Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
* தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல். —கன்பூஷியஸ்.
* கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் வீரர்கள். —மில்டன்.
* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.
* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.
* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.
* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.
* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.
* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.
* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.
* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
* மனிதனின் அதிர்ஷ்டம் அவன் நடத்தையில் தான் இருக்கிறது. —இங்கர்சால்.
* கர்வம் பிடித்தவன் கவுரவத்தை இழக்கிறான். —ஷேக்ஸ்பியர்.
* உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை. —வால்டேர்.
* மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம்.
* கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர்.
* வேலையை விட அதிக களைப்பைத் தருவது சோம்பல். —ஆவ்பரி.
* தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன். —கதே.
* உழைப்பும், நேர்மையும் உயர்வுக்கு வழிகள். —நெப்போலியன்.
* உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட்.
* உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும். —பியாட்டி.
* எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான். —பெர்சியஸ்.
* முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே. —ஸபர்ஜியன்.
நன்றி: தினமலர்
[i][b]
!
Posts: 64
Threads: 3
Joined: Oct 2003
Reputation:
0
Quote:* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.
ஆனால் அந்த கொள்கை பிழையென உண்ர்ந்தால்?
Quote:நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்
ஆனால் அது பொய்மையான நிம்மதியல்லவோ?
Quote:மூடனுக்கு அறிவுரை கூறினால் நமக்குத் தான் கேடு வரும். —பஞ்ச தந்திரம்
இது இயலாதோர் கூற்றா, இல்லை பிறர் முன்னெறுவதை விழையாதார் கூற்றா?
Quote: கஞ்சன் எப்போதுமே பிச்சைக்காரன் தான். —லவேட்டர்
இது பிச்சைக்காரர்கள் கூறும் தந்திரக் கூற்று, பிழைப்பு நடக்கவேண்டுமல்லவா!
Quote:உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி. —ரூஸ்வெல்ட்.
ம்ஃகீம் என்னை நம்பாவிட்டால், உடையணியாமல் முகமலர்ந்த வண்ணம் வெளியில் செல்லுங்கள் பார்போம் (உலகே எள்ளி நகையாடும்)!
ஏனைய கூற்றுககள் நன்றாகவே உள, எடுத்தளித்தமைக்கு மிக்க நன்றி!
-
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சிந்தனைகளில் நமக்குப் பிடித்தவை...<b>7</b>...நன்றி சாமி
* <b>ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது.----ராஜாஜி.
* தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல்.---- கன்பூஷியஸ்
* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும்.----போவீ.
* தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன்.....கதே.
* முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே.----ஸபர்ஜியன். (மிகவும் பிடித்தது....!)
* உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும்.----பியாட்டி.
* உடலில் அணியும் உடையைவிட, மேலானது முகத்தில் அணியும் மலர்ச்சி.----ரூஸ்வெல்ட்</b>.
கொள்கை துணி.. பின் உறுதி எடு... நிதானி... பின்வாங்காது முன்னேறு... இலக்கு அடையும் வரை தொடரு..வறுமை பிணி மரணம்...எங்கும் வரும் எந்தளவிலும் வரும்...பயத்தை அறு... வெற்றி அறுவடையாகும்...பெருமை கொள் பெருமிதத்திற்கல்ல உன் முயற்சிக்காய்...! இது நாம் வகுத்தது...விதியல்ல வாழ்வுக்காய்...!
:twisted:  :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
* நன்றாக வாழ வேண்டுமானால், முன் கூட்டியே திட்டமிடுங்கள். —நெப்போலியன்.
* வெற்றிகளை சந்திக்க விரும்பினால், உடனே இடையூறுகளுக்கு தீர்வு காணுங்கள். —எல்லீஸ்.
* தைரியமாக இருக்க வேண்டுமானால் பொய் சொல்லாதிருங்கள். —ஹெர்பர்ட்.
* சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறிகளை மதிப்பதில்லை. —காந்திஜி.
* முட்டாள், ராஜ உடை அணிந்தாலும் முட்டாள் தான். —பல்வெர்.
* குணத்தில் மிக உயர்ந்தவனும், அடிமட்டத்தில் இருப்பவனும் மாறவே மாட்டார்கள். —கன்பூஷியஸ்.
* துணிவு இல்லையேல் வாய்மை இல்லை; வாய்மை இல்லையேல், பிற அறங்களும் இல்லை. —காந்திஜி.
* ஆசைகளை அடக்க முடியாத தனி சுதந்திரம் அழிவையே அளிக்கும். —கதே.
* அன்பு குறைந்த இடத்தில், குற்றங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன. —பிரதர்டன்.
* அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம். —லாங்பெல்லோ.
* எல்லாவிதமான தவறுகளுக்கும் அடிப்படை காரணம் அகங்காரம். —ரஸ்கின்.
* தேகத்தை உழைப்பு தீயில் புடமாக்கு; எதிர்காலம் தங்கமாய் மின்னும். —இங்கர்சால்.
* பிறர், உங்களை புகழ வேண்டும் என்பதற்காக மட்டும் தானம் செய்யாதீர். —இயேசு கிறிஸ்து.
* தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் இம்மூன்றும் வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்கக் கூடியவை. —டென்னிசன்.
* விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவது பெரிதன்று, எப்போதும் உயர்நிலையில் இருக்க வேண்டும். அதுவே பெரிது. —இப்தார்ச்.
* ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும் உழைப்பவர்களுக்கு உடல் நலமும், மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படும்.
—சிம்மன்ஸ்
* நமது நாட்டின் தொன்மை, முன்னோர் வரலாறு, நாகரிகம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது இளைஞர்களின் முதல் கடமை. —திரு.வி.க.,
* உண்மையான சுதந்திரம் என்பது நம் உரிமைகளை நாம் அனுபவிக்கும் உரிமையாகும். பிறருடைய உரிமைகளை அழிப்பதன்று. —பிங்கார்ட்.
* பெரிய வல்லரசுகள் சிறு நாடுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதை நிறுத்தும் வரை உலகத்தில் அமைதி ஏற்படாது. —லிங்கன்.
* எவரைப் பார்க்கும் போது இறைவன் நினைவு வருகிறதோ, அவர்தான் ஆண்டவனின் அடியார்களில் சிறந்தவன். —ரூமி.
நன்றி: தினமலர்
[i][b]
!
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
சிந்தனைகள்!
* நீ சிறிய செயல்களில் உண்மையுள்ளவனாக இருந்தால், பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம். —இயேசு.
* தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை முடித்துக் கொள்ள தானே கயிறு திரிப்பது போன்றது. —பரோஸ்.
* நேர்வழியே, ஒழுக்கத்திற்கு சுருக்கு வழி. —ரஹேஸ்.
* உழைப்பு, வறுமையை மட்டும் விரட்டாமல், தீமையான எண்ணங்களையும் விரட்டுகிறது. —வால்டேர்.
* எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது. —வால்டேர்.
* சோம்பேறி இரண்டு முட்கள் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் உபயோகமில்லை. —மகான்.
* அச்சம் அற்றவன், தனக்குத் தானே காவலன். —பிரிட் கெஸ்.
* வெற்றியின் அடிப்படை, எடுத்த செயலில் நிலையாக நிற்பதே. —வால்டேர்.
* நல்ல செயலில் துணிவு உடையோர், நாள்தோறும் வெற்றியே காண்பர். —புரூஸ்.
* உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும்.
—வால்டேர்.
* துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான். —புடோர்.
* காலத்தின் மதிப்பு தெரிந்தால் தான், வாழ்க்கையின் மதிப்பு தெரியும். —நெல்சன்.
* கடந்த கால சோதனையின் சுருக்கம்தான் அனுபவம் என்பது. —ரஹேல்ப்ஸ்.
* நம்பிக்கை என்பது பகுத்தறிவின் தொடர்ச்சி. —ஆடம்ஸ்.
* அதர்மம் ஆதிக்கம் செய்வதைப் போல் தோன்றினாலும் தர்மமே வெல்லும். —ஜோசப் ரூக்ஸ்.
* நீங்களும் நன்கு வாழுங்கள்; மற்றவர்களையும் நன்கு வாழ விடுங்கள். —ஸ்கில்லர்.
* அதிர்ஷ்டமும், நேரமும் வரும் என்று காத்திருப்பவனுக்கு மரணம் விரைவில் கதவைத் தட்டும்.
—இங்கர்சால்.
* அறிவால் உழைப்பவர் ஆளுகின்றனர்; உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர். —டெய்லர்.
* தன்னை எதிரி வென்று விடுவானே என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வியடைவான். —நெப்போலியன்.
* உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு வழிகாட்டியாக இரு. —இங்கர்சால்.
* இடையூறுகளும், துன்பங்களுமே மனிதனை மனிதனாக்குபவை. —மாத்யூஸ்.
நன்றி: தினமலர்
[i][b]
!
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
* கண்களை இழந்தவன் குருடனல்ல; எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.
—வால்டேர்.
* உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடை செய்வதில்லை. மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.
—ஹில்லர்
* சோகம் எனும் பறவைகள், உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க இயலாது; ஆனால், அவை உங்கள் தலையிலே கூடு கட்டி வாழ்வதை தவிர்க்கலாம். —ஸ்டிலி.
* அழகுணர்ச்சி, அன்புணர்ச்சி, நன்னடத்தை ஆகியவை மனித குலத்துக்கு பெருமையைக் கொடுக்கும்.
—அங்கர் பில்டி.
* பெருமையோ, இகழ்ச்சியோ தானே உருவாவதில்லை; உங்கள் கடமையை நன்றாக செய்யுங்கள்; எல்லாமே அதில்தான் அடங்குகின்றன. —இதோபதேசம்.
* மனவலிமை இருந்தால் மட்டும் போதாது; அவற்றை நல்லவிதமாக பயன்படுத்தவும் வேண்டும். —டெஸ்கார்டெஸ்.
* நம்பிக்கையும், அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால். இவ்விரண்டும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும். —ரஸ்கின்.
* ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும். —ரூஸோ.
* அறிவு இல்லாமல் தலை இயங்க முடியாது; அது போலவே அன்பு இல்லாமல் இதயம் இயங்க முடியாது.
—போனஸ் அயர்ஸ்.
* அன்பு அருளைத் தரும்; ஆற்றல் பொருளைத் தரும்; அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறார்.
—காந்திஜி.
* எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத் தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை. —நபிகள் நாயகம்.
* துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான்.
—தாமஸ்.
* தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி. —லெனின்.
* பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறரது நம்பிக்கைக்கு பாத்திரமாவது பன்மடங்கு மேல்.
—டொனால்டு.
* வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.
* தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. — போவீ.
* வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது.
—அரிஸ்டாட்டில்.
* உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்வு இருக்கும். —சாக்ரடீஸ்.
* உற்சாகம் இல்லாத உள்ளங்களுக்கு சோம்பல் சரணாலயம்; மூடர்களுக்கு அது ஓய்வு நாள். —செஸ்டர்பீல்டு.
* பிறரை விட தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன் எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான். —ஈசாப்.
* கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம். —ஹென்றி.
நன்றி: தினமலர்
[i][b]
!
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
சிந்தனைகள்!
* அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது. —நபிகள் நாயகம்.
* எளிமையும், மரியாதையும் உயர்ந்த பண்புகள். —நபிகள் நாயகம்.
* எல்லாவிதமான அடக்கமுடைய செயல்களும் சிறந்தவைகளே! —நபிகள் நாயகம்.
* எவன் சாந்த குணத்தைப் பெற்றிருக்கிறானோ அவன், நன்மையான பகுதியை உடையவன். —நபிகள் நாயகம்.
* உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பிடம். —நபிகள் நாயகம்.
* பேராசை வறுமையைக் குறிக்கிறது; அவாவின்மை செல்வத்தைக் குறிக்கிறது. —நபிகள் நாயகம்.
* கைத்தொழிலும், மோசடியில்லாத வியாபாரமும் துõய்மையான சம்பாத்தியம். —நபிகள் நாயகம்.
* எவருடைய சொல்லும், செயலும் பிறரை துன்புறுத்த மாட்டாதோ அவனே மனிதன். —நபிகள் நாயகம்.
* மறதி என்பது அறிவின் துரதிருஷ்டம். —நபிகள் நாயகம்.
* முதியோருக்கு மரியாதை செலுத்துதல், இறைவனுக்கு மரியாதை செலுத்துவதாகும். —நபிகள் நாயகம்.
* மக்கள் விரும்பாத இரண்டு, மரணமும், வறுமையும். —நபிகள் நாயகம்.
* எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத் தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை. —நபிகள் நாயகம்.
* குற்றம் புரிவதை காட்டிலும் மரணம் மேலானது. —நபிகள் நாயகம்.
* மதம் என்பது துõய்மையான வாக்கும், கொடையும் ஆகும். —நபிகள் நாயகம்.
* தன்னிடமுள்ள குறைகளை அறிந்தும், பிறரது குறைகளை கூறி திரியக் கூடாது. —நபிகள் நாயகம்.
* நற்செயல்களில் உறுதியாக நில்லுங்கள்; தீய செயல்களை விட்டு விலகியிருங்கள். —நபிகள் நாயகம்.
* நல்ல முறையில் பழக தெரிந்தவனும், நற்குணமுள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன். —நபிகள் நாயகம்.
* உலக ஆசையே எல்லா தீமைகளுக்கும் பிறப்பிடம். —நபிகள் நாயகம்.
* பிறரை சபித்தல் உண்மை பேசுவோருக்கு அழகல்ல. —நபிகள் நாயகம்.
* அண்டை வீட்டார் பசியோடிருக்க, தான் மட்டும் வயிறார உண்டு களித்திருப்பவன் உண்மையான மனிதனாக மாட்டான். —நபிகள் நாயகம்.
* தன் பிழையை உணர்ந்து உண்மையாகவே விரும்பி வருந்துபவன், குற்றமிழைக்காதவனுக்கு ஒப்பாவான்.
—நபிகள் நாயகம்.
* வயது முதிர்ந்த பெற்றோரை புறக்கணிக்கும் இளைஞன், எவனும் சொர்க்கத்தை அடைய முடியாது.
—நபிகள் நாயகம்.
நன்றி: தினமலர்
[i][b]
!
Posts: 175
Threads: 83
Joined: Sep 2003
Reputation:
0
* மகிழ்ச்சியும், உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பவை. —பிராங்க்ளின்.
* ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தும் மதிப்பு கிடையாது. —பிராங்க்ளின்.
* கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர். —பீச்சர்.
* தகுதியில்லாத புகழ்ச்சி, மறைமுகமான அவதுõறு. —போப்.
* விடாமுயற்சி உடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான். —ரூஸ்வெல்ட்.
* உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அறிவு வெளியே போய்விடும். —எம்.ஹென்றி.
* தனது குற்றங்களை மறந்து, பிறரின் உள்ளத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது தவறு. —ரூசோ.
* பிறருக்கு நன்மை செய்பவன், தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். —ஜெனீக்கா.
* காலம், இயற்கை, பொறுமை இவையே சிறந்த மூலிகை மருந்துகள். —ஹென்றி போகன்.
* வீண் சொற்கள் விஷயங்களை பழுதாக்குகின்றன. —ஆண்ட்ரூஸ்.
* நிலத்தை நம்பி வாழலாம்; நிழலை நம்பி வாழக் கூடாது. —யங்.
* எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது. —காந்திஜி.
* கல்வியின் பரந்த நோக்கம், மக்களை சிந்திக்கத் துõண்டுவதே. —கிரேன்மர்.
* மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால், அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
—பெர்னாட்ஷா.
* கண்ணீர், துயரத்தின் மவுன பாஷை. —வால்டேர்.
* பாதையை சரியாய் போட்டால், பயணம் சுபமாக இருக்கும். —இங்கர்சால்.
* நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன. —ஷேக்ஸ்பியர்.
* உங்கள் உள்ளம் உறுதியாக இருக்கும் வரை, உங்கள் முயற்சி எதிலுமே தோல்வியடைய மாட்டீர்கள்.
—பாஸ்டிசர்.
* இன்றே செயல்பட்டு, இன்றே சேமித்து, இன்றே நல்லது செய்தால் நாளைக்கு நன்றாக ஓய்வு எடுக்கலாம்.
—பிராங்க்ளின்.
* பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும். —விவேகானந்தர்.
நன்றி: தினமலர்
[i][b]
!
|