த நியுூரோன்களின் இணைப்பும் அதிகரிக்கிறதாம். மூன்று வயதுக்கிடையில் நன்கு அரவணைப்புக் கிட்டாத, து}ண்டல் அற்ற குழந்தை இலகுவில் மாற்றமுடியாத குணாம்சங்களைத் தனக்குரியதாக ஆக்கிவிடும். இதனடிப்படையில் "பிறப்புக்கு முந்திய குழந்தையின் மூளை விருத்திக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட நன்கு திட்டமிட்ட முன்பள்ளித் திட்டங்கள் மூலம் குழந்தையின் பிறப்புக்கு பின்னர் உள்ள காலகட்டங்களிலாவது நாம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்ற குழந்தை நரம்பியல் நிபுணரான பிளரி சூகானியின் கூற்று கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று.
ஆனால் பெரும்பாலும் நாம் பார்ப்பதுலு} '2-2' வயதுக்குள்ளேயே குழந்தையை முன்பள்ளியில் ஒப்படைத்துவிட்டு சற்று ஆறுதலாக இருக்கக் கிடைத்தது வாய்ப்பென்று நினைக்கும் அன்னையரும், அறிவும், அனுபவமும், உடல் உள முதிர்ச்சியின்மையும் நிறைந்த ஆசிரியைகளை கொண்ட பெரும்பாலும் குழந்தை பராமரிப்பகங்களாக இருக்கும் முன் பள்ளிகளுமே. குழந்தையின் எதிரிலேயே அதன் சகோதரர்களை உறுக்குவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் "hPச்சரிட்டைச் சொல்லி அடிவாங்கித் தாறன்", "இவனை கட்டி அவிழ்க்க ஏலாது. பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" என்ற சொற்பதங்கள் தேடலுக்கு களமாக இருக்கவேண்டிய பாடசாலைகளைச் சிறைச்சாலைகளாக உருப்படுத்தி காட்டுவதனால்தான் அழுகையும் புலம்பலுமாக சில சமயம் அடியும் குத்துமாக பிள்ளைகள் பெற்றோரால் பள்ளிக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சிகளை நாம் காணமுடிகின்றது.
இதற்கு மாறாக, குழந்தையின் தேடலுக்கு களமமைத்துக் கொடுக்கக் கூடிய வீட்டுச் சூழலில் வளரும் குழந்தையானது பெருத்த கனவுகளுடனும் ஆர்வத்துடனும் பள்ளியை அணுகும் சந்தர்ப்பங்களில் அதனது தேடல் பசிக்கு போதிய தீனி கிடைக்காமல் போகும் போது அது விரக்திக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டு அந்தக் குழந்தைக்கும் கூட பாடசாலை சிறைச்சாலையாக மாறிவிடுகின்றது.
குடும்பத் தொடர்புகளும் தொடர் விளைவுகளும்
குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப்படுத்தப்பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப்பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்குமிடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல் மேற்கொள்ளப்படவேண்டியது.
ஆனால் எப்படிக் களைவதுலு}லு}.? பெரும்பாலும் குழந்தைக்கும் அதன் முதலாவது தொடர்பாளரான தாய்க்கும் இடையே காணப்படும் இடைவெளிகளில் முதன்மையானது குழந்தையின் அதீத ஆர்வத்திற்கும் அதற்குப் பதில் சொல்லும் ஆற்றலின்மைக்குமிடையிலான இடைவெளியேயாகும். அதே போல் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான தொடர்பு நிலை பெரும்பாலும் அடக்கியாளும் பாலுக்கும் அடங்கிப் போகும் பாலுக்கும் இடையிலான தொடர்பாகக் குழந்தையின் தற்கருத்தைப் பாதிக்கும் தொடர்பாக அமைகின்றது. அதேபோல் குழந்தைக்கும் அதன் சக தோழருக்கும் இடையிலான தொடர்பானது குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் மறுக்கப்படும் வாய்ப்பு வசதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக குழந்தையின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தும் தொடர்பாக அமைகின்றது.
தற்போதைய பிரதான பிரச்சினை குழந்தைக்கும் அதன் நேரடித் தொடர்பாளராக இருக்கும் தாய்க்கும் இடையில் நிலவும் இடைவெளியைச் சமநிலைக்கு கொண்டு வருவதேயாகும். கருப்பையில் இருக்கும் 10 மாதங்களும், பின்னுள்ள பாலு}ட்டும் காலத்திலும்தான் குழந்தை வளர்ப்பின் அடிக்கட்டுமானம் போடப்படுகின்றது. உலகமெங்கும் வீசும் பெண்ணிய அலை ஊர்க் கோடிவரை ஊடுருவி விட்ட போதும் இன்று வரை இங்கு குடும்பத்தின் தாங்குது}ண் பெண்தான். பெண்ணின் படிப்பறிவும், பொருளாதார சுதந்திரமும் மிக வேகமாக இரட்டைச்சுமையை பெண்கள் மேல் ஏற்றியிருப்பதே கண்கூடாகப் பார்க்கப்படும் ஒன்று. படிப்பறிவு கூட வாழ்வியல் பட்டறிவுக்கு உதவுவதாக இல்லை. குழந்தையின் துருவி யாராயும் பண்புக்கு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தாயின் அறிவு எட்டிப் பிடிக்கவேண்டும். குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலையும், தேடல்த் தாகத்தையும் கட்டுப்படுத்த பிரயத்தனப்படும் தாய்மாரால் அதிகபட்சம் செய்ய முடிவதெல்லாம் "உம்மாண்டி வருகுது" என்று அச்சமூட்டி அவர்களின் ஆளுமையை இயன்றவகையில் சிதைப்பதே.
இரண்டாம் உலகின் முரண்கள்
குழந்தைக்கும் அதன் இரண்டாவது உலகான பாடசாலைக்கும் இடையிலான உறவுநிலை பெரும்பாலும் அறிந்தவர் அறியாதவர், பெரியவர் சிறியவர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கவென மேல்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை மையக் கல்வித் திட்டங்கள் அதைவிட வேகமாக இங்கு வந்துவிட்டதை மறுக்கமுடியாது. ஆனால் மேலை நாடுகளில் குழந்தைக் கல்வியை வடிவமைப்பவர்களோ நேரடியாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். தமது பட்டறிவை அப்படியே உணர்வும் சதையுமாக ஊட்டுகின்றனர். ஆனால் இங்கோ படிப்பறிவும் பட்டறிவும் சமைக்கப்பட்ட அதிலும் உணவு தயாரிப்பின் அனுபவங்கள், படிப்பினைகள் எதுவுமின்றி சமைக்கப்பட்ட சத்துணவாக சுடச்சுட, அறிவும் அனுபவமும் அற்ற இளைய சமூகத்திற்கு பரிமாறப்பட அது கணநேர சுவையை, மகிழ்வை, உணர்வை மட்டுமே கொடுக்க குழந்தைக் கல்வி பழைய பாதையிலேயே தவழ்கின்றது.
"ஆரம்ப கட்ட போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ வொரு பள்ளிநாள் குறித்தும் மகிழ வேண்டும். ஒவ வொருமுறை ஆசிரியரைச் சந்திக்கும்போதும் சந்தோசப்பட வேண்டும். ஒவ வொரு தடவை பாடத்திற்கு மணி அடிக்கும்போதும் உற்சாகப்பட வேண்டும்", "தமது ஆசிரியர்களுக்குக் கோபம் ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் மறக்கவில்லை" போன்ற அற்புதமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் குழந்தைகள் வாழ்க என்ற நு}லை எழுதிய ரஸ்ய ஆசிரியரான அமனற்வீலி வெறும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் மட்டுமல்ல. இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராசிரியர்.
இத்தனை தகுதிகளுடனும் தனது 15 வருட ஆசிரிய அனுபவத்தின் வழி 6 வயதுக் குழந்தைக்கு படிப்புச் சொல்லித் தருவதற்கான இலகுவான விளக்கங்களை தந்திருக்கும் நு}ல் அது. குழந்தைக் கல்வியை நேரடியாக அங்கு செய்வதே மூளை பழுத்த, தலைநரைத்த மேதைகள்தான் என்பது "இவ வளவு படித்துப்போட்டு அரிவரிக்கோ படிப்பிக்கிறது" என எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு வியப்பாகவும் வினோதமாகவுமே இருக்கும்.
முடிவாக, குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று. இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.
அர்த்தநாரி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழீழத்தில் ஒதுக்கியே வைக்கமுடியாத மாபெரும் சக்தியாக தலைவர் எம்மை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றார். எங்கள் நாட்டை எதிரிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு ஒரு தமிழனால் செய்யக்கூடிய உச்சமான பணிகளில் அவரால் நாம் ஈடுபடுத்தப்பட்டதன்மூலம், எங்களைத் தள்ளிவைத்துவிட்டு யாருமே எதுவுமே செய்ய முடியாத நிலைமை இந்த மண்ணில் தோன்றிவிட்டது.
1993ம் ஆண்டு
அன்று மகளிர்படையணியின் தளபதிகளில் ஒருவருக்குப் பிறந்தநாள். அவர் தலைவரிடம் போனார். அவருக்குத் தனது வாழ்த்துக்களைக் கூறிய தலைவர், அவர் கடைசியாக எப்போது தனது வீட்டுக்குப் போனார் என்று கேட்டார். இந்திய - புலிகள் யுத்தத்துக்கு முன்னர் என்று பதில் வந்தது.
"இண்டைக்கு நீங்கள் உங்கட வீட்டுக்குப் போய் வாங்கோ" என்றார் தலைவர். ஏன் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதற்கு விளக்கமும் சொன்னார்.
குடும்பத்தினருடனான உறவைப் பேணாத ஒரு பொறுப்பாளருடன் இருக்கின்ற போராளிகள் தமது விருப்பங்களை வெளிப்படுத்தாமல், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார்கள். உறவுகளைப் பேணுகின்ற பொறுப்பாளருடன் இருக்கும் போராளிகள் அவரிடம் சுதந்திரமாகத் தமது எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள். பொறுப்பாளர் என்பவர் எப்போதுமே போராளிகள் தமது பிரச்சினைகளை மனம் விட்டுக் கதைக்கக் கூடியவராக இருக்கவேண்டும்.
இதுமட்டுமல்ல ஒரு பொறுப்பாளர் தன்னுடன் உள்ள போராளிகள் எல்லோருக்குமே தாய், தந்தை எல்லாமுமாக இருக்கவேண்டும் என்று தலைவர் வலியுறுத்துவார். அவரிடம் அது இருக்கின்றது. அவரிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு ஏராளம் உண்டு. உறவுகளை விட்டுப்பிரிந்து போராட்டமே வாழ்வு என்று வந்தவர்கள் எல்லோரும் தாயன்பை அவரிடம் கண்டனர்.
முன்னணிக்காவலரண் பகுதிகளில் கவனக்குறைவால் ஏற்படும் இழப்புக்கள் அவரைக் கடுமையான சீற்றத்துக்குள்ளாக்கும். முன்னணியில் நிற்கும் ஒவ்வொரு போராளியிலுமே பொறுப்பாளர்களுக்குக் கவனம் இருக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துவார். பொறுப்பாளராக இருக்கும் ஒவ்வொருவருமே தன்னுடன் உள்ள போராளிகளின் பெறுமதியைப் புரிந்துகொள்ள வேண்டும், ஒவ்வொரு உயிரையும் மதிக்கவேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பார்.
என்ன செய்து, எப்படி நுட்பங்களை புகுத்தி குறைந்தளவு இழப்புக்களுடன் வெற்றியை அடையலாம் என்று இரவு பகலாக யோசித்து அதைப் பொறுப்பாளர்கள், தளபதிகளுக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருப்பார். அதை அவர்கள் சரியான முறையில் நடைமுறைப் படுத்தாமல் கவனக்குறைவாக இருந்து, அதனால் எதிரியிடம் அடி வாங்கிப் போராளிகள் வீரச்சாவடைந்தால், எரிமலையாகவே மாறிவிடுவார். கடமையில் தவறியது எந்தப் பெரிய பொறுப்பாளராக இருந்தாலும் அவர் மிகக் கடுமையாகக் கண்டிப்பார். ஏனெனில் ஒவ வொரு போராளியின் உயிரையுமே அவர் உன்னதமாக மதிக்கிறார். ஆனால் உயிரைவிடவும் உன்னதமானது விடுதலை என்பதாலேயே அவர் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார். ஒவ வொரு போராளியினதும் உணர்வை அவர் மதிக்கிறார். சரியான விடயத்தை சொல்வது ஒரு சாதாரண போராளியாக இருந்தால் கூட அவர் ஏற்றுக் கொள்வார். ஒவ வொரு சாதாரண போராளியிடமும் இருக்கும் திறமைகளை இனங்கண்டு தட்டிக் கொடுத்து அவர்களின் ஆளுமையை வளர்த்து, பொறுப்புக்களை கொடுத்துப் பழக்க வேண்டும் என்று தளபதிகளிடம் சொல்வார்.
பழமைவாத, பிற்போக்குச் சிந்தனைகளற்ற, தேடி ஆராய்ந்து, தெளிந்த முடிவுகளை எடுக்கின்ற முற்போக்கானவர்களாக பெண்களை உருவாக்க வேண்டும் என்பது அவரின் கனவு.
"பெண்களிடம்தான் அதிகளவான மூடக்கொள்கைகளும் பழமைவாதமும் வேரூன்றியிருக்கின்றது. எனவே பெண் போராளிகள் விஞ்ஞானத்தோடு தொடர்புபட்ட பாடங்களை அதிகம் படிக்க வேண்டும். விஞ்ஞான அறிவு மூடத்தனங்களை அகற்றிவிடும்" என்கிறார் அவர்.
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காமல் பயந்து பின்வாங்குவது போன்ற கோழைத்தனமான முடிவுகளை நாம் எடுப்பதை அவர் ஒருபோதுமே ஏற்றுக்கொள்வதில்லை. பெரும் கனவுகளுடன் தான் வளர்க்கின்ற புலிப் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுத் திடீர் முடிவுகள் எடுக்காத, திடமனமுள்ள, பரந்துபட்டபார்வை கொண்ட எல்லோரும் பின்பற்றவல்ல எடுகோள்களாகத் திகழ வேண்டும் என்றெல்லாம் சொல்வார். ரூசூ009;
தற்போதைய நெருக்கடியான சண்டைக் காலத்தில், தான் அருகிலிருக்கும் போதே பெண் போராளிகள் மத்தியில் அனுபவம் மிக்க பல பொறுப்பாளர்களை வளர்த்துவிட வேண்டும் என்ற ஆவலில், எதிரியால் அச்சுறுத்தலுக் குள்ளாக்கப்படும் நெருக்கடியான இடங்களில் கூட பெரும் பணிகளை மிகவும் நம்பிக்கையுடன் பெண் போராளிகளிடம் கொடுத்திருக்கின்றார். அந்த இடங்களில் அவர்களைத் திறம்படச் செயலாற்ற வைக்கவேண்டும் என்ற பொறுப்புணர்வை அந்தப் பெண் போராளிகளின் பொறுப்பாளர்களிடையே து}ண்டிவிடுவார். தான் அவர்களில் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர்களிடமே வெளிப்படுத்தி, அவர்கள் தங்கள் பொறுப்புக்களைத் திறமையாக செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்திவிடுவார்.
ரூசூ009;எமக்கு ஒரு விடயம் தெரியாமல் இருக்கும்வரை, அல்லது எம்மிடம் ஒன்று இல்லாது போனால், அதற்காக நாம் இன்னொருவரில் தங்கி நிற்பது தவிர்க்கமுடியாது போகும். ஆனால் எம்மில் யாருக்குமே அவர் அந்த இக்கட்டான நிலையை ஏற்படுத்தவில்லை. நாம் சிறகுகளை அகல விரித்துப் பறப்பதற்குப் பெரிய பாதைகளைத் திறந்துவிட்டார். இயக்கத்தில் பெண் போராளிகள் இல்லாத பிரிவுகளோ, வேலைகளோ இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்தியதன் மூலம் எம்மை யாரிலும் தங்கி நிற்க வேண்டிய தேவையில்லாமல் நிமிர்ந்து நடக்கப் பண்ணினார். யாருடைய குறுக்கீடுகளுமே இன்றி நாங்கள் மட்டும் முடிவெடுத்து நகர்த்த வேண்டிய வேலைகளைத் தந்தார்.
தமிழீழத்தில் ஒதுக்கியே வைக்கமுடியாத மாபெரும் சக்தியாக தலைவர் எம்மை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றார். எங்கள் நாட்டை எதிரிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு ஒரு தமிழனால் செய்யக்கூடிய உச்சமான பணிகளில் அவரால் நாம் ஈடுபடுத்தப்பட்டதன்மூலம், எங்களைத் தள்ளிவைத்துவிட்டு யாருமே எதுவுமே செய்ய முடியாத நிலைமை இந்த மண்ணில் தோன்றிவிட்டது.
சற்று இருள் கவிந்ததும் வீட்டுக்கு வெளியே வர அஞ்சிய பெண்களிலிருந்து அவர் தேர்ந்தெடுத்த கப்டன் அங்கையற்கண்ணி எதிரியின் காலடிவரை கடலின் அடியால் நீந்திப் போய் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலைத் தகர்த்தார்.
அந்நியப் படையெடுப்புக்கள் நிகழும் போதெல்லாம் பெண்களை அவர்கள் சிறைப்பிடித்த காலம் போய், கற்பிட்டிக் கடற்பரப்பில் லெப். கேணல் நளாயினியும், மேஜர் மங்கையும் தம் உயிரைக் கொடுத்து எதிரிக் கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரியைச் சிறைப்பிடித்தனர்.
தலைவரின் விழிகளில் பிறந்த நெருப்பைச் சுமந்த புயல்கள் பகைவரின் வேலி தாண்டி உள்நுழைந்து அவர்களை உலுப்பிவிட்டுத் திரும்புகின்றனர்.
அன்று கனவுகளாயிருந்தவை இன்று கண்முன்னே மெய்ப்படுகின்றன.
இந்த மாற்றங்களை மாற்றங்கள் இல்லையென்றும், தேவை கருதி ஏற்பட்டது என்றும் எழுதுவோரையும் பேசுவோரையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பறவைகள் தம் குஞ்சுகளுக்குப் பறப்பையும், சிறுத்தைகள் தம் குட்டிகளுக்குப் பாய்ச்சலையும் பழக்கவில்லையெனில், அவை பறவைகளுமல்ல சிறுத்தைகளுமல்ல. ஈவிரக்கமற்ற கொடூரமான இனவாதிகளுக்கு எதிரான போரில் வரலாற்றுத் தலைவனோடு கைகோர்த்து நடக்க வில்லையெனில் நாங்கள் மனிதர்களுமல்ல.
மலைமகள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இண்டைக்கு தேர்த்திருவிழா.
விடிஞ்சதிலையிருந்து இந்தத் தேரைப் பற்றித்தான் ஊருக்குள்ளை கதைக்கினம். எங்கடை மாவடி முருகன் தேர் மாதிரி இந்தத்தேர் கோயில் வீதியிலை மட்டும் சுத்துற தேரில்லையாம்.
இந்தத் தேர் ஊருக்குள்ளை வருமாம். ஒவ வொரு குச்சொழுங்கைக்கையும் வருமாம். எல்லாவற்றை வீட்டுக்கும் வருமாம்.
ஒரு கிழமைக்கு முதலே இந்த தேர்த்திருவிழாக் கொண்டாட்டம் ஊருக்கை கட்டத்தொடங்கிவிட்டது.
எல்லா வீடுகளிலையும் தோரணங்கள் தூங்குது.
தெருவில சிவப்பு மஞ்சள் கொடியள் காத்தில பறக்குது.
சந்தியளில பந்தலுகள் போட்டு பெரிய சத்தத்தில் பாட்டுக்கேட்குது.
எல்லாச் சனமும் குளிச்சு புது உடுப்புப் போட்டுக் கொண்டு தேரைப் பார்க்க தெருவுக்கு போகினம்.
எங்கடை மாவடி முருகன் தேர் மாதிரி இந்தத் தேரும் புனிதமானது தானா. இந்தத் தேருக்கு வடம் பிடிக்கிறவனும் புனிதமானவன் தானாம்.
'கணபதியப்புலு} தேர் பார்க்கவரலையேலு}?' கடைக்கார மணியம் கைமுட்ட சேட்டுப் போட்டுக் கொண்டு பவுடர் புூசி சிரிச்ச முக்தோட என்னைக் கடந்து போறான். வெய்யில் எண்டாலும் வீட்டுக்கை போர்த்துக்கொண்டு கிடக்கிற சோம்பேறி தேர் பார்க்கப்போற அழகைப் பார்க்க எனக்கு சிரிப்பு வருது.
'எடலு} கணபதிலு} என்ன இஞ்சை நிற்கிறாய். தேர் பார்க்க ஆசையில்லையே?'
பால்க்கார சின்னாச்சிக் கிழவி என்னைப் பார்த்துக் கேட்கிறாள்.
பஞ்சுத்தலையை சின்னக் குடும்பியாய் சேத்துக் கட்டிக்கொண்டு கூன் விழுந்த முதுகோடை குனிஞ்சு குனிஞ்சு நடந்தபடி தேர் பாக்கப் போறாள்.
எனக்கும் தேர் பாக்க ஆசைதான். எங்கடை மாவடி முருகன் பச்சை நிறத் தேரிலை ஏறி பச்சை மாலைகளோட பச்சைக் கல் நகையளோடை சுத்தி வாற அழகை பார்த்துப் பாத்து ரசித்தவன் நான். முந்தி எங்கடை முருகன் கோயில் கொடியேறினால் இருபத்தொரு நாளும் மச்சத் தண்ணியை நான் நினைச்சுக் கூட பாக்கமாட்டேன். பட்டு வேட்டி கட்டி பட்டுச் சால்வை சுத்தி பட்டையாய் விபுூதியைப் புூசிக்கொண்டு கோயிலுக்குப் போனால் திருவிழா முடியத்தான் வீட்டை வருவன்.
அப்ப எனக்கு பத்தொன்பது வயதுதான் இருக்கும் கலியாணம் முடிச்ச முதல் வரியம். புதுப்பட்டு வேட்டி சால்வையோடை நான் தேர் பாக்கப் போறன். எனக்குப் பின்னாலை சிவப்புக் கூறைச் சீலையோடை வெக்கப்பட்டுக் கொண்டு பொன்னி, என்ரை மனுசி வாறாள்.
கோயில்லை சனம் நிறைஞ்சு வழியிது மேளங்கள் நாதஸ்வரங்களோடை மாவடி முருகனை தேரில இருத்தினம்.
பச்சை நிறமாய் அலங்கரிச்ச தேரில இருந்த படி பச்சை சாத்தின மாவடி முருகன் என்னைப் பார்த்து சின்னனாய் சிரிக்கிறான்.
எனக்கு மெய் சிலிர்க்குது. கண் சட்டெண்டு கலங்கிப் போகுது. ஒரு நொடி தான்.
வெறி பிடிச்சவனைப் போல நான் தேரை நோக்கி ஓடுறன். வெள்ளம் மாதிரி நீண்ட சனத்தை இடிச்சுக்கொண்டு முன்னாலை போறன்.
மாவடி முருகன் என்னைப் பார்த்து சின்னனாய் சிரிக்கிறான்.
'வாலு} வந்து வடத்தைப் பிடி'
எண்டு சொல்லுற மாதிரி சிரிக்கிறான்.
நான் வேகமாய் நடக்கிறேன். நீண்டுபோன அந்த வடத்தை இறுக்கமாய்ப் பிடிக்கிறன்.
பத்தொன்பது வரியமாய் இந்த வடத்தை பிடிக்கவேணும். எங்கடை மாவடி முருகனை இந்தத் தேரிலை இருத்தி ஊரெல்லாம் இழுக்கவேணும் எண்ட கனவு நிறைவேறிப்போன சந்தோசத்திலை நான் நிமிர்ந்து நிக்கிறேன்.
என்ரை சக்தி எல்லாத்தையும் ஒண்டாய்த் திரட்டி 'அரோ கரா' எண்டு கத்திக்கொண்டு தேரை இழுக்கிறன். தேர் மெல்ல மெல்ல அசைஞ்சு கொண்டு முன்னாலை வருது.
இரண்டு மூன்று நிமிசந்தான் இழுத்திருப்பேன். அடுத்த கணம்.. ஆரோ என்னை இழுக்கிற மாதிரி உணர்வு.
திரும்பினன். கண்கள் சிவக்க மீசை துடிக்க ஆத்திரத்தோடை என்னைப் பாக்கிறார் வேலுப்பிள்ளை.
'எளிய சாதி.. என்ன துணிவிலை வடத்திலைகைவைச்சாய்லு} வாடா இஞ்சாலை'
அவ வளவு சனத்துக்கை நாயை இழுக்கிறமாதிரி என்னை வேலுப்பிள்ளை இழுத்துக் கொண்டு போகிறார்.
பொன்னி பெரிய குரலிலை கத்திக்கொண்டு என்னை வந்து இழுத்துப் பிடிக்கிறாள்.
அண்டைக்கு வீட்டுக்கை போய் விழுந்து விழுந்து குழறியதுக்குப்பிறகு மாவடி முருகனை தேரிலை பாக்க வேணும் எண்ட ஆசை எனக்கு இல்லாமல் போச்சுது.
இண்டைக்கும் தேர்.
ஊரே திரண்டு தேர் பாக்கப்போக நான் பேசாமல் என்ரை வீட்டை போறன். வீட்டுப் படலையோடை பொன்னி நிற்கிறாள். ஒட்டிப் போன உடம்பிலை கிழிசலாய் நைந்து போன சிவப்பு நிற கூறைச் சீலையைக் கட்டிக்கொண்டு என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.
'தேர் பாக்கப் போகேலையே?'
அவளின்ரை கேள்விக்குப் பதில் சொல்லாமல் நான் வீட்டுக்கை நுழையுறன். 'இது எங்கடை மாவடி முருகன் தேர்போல இல்லையாம். வேறு தேராம்.. வெளிக்கிடுங்கோ போய்ப் பார்த்துக் கொண்டு வருவம்'
பழைய பட்டுவேட்டி சால்வையை கையிலை தாறாள் பொன்னி. பொத்தல் விழுந்து கசங்கிப் போனாலும் மினுக்குக் குறையாத அந்தப் பட்டுவேட்டி சால்வையை நான் வெறிச்சுப் பாக்கிறன் திரும்பவும் ஒரு தேர்த்திருவிழாவா? ஐம்பது வரிசத்துக்கு முதல் நடந்ததெல்லாம் நினைவுக்கு வர நான் பொன்னியை நிமிர்ந்து பாக்கிறன்.
'கெதியாய்க் கட்டிக் கொண்டு வாருங்கோவன் தேர்வரப் போகுது'
பொன்னியின்ரை அதட்டலோடை நான் தேர்பாக்க வெளிக்கிடுறன்.
தெரு முழுக்க சனம் நிறைஞ்சு வழ}யுது. எல்லாரும் சந்தோசமாய் சிரிச்சபடி கும்மாளம் போடுகினம். சிறிசுகள் பெரியகுரலிலை ஏதோ பாட்டுக்கள் பாடுகினம்.
கிட்டத்திலை எங்களுக்குப் பக்கத்திலை துவக்குச் சத்தங்கள் படபடவெண்டு கேக்குது.
'தேர் வந்திட்டுதுலு} தேர் வந்திட்டுதுலு}' எல்லாரும் தெருவுக்கு ஓடினம் தள்ளுப்பட்டு நெரிபட்டு கத்திக் குளறிக்கொண்டு தேருக்குக் கிட்டப் போகினம். பொன்னியின்ரை கையைப் பிடிச்சுக்கொண்டு நடக்க சனத்தோடை சனமாய் நானும் தேருக்குக் கிட்டவந்திட்டன்.
என்ரை மனதுக்கை மாவடி முருகன் பச்சைத் தேரிலை ஏறி பச்சை நிற அலங்காரத் தோடை என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.
'அங்கை பாருங்கோவன் தேரின்ரை வடிவைலு}'
பொன்னி வியப்பாய் கத்த நான் தேரை வடிவாய் உத்துப் பாக்கிறன்.
இது தேர்தான் எண்டாலும் மாவடி முருகன் தேர்மாதிரி இஞ்சை மேளங்கள், நாதஸ்வரங்கள் இல்லை துவக்குச் சத்தங்கள் படபடவெண்டு கேக்க. பெரிய எறிகணையள் தொம், தொம் எண்டு வெடிக்க தேர் அலைஞ்சு மெதுவாய் வருது. இந்தத் தேரிலை மாவடி முருகன் இல்லை. ஆனால் தமிழீழத்தின்ரை தேசப்படம் தெரியுது மாவடி முருகன் கோயில் தேர் மாதிரி இதுவும் பச்சைதான்.
சிவப்பு, மஞ்சள் கொடியாலையும் துவக்கு ரவையளாலையும், பெரிய பெரிய ஆயுதங்களாலையும் அலங்கரிச்சு அந்தத் தேர் பளபளவெண்டு மினுங்கிக் கொண்டு முன்னாலை வருது.
மாவடி முருகன் தேரைவிட எவ வளவோ, பிரகாசமாய், என்ரை கண்ணாலை பாக்கேலாத அளவுக்கு வெளிச்சமாய் அந்தத் தேர் அசையுது.
தேருக்கு முன்னால நீண்டு போயிருக்கிற அந்தப் பெரிய வடத்தை பச்சைச் சீருடையும், பச்சைத்தொப்பியும், கறுத்தச் சப்பாத்து, தோளிலை துவக்கும் தூக்கின கனபேர் ஒண்டாய் நிண்டு இழுக்கினம். தெருவிலை பாத்துக்கொண்டு நிக்கிற ஆக்களும் வடத்துக்குக் கிட்டப்போய் அதைத் தொட்டுப் பாக்கினம். சிலபேர் சேர்ந்து இழுக்கினம். என்னை மாதிரி கூன் விழுந்து பல்லுப் போனதுகள் கூட அங்கை இளந்தாரியள் மாதிரி நிண்டுகொண்டு தேரை இழுக்கினம்.
அவையள் இழுக்க இழுக்க மெதுமெதுவாய் அசைஞ்சு வாற அந்ததேரின்ரை அழகிலை நான மெய்மறந்து நிக்கிறன்.
'அங்கைலு} அங்கை பாருங்கோவன் எங்கடை மூத்த பேரன் வடம் பிடிச்சு இழுக்கிறான்' பொன்னி பெரிய சத்தத்திலை சொன்னதைக் கேட்டு நான் திகைச்சுப்போறன்.
'என்ரைபேரனோலு} என்ரை பேரன் வடம்பிடிச்சு இழுக்கிறானோ?'
நான் நம்பாமல் பொன்னியைக் கேக்கிறன்.
'அவன்தான்லு} எங்கடை பேரன்தான்லு} பச்சை உடுப்போடை சிரிச்சுக்கொண்டு தேரிழுக்கிறது எங்கடை பேரன்தான் அங்கை பாருங்கோ.. வடிவாய் உத்துப் பாருங்கோலு}'
பொன்னி காட்டின திசையிலை பாத்து நான் திகைச்சுப் போறன். என்ரை பேரன் நிமிர்ந்து நிக்கிறான். பச்சை உடுப்போடை தோளிலை துவக்கும் தொங்கத் தன்ரைதைரியத்தை எல்லாம் ஒண்டாச் சேத்துக்கொண்டு தேரை இழுக்கிறான்.
ஓலு}. எனக்குக் கண்கள் கலங்குது பச்சை சாத்தின எங்கடை மாவடிமுருகனை தேரிலை இருத்தி வடமிழுத்த மாதிரி எனக்கு உடம்பு சிலிh க்குது.
இந்தச் சனங்களை இடித்துக்கொண்டு ஓடிப்போய் வடம் பிடிச்சிருக்கிற என்ரை பேரன்ரை கையளை கட்டிப்பிடிச்சு கொஞ்ச வேணும் போலை எனக்கு ஆசை வருது. தேருக்கு முன்னாலை வடத்தைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு போற அவன்ரை காலுகளை தொட்டுக் கும்பிட வேணும் போல கிடக்கிறது. இவ வளவு சனத்துக்கையும் அவனைத் தூக்கி தோளிலை இருத்தி 'இவன் என்ரை பேரன்லு} இவன் என்ரை பேரன்லு}' எண்டு கத்தவேணும் போல வெறி வருது.
நான் இருபது வயதுப் பெடியன் மாதிரி துள்ளி குதிக்கிறன். சந்தோசத்தில் கண்ணிலை இருந்து வழியிற கண்ணீரை துடைக்கக் கூட மறந்து.
நான் என்ரை பேரனையே பார்த்துக்கொண்டு நிற்கிறன்.
'இஞ்சாருங்கோலு}'
பொன்னி என்ர காதுக்குள் மெதுவாய் குசுகுசுக்கிறான். 'எங்கடை பேரனோடை வேலுப்பிள்ளையற்றை பேத்தியும் ஒண்டாய் நிண்டல்லே தேர் இழுக்கிறாள். அங்கை பாருங்கோ'
அவள் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போறன்.
என்ரை பேரனோடை வேலுப்பிள்ளையற்றை பேத்தியோ? ஒண்டாய் நிண்டு தேர் இழுக்கிறாளோ?
நான் திடுக்கிட்டுப் போறன் எட்டி நிண்டு உத்துப் பார்க்கிறேன்.
பச்சை உடுப்பும், தோளிலை துவக்குமாய் வேலுப்பிள்ளையற்றை பேத்தி என்ரை பேரனோடை சிரிச்சுச் சிரிச்சு என்னவோ கதைக்கிறாள். அவனும் சிரிச்சுக் கொண்டு அவளோடை சேர்ந்து வடத்தைப் பிடிக்கிறான். இரண்டு பேருமாய் சேந்து இழுக்க தேர் மெல்ல மெல்ல அசையுது.
நான் அமைதியாய் நிற்கிறன். எண்பத்தொன்பது வரியமாய் எனக்குள்ளை அடிச்ச புயல் இண்டைக்கு ஓஞ்ச மாதிரி நான் பேசாமல் நிற்கிறன். 'அங்க வேலுப்பிள்ளையை பாருங்கோ உங்களைத்தான் பாத்துக்கொண்டு நிற்கிறார்'
பொன்னி சொல்ல நான் நிமிர்ந்து பாக்கிறன். தூரத்தில வேலுப்பிள்ளை என்னையே பாத்துக்கொண்டு நிற்கிறார். நானும் வேலுப்பிள்ளை உத்துப் பாக்கிறன்.
தேர் எங்களைக் கடந்து வேகமாய்ப் போகுது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இண்டைக்கு தேர்த்திருவிழா.
விடிஞ்சதிலையிருந்து இந்தத் தேரைப் பற்றித்தான் ஊருக்குள்ளை கதைக்கினம். எங்கடை மாவடி முருகன் தேர் மாதிரி இந்தத்தேர் கோயில் வீதியிலை மட்டும் சுத்துற தேரில்லையாம்.
இந்தத் தேர் ஊருக்குள்ளை வருமாம். ஒவ வொரு குச்சொழுங்கைக்கையும் வருமாம். எல்லாவற்றை வீட்டுக்கும் வருமாம்.
ஒரு கிழமைக்கு முதலே இந்த தேர்த்திருவிழாக் கொண்டாட்டம் ஊருக்கை கட்டத்தொடங்கிவிட்டது.
எல்லா வீடுகளிலையும் தோரணங்கள் தூங்குது.
தெருவில சிவப்பு மஞ்சள் கொடியள் காத்தில பறக்குது.
சந்தியளில பந்தலுகள் போட்டு பெரிய சத்தத்தில் பாட்டுக்கேட்குது.
எல்லாச் சனமும் குளிச்சு புது உடுப்புப் போட்டுக் கொண்டு தேரைப் பார்க்க தெருவுக்கு போகினம்.
எங்கடை மாவடி முருகன் தேர் மாதிரி இந்தத் தேரும் புனிதமானது தானா. இந்தத் தேருக்கு வடம் பிடிக்கிறவனும் புனிதமானவன் தானாம்.
'கணபதியப்புலு} தேர் பார்க்கவரலையேலு}?' கடைக்கார மணியம் கைமுட்ட சேட்டுப் போட்டுக் கொண்டு பவுடர் புூசி சிரிச்ச முக்தோட என்னைக் கடந்து போறான். வெய்யில் எண்டாலும் வீட்டுக்கை போர்த்துக்கொண்டு கிடக்கிற சோம்பேறி தேர் பார்க்கப்போற அழகைப் பார்க்க எனக்கு சிரிப்பு வருது.
'எடலு} கணபதிலு} என்ன இஞ்சை நிற்கிறாய். தேர் பார்க்க ஆசையில்லையே?'
பால்க்கார சின்னாச்சிக் கிழவி என்னைப் பார்த்துக் கேட்கிறாள்.
பஞ்சுத்தலையை சின்னக் குடும்பியாய் சேத்துக் கட்டிக்கொண்டு கூன் விழுந்த முதுகோடை குனிஞ்சு குனிஞ்சு நடந்தபடி தேர் பாக்கப் போறாள்.
எனக்கும் தேர் பாக்க ஆசைதான். எங்கடை மாவடி முருகன் பச்சை நிறத் தேரிலை ஏறி பச்சை மாலைகளோட பச்சைக் கல் நகையளோடை சுத்தி வாற அழகை பார்த்துப் பாத்து ரசித்தவன் நான். முந்தி எங்கடை முருகன் கோயில் கொடியேறினால் இருபத்தொரு நாளும் மச்சத் தண்ணியை நான் நினைச்சுக் கூட பாக்கமாட்டேன். பட்டு வேட்டி கட்டி பட்டுச் சால்வை சுத்தி பட்டையாய் விபுூதியைப் புூசிக்கொண்டு கோயிலுக்குப் போனால் திருவிழா முடியத்தான் வீட்டை வருவன்.
அப்ப எனக்கு பத்தொன்பது வயதுதான் இருக்கும் கலியாணம் முடிச்ச முதல் வரியம். புதுப்பட்டு வேட்டி சால்வையோடை நான் தேர் பாக்கப் போறன். எனக்குப் பின்னாலை சிவப்புக் கூறைச் சீலையோடை வெக்கப்பட்டுக் கொண்டு பொன்னி, என்ரை மனுசி வாறாள்.
கோயில்லை சனம் நிறைஞ்சு வழியிது மேளங்கள் நாதஸ்வரங்களோடை மாவடி முருகனை தேரில இருத்தினம்.
பச்சை நிறமாய் அலங்கரிச்ச தேரில இருந்த படி பச்சை சாத்தின மாவடி முருகன் என்னைப் பார்த்து சின்னனாய் சிரிக்கிறான்.
எனக்கு மெய் சிலிர்க்குது. கண் சட்டெண்டு கலங்கிப் போகுது. ஒரு நொடி தான்.
வெறி பிடிச்சவனைப் போல நான் தேரை நோக்கி ஓடுறன். வெள்ளம் மாதிரி நீண்ட சனத்தை இடிச்சுக்கொண்டு முன்னாலை போறன்.
மாவடி முருகன் என்னைப் பார்த்து சின்னனாய் சிரிக்கிறான்.
'வாலு} வந்து வடத்தைப் பிடி'
எண்டு சொல்லுற மாதிரி சிரிக்கிறான்.
நான் வேகமாய் நடக்கிறேன். நீண்டுபோன அந்த வடத்தை இறுக்கமாய்ப் பிடிக்கிறன்.
பத்தொன்பது வரியமாய் இந்த வடத்தை பிடிக்கவேணும். எங்கடை மாவடி முருகனை இந்தத் தேரிலை இருத்தி ஊரெல்லாம் இழுக்கவேணும் எண்ட கனவு நிறைவேறிப்போன சந்தோசத்திலை நான் நிமிர்ந்து நிக்கிறேன்.
என்ரை சக்தி எல்லாத்தையும் ஒண்டாய்த் திரட்டி 'அரோ கரா' எண்டு கத்திக்கொண்டு தேரை இழுக்கிறன். தேர் மெல்ல மெல்ல அசைஞ்சு கொண்டு முன்னாலை வருது.
இரண்டு மூன்று நிமிசந்தான் இழுத்திருப்பேன். அடுத்த கணம்.. ஆரோ என்னை இழுக்கிற மாதிரி உணர்வு.
திரும்பினன். கண்கள் சிவக்க மீசை துடிக்க ஆத்திரத்தோடை என்னைப் பாக்கிறார் வேலுப்பிள்ளை.
'எளிய சாதி.. என்ன துணிவிலை வடத்திலைகைவைச்சாய்லு} வாடா இஞ்சாலை'
அவ வளவு சனத்துக்கை நாயை இழுக்கிறமாதிரி என்னை வேலுப்பிள்ளை இழுத்துக் கொண்டு போகிறார்.
பொன்னி பெரிய குரலிலை கத்திக்கொண்டு என்னை வந்து இழுத்துப் பிடிக்கிறாள்.
அண்டைக்கு வீட்டுக்கை போய் விழுந்து விழுந்து குழறியதுக்குப்பிறகு மாவடி முருகனை தேரிலை பாக்க வேணும் எண்ட ஆசை எனக்கு இல்லாமல் போச்சுது.
இண்டைக்கும் தேர்.
ஊரே திரண்டு தேர் பாக்கப்போக நான் பேசாமல் என்ரை வீட்டை போறன். வீட்டுப் படலையோடை பொன்னி நிற்கிறாள். ஒட்டிப் போன உடம்பிலை கிழிசலாய் நைந்து போன சிவப்பு நிற கூறைச் சீலையைக் கட்டிக்கொண்டு என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.
'தேர் பாக்கப் போகேலையே?'
அவளின்ரை கேள்விக்குப் பதில் சொல்லாமல் நான் வீட்டுக்கை நுழையுறன். 'இது எங்கடை மாவடி முருகன் தேர்போல இல்லையாம். வேறு தேராம்.. வெளிக்கிடுங்கோ போய்ப் பார்த்துக் கொண்டு வருவம்'
பழைய பட்டுவேட்டி சால்வையை கையிலை தாறாள் பொன்னி. பொத்தல் விழுந்து கசங்கிப் போனாலும் மினுக்குக் குறையாத அந்தப் பட்டுவேட்டி சால்வையை நான் வெறிச்சுப் பாக்கிறன் திரும்பவும் ஒரு தேர்த்திருவிழாவா? ஐம்பது வரிசத்துக்கு முதல் நடந்ததெல்லாம் நினைவுக்கு வர நான் பொன்னியை நிமிர்ந்து பாக்கிறன்.
'கெதியாய்க் கட்டிக் கொண்டு வாருங்கோவன் தேர்வரப் போகுது'
பொன்னியின்ரை அதட்டலோடை நான் தேர்பாக்க வெளிக்கிடுறன்.
தெரு முழுக்க சனம் நிறைஞ்சு வழ}யுது. எல்லாரும் சந்தோசமாய் சிரிச்சபடி கும்மாளம் போடுகினம். சிறிசுகள் பெரியகுரலிலை ஏதோ பாட்டுக்கள் பாடுகினம்.
கிட்டத்திலை எங்களுக்குப் பக்கத்திலை துவக்குச் சத்தங்கள் படபடவெண்டு கேக்குது.
'தேர் வந்திட்டுதுலு} தேர் வந்திட்டுதுலு}' எல்லாரும் தெருவுக்கு ஓடினம் தள்ளுப்பட்டு நெரிபட்டு கத்திக் குளறிக்கொண்டு தேருக்குக் கிட்டப் போகினம். பொன்னியின்ரை கையைப் பிடிச்சுக்கொண்டு நடக்க சனத்தோடை சனமாய் நானும் தேருக்குக் கிட்டவந்திட்டன்.
என்ரை மனதுக்கை மாவடி முருகன் பச்சைத் தேரிலை ஏறி பச்சை நிற அலங்காரத் தோடை என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.
'அங்கை பாருங்கோவன் தேரின்ரை வடிவைலு}'
பொன்னி வியப்பாய் கத்த நான் தேரை வடிவாய் உத்துப் பாக்கிறன்.
இது தேர்தான் எண்டாலும் மாவடி முருகன் தேர்மாதிரி இஞ்சை மேளங்கள், நாதஸ்வரங்கள் இல்லை துவக்குச் சத்தங்கள் படபடவெண்டு கேக்க. பெரிய எறிகணையள் தொம், தொம் எண்டு வெடிக்க தேர் அலைஞ்சு மெதுவாய் வருது. இந்தத் தேரிலை மாவடி முருகன் இல்லை. ஆனால் தமிழீழத்தின்ரை தேசப்படம் தெரியுது மாவடி முருகன் கோயில் தேர் மாதிரி இதுவும் பச்சைதான்.
சிவப்பு, மஞ்சள் கொடியாலையும் துவக்கு ரவையளாலையும், பெரிய பெரிய ஆயுதங்களாலையும் அலங்கரிச்சு அந்தத் தேர் பளபளவெண்டு மினுங்கிக் கொண்டு முன்னாலை வருது.
மாவடி முருகன் தேரைவிட எவ வளவோ, பிரகாசமாய், என்ரை கண்ணாலை பாக்கேலாத அளவுக்கு வெளிச்சமாய் அந்தத் தேர் அசையுது.
தேருக்கு முன்னால நீண்டு போயிருக்கிற அந்தப் பெரிய வடத்தை பச்சைச் சீருடையும், பச்சைத்தொப்பியும், கறுத்தச் சப்பாத்து, தோளிலை துவக்கும் தூக்கின கனபேர் ஒண்டாய் நிண்டு இழுக்கினம். தெருவிலை பாத்துக்கொண்டு நிக்கிற ஆக்களும் வடத்துக்குக் கிட்டப்போய் அதைத் தொட்டுப் பாக்கினம். சிலபேர் சேர்ந்து இழுக்கினம். என்னை மாதிரி கூன் விழுந்து பல்லுப் போனதுகள் கூட அங்கை இளந்தாரியள் மாதிரி நிண்டுகொண்டு தேரை இழுக்கினம்.
அவையள் இழுக்க இழுக்க மெதுமெதுவாய் அசைஞ்சு வாற அந்ததேரின்ரை அழகிலை நான மெய்மறந்து நிக்கிறன்.
'அங்கைலு} அங்கை பாருங்கோவன் எங்கடை மூத்த பேரன் வடம் பிடிச்சு இழுக்கிறான்' பொன்னி பெரிய சத்தத்திலை சொன்னதைக் கேட்டு நான் திகைச்சுப்போறன்.
'என்ரைபேரனோலு} என்ரை பேரன் வடம்பிடிச்சு இழுக்கிறானோ?'
நான் நம்பாமல் பொன்னியைக் கேக்கிறன்.
'அவன்தான்லு} எங்கடை பேரன்தான்லு} பச்சை உடுப்போடை சிரிச்சுக்கொண்டு தேரிழுக்கிறது எங்கடை பேரன்தான் அங்கை பாருங்கோ.. வடிவாய் உத்துப் பாருங்கோலு}'
பொன்னி காட்டின திசையிலை பாத்து நான் திகைச்சுப் போறன். என்ரை பேரன் நிமிர்ந்து நிக்கிறான். பச்சை உடுப்போடை தோளிலை துவக்கும் தொங்கத் தன்ரைதைரியத்தை எல்லாம் ஒண்டாச் சேத்துக்கொண்டு தேரை இழுக்கிறான்.
ஓலு}. எனக்குக் கண்கள் கலங்குது பச்சை சாத்தின எங்கடை மாவடிமுருகனை தேரிலை இருத்தி வடமிழுத்த மாதிரி எனக்கு உடம்பு சிலிh க்குது.
இந்தச் சனங்களை இடித்துக்கொண்டு ஓடிப்போய் வடம் பிடிச்சிருக்கிற என்ரை பேரன்ரை கையளை கட்டிப்பிடிச்சு கொஞ்ச வேணும் போலை எனக்கு ஆசை வருது. தேருக்கு முன்னாலை வடத்தைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு போற அவன்ரை காலுகளை தொட்டுக் கும்பிட வேணும் போல கிடக்கிறது. இவ வளவு சனத்துக்கையும் அவனைத் தூக்கி தோளிலை இருத்தி 'இவன் என்ரை பேரன்லு} இவன் என்ரை பேரன்லு}' எண்டு கத்தவேணும் போல வெறி வருது.
நான் இருபது வயதுப் பெடியன் மாதிரி துள்ளி குதிக்கிறன். சந்தோசத்தில் கண்ணிலை இருந்து வழியிற கண்ணீரை துடைக்கக் கூட மறந்து.
நான் என்ரை பேரனையே பார்த்துக்கொண்டு நிற்கிறன்.
'இஞ்சாருங்கோலு}'
பொன்னி என்ர காதுக்குள் மெதுவாய் குசுகுசுக்கிறான். 'எங்கடை பேரனோடை வேலுப்பிள்ளையற்றை பேத்தியும் ஒண்டாய் நிண்டல்லே தேர் இழுக்கிறாள். அங்கை பாருங்கோ'
அவள் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போறன்.
என்ரை பேரனோடை வேலுப்பிள்ளையற்றை பேத்தியோ? ஒண்டாய் நிண்டு தேர் இழுக்கிறாளோ?
நான் திடுக்கிட்டுப் போறன் எட்டி நிண்டு உத்துப் பார்க்கிறேன்.
பச்சை உடுப்பும், தோளிலை துவக்குமாய் வேலுப்பிள்ளையற்றை பேத்தி என்ரை பேரனோடை சிரிச்சுச் சிரிச்சு என்னவோ கதைக்கிறாள். அவனும் சிரிச்சுக் கொண்டு அவளோடை சேர்ந்து வடத்தைப் பிடிக்கிறான். இரண்டு பேருமாய் சேந்து இழுக்க தேர் மெல்ல மெல்ல அசையுது.
நான் அமைதியாய் நிற்கிறன். எண்பத்தொன்பது வரியமாய் எனக்குள்ளை அடிச்ச புயல் இண்டைக்கு ஓஞ்ச மாதிரி நான் பேசாமல் நிற்கிறன். 'அங்க வேலுப்பிள்ளையை பாருங்கோ உங்களைத்தான் பாத்துக்கொண்டு நிற்கிறார்'
பொன்னி சொல்ல நான் நிமிர்ந்து பாக்கிறன். தூரத்தில வேலுப்பிள்ளை என்னையே பாத்துக்கொண்டு நிற்கிறார். நானும் வேலுப்பிள்ளை உத்துப் பாக்கிறன்.
தேர் எங்களைக் கடந்து வேகமாய்ப் போகுது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஓரம் கிழிந்தும்,
கனநாளாய் தோய்க்காமலும்
தன் தலையில் சுற்றியிருந்த துவாயால், முகத்தில் முத்து முத்தாக கொப்பளித்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு பாதையை மீண்டும் பார்த்தான் முனுசாமி. அவன் பார்க்குந் திசையில் புூவரசு செழித்து கன்னங்கரேலென்று அடர்த்தியாக வேலி நீட்டுக்கும் இருந்தது
அது அரிவு வெட்டுக் காலம். மூன்றாம் வாய்க்கால. ராமநாதன் கமத்தில் கூலிக்கு உழைத்து மிகவும் கருகலில் தான் மாரியாயி வீட்டுக்கு வருவாள். அப்படி வந்த நாளில்
ஒரு நாள் மாரியாயியை வெகு
நேரமாகக் காணவில்லை என்று
முனுசாமி அயலவரின் உதவியுடன் தேடிச் சென்ற போது. வழியில் அவளது பை
சிதறிக் கிடந்தது. அதற்குள் குழந்தைக்கு ஒரு லெக்ரோஜன் மாப்பெட்டி.
அரிசி, மரக்கறி, என்பன கொட்டிக்கிடந்தன. அவளது சேலைத் தலைப்பு வீதியோரத்தில் கிழிந்து தொங்கியது அருகிலுள்ள
பற்றைக்குள் அவள் கிடந்தாள்.
வாயில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. முன்னுசாமி கட்டியணைத்துக் கதறினான். வைத்தியசாலையில் அவள் பேசவில்லை. கைளால்தான்
நான்கு பிள்ளைகள் என
சைகைகாட்டினாள். அவளது கதை முடிந்தது. கைக்குழந்தைக்குப்
பாலூட்ட ஓடோடி வந்த
அவளை அலியன் யானை
புகையழிரத
வீதிக்கருகில்
வைத்து
தாக்கி ஏறிந்து
விட்டது.
கிக்கிகீ... கிக்கிகீ.... ஆட்காட்டியின் அபய ஒலி கேட்டு சடாரென தலையை நிமிர்த்தினான் முனுசாமி, வியப்போடு, 'ம்லு} என்னாலு}.? யாரையோ கண்டிரிச்சி போளுக்கு' அவனது மனம் கூற மெதுவாக வலதுகாலை எடுத்து தொட்டாவாடிப் பற்றையை மிதித்து மண்வெட்டியை ஒரு கையில் ஊன்றி சற்றுத் தொலைவில் கறையான் அரித்தும் அரிக்காமலும் பாட்டில் கிடந்த பென்னாம் பெரிய தென்னங்குற்றியில் ஏறி, அந்த வளவுக்கு வரும் ஒழுங்கையை நோக்கினான்.
'ங்லு} ஒருத்திரியு கானோ ஆக்காட்டி கத்திச்சி!' ஓரம் கிழிந்தும், கனநாளாய் தோய்க்காமலும் தன் தலையில் சுற்றியிருந்த துவாயால், முகத்தில் முத்து முத்தாக கொப்பளித்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு பாதையை மீண்டும் பார்த்தான் முனுசாமி. அவன் பார்க்குந் திசையில் புூவரசு செழித்து கன்னங்கரேலென்று அடர்த்தியாக வேலி நீட்டுக்கும் இருந்தது. மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த முனுசாமி, நேரத்தை எண்ணினான். மதியம் பதினொருமணிக்குக் கிட்ட இருக்குமென அவனது மனஞ்சொல்ல, ஏறிநின்ற குற்றியில் அமர்ந்தான் அவன்.
லக்ஸ்ப்பிறேப்பையில் சுற்றிவைத்திருந்த வெற்றிலையை, கையை உள்ளேவிட்டு எடுத்து விரித்தான். நடுவிலிருந்த சுண்ணாம்புக்களியை ஒரு வெற்றிலையின் பின்பக்கத்தில் தடவி, பையுள் இருந்த தூள்ப்பாக்கையும் கோலி வெற்றிலையில் வைத்து மடித்தான்.
கீக்கீலு} கீக்கீலு} ஆட்காட்டி மீண்டும் அலறியதுலு} வானளாவப் பறந்தவாறே. சிறிது நேரத்தில் 'டொக்லு} டொக்' என்று அயல் பற்றைக்கு அப்பால் யாரோ பச்சைமரம் ஒன்றை கோடரியால் கொத்துவது அவனது காதில் விழுந்தது. முனுசாமி ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டுக் கொண்டான். அவன் நிற்பது இவனுக்கோ, இவன் நிற்பது அவனுக்கோ தெரியவில்லை. மரத்தை விட்டு நிலத்தில் காலை வைத்து மெதுவாக இறங்கி மீண்டும் மண்வெட்டியால் தொட்டாவாடிப் பற்றையை கொத்தினான். தொட்டாவாடி, நாயுண்ணி, சூரை, நாயுருவி அடர்ந்திருந்தது. ஒரு அடிக்கு அப்பால் எதுவுமே தெரியவில்லை.
முனுசாமிக்கு கிணற்றடிக்குச் செல்வதே இலக்காகவிருந்தது. ஒரு குறிப்பில் வேகமாக மண்வெட்டியைப் போட்டான். 'இன்னிக்கு எப்புடியுலு} கெனத்த கண்டுபிடிக்கிறது தான்' நேற்றும் வேலை செய்து முந்தி வீடிருந்த பகுதியெல்லாம் துப்பரவு செய்துவிட்டான். இன்றும் வேலை செய்து கொண்டே இருக்கிறான் வயிறு புகைந்தது.
அந்தப் பகுதி எங்கும் ஆளரவமின்றி நிசப்தமாக இருந்தது. ஒரு நாயின் குரைப்போ, ஒரு மனிதனின் குரலோ அவனது காதில் இன்னமும் விழவில்லை. 'ஒரு அஞ்சி வருசத்தில் இம்புட்டுக் காடப்போச்சே' அவனுக்கு ஒரே ஆச்சரியமாய் இருந்தது. அவனது மண்வெட்டி சளார் என ஒரு கல்லில் பட்டது. நெருப்புப்பொறி பறந்தது. 'ம்லு} கெனத்துக்கு கிட்ட கெடந்த கல்லுதாலு}ன் கெனோ ஒரு பத்து பாகத்தில இருக்கு.. அப்பாடா' மனதுக்கு திருப்தியாக இருந்தது.
1980 ஆம் ஆண்டு கட்டிய கிணறு அது. அவன் தன்னையறியாமலேயே நிசப்தமாகி நின்று போனான். 1977ம் ஆண்டு இனக் கலவரத்தில் வந்தவன் முனுசாமி. நான்கு பிள்ளைகளின் தகப்பன். இரண்டு பெண்பிள்ளை, இரண்டு ஆண் பிள்ளைகள். கடைசிப் பையன் கைக்குழந்தையாய் இருக்கும்போது உடுத்த உடுப்போடு வந்து சேர்ந்தவன் முனுசாமி. மனைவி மாரியாயி பாலூட்டும்தாய். ஈவிரக்கமற்ற அந்த இனக்கலவரம் அவர்களை காலியிலுள்ள நாகாவத்தையிலிருந்து இங்கு வரப்பண்ணியது.
நாகாவத்தை அவன் பிறந்த அழகான தோட்டம். தேயிலையும், றபரும் உண்டு. பனியோ மழையோ கடுமையாகத்தாக்காத அழகான மலை முகட்டைக் கொண்டபகுதி. அவன் அங்குள்ள மேட்டு லயத்திலுள்ள ஆறாவது காம்பறாவில் பிறந்தான். அது சிங்கள முதலாளிக்குச் சொந்தமானதாக இருந்தது. சின்னப் பையனாக அவனிருந்தபோது லயத்துத் திண்ணையில் மாடாச்சாமியிடம் அரிவரிபடித்தவன் முனுசாமி. அவன் சிறுவனாக இருந்தபோது தோட்டத்துப் பிள்ளைகள் படிக்கவென்று ஒருசிறு பள்ளிக்கூடங்கூட இருக்கவில்லை.
தோட்டத்தில் கொஞ்சம் எழுத வாசிக்கக்கூடியவர்களைக்கொண்டு அங்கிருந்த சிறார்கள் எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டார்கள்.
தான் குழந்தையாக இருந்த வேளை தனது தாய், தன்னை பிள்ளைமடுவத்தில் விட்டுச் சென்றது, சற்று வளர்ந்தபின் தன்னந்தனியே லயத்துப் பிள்ளைகளோடு விளையாடிக் காலங்கழித்ததையும் அவன் நினைத்தான்.
'ஐயோலு} சங்கூதப்போராங்க எந்திhPங்க நாலு} வேலைக்கு போறதில்லியாலு} றொட்டி சுட்டு வைச்சிருக்கேலு} எடுத்துசாப்பிடுங்கலு}?'
ஒவ வொரு தாயும் அதிகாலையில் இப்படித்தான் பதட்டப்படுவாள், லயத்தில்.
'சின்னாத்தா பாட்டியோட இருய்யா' வறக்கட்டுக்கு போய் விழுந்திராத சாமிலு}' சின்னாத்தாக்கிழவியோடு அவன் மட்டுமல்ல மற்றச் சிறார்களும் இருப்பார்கள்.
அவன்படிக்க பாடசாலை இல்லாது இளமைக்காலம் கருகி அழிந்தது. மதியம் ஒரு மணித்தியாலம் சாப்பிடவரும் பெற்றோரின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் எல்லாக் குழந்தைகளும் குறுக்குப் பாதையை பார்த்திருப்பர் முனுசாமிக்குப் பத்துவயதாகியபோது தாயுடனும் தகப்பனுடனும் 'கொந்தரப்பு' வெட்ட சின்னச் 'சொறண்டி'யுங்கொண்டு மலைக்குப் போவான். அது அவனது தொழிலுக்கான முன்பயிற்சியாயமைந்தது.
முனுசாமிக்கு பத்தொன்பது வயதில் அத்தை மகளான மாரியாயியை கலியாணம் செய்து வைத்தார்கள். 'அகம் படியர்' எனத் தம்மை கூறிக்கொண்ட அவனது பெற்றோர் மற்றய சாதிக்காரர்களை தீண்டத் தகாதவர்களாக வைத்திருந்தனர். முனுசாமியின் தந்தை சாதிகுறைஞ்ச சுக்குரன். உயர் சாதிப்பெண்ணான ஈசுவரியை கேலி பண்ணியதுக்காக அவனை வீடு புூந்து அடித்தவர். சாதி குறைந்தவர்களை திண்ணையில் வைத்துத்தான் கதைப்பார்கள். சிரட்டையில் தேநீர் கொடுப்பாள் முனுசாமியின் தாய் என அவன் சொல்லுவதுண்டு.
என்றாலும் அந்த இனிமையான நாட்கள் நினைக்க, நினைக்க சுகமாக இருந்தது அவனுக்கு. கலியாணத்துக்கு முதல் 'தள்கஸ்வல' தோட்டத்தில் இருந்த மாமன் மகள்லு}
மாரியாயியைப் பார்க்க பின்நேர பஸ் எடுத்துப்போவான் போகும்போது புூள்தோசி கிதுள்பெனி எலப்ப போன்ற சிங்களவர்களின் பலகாரங்களை வாங்கிக்கொண்டுதான் போவான். அவனின் வரவுக்கு காத்திருப்பாள் மாரியாயி. அவளும் ஞாயிற்றுக் கிழமை என்றால் விசேடமான சாப்பாடுகள் செய்துவைப்பாள். தாவணிப் பெண்ணாக இருந்த மாரியாயி தோட்டத்தில் வேலைக்குப் போவதில்லை. ஒரேயொரு பிள்ளை என்பதால் தகப்பன் கந்தையா அவளைச் செல்லமாக வைத்திருந்தார்.
'இன்னிக்கி நாயித்திக் கெலம, எப்படியு மச்சா வருவாரு' யெம்மோ.. யெம்மாலு} வரிக்காங் ஒன்னு புடுங்குங்க கறிவெம்ம்' தாயிடம் கூறுவாள்.
தனது வருங்கால கணவனை உபசரிக்க எப்போதும் விழிப்பாகவே இருப்பாள். பெற்றோரும் அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பர்.
முனுசாமியின் இளமைக்காலம், அவனது கண்ணில் நிழலாடியது. 'ம் யாருக்குத் தான் இளமை கசக்கும், வறும எவ வளவு தான் இருந்தாலும் பயங்கரமானதா இருந்தாலும் இளமை இனிமையானதுதான்'
கலியாணம் நடந்து மூத்தவன் ராஜேஸ் பிறந்த பிறகு முனுசாமியின் தகப்பன் மாயழகு பார்த்து வந்த கங்காணி வேலை முனுசாமிக்குக் கிடைத்தது. கொஞ்சநாளில் மாயழகு செத்துவிட்டார். அன்று அந்த மேட்டு லயம், பணியலயம், நடுலயம் எல்லாமே சோகத்தில் மூழ்கி விட்டது.
மாயழகு அந்தத் தோட்டத்தில் ஏறத்தாழ ஐம்பது வருடம் வாழ்ந்தவர். தோட்டத்து துரை 'சொவிசா' வந்து அஞ்சலி செய்துவிட்டுப் போனார். அயலில் சிங்களக்கிராமத்து மக்கள் அங்கு நிறைந்துவிட்டார்கள். சிலர் அழுதே விட்டார்கள்.
'கங்காணம, கங்காணமலு}' என்று வானை முட்டும் அழுகை ஒலி அனைவரையும் ஆச்சரியப்படவே வைத்தது. நீண்ட காலம் அந்த ஊரில் வாழ்ந்த படியால் மாயழகு அழகாக சிங்களம் பேசுவார். சிங்களவர்களின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுப்பார். அதனால் உறவை வளர்த்து வைத்திருந்தார்.
பற்றைக்குள் இருந்த கட்டெறும்பு ஒன்று சுhPர் என கடித்துவிட முனுசாமி தன் நிலைக்கு வருகிறான். கண்களிரண்டும் கண்ணீர் ஓடிச்சிவந்திருந்தன. அவனால் தொடர்ந்தும் வேலை செய்ய முடியவில்லை. அருகே நின்ற வேம்பின் நிழல் மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருந்தது. அவன் வேப்ப மரத்தடிக்குச் சென்று அமர்ந்து கொண்டு 'ரியுப்பில்' வைத்திருந்த தண்ணீரை மள, மள வென்று பருகி தனது துவாயை தரையில் விரித்துப் படுத்துக்கொண்டான்.
இதமாக காற்று வந்து அவனை வருடிச் செல்ல வேப்பமரத்தின் இலைகள் காற்றுக்கு ஆடின. கண்களை மூடிக்கொண்டான் முனுசாமி.
லொக்கு மாத்தியா கடயில் இலயாப்பம் உண்டது, கொண்டகெவுங் உண்டது. வெரலிக்காய் மரத்தடியில் பொறுக்கிச் சுவைத்தது. ஒவ வொரு ஞாயிறும் 'வந்துறம்பை' யில் சந்தைக்குப் போகும் போது மனைவியுடன் குதூகலமாகப் போய் அப்புகாமி கடையில் தேநீர் குடிக்கும்போது 'களுதொதல்' உண்டது. எல்லாவற்றிலும் எருமைத்தயிர் முட்டிகளில் வேண்டி வருவது நினைக்க வாயுூறிவிட்டது அவனுக்கு. மனைவியின் ஆசைக்காக திருமணம் முடித்த புதிதில் றம்புட்டான். எள்ளுப்பாகு இன்னும் பலவற்றை அவளுக்கு ஆகுதியாக்கியதென்றே அவன் எண்ணி மகிழ்ந்தான்.
நெல்லு விளைந்தவுடன் ஒரு 'உமலில்' பச்சை அரிசி கொண்டு சிங்களப் பெண்கள் வயத்துக்கு வருவார்கள். அதை வேண்டுவது, அவர்களுக்கு அரிசி மடுவத்தில் வழங்கப்படும் மாசி செமன்ரின், பம்பாய் வெங்காயம் என்பவற்றை கொடுப்பது. அவனது நினைவுகளைக் கவித்திருந்தது. கடைக் கண்களில் வழிந்தோடிய நீர் காய்ந்திருந்தது. 'ம் இனி அந்தக் காலம் வருமா.. அந்த அழகான தோட்டக் காட்டில், அட்டை ஒரு புறம் கடித்து ரத்தத்தை உறிஞ்சிச்சி, பெரகு தொறமாரு குடிச்சாங்க, இருந்தாலும் எனக்கு அது சுகமாத்தான் இருக்கு இப்ப நெனைக்கயிலயும்'
அவன் நிதானமாகவே சிந்தித்தான்.
'மண்ணாச பிடிச்ச சிங்களமே நம்ம தமிழ் சனத்த ஒப்பந்தம் ஒப்பந்தம் பெரசா உறுமன்னு ஏமாத்தி ஈந்தியாவுக்கு அனுப்பிட்டான் இல்லாட்டி எம்புட்டுச்சனோ இன்னிக்கி இருந்திருக்கும்லு} எலங்கேல'
'எங்கப்பா கட்டின மாரியம்மன் கோயில் அப்பா, கங்காணியாய் இருக்கயில வெள்ளில புூச நடக்கும், பொங்கச் சோறு தருவாரு பொன்னையா புூசாரி, அடிப்பட்டுச் சாப்பிடுவோ பொங்கசோறு. லயத்தில் உள்ள பத்துக் காம்புறாவுக்கும், அப்பா பொங்கசோறு அனுப்புவாரு. எங்கவீட்டு பெரிய பசுமாட்டில பால் எடுத்து மேசை மேல பெரிய பேசனில வெச்சி அளந்து குடுப்பாரு'
அவனது மூக்கு அடைத்தது. ஒருக்களித்துப்படுத்தான் முனுசாமி. முதுகு சில்லென்று குளிh ந்தது வியர்வையில். முனுசாமி, முதுகு சில்லென்று குளிர்ந்தது வியர்வையில். முனுசாமிக்கு இப்ப ஐம்பத்தி ஆறு வயதாகிவிட்டது. ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் முன்தொட்டு அங்கிருந்து புறப்படும் வரை, அவனது நினைவுத் திரையில் சஞ்சரித்தன. அவை சுகமாகவும் சுமையாகவும் மாறிமாறி அவனைத் திணற வைத்தது.
'இம்புட்டு வயது போயும் ஏந்தல நறைக்கல ஏங் அம்மா தந்த சாப்பாடு அவங்கவுூட்டு வளப்பு. தலயில நா அந்தக் காலத்தில சவுக்காரோ புூசுறதே இல்ல.. இப்பதாலு}ன் யாரு நமக்கு அரைச்சி குளிப்பாட்ட?' ஒரு துளிகண்ணீர் நிலத்தில் விழுந்து பட்டெனக் காய்ந்தது. தாயின் நினைவுகளால் நெஞ்சம் கனத்தது.
'ம் சரி போவட்டு எனக்கு மட்டுமா எளம ஒவ வொருத்தனு எந்த நிமிசமும் இளமையை தொலைச்சுக்கிட்டே தாங் இருக்கிறான். கடவுள் அப்படி படைச்சிபுட்டான். என்னைத்தா இனிக்காணப் போறம்? நடக்கிறத பாப்போம். யே ங் ஓடம்பிருந்த மாதிரி அப்பலு}! இப்ப மெலிஞ்சிட்டே நாலு புள்ளகி தவப்பேல்லியா. அதுகளயும் அங்கொண்ணு இங்கொண்ணாவுட்டுப் புட்டேலு} ஆனா ஒரு புள்ளயுூ வீணாப் போவல இது வரைக்கும்லு} ம்லு}ம்'
அவன் தனக்குள் ஆறுதலை வருவித்துக் கொண்டான். கிளிநொச்சிக்கு வந்து அகதியாய் அடைந்தபோது இங்கு இருந்த அரச அதிகாரிகள் அவர்களுக்கு இந்தக் காட்டைக் காட்டிவிட்டனர். 'கனகபுரம், வடக்கில் இருக்குலு} பாதையைக் கடந்து தெற்குப் பக்கமா காடு அதில உங்களுக்கு காணி தாறதா இருக்கிறம்' ஒரு அரச உத்தியோகத்தர் கூறியது மனதில் பளிச்சிட்டது. அதற்குப்பிறகு அவர் சொன்னபடி இந்தப் பகுதி தன்னைப்போன்ற பலருக்கும் காட்டப்பட்டதை அறிந்தான்.
முன்னூறு பேரளவில் உதயநகர் கிராமத்தில் காடுவெட்டிக் குடியேறியிருந்தனர் என்பது இப்போதும் ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. 'இருபது வருசத்தக் கடந்துகிட்டு இருக்கு இன்னிக்கி ஆனந்தபுரம், உதயநகர், கந்தன்குளம், கிருஸ்ணபுரம் அப்பாடாலு}' என அவன் பெருமூச் சொன்றை வெளியேற்றினான். அயல்கிராமங்களை நினைத்து 'காடுவெட்டி, கட்டபுடுங்கி, காடு கொழுத்தி, பயிர்வச்சி வேலியடைச்சி, பாடு பாட்டாங்க எங்களோட வந்தவுங்க.'
'எல்லாம் தனக்கு தனக்குன்னு ஒரு கையகலம் நிலம் சொந்தமா வேணுமுன்னு தானே! இந்த உலக உருண்டையில் தத்தமக்கு சொந்தமாக ஒரு அடி நிலம் தானும் அவர்களுக்கு அன்று இருக்கவில்லை. அந்தத்தாகத்தை இந்த அகதிப் பயணம் ஈடேற்றியது.
முனுசாமிக்கு பிரவுடன் பண்ட் வந்த வேளை கிணறு வெட்டி விடவேண்டுமென்று ஏழாயிரத்தையும் அதில் முடக்கினான்.
இம்புட்டு நாலும், கோழிப் பண்ணை செல்லத்துரை வீட்டு கெனத்துத் தண்ணி தான் குடிச்சம் ஆனாலு} அவுங்க வெச்ச சட்டதிட்டங்கள் எங்களுக்கு சகிக்கமுடியல'
செல்லத்துரை சங்கக்கடை மனேச்சராக வேலை செய்கிறார். வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர். அதிகாலை வெறுங் குடத்Nதூடு போக ஏலாது வருடம் பிறந்த அன்று தண்ணி அள்ள ஏலாது, மாலையானா தண்ணி அள்ள விடமாட்டா நல்லம்மா, அவரின் மனைவி இந்த நிலையை மாற்ற முனுசாமி முடிவெடுத்தான்.
மனைவியின் நகைகள் அடைவு கடையில்தான் எனினும் மாரியாயி, கிணறு வெட்ட அவன் எடுத்த முடிவுக்கு மறுப்பு கூறவே இல்லை. நினைவுகள் நின்றுபோக, தனது மீசையை தடவிவிட்டுக் கொண்டான் முனுசாமி. ஒரு கிழமையாக சவரம் செய்யாத அவனது தாடியை கைகள் வருடியது.
காணி துப்பரவு செய்ய வந்த முனுசாமிக்கு இந்த மூன்று நான்கு நாளாய் சாப்பாடு, தேனீர் நேரத்துக்கு கிடைக்க வில்லை.
முனுசாமி உயரமான மனிதன். மெல்லிய உடல் வாகு. தளர்வில்லாத நடை, கறுப்போ சிவப்போ அற்றபொது நிறம். அழகான நீண்ட மூக்கு. கரிய கண்விழிகளும் அடர்ந்த புருவமும் படர்ந்த நெற்றியும், சொண்டு என்னேரமும் சிவந்திருக்க வெற்றிலை குதப்பிய வாயும் அவனை ஒரு அழகனாகவே காட்டியது.
வேலை செய்து செய்தே முறுக்கேறியிருந்த உடலும் கைகளும் தோள்களும் உருக்குப் போல உறுதியைக் காட்டின. தன் திருமேனியின் அழகை மாரியாயியிடம் காட்டி அவளை வெக்கப்பட வைப்பதும் முனுசாமிக்கு விருப்பமான செயல்.
'போங்க நீங்கலு} பெரிய பயிலுவாந்தாலு}ன்' அவள் வெட்கத்துடன் குணட்டுவாள். பிள்ளைகள் இல்லாத நேரம் பார்த்து அவளது கன்னங்களில் ஒரு முத்தம் கொடுப்பான் முனுசாமி. அவனோடு அரை நூற்றாண்டுகள் வாழ்ந்து கொண்டிருந்தவள் என்பதால் அவன் நன்றி தெரிவிப்பதாய் அது. அவனது மூத்த மகன் ராஜேஸ் தகப்பன் முனுசாமியைப் போலவே தோற்றமுடையவன்.
'ம் இந்த கெனத்த வெட்டுற நேரோலு} ஏம் பெஞ்சாதி எப்படியெல்லாம் கஸ்ரப்பட்டிருப்பா 'லோங்கிஸ்' போட்டுக்கிட்டு ஆம்பல மாரி கெனத்துள்ளுக்கு எறங்கி மங்கு.. மங்குன்னு வெட்டித் தருவா நானூ..ங் குட்டி ராஜேஸ் பயலும்தான் மண்ண அள்ளிக் கொட்டி தண்ணீ கண்டோ. அன்னிக்கு எங்க குடும்ப மட்டுமில்ல எல்லா அடுத்த காணி காரகுடும்பங்களு சந்தோசப்பட்டிச்சி'
மாரியாயியின் மிடுக்கும் துணிச்சலும் அக்கிராமத்துக்கு ஒரு முன் மாதிரியாயமைந்தது. பலருக்கு அறிவுரை கூறி வழிப்படுத்தி இருக்கிறார்கள். வறுமை அவர்களை வாட்டிய காலம் அவனது கண்ணில் நிழலாடியது.
பழைய நினைவுகள் அவனை விட்டுப் போவதாகவே இல்லை. 'உதயநகரில் முப்பது வீட்டுத் திட்டம்னு அரசாங்க முப்பது வீடு கட்டி சனத்துக்கு குடுத்த நேரம் அந்தக் காணிக்கு சொந்தக் காரங்களுக்கு கட்டித்தாறதச் சொல்லி அவுங்கள அப்புறப் படுத்தி வீடு கட்டுனதும் வேறதாவுட்டுக் கட்சிகாரங்களுக்கு எம் பி வீடுகள கொடுத்துட்டாரு காணியும் போச்சி, பாடுபட்டது வீணாபோச்சி. அப்ப அவுரூட்டு ஆட்சி தானே'
' எம்பதாம் ஆண்டு திரிப்பி யுூம் அதேமாதிரி நாப்பது வீட்டு திட்டமுன்னு காணி பறிக்க பொறப்புட்டாரு, ஜனம் விடல ஜனோ எம்பிக்கீ சாணி கரைச்சி அடிச்சி வெரட்டி விட்டிருச் இப்பதா எம்பத்திமூனுக்கு பெரவுதான் நிம்மதியா சொதந்திரமா இருக்கிறோம்'
'அகதீன்னு தென் எலங்கயில இருந்து வந்தவேல்லா நாடு கேட்டு போறாடுதான். இந்தப் போராட்ட யந்திரம் எங்கள உள்வாங்கீரிச்சி. அடைஞ்சி கெடந்த வீரத்த இந்தக்காலம் தட்டி விட்டிருக்கு அங்கிட்டு இருந்து வந்தாலும் இந்த மண் எங்களுக்கு வாழ்க்கய குடுத்திரிச்சி. மானோ மரியாதைக்காக வீரம் பொறந்திh}ச்சி. இதுதான் எங்களுட்டு தாய் நிலமா மாhPருச்சி'
'மாhPரிச்சி' என தன்னை அறியாமலே வாய் விட்டுக் கத்தினான் முனுசாமி. அவனது கரங்கள் முறுக்கேறின. கால்கள் பதறியது. தன் கரங்களின் வலிமையை அவன் உணர்ந்தான் அவனது மூக்கில் பிறந்த பெருமூச்சொன்று காற்றில் கரைந்தது.
குயிலின் இனிய கூவல் அந்த இடத்தைக் கவித்தது. அவனது காதுகளில் அக்குயில் ஓசை இனித்தது. சலனமற்ற நிர்மலமான ஒரு பொழுதாக அது அவனை உறைய வைத்தது. தொடர்ந்து முனுசாமி பற்றைகளை விறுவிறென துவம்சம் செய்தான்.
வானத்தில் பொமர் ஒன்று இரைந்தது. இவன் யாருடைய உயிரைக் குடிக்க போகிறானோ என்று கவலையோடு,
'மாரித்தாயே யாரும் அகப்படக்கூடாது' என்று தனக்குள் வேண்டிக் கொண்டான்.
ஊசியால் குத்தப்பட்டிருந்த செருப்பு அறுந்துவிட்டது. அதனைச் சரி செய்தான் முனுசாமி.
அந்த நேரம் கிளிநொச்சி ஒரு தனி மாவட்டமாய் இருக்கவில்லை. அப்போது திருநகர், ஜெயந்திநகர், கோழிப்பண்ணை என்பன இடைக்கிடை சனம் வசித்த குடியேற்றங்கள்.
உதயநகர்க் காட்டை இந்த அகதிகளுக்குக் கொடுக்கக் கூடாதென கொலனிக்காரர்களான பண்ணைவாசிகள் புறுபுறுத்தனர். எனினும் காடுவெட்டப்பட்டது.
'இங்கவா சிவராசா இப்ப அவங்களுக்கு காணி குடுக்கிறதால எங்களுக்கு நாட்டமே இல்ல பாதுகாப்புத்தான்'
'எங்களுக்கெல்லே ரவுனுக்க காணியில்லாமல் போப்போகுது. ஒருகாலத்தில கரைச்சி, பட்டினமாகேக்கைலு} நாங்கள் இதுகளை விட ஏலுமே தருமு?'
'இஞ்சேர் சிவராசா விட இப்ப பண்ணைக்க, கொலனிகாணீக்க எத்தினை தென்னை நிக்கிதுசொல்லு?
'பத்துப்பிள்ளை நிக்குது'
'எத்தினை வெச்சநீ சொல்லு'
ஐம்பத்திஏழு வெச்சனான் நாப்பத்தேழு பிள்ளையை யானை அடிச்சிப்போட்டுது.
'ம் அதுக்குத்தான் இப்ப இவங்களுக்கு காணி குடுத்திட்டா எங்களுக்கு யானை, பண்டித் தொல்லை இராது. அதுமட்டுமல்ல எங்கட மிளகாத் தோட்டத்தில கூலிக்கும், ஆக்கள் கிடைக்கும்லு} இலு}இலு}இ..'
'பாத்தியா ஒரு கல்லில இரண்டு மாங்கா'
அவர்கள் கோழிப்பண்ணை வாசிகள் கள்ளுத் தவறணையில் அவர்கள் மனம்விட்டுக் கதைத்ததைக் கேட்டுக் கொண்டிருந்ததாக வீரையா முனுச்சாமிக்குச் சொன்ன ஞாபகம்.
'சரி என்னாத்த கொறயப் போறம். இந்த தேகம் இருக்கு வரை எலங்க மண்ணுக்குன்ன ஆண்டவே எழுதிட்டான்'
முனுசாமி தான் அன்று அங்கலாய்த்ததை நினைத்துப் பார்த்தான். அன்று இவர்களை மாற்றானாகப் பார்த்த சேவியர், சண்முகம், கனகேந்திரம் ஆகியோரின் குடும்பங்கள் இன்று இந்த மண்ணில் இல்லை.
சிவராசாவின் குடும்பம் சிவராசாவை முதுமையில் தனியே விட்டுவிட்டு ஜேர்மனிக்குப் போனபின் சிவராசா தட்டத்தனியே வாழ்ந்து முடித்ததும், அனாதையாகச் செத்ததும், முனுசாமியும் அயலவர்களும் மரணச்சடங்கை நடாத்திவைத்ததும் அவனது எண்ணத்தில் வந்து போயிற்று.
முனுசாமிக்குத் தன்னையறியாமலேயே உற்சாகம் பிறந்தது. வெயிலின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் மண்வெட்டியை பற்றைமீது மூர்க்கமாக பாச்சினான். கிணற்றுப் பற்றையை துப்பரவு செய்யாமல் இன்று சாப்பிடுவதில்லை என கங்கணங்கட்டிக் கொண்டு வெட்டி எறிந்தான் பற்றைகளை.
ஆனையிறவுப் போரில் மாவீரனான தன் மகனின் முகம் அவனுள புகுந்து கண்கள் நிறைந்துவிட்டன. பற்றைகள் எங்கும் அவனது முகம் அவன கால் பதித்து விளையாடிய காணி இது வென்று மனம் அழுதது. வரிப்புலிபடையும், வாகனம் ஓட்டுப் பாணியும் முனுசாமிக்கு குதூகலத்தைத் தந்த வேளை அவனது வீர மரணம் அவனை துயர் கடலில் தள்ளி விட்டது. அப்பா எல்லோருக்கம் சொந்தம் பகுதி பகுதியாய் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இனங்கள் அடிபடுகுது. தவிர்க்க முடியாத படி எங்கட இயக்கமும் போரிடுகுது. இது சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் மீது புூசப்பட்ட போர்லு}.. உங்களை நீங்கள் பிறந்த குளுகாகந்தை தோட்டத்தில் இருக்கவிடாமல் இங்கு வெறுங்கையோடு அனுப்பினதும். அதே சிங்கள இனவாதம்தான் அதால தான் அதுக்கு எதிரா போராட இந்த மண்ணில தலை நிமிர்ந்து எங்கட சந்ததி வாழ நான் போராடப் போனேன்.
கடைசியாக மகன் திலகன் வீட்டுக்கு வந்தபோது கூறியவை அவை. அது முன்னுசாமியின் காதில றீங்காரமிட்டது.
இங்கு முன்னுசாமியின் குடும்பம் அகதியாக வந்த போது மாரியாயி அயலவரிடம் கூலிக்குச் செல்ல, முனுசாமி, இந்தக் காணியை களனியாக்கினான்.
தென்னையும், வாழையும், பலாவும், புூமரங்களும் நாலு வருடத்தில் அவனுக்கு மகிழ்வளித்தன.
அது அரிவு வெட்டுக் காலம். மூன்றாம் வாய்க்கால. ராமநாதன் கமத்தில் கூலிக்கு உழைத்து மிகவும் கருகலில் தான் மாரியாயி வீட்டுக்கு வருவாள். அப்படி வந்த நாளில் ஒரு நாள் மாரியாயியை வெகு நேரமாகக் காணவில்லை என்று முனுசாமி அயலவரின் உதவியுடன் தேடிச் சென்ற போது. வழியில் அவளது பை சிதறிக் கிடந்தது.அதற்குள் குழந்தைக்கு ஒரு லெக்ரோஜன் மாப்பெட்டி. அரிசி, மரக்கறி, என்பன கொட்டிக்கிடந்தன. அவளது சேலைத் தலைப்பு வீதியோரத்தில் கிழிந்து தொங்கியது அருகிலுள்ள பற்றைக்குள் அவள் கிடந்தாள். வாயில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. முன்னுசாமி கட்டியணைத்துக் கதறினான். வைத்தியசாலையில் அவள் பேசவில்லை. கைளால்தான் நான்கு பிள்ளைகள் என சைகைகாட்டினாள். அவளது கதை முடிந்தது. கைக்குழந்தைக்குப் பாலூட்ட ஓடோடி வந்த அவளை அலியன் யானை புகையழிரத வீதிக்கருகில் வைத்து தாக்கி ஏறிந்து விட்டது.
அன்றிலிருந்து மிகக் கஸ்ரப்பட்டான் முனுசாமி தன் செல்வங்கள் நான்கையும் அவன் நம்பிக்கையோடு வளர்த்தான். 1996இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சி மீதான படையெடுப்பை மேற்கொண்டது. அன்று இடம் பெயர்ந்து அமபலப் பெருமாள் குளத்தில் குடிலமைத்தான் முனுசாமி மீள்குடியமா வுக்காக தன்காணியைத் துப்பரவு செய்ய இந்தக் கிழமை முனுசாமி, தன் பிள்ளைகளிடம் விடைபெற்று காணியில் வேலையை ஆரம்பித்திருந்தான்.
அவசரமாக இந்தக் காணியை ஏன் துப்பரவு செய்ய வந்தான் முன்னுசாமி.
'இந்த ஒரு ஏக்கர் நெலத்தயு டவுனமைக க எடுத்திட்ட போறாங்களே அன்னிக்கி சட்டத்தில் கதைச்சாங்க. ஒரு கையளவு நெலங்கூட இல்லாம நான் சாகப் போறன் எம்புள்ளைங்களுக்கு ஏம்புட்டுன்னு என்னா இருக்கு'
அவனது மனச்சாட்சி ஓலமிட்டது. கண்கள் பனித்தன அவனது மணம் களைத்துப் போனது. ஒரு கணம் நிமிர்ந்து தூரத்தில் தெரிந்த கோயிலை நோக்கினான். செடிகள் மண்டிக்கிடந்தது அந்தக் கோயில் மேடு.
'இல்ல இந்த நிலத்தை நான் விடவே ஏலாது எங்கிட் யாரூம் பறிக்கவராதீங்க இது எம்பெண்டாட்டி பாடுபட ட சொத்து. அவ வெட்டுன கெனம் அவ வெச்ச ஒரு தென்னையும் இல்லியே' மண்வெட்டியை எறிந்தான் அருகில் நின்ற பாலை மரத்தைக் கட்டிப்பிடித்து அழுதான்.
ஏதோ நினைவில் வரதலையை நிமிர்த்தினான் முனுசாமி. தன் இளைய மகன் இன்று வருவான் வீட்டுச சாப்பாட்டோடுலு} அவனை நினைத்தான்.
முகம் வீங்கி இருந்ததுலு} மூக்கு அடைத்திருந்தது. பசி வயிற்றைப் பிhண்டியது. தாகம்.
'அப்பா....அப்போ...' முனுசாமி காதுகளைக் கூர்மையாக்கினான், தன் மகன்தான் எனத் தீர்மானித்தான்.
'யாரு கண்ணா கண்ணாவா' என்ற குரலோடு ஒழுங்கையை எட்டிப்பார்க்க ஒரு அடி இரண்டு அடி எடுத்து பத்தை மீது வைத்தான்.
டுமீல்! பேரதிர்வோடு மிதிவெடியொன்று வெடித்தது...
ஐயோ ஐ மகன் கண்ணா....ஓடி...வா
முனுசாமி இரத்தவெள்ளத்தில் கிடந்தான்?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வல்வை ந. அனந்தராஜ்
காலம் காலமாகத் தமது சொந்த வீடுகளில் உண்டு, உறங்கி வாழ்ந்த மக்களை ஒரே இரவில் விரட்டி அடித்து, அகதிகளாக்கிவிட்ட அந்த அவலத்தைச் சுமந்து நின்ற யாழ்ப்பாணத்தை விட்டுக் கண்ணீருடன் வெளியேறிய இலட்சக்கணக்கான தமிழர்களில் செல்லம்மாவும் ஒருத்தியாக ஓடிவந்த அந்தத் துயரம் நிறைந்த இரவுகளை அவளால் எப்படி மறக்கமுடியும்.
மாகழி மாதக் கடுங்குளிர் அந்தப் பிரதேசத்தையே உறைய வைத்துக் கொண்டிருந்தது. உயர்ந்து, அடர்த்தியாக வளர்ந்திருந்த காட்டு மரங்களிடையே வெள்ளைப் பஞ்சுகளைத் தூவிவிட்டது போல், ஆங்காங்கே பனிமூட்டம் பரவி இருந்தது.
அந்தக் காலை நேரத்தில் வன்னி மண் இன்னும் விழித்துக் கொள்ளவில்லைலு} அந்த அளவுக்கு குளிர்காற்று எல்லோரையும் உலுப்பிக்கொண்டிருந்தது.
காட்டுக் குயில்களின் மனதைக் கிறுங்க வைக்கும் மெல்லிய ஓசை மட்டும் காற்றில் கலந்து இதமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இனிய ஒலிக்குமேலாக 'கீச்சுலு} கீச்சு' என்று குரங்குக் குட்டிகளை வயிற்றில் காவியபடி மரங்களிடையே தாவித்திரியும் மந்திக் குரங்குகளின் சத்தங்களும், தூரத்தில் எங்கோ காட்டுப் பகுதிக்குள் இருந்து இடையிடையே விட்டு விட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும் துப்பாக்கிச் சத்தங்களும்தான், அந்த மண்ணின இயற்கை ஒலிகளாகிவிட்டன.
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள மாவட்டங்களில், முல்லைத்தீவு மாவட்டம் என்றதுமே, அடங்காத் தமிழன் பண்டாரவன்னியனின் பெயர்தான் நினைவுக்கு வரும்லு} தூங்கிக் கிடக்கும் குழந்தை கூட ஒரு கணம் தன்னுடைய உடலைச் சிலிர்த்துக் கொள்ளும்.
அன்று யாழ்ப்பாண அரசு, அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட பின்னரும்கூட, வன்னிமையை அடிபணியவிடாது இறுதிவரை போராடி அந்த மண்ணைக் காத்த மாவீரன் பண்டாரவன்னியன் திரிந்த மண்ணல்லவா அதுலு}
அதனால் தானோ என்னவோ, இன்றும்கூட அந்த மண் வளையாது நிற்கின்றது.
வந்தாரை வாழவைக்கும் மண் என்றும், வீரத்தின் விளை நிலம் என்றும் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பேசப்பட்டு வந்த மண்லு} இன்று.
அவலம் நிறைந்த மக்களால் நிரம்பிப் போய் சிவந்து காணப்படுகின்றதுலு} யாழ்ப்பாண மண்ணைக் கைப்பற்றி அதன் பாரம்பரியத்தையும், தனித்துவத்தையுமே வேரோடு அழித்துவிட வேண்டுமென்பதற்காகவே மேற்கொள்ளப்பட்ட 'ரிவிரெச' படையெடுப்பு, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒவ வொரு சிங்களப் பெயரிலும் அமைந்த இராணுவ நடவடிக்கைகளும் அந்த மண்ணையே இன்று அல்லோலகல்லோலப் படுத்திவிட்டன.
காலம் காலமாகத் தமது சொந்த வீடுகளில் உண்டு, உறங்கி வாழ்ந்த மக்களை ஒரே இரவில் விரட்டி அடித்து, அகதிகளாக்கிவிட்ட அந்த அவலத்தைச் சுமந்து நின்ற யாழ்ப்பாணத்தை விட்டுக் கண்ணீருடன் வெளியேறிய இலட்சக்கணக்கான தமிழர்களில் செல்லம்மாவும் ஒருத்தியாக ஓடிவந்த அந்தத் துயரம் நிறைந்த இரவுகளை அவளால் எப்படி மறக்கமுடியும்.
'அம்மாலு} இன்னும் வயிற்று நோக் குறைஞ்சதாத் தெரியேல்லையம்மா வரவர அடிவயிறு எரியிறமாதிரிக்கிடக்குதணைலு} ஆலு} கடவுளேலு} வலி தாங்க முடியேல்லைலு}'
செல்லம்மாவின் மூத்த மகள் வானதி அடி வயிற்றை அழுத்திப் பிடித்தபடி, அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். ஒருவாரத்திற்கு மேலாகச் சாப்பிடாமல் இருந்ததால், கடந்த மூன்று நாட்களாக வயிற்றுவலியினாலும், தொடர்ச்சியான வாந்தியினாலும் துடித்துத் துவண்டு போய் இருந்தாள்.
'பிள்ளை இப்பத்தானை தேத்தண்ணி குடிச்சனீலு} இன்னும் கொஞ்சத்தாலை எல்லாம் குணமாப் போயிடும்லு}'
கடந்த மூன்று நாட்களாகப் பழகிப் போய்விட்ட, அந்த முனகல் செல்லம்மாவுக்குப் புதிதாகத் தெரியவில்லை.
செல்லம்மா ஏதோ ஒரு சாட்டுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்ததுலு} ஒருநாளைக்கு, ஒரு நேர உணவினாலாவது அரைகுறையாக நிரப்பித்திருப்திப்படுத்த வேண்டிய வயிற்றை, எத்தனை நாட்கள்தான், வெறும் பனங்கட்டித் தேநீரைக் காட்டி ஏமாற்ற முடியும்?
பலாலியில் இருந்து ஏவப்பட்ட மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதல்களினால் தெல்லிப்பளையில் இருந்தும் இடம்பெயர்ந்து, நவாலி சென்.பீற்றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தபோது, வீசப்பட்ட 'புக்காரா' போர் விமானங்களின் குண்டுகள், அந்தப் புனித கத்தோலிக்கத் தேவாலயத்தை மட்டுமா தாக்கி அழித்தனலு}?
அந்த ஆலயத்தினுள் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், வயோதிபர் என்று நூற்றுக் கணக்கான அப்பாவிகளின் உடல்கள், சிதறிப் பலியானபோது, அவளுடைய கணவனையுமல்லவா பறிகொடுத்துவிட்டு நிர்க்கதியாக நின்றவள்.
அன்று, அவள் அனுபவித்த, அந்த வேதனையின் கொடூரத்தைவிட, இன்று அந்த அகதி முகாமில் அனுபவிக்கும் துயரமோ மிகவும் கொடூரமானது.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அகதி முகாமில் கழிந்த அந்த ஆறுமாத அவல வாழ்க்கையில் அவள் அனுபவித்த துயரங்களோ ஏராளம்.
பாயில் படுத்திருந்தபடியே, வலி தாங்கமுடியாது முக்கிமுனகிக் கொண்டிருந்த, வானதியின் கோலத்தைப் பார்த்ததுமே, செல்லம்மாவின் பெற்ற வயிறு பற்றி எரிந்துகொண்டிருந்ததுலு} சேர்த்து வந்த பணத்தைச் செலவழிக்க வழி தெரியாது, உண்டு குடித்துக் கழித்து வாழ்பவர்களுக்கு அதனாலேயே நோய்களும் வந்துவிடுகின்றதுலு} ஆனால், வானதியைப் போன்று நிர்க்கதியாக்கப்பட்டுவிட்ட ஏழைகளின் 'பசிப்பிணிக்கு' யாரால் தான் மருந்துகொடுக்க முடியும்லு}?
'சே என்ன வடிவாய் இருந்த பிள்ளைலு} ஊரைவிட்டு வந்து தேப்பனையும் பறிகுடுத்திட்டு இப்பிடிக்கோலம் மாறிப்போய்லு} கடவுளேலு} நான் என்ன பாவம் செய்து பிறந்திட்டன்லு} கலியாணம் முடிக்கவேண்டிய வயதில், இப்படி எலும்பும் தோலுமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறதைவிட, அண்டைக்கே அவரோடை செத்துத் துலைஞ்சிருக்கலாம்'
நீண்ட பெருமூச்சு விட்டபடியே தன்னையே நொந்து, சபித்துக் கொண்டாள்லு} முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம் என்று அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினால், யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களாலும், 'சத்ஜெய' இராணுவ நடவடிக்கையினால் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களாலும் அந்த அகதி முகாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
அங்கேதான், அவர்களுக்கும் ஒரு சிறிய பகுதி ஒதுக்கிக்கொடுக்கப்பட்டிருந்ததுலு} ஒரு வகுப்பறையினுள் மூன்று தனிக்குடும்பங்கள் எப்படியோ இருந்தே ஆக வேண்டும்.
'அம்மாலு} என்னம்மாலு}? இண்டைக்கும் சாப்பாடு தரமாட்டியளோலு}? ரெண்டு நாளா வெறும் தேத்தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு வாயெல்லாம் கைக்குதுலு} இண்டைக்குப் பள்ளிக்கூடத்திலை வகுப்பேற்றச் சோதனை என்றும் சொல்லி விட்டவைலு}'
படுக்கையில் இருந்தும், எழும்ப மனமில்லாமல் சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்த பிரதீபன், தாயின் முகத்தையே பார்த்து அனுங்கிக் கொண்டிருந்தான்.
அவன் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். எந்தக் கஸ்டம் வந்தாலும் அவனை எப்படியும் படித்து ஆளாக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கம் செல்லம்மாவிடம் இருந்தாலும், அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மட்டும் அவளால் முடியவில்லை.
'என்ரை ராசன்லு} இண்டைக்கு மட்டும் போய்ச் சோதனையைச் செய்துட்டு வா நான் எப்பிடியும் இண்டைக்கு கால் கிலோ அரிசியாவது கொண்டு வந்து கஞ்சி வைத்துத் தருவன்லு}'
'சும்மா போணைலு} நேற்றும் இப்படித்தானை சொல்லிப்போட்டுப் போய் மத்தியானம் வெறுங்கையோடை வந்தனிங்கள் ஏன் இப்படி ஒவ வொரு நாளும் ஏமாத்திறியள்?'
பிரதீபனின் ஆற்றாமையும், பசியின் கொடூரமும் அவனை அப்படிப் பேசவைத்துவிட்டது.
'தம்பி.. அம்மாவை அப்படிப் பேசாதைலு} பாவம் அவ என்ன செய்வா..? தன்ரை கழுத்திலை, காதிலை கிடந்த நகை எல்லாத்தையும் விற்று இவ வளவு காலமும் சமாளிச்சாலு} அதுக்குப் பிறகும் கூட பக்கத்துச் சனங்களிட்டைப் போய்ப் பிடி அரிசி சேர்த்துக் கஞ்சி காய்ச்சித் தந்தாலு} எத்தினை நாள் வீடுகளுக்குப் போய், அரிசி இடிச்சுக் கொடுத்து எங்களுக்குச் சாப்பாடு போட்டிருப்பாலு} இதெல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி, கதைச்சு அவவின்ரை மனதை நோக வைக்கிறாய்.. ம்லு} எங்கடை தலைவிதி, இப்படி எங்களை அலைக் கழிக்குதுலு}'
வானதியின் மூச்சு இளைத்துக் கொண்டிருந்ததுலு} படுக்கையில் இருந்தும், மெதுவாக எழும்பி இருந்த வானதி, அந்த வயிறு எரியும் நிலையில் இருந்தும்கூடத் தன்னுடைய தம்பியைச் செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
'அக்காலு} என்னைக் கோவிக்காதீங்கோலு} அம்மா பாவம் எங்களுக்காக கஸ்டப்படுறதை நான் உணராமல் இல்லை. அக்காலு}. இது எங்கடை விதி மட்டுமல்லலு} இந்த நாட்டிலை தமிழனாய்ப் பிறந்ததாலை ஏற்படுத்தப்பட்ட சதி அக்காலு} அந்த விதியை நாங்கள்தான் மாற்றி அமைக்கவேணும்'
தாயுடன் சேர்த்து நாட் கணக்காகச் சாப்பிடாமலேயே இருக்கும், அவர்களுடைய வயிற்றில் மூண்டெழுந்த அந்தப் பசித்தீயை மட்டும் அவர்களால் எப்படி அணைக்க முடியும்?
செல்லம்மாவுக்கும், எங்காவது வேலைக்குப்போய், கூலி வேலையாவது செய்து அன்றாடம் செலவுக்குத் தன்னும் உழைக்கவேண்டும் என்ற ஆசைதான்லு}
இன்று, வன்னிப் பெருநிலப் பரப்பில் வளம் கொழிக்கும் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளும், எறிகணை வீச்சு எல்லைக்குள்ளும் கொண்டுவரப்பட்ட பின்னர் அவை எல்லாமே இன்று வானம் பார்த்த புூமிகளாகிவிட்டன. இந்த நிலையில், எத்தனையோ உடல் வலிமையுள்ள ஆண்களுக்கே வேலை வழங்கமுடியாத நிலையில், வலுவிழந்து மெலிந்து, எலும்புக்கூடாகி விட்ட செல்லம்மாவுக்கு, அங்கே யார்தான் வேலை கொடுக்கப்போகிறார்கள்?
வன்னிப் பெருநிலப்பரப்பைத் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாத நிலையில் அங்கே வாழ்கின்ற மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைப்பதற்கு உணவுத் தடையைப் போராயுதமாகப் பயன்படுத்தும் அந்த, அநாகரிகம் உலகில் வேறு எந்த நாட்டிலுமே நடந்திருக்கமுடியாது.
இராணுவ நடவடிக்கைகளினால் இடம் பெயர்ந்தவர்களுக்குச் சில மாதங்கள் வரை ஏதோ பெயரளவில் வாரத்திற்கு முன்னூறு ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை நிவாரணமாகக் கொடுத்து வந்தார்கள். அதற்குப் பிறகு மாதத்திற்கு ஒரு தடவையாகக் குறைத்து, இப்போது 'அகதிகளுக்கான நிவாரணம்' முற்றாகவே நிறுத்தப்பட்டுவிட்டது.
அகதிகளுக்கென வெளிநாடுகளில் இருந்துவரும் உதவிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அந்த ஏழைகளின் வயிறுகள் மட்டும் வெறுமையாகிக்கொண்டு வந்தனலு}
'தம்பிலு} எழும்பித் தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் போயிற்று வாலு} நான், என்ன சும்மாதிரிஞ்சிட்டே வாறன்லு} நேற்றுக்கூட ஒரு கொத்து அரிசிக்காக அலையாத இடமில்லைலு} ஏறி இறங்காத படலை இல்லைலு} உண்ணாண இண்டைக்கு எப்படியும், உனக்குக் கஞ்சி காய்ச்சி வைப்பன்'
அவள் உறுதியாகக் கூறிக்கொண்டே, மகனின் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டாள்.
'சரிலு} அம்மா, நான் இண்டைக்கு போறன்லு} அம்மாலு} நான் கதைச்சதைப் பற்றிக் கவலைப்படாதையுங்கோ ஏதோ தெரியாமல் கதைச்சிட்டன்..'
அவன் இப்படிக் கூறியதும், செல்லம்மாவின் நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்த துயரம் இன்னும் பீரிட்டுக் கொண்டு வந்ததுலு} சேலைத் தலைப்பினால் வாயையும், கண்களையும் மூடிக்கொண்டு விம்மி, விம்மி அழத் தொடங்கிவிட்டாள்.
அவர்களுக்கு எதிரில், பாயில் படுத்திருந்தபடியே, பிரதீபனையே பார்த்துக்கொண்டிருந்த வானதியின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்ததுலு} அவளுக்கு, அந்த நேரம், 'ஓவென்று' வாய்விட்டே கதறி அழவேண்டும் போல் இருந்தது. தன்னுடைய முகத்தை அடுத்த பக்கம் திரும்பி சட்டைத் தலைப்பினால், வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
ஆம்.. அங்கே பசிக்கும், பாசத்திற்கும் இடையே அவர்களுடைய உணர்வுகள் போராடிக்கொண்டிருந்தனலு}
அந்த அகதிமுகாமின், 'ஒரு லயம்' மெல்ல, மெல்ல விழித்துக் கொண்டிருந்ததுலு} அந்த முகாமில் உள்ளவர்கள், அன்றும் வழமைபோலக் கலகலப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர். செல்லம்மா மட்டும், அந்த விடியப் போகும் பொழுதை நினைத்து நடுங்கிக்கொண்டிருந்தாள்.
'பிள்ளை இண்டைக்கு எங்கையாவது போய்ப் பிடி அரிசி சேர்த்தெண்டாலும் கொண்டுவாறன்..'
தெல்லிப்பளையில் இருந்தபொழுது, அவளுடைய கணவன் ஒரு முழு நேர விவசாயியாக இருந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கெல்லாம், தாராளமாக உணவைக் கொடுத்து அனுப்பும் அளவுக்கு வீட்டில் நெல்லை மூடை மூடையாக அடுக்கி வைத்திருப்பான்.
இன்று வீடு வீடாகச்சென்று, அவர்கள் சமைக்கும் அரிசியில் இருந்து, ஒருபிடி அரிசியாகச் சேர்த்துக் கஞ்சி காய்ச்சி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை நினைத்துப் பார்த்ததும் செல்லம்மாவின் உடல் கூனிக்குறுகியது.
போர் நெருக்கடிகள், அரசின் உணவுத் தடை என்பவற்றால் வன்னியின் பல வீடுகள் இன்று அரிசிக்காகவும், மாவுக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், பிடி அரிசி கொடுக்கின்ற நிலையில் எத்தனைபேர் இருப்பார்கள்?
'அம்மா ஏனணை அப்பிடி வீடு வீடாச் சென்று பிச்சை எடுக்கிற மாதிரிக் கேட்க வேணும்? இண்டைக்கும், அந்த உதவி அரசாங்க அதிபரிட்டையே எங்கட நிலைமையைச் சொல்லிக் கேட்டுப் பாருங்கோலு}'
வானதி, இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, அடிவயிற்றில் பலமாக வலி ஏற்பட்டதால், வயிற்றை அப்படியே அழுத்திப் பிடித்தபடி படுத்திருந்தாள்.
'சரிலு} பிள்ளைலு} எதுக்கும் இண்டைக்கு ஒருக்கால் போய் அவரிட்டையே கேட்டுப் பார்த்துட்டு வாறன்லு} ஏதோ கடவுள் விட்டவழி'
செல்லம்மா கொடியிலிருந்த சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு, புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்குப் போவதற்கு ஆயத்தப்படுத்தினாள்.
இதயத்தை அழுத்திப் பிடித்த துயரத்துடன், அந்த முகாமைவிட்டு வெளியேறிய செல்லம்மா ஒருவாறு நடந்து சுமார், ஒரு மைல் தூரத்தில் உள்ள உதவி அரசாங்க அதிபர் பணிமனையை அடையவும், அங்கு அலுவலகப் பணிகள் ஆரம்பமாகவும் சரியாக இருந்தது.
வசதிகளும் வாய்ப்புக்களும் நிறைந்த நகரப் புறங்களில் கிடைக்கின்ற வளங்களை, எல்லாம் அனுபவித்துக்கொண்டு, ஏனோதானோ என்று இருக்கின்ற அதிகாரிகளைப் போன்றவர்களை அங்கே, வன்னியில் காணமுடியாதுலு} அவர்களை யாருமே மேற்பார்வை செய்வதில்லை.. ஆனால் பற்றுறுதியோடும், மனிதாபிமானத்தோடும் பணியாற்றுகின்ற மனிதர்களைக் கொண்டுதான். அங்கே உள்ள அலுவலகங்கள் எல்லாமே இயங்குகின்றன.
'என்னம்மாலு} இண்டைக்கும் நேரத்தோடையே வந்துவிட்டியள்போல கிடக்கு சரி உள்ளை நடவுங்க. நான் சைக்கிளை விட்டுட்டுவாறன்..'
அந்த அலுவலகத்தினுள் தனது, மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் சிவானந்தா, தூரத்தில் வரும்பொழுதே செல்லம்மாவைக் கண்டுவிட்டார்.
வழமையாகவே சோகத்துடன் வந்துபோகும் செல்லம்மாவைக் கண்டதும் அன்றும் அவரையறியாமலேயே அவள் மீது ஒருவித இரக்கம் ஏற்பட்டது. அலுவலக அறையை நோக்கி நடந்துகொண்டிருந்த சிவானந்தாவைத் தொடா ந்து செல்லம்மாவும் தயங்கித் தயங்கிய படியே பின் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தாள்.
'சண்முகம்லு} அந்த அம்மாவை இன்னும் கொஞ்சநேரத்திலை உள்ளை அனுப்பு'
வாசலில் எழுந்து நின்ற வாச்சரிடம், கூறியபடியே, கதவைத் திறந்து தனது அலுவலக மேசையை நோக்கிச் சென்ற சிவானந்தா, அன்று மேற்கொள்ளவேண்டிய வேலைத் திட்டங்களை மேலோட்டமாக ஒரு தடவை பார்த்துக் கொண்டார்.
அன்றைய பணிக்கான தனது ஆரம்ப வேலைகளை முடித்துவிட்டு, வாசலில் நின்ற சண்முகத்தைப் பார்த்துச் சைகை காட்டினார்.
அவரது அனுமதி கிடைத்ததும், சண்முகம் செல்லம்மாவை உள்ளே செல்லுமாறு கூறிக் கதவைத் திறந்துவிட்டான்.
உதவி அரசாங்க அதிபரின் அலுவலக மேசையை நோக்கி மெதுவாகச் சென்றுகொண்டிருந்த செல்லம்மா அவருக்கு அருகே வந்ததும் கையைக் கட்டிக்கொண்டு அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள்.
'அம்மா.. இந்தக் கதிரையிலை இருங்க..'
அச்சம் கலந்த பார்வையுடன், அவரையே பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மாவையே பார்த்துக்கொண்டிருந்த அந்த இளம் உதவி அரசாங்க அதிபருக்கே, அரசு மேற்கொள்ளும் பாரபட்சமான நடவடிக்கைகளை நினைத்துப் பார்த்தது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
'சேலு} என்ன போக்கிரித்தனமான வேலைலு} சந்தோசமாகத் தங்கடை, தங்கடை வீடுகளில் இருந்து உழைத்துச் சாப்பிட்டு நிம்மதியாக வாழ்ந்த சனத்தைத் சமாதானத்திற்கான யுத்தம் என்ற போர்வையிலை துரத்தி அடித்து அகதிகளாக்கிவிட்டு, பட்டினி போட்டுக் கொல்லும், இந்தக் கொடுமையை ஆரிட்டைப் போய் சொல்லி அழுகிறது?'
அவருடைய இதயம் குமுறிக்கொண்டிருந்தது. இதனை வாய்விட்டு எவரிடமும் கூறினாலோ, அல்லது அறிக்கையாக அனுப்பி வைத்தாலோ 'ராஜத் துரோகி' என்ற பெயரும் சூட்டப்பட்டு தண்டனை இடமாற்றமும் கிடைத்துவிடும் என்பதால் அவருடைய உள்ளத்து உணர்வுகளை இதயத்திற்குள்ளேயே அமுக்கிக்கொண்டார்.
'ஐயாலு} என்ரை பிள்ளைகள் இரண்டும், நாலு நாளா அன்னத்தைக் காணாமல் அப்பிடியே வாடி வதங்கிப் போய்க்கிடக்குதுகள். இந்த முறை மட்டும் ஏதோ பார்த்து நிவாரணம் தந்தியள் எண்டால் உங்களுக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும்லு}'
அவருடைய காலில் விழாத குறையாக, சர்வாங்கமும் ஒடுங்கிக் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த செல்லம்மாவின் கைகள் தளர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தன.
'அம்மாலு} நீங்கள் இப்படிக் கதைக்கிறதைப் பார்க்கவே எனக்குக் கஸ்டமாக இருக்குதுலு} எனக்குத் தாறதுக்கு விருப்பமில்லை என்று நினைக்காதீங்கலு} அரசாங்கம்தான் இரண்டாம் கட்ட நிவாரணத்தை நிறுத்திட்டுதுலு} அப்படியிருந்தும் இடைக்கிடை எங்களுடைய வேறு நிதியில் இருந்துதான் உங்களுக்கு நிவாரணம் தந்தனாங்கள்..'
சிவானந்தா ஒரே மூச்சில் கூறிவிட்டு தனது கோவையில் இருந்து சில படிவங்களை எடுத்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய செய்கை, செல்லம்மாவுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்ததுலு} அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'அம்மாலு} உங்கடை கஸ்டம் எனக்கு விளங்குதுலு} இண்டைக்கு உங்களை மாதிரி ஆயிரக்கணக்கான சனங்கள் இதேமாதிரிச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்குதுகள்லு} என்ன செய்வது, இண்டைக்கு எங்கடை வேறு உதவி நிதியில் இருந்து, உங்களுக்கு நானூற்றைம்பது ரூபாவுக்குரிய உலர் உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் 'பெர்மிட்' தாறன்.. இதற்கு மேல் என்னாலை ஒன்றுமே செய்யமுடியாது. உங்கடை அடையாள அட்டையையும் அகதிக் காட்டையும் எடுத்துத் தாங்க'
அவர் இப்படிப் 'பெர்மிட் தருவதாகக் கூறியதும், செல்லம்மாவின் தலையில் இருந்து உள்ளங்கால் வரை மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது. ஏதோ, 'ஜாக்பொட்' பரிசுகிடைத்துவிட்டது போல் குதூகலித்தாள்.
இப்படி ஒரு பெரிய தொகைக்கு 'நிவாரண பெர்மிட்' தருவார் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
'ஐயா நீங்கள் நல்லா இருக்க வேணும்லு} தெய்வம் போல வந்து இண்டைக்குச் செய்த உதவியை என்னால மறக்கேலாது. அந்தப் பெர்மிட்டுக்கு அரிசி வாங்கினன் எண்டால், கடவுளே என்ரை பிள்ளையளுக்கு ஒரு நேரக் கஞ்சியைத் தன்னும் கொஞ்ச நாளைக்குக் காய்ச்சிக் கொடுப்பன்'
'பிடி அரிசியை' எதிர்பார்த்து வந்தவளுக்கு, கொத்துக் கணக்காக அரிசி கிடைக்கப் போவதை நினைத்ததும், கைகால் புரியாத மகிழ்ச்சிலு}
அவளுடைய அந்த மகிழ்ச்சியைக் கண்டதும் சிவானந்தாவின் கண்கள் குளமாகிக் கொண்டு வந்தன. செல்லம்மா, தன்னுடைய பையில் இருந்தும் தேசிய அடையாள அட்டையையும், அகதிகளுக்கான அடையாள அட்டையையும் எடுத்துக்கொடுத்தாள். அங்கே உள்ளவர்கள், எப்பொழுதாவது இருந்து விட்டுத்தான் இப்படி ஏதாவது ஒரு தேவைக்கு அடையாள அட்டையைக் காட்டவேண்டிவரும். ஆனால் வன்னிக்கு வெளியே வாழ்கின்றவர்களைப் பொறுத்தவரையில் அடையாள அட்டை இல்லாமல் எங்குமே செல்லமுடியாது. அந்த அளவுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைலு} நாய்களுக்கு பட்டிகட்டி இலக்கமிடப்பட்டிருப்பதுபோல், மனிதருக்கும் அந்த அடையாள அட்டையில்தான் உயிரேட இருக்கின்றது.
நாய்களின் கழுத்தில் பட்டி இல்லாவிட்டால், நகரசபைக்காரர்கள் பிடித்துக்கொண்டு போய்ச்சுட்டுப் புதைத்து விடுவார்கள். ஆனால் மனிதர்களின் கைகளில் அது இருந்தாலும் கூட சில வேளைகளில் பிடித்துக்கொண்டுபோய் விடுவார்கள்.
செல்லம்மாவிடம் இருந்து பெற்ற அடையாள அட்டையையும், அகதிகளுக்கான அடையாள அட்டையையும் வாங்கிப்பதிந்துவிட்டு, அவற்றுடன் நானூற்றைம்பது ரூபாவுக்கான நிவாரணப் பெர்மிட்டையும், சேர்த்துச் செல்லம்மாவின் கைகளில் கொடுத்தார்.
அதை, அவரிடமிருந்து வாங்கிய செல்லம்மா, கண்ணீர் கனக்க, கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி, கூட்டுறவுச் சங்கக் கடையை நோக்கி நடந்தாள்.
'முருகாலு} இண்டைக்குத்தான் உன்ரை கண் திறந்திருக்குதுலு}. ஐயோ, என்ரை பிள்ளைகள் எத்தினை நாளாச் சாப்பாடு இல்லாமல் துடித்துக்கொண்டிருக்குதுகள். போன உடனை கஞ்சி காய்ச்சிக்கொடுத்து அந்தப் பிள்ளையள் சிரிக்கிறதைப் பார்க்கவேணும்'
மனதிற்குள் நினைத்தபடியே இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்லு} அவளுக்கு எங்கிருந்துதான் அந்த உத்வேகம் வந்ததோ தெரியவில்லை இன்னும் இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
கூட்டுறவுச் சங்கக் கடையில் இருந்தும், அரிசியை வாங்கிக் கொண்டு, ஆனந்தபுரம் அகதி முகாமை நோக்கி ஓட்டமும், நடையுமாகச் சென்றடைந்தாள்.
ஒரு நாளா இரண்டு நாளாலு} பத்து நாட்கள் அல்லவாலு} வானதி பசியால் துடித்துக்கொண்டிருக்கின்றாள்லு} எப்பொழுதாவது, இடையிடையே கிடைக்கின்றவற்றை ஆண்பிள்ளை என்றபடியாலோ என்னவோ பிரதீபனுக்குக்கொடுத்துவிட்டு, வெறுங் கண்ணீருடன் கனன்று கொண்டிருக்கும் வானதியின் வயிற்றில், வெறுங் கஞ்சியையாவது வார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கம், அவளை ஒரு புதிய உலகத்திற்கு இழுத்துச் செல்வது போல் இருந்தது.
'பிள்ளைலு} பிள்ளைலு} வானதி.. இஞ்சை அரிசி கொண்டு வந்திட்டன்லு} எழும்பிக் கெதியாய் வாணைலு}'
செல்லம்மாவின் கால்கள் ஒரு நிலையில் நிற்கவில்லை. கொண்டுவந்த அரிசியை காய்ச்சிக்கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் அவள் மனம் துடித்துக்கொண்டிருந்தது.
அந்த வகுப்பறையின் வாசலையும் தாண்டி சேலைத் துணியினால் மறைப்புக் கட்டியிருந்த அந்த 'அறையை' எட்டிப்பார்த்தாள். நீண்ட நேரம் வயிற்று வலியினால் துடித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அந்தப் பாயில் அப்படியே நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
ஒரு நாளா இரண்டு நாளாலு} பத்து நாட்கள் அல்லவாலு} வானதி பசியால் துடித்துக்கொண்டிருக்கின்றாள்லு} எப்பொழுதாவது, இடையிடையே கிடைக்கின்றவற்றை ஆண்பிள்ளை என்றபடியாலோ என்னவோ பிரதீபனுக்குக்கொடுத்துவிட்டு, வெறுங் கண்ணீருடன் கனன்று கொண்டிருக்கும் வானதியின் வயிற்றில், வெறுங் கஞ்சியையாவது வார்த்துவிட வேண்டும் என்ற ஆதங்கம், அவளை ஒரு புதிய உலகத்திற்கு இழுத்துச் செல்வது போல் இருந்தது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
18.08.2002 அன்று விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்திற்கான கடல்வழிப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நான்கு பீரங்கிப்படகுகளில் போராளிகள் கிழக்கு மாகாணத்திற்கான தமது பயணத்தை மேற்கொண்டதன் மூலம் ஒரு வித்தியாசமானதொரு பாதை திறப்பு நிகழ்வு நடந்துள்ளது.
விடுதலைப் புலிகளிற்கும் அரசிற்கும் இடையில் பல கட்டங்கள் தீர்வு காணப்படாது இழுபறி நிலையிலிருந்த இப்பிரச்சினை அரசு ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததையடுத்து ஒரு தீர்விற்கு வந்துள்ளது.
அரசு புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஏனைய விவகாரங்களிற்கு ஒரு இணக்கப் பாட்டிற்கு வந்தது போன்று விடுதலைப் புலிகளின் கடற் போக்குவரத்திற்கு ஒரு இணக்கப்பாட்டிற்கு வராமையினால் இவ விழுபறி நிலை நீடித்தது.
புரிந்துணர்வு உடன்படிக்கையில் விடுதலைப்புலிகளின் நிலைகளிற்கும் அரசபடைகளின் இராணுவ நிலைகளிற்குமிடையில் எவ வாறு ஒரு கட்டுப்பாட்டுக் கோடு வரையப்பட்டு விடுதலைப் புலிகளின் தேசிய இராணுவத்தை அங்கிகரித்ததோ அதேபோன்று கடலில் ஒரு இணக்கத்திற்கு வந்து விடுதலைப் புலிகளின் கடற்படையை அங்கிகரிக்க மறுத்தமையே நீண்டகாலம் இப்பிரச்சினை இழுபடுவதற்கு காரணமாகவிருந்தது.
இறுதியில் அரசிற்கும் விடுதலைப் புலிகளிற்குமிடையில் சர்வதேச யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சின் பயனாக புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர் தீர்வு காணப்படாத ஒரு முக்கிய பிரச்சினை தீர்விற்கு வந்துள்ளது.
இக்கடல்வழிப் பாதை திறப்பு ஏனைய யாழ் கண்டி ஏ-9 பாதைதிறப்பு போன்றோ அல்லது ஏ-5 பாதைதிறப்பு போன்றதோர் நிகழ்வல்ல. இது முற்றிலும் மாறுபட்ட அரசியல் இராணுவ யதார்த்தத்தைக் கொண்டது.
இக்கடல்வழிப் பிரயாணம் மூலம் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளிற்கு ஒரு அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் மூலம் கடற்புலிகள் கடந்துள்ள பத்தாண்டுகளில் மிகப்பெரிய ஒரு அரசியல் வெற்றியினை தமிழ் மக்களிற்குப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் அரசபடைகளோடோ அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கை சரத்துக்களை மீறும் வகையிலோ விடுதலைப் புலிகள் நடந்து கொள்ளவில்லை.
ஆயினும் சிறீலங்காக் கடற்படையினர் பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை வலுச்சண்டைக்கு இழுக்கும் வகையில் கடலில் பல்வேறு சம்பவங்களைத் தோற்றுவித்தனர். ஆயினும் கடற்புலிகள் பொறுமைகாத்து சமாதான நடவடிக்கையை உறுதிப்படுத்த உதவினர்.
இதன் ஒரு முயற்சியாகவே புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்னர் தமது இராணுவபலம் மூலம் கிழக்கிற்கு சாதாரணமாக மேற்கொண்ட கடல் பயணத்தை விடுதலைப் புலிகள் நான்கு மாதகாலம் நிறுத்தி வைத்திருந்தனர்.
கடற்புலிகளின் இப்பொறுமை காப்பு மூலம் தரையில் விடுதலைப் புலிகளிற்கு எவ வளவு உரிமையிருக்கிறதோ அவ வளவு உரிமை கடலிலும் இருக்கிறது என்பதை பறைசாற்றியுள்ளனர்.
அத்தோடு சிறீலங்காவில் இரண்டு தரைப்படைகள் மட்டுமல்ல இரண்டு கடற் படைகளும் இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை விடுதலைப் புலிகளின் நான்கு பீரங்கிப் படகுகளின் கிழக்கிற்கான பிரயாணம் தெளிவுபடுத்துகின்றது.
இது சமாதானத்தை விரும்பாத சக்திகளிற்கும் தென்னிலங்கையிலிருந்து கொண்டு களயதார்த்தை புரிந்து கொள்ளாது கூக்குரலிடும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் நன்கு உணர்த்தும்.
இந்நிலையில் இன்று தீர்வு எட்டப்பட்டிருக்கும் இக்கடல் வழிப் பயணத்தையும் தீர்வையும் சிக்கலானதொரு பிரச்சினையாக மாறாது பார்த்துக் கொள்வது அரசினுடைய கைகளிலேயே தங்கியுள்ளது
ஏனெனில் சிறீலங்காக் கடற்படையினரின் எதேச்சகரமான போக்கும் புரிந்துணர்வு உடன் படிக்கையினை குழப்பும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளுகின்ற முறையுமேயாகும்.
இதனையே முல்லையிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கான கடற்பயணம் ஆரம்பித்த அன்று உரையாற்றிய கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்கள் "இப்பயணம் தொடர்ந்து நடைபெறுவதும் நடைபெறாது விடுவதும் அரசைப் பொறுத்ததுலு}" எனத் தெரிவித்தார்.
அதேநேரம் விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து எந்த தடங்கலும் ஏற்படாது என்பதையும் உறுதிப்படுத்தி சமாதான முயற்சிகளிற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை தெளிவுற வெளிப்படுத்தியுள்ளார்.
கடற்புலிகள் சிறீலங்கா அரசோடு மிகப்பெரும் சண்டைகள் நடந்தபோது தமது சக்தியை நிலைநாட்டியவர்கள்.
சமாதான காலத்திலும் தமது சக்தியை நிலைநாட்டியுள்ளனர்.
சிறி.இந்திரகுமார்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மனிதனை
மனிதனாக்குவது உணர்ச்சிகள்தான்.
உணர்ச்சிகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அதேபோல் வெறும் சிந்தனைகளோடும் மனிதன் வாழமுடியாது. சிந்தனைகளும் உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று கலந்துதான் வாழ்க்கை அமைகிறது. இவ உணர்ச்சிகள்தான் மனிதன் பிழைத்திருக்க வழி செய்வதோடு அவனின் உடல் உள வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைகின்றது.
வைத்திய கலாநிதி
எழுமதி கரிகாலன்
னிதனை மனிதனாக்குவது உணர்ச்சிகள்தான். உணர்ச்சிகள் இல்லாமல் மனிதன் வாழ முடியாது. அதேபோல் வெறும் சிந்தனைகளோடும் மனிதன் வாழமுடியாது. சிந்தனைகளும் உணர்ச்சிகளும் ஒன்றோடொன்று கலந்துதான் வாழ்க்கை அமைகிறது. இவ உணர்ச்சிகள்தான் மனிதன் பிழைத்திருக்க வழி செய்வதோடு அவனின் உடல் உள வளர்ச்சிக்கும் ஏதுவாக அமைகின்றது.
பொதுவாக மனித உணர்ச்சிகளில் அன்பு, இரக்கம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம், தயக்கம் என்பன முக்கியமாக அடங்குகின்றன. மேலும் இம் மனித உணர்ச்சிகள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை மாறி மாறி வருபவைகள். இவ வாறான உணர்ச்சி மாற்றங்களை நாம், நமது அன்றாட வாழ்வில் காணலாம். ஆனால் இவ உணர்ச்சிகள் அளவிற்கு அதிகமாக அல்லது குறைவாக வெளிப்படுகின்ற போது அவை நோயாக பரிணமிக்கின்றன. இவற்றையே நாம் உள நோய்கள் என்கின்றோம். மனித உணர்வுகள் எப்போதும் அளவுடன் இருந்தால்தான் வாழ்க்கை சுகமாகவும், சீராகவும் ஓடிக்கொண்டிருக்கும். எனவே மனித வாழ்வை உருவாக்குவது உணர்ச்சிகள்தான் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இனி, நோய்கள் ஏற்படுவதற்குரிய காரணங்களை ஆராய்ந்து பார்த்தால்,
1. மூளைநரம்பு மண்டலத்தின் பாதிப்பு
2. பாரம்பரியம்
3. குடும்பத்திலுள்ள குறைபாடுகள்
4. சமூக பொருளாதாரக் குறைபாடுகள்
5. அதிர்ச்சியுூட்டும் நிகழ்வுகள்
ரூசூ009;போன்றவற்றை முக்கியமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், இக்காரணங்களினால் ஒருவரின் ஆளுமை வளர்ச்சியிலும் குறைவு ஏற்பட்டு அதனாலும் உள நோய் உண்டாகின்றது. இங்கு உள நோய்கள் 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
1. பாரது}ரமானவை- இதற்கு மருத்துவ
சிகிச்சை அவசியம்.
2. பாரது}ரமற்றவை- இதனைக் குணப்படுத்துவதற்குச் சரியான காரணங்களைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்தலும், தகுந்த உளவளத்துணை வழங்குதலும் போதுமானதாகும்.
இங்கு நாம் பாரது}ரமற்ற உளத்தாக்கங்களில்
1. பதட்ட நிலை
2. மனத்தளர்ச்சி
3. மன அழுத்தம்
4. அதிகரித்த பயம்
5. கிஸ்hPரியா
6.உணர்ச்சிகளால் தோன்றும் உடல்
நோய்கள்
உ-ம்: குடற்புண், தொய்வு, உடல் இரத்த அழுத்தம், கபாலக்குத்து போன்றவற்றை முக்கியமாகக் கொள்ளலாம். மனிதனின் உணர்வுகளை அளவிடுவதற்குப் பின்வரும் வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
1. முகப்பிரதிபலிப்பு
2. செயற்பாடு
3. நடத்தை
ஒருவரின் முகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களை வைத்துக்கொண்டு கவலை, பயம், சந்தோசம், ஆவல், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளைக் கண்டறியலாம். இங்கு கண் இல்லாக் குழந்தைகளும், ஐந்தறிவு படைத்த மிருகங்களும் கூட தம் உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்கின்றன. ஆகவே இப்பிரதிபலிப்பானது பிறப்பிலிருந்தே வருகின்றது.
இங்கு இவ வகையான உளத் தாக்கங்கள் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதனைவிட இவ வாறான பாதிப்புக்கள் வராமல் தடுப்பதே வாழ்க்கையை இடையுூறு இன்றி நடாத்திச் செல்ல வழிவகுக்கும்.
இவ வுளப்பாதிப்புக்கள் வராமல் தடுப்பதற்கு என்னென்ன விதங்களில் வாழ்வில் எண்ணங்களுக்கும் அதன் பிரதிபலிப்புகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கலாம் என்பதனைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாகப் பெண்கள்தான் ஆண்களைவிடக் கூடுதலாக உணர்ச்சித் தாக்கங்களுக்கு ஆட்கொள்ளப்படுகின்றனர் என்ற கருத்து நிலவுகின்றது. ஆனால் இருவரும் ஒரே அளவிலேயே தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் பெண்கள் ஆண்களைவிடத் தம் உணர்வுகளை கூடுதலாக வெளிக்காட்டுகின்றனர் என்றும் ஆண்கள் தம் உணர்வுகளை அடக்கி வைப்பதனால் இவர்கள் கூடுதலாக உணர்ச்சிகளால் ஏற்படும் உடல் நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அவசியம். மேலும் திறமைகளையும் சக்திகளையும் வளர்த்துக்கொள்ளவும் வேண்டும். படிப்பு, பணம் இல்லாவிட்டால் கூட ஏன் கை, கால் இல்லாமலும் ஒருவனால் வாழ்க்கையில் வெற்றிகளையும், சாதனைகளையும் படைக்க முடியும் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. இதற்குப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்ற குணம் இல்லாமலும் உடற்பயிற்சியிலும் மனப் பயிற்சியிலும் தேர்வு பெறும் எண்ணம் இருக்க வேண்டும்.
வாழ்க்கை என்பது நிகழ்ச்சி நிரல் மட்டுப்போட்டு நடக்கின்ற நிகழ்வல்ல. அங்கு எதிர்பாராத சம்பவங்களும் வாய்ப்புக்களும் மாறிமாறி கலந்து வருவதைக் காணலாம். இப்படி வருகின்ற எதிர்பாராத வாய்ப்புக்களில் ஒன்றுதான் பிரச்சினை ஆகும். இங்கு பிரச்சினையை பெரும் பிரச்சினையாக பார்ப்பதுதான் எமக்கு பிரச்சினையாகின்றது.
இங்கு சிலர் சிறிய பிரச்சினையை புூதாகரமாகப் பார்ப்பார்கள். இது பிரச்சினையை மேலும் கூட்டுமே தவிர ஒருபோதும் குறைக்காது. நாம் எப்போதும் பிரச்சினையை ஓர் தண்டனையாக எடுத்துக் கொள்ளாமல் சவாலாக எடுத்துக்கொண்டு செயற்பட வேண்டும்.
ரூசூ009;அடுத்ததாக கவலை எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுகின்ற ஒன்றுதான். ஆனால் பலர் இக்கவலையை வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக எடுத்துக்கொண்டு வேதனையில் வாழ்கின்றதைக் காண்கின்றோம். இங்கு நாம் இழப்பிற்காக வருந்த வேண்டும். ஆனால் அதை பின் விட்டுவிட்டுச் செயற்பட வேண்டும். சிலர் வாழ்வில் நடைபெற்ற சந்தோச, வெற்றி நிகழ்வுகளை விட்டுவிட்டு எப்போதும் தம் வாழ்வில் ஏற்பட்ட துன்ப, தோல்வி நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பர். இதனால் நட்டமேயொழிய லாபம் எதுவுமில்லை. இங்கு மேலும் சிலர் எதிர்காலத்தைப் பற்றியும் கடந்த காலத்தைப் பற்றியும் கவலைப்படுவர்.
வேறு சிலர் காரணமின்றி கவலைப்படுவர். இன்னும் சிலர் தம் இயலாமையை நினைத்து தம்மைத்தாமே தாழ்த்திக் கவலைப்படுவர். அத்துடன் சந்தோசமான விடயங்களை விட கோபமான நிகழ்வுகளே ஆழ்மனதில் பதிகின்றன.
இங்கு கடந்த காலம் என்பது துயர் அல்லது கனவு. எதிர்காலமென்பது புதிர் அல்லது கற்பனை. நிகழ்காலம் என்பது தான் எமக்குக் கிடைத்த பரிசு. எனவே நாம் இன்றைய நாளைப் பற்றிச் சிந்திப்போம், செயற்படுவோம்.
நாம் பார்க்கும் கோணம் எப்போதும் சரியானதாக இருக்க வேண்டும். சிலர் கண்ணுக்குத் தெரிந்த நல்ல விடயங்களை விட்டுவிட்டு அதில் தெரியும் சிறிய விடயங்களை எடுத்துக்கொண்டு கவலைப்பட்டு இதனால் சந்தோசத்தைத் தொலைத்துவிட்டுத் திரிகின்றார்கள்.
இதேபோலத்தான் காது கொடுத்துக் கேட்பதிலும் கோட்டை விட்டு விடுகின்றோம். பார்த்தல், கேட்டல் ஆகிய இரு விடயங்களையும் முறையே கண், காது மட்டும் செய்வதில்லை. இத்துடன் நாம் ஒவ வொரு மனிதனைப் பற்றிக் கொண்டிருக்கும் தெளிவில்லா ஆதாரம் இல்லா அபிப்பிராயம் என்கின்ற ஒரு சிறு துவாரத்தின் ஊடாகவும் பார்க்கின்றோம். ஒவ வொருவருக்கும் மற்றவர்மீது எப்போதும் ஓர் அபிப்பிராயப் பார்வை இருக்கும். அடுத்ததாக ஒவ வொரு தாக்கத்திற்கும் இரண்டு பெறுபேறுகள் இருக்கும். உதாரணமாக வெற்றி, தோல்வி. எந்தவித ஒரு தாக்கமும் ஆட்டிப்படைத்தாலும் அதில் இருந்து சிறப்பான அனுபவத்தைப் பெறமுயல வேண்டும். முடியாது என்ற வார்த்தை எம் அகராதியில் வரவே கூடாது. ஓர் முயற்சி பலதடவைகள் தோற்றால் அது தோல்வி அல்ல. அவற்றை வெற்றிக்கான படிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தோல்விகளிலிருந்து தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து எதிர்காலத்தில் நிவர்த்தி செய்ய வேண்டும். இதனை நாம் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கண்டறிந்து கொள்ளலாம்.
ரூசூ009;நம் வாழ்க்கையில் தோல்விகள், பிரச்சினைகள், கவலைகள், குழப்பங்கள் இல்லாத இடமென்றால் சுடுகாடு மட்டும்தான். இங்கு கடந்தகால பிரச்சினைகள் பாதிப்புக்கள் நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே தவிர ஒரு போதும் பாரமாக இருக்கக் கூடாது. எமக்கு மந்தம் சாதனையின் பின்பும் வரும். இதனை அசதி என்போம். சோதனையின் பின்பும் வரும் இதனைச் சோர்வு என்போம். எமக்கு அசதி வரலாம். ஆனால் சோர்வு வரக்கூடாது.
மேலும் எம் வாழ்வில் சலிப்பு அல்லது விரக்தி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் பொதுவாக எதிர்பார்த்த குறிக்கோளை எட்டாவிட்டால் சலிப்படைகின்றோம். இது தவிர ஏமாற்றங்களும் ஒருவித தோல்விதான். அவைகளும் எம் வாழ்வில் வரத்தான் செய்யும். எம்மை நாமே உற்சாகப்படுத்துவதுதான் சலிப்பைப் போக்குவதற்குச் சிறந்த வழி. இதைவிட எமது செயற்திறனை மாற்றி அமைப்பதினாலும் உற்சாகம் ஏற்படலாம் இதற்கு உதாரணமாக சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கொடுக்கலாம். இடமாற்றம் அல்லது பதவிமாற்றம் செய்யலாம்.
அடுத்ததாக தாழ்வு மனப்பான்மை எம்மை அணுகாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
இதில் மூன்று வகைகள் உண்டு.
1. உடல் சார்ந்த தாழ்வுமனம்
2. அறிவு சார்ந்த தாழ்வுமனம்
3. செயல் சார்ந்த தாழ்வுமனம்
ஒருவர் தன் தைரியத்தையும், நம்பிக்கையையும் இழக்கின்ற போதும் தன்னோடு மற்றவரை உடல், அறிவு, செயல் hPதியாக ஒப்பிட்டுப் பார்க்கின்றபோதும் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாகின்றது. இவர்கள் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள். பிறரோடு பழக முன்வரமாட்டார்கள். எந்தசெயலிலும் பின்னடிப்பார்கள். சிலசமயம் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுவார்கள். இத்தாழ்வு மனப்பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறுவதற்கு ஆக்கபுூர்வமான சிந்தனைகளை பிரயோகித்து, பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. எதிர்மறையாகச் சிந்திக்கக் கூடாது. "இயலாது, முடியாது" என்ற வார்த்தைகளை இயலுமானவரையில் தவிர்க்கவேண்டும். இவ அவநம்பிக்கையினால் முன்னேற வேண்டும் என்று நினைத்தாலும்கூட முடியாமல் இருக்கும் எப்போதும் முற்போக்காக சிந்திக்க வேண்டும். ஆனால் இம் முற்போக்கு சிந்தனைகூட கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடிக்கும் என்பதால் சிந்தனைகளை நீண்ட கால நோக்கோடு தள்ளிநின்று கவனித்து சகல உள மாற்றங்களையும் அனுபவங்களாக ஏற்றுக் கொள்கின்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் எம்மிடமுள்ள குறைகளைக்கூட வாழ்க்கைக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் தவறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றை எப்போதும் நியாயப்படுத்தவே முனைகின்றோம். இது தவறானது. இதனையே குதர்க்க புத்தி என்பர்.
எனவே நாம் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயலவேண்டும். மேலும் நாம் மற்றவர்மீது வீண்பழி சுமத்துவதையும் தவிர்க்கவேண்டும். இங்கு தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டுமேயொழிய தவறு பிடிக்க வேண்டும் என்று அலையக்கூடாது. ஒருவருக்கு இன்னொருவர் மீது தப்பான அபிப்பிராயம், சந்தேகம் என்பன வந்துவிட்டால் அவர் செய்யும் நல்ல விடயங்கள்கூட தப்பாகவே தெரியும். இதனை வாழ்வில் தவிர்க்கவேண்டும். நாம் எப்போதும் ஒருவரை ஆற்றல்திறன் ஊடாகவே பார்க்கவேண்டும். ஒருவர் பிழை செய்துவிட்டால் அதை பிழையென்று அடித்துச்சொல்லாமல் அவர் தான் செய்தவற்றைத் தானாகவே உணரும் வகையில் புரியவைக்கவேண்டும்.
மேலும் ஒரு மனிதனின் அடிமனம் தன்னை எதிராளி இகழும்போது, கசப்பான வார்த்தை கூறும்போது காயப்படுவதைவிடத் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத போதே கூடுதலாகக் காயப்படுகின்றது. எனவே மனிதனை மதிக்கத் தெரியவேண்டும்.
அடுத்ததாக நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும்போது நம்மிடமிருந்து வெளிப்படும் எதிர்விளைவு கோபமாகும். நாம் மற்றவர்கள் மீது கோபப்படும் போது நிதானத்தை இழக்கின்றோம். கை, கால் படபடக்கின்றது. இரத்தம் கொதிக்கின்றது. இது எதிரி செய்த தவறை ஜீரணித்துக்கொள்ள இயலாமல் எமக்கு நாமே கொடுக்கின்ற தண்டனையாக எடுத்துக்கொள்ளலாமல்லவா? ஆனால் கோபப்படாமல் இருக்கமுடியாது. கோபம் வருகின்றபோது அதனை அடக்குவதனாலும் உடலுக்குத்தான் பாதிப்பு. எனவே அளவாகத் தேவையோடு கோபப்படுவோம். நிதானமாகப் பிரச்சினைகளை ஆராய்வோம். காரணத்தைக் கண்டறிந்து சுமுகமாகத் தீர்ப்போம். மேலும் நாம் சந்தோசப்படுகின்றபோதுகூட எதனையும் எதிர்பார்ப்பது தவறு. நாம் எமக்கொரு பொருளைப் பரிசாகப் பெறுவதிலுள்ள சந்தோசத்திலும் பார்க்க மற்றவர்களுக்கு கொடுப்பதில்தான் அதிக சந்தோசம் கொள்ளவேண்டும். நாம் சந்தோசப்படுகின்றபோது எல்லாம் மனம்விட்டுச் சிரிக்கவேண்டும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பாட வேண்டும், ஆட வேண்டும். இவ வாறு செய்வதினால் மனதில் பாரம் குறையும், கவலைகள் கரையும், மன இறுக்கம் தளரும், புத்துணர்ச்சி ஏற்படும். ஒரு மனிதன் முன்னுக்கு வருவதற்கு 35வீதம் அறிவும் 65 வீதம் உறவைப்பலமாக்கும் ஆற்றல் அல்லது திறனும் அவசியமாகின்றது. இதில் இருந்து படிப்பறிவில்லாத ஒருவன்கூட சிறந்த மனிதனாக விளங்க முடியும் என்று தெரிகின்றதல்லவா? அத்துடன் ஒரு மனிதனின் வாழ்க்கையானது நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவையாவன,
1. தனிப்பட்ட வாழ்க்கை
2. குடும்ப வாழ்க்கை
3. தொழில் hPதியான வாழ்க்கை
4. சமூக வாழ்க்கை
இந்த நான்கு வகையான வாழ்க்கையையும் ஒரே சீராக கொண்டு செல்லக்கூடிய மனநிலையை ஒவ வொரு மனிதனும் பெற வேண்டும். இதுதான் வாழ்வின் வெற்றிக்கு வழி வகுக்கும்.
இறுதியாக நாம் வாழ்க்கையில் இழந்தால் மீளப்பெறமுடியாத விடயங்களில்
1. சொல்லப்பட்ட வார்த்தை
2. தவறவிடப்பட்ட வாய்ப்பு
3. கடந்துபோன நிமிடம்
போன்றவற்றை முக்கியமாக எடுத்துக்கொண்டு வார்த்தைகளைக் கவனமாக உதிர்க்கவேண்டும். வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். நிகழ்காலத்திற்குரிய விழிப்புக்களை ஏற்படுத்த வேண்டும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
போகுமிடமெல்லாம்,
கணவனில்லாமல் தனியே வாழும் பெண்கள் அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தனது மனைவி பிள்ளைகளைத் துறந்து இன்னொரு பெண்ணுடன் கண்ணெதிரே வாழும் கணவன், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விட்டுப் பிரிந்து சென்று வேறொரு திருமணஞ் செய்து வாழும் கணவன், "வேலையாப் போனவர் வரேல்லை" என்ற காரணத்துடனான கணவன் என்று பலவிதக் கணவன்மார்களை இழந்து பல பெண்கள்.
பெருந்திரளான மக்கள் நெருங்கி வாழ்வதால் இவ விகிதம் கூடுதலாகத் தென்படுகிறதா அல்லது உண்மையிலேயே சமூகத்தில் சீர்கேடு மலிந்துவிட்டதா என்று ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்.
பெண்களில் ஒரு சாரார் கணவனின்றித் தனித்து வாழும் துணிவைப் பெற, இன்னுமொரு சாரார் தனதும் குடும்பத்தினதும் கௌரவம் பேண வேண்டி அனைத்து வேதனைகளையும் தாங்கி மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். அவர்களிற் சிலர் ஏதோ ஒருவகையில் அவ வழுத்தத்தை விடுவிக்கும் வகையில் மேலதிக உணவு, உடை, ஆபரணங்கள் என்று தமது கவனத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்.
ஒரு சிலர்அதுதான் என் தலைவிதி என்று வாழ முற்படுகின்றனர்.
மிகவும் மென்மையான போக்குடன் வளர்க்கப்பட்ட பெண்கள் புத்தி பேதலித்து போகும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருபது வயதுடைய இளம் பெண்ணொருவர் முன் சூல்வலியெனும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோயுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில குழந்தை இறந்தது தாய்க்கு நன்மையே என அப்பெண்ணின் தாயாரும் ஏனையோரும் ஆறுதலுற்ற நிலையில் அவ விளம் பெண் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். குழந்தை இறந்ததே அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணம் என்று ஏனையோர் நம்பியிருக்க உண்மை வேறாக இருந்தது. கணவனுக்கும் அப்பெண்ணிற்கு மிடையில் ஏற்பட்ட பிணக்கும் வைத்தியசாலையில் நோயுற்றிருந்த காலத்தில்கூட கணவன் வராததும் அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணமாக இருந்தது. மன நிலைக்குழப்பத்தில் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் தாயின் மேல் எறிந்து "இவதான் எல்லாத்துக்கும் காரணம்" என்று கூறியபோது நானும் அதையே உணர்ந்தேன். தனது உடல்நிலை தொடர்பாகவோ, தனது பிள்ளை தொடர்பாகவோ எந்த முடிவையும் தானே எடுக்க முடியாது அனைத்திற்கும் தாயையே எதிர்பார்த்திருக்கும் வகையில் அப்பெண்ணின் வளர்ப்பு இருந்தது. வாழ்வின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக் கொள்ளும் திடமற்ற மென்மைப்போக்குடன் அப்பெண் வளர்க்கப்பட்டிருந்தாள்.
அதன் விளைவு!?
"என்ரை பிள்ளை வீட்டைவிட்டு வெளியிலை போகாள். அவவுக்கு ஆட்களைக் கண்டாப்பயம். வடிவாக் கதைக்கமாட்டா. சரியான சொப ற் அவ" என்று தன் பிள்ளையைப் புகழ்ந்து பிழையான பாதையில் வழிகாட்டும் தாய்மார் வெளியுலகையும், வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொள்ளும் திடமிக்க சிந்தனைத் தெளிவுடன் தமது பிள்ளைகளை வளர்த்தால் என்ன?
"உயர்கல்வி, உயர்தொழில், காதலித்தவனையே கைப்பிடித்த மகிழ்ச்சியான திருமணம், உயர்தர வாழ்க்கைமுறை, சமநிலையில் தன்னை மதித்து நடக்கும் கணவன், சிறிதும் பெரிதுமாகச் சிற்சில தனிப்பட்ட எதிர்கால இலட்சியங்கள் என என் வாழ்க்கை நம்பிக்கையுூட்டுவதாகத்தான் இருந்தது. ஆனால் குடும்பத்தில் ஏற்படும் சிறு குழப்பங்கள், பிணக்குகளின்போது எனது கணவரின் விமர்சனங்கள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. எனது சமத்துவநிலை கண்டனத்துக்குரியதாகி என் நிலையைக் கேள்விக்குறியாக்குகிறது. என் நடத்தையையே சந்தேகத்திற்குரிய தாக்கிக் கேள்வி கேட்கும் கணவரை அனுசரித்துப் போவதையே நான் விரும்பவேண்டியிருக்கிறது. தவிர எனது பிரச்சினைகள் வெளியே எனது நெருங்கிய உறவுகளுக்குத் தெரிய வருவதுகூட எனது கௌரவத்திற்குப் பங்கம் என்பதால் என் மனதிற்குள்ளேயே வைத்துக்குமைந்து எந்நேரமும் நான் ஒரு மன அழுத்த நிலையிலேயே இருக்கிறேன்"
இது ஒரு குடும்பப் பெண்ணின் வேதனை மிகுந்ததொரு வாக்குமூலம். தனது நடத்தையையே கேள்விக்குள்ளாக்கி கணவன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போது கூட அவனை விட்டுப் பிரியாதது 'தமிழ்ப் பெண்மை'.
நு}ற்றாண்டு காலமாக எமது பெண்களை ஆணை விடக்கீழான நிலையில் வைத்திருக்கும் மரபைக் கொண்டவர்கள் நாம். இந்நு}ற்றாண்டு காலக் கருத்துப்பதிவுகளைக் கணத்தில் து}க்கியெறிந்து சமூகம் மாறுவதென்பது சாத்தியமற்றதொன்றே. எனினும் சிறிது சிறிதாக மனப்போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்காலச் சந்ததியினரின் கருத்தமைவுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து புதியதொரு பரம்பரையை உருவாக்கும் என்று நம்புவோம்.
மேலே கூறிய பெண்ணைப் போன்று தன் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பெண்கள் சமூகம் ஒன்று உருவாவது ஒரு மாற்றத்தின் அறிகுறியே. ஏனெனில் இதுவரை காலமும் நம் பெண்கள் குடும்பத்தில் தம் நிலை என்ன என்பதையே அறிந்தவர்களாக இருக்கவில்லை. தாமும் சமநிலையில் மதிக்கப்படவேண்டும், தமது தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடாது என எதிர்பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு பெரிய மாற்றமே. கல்வியறிவு பெற்ற தொழில் பார்க்கும நடுத்தரவர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வதைவிட இப்போதெல்லாம் கீழ்த்தட்டு வர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வது அதிகமாகவே உள்ளது.
நீதிமன்றங்கள் பெண்ணின்பால் இரக்கங்கொண்டு அளிக்கும் தீர்ப்புகளை மறுதலித்து தமக்குத்தாமே தீர்ப்பு வழங்கிக் கொள்ளும் புதுயுகப் பெண்களாக அப்பெண்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனது கணவன், எனது உரிமை, அவன் என்னுடனேயே வாழ வேண்டும் என்று இடையில் வந்த இன்னொரு பெண்ணுடன் உரிமைப்போர் நடத்திக் கணவனை மீட்டு வந்த காலம் போய், 'என்னை மறந்து இன்னொரு பெண்ணுடன் சென்றவன் எனது கணவனல்ல, அவன் எனக்கு வேண்டாம ' என்று மறுக்கும் துணிச்சலுள்ள பெண்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு பிள்ளைகளின் தாயான ஒரு பெண், இளமையும் துடிப்பும் வேலையில் ஆர்வமுமிக்க அப்பெண்ணின் நெற்றி எந்தவித அடையாளமுமின்றி எப்பொழுதும் வெறுமையாகவே இருக்கும். திருமணமாகாத சிறுபெண் என்று எண்ணியிருந்த எனக்கு அப்பெண் திருமணமானவர் என்ற உண்மை ஆச்சரியமளித்தது. அத்திருமணத்தின் சோக முடிவுரை சிறிதளவுகூட அப்பெண்ணின் முகத்தில் தென்படாதது அதைவிடப்பெரிய ஆச்சரியம். "இன்னொரு பொம்பிளையோட அவருக்குப் பழக்கம் இருந்ததக்கா. கனநாளா எனக்குத் தெரியும். தெரியாதது போல பொறுத்துப் போனனான். ஆனா வரவர எனக்கு அடி, பேச்சு என்று ஒரே பிரச்சினை. காசு கொண்டு வா என்று ஒரே கரைச்சல். அவவுக்குக் கொடுக்கிறதுக்காக. நான் என்ரை உரிமையை வெளிக்காட்ட வேண்டுமென்றதுக்காக நீதிமன்றில் கேஸ் போட்டனான். கேஸ் என்ரை பக்கமாத்தான் தீர்ந்தது. ஆனா நான் சேர்ந்து வாழமாட்டன், அவவோடை போகட்டு மென்று சொல்லிப் போட்டன். பிள்ளையளுக்குக் கொஞ்சக் காசு கட்டச்சொல்லி கோர்ட் சொன்னது. நான் அதுவும் வேண்டாமென்று சொல்லிப்போட்டன். பிச்சை எடுத்தென்றாலும் என்ரை பிள்ளையளை நான் வளர்ப்பன்" தெளிவும் உறுதியுமாக வெளிவந்தன வார்த்தைகள். அந்தத் தெளிவும் உறுதியும்தான் அந்தப்பெண் அமைதியாக சந்தோசமாக வாழ்வதன் ஆதாரம். இத்தெளிவு எத்தனை பேருக்குக் கைவரும்.
'திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இறுதி இலக்கு' என்ற சமூகத்தின் கருத்துப்படிமம் திருமணம் தவிர்ந்தும் ஒரு வாழ்க்கை உள்ளது என ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை எமது பெண்களுக்கு வழங்கவில்லை.
பெரும்பாலான பெண்கள் நிலையான, நிறைவான திருமண வாழ்க்கையை விரும்பும் போக்கு சரியானது, யதார்த்த புூர்வமானது. ஆனால் அநீதிகளும் கொடுமைகளும் இழைக்கப்படும்போது அவர்களின் வாழ்வு அத்துடன் முடிந்துவிடக்கூடாது. அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், அவற்றினால் நிலைகுலைந்து போய்விடாமல் வாழ்வின் தொடர்ச்சியை திடமான மனதுடன் தாம் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ளவும் அவர்கள் துணிவு பெற வேண்டியிருக்கிறது.
- கு.தீபா -
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வரலாற்றின் ஒவ வொரு வளர்ச்சிக் கட்டங்களிலும் குடும்பம் என்ற அமைப்பும் அது தொடர்பான கருத்து நிலையும் மிகவும் சிக்கல் வாய்ந்த வளர்ச்சிப் போக்கையே காட்டி வருகின்றது. சமூகமே குடும்பமாக இருந்த ஆதிகால சமூக அமைப்பிலிருந்து மெல்ல மெல்ல மாறி இன்று ஒவ வொரு குடும்பமுமே தனித் தனிச் சமூகமாக, குடும்ப உறுப்பினர்களே தனித் தனித் தீவுகளாக மாறும் காலப் பகுதியில் நாம் வாழ்கின்றோம்.
அடித்தளம் பலமானதா..?
ஒருவனை ஏனையவர்களிலிருந்து தனித்துவமானவனாகக் காட்டும் உடல், உள, சமூக, அறநெறிப் பண்புகளும், இப்பண்புகளுக்கு இடையிலான இடைவினைத் தொடர்புகளும், சூழலுடன் இவை ஒத்திசைவாகவோ, முரண்பட்டோ இயங்கும் தன்மையும் ஒன்றிணைந்த ஒரு கலவையே ஆளுமையெனக் கருதப்படுகிறது. தோற்ற அமைவு, சிந்தனைகள், அனுபவங்கள், கற்பனைகள், விருப்பங்கள், பழக்கவழக்கங்கள், நடையுடை பாவனைகள் அனைத்துமே ஆளுமைக்குள் அடங்கியிருக்கும்.
மனித வளர்ச்சிக் கட்டங்களில் முதல் ஐந்து ஆண்டுகளிற்தான் ஆளுமை விருத்திக்கான அடித்தளம் போடப் படுகிறது எனக்கூறும் உளவியலாளர் குழந்தையின் உடலமைப்பு, குழந்தை வாழும் சுற்றுச்சூழல்கள், குழந்தை பெறும் அன்பின் அளவு, குழந்தை எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகள், குழந்தையின் வாழ்வில் நிகழும் ஆளிடைத்தொடர்புகள குடும்பத்தினரின் பொருளாதாரநிலை, குடும்பத்தினரின் நடத்தைப் போக்கு என்பன குழந்தைப்பருவ ஆளுமையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை வலியுறுத்துகின்றனர்.
குழந்தைப் பருவத்தின் முக்கியத்துவம் தொடர்பாக தமிழ்ச் சமூகம் மற்றவர்களைவிட முன்கூட்டியே சிந்திக்கத் தொடங்கிவிட்டது என்பதை கோடிகாட்டுவதாக "தொட்டில் பழக்கம்", "இளமையில் கல்வி", "ஐந்தில் வளையாதது" போன்ற சொற்றொடர்கள் அமைந்தாலும்கூட, குழந்தையின் உடல் உள மேம்பாட்டில் கவனம் செலுத்தி குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதற்குப் பதில் இறுக்கம் நிறைந்த, பழமைவாத கருத்தியல் அச்சுக்களில் வார்ப்பதற்கான தயார்ப்படுத்தல்களுக்கே இவை பெரிதும் உதவின என்ற கசப்பான உண்மையையும் நாம் மனதில் கொண்டேயாக வேண்டும்.
குழந்தையின் முதலாவது உலகம்
கருவறை தொடக்கம் கல்லறை வரை மனித ஆளுமையை வடிவமைப்பதில் சமூக அமைப்புக்கள் வகிக்கும் பங்கு அளவிடற்கரியது. சமூகம் ஒன்றின் சிக்கல் வாய்ந்த தன்மையைத் துல்லியமாக வெளிக்காட்ட உதவும் இவ வமைப்புக்களில் முதன்மையானதும் முக்கியமானதும் குடும்பமும் அதன் சுற்றுப்புறச்சூழலுமே. மனிதப் பண்புகளின் வளர்ப்புப் பண்ணைகளாகக் கருதப்படும் குடும்பம் என்ற ஆதார அமைப்பே பாடசாலை செல்லமுன்னர் உள்ள முதல் ஐந்து ஆண்டுகாலப் பகுதியில் குழந்தை ஆளுமை விருத்தியின் போக்கை நிர்ணயிக்கும் ஆற்றல் மிக்க கருவியாக அமைகிறது.
அன்பும், கவனிப்பும், நல்ல பண்புகளும், சேவை மனப்பாங்கும் நிறைந்த குடும்பத்தில் வளரும் குழந்தை சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உடல் உள மேம்பாட்டுடன் வளர்வதுடன் குடும்பத்தின் மேம்பாட்டையும் உயர்த்தும்.
"குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள். அதன் பின் அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை" என்று இற்றைக்கு இருநு}று ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்ட சுவிஸ் கல்வியியலாளரான பெஸ்ரலோசியின் கூற்றிலிருந்து குழந்தை ஆளுமை விருத்தியில் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
பண்பாட்டுப் படையெடுப்புக்கள், மனிதனைப் புூகோளப் பிராணியாக்கியிருக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள், பெண்ணியச் சிந்தனைகள் போன்றவற்றால் குடும்பம் என்ற அமைப்பு முறிந்தும் சிதைந்தும் உருமாறியுள்ள போதும் உலகின் பெரும்பாலான இடங்களில் மனித ஆளுமையை வடிவமைக்கும் ஆதிக்கம் வாய்ந்த அமைப்பாகவே இன்றும் நிலைகொண்டிருக்கின்றது.
முதல் உலகின் முரண்கள்
வரலாற்றின் ஒவ வொரு வளர்ச்சிக் கட்டங்களிலும் குடும்பம் என்ற அமைப்பும் அது தொடர்பான கருத்து நிலையும் மிகவும் சிக்கல் வாய்ந்த வளர்ச்சிப் போக்கையே காட்டி வருகின்றது. சமூகமே குடும்பமாக இருந்த ஆதிகால சமூக அமைப்பிலிருந்து மெல்ல மெல்ல மாறி இன்று ஒவ வொரு குடும்பமுமே தனித் தனிச் சமூகமாக, குடும்ப உறுப்பினர்களே தனித் தனித் தீவுகளாக மாறும் காலப் பகுதியில் நாம் வாழ்கின்றோம்.
குடும்பங்களுக்கிடையிலான சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அடிப்படை முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடியவை என்பது உண்மைதான். ஆனாலும் குடும்பத்திற்குள்ளே நிலவும் முரண்பாடுகள் குழந்தை ஆளுமையை மிக மோசமாகப் பாதிக்கக்கூடியவை. விருப்பமற்ற திருமணம், புரிந்துணர்வற்ற வாழ்க்கை, அறியாமை, செயலின் காரண காரியத் தொடர்பறியாத மேம்போக்கான வாழ்நிலை, முழுக்க முழுக்க இன்னொருவரில் தங்கியிருக்கும் பெண்களின் வாழ்க்கை, சமூகச் சீரழிவுகளின் பலிக்கடாக்களாக பெண்களே அதிகமாய் இருத்தல் என்பன குடும்பத்திற்குள்ளே பல மறைமுகப் பாதிப்புக்களை ஏற்படுத்தவல்லது. குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஒன்றில் அதீத கவனம் - அதீத அரட்டை, புறக்கணிப்பு - ஒத்துழைப்பு, பணிவு - அதிகாரம், பிணைப்பு - ஒதுக்கம், சுதந்திரம் - கட்டுப்பாடு என்று ஒன்றிற்கொன்று முரண்பட்ட இரு தீவிர முனைகளைக் கொண்ட தொடர்புத் தன்மை நிலவுவதற்கு இம் முரண்களே காரணமாகின்றன.
குடும்பமும், சுற்றுப்புறச் சூழலும் யுத்த நெருக்கடிகளினால் சிதறுண்டு போதல், ஒன்றுக்கொன்று முரண்பட்ட பண்பாட்டு அம்சங்களைக்கொண்ட குடும்பங்கள் ஓரிடத்தில் பின்னப்படுதல், சமூகத்தின் சமூக, பொருளாதார, புவியியல் அம்சங்களுக்கு இசைந்துபோகக்கூடிய வகையில் குழந்தை வளர்ப்புத் தொடர்பாக ஆய்வுகள் செய்வதை விடுத்து மேலைத்தேய கருத்தியல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பிரயோகங்களை அப்படியே உள்வாங்குதல், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் இரட்டைச்சுமை காரணமாக குழந்தைக்கும் தாய்க்குமிடையிலான பிணைப்பில் மாற்றம் என்பன முதல் உலகின் முரண்களை மேலும் அதிகரித்திருக்கின்றன.
குடும்ப வாழ்க்கையின் சுமுகமற்ற நிலைக்கு இந்த முரண்களே காரணம் என்பதை அறியாமல் அல்லது அறியவிரும்பாமல் இந்த முரண்களால் உள்ளுக்குள் நொருங்கி சிதிலமடைந்து கொண்டு போகும் குடும்ப அமைப்பை இழுத்துப்பிடித்து, ஒட்டுப்போட்டு முழுமையாகக் காட்ட மேற்கொள்ளப்படும் பிரயத்தனங்கள் மீண்டும் மீண்டும் தீர்வுகாண முடியாத முரண்களுக்கே இட்டுச்செல்லும் என்பதை படித்த சமூகமே உணராமல் இருப்பதுதான் இங்கு ஆச்சரியத்திற்குரியது.
ஆட்டம் காணும் அறிதல் தளம்
முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு குழந்தை கற்கும் அளவைப்போல் அதன் வாழ்க்கையில் வேறு எந்த மூன்று ஆண்டுகளிலும் கற்பதில்லை" என்கிறார் இருபதாம் நு}ற்றாண்டின் சமூகவியல் போக்கின் நடுநாயகம் எனப்போற்றப்படும் அமெரிக்க கல்வியியலாளர் ஜோன் பீவே. பிறந்த 10-12 மாதங்களுக்கு உள்ளாகவே (சில சமயம் அதற்கும் முதல்) தனது முதலாவது சொல்லை சுத்தமாக உச்சரிக்கும் ஆற்றல் பெற்ற குழந்தை 11ஃ2-2 வயதுக்கிடையில் சொற்களை இணைத்துப் பேசும் ஆற்றலைப் பெறுகின்றது. 3-4 வயதுக்கிடையில் ஒரு குழந்தையின் சொல்லாட்சி 1500 சொற்களையும் தாண்டுவதாக மொழியியல் கணிப்பீடு ஒன்று கூறுகின்றது.
குழந்தையின் அறிதல் திறன் 11ஃ2-5 வயதுக்கிடையில் அபரிமித வளர்ச்சியடைவதுடன் இரண்டு வயதுவரை மொழியின் உதவியின்றி வெறும் புலன்களதும், உடல் இயக்கத்தின் உதவியுடனுமே இது வளர்கின்றது. புலன்களிலிருந்து மறைக்கப்பட்ட அனைத்துமே மறக்கப்படுகின்றன. புலன்வழித் தொடர்பே முக்கியம் பெறுவதால் ஓரிரு தடவை வந்துபோகும் சொற்களைவிட குழந்தையின் செவியில் திரும்பத்திரும்ப ஒலிக்கும் சொற்களும், குழந்தையைச் சூழ நடப்பவைகளும் குழந்தை மனதில் கல்லில் எழுத்துப்போல் ஆழப்பதிந்துவிடுவது தவிர்க்க முடியாததாகும்.
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைப் பராமரிப்பு அதனிலும் ஓரிரு வயது கூடிய குழந்தைகளின் கையிலேயே ஒப்படைக்கப்பட, வேலை பார்க்கும் நடுத்தரக் குடும்பங்களிலோ படிப்பறிவு குறைந்த பராமரிப்பாளரின் கரங்களிலேயே குழந்தையின் பெரும் பொழுது கழிகிறது. இதனால்தான் எண்ணற்ற விளையாட்டுப் பொருட்களை குழந்தை முன் பரப்பிவிட்டு தம்பணி முடிந்ததாகக் கருதும் பெற்றோர்களதும், வீட்டிலிருக்கும் சொற்ப நேரத்துக்குள் நற்பண்புகளைத் திணிக்க முனையும் வேலை பார்க்கும் பெற்றோர்களதும் குழந்தைகள் மொழித்திறன் பெறும் வாய்ப்பின்றி, பண்பற்ற சூழலில் வளரும் எதிர் வீட்டுக் குழந்தையினதும், அதனைத் து}ஸணை வார்த்தைகளால் குளிப்பாட்டும் தந்தையினதும் சொல்லாடல்களை இறுகப் பற்றிப்பிடிக்கும் இக்கட்டு நிலையை கவலையுடன் உள்வாங்க வேண்டியுள்ளது.
இதைவிட முக்கியமான அம்சம் ஒன்றும் உள்ளது. சிலேடைப் பேச்சுக்களுக்கும், அடுத்தவர்களைக் கண்டிக்கவோ, அச்சமூட்டவோ, விமர்சிக்கவோ சொற்களை விட அங்க அசைவுகளை அதிகம் பயன் படுத்துவதற்கும், வெருளி, மொக்கு, தடிச்சி போன்ற ஒற்றைச் சொல்லிலேயே விடயத்தின் முழுப் பரிமாணத்தையும் விளக்குவதற்கும் பெயர் பெற்ற குடும்பங்களில் குழந்தைகளின் இந்தக் குறிப்பிட்ட பருவத்திற்குள் பெறக்கூடிய அறிதல் திறனை இழந்து விடுதல் ஆச்சரியமில்லை.
"செய்யாதே" பல்லவி
முழுக்க முழுக்க பிறரின் அரவணைப்பிலேயே தங்கியிருக்கும் 11ஃ2 வயது வரையிலான குழவிப் பருவத்திலிருந்து மெல்ல விடுபட்டு தனித்தியங்கும் ஆற்றலுக்குள் காலடி வைக்க முயற்சிக்கும் பருவமாக தளர்நடைப் பருவம் அமைகிறது. இப்பருவத்தின் பிரதான குணாம்சங்களில் ஒன்றான அதிகூடிய உடல் இயக்க வளர்ச்சி காரணமாக குழந்தை அதிக சுறுசுறுப்பைக் காட்டும். முன் நோக்கியோ பின் நோக்கியோ நடக்கவும் ஓடவும், பெற்றோர் காட்டிக் கொடுக்காத பலவற்றை தானே முயன்று செய்யவும் து}ண்டும் இப் பருவத்தில் குழந்தை தனது தனித்தியங்கும் ஆற்றலை தானே சோதித்துப் பார்க்கும்.
"தனித்தியங்கும் மனித உயிரியாக தன்னைக் கருதும் உணர்வே தன்னைச் சூழவுள்ள உலகுடன் தன்னை இசைவித்துக் கொள்வதற்கான ஆற்றலைத் தீர்மானிக்கிறது" எனக்கூறும் எறிக்சன் என்னும் சமூக உளவியல் அறிஞர் சமூக பொருளாதார, குடும்ப சூழலைப் பொறுத்து இந்த ஆற்றல் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடுகிறார். தனித்தியங்கும் விருப்பே ஆராய்வுூக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருப்பதனால் தனக்குப் போதியளவு பாதுகாப்பும் அன்பும் உண்டு என்ற நம்பிக்கையுள்ள குழந்தை இரண்டு வயதுக்குள்ளேயே புது முயற்சிகளில் இறங்கத் தொடங்கிவிடும்.
கண்டதையும் எடுத்துப் பல்லால் கடித்தல் பற்களின் பலத்தைச் சோதித்துப் பார்க்கவும், பொருட்களை இழுப்பதும் தள்ளுவதும் கண்ணுக்கும் கைகளுக்குமுள்ள தொடர்பை உறுதிப்படுத்தவுமே என்பது பல பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லை. "பொத்திப் பொத்தி வளர்த்தல்" என்ற அதீத கவனிப்பினால் சுயமாக இயங்கவிடாது மாறி மாறி காவிக்கொண்டு திரிதல், தொட்டில்கள், வாளிகள், ஏணைகள் போன்றவற்றுக்குள் குழந்தையை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்தல், உடையும் பொருட்களை குழந்தையின் கண் முன்னே விடாது முன்னெச்சரிக்கையுடன் அப்புறப்படுத்துவதை விடுத்து குழந்தை அழ அழ பலவந்தமாக அதனிடம் இருந்து பறித்தல் போன்றன குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலைச் சிதைத்து ஒன்றில் எதற்கெடுத்தாலும் எதிர்நடவடிக்கையில் இறங்கும் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை அல்லது பயந்து அழும் தாழ்வுணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பதைப் பெற்றோர் மறந்து விடுகின்றனர்.
சாப்பாடு தீத்தும்போது பாத்திரத்தை குழந்தை பறிக்க முனைவது தானும் அது போல் செய்ய நினைக்கும் ஆராய்வுூக்கம் என்பது மட்டுமல்ல, இதனை உணர்ந்து கொட்டுப்படாத பாத்திரம் ஒன்றில் சிறிதளவு போட்டுக் கொடுப்பதன் மூலம் குழந்தைதானே அழகாகச் சாப்பிடக்கூடிய ஆற்றலை வளர்க்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு இருக்கும் உடல் ஆரோக்கியம், இடியப்ப உரலில் பிழிந்த சோற்றுப் பசையையும் முட்டையையும் இடித்து இடித்து தீத்தும் தாய்மாரின் குழந்தைகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய தொன்றாகும்.
சொல்லை வென்றிடும் செயல்
'பார்த்துச் செய்தல்' என்னும் பண்பு மனித வாழ்வின் அனைத்துப் பருவங்களுக்கு முரிய பொதுப்பண்பு எனினும் புலன்வழித் தொடர்பிலேயே பெரிதும் தங்கியிருக்கும் குழந்தைப் பருவத்தின் முதன்மைப் பண்பாகவும் இது கருதப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் சுற்றுப்புறச் சூழலுடன் நெருக்கமான தொடர்பைப் பேணும் பாடசாலைப் பருவத்திலும் கூட சோறு சமைக்கும் விளையாட்டையோ, கையில் அகப்படும் துவாய், துணிகளை கொண்டையாகச் சுற்றிக்கொண்டு அம்மா வேடம் போடுவதையோ குழந்தைகள் கைவிடுவதில்லை.
கோயில் உள்ள ஊரில் சூரன் போர், புூசை பண்ணுதல், தவில், நாதஸ்வரம் வாசித்தல் என்பனவும், குளங்கள் அதிகம் உள்ள ஊரில் குளங்கட்டி கலிங்கு பாயப் பண்ணுதலும், சில அங்குலமே முளை விட்ட பனம் விதை 'கிரனைட்' ஆக மாறுவதும், பென்சில் வைக்கும் பெட்டி 'வோக்கி'யாக மாறுவதும் சூழலுடன் குழந்தைகளுக்குள்ள புலன்வழித் தொடர்பின் வெளிப்பாடே.
குழந்தையின் 6-8 மாதங்களிலேயே தோன்றிவிடும் இப்பண்பே குழந்தையின் ஆராய்வுூக்கத்தை வளர்த்து சுயபடைப்புக்கு வழிகோலுவதால் குழந்தைக்கு மிகவும் அவசியமாகக் கொடுக்கவேண்டியது பார்த்து நடந்து கொள்வதற்கான நல்ல மாதிரிகளே அன்றி போதனையல்ல.
புலன்வழித் தொடர்பின் முக்கியத்துவத்தை உணராதபடியால்தான், தாம் நித்திரை விட்டு எழும்பும் போதே குழந்தையையும் எழுப்பி, அதன் கண்ணெதிரிலேயே அது பழக வேண்டியதை தாம் செய்வதன் மூலம் அதையும் பின்பற்றத்து}ண்டும் இலகுவான வழிமுறை இருக்க, காலை நேரச் சமையலறைப் பரபரப்பில் முகம் கழுவ நேரமின்றி, கலைந்த தலையும் அழுக்கேறிய உடையுமாக நின்று கொண்டு அடித்தும், உறுக்கியும், கெஞ்சியும் பலவந்தப்படுத்திக் குழந்தையை சுத்தம் செய்து பள்ளிக்கு அனுப்ப நினைக்கும் அன்னையோ அல்லது கையில் சிகரட்டுடன் நின்று கொண்டு, சாம்பிராணிக் குச்சியால் அல்லது பேப்பரைச் சுருட்டி சிகரட் குடிப்பது போல் பாவனை காட்டும் குழந்தையைத் தண்டிக்க நினைக்கும் தந்தையோ தமது செயற்பாட்டில் தோல்வியடைவது மட்டுமன்றி, சுத்தமும், நற்பழக்கமும் தமக்கு மட்டுமே அமுல்ப்படுத்தப்படும் விடயங்கள் என்ற மனப்பதிவை குழந்தையிடம் ஏற்படுத்தி அதன் எதிர்க்கணிய விளைவுகளை எதிர்கொள்ளும் பரிதாபத்துக்கு மீட்சியே இல்லாமல் போய் விடுகின்றது.
இதே போன்றுதான் சற்று வளர்ந்தபின் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கும் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற போதனையை விடவும் தனது அம்மா அவரின் அப்பா அம்மாவை எப்படி நடத்துகின்றார் என்பது குழந்தையிடம் கூடுதல் பதிவை ஏற்படுத்தவல்லது.
மனிதன் பிறப்பதில்லை
மனித ஆளுமையை வடிவமைப்பதில் மிகவும் முக்கியமானது ஒருவன் தன்னைப்பற்றி தான் கொண்டிருக்கும் கருத்து நிலையே. குழந்தையின் மரபு நிலை, பெற்றோர்களது நடத்தை, குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு, சூழலில் கிடைக்கும் நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் செல்வாக்கு என்பன தற்கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 'மனிதன் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றான்' என்ற உண்மை மொழியின் அடிப்படையில் ஒரு குழந்தையை வார்க்கும் பள்ளிக்கூடம் குடும்பமே.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நகரங்களை நோக்கி நகரும் மக்கள் வெறிச்சோடிப்போகும் கிராமங்கள்
மக்களின் மனதில் புதிய தெம்பு. ஊரை இழந்து உறவை இழந்து சொத்து இழந்து என்று இழந்தவற்றின் விபரத்தையே நீளமான பட்டியலாக வைத்திருந்து இனி இதுதான் கதி மீட்சிக்கு விமோசன மேயில்லை என்று நொந்துபோன மக்களின் மனதிலும் ஒரு வகையான திருப்தி இருந்தது.
வரலாறு காணாத வெற்றிகள் பலவற்றிற்குப் பின்தளத்தில் நின்று ஆக்கபுூர்வமான பங்களிப்பினை மனந்திறந்து ஆற்றியதன் வெளிப்பாடுகள்தான் அது.
நாடு எனக்கு செய்தது என்பதற்கு அப்பால் நாட்டுக்கு நான் ஆற்றியதன் வகையிலான மனத்திருப்தி என்றும் சொல்லலாம். புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முன்பிருந்த வன்னி மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பு இவ வாறுதான் அமைந்திருந்தது.
யுத்தநிறுத்தம், உடன்படிக்கை, பாதை திறப்பு என அதன்பின்பு ஏற்பட்டுள்ள சமூக மாறுதல்கள் மக்களின்சிந்தனை வீச்சை சற்றுவேகமாக்கியது.
பல்வேறு இடப்பெயர் வின்போது அவ வப்போது அடைக்கலம் தந்த காணியின் ஒதுக்குபுறமான தற்காலிக காட்டுத்தடிகளால் அமைக்கப்பட்ட அந்த கொட்டில் வீடுகள் சிறிது சிறிதாக நகரங்களை நோக்கி நகரத் தொடங்குகின்றன. இது சமாதான உடன்படிக்கைக்கு பின்னான வெளிப்பாடுகள்.
ஐந்து வருடங்களாக வாழ்வுக்கு புகலிடம் அளித்து அடைக்கலம் தந்த அந்த சூழலுக்கு நன்றி சொல்லி மக்கள் புதுயுகம் ஒன்றினை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனா
இவ்வாறான நகர்வுகள் ஒரு சமூகத்தேவையின் அழுத்தத்தினால் இடம் பெறுகின்றதே தவிர நகர்விற்கான குடிசார் பொருண்மிய விழுக்காடு என்பது இம்மக்க ளிடையே புூச்சியமாகவேயுள்ளது.
காலம் ஏற்படுத்தியிருக்கின்ற மாற்றம் மக்களை மீண்டும் சொந்த இடங்களை நோக்கி இடம்பெயரச் செய்துள்ளது. கடுமையான போரியல் சூழல் ஒன்றுக்குள் எவ வித ஆடம்பர அபிவிருத்தியையோ அல்லது நவீன அறிவியல்துறைசார் நடைமுறையையோ தன்னுள் ஈடுபடுத்திக் கொள்ள முடியாத, இதற்கு வாய்ப்பில்லாத மக்கள் புதிய கலாச்சாரத்தோடும், புதுவகையான பொருளாதார பண்புகளோடும் கூடிய தமது பழைய நகர்ப்புறங்களுக்குச் செல்கையில் வேறுபட்ட நகர சூழலொன்றுக்குள் தங்களையும் திணித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ வாறு நகரச்சூழலுக் கேற்றவாறு தங்களைத் திணிக்க முற்படுகின்றபோது நகர்ச் சூழலின் சமஅந்தஸ்துடன் தாங்களும் முகம்கொடுக்க முடியாது திணறுவதுதான் இன்று நாளாந்தம் காண்பதும் கேட்பது மான விடயங்களாக உள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு பின்பு ஏற்பட்டுள்ள சொந்த இடங்களுக்கான இடப்பெயர்வில் சுமார் ஒரு லட்சம் மக்கள் திரும்பியுள்ளதாக பன்னாட்டு தொண்டர் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
வன்னியின் சத்ஜெய நடவடிக்கைக்கு பின்பு நகரங்களாகவே மாறியிருந்த மல்லாவி, கந்தபுரம், புதுக்குடியிருப்பு, ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற இடங்கள் மக்களின் சொந்த இடங்களுக்கான இடப்பெயர்வின் பின்பு மீண்டும் கிராமங்களாக காட்சி யளிக்கத்தொடங்கியுள்ளன.
சத்ஜயவுக்கு முன்பு கிராம கலாச்சாரத்தோடு ஒன்றித்திருந்த மக்கள் சத்ஜய இடப்பெயர்வின் பின்னான ஐந்து வருடங்கள் சாதாரண நகர்ப்புற வாழ்க்கையில் தங்களை இணைத்துக்கொண்ட வாழ்வியலுக்குப் பின் மீண்டும் கிராமங்களாக மாறும் தமது சொந்த இடங்களில் இருப்புக்கொள்ளாது அவர்களில் சிலரும் நகர்ப்புறங்களை நோக்கி நகருவதும் இயல்பாகிவிட்டது.
பல்வேறு இடப்பெயர்வுகளின் பின் ஏற்பட்ட புதிய உறவுக்குள் கலப்புத் திருமணங்களுக் கூடாக ஏற்பட்ட உறவுகள்கூட இவ வாறான நகர்ப்புறங்களை நோக்கிய நகர்விற்கு ஒரு து}ண்டுதலாக அமைந்தள்ளது.
இவ வாறான நகர்வுகள் ஒன்றும் வியப்புக்குரியவையல்ல. இருப்பினும் இவ வாறு நகரும் மக்கள் ஏற்கனவே நகர்ப்புற வாழ்க்கையில் இணைந்து ஒன்றித்திருக்கும் இவ வேளையில் தமது உறவினர்கள் தமது நண்பர்களின் நிலைகளுக்கேற்ப தங்களையும் அதற்கு ஈடாக்கிக் கொள்வதில் உருவாகியிருக்கின்ற உள்ளார்ந்த உளவியல் வெளிப்பாடுகள் என்பது மக்களின் பொருண்மிய பின்னடைவை பறைசாற்றுகின்றது.
நகர்ப்புற உறவுகளின் மனப்பதிவுகளில் ஏற்படுகின்ற மாறுதல்கள்தான் வன்னியி லிருந்த மக்களுக்கு அடுத்தகட்ட நகர்வொன்றை நோக்கிய சிந்தனை வெகுவிரைவாக து}ண்டப்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
ஏ-9 சாலையின் முதலாம் கட்டமாக ஓமாந்தையுூடான போக்குவரத்து திறந்து விடப்பட்டவுடன் ஏற்கனவே இடம்பெயர்ந்து வவுனியா நகர்ப்புறங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்ட மக்கள் தங்களின் தற்போதைய கலாச்சாரத்துடன் வருகைதர தொடங்கியவுடன் வன்னியிலுள்ள தங்களது உறவுகளுக்கு ஒருவகை வியப்பு வெளிப்படத் தொடங்கியது.
ஆனால் தத்துவார்த்தமான நோக்கில் எம்மக்களிடையே வன்னியின் அலையெழுந்த வெற்றிகளின் பின்னால் எல்லைகாத்த பெருமையின் உத்வேகத்தை வன்னிக்குள் வந்த மக்கள் பிரமிப்புடன் நோக்கியதானது அதைவிட பன்மடங்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தமைதான் குறிப்பிடத்தக்கது.
இவ வாறு வன்னிக்குள் வந்தவர்களில் ஒருவரான 55வயதுடைய சிவஞானம் வன்னியின் தனது உறவுகளை சுகம் கேட்டு உளப்புூர்வமாக விசாரிப்புகள் செய்கையில்தான் அவரின் தங்கையின் மகன் தனது நேசிப்புக்குரியவன் சிவகரன் கிளாலி சண்டையில் வீரச்சாவு என்பதை கேட்டு அதிர்ந்து போனவராய் திருவுருவப்படத்தைக் கட்டிப்பிடித்தவராய்லு}
எஸ்.வி.ஆர். கஜனி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவு பிh}த்தானியாவின் கண்ணிவெடி செயற் குழுவின் (ஆiநெ யுஉவழைn புசழரி -ஆயுபு) உதவியுடன் கிடைக்கப்பெற்றுள்ள நவீன பாதுகாப்பு கவச உபகரணங்களுடன் செயற்பட ஆரம்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஆயுபுஇ நோர்வீஜிய மக்கள் உதவியமைப்பு (ழேசறநபயைn Pநழிடநள யுனை - NPயு) மனித நேய கண்ணி வெடியகற்றும் பிரிவின் பணியாளர்களுக்கு சர்வதேச விதி முறைகளுக்கேற்ப கண்ணிவெடிகளை அகற்றும் முறைகளைப் பயிற்றுவித்து ள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வன்னிப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் மனிதநேய கண்ணிவெடியகற்றும் பிரிவு ஈடுபட்டிருந்தபோதும் போதிய பாதுகாப்பு கவச அணிகள் இல்லாத காரணத்தினால் அவர்களது பணிகள் அபாயகரமானதாகவே இருந்து வந்துள்ளது.
பளையை அண்டிய பகுதிகளில் தற்போது கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் குழுவின் தலைவர் திரு. காந்தரூபன், தமக்குக்கு கிடைத்துள்ள பயிற்சியும் பாதுகாப்பு கவச உடைகளும் தமது செயற்பாடுகளை கூடிய பாதுகாப்பானதாக மாற்றியுள்ளது என கூறியுள்ளார். கடந்த காலத்தில் தமது செயற்பாட டைவிட கண்ணிவெடியகற்றும் பணிகள் வேகம் குறைவானதெனினும் செயற்பாடுகள் ஒழுங்கானதாகவும் விபத்துக்களை தவிர்க்கும் முறையிலும் அமைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிப் பகுதியில் இன்று மக்கள் மீளவும் குடியமர ஏதுவாக மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவே இதுவரை 82,000 கண்ணிவெடிகளையும் 140,000 ற்கும் மேற்பட்ட வெடிபொருட்களையும் களைந்துள்ளது. தற்போது 150 பேர் கொண்ட மனித நேய கண்ணி வெடியகற்றும் பிரிவு விரிவாக்கப்பட்டு 600 பேர் கொண்ட அமைப்பாக விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்த விஸ்தரிப்பின் பின் புதிதாக அமைக்கப்பட்ட குழுக்கள் திருகோணமலை மற்றும் யாழ் குடாநாட்டுப் பகுதிகளிலும் கண்ணி வெடியகற்றும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளன. வன்னிப் பெருநிலப் பரப்பில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பெண் - ஆண் என்ற பேதத்துக்கும் அப்பால் மனிதம் உண்டு, அந்த மனிதத்துக்கு ஆளுமை உண்டு என்கிறார் எமது தேசியத்தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்கள். ஒவ வொருவரும் தன்னிடமுள்ள ஆளுமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை அவர் எங்களுக்குத் தந்திருப்பதால், இது பெண்களின் ஆற்றலை உலகம் அறியும் காலம் ஆகியது. எங்கள் கனவுகள் மெய்ப்படும் காலம் ஆகியது.
இந்த மாற்றங்களை மாற்றங்கள் இல்லையென்றும், தேவைகருதி ஏற்பட்டது என்றும் எழுதுவோரையும் பேசுவோரையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. பறவைகள் தம் குஞ்சுகளுக்குப் பறப்பையும், சிறுத்தைகள் தம் குட்டிகளுக்குப் பாய்ச்சலையும் பழக்கவில்லையெனில், அவை பறவைகளுமல்ல சிறுத்தைகளுமல்ல. ஈவிரக்கமற்ற கொடூரமான இனவாதிகளுக்கு எதிரான போரில் வரலாற்றுத் தலைவனோடு கைகோர்த்து நடக்கவில்லையெனில், நாங்கள் மனிதர்களுமல்ல.
இறுதி முடிவு
ஈழத்தில் அமைதி காக்கப் போவதாகப் பிரகடனம் செய்து வந்த இந்திய இராணுவம் அமைதி முகமூடியைக் கிழித்து எறிந்துவிட்டு தமிழர் மேல் பாயத் தொடங்கி சில மாதங்களாகிவிட்டன.
தலைவர் மணலாற்றுக் காட்டுக்குள் கரந்துறைவதை அறிந்து கொண்ட இந்திய இராணுவம் காட்டை நெருக்கத் தொடங்கியது. காட்டுக்குள் நாம், வெளியே இந்திய இராணுவம் என்ற நிலை மாறி காட்டுக்குள் இராணுவமும் நாமும் கலந்துவிட்டோம். எமது போக்குவரவுப் பாதைகள் முழுதும் தடைப்பட்டிருந்தன. தோள் பைகளில் இருந்த உணவைத்தவிர வேறு இருப்பு இல்லை. பனடோல் இல்லை. இரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் துணிகள் இல்லை. எம் கையோடு இருந்த ஆயுத உபகரணங்களில் இருந்தவற்றைத் தவிர வேறு வெடி பொருட்கள் இல்லை. அட குடிப்பதற்குக் குடிநீர்தானும் இல்லை. எம்மால் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறுகள் இந்திய இராணுவத்தினரின் கண்காணிப்பில். எமது தள எல்லைகளுக்குள்ளும் இராணுவ அணிகள் ஊடுருவித் தேடியலைந்தன. நிலையாக ஓரிடத்தில் நிற்க முடியாமல், முதல் நாள் ஓரிடமும் மறுநாள் வேறிடமுமாக நகர்ந்த நாட்கள் அவை. எல்லோருமே எந்நேரமும் எதற்கும் தயார் நிலையில்தான்.
தலைவர் சற்றும் தளரவில்லை. கூடவிருந்த போராளிகளும் அசையவில்லை. கடும் எச்சரிக்கையுடன், ஆனால் மிக நிதானத்துடன் அனைவரும். வெளியில் நின்ற போராளிகளுக்கோ தலைவரைப் பற்றிய கவலைதான். இந்திய வல்லாதிக்கத்திடம் தலைவரை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவர்களை உலுப்பியது. காட்டிலே இருந்த தலைவருக்கு அவசரமாக ஒரு செய்தியை அனுப்பினார்கள்.
"தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள்? எங்களால் உங்களை இழக்கமுடியாது என்பதால் இந்திய அரசோடு தற்காலிகமாக ஒரு உடன்பாட்டுக்குப் போவோமா" என்ற வகையிலான வேண்டுகோளுடன் அவர்களிடமிருந்து வந்த செய்தி தலைவருக்குச் சினத்தை ஏற்படுத்தியது.
காட்டுக்குள் தன்னோடிருந்த எல்லோரையும் ஒன்றுகூட்டினார். வானலையில் வந்த செய்தியைக் குறிப்பிட்ட தலைவர், லெப். கேணல் திலீபன் அவர்களின் அமைதி முறையிலான உண்ணாவிரதத்தை மதிக்காதவர் களோடு தன்னால் இணங்கிப்போக முடியாது என்று விளக்கினார்.
ஈழமக்களின் நலனில் ஒரு துளியும் அக்கறை இல்லாத இருவர் ஈழத் தமிழ் மக்களைப் பற்றி எழுதிய உடன்படிக்கைக்கு மதிப்பளித்து, அவர்களின் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களின் விருப்பப்படியே ஆயுதங்களையும் கையளித்த பின்னரும், அன்றைய இந்திய அரசின் தொடர்ந்த அதிகார ஆணவப் போக்கால் எழுந்ததல்லவா இந்த யுத்தம்!
உலகுக்கு இந்தியா அறிமுகப்படுத்திய அதே அற வழியில் போராடிய லெப். கேணல் திலீபனையும் உடன் படிக்கைக்கு மதிப்பளித்து ஒத்துழைத்த லெப கேணல் குமரப்பா, லெப கேணல் புலேந்திரன் முதலிய பன்னிரு வரையும் சாகடித்ததன் மூலம் அன்றைய இந்திய அரசு தான் செய்த உடன்படிக்கையைத் தானே மீறியதால் விளைந்ததல்லவா இந்தப்போர்.
இத்தனைக்கும் பின்னர் யாரோடு யார் உடன்படுவது?
"நான் இல்லாவிட்டால் விடுதலைப் போராட்டம் நடக்காது என்று நினைப்பதே தவறு. ஒரு பிரபாகரன், இல்லாவிட்டால் இன்னொரு பிரபாகரன் அல்லது ஒரு பிரபாகரி இந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த வேண்டும்லு}லு}"
என்ற வகையில் தலைவர் ஆற்றிய உரை, எல்லோருக்கும் தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அழுத்தந்திருத்தமாக, ஆணித்தரமாக விளக்கியது. இந்திய இராணுவத்தை வெல்வோம் என்று ஏற்கனவே எல்லோரிடமுமிருந்த உறுதி மேலும் உரமேறியது.
அதன்பின்னர், தலைவரின் போர்த்தந்திரத்துக்கும், இராஜதந்திரத்துக்கும் ஈடுகொடுக்க முடியாத இந்தியப் படைகள், ஜே. ஆh ஜெயவர்த்தனாவுடன் ராஜீவ காந்தி செய்த உடன்படிக்கையை காற்றிலே வீசி எறிந்துவிட்டுக் கப்பலேறியது உலகம் அறிந்த கதை.
ஒரு துளியேனும்
அன்று இவர்களின் அணி ஒன்றின் சமையல் முறை. சமையல் என்ன பெரிய சமையல், ஏதோ இருக்கின்றதைச் சமாளிக்க வேண்டியதுதான் என்று அற்ப சொற்பமாக யாரும் எண்ணி விடமுடியாது. அன்றைய நிலையில் சமையல் என்றால், இருப்பதைத் திறம்படச் சமாளித்து, சுவைபடச் சமைத்தல் என்று பொருள். தாளிப்பதற்கு கறிவேப்பிலையும் அற்ற காட்டுக்குள் சமையல் முறை சுழற்சியாக எல்லோருக்குமே வரும். சுத்தத்தில், சுவையில் குறையிருந்தால், அன்று சமைத்த அணி ஒரு வாரம் தொடர்ச்சியாக சமைக்கும். சுத்தத்தில் வென்றுவிடுவார்கள். சுவை ஆரம்ப நாட்களில் அநேகரைக் கைவிட்டுவிட்டது. ஆனால் ஒரு வாரத்தொடர் சமையல் காரணமாக நாளடைவில் எல்லோருக்குமே நளபாகம் கைவந்துவிட்டது.
அன்றைய உணவாக இவர்கள் கௌப்பி அவித்தார்கள். ஒன்றுமே இல்லாத நாட்களில் கௌப்பி தேவாமிர்தம்தான் ஐயமில்லை. அடுப்பிலிருந்து கௌப்பியை இறக்கிக் கொண்டிருந்தபோது கை தவறிக் கொஞ்சம் நிலத்தில் கொட்டிவிட, மனம் 'திக்' என்றது. இது இருந்தால் ஒரு ஆள் ஒரு நேரமாவது வயிறாறலாமே! அநியாயமாகக் கொட்டுப்பட்டதை இனி என்ன செய்வது என்ற கவலையோடும், தொடரப் போகும் சமையல் நாட்களை எண்ணி யோசனையோடும் மளமளவென்று சாம்பலால் அதை மூடவும சமையலைப் பார்க்கவெனத் தலைவர் அங்கு வரவும் சரியாக இருந்தது.
"ஏன் பிள்ளைகள் கௌப்பியைச் சாம்பலாலை மூடினீங்கள்?" என்று வேதனையோடு பார்த்த அவர் கௌப்பியை எடுத்து கழுவுமாறு கேட்டு, சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டார்.
திகைத்துப் போனார்கள் இவர்கள். எதற்கும் முன்மாதிரியான அவரின் இயல்பு இவர்களுக்குப் புதிதான ஒன்றல்ல. என்றாலும் இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பிழை செய்துவிட்டோமே என்ற குற்ற உணர்வில் குறுகிப் போனார்கள். இனி ஒரு துளி உணவையேனும் வீணாக்குவதில்லை என்று முடிவெடுத்துக்கொண்டார்கள். அதன்பின் எது விழுந்தாலும் கழுவிச் சாப்பிடப் பழகிக் கொண்டார்கள்.
இன்றுகூடச் சாப்பிடும்போது ஒரு சோறு கொட்டுப்படாமல் தாங்கள் கவனமாகச் சாப்பிடுவதற்குக் காரணம் தலைவர்தான் என்று அவர்கள் சற்றுப் பெருமையாகவே கூறிக் கொள்கின்றார்கள். அருகிருந்தவர்களுக்கே தெரியும் அவரின் செயல்களின் பெறுமதி.
பண்பாட்டின் காவலன்
பெண் போராளிகளின் ஒரு சிறப்புப் படையணி பல்வேறு பயிற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்து தன்னைப் பலப்படுத்திக் கொண்டேயிருந்தது. அந்த அணி செய்யாத பயிற்சிகளே இல்லை எனும் அளவுக்கு தற்காப்புக் கலைகள், தமிழரின் பாரம்பரியப் போர்க் கலைகள், நவீன போரியல் யுக்திகள் என்று ஒன்றையுமே விட்டு வைக்கவில்லை.
ஒருநாள் அவர்களின் தற்காப்புப் பயிற்சியைத் தலைவர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் வேக வேகமாகக் கைகளையும் கால்களையும் வீசத்தொடங்க பயிற்சி உடையின் மேற்சட்டை மேலுயர, பொத்தான்கள் தெறித்து விழத் தொடங்கவே ஒற்றைக் கையால் சட்டையைப் பிடித்தவாறு ஒரு கையாலேயே சண்டை பிடித்தார்கள்.
"இது சரிவராது. இப்பிடிச் சண்டை பிடிக்க வெளிக்கிட்டால், எதிரி எங்களை அடித்துவிடுவான்"
என்று சொன்ன தலைவர் உடனேயே பயிற்சியாளர்கள் அனைவருக்கும் உடைகளுக்குள்ளே அணிவதற்கான hPசேட்டுக்களை ஒழுங்குபடுத்தினார். பயிற்சி உடையின் மேற்சட்டையின் அமைப்பை, கையை நன்றாக வீசிச் சுழற்றினாலும் இடைப்பட்டியை விட்டு வெளியே வராதவாறு மாற்றித் தைக்குமாறு ஒழுங்குபடுத்தினார்.
பின்னர் என்ன?
புலிப் பெண்கள் வேக வேகமாய் சண்டைகளைச் செய்தார்கள்.
அவருடைய எண்ணப்படியே வளர்ந்த அந்தப் பெண் புலிகளின் தாக்குதல் வேகம் 1995 இல் மணலாற்றிலிருந்த ஐந்து பகைத்தளங்கள் மீது ஒரே நேரம் நடாத்தப்பட்ட தாக்குதலில் வெளிப்பட்டது. சண்டையின்போது இவர்களிடம் அகப்பட்டு, கைகளாலும் கால்களாலும் வாங்கிக்கட்டிய படைவீரர்களின் மனநிலையை அவர்களின் அதிகாரியொருவர் அந்நேரம் யாழ் மாவட்ட அரச அதிபராக இருந்தவரிடம் பின்வருமாறு வெளியிட்டார்.
"பெண் போராளிகள் மிகவும் மூர்க்கத்தனமாக மோதுகிறார்கள். அவர்களை எதிர்கொள்வதுதான் சிரமமாக இருக்கின்றது"
புன்னகையின் பொருள்
ஆரம்ப காலத்தில் ஆண் போராளிகள் யாரேனும் பெண் போராளிகளின் திறமைகளைக் குறைத்துக் கதைப்பதைக் கேட்க நேரும் பெண் போராளிகள் தம் மனக்குறையைத் தலைவரிடம்தான் சொல்வார்கள். அவர்,
"ஆ! அப்பிடியோ!"
என்று சிரித்துக்கொள்வார். ஒன்றும் சொல்லமாட்டார். "கொஞ்சம் பொறுத்திருங்கள்" என்று சொல்வது போல் இருக்கும் அவர் சிரிப்பு.
மணலாற்றுக்காட்டில் எம்மவர்கள் நின்ற சமயம் ஒருதடவை முல்லைத்தீவில் கடலில் நின்ற படகைக் கரைக்கு இழுத்துக்கொண்டிருந்த ஆண்பேராளிகளைக் கண்டு விட்டு அவர்களுக்கு உதவியாகத் தாமும் இழுக்க முயன்ற பெண் போராளிகளைப் பார்த்து அவர்கள்,
"நீங்கள் இழுத்தால் படகு கரைக்கு வராது"
என்று சொல்லிவிட்டார்கள். இவர்களுக்கு பெரிய மன வருத்தமாகப் போய்விட்டது. அடுத்த முறை தலைவருடன் கதைத்த போது இதுபற்றி அவர்கள் குறிப்பிட,
"ஆ! அப்பிடியோ!"
என்று சிரித்தாராம் தலைவர்.
அந்தச் சிரிப்பின் பொருள் 1993.03.01 இல் தமிழீழக் கடற்பரப்பில் கடற்புலிகள் மகளிர் படையணி தோற்றம் கொண்டபோது, 1993இல் புூநகரி கூட்டுப் படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் தவளை நடவடிக்கையில் லெப்.கேணல் பாமா எதிரியின் நீரூந்து விசைப்படகு ஒன்றைக் கைப்பற்றி ஓட்டிவந்தபோது பலருக்கும் புரியத்தொடங்கியது.
கௌரவிக்கப்பட்ட மாவீரம்
அன்றைய சண்டையில் அந்தப் பெண் போராளி வீரச்சாவடைந்துவிட்டார். அவர் வீரச்சாவடைந்த பின்னர்தான், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்ததும், அந்தக் குழந்தைகள் அவரின் தாயின் பராமரிப்பிலிருந்ததும் தெரிய வந்தது.
"குழந்தைகளை வாங்கிச் செஞ்சோலையில் வளர்த்தாலென்ன?"
என்று தலைவரிடம் கேட்டார்கள்.
அவர் தீர்க்கமாகப் பதிலைச் சொன்னார்.
"பராமரிப்பதற்கு யாருமற்ற குழந்தைகளாயிருந்தால் செஞ்சோலைக்கு எடுக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க அந்தப் போராளியின் தாய் இருக்கின்றார். குழந்தைகள் எப்போதும் உறவுகளின் பராமரிப்பில், குடும்பச் சூழ்நிலையில் வளர்வதுதான் ஆரோக்கியம். குழந்தைகளைப் பராமரிக்கும் செலவை நாம் பொறுப்பெடுப்போம். குழந்தைகள் வீட்டிலேயே வளரட்டும்" என்றார்.
ரூசூ009;குடும்பத்தைவிட நாடுதான் பெரிதென்று தன்னைக் கொடுத்தார் அந்தப் போராளி. அவரின் குழந்தைகள் குடும்பச் சூழலிலே நல்ல விதமாக வளர வழியமைத்துக் கொடுத்தார் தலைவர்.
மனித உறவுகளைப் பேண வேண்டும், உணர்வுகளை மதிக்கவேண்டும் என்பதைத் தலைவர் வலியுறுத்துவார்.
மலைமகள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பத்தாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
இப்பத்தாண்டு காலத்துள்
கடற்புலிகள் பெற்ற துரித இராணுவ வெற்றிகளும், துரித வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் போரின்முக்கிய தீர்மானகரமான சக்திகளாக தமது பலத்தை நிலைநாட்டியுள்ளனர். சிறீலங்காத் தரப்பின் தலைவிதியை இராணுவத் தோல்விகளுக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை தமது கடற்பலத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போனதே காரணம் என்பதை படைத்தரப்பு உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பத்தாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
கடல்சார் போர் நடவடிக்கைகளில் கடற்புலிகளின் பத்தாண்டுப் பயணம் அரசியல், இராணுவ பரிமாணங்களோடு மூன்று ஈழப்போர்களின் களங்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளன.
இந்தப் பத்தாண்டு கால கடற்புலிகளின் வரலாற்றில் தமிழீழத்தின் 23000 சதுர கிலோமீற்றர் கடற்பரப்பையும் தாண்டி அவர்களின் தாக்குதல் இங்கு நீண்டிருக்கிறது.
அத்தோடு கடற்புலிகள் தமிழீழ கடற்பரப்பில் தமது ஆழுகையை ஒரு சீரான முறையில் பேணியும் வருகின்றனர்.
சிறீலங்கா கடற்படையினருடன் கடற்புலிகள் பொருதிய அனைத்துக் களங்களிலும் தமது அபரிமிதமான போர் ஆற்றலை வெளிப்படுத்தத் தவறியதில்லை.
இங்கு கடற்புலிகள் இந்த ஒரு தசாப்த காலத்தில் பெற்ற போரியல் பட்டறிவு போர்க்கால வளர்ச்சி: கடல்சார் போர்தாக்குதல் நுட்பம், கடற்போரிற்கான ஆட்பல வலு அதிகரிப்பு என்பவற்றோடு ஒரு கெரில்லாப் போரிற்கு எமது புவியியல் சூழலை விளங்கி கடற்படை ஒன்றை உருவாக்கிய தமிழீழ தேசியத் தலைவரின் மிகச் சிறந்த வழிநடத்தலுமே காரணமாக வருகின்றது.
சிறீலங்கா அரசால் வடபிராந்தியம், கிழக்கு கடற்பிராந்தியம், மேற்குக் கடற்பிராந்தியம், தெற்குக் கடற்பிராந்தியம் என்று நான்கு கடற் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் கடற்பிராந்தியங்கள் ஒவ வொன்றும் ஒவ வொரு இராணுவ பரிமாணத்தைக் கொண்டதாக இருக்கின்றது.
இவற்றில் கடற்புலிகள் செலுத்தும் செல்வாக்கானது சிறீலங்கா கடற்படையினருக்கு மாத்திரமின்றி சிறீலங்காவின் முப்படையினருக்கும் பெரும் இராணுவ நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்புலிகளின் அசைவியக்கமும் தாக்குதல் இலக்கும் மேற்குக் கடற் பிராந்தியத்தையும் தாண்டி தெற்குவரை நீண்டமையானது இராணுவ நெருக்கடிகளை மட்டும் சந்தித்த ஆளும் சிறீலங்கா அரசுகளுக்கு பெரும் அரசியல் நெருக்கடிகளையும் தோற்றுவிக்கின்ற இரட்டிப்பு பரிமாணத்தைத் தோற்றுவித்தது.
கடற்புலிகள் பத்தாண்டு காலத்தில் இரு வேறுபட்ட கடற்சண்டைகளிலும் சமர் களிலும் ஈடுபட்டனர்.
(01) ஆழம் குறைந்த கடற்சமர்
(02) ஆழ் கடற்சமர்
கடற்புலிகளால் ஆழம் குறைந்த கடற் பிரதேசங்களில் சந்தித்த சமர்களில் தமது ஆரம்பகட்ட வளர்ச்சியின் போதே வெற்றிகொண்டு சிறீலங்காப் படைத்தரப்புக்கு பெரும் சவால் விடுத்தனர். அத்தோடு சிறீலங்கா கடற்படையினரின் கரையோர கடல் ரோந்து மற்றும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தினர்.
இது கடற்புலிகளை கடற்சண்டையென்ற பரிமாணத்திலிருந்து முன்னகர்த்தி அவர்களை கடற்சமர்களில் ஈடுபடவைத்ததன் மூலம் பெரும் கடற்போரை எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு மாத்தியது.
மூன்றாம்கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் கடற்சமர்களில் ஈடுபடத் தொடங்கி விட்ட கடற்புலிகள், மூன்றாம்கட்ட ஈழப்போரின் இறுதியில் ஆழ்கடற் போர்களில் ஈடுபட்டு கடற்படையின் அசைவியக்கத்தைத் தடுத்து நிறுத்துமளவிற்கு வளர்ச்சி பெற்றிருந்தனர்.
மூன்றாம்கட்ட ஈழப்போரின்போது கடற்படையினரால் வடபுலத்தில் நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரிற்கான விநியோகத்தை மேற்கொள்ள வேண்டிய தமது பிரதான பணியினை தாம் நினைத்தவாறு மேற்கொள்ள முடியாதவாறு நிலைமையை மாற்றியிருந்தனர்.
திருமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு வரும் விநியோக அணியினை முல்லைத்தீவு கடற்பிரதேசத்தை தாண்டும் நேரம் பகற்பொழுதாக அமையக் கூடியவாறு ஒருங்குபடுத்தியமை இதற்குச் சான்று.
இது கடற்புலிகளால் ஆழ்கடலில் கடற்படையினரை இரவு நடைபெற்ற சமர்களில் வெற்றிகொண்டதன் எதிர் விளைவே ஆகும்.
அத்தோடு கடற்புலிகள் தமது படையியல் கட்டமைப்பினையும் பெரும் சமர்களையும் எதிர்கொள்ளத்தக்க வகையில் புதியபல கட்டமைப்புக்களையும் உருவாக்கி பல இராணுவ வெற்றிகளைப் பெற்றனர்.
இவ வாறு கடற்போரரங்கை தம் கைகளிற்குள் கையகப்படுத்திய கடற்புலிகளின் வெற்றிகளிற்கு அவர்களின் விசேட படையணிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. இவற்றில் கடற்புலிகளின் கடற் கரும்புலிகள் படையணியும், விசேட நீரடி நீச்சல் பிரிவின் கடற்புலிகளின் மகளிர் படையணியின் பங்கும் முக்கியமானது.
இதனால் கடற்புலிகளை தமிழீழத் தேசியத் தலைவர் உருவாக்கியதைத் தொடர்ந்து கடற்புலிகள் கண்ட துரித வளர்ச்சியின் பயனாகவே பின்னர் பெரும் தொடர் படைத்தளங்களை வெற்றி கொள்வதற்கு காரணமாக இருந்தது.
இன்றுவரை தொடரும் புலிகளின் இராணுவ மேலாதிக்கத்திற்கு கடற்புலிகளின் பலமே பிரதான பங்காகும். அத்தோடு தரைச்சமர்களில் புலிகள் சக்திமிக்கவர்களாக இருப்பதற்கு கடற்புலிகளே உந்து சக்தியாக இருந்து வருகின்றனர்.
இந்தவகையில் கடற்புலிகளே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரோட்டத்தின் பிரதான சக்தியாக இருந்து வருகின்றனர்.
கடற்புலிகள் தமது போரியற் காலங்களில் சந்தித்த சமர்களில் பிரதானமானவையாக இரண்டு நடவடிக்கைகள் மிக முக்கியமானவையாக வரலாற்றில் பதிவாகியுள்ளன.
கடற்புலிகள் ஓயாத அலைகள் ஒன்று நடவடிக்கையின்போது கடற்படையினரின் முழுப் பலத்துடனும் பட்டப்பகலில் வான்படையினரின் தாக்குதலிற்கு மத்தியில் பொருதியமை பத்தாண்டுகால வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கது.
இந்த திரிஹடபகர இராணுவ நடவடிக்கையில் கடற்படையினரோடு மோதியதன் மூலம் கடற்புலிகள் சிறீலங்கா கடற்படையினருக்கு எதிரான வலுவான சக்தியாக தம்மை வெளிப்படுத்தினர்.
ஆனால் கடற்புலிகளின் போரியற் சாதனையாக மகுடம் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை என்றால் அது ஓயாத அலைகள் மூன்றின் போது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இத்தாவில் தரையிறக்கமேயாகும்
இத்தரையிறக்கத்தின் மூலம் புலிகள் இயக்கம் பெற்ற இராணுவ வெற்றி, சர்வதேச நாடுகளுக்கு து}தனுப்பி சிறீலங்கா படைத்தரப்பின் உயிர்காக்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளியது.
அத்தோடு இதன் மூலமாக புலிகள் இயக்கத்தையும் அதன் இராணுவ வெற்றியையும் உலகிற்கு பறை சாற்றியது. மேலும் கடற்புலிகள் கடல் ஆதிக்க சக்தியை தம் வசப்படுத்திக் கொண்டனர்.
இது புலிகள் இயக்கத்தை இராணுவ சமநிலையில் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக கடற்புலிகளே மாறியிருந்தார்கள்.
கடற்புலிகள் தொடர்ச்சியாக கடற்சமர்களில் ஈடுபட்டு சிறீலங்கா கடற்படையினரை ஒரு தற்காப்புப் போர் நடவடிக்கைக்குள் மட்டுப்படுத்தினர்.
ஆரம்பத்தில் கடற்புலிகளை வலுச்சண்டைக்கு இழுத்த சிறீலங்கா கடற்படையை கடற்புலிகள் தேடிச்சென்று தாக்குதல் பொறிக்குள் இருக்க வேண்டிய அளவிற்கு கடற்புலிகள் வளர்ச்சி கண்டிருந்தனர்.
ஒட்டுமொத்தத்தில் கடற்புலிகளின் பத்தாண்டு காலத்தாக்குதல் இலக்கிற்குள் மிகப் பாதுகாப்பான துறைமுகங்கள் எனச் சொல்லப்பட்ட எல்லாத் துறைமுகங்களுமே இலக்காகின.
இப்பத்தாண்டு காலத்துள் கடற்புலிகள் பெற்ற துரித இராணுவ வெற்றிகளும், துரித வளர்ச்சியும் தமிழீழ விடுதலைப் போரின் முக்கிய தீர்மானகரமான சக்திகளாக தமது பலத்தை நிலைநாட்டியுள்ளனர். சிறீலங்காத் தரப்பின் தலைவிதியை இராணுவத் தோல்விகளுக்கும் விடுதலைப் புலிகளின் கடற்புலிகளை தமது கடற்பலத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போனதே காரணம் என்பதை படைத்தரப்பு உணர்ந்து கொள்ளத் தவறவில்லை.
சிறி. இந்திரகுமார்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு வரலாற்றுப் பரிமாணங்களை அருகேயிருந்து பார்த்து - உணரும் வாய்ப்பைப் பெற்ற திருமதி. அடேல் பாலசிங்கம் அவர்கள், அந்த உண்மையை முழு உலகமும் அறியும் வகை செய்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அகத்தே இடம்பெற்ற நுண்மையான மாற்றங்களை பார்க்கும் பாக்கியத்தை இதன் மூலம் அவர் வாசகர்களுக்கு தந்துள்ளார்.
இந்த நு}லின் முக்கியத்துவம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. இருபது வருடகால வரலாற்றை அனுபவங்கள் ஊடாக சுவைபடச் சொல்லும் போது வரலாற்று ஆவணமாக திகழ்கின்றது. அந்த வரலாற்றின் காரணகாரியங்களை ஆராயும் போது அரசியல் தளத்தில் அது இயங்குகின்றது. அந்த வாழ்பனுபவங்களை பாவிக்கும் நேர்த்தியில் - அழகில்
- மொழியில் அது நல்ல இலக்கியமாகத் திகழ்கின்றது.
ஐரோப்பிய தமிழுலகில் வாசிப்பு ஆர்வம் குறைந்து வருகின்றது என்பது சமூக ஆர்வலர்களின் பொதுவான கவலை. ஐரோப்பாவின் விரைவு வாழ்வுக்கு இடையே ஆறஅமர இருந்து நு}ல்களை வாசிக்கும் பழக்கம் அருகிவருவது ஆபத்தானது என்கின்ற அச்சம் பரவி வரும் காலகட்டத்தில் கடந்த இரு வாரங்களாக வீடுகளில் வைத்துமட்டுமல்ல பயணம் செய்கின்றபோது கூட ஒரு நு}ல் வெகுவாக சிலாகித்து வாசிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த உயர்வான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ள சுதந்திரவேட்கை என்கின்ற நு}ல் பற்றிய பதிவு மிக அவசியமானது.
இந்த நு}லை வாசித்து முடித்த போது சிறிய வயதில் சத்தியசோதனை எனும் மகாத்மா காந்தியின் வாழ்வனுபவங்களின் தொகுப்பை வாசித்த நினைவு வருகின்றது. இந்தியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து எனச் சுற்றிவரும் காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை அது பதிவு செய்தது. நீண்டகாலத்திற்கு வாசிப்பவர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்திய நு}லாகவும் இது விளங்கிவந்தது. அரசியல் தளத்திலும், வரலாற்றுத்தளத்திலும் இடம்பெற்ற மாற்றங்களை இயல்பான அனுபவங்கள் ஊடாக வாசித்தறியும் வாய்ப்பை சத்தியசோதனை எனும் நு}ல் வழங்கியதாக ஆய்வாளர்கள் இன்றும் புகழுரை கூறிவருகின்றனர்.
எங்கள் மத்தியில் வாழ்ந்து, எங்கள் விடுதலைக்காக போராடும் வெள்ளைக்காரத் தமிழ் பெண்ணின் ( வன்னியில் குளிர்மையான மாமர நிழலின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒரு தமிழ் சிநேகிதி தனக்குத் இட்ட பெயர் இது என நு}லாசிரியர் பெருமையுடன் சொல்கின்றார்) இதயத்திலிருந்து வீழ்ந்த வார்த்தைகளின் தொகுப்பான சுதந்திரவேட்கையை படித்து முடித்தபோது ஏற்பட்ட தாக்கம் அத்தகையதே என உணரமுடிகின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு வரலாற்றுப் பரிமாணங்களை அருகேயிருந்து பார்த்து - உணரும் வாய்ப்பைப் பெற்ற திருமதி. அடேல் பாலசிங்கம் அவர்கள், அந்த உண்மையை முழு உலகமும் அறியும் வகை செய்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அகத்தே இடம்பெற்ற நுண்மையான மாற்றங்களை பார்க்கும் பாக்கியத்தை இதன் மூலம் அவர் வாசகர்களுக்கு தந்துள்ளார்.
இந்த நு}லின் முக்கியத்துவம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. இருபது வருடகால வரலாற்றை அனுபவங்கள் ஊடாக சுவைபடச் சொல்லும் போது வரலாற்று ஆவணமாக திகழ்கின்றது. அந்த வரலாற்றின் காரணகாரியங்களை ஆராயும் போது அரசியல் தளத்தில் அது இயங்குகின்றது. அந்த வாழ்பனுபவங்களை பாவிக்கும் நேர்த்தியில் - அழகில் - மொழியில் அது நல்ல இலக்கியமாகத் திகழ்கின்றது.
எமது விடுதலைப் போராட்டம் சார்ந்து பல்வேறு படைப்புக்கள் வெளிவந்துள்ளன. மிகச்சிறந்த கவிதைகள் வெளிவருகின்றன. உயிர்ப்புள்ள சிறுகதைகளும், குறுங்கதைகளும் வெளிவருகின்றன. நாவல்கள் வெளிவந்துள்ளன. ஆனாலும், போர்க்கால இலங்கியங்களாகவே இவை விபரிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் இப்படைப்புக்களின் அகத்தே காணப்படும் போர்க்கால உந்துதலும், பதிவுகளும் அத்தகையதாய் உள்ளதாக சில தமிழக எழுத்து மேதைகள் கூறுகின்றனர்.
ஆனால், சுதந்திரவேட்கை அத்தகையதாக அவர்களால் வகுப்புப்படுத்த முடியாது. ஏனெனில் இந்த நு}ல் பயணம் செய்யும் சாலை நீண்டது. அழகான மலைசூழ்ந்த அவுஸ்திரேலியக் கிராமத்துப் பெண் முல்லைக் கடல் வெளியுூடாக தன் கணவனின் உயிர்காக்கும் பயணத்தில் துணிச்சலுடன் ஈடுபட்டது வரையிலான நீண்ட காலஓட்டம் உள்ளது. போர்க்கால பதிவுகளுக்கும் அப்பால் முன்னேயும், பின்னேயும் இது சென்றுள்ளது.
இந்நு}லைப் படித்து முடித்த போது ஏற்பட்ட மற்றுமொரு திருப்தி முக்கியமானதொரு காலகட்டத்தில் வெளிவந்த அற்புதமான படைப்பு என்கின்றதாக அமைகின்றது. இணக்க சூழல் நிலவுகின்ற காலகட்டத்தில் மீள ஒருமுறை முழு வரலாற்றையும் ஆழ மூழ்கி பார்த்துவிட்ட திருப்தி இங்குள்ளது. இந்த வரலாற்றின் பின்பலத்துடன்தான் நாங்கள் புதிய சூழலை அணுகுகின்றோம் என்பதால் தமிழீழ மக்களின் மத்தியில் ஒரு பெரும் அரசியல் பணியை இந்நு}ல் மூலம் திருமதி. அடேல் பாலசிங்கம் புரிந்துள்ளார்.
இந்நு}லின் தொகுப்பு முறையில் ஒரு நேர்த்தியுள்ளது. முல்லை கடற்பரப்பின் ஊடாக பயணம் செய்ய ஆரம்பித்து பல விடயங்களையும் சுற்றி வந்து மீள அந்த பயணத்திற்கான சூழல் எவ வாறு உருவாகியது என்கின்ற பின்னணியை விளக்குகின்ற போது நு}ல் முடிவுக்கு வருகின்றது. கதைசொல்லும் பாணியில் ஒரு அற்புதமான போக்கு இது. தீவிரமில்லாதா வாசகர்கள் தமது வாசிப்பு பயணத்தின் போது சோர்வு ஏற்படாமல் இருக்க இத்தகைய தொகுப்பு உதவும் என நம்பலாம்.
இந்நு}ல் எமது வரலாற்று கதாநாயகர்களுடன் பழகுவதால் எமக்கு பிரமிப்பைக் கொடுக்கின்றது. இந்நு}ல் எங்கள் அரசியல் ஆசான் பாலசிங்கத்தையும், வெள்ளைத் தமிழிச்சியான அடேல் அன்ரியையும் இந்திய இராணுவம் துரத்திய இழிசெயலின் ஊடாக எம்மை அழைத்துச் செல்லும்போது கோபத்தை ஏற்படுத்துகின்றது. எங்கள் பெண்போராளிகளை ராதிகா குமாரசாமி என்கின்ற கொழும்புத் தமிழ் சிங்களத்தி கேலி செய்தபோது கோபமுற்ற எமக்கு இந்நு}ல் வழங்கும் புத்திபுூர்வமான பதிலடிகளால் திருப்தி ஏற்படுகின்றது. பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெற்ற பல்வேறு அனுபவக்குறிப்புக்களை பேசும் போது நாங்கள் அரசியல் - இராஐhPக கலைகளை கற்கும் மாணவர்களாக இருந்து கற்கின்றோம்.
பாலசிங்கம் என்கின்ற சிந்தனையாளருக்கும், அடேல் என்கின்ற சமூகக் கரிசனை கொண்ட சமூக ஆய்வாளருக்கும் இடையேயான குடும்பம் என்கின்ற அலகில் உள்ள ஓட்டம் சுவைபடச் சொல்லப்படுகின்றது. தான் வெறுமனே காதலால் கட்டுண்டு தமிழீழத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்ணல்ல என்பதை தன் எழுத்துக்களில் சொல்லிய - சொல்லாத செய்திகள் ஊடாக அடேல் அன்ரி புலப்படுத்துகின்றார். தமிழீழ மக்களிற்கு ஏற்பட்ட இழிநிலை கண்டு கொதித்தெழுந்த கணவனின் நியாயங்களைப் புரிந்து கொண்ட போராளியே தனது உண்மையான அடையாளம் என்பதை நு}லினை வாசித்து முடிக்கும் போது எங்களுக்கு புரியவைக்கின்றார்.
முடிவாக, இந்நு}லினை ஒவ வொரு தமிழர்களும் வாசிப்பதும், விவாதிப்பதும் முக்கியமானதாகும். ஏnனினில் இந்நு}லின் ஆழம், அடர்த்தி என்பன காரணமாக இதனை வாசிப்பதே விடயங்களை அறிந்து கொள்வதற்கான நேர்வழியும், குறுக்குவழியுமாகும். வேறுவழிகளில் சுதந்திரவேட்கையை தரும் அனுபவங்களை விபரிக்க முடியாது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
"நான் விடுதலைப் புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன். விடுதலைப்புலிகளை நாளையும் ஆதரிப்பேன்" என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றியதை அடுத்து தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் கைதுசெய்யப்பட்டது. தமிழக அரசியலில் மட்டுமல்லாது தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஜெயலலிதாவால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் அதிரடி என்று கூட சொல்லலாம். இதற்கு முன்னரும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாக குற்றம் சாட்டி கைது செய்து தனது அரசியல் பணியில் நெஞ்சை விட்டகலாத நிகழ்வொன்றை அரங்கேற்றியிருந்தார்.
இவ்விரு கைது நடவடிக்கைகளும் ஜெயாவின் அரசியல் போக்கினை சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தமிழ் நாட்டில் முறியடிக்க தமிழ் நாட்டு அரசுக்கு மத்திய அரசு விசேட அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் வெளி நாட்டவர் சட்டத்தில் புதிய திருத்தமொன்றை செய்யுமாறும் பிரதமர் நரசிம்மராவின் காலப்பகுதியில் கேட்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு யுூலை மாதம் ஜெயலலிதா விடுத்திருந்த அறிக்கையொன்றிலும் கூட ம.தி.மு.க, தி.மு.க. கட்சிகளை தடைசெய்ய வேண்டும் என்றும் வைகோ. மற்றும் மு.கருணாநிதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஜெயலலிதா தவறாது குறிப்பிட்டிருந்தார்.
ம.தி.மு.க.வின், வைகோ ஈரோடில் நடாத்திய ஒரு மாநாட்டின் பின்பே ஜெயலலிதா இவ வாறு ஒரு அறிக்கையை விட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் இரு கனவுகளும் ஏதோ ஒரு வகையில் தற்போது நனவாகியிருக்கின்றது. தமிழக அரசு தனது அரசியல் சுய இலாபத்திற்காக தனிப்பட்ட நபர்களை பழிவாங்குவதென்பது இதனு}டே தெளிவாகின்றது.
ஆனால் இவ வாறு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை விடுவதும், விடுதலைப் புலிகளை ஆதரிக்க எத்தனிப்பவர்களை கைது செய்வதுமாக இருக்கும் ஜெயலலிதா, 1998 டிசம்பரில் சென்னையில் ஈழத்தமிழர் படுகொலை கண்டன மாநாடு நடைபெற்றபோது இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி தமிழ் மக்கள் தங்களது உயிர்களையும், உடைமைகளையும் இழந்து வருவது வேதனை அளிக்கின்றது என்றும் இம்மக்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு அனுதாபச் செய்திக் குறிப்பொன்றை அனுப்பியிருந்தார்.
இவ வாறு இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினைக்கு ஜெயலலிதா இதயச்சுத்தியுடன் அனுதாபம் தெரிவித்திருந்தால் அம் மக்களின் விடுதலை உரிமைக்காக போராடும் விடுதலை இயக்கத்தை தடை செய்யவும் இவ விடுதலை இயக்கத்தை தமிழ்நாட்டில் ஆதரிக்க எத்தனிப்பவர்களை கைது செய்யவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் எதை உணர்த்துகின்றன.
இந்திய அரசியலில் அடுத்ததாக ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என அரசியல் ஊகங்கள் தெரிவிக்கின்றன எனவே தனது நீண்ட அரசியல் நலனுக்காக ஜெயலலிதா இவ வாறான முடிவுகளை எடுக்கின்றாரா என்ற கேள்வியும் எழாமலில்லை.
தற்போது ஏற்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்பாட்டின் பின்பு நடைபெற்றுவரும் அமைதிச் செயற்பாட்டின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்று புரிந்துணர்வு செயற்பாடுகள் தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுக்களை நடாத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் ஜெயலலிதாவின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகள் சிறீலங்காவின் பேரினவாதிகளுக்கு ஆதரவும் உற்சாகமும் கொடுக்கும் செயற்பாடாகவே உள்ளன.
இதனிடையே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்த குழுவுக்கு தலைமை தாங்கியவரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சமீபத்தில் தமிழகம் சென்று ஜெயலலிதாவை சந்தித்தபோது போர் நிறுத்தத்தை மீளாய்வு செய்து மீண்டும் யுத்தத்தை தொடருமாறு இலங்கை பிரதமர் ரணிலுக்கு இந்திய பிரதமர் வாஜ்பாயுூடாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கதிர்காமர் ஜெயலலிதாவை இச்சந்திப்பின் போது கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க எம். ஜி. ஆரின் சுயசரிதை அடங்கிய நு}ல் ஒன்றை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இடைக்கால தடையொன்றை பிறப்பித்துள்ளார். எம். ஜி. இராமச்சந்திரனின் சுயசரிதையை வெளியிடவே ஜெயலலிதாவால் ஆக்கபுூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ள இந்த வேளையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இவரால் எவ வாறான முடிவுகளை எடுக்க முடியும் என்பது சொல்லாமலே தெளிவாகின்றது.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினையில் ஆரோக்கியமற்ற அசைவுகளை மேற்கொண்டு வரும் ஜெயலலிதாவுடன் சனாதிபதி சந்திரிகாவால் அனுப்பப்பட்ட, சனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனையின் பேரில் தமிழகம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சுவார்த்தை நடாத்தியதாக தெரியவருகின்றது.
எது எவ வாறாயினும் இலங்கை தமிழ் மக்களின் விடுதலைப் பக்கங்களில் 'ஜெயா' வின் அசைவுகள் வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை போட்டுடைக்கும் செயலாக இருப்பதாகவே தோன்றுகிறது.
எஸ்.வி.ஆர். கஜன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
எங்கு நிற்கின்றோம்?
எங்கு போகப்போகின்றோம்?
அடுத்தது என்ன?
பண்பாடென்றால் ஆடை ஆபரணங்கள் தானென மனதைச் சுருக்கிக்கொள்ளாது செழிப்பான, பரந்த நவீன பண பாட்டு வளர்ச்சிக்கும் போகவேண்டும். அடிமைக் கலாச்சாரங்களைத் தூக்கியெறிந்து ஒவ வொருவரது சுயகௌரவத்தையும், சுதந்திரமான செயற்பாட்டிற்குரிய உரிமைகளையும் பண்பாடென யாசிக்க வேண்டும். சிறப்பான ஜனநாயக மென்பது ஒரு சிறந்த பண்பாடு; ஒரு சிறந்த வாழ்க்கை முறை ; ஒரு சிறந்த மனப்பாங்கு, அதற்கூடாக அனைத்து வழிகளிலும் திறந்து, நிமிh ந்த ஒரு நவீன கண்ணோட்டமிக்கப் பண்பாட்டைத்தான் நாம் முதலர்த்தத்திற் பண்பாடென ஏற்றுக்கொள்ளலாம். இப்போது உலகிற் போராடும் அனைத்து மக்களுக்கும் முதலிற் தேவைப்படுவது ஒரு புதிய சிந்தனை மாற்றமே.
எங்கு நிற்கின்றோம்?
எங்கு போகப்போகின்றோம்?
அடுத்தது என்ன?
இவையே வரலாற்றை முன்னேற்றத் திட்டமிடுவோரின் திறவுகோல்கள். வரலாற்று முன்னேற்றமென்பது எவரினது மனவிருப்பங்களிலும் தங்கிபிருப்பதில்லை. காணப்படும் நிலைமைகளைப் பொருத்தமான வகையிற் கையாள்வதிலேயே முன்னேற்றம் தங்கியுள்ளது. வரலாறு தரும் காலகட்ட வாய்ப்புக்களை அதேஅளவிற்கு விளங்கி அதற்கேயுரிய பங்கையும், பாத்திரத்தையும் வகிப்பதன் மூலம் மட்டுமே வரலாற்றை மேல் நோக்கி உந்த முடியும். இவ வாறு முன்னேற்றத்திற்கேற்ற மேன்மையான பாத்திரம் வகிப்பதற்குரிய முன்நிபந்தனை என்னவெனில் விளங்கிக்கொள்வதும். முன்னேற்றத்திற்கான கருக்களும் விதிகளும் அந்த வரலாற்றுக் கட்டத்தில் எவ வாறு காணப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வதும்தான்.
பிரபஞ்சமும் மனித வாழ்வும் இடையறாது மாறிக்கொண்டேயிருக்கின்றன. நேற்றிருந்தது போல் இன்று எதுவுமே இருக்க முடியாது. நேற்றைய அரசியலிலிருந்து இன்றைய அரசியல் மாறியுள்ளது. விஞ்ஞான, தொழில் நுட்ப, சிந்தனை வளர்ச்சியுடனும் அவைசாh ந்து மொத்தத்திலேற்படும் சமூக,அரசியற், பொருளாதார மாற்றங்கள், உரிமை வளர்ச்சிகள், வாழ்நிலையெண்ணங்கள், மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு இயற்கைச் சூழ்நிலைகள் ஆகிய அனைத்தையும் திரட்டியெடுத்து வரலாறு அவ வப்போது மனிதனிடம் ஒருபாத்திரத்தை நீட்டும். அந்தப் பாத்திரத்திற்கேற்ற பங்கை வகிக்குமாறு வரலாறு மனிதனைக் கோரிநிற்கும்.
அவ வாறு அவ வப்போது வரலாறு நீட்டும் பாத்திரத்திற்கேற்ப ஒரு முன்னேற்றகரமான பங்கை மனிதன் வகிக்கின்றானா இல்லையா என்பதிற்தான் மனிதன் முக்கியத்துவமும், முன்னேற்றமும் தங்கியுள்ளதே தவிர வெறும் மனவிருப்பங்களிலும், மனவேகங்களிலும், மனக் கோட்டைகளிலுமல்ல. இந்த நிபந்தனைகளை மீறிச்சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் பெயர்தான் கற்பனாவாதம். கற்பனாவாதம் வளர்ச்சியின் எதிரியென்பதை 19ம் நூற்றாண்டு ஐரோபிப்பிய சிந்தனையாளர்கள் அடையாளங்கண்டனர்.
இந்தக் கற்பனாவாதம் (டுவைழியைnளைஅ) பார்வைக்கு அழகானதாயும், ஆனால் செயலில் அது எதிர் மறையான பலனுக்கே போகும். எனவே வரலாற்றை முன்னேற்றுவதற்கு வரலாற்றில் காணப்படும் வாய்ப்புக்கள் எவை என்பதைக் கண்டறிவதே அவற்றிற்கான முதல் நிபந்தனையும், முதற் பணியுமாகும்.
எமது காலம் எத்தகையது? இதில் எமக்குள் வாய்ப்புக்களும். வாய்ப்பின்மைகளும் எவை? இவற்றிற்கு விடைகாண வேண்டியதுதான் எமது சமூக, அரசியற், கலாச்சாரச் சிந்தனையாளர்களின் முதற்பணி. வாழும் காலகட்டத்தை சாராம்சத்தில் எடைபோடத்தவறினால், எமது காலம் இதற்கு முந்திய காலகட்டத்துடன் எத்தகைய வளர்ச்சித் தொடரைக் கொண்டுள்ளதென அறியத் தவறினால், காணப்படும் காலகட்டத்தை எதிர்கால வளர்ச்சியை முன்னேற்ற முடியாது போவதுடன் நிகழ்காலத்ததை மட்டுமன்றி எதிர்காலத்தையும் சீரழித்த பழிக்கு ஆளாக வேண்டிவரும். ஆதலால் உலகிலுள்ள எந்தவொரு மனிதக் கூட்டமும் எப்போதும் தாம் வாழும் தற்காலத்தை முதற்காலத்துடனும்வரப்போகும் பிற்காலத்துடனும் இணைந்து எடைபோட்டுக் கொள்ளுதல் அரசியற்-கலாச்சாரத்தளத்தில் முதற்கட்ட நிபந்தனையாகும்.
சர்வதேச அரசியலில் அமெரிக்காவும் சோவியத்யுூனியனையும் மையங்களாகக் கொண்டு குவித்த இருமைக்குவிவரசியல் (டீipழடயச pழடவைiஉள) 1991 ஆம் ஆண்டு முடிவடைந்து அமெரிக்கா தலைமையிலான ஒருமையக்குவிவரசியல் (ருnipழடயச pழடவைiஉள) ஆரம்பமானது. இரு மையங்களில் ஒன்று வீழ்ந்ததும் அதற்குப் பதிலாக பலமையக்குவிவரசியல் (ஆரடவipழடயச pழடவைiஉள) தோன்றவில்லை. பிராந்திய அரசியல் கூட (சுநபழையெட pழடவைiஉள)எழவில்லை. அமெரிக்கா நேரடியாக ஒருமைக் குவிவரசியலுக்குள் பிரவேசித்தது. அமெரிக்காவின் ஒருமைய ஏகத்துவ அரசியலுக்கு இஸ்லாமிய வட்டாரங்கள் சிலவற்றிலும். கிழக்காசிய பிராந்தியத்திலும் சவால்கள் இருந்தனவே தவிர அவை சர்வதேச அரசியலின் பரந்த பொதுப் போக்காய் அமையவில்லை. வளைகுடாவில் அமெரிக்காவிற்கு ஈராக் சவாலாய் அமைந்தபோது அமெரிக்கா உலகநாடுகளைத் தன்பக்கம் குவித்து ஈராக்கைத் தாக்கியது. அந்த யுத்தத்தில் உலகநாடுகள் இருமையங்களாகக் குவியவில்லை. ஆப்கானிஸ்தான் பிரச்சனையிலும் அமெரிக்கா பக்கம் உலகநாடுகள் ஒன்றாய்க் குவிக்கப்பட்டனவே தவிர இரு அணிகளாக நாடுகள் குவியவில்லை. ஒரு மக்கள் கூட்டமானது தான் வாழும் காலகட்டத்தின் தன்மையையும், பண்பையும் சர்வதேசாPதியாகவும், உள்நாட்டு hPதியாகவும் தன்நோக்கு நிலையிலிருந்து எடைபோட வேண்டியது அவசியம். இந்தவகையில் வரலாற்றுக் காலகட்டங்களை புதுயுகம் (நேற நுசய) என்றும் இடைமாறு காலம் (வுசயளெவைழையெட pநசழைன) என்றும், ஆக்ககாலம் (குழசஅயவiஎந pநசழைன) என்றும் இன்னும் பலவாக வகைப்படுத்துவா .
தற்போதைய சூழலில் உலகளாவிய hPதியில் வரலாறு எத்தகைய காலகட்டத்துள் பிரவேசித்துள்ளது என்பதை முதலில் எடைபோட வேண்டும். வன்னியின் தகவல் வறுமைப் பின்னணியிவிருந்து அப்படி ஓர் எடைபோடுதலைச் செய்வது கடினம். ஆனால் அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து, அதாவது அமெரிக்கா தன்னை எவ வாறு ஆக்கிக் கொள்கிறது என்பதிலிருந்து ஒரு குறுக்கு வெட்டான எடை போடலைச் செய்யலாம்.
கௌதம புத்தர், ஜேசுகிறிஸ்து, கால்மாக்ஸ் போன்றோர் உலகை முழு அளவிற் சிந்தித்தனர். அலெக்சாண்டர், நெப்போலியன் பொனபாட் போன்றோர் உலகை முழ அளவில் ஆளவேண்டும் என்று ஆசைப்பட்டனர். தம்தம் நிலையிலிருந்து தத்தமது கண்ணுக்குப் பட்ட உலகை அவர்கள் முழு அளவாகக் கொண்டு சிந்தித்தனர், ஆசைப்பட்டனர். அப்படிப் பார்த்தால் இற்றைக்கு 2500 ஆண்டுகளாக இந்த எண்ணமுண்டு 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாதான் தன்னை 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம்' என்று கூறி உலகின் நாற்புறங்களிலும் ஆகப்பெரிய சாம்ராச்சியத்தை நிறுவிக் கொண்டது. ஆயினும் வேறு பல பகுதிகள் இருந்தன. ஆனால் இப்போதுதான் உலகளாவிய அர்த்தத்தில் இந தப் புூமி அமெரிக்காவின் பரந்த அரசியற் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது. இதன்படி அமெரிக்கா உலகின் முதலாவது ஏகவல்லரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவின் நிலையில் இது ஒரு புதுயுகமே. அதாவது முதலாவது ஏகவல்லரசு யுகம். இதனை நல்லது என்று நான் வர்ணிக்கவில்லை. ஆனால் இதுவே இரத்தமும், தசையுமான யாதார்த்தம்.
முதலாளித்துவம் ஒரு யுகம். கொம்யுூனிஸம் இன்னொரு யுகம். கொம்யுூனிஸத்திற்கான இடைமாறு காலகட்டமே சோசலிஸம் என்று மாக்ஸிஸம் கூறுகின்றது. அப்படியாயின் சோசலிஸம் எனும் இடைமாறு காலகட்டத்திற்கு என்ன நடந்தது? வரலாற்றில் இப்போது அதன் நிலை என்ன? இக்கேள்விகளுக்கு விடைகாண வேண்டியது முதலில் அவசியம்.
சர்வதேச சோசலிஸத்திற்கு தலைமை தாங்கத் தொடங்கிய சோவியத் யுூனியன் சுமராக முக்கால் நூற்றாண்டின் பின்பு வீழ்ந்து முதலாளித்துவ அமைப்பிற்குத் திரும்பிச் சென்றது. இத்துடன் சர்வதேச சோஸலிஸத்திற்கான தலைமை அரசமைப்பென்பது முடிவுக்கு வந்துள்ளது. சீனா தன்னிடம் உள்நாட்டுச் சோஸலிஸம் இருப்பதாகக் கூறுகிறது. எப்படியோ சர்வதேச சோஸலிஸம் என்பது அரசமைப்பு hPதியாக முடிந்துள்ளதென்பது விவாதத்திற்கிடமற்ற விடயம். அப்படியென்றால் சோஸலிஸம் அரசமைப்பு hPதியாக ஏன் வீழ்ந்தது என்ற கேள்விக்கு விருப்பு - வெறுப்பிற்கப்பால் விடைகாணவேண்டும்.
இதனைப் பின்வருமாறு விளங்குவோம் மாக்ஸ் உன்னதமான சோசலிஸ அமைப்பை விஞ்ஞான புூர்வமாகச் சிந்தித்தார். முதலாளித்துவ ஜனநாயகத்தை விடவும் சோஸலிஸ ஜனநாகம் மேலும் சிறப்பானதே என அவர் விளங்கியிருந்த போதிலும் சோஸலிஸத்திற்கான கட்சிக் கட்டமைப்பை முதலாளித்துவ ஜனநாயகக்கட்சி முறைக்கூடாவே சிந்தித்து வடிவமைத்தார். ஆனால் லெனின் சோஸலிஸக்கட்டமைப்பிற்கு ஏற்றதும், இருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்தை விடச் சிறப்பானதுமான ஜனநாயகத்தை உருவாக்க விரும்பி "ஜனநாயக மத்தியத்துவக் கட்சி முறை" எனும் புதிய அம்சத்தை உருவாக்கினார். சோஸலிஸ சமூகமைப்பிற்கும், நிறுவன அமைப்பிற்கும் வரலாற்றில் முன்னுதாரணமில்லை. ஆதலால் நாம் புதிதாகவே உருவாக்கி அதனைப் பரிசோதித்துப் பார்த்தே முடிவுக்கு வரவேண்டும். என்று லெனின் கூறினார். துரதிஸ்ட வசமமாக அவற்றிக்குப் பின்வந்தோர் ஜனநாயக மத்தியஸ்துவத்தை எதேச்சாதிகாரத்தை நோக்கிப் பிரயோகித்து விட்டனர்.
இதனை விளகுவது கஸ்டமில்லை. மாக்ஸ், லெனின் ஆகியோர் சகல அதிகாரங்களும் பாட்டாளிகளுக்கே என்று கூறினர். ஆனால் பின்வந்தோர் சகல அதிகாரங்களும் எதேச்சாதிகாரிகளுக்கே என்ற தோரணையில் அதனைப் பிரயோகித்து விட்டனர். இதனை வரலாற்று hPதியாகப் பின்வருமாறு நோக்கலாம். அதாவது புரட்சிக்கு முன்பான ரஸ்யாவில் மன்னராட்சிக் கொடுங்கோன்மைப் பொலிஸ் இராச்சியமே (Pழடiஉந ளவயவந)நிலவியது. அந்த மன்னராட்சிக் கொடுங்கோன்மைப் பொலிஸ் இராச்சியக் கலாச்சாரத்தையே லெனினிற்குப் பின்வந்தோர் சோஸலிஸ அரசமைப்புக்கான கலாச்சாரமாகவும் பேணினர்.
மேற்கு ஐரோப்பாவில் வளர்ந்திருந்தது போல ரஸ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகமாவது புரட்சிக் கட்டத்தில் வளர்ந்திருக்கவில்லை. மக்களின் அனுபவம் மன்னராட்சி எதேச்சாதிகாரமேதான். இந்தப் பின்னணியில் ஜனநாயகப் பாரம்பரியம் வளர்ந்திராத ரஸ்ய மக்கள் மீது மன்னராட்சி எதேச்சாதிகார பொலிஸ் இராச்சியத்தைப் பிரயோகிப்பது சாத்தியப்பட்டது. இந்த எதேச்சதிகாரம் மக்களுக்கு வாயும், வயிறும் இருப்பதை ஒப்புக்கொண்ட போதிலும் வயிற்றுக்கான ஒரு விநியோகப் பாதையாக மட்டுமே வாயைக் கருதியது. மனிதனை ஒரு சோற்றுப் பிராணியாகவே கருதினர். சீனக்கொம்யுூனிசம் மனிதனுக்குச் சோறாவது போட்டது ஆனால் ரஸ்யாவில் அதுகூட நிகழவில்லை,
அதேவேளை சீனாவும் வரலாற்றில் ஜனநாயகம் பாரம்பரியங்கள் எட்டாது மூலையுள் ஒதுங்கி கிடந்தநாடு. ஆதலால் சீனப்பேரரசுக் கொடுங்கோண்மைக் காலச்சாரத்தையே மா ஓ-சேதுங் தேசியவாதத்தின் பெயராலும், கொம்யுூனிஸத்தின் பெயராலும் பிரயோகிப்பது சாத்தியப்பட்டது. ஆதலால் சீனக் கொம்யுூனிஸமும் அடிப்படையில் சீனப் பேரரசவாதக் கொடுங்கோண்மை எதேச்சாதிகாரத்தை சோசலிஸ அரச இயந்திரத்திற்கான இயக்க சக்தியாய்ப் புூட்டி விட்டது.
"மக்கள் யுகம்", "சாமானியரின் சகாப்தம்" என்று கூறினர். இது மன்னனுக்கு மாறான மக்கள் யுகம் என்றால் மக்கள் அரசியலிற் பங்கெடுப்பதையே இது கருதும். மக்களை அரசியலில் பங்கெடுக்க வைப்பதென்பது ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே சாத்தியம். ஆனால் மக்கள் யுகம் என்று கூறிக்கொண்டு ஆயுட்கால சக்கரவா த்திகளாய் கொம்யுூனிஸக் கட்சித் தலைவர்கள் சிம்மாசனமேறினர். இந்த நவீன சக்கரவா த்திகளின் எதேச்சாதிகாரத்தின் கீழ் சோஸலிஸம் தோல்வியடைந்தது. அதாவது ஜனநாயகம் இல்லையேல் புதிய எண்ணங்கள், கருத்துக்கள், சிந்தனைகள், ஊக்கம் என்பன தோன்ற முடியாது. ஆதலால் ஜனநாயகம் இல்லையேல் உற்பத்திச் சக்திகள் வளரமுடியாது. இந்த நிலையில் சோஸலிஸ அரசு முதலாளித்துவ அரசைவிட குறைந்த உற்பத்தியையும், வளர்ச்சியையுமே காட்டியது. இந்த ஒப்பீடும் பொருளாதார வளர்ச்சியின்மையும், உணவுப்பற்றாக்குறையுமே ரஸ்ய மக்கள் முதலாளித்துவத்தின் பக்கம் திரும்பிப்போக காரணமாய் அமைந்தது. லெனின் முதலாளித்துவத்தை விடக் கூடிய ஜனநாயகத்தைத் திட்டமிட்ட போதிலும் பின்வந்தோர் கொடுங்கோண்மை மன்னராட்சிக்குத் திரும்பிச் செல்லவே, ஜனநாயகம் நசிய சமூக வளர்ச்சியையும் நசித்தது. சக்கரவா த்திக் கொடுங்கோண்மைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவதிலிருந்தும், மேலான ஜனநாகத்தையாவது ஏற்பதிலிருந்துமே சோஸலிஸத்தைப் பற்றி இனிமேல் சிந்திக்கலாம்.
முதலாளித்துவத்தை விடவும் பிற்போக்கான மன்னராட்சிக் கொடுங்கோண்மை எதேச்சாதிகாரக் கலாச்சாரமே சோஸலிஸத்தை தோற்கடித்த முதல் எதிரி என்பதை விருப்பு, வெறுப்பிற்கப்பால் ஒப்புக்கொள்ளவேண்டும். அதாவது சர்வதேச சோஸலிஸம் தோற்றுவிட்டதென்பதை அபிப்பிராய பேதமின்றி அனைவரும் ஏற்கின்றனர். அப்படியென்றால் தோற்றதற்கான காரணத்தை விளக்க ஏன் நாம் மறுக்க வேண்டும். "வட்டத்தைக்" கீறிவிட்டு "சதுரம்" என்று சாதித்துக் கொண்டிருக்கக்கூடாது. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் சோஸலிஸத்தின் தோல்வி அதன் ஜனநாயகமின்மையிற் குடி கொண்டுள்ளதென்பது முதலாவது விடயம். மன்னராட்சி எதேச்சாதிகாரங்களுக்கு எதிராக மனிதகுலம் பெரும் விடுதலைப் போராட்டங்களை நடத்திப் பெற்றுக் கொண்ட ஒரு ஜனநாயக உரிமைகளே மக்களின் அரசியற், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கான கருவிகளாகும். அந்த ஜனநாயகத்தை மேலும் சிறப்பானதாகத் தீட்டியெடுக்க வேண்டுமே தவிர வரலாறு கழித்து விட்ட மன்னராட்சி எதேச்சதிகாரத்தை கையிலேந்துவதல்ல எமது பணி. அவ வாறு சோஸலிஸ அரசமைப்பானது எதேச்சதிகாரத்தைப் பிரயோகித்ததன் மூலம் அது இரண்டாயிரமாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று சோஸலிஸத்தை பழைய சகதிக்குள் புதைத்துவிட்டது.
மேற்கு ஐரோப்பாவிற்கு அருகே ரஸ்யா அமைந்திருப்பதால் மேற்கைரோப்பிய முதலாளித்துவ ஜனநாயகக் காற்றை ரஸ்யா சுவாசிக்கக் கூடியதாக இருந்ததால் அது விரைவிற் குறைந்தபட்ச ஜனநாயகத்தின் பக்கம் திரும்பியது. இவ வாறான நிலையில் முக்கால் நூற்றாண்டின் பின்னாவது ரஸ்யா ஜனநாக சிந்தனையை யாசித்தது. அதேவேளை பேரரச எதேச்சாதிகாரக் கலாச்சரத்துள் மூழ்கியுள்ள ஆசியாவின் ஒதுக்குப்புறச் சீனா ஜனநாயத்தை யாசிக்க இன்னும் சில பத்தாண்டுகளெடுக்குமோ? சீனா இப்போது திறந்த சந்தை முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அடியெடுத்து வைத்துவிட்டது. ஆனால் அரசியற் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்து. இந்த இரண்டுக்குமிடையேயான முரண்பாடு கிளர்ச்சியாய் வெடிக்க பல பத்தாண்டுகளாகும்.
அப்படியாயின் சோஸலிஸம் தோற்றுவிட்டதா? இல்லை; இல்லவேயில்லை. சோஸலிஸத்தை தனது மூக்கிற் காவிச்சென்ற மன்னராட்சிக் கொடுங்கோண்மை எதேச்சாதிகார அரசமைப்புத்தான் பிசகியதே தவிர சோஸலிஸமல்ல.
இத்தனைக்கும் மத்தியில் சோஸலிஸத்தின் உயிர்வாழ்வை வரலாற்றில் பின்வருமாறு அடையாளம் காணலாம். அதாவது சோஸலிஸத்தின் எழுச்சியை எதிர்கொள்வதற்காக, முதலாளித்துவம் தனது அரச அதிகாரத்தை தக்க வைப்பதற்காக, புரட்சியைத் தடுப்பதற்காக சோஸலிஸத்தின் சில கோரிக்கைகளை தானே அமுற்படுத்த தலைப்பட்டு சமூகநலன் பேண் அரசமைப்பு (றுநடகயசந ளுவயவந) என்பதை உருவாக்கியது. முதலாளித்துவம் இதனை எதிh ப்புரட்சி நடவடிக்கையாகவேதான் மேற்கொண்டது. ஆனால் அவ வாறு இதில் எமக்குச் சொல்லும் பாடம் என்னவெனில் முதலாளித்துவம் கூட சோஸலிச இலட்சியம் சிலவற்றை ஏற்றுக் கொண்டுதான் முதலாளித்துவத்தைத் தக்க வைக்கவேண்டிய அளவிற்கு சோஸலிஸம் வரலாற்றுத் தேவையாகிவிட்டது. அதனால் சோஸலிஸம் வரலாற்றில் இனியும் எழுந்து நிமிரக்கூடிய ஓர் அவசியத்தையும், வரலாற்று நிர்ணயத்தையும் கொண்டுள்ளது என்பதை தெளிவுறப் புரியலாம். சோஸலிஸம் என்பது ஒரு வெறும் மனவிருப்பல்ல. அது ஒரு வரலாற்றுத் தேவையும், விஞ்ஞானபுூர்வமான வரலாற்று வளர்ச்சியைக் கொண்டுள்ளதும் அதற்கேற்ப விஞ்ஞான புூர்வமான அறிவியல் அணுகுமுறையைக் கோரிநிற்பதுமாகும். எனவே சோஸலிஸம் தனது இடைமாறு காலகட்டத்தில் பிழையான அணுகுமுறைகளால் உருமாறிப் போய்விட்டது.
இப்போது இப்படி தர்க்கபுூர்வ முடிவுக்கு வருவோம். சோஸலிஸம் ரஸ்யாவினதும், சீனாவினதும் சீரானதும் பழைய பேரரசுவாத எதேச்சதிகாரத்துக்குட் சிக்குண்டு போனதால் அமெரிக்கா உச்ச ஏகாதிபத்தியத்திற்கான நவீன ஏகப்பேரரசாக தன்னை உலகிற் ஸ்தாபித்துவிட்டது. பண்டையப் பேரரசுகளுக்கும், நவீன ஏகப்பேரரசுக்கும் அப்பால் உலகளாவிய hPதியில் மக்கள் சிறப்பான ஜனநாயகம் நோக்கி முன்னேற வேண்டும். மன்னராட்சி கொடுங்கோண மையைக் காப்பாற்ற, பீரங்கிக் கப்பல்களினதும், ஏவுகணைகளினதும், நவீன கதிரியக்க ஆயுதங்களதும் மிரட்டல் ஜனநாயகத்திற்கும் அப்பால் மக்களுக்கு சுதந்திரமாகச் சிந்திக்கவல்ல,செயற்படவல்ல ஜனநாயகம் வேண்டும். எதேச்சதிகாரத்தால் அமிர்தமே கிடைக்குமாயினும் அது வேண்டாம். பால்பழ முண்ணும் கூண்டுக் கிளியை விடவும் தானியம் பொறுக்கும் சிட்டுக்குருவி மேல் என்ற சிந்தனையின் கீழ் சோஸலிஸத்தை வடிவமைத்தாற்தான் பாலாலும், தேனாலும் மிக்க சோஸலிஸம் சாத்தியப்படும்.
ஆதலால் இப்போதைய எமது காலம் என்பது என்னவெனில் சோஸலிஸம் உருத்திரிந்து விட்ட காலமும், அமெரிக்கா முதலாவது ஏகப் பேரரசாக வந்துவிட்ட யுகமுமாகும்.
"முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ஏகாதிபத்தியம் என்ற ஒரு புதுக்கண்டுபிடிப்பை மாக ஸிஸத்திற்கு லெனின் வழங்கினாh ஆனால் அந்த ஏகாதிபத்தியம் கடந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் தொடர்வளர்ச்சியடைந்து செல்கின்றது. ஆதலால் ஏகாதிபத்தியம் பல கட்டங்களைக் கொண்டுள்ளதென்பது தெரிகின்றது. எனவே ஏகாதிபத்தியத்திற்கு இருக்கக்கூடிய கட்டங்கள் எத்தனை? இப்போது எத்தனையாவது கட்டத்தில் நாம் நிற்கிறோம்? ஏகப்பேரரசுவாதம் அப்படியாயின் அது எவ வாறானது போன்ற தத்துவாh த்த விடயங்களை மேற்கொண்டு யாரும் ஆராய வேண்டும். சோஸலிஸம் உருத்திரிந்துவிட்டதும் அமெரிக்கா ஏகப்பேரரசாகி விட்டதுமான காலகட்டம்தான் இது என்பதை பெருவெட்டாக வரையறை செய்யலாம். எனவே இத்தகைய சர்வதேச காலகட்டத்தில் உலகிலுள்ள பல்வேறு மக்கள் கூட்டமும் தமது தனி வீடுகூட சூழலுக்கேற்ப எத்தகைய காலகட்டப் பரிமாணங்களைக் கொண்டுள்ளன என்பதை சர்வதேச நிலமையுடன் பொருத்தித் தனித்தனியே வரையறை செய்ய வேண்டும்.
இருமையக்குவிவரசியல் செயற்பட்டு வந்த காலத்தில் பொதுவாக உலகநாடுகள், குறிப்பாக சிறிய நாடுகள் மேற்படி இரு மையங்களுக்குமிடையே ஓடிப்பிடித்தும், ஒளித்துப்பிடித்தும் விளையாட முடிந்தது. இரண்டுக்கும் இடையே தப்பியோடவும் முடிந்தது. ஆனால் தற்போதைய ஒருபடைக்குவிப்பு அரசியலானது சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற அரசுகளையே பணியவும் வைத்து விட்டது. அப்படியாயின் சிறியரசுகளின் நிலை முற்றிலும் கதியற்றதாகி விட்டது.
இந்தப் பரிதாபகரமான வரலாற்று இக்கட்டத்திலிருந்து கொண்டே மேற்படி நாடுகள் தமது ஆகக்கூடிய நன்மைக்கான பாத்திரத்தை எடைபோட்டு தம்மை வழிப்படுத்த வேண்டும். இந்தப் பெரும் பரபரப்புக்குள் வைத்தே இந்தியாவின் காலகட்டப் பாத்திரம், இலங்கையின் காலகட்டப் பத்திரம், தமிழீழ மண்ணின் காலகட்டப் பாத்திரமென ஒவ வொரு மக்கள் கூட்டமும் தத்தமது நிலையிலிருந்து இதனை எடைபோட்டு வகைப்படுத்த வேண்டும். இந்த வகையில் இலங்கை, ஈழம் என தனித்தனியே இவற்றின் காலகட்டப் பாத்திரத்தை எடைபோடும் பணி அடுத்த கட்டமாகும். அதனை இனிமேற்தான் ஆராய வேண்டும். துறைசார்ந்த பலரும் முயற்சிக்கலாம்.
மனிதகுலத்தின் வயது சுமாரக இருபது இலட்சம் ஆண்டுகள் கடந்த ஒரு நூற்றாண்டுகால வளர்ச்சியானது அதற்கு முற்பட்ட இலட்சக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சியை விடவும் பெரிது. இனி வரப்போகும் சில பத்தாண்டுகால வளர்ச்சி இற்றைவரையான முழுவளர்ச்சியை விடவும் பெரிது. ஏனெனில் மனிதகுல வரலாற்று வளர்ச்சியானது எப்போதும் இதற்கு முற்பட்ட காலகட்ட வளர்ச்சியின் அனைத்iதையும் ஒன்று திரட்டிய கூட்டுவேக வளர்ச்சியைக் கொண்டது.
19ஆம் நூற்றாண்டு மாக்ஸிஸத்தை லெனின் 20ஆம் நூற்றாண்டிற்குரிய மாக்ஸிஸமாக 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளா த்தெடுத்தார். சில குறைபாடுகளுடனாயினும் அது வளர்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு அது தொடர்வளர்ச்சியடையவில்லை. அதேவேளை முதலாளித்துவம் பல்வேறு நிறுவன அமைப்புக்களினதும் பங்களிப்புடன் நேர்கணிய வளர்ச்சியைத் தொடர்ந்தடையலாயிற்று.
முதலாளித்துவத்திற் காணப்படும் அடிப்படை ஜனநாயகமும், நிறுவனங்களின் பலமும் ஊக்குவிப்புக்களும் இவ வாறான முதலாளித்துவ வளர்ச்சியைச் சாத்தியமாக்கின. இந்த வகையிற் பார்க்கும் போது சோஸலிஸ சித்தாந்தம் ஸ்தம்பிதமும், குழப்பமும், சிலவேளைகளில் எதிர்நிலை வளர்ச்சியும் அடைந்துள்ளது. இந்நிலையிற் சோஸலிஸம் பொறுத்து ஒரு தத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையுடனும், சமூகப்பொறுப்புணர்ச்சியுடனும் நுணுக்கமாகத் திட்டமிடவேண்டியுள்ளது. வளர்ச்சியென்பது தொடர்ச்சியான மாற்றங்களே என்பதால் முற்றிலும் புதிய சூழலைக் கருத்திற்கெடுத்து பழமை மேன்மைக் கோட்பாட்டுடன் சிறையுண்டு போகாது முற்றிலும் நவீனமாகச் சிந்திக்க வேண்டும் இந்நிலையில் ஒரு சிந்தனை மாற்றம் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.
பண்பாடென்றால் ஆடை ஆபரணங்கள் தானென மனதைச் சுருக்கிக்கொள்ளாது செழிப்பான, பரந்த நவீன பண பாட்டு வளர்ச்சிக்கும் போகவேண்டும். அடிமைக் கலாச்சாரங்களைத் தூக்கியெறிந்து ஒவ வொருவரது சுயகௌரவத்தையும், சுதந்திரமான செயற்பாட்டிற்குரிய உரிமைகளையும் பண்பாடென யாசிக்க வேண்டும். சிறப்பான ஜனநாயக மென்பது ஒரு சிறந்த பண்பாடு; ஒரு சிறந்த வாழ்க்கை முறை; ஒரு சிறந்த மனப்பாங்கு, அதற்கூடாக அனைத்து வழிகளிலும் திறந்து, நிமிh ந்த ஒரு நவீன கண்ணோட்டமிக்க பண்பாட்டைத்தான் நாம் முதலர்த்தத்திற் பண்பாடென ஏற்றுக்கொள்ளலாம். இப்போது உலகிற் போராடும் அனைத்து மக்களுக்கும் முதலிற் தேவைப்படுவது ஒரு புதிய சிந்தனை மாற்றமே.
மு. திருநாவுக்கரசு
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பருத்தித்துறைக் கடற்பரப்பு
கப்பல் தொடரணி ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. கடலின் நெஞ்சினில் மேலான நகர்வு. பலாலி கூட்டுப் படைத்தளத்திற்கான இரையை அத் தொடரணி காவிச்சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே அக்கடல் அவர்களுக்கு மனதில் கடலின் ஒவ வாமை உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அந்த திகில் பயணத் தொடரில் கடலின் அடிவயிறே கலங்கும் பேரொலி, தொடர் வேட்டுச் சத்தம், எது நடக்கலாம் என்று நினைத்தார்களோ அது நடந்தே விட்டது. சிதறி ஓடிய கடற் கலங்கள் ஒவ வொன்றும் தாக்கப்பட்டன. தாய்க் கப்பல் 'லங்கா முடித' சேதப்பட்டபடி கடலில் உயரப்போனது டோறா படகொண்றிலிருந்த கடற்படை அழிந்து போனது. மீதி தொலைந்து போனது. படகு மட்டும் கைகளில் சிக்கி அது கரை கொண்டுவரப்பட்டது. வரும் பொழுதே அது இழந்த தன் புத்திரர்களுக்காக உடன் கட்டை ஏறிக்கொண்டது. கடற்படையின் உயிர் நாடியையே உலுக்கிவிட்டது அந்தச் சமர். எம்மை எதுவுமே செய்து விடமுடியாது என இறுமாந்திருந்தவர்கள் நிதானமிழந்து போனார்கள். பரிகாரமாக அவர்கள் மீண்டும் முருங்கையில் ஏறும்பேயாகினாh கள். அதற்காக இம்முறை அவா கள் பயன்படுத்தியது பீரங்கிகள் அல்ல, துப்பாக்கிச் சன்னங்கள் அல்ல விமானங்களையே.
'சியாமாச்செட்டி' யுகம், 'புக்காரா' யுகம், 'சுப்பசொனிக்' யுகம், 'கிபிர்' யுகம், 'மிக்'யுகம்.. என ஊழியுகத்தின் வரிசையில் அது புக்காரா யுகமாயிருந்தது. ஏவிய பணிமுடிக்க ஒன்றல்ல மூன்று புக்காராக்கள் நிலம் விட்டு மிதந்தனலு}.
"எங்கட சொந்த இடம் மயிலிட்டி"
"தொண்ணுhறுகளில அங்க இருக்கேலாமல் போச்சுது, ஒரே செல்லடி, அப்பிடியே நாகர்கோவிலுக்கு வந்தனாங்கள்"
பாய்விரிக்கப்பட்ட குந்திலிருந்தபடியே தொடர்ந்து சொல்லும் அங்கலாய்ப்புடன் அந்தப் பெண்
"அப்ப நான் ஆறாம் வகுப்பு, நானும் மூன்று சகோதரர்களும் நாகர்கோவில் பள்ளிக்கூடத்திலதான் படிச்சனாங்கள்.
அண்டு பள்ளிக்கூடத்தில ஏதோ நிகழ்வு. இடைவேளை விட்டிருந்தது. தம்பியாக்கள் கேட்டவங்கள்,
'அக்கா வா வீட்டபோவம்' எண்டு, நான் வரவில்லை எண்டு சொல்லிப் போட்டு நிண்டனான். கொஞ்ச நேரத்தில தூர ஒரு குண்டுச்சத்தம் கேட்டது. அதுக்குப் பிறகு"
நேரம் 12.50 திகதி 20.09.1995
வான்வெளி கிழித்து சீறிச் சினந்தபடி வந்தன மூன்று புக்காராக்களும். இடையில் ஓரிடத்தில் எச்சமிட்ட பின்பு வட்டமடித்து திரும்பின. எச்சமிட்ட இடத்தில் புற்களும் பற்றைகளும் எரியத்தொடங்கியது. திரும்பிய வான் கழுகுகளின் கண்களில் சிக்கியது பாடசாலை மொட்டுக் காளான்களாக ஓடித்திருந்த சிறுவர்கள் அவற்றுக்கு விருந்துணவாக தெரிந்தனர். தாளப்பறந்த வான்கழுகொன்று வீசிய குண்டு வெடித்துப் புகைந்தது. அதுவரை ஒதுங்கி பயந்து நின்ற மாணவர்கள் மரண பீதி கண்டு சீறுவாணம் என பிய்த்துக் கொண்டு ஓடத்தொடங்கினர். இதைக் கண்டு விட்டது மற்றைய வான்கழுகு. அதன் கண்கள் மதிய சூரியக்கதிரால் பளிச்சிட்டன. வெறிகொண்டு அவை மாறி மாறி குதித்துக்கிழம்பின. கடல் நுரைத்து கிளம்புவதை பார்த்து பழகியவர்களின் கண்கள் மண் புகைத்து கிளம்புவதை கண்டன. புகைப் புழுதியினூடு சீறிப் பாய்ந்த மரணவேட்டுக்கள் அவ விடத்தை ஒரு கொலைக்களமாக மாற்றியிருந்தன. வெள்ளை போர்த்து திரிந்தவர்கள் இரத்தக்காப்பு சாத்தப்பட்டிருந்தனர். எங்கும் மனித உடல்கள் குவிந்திருந்தன. மரண ஓலங்களும் வேதனை முனகல்களும் காதை நிறைத்தன. எவர் உடலில் உயிருண்டு எவருடலில் உயிரில்லை என்பது அறிய முடியாதிருந்தது. புத்தகங்களை பற்றியபடியிருந்த கைகளும் சிறு காலணிகள் அணிந்த கால களும் திசைக்கொன்றாக சிதறியிருந்தன.
"எங்களுக்கு மேல குத்தின ஒரு பிளேன் போட்ட குண்டு வெடிச்ச உடன் எல்லா பிள்ளையளும் பயத்தில ஓட தொடர்ந்து சத்தங் கேட்டுது.
கொஞ்சத்துக்குள்ள என்னையும் தூக்கி வீசிட்டுது"
"எழும்புவம் எண்டு கையை ஊண்டினன் எழும்பேலாமல் கிடந்தது. அப்பதான் சனம் ஓடி வந்து கொண்டிருந்தன. என்னைச் சுத்தி கூடப் படிச்ச பிள்ளையள் எல்லாம் சத்தம் போடாமல் குப்புற கிடந்த படியிருந்தன.
ஆனாலு}லு}"
"பிறகு அவையள் எழும்பவே இல்லைலு}லு}." .
அசுர ஆட்சியை நடத்தி விட்டு பேய்க் காற்று ஓய்ந்தது போல அது நடந்து விட்டிருந்தது. இருபத்தைந்து பள்ளிச் சிறுவர்களுடன் மொத்தமாக 40 பேரை பலியிட்டும் 15க்கு மேலானவர்களை காயப்படுத்தியும் விட்டு அந்த வான் கழுகுகள் எழுந்து அகன்றிருந்தன. பாடசாலை முற்றத்தில் நின்றிருந்த அத்திமரம் கீழே அணைத்திருந்த பள்ளிக் கொழுந்துகளுடன் படிந்திருந்தது. அனா த்தத்தின் பின் மருத்துவமனைவிட்டு வெளியேறுபவர்களில் பன்னிரண்டு பள்ளிச்சிறார்கள் தங்கள் கால்களை பறிகொடுத்திருந்தனர்.
"நல்ல காலம் தம்பியவையும் நின்றிருந்தா அண்டு எல்லாருமா போய் சேர்ந்திருப்பம் இடைவேளையெண்ட படியாலதான் இவ வளவு, இல்லாட்டி"
நினைக்கவே நெஞ்சு எக்கி கொண்டது.
"அப்படியிருந்தும் எங்கட உறவுகளுமே 3பேர் செத்திட்டினம்"
"பிறகுதான் எனக்குத் தொ}ஞ்சுது என்னால நிரந்தரமா எழும்பி நிக்க ஏலாதெண்டு"
என்றாள் றஜிதர் சிறுமியாயிருந்து போதே இழந்து விட்ட தன் இருகால்களுடன்.
தன கடற்படை சந்தித்துவிட்ட இழப்புக்கு அந்தக் கடற் கரைக்காற்றை நுகர்ந்தவர்களை சிதைத்துவிட்டிருந்தது சிறீலங்காவின் வான்படை.
"ரெண்டு காலும் இல்லாததால நான் இண்டைக்கு தனிய ஒரு வேலையுமே செய்யேலாம கிடக்குது. என்ரபடிப்பும் பாழாய்ப் போச்சுது. அதனால இப்ப வாழ்க்கையும் பாழாய் போச்சுது"
றஜிதாவை மட்டுமில்லாது இன்னும் பல நூற்றுக்கணக்கானவரையும் சேர்த்தே தன் கோர வெறிக்கு பலியாக்கி விட்டிருந்தது அன்றைய நாகர் கோவிலின் நண்பகல்.
-மிகுதன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மே மாதம் என்று திட்டமிடப்பட்டு பின்னர் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டு அடுத்து ஜூலை மாதத்தில் நடக்கும் என்று சிறீலங்கா அரச தரப்பால் கூறப்பட்டு வந்த விடுதலைப்புலிகளுக்கும் - சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இன்னமும் எப்போது நடக்கும் என்ற உறுதிசெய்யப்படாத நிலையில் - ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதாக தெரிகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் இன்னமும் முழுமை பெறாத நிலையில், அரச தரப்பின் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் இழுபறி நிலையில் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
அரசுக்கும் படைதரப்பினருக்குமிடையே உடன்படிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்ட சில முக்கிய அம்சங்களை செயற்படுத்துவது தொடர்பாக இன்னமும் ஒரு புரிந்துணர்வு ஏற்படவில்லை என்பது பகிரங்கமான விடயமாகியுள்ளது.
அரசின் உத்தரவுகளை படைதரப்பு ஏற்கமறுக்கிறதா, படைதரப்பினரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசால் முடியாமல் இருக்கிறதா என்ற ஒரு தன்மையான இரு வினாக்கள் தற்போதைய தேக்கநிலையின் பின்னணியில் சந்தேகங்களை ஏற்படுத்தும் மையக் குழப்பங்களாக உள்ளன.
குறிப்பாக கடற்படையினர் மீதான கட்டுப்பாட்டை அரசு வெகுவாக இழந்துள்ளது போன்ற எண்ணத்தை அவர்களின் நடவடிக்கைகள் ஏற்படுத்திவருகின்றன.
பாடசாலைகள், வழிபாட்டு மையங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து வெளியேறுவதாகக் கூறும் படையினர் புதிய இடங்களில், மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து புதிய முகாம்களை அமைத்ததுடன் அந்தப் பிரதேசத்தையே அதியுயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யும் ஒரு புதிய வகை நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர். இது உடன்படிக்கையை மீறும் ஒரு நடவடிக்கையேயாகும். இது குறித்து விடுதலைப்புலிகள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் அனைவருமே அரசுக்கு அறிவித்தும் கண்டனக்குரல் எழுப்பியும் அது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. தமிழ்மக்களின் இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் படைதரப்பு நடவடிக்கைகள் புதியபுதிய வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன.
அரச தரப்பும் இதை மௌனமாக அங்கீகரிப்பதாகவே தெரிகிறது. இதேவேளை கடற்படையினரும் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக் கொடுப்பவர்களாக தெரியவில்லை. அவர்களின் நடவடிக்கைகள் யாவும் 'பாதுகாப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் அடாவடித்தனமாகவே தெரிகிறது. குறிப்பாகத் தீவுப்பகுதியில் ஈ.பி.டி.பி. யினருடன் சேர்ந்து கொண்டு அவர்கள் இயங்குவதென்பது நிச்சயம் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஆதரவான ஒன்றாக இருக்கப்போவதில்லை. தீவுப் பகுதியில் ஈ.பி.டி.பி.யினரைத் தவிர்த்துவிட்டு கடற்படையினர் அரச கட்டுப்பாட்டை அனுசரித்து நடப்பார்கள் என எதிர்பார்ப்பதும் முட்டாள்தனமானதாகும். தற்காலிகமாக சில விடயங்களில் - சில நிர்ப்பந்தங்களின் காரணமாக புரிந்துணர்வு உடன்படிக்கையை அவர்கள் மதித்து நடக்க முன்வருவதுபோல் நடித்தாலும் மனப்புூர்வமாக அவர்கள் சமாதான நடவடிக்கைகளை ஆதரித்து செயற்படுவார்கள் என்பதை நம்புதல் சாத்தியமற்ற விடயமாகவே உள்ளது. அண்மைக்காலத்தீவுப் பகுதி நிகழ்வுகள் இதற்கு சரியான உதாரணமாகும். செம்மண்ணன் தொடர்பான விடயத்தில் அவர் மீது தாக்குதலை நடத்தியோரை இனங்காண முடியவில்லை என விசாரணைக்குழுவினர் கைவிரித்துள்ளமையானது. குறிப்பிட்ட, இன்னமும் பிடிபடாத, நிலையில் உள்ள குற்றவாளிகளுக்கு மிகவும் உற்சாகமூட்டும் செய்தியேயாகும்.
தீவுப்பகுதியில் அண்மைக்காலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் சூத்திரதாரிகள் கடற்படையினரும் அவர்களின் கைக்கூலிகளாகச் செயற்படும் தமிழ்க்குழுவொன்றைச் சேர்ந்தவர்களும்தான் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த விடயமேயாகும். இந்த நிலையில் குற்றவாளிகள் இனம் காணப்படவில்லை எனக் கூறுவது உலகை ஏமாற்றும் செயலேயாகும்.
ஆக, படைதரப்பினர் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான விதிமுறைகளை அமுல்படுத்துவதில் ரணிலின் அரசுடன் ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் பலவும் வலியுறுத்தி நிற்கின்றன.
இதேசமயம், விடுதலைப் புலிகளின், புரிந்துணர்வு உடன்பாட்டு விதிமுறைகளை அனுசரிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும் அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு என்பது முறையாக கிடைக்கவில்லை என்பதால் பேச்சுவார்த்தைக்கு முன்னரான இயல்புநிலையை உருவாக்கும் செயற்பாடுகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காட்டுபவையாக இல்லை.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் அவரது அமைச்சர்களும் மாறி மாறி வெளிநாடுகளுக்குப் பறந்த வண்ணம் போகும் நாடுகளில் எல்லாம் சமாதான நகர்வுகளின் முன்னேற்றம் குறித்து பிரச்சாராPதியிலான விளக்கமளிப்பவர்களாகவும் உள்ளனர். சிறீலங்காவில் நிலைகொண்டு பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துவதில் காட்டும் அக்கறையை விடவும் 'பிரச்சாரம்' செய்வதிலும், வேறு சில தந்திரோபாயச் செயற்பாடுகளை தீவிரப்படுத்தி, சமாதான முயற்சிகள் குறித்த சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தும் யுக்திகளைக் கையாண்டு விடுதலைப் புலிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலேயே ரணிலும் அவரது அமைச்சர்களும் முனைப்புக் கொண்டு இயங்குவதாகவே தெரிகிறது.
ஒருபுறம் சந்திரிகாவை பொறிக்குள் சிக்கவைக்கும் முயற்சிகளை மிகவும் நுணுக்கமாகவும் சட்டாPதியாகவும் மேற்கொள்ள மௌனமாகத் திட்டமிட்டு செயற்படும் அரசாங்கமானது மறுபுறம் தான் விரும்பும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முரணான, அரைகுறைத்தீர்வொன்றை சர்வதேசச்சக்திகள் சிலவற்றின் அனுசரணையுடன் விடுதலைப் புலிக@டாகத் திணிக்க - அல்லது அவர்கள் அதனை நிராகரிக்கும் நிலையில், சமாதான நடவடிக்கையை விடுதலைப் புலிகள் குழப்பும் ஒரு சூழ்நிலைக்குள் அவர்களை தள்ளி அவர்கள் மீது சர்வதேச அழுத்தத்தைப் பிரயோகிக்கும் தந்திரோபாயம் கொண்ட மூலோபாபயங்களை வகுப்பதில் ரணிலின் அரசு தீவிரம் காட்டிவருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனை நிராகரித்து விடமுடியாத அளவுக்கு ஒன்றன்பின் ஒன்றாக சிறீலங்கா அரசு திடீர்திடீரென அயல்நாடுகளுடனும், அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுடனும் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களின், மூலோபாய நோக்கங்களுடன் கூடிய தந்திரோபாய நகர்வுகள் தமிழ் மக்களை விழிப்புடன் இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வுக்கு இட்டுச் செல்வதுடன் 'ரணிலின்' உள்நோக்கம் குறித்து சில அச்சங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடனான கடற்பரப்பு, வான்பரப்பு தொடர்பான ஒப்பந்தம், இந்தியாவுடனான திருமலை எண்ணைக்குதம் தொடர்பான ஒப்பந்தம், வட கடற்பகுதியில் சீனாவுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கும் உடன் படிக்கைகளை மேற்கொண்டு வரும் ரணிலின் அரசு இதற்கு மாற்றீடாக இந்த நாடுகளிடமிருந்து சிறீலங்கா படையினரின் பலத்தை மேம்படுத்துவதற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான, இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்குவதற்கான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகின்றமையானது தமிழ் மக்களை அச்சுறுத்தும் போக்கை அரசு மேற்கொள்வதையே காட்டுகிறது.
தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்களை, கடற்பிரதேசங்களை, கடல் வளங்களை, வான்பரப்பை, அந்நியர்களுக்கு உடன்படிக்கைகளின் அடிப்படையில் தாரைவார்க்க முனைப்புடன் செயலாற்றும் அரசு, தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் தாமதம் செய்வது என்பது சமாதானம் தொடர்பான நகர்வுகளில் அதன் அக்கறையின்மையையே புலப்படுத்துவதாகவும் உள்ளது.
சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரசு காட்டும் தாமதமானது இன்னும் பல ஒப்பந்தங்களை தமிழ் மக்களின் வாழ்நிலம் தொடர்பான விடயங்களில் அவர்களின் விருப்பத்திற்கு முரணாக அவற்றைப் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக தனக்கு அனுசரணையான நாடுகளுடன் மேற்கொண்டு, அந்தந்த நாடுகளை ஏதோ ஒருவகையில் எமது தாயக நிலப்பரப்பிற்கு அழைத்து வந்து நிலை கொள்ளச் செய்வதன் மூலம் தமிழீழ தேசத்தை பல்வேறு உலக நாடுகளின் காலனித்துவ பகுதிகளாக்கி பிரித்துக் கொடுக்கும் அதன் அணுகுமுறையை விரிவுபடுத்தவே வழிவகுக்கும்.
இதேவேளை சிறீலங்கா தனது ராணுவபலத்தை மேம்படுத்துவதில் காட்டிவரும் அமைதியான, ஆனால் தீவிரமான நடவடிக்கைகள் பல்வேறு வகையான சந்தேகங்களை தமிழ்மக்கள் மனதில் எழுப்பத் தொடங்கியுள்ளன.
ஒருகாலத்தில் தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் பல்வேறு புதிய குடியேற்றத்திட்டங்களின் சூத்திரதாரிகளும், தமிழ்மக்களை, சிங்கள காடையர்களை ஆயுதபாணிகளாக்கி அவர்களின் எல் லைப்புற வாழ்விடங்களில் இருந்து இரவோடு இரவாக ஓட ஓட விரட்டியடித்து அப்பிரதேசங்களை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களாக மாற்றிய சிங்கள பௌத்த இனவெறியர்களுமான மெரில் குணரத்னவையும், ரவி ஜெயவர்த்தனவையும் ரணில் தனது அமைச்சரவையில் பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமனம் செய்துள்ளார்.
ஜே. ஆரை, முன்னாள் சிறீலங்காவின் பிரதமர்களில் ஒருவரான சேர். ஜோன் கொத்தலாவல 'பொலங்கா' எனச் சிங்களத்தில் வழங்கப்படும் 'விசக் கட்டுவிரியன்' பாம்புக்கு ஒப்பிட்டார் என்றால் அவரது மகன் எத்தகைய இனவாத விசம் கொண்டவராக இருப்பார் என யோசிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆக சமாதான கோசமெழுப்பியபடி சமாதானத்திற்கான புறச்சூழலை முழுமையாக உருவாக்க காலதாமதம் செய்யும் அரசாங்கம், அதற்கு அச்சுறுத்தலான புறச்சூழலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுவதானது ஆரோக்கியமான விடயமாகத் தென்படவில்லை.
ரணிலின் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமான முறையில் சர்வதேச அனுசரணையுடன் தீர்த்து சிறீலங்காவையும் பாதுகாத்துக் கொள்வாரா அல்லது பேரினவாதிகளை திருப்திப்படுத்த முனைந்து சிறீலங்காவையும் சீரழிப்பாரா என்பதை அடுத்து வரும் மாதங்கள் உணர்த்தும்.
தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங களை, கடற்பிரதேசங்களை, கடல் வளங்களை, வான்பரப்பை, அந்நியர்களுக்கு உடன்படிக்கைகளின் அடிப்படையில் தாரைவார்க்க முனைப்புடன் செயலாற்றும் அரசு, தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் தாமதம் செய்வது என்பது சமாதானம் தொடர்பான நகர்வுகளில் அதன் அக்கறையின்மையையே புலப்படுத்துவதாகவும் உள்ளது.
; -தூரனின் பார்வையில்.......
|