Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகள் சரியான வழியில் தான் வழிநடத்தப்படுகிறார்களா?
#21
இதற்காக நீங்கள் யாரும் முதலீடு செய்யத்தேவை இருக்காது என நினைக்கிறேன். ஆனால் யாராவது படித்த பெரியவர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு பொதுவான content கொடுத்தால் அவர்கள் வெளியிடுவர்கள்.
Reply
#22
எதுக்கு எல்லாவற்றையும் திணித்தே பழகிவிட்டீர்கள்.
உங்கள் விருப்பங்களுக்கு , நாங்கள்தான் பலியா?
Reply
#23
எங்களுக்கும் சொந்த அறிவிருக்கு.
Reply
#24
உலகில் அறிவில்லாதது எதுவும் இல்லை..உயிரற்ற சடங்களைவிட.....அறிவு என்பது முழுமை பெற்றதாக எவரும் உலகில் வாழ்ந்ததில்லை...கற்க நிறைய இருக்கிறது...விரும்பினால் கற்றுக் கொள்ளுங்கள்...இல்லையேல்....உங்கள் அறிவுக்கெட்டிய படி செய்யுங்கள்...ஆனால் மற்றவர்களுக்கு உபத்தரிரமாய் இராதீர்கள்.....அது போதும்.....உங்கள் தனிப்பட்ட சுதந்திரம்,அறிவு உங்களோடு இருக்கட்டும்....! அது மற்றவரைத் தாக்க வேண்டாம்...!
நாம் வாழும் சமூகத்திற்கென்று பொதுவான நல்லவற்றைச் சொல்வது எமது கடமை...விரும்பினால் படி.... கடைப்பிடி...விருப்பமின்றேல் உதறிவிட்டுப்போ...ஆனால் எதிர்காலத்தில் வருந்தி நிற்காதே......!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இப்படிச் செய்யலாம் கணணி விளயாட்டு சீடிக்களை தமிழ் கலாசாரத்தை ஒட்டியதாக வினைத்துறன் உள்ள மென்பொருட்கள் கொண்டு வடிவமைத்து வெளியிட்டால்...இன்று ஆங்கில காலாசார அடிப்படை விளையாட்டுச் சீடிக்களின் மோகம் குறைத்து.... பிள்ளைகள் இவற்றை நாடத் தூண்டலாம்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உண்மையில் நல்ல யோசனை குருவிகளே..
புலம் பெயர் நாட்டிலும் எத்தனையோ மழலைப் பாடல்களுக்கான இசைத்தட்டுக்கள்,புத்தகங்கள்,பாசறைகள் என்று எத்தனையோ விடயங்கள் என்று நம்மவர்கள் எத்தனையோ முயற்சிகளைச் செய்தாலும் எமதுவும் பெரிதாகப் பலனளித்ததாகத் தெரியவில்லை.

அதற்குக் காரணம் தேவையான நவீனமயப்படுத்தல்,தொழிநுட்பம்,அணுகுமுறையாகவும் இருக்கலாம்.

பாராட்டுக்கள்.

இருந்தாலும் தமக்கு வழங்கப்படப்போவது ஏதோ வித்தியாசமான கலாச்சாரம் என்று குழந்தைகள் ஒதுக்கிவிடாதவாறும் சில வழிகள் ஏள்படுத்தப்பட வேண்டும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#26
குழந்தைகளில் விருப்பங்களை அறிந்து எப்படியானவற்றை வீரும்புகிறார்கள் என்று யாராவது அனுப்பினீhகளானால் மேற்கோண்டு நான் அவர்களுடன் பேச உதவியாக இருக்கும். பொதுவான ஒரு CONTENT யார் தயார் செய்வது. விளையாட்டுகளை அதில் ஒரு பகுதியாகச்சேர்க்கலாம்.
Reply
#27
இப்போ பாருங்கள் Age of empires போன்றவற்றை சிறுவர்கள் விளையாடும் போது பழைய கால வாழ்வியல் முறைகள் போரியல் முறைகள் என்பனவற்றை அறிவதுடன் துரித திட்டமிடல் கற்பனைத்திறன் ஞாபக சக்தி இவற்றை மறைமுகமாகப் பெற்றுக் கொள்கின்றனர்...அதே போல் எமது கலாசாரத்தை வாழ்வியல் முறைகளாகியவற்றைப் புகுத்தி சீடிக்களை வெளியிடும் போது பிள்ளைகள் அவை பற்றிய அறிவைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக் கொண்டு பெற்றோரின் பாதையில் குறிப்பிட்ட அளவேனும் பின்பற்ற வாய்ப்பளிக்கலாம்.....! இது ஒரு உதாரணம் இது போல் பலவடிவங்களில் திணிப்புகள் இன்றி பிள்ளைகளின் மனவோட்டத்தோடு சென்று சொல்லவேண்டியதைச் சொல்லும் போது அவர்கள் அதை தானாக விரும்பி எடுத்துக் கொள்வர்.....நாம் வளர்ந்த சமூகத்திலும் எத்தனையோ புற நடைகள் எம் பெற்றோருக்கு சவாலாக இருந்த போதும் அவர்கள் எப்படி எம்மை சரியாக வழி நடத்தினார்கள் அவர்களுக்கு பக்கபலமாக பாடசாலைகளும் சமூகமும் இருந்ததென்ற சூழல் இன்று புலத்திலும் சரி கொழும்பு போன்ற இடங்களிலும் தனித்து வாழும் எம்மவரிடத்தில் குறைவுதான்...ஆனால் கொழும்பைவிட புலத்தில் இதன் தாக்கம் தெளிவாக உணரப்படுகிறது....!
இன்று உடனடிக்கவனம் புலத்தை நோக்கியே இருக்க வேண்டும் காரணம்....இங்கு தான் நல்லவற்றைவிட தீயவற்றை விரைவில் தடையின்றி உள்வாங்கிக் கொள்ள வசதி இருக்கிறது......!சுதந்திரம் என்ற போர்வையில் சமூகம் சீரழிவது மேற்குலக சமூகவியலாளர்களையே தலையைப் பிக்க வைத்துள்ளது...அதற்காக அதைக் கட்டுப்படுத்த அவர்கள் செலவு செய்யும் பணமும் மனித வளமும் எம்மிடம் உண்டா......?! நாங்கள் அவர்களில் ஒருவராவதில் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை...அதனால் அவர்கள் எம்மில் எமது சமூக மாற்றம் பற்றி அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உலகில் அறிவில்லாதது எதுவும் இல்லை..உயிரற்ற சடங்களைவிட.....அறிவு என்பது முழுமை பெற்றதாக எவரும் உலகில் வாழ்ந்ததில்லை...கற்க நிறைய இருக்கிறது...விரும்பினால் கற்றுக் கொள்ளுங்கள்...இல்லையேல்....உங்கள் அறிவுக்கெட்டிய படி செய்யுங்கள்...ஆனால் மற்றவர்களுக்கு உபத்தரிரமாய் இராதீர்கள்.....அது போதும்.....உங்கள் தனிப்பட்ட சுதந்திரம்,அறிவு உங்களோடு இருக்கட்டும்....! அது மற்றவரைத் தாக்க வேண்டாம்...!
நாம் வாழும் சமூகத்திற்கென்று பொதுவான நல்லவற்றைச் சொல்வது எமது கடமை...விரும்பினால் படி.... கடைப்பிடி...விருப்பமின்றேல் உதறிவிட்டுப்போ...ஆனால் எதிர்காலத்தில் வருந்தி நிற்காதே......!

:twisted:  Tongue  :lol:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் கத்துகிறீர்கள்.
என் கருத்தைச் சொன்னால் கத்திப் பயப்படுத்தி உங்கள் விருப்பத்தை தீர்த்துக் கொள்கிறீர்கள்.
நீங்கள் பெரியவர்கள் என்று நினைத்தேன்.
இவைதான் வெறுப்பை உண்டாக்குகிறது.
நீ என்று நீங்கள் சொன்னால் , அதை விட மோசமாக என்னால் எழுத முடியும்.
அது எனது வளர்ப்பில் பார்க்கவில்லை.
Reply
#29
குருவிகளுக்கும் சுதந்திரமாக தனது கருத்தை முன்வைக்க இடமுண்டு....கருத்தோடு இசைபவரும் இருக்கலாம்...இல்லாதவரும் இருக்கலாம்....நாம் யார்க்கும் அறிவுரை சொல்லவில்லை...அல்லது இதைக் கடைப் பிடி என்று வலியுறுத்தவும் இல்லை எமது கருத்தின் தன்மை அறியாது.... எதிர்மறை அர்த்தம் கொள்வதற்கு நாம் பொறுப்பும் இல்லை....!
அது மட்டுமன்றி நாம் யாரிடமும் அநுதாபம் ஆதரவு இப்படி எதையும் எதிர்பார்த்தும் எமது கருத்தை எழுதுவதில்லை.....காலத்திற்கு எது தேவையோ அதை நாம் உணர்ந்த மட்டில் சொல்கிறோம் அவ்வளவும் தான்......! படிப்பதும் விடுவதும் உங்கள் கையில்....!

:twisted: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
எதாவது பயன்தரும் இந்த கருத்துகளம் என்றுதான் முதலில் நினைத்தேன்... ஆனால் இது கூட 'சட்' போலத்தான் பயனற்று இருக்கிறது. இங்கே என் நேரத்தை செலவிடுவது வீணாகிவிடுமோ என அஞ்சுகிறேன்
Reply
#31
நிதானமாக ஒவ்வொன்றையும் அவதானித்து அதன்படி களத்தை வலம் வாருங்கள் களத்தில் எது தேவைக்கு அதிகமாக பயனற்று வருகிறது என்பது தெளிவாகப் புரியும்....! வெறுமனே காண்பதையெல்லாம் குறையாகக் காணாதீர்கள்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
வீதியில் போகும்போது வாகனங்களால் விபத்து நடக்குமோ என போகாமல்விடுவதிலும் பார்க்க, எவ்வாறு போகவேண்டுமென்று தெரிந்து போகலாமல்லவா?
.
Reply
#33
என்னதான் நாம் குழந்தைகனைளப்பற்றி நிறையப் பேசிக்கொண்டாலும்முதலில் அவர்களின் சிந்தனைகளிற்கு இடம்கொடுத்து நாம் அவற்றை உள்வாங்கிக்கொண்டு அதற்கான நல்லது கெட்டதை கூற கடமைப்பட்டுள்ளோம். எமது நல்வழியை ஏற்றுக்கொண்டு எமது கருத்தை ஆமோதிக்கும் பக்குவத்தை இங்குள்ள கல்வி முறை நன்கு கொடுக்கிறது. நல்ல பாதை எது தீயபாதை எது என அவர்களால் நன்கு உணரமுடிகிறது. இதற்குகாரணம் அவர்களின் சிந்தனைகளை முதலில் உள்வாங்கும் தன்மை பெற்றாராகிய எமக்கு இருக்க வேண்டும். அப்போதான் குழந்தைகளால் உண்மை நிலமையை உணரமுடியும்.இந்த நிலமை எல்லாப்பெற்றோரிடமும் இருக்கிறதா என்பது தான் சற்று கடினம்.

இன்றய சினிமாவும் சின்னத்திரைகளும ;வேற்றுமொழி திரைப்படங்களும் மற்றும் காட்டுன்கள் போன்றவற்றை நாம் வயது வேறுபாடின்றி பாக்க விடுகிறோம். பாடசாலைகளில் இன்றய கற்பித்தல் முறை இத்தன்மைகூட அவர்களின் வயதுக்கு முந்தியபேச்சை தந்துவிடுகிறது. கேட்பவர்கள் முகம் சுழிக்கிறோம். பேசாது விட்டால் எமக்கு தெரிந்துவிடவா போகிறது.? குழந்தை வளற்பு கண்காணிப்பு என்பன பெரிய ஒரு விடயம். முழு உலகையும் வீட்டுக்குள் இருந்தே அறிந்து விடுகிற தன்மையை இன்றய தொழில் நுட்பம் தந்துள்ளது. நாம் தான் அவற்றை கண்காணித்து நல்லது கெட்டதை தெளிவுபடுத்த வேண்டியவர்களாக உள்ளோம்:
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#34
வெளிநாட்டில் வசிக்கும் எமது பெரும்பான்மை மக்கள் இயந்திரமாக வாழ்கின்றார்கள். அவர்களுக்கும்;; குழந்தைகளுக்குமிடையே இடைவெளி அதிகரித்துவிட்டது. குழந்தைகளை நல்வழிப்படுத்த அவர்களால்; போதிய நேரம் ஒதுக்க முடியவில்;லை. பெரும்பான்மைக்குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை. பண்பாடு பாதிதான் புகட்டப்பட்டுள்ளது. இன்று இது பெரிதாக தெரியாவிட்டாலும் நாளை இது புரையோடி வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்த எமது சொந்தங்கள் அந்த சொந்தங்கள் பெற்றெடுத்த சொந்தங்;கள் எம்மைவிட்டு அந்நியப்;பட்டுவிடுவார்களோ என அஞ்சவேண்டியுள்ளது. எமது அடுத்த தலைமுறை வெள்ளையனாகிவிடுவதை நாம் தாங்கிக்கொள்ளமுடியுமா? ஒரு நிமிடம் சிந்;திப்போம்.

இன்னொரு மொழியினர் எம்மை இதுவரை வேண்டுமென்றே அழித்து ஒடுக்கி வந்தனர். அவை உணரப்பட்டு ஒரு போராட்டமே நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் எம் இளைய சமுதாயம் மறைமுகமாக அழிந்துகொண்டு இருக்கிறது. அவர்களுக்கு மொழி மறந்துவிட்டது. எம் பண்பாடு தெரியவில்லை. இதையெல்லாம் கற்றுக்கொடுக்க, அவர்களை வழிநடத்த, அவர்களின் பெற்றோருக்;கு வழிகாட்ட, நாம் ஏன் ஒன்று சேரக்கூடாது.

சின்ன சின்னதாய் ஏதாவது செய்வோம். விருப்பப்ட்டவர்கள் உங்கள் பெயரை கீழே குறிப்பிட்டு நீங்களும் இணைகின்றதாய் எழுதுங்கள். இதில் யாரும் பெரியவர் சிறியவர் இல்லை. பலரிடம் ஆலோசித்து ஒரு நல்ல திட்டத்தை ஏற்படுத்துவோம். முடிந்தால் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு இந்துக்கல்லூரியை ஆரம்பிப்போம். இதை செயற்படுத்தப்போவது நீங்கள் ஒவ்வொருவரும்.
Reply
#35
இங்கு ஏற்கனவே பல தமிழ் பாடசாலைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)