10-08-2005, 01:52 PM
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை 9.25 மணிக்கு மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நில நடுக்கம் 7.6 ரிக்டேர் ஸ்கேல் என்ற அளவுக்கு பயங்கரமானதாக இருந்தது.
கடந்த ஆண்டு சுனாமியை உருவாக்கிய நில நடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பயங்கர நிலநடுக்கம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இருந்து 60 மைல் தொலைவில் நில நடுக்கத்தின் மையம் இருந்தது.
பாகிஸ்தானில் உருவான அந்த நில நடுக்கத்தின் தாக்கம் இந்தியா, ஆப்கானிஸ்தானிலும் இருந்தது. குறிப்பாக வட மாநில மக்களை இந்த நிலநடுக்கம் நிலை குலைய வைத்து விட்டது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் நில நடுக்கம் கடுமையாக இருந்தது.
டெல்லி நகரமே நில நடுக்கத்தால் குலுங்கியது. 9.25-க்கு ஏற்பட்ட நில நடுக்கம் சுமார் 2 நிமிடம் நீடித்ததாக சொல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மீண்டும், மீண்டும் பூமி குலுங்கியது.
வட மாநில மக்கள் இதுவரை உணராத அளவுக்கு இன்றைய நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. டெல்லியில் வீடுகள் அதிர்ந்தன. அடுக்குமாடி கட்டிடங்கள் அங்கும் இங்குமாக ஆடின. வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. மின் விசிறிகள் ஆடின. வீடு ஆடியதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
9.25 மணிக்கு ஏற்பட்ட முதல் நில நடுக்கத் தாக்குதலை தொடர்ந்து சிறு, சிறு நில அதிர்வுகள் நீடித்தன. சில நிமிட இடைவெளி விட்டு விட்டு இந்த அதிர்வை மக்கள் உணர்ந்தனர்.
அதன் பிறகே பயங்கர நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி இருபதை மக்கள் அறிந்தனர். இதைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு அலறியபடி ஓட்டம் பிடித்தனர். 9.30 மணிக்கெல்லாம் வட மாநிலம் முழுக்க நில நடுக்கம் பற்றிய அதிர்ச்சி நிரம்பி இருந்தது.
டெல்லி, சண்டிகார், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர் உள்பட வட மாநில முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் உயிரை கையில் பிடித்தபடி தெருக்களில் நின்றத்தை காண முடிந்தது. மக்களிடம் பீதி கலந்த பரபரப்பு காணப்பட்டது.
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak01.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak03.jpg' border='0' alt='user posted image'>
நன்றி - மாலைமலர்

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>

hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->