![]() |
|
பூகம்பம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பூகம்பம் (/showthread.php?tid=2979) |
பூகம்பம் - ragavaa - 10-08-2005 பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை 9.25 மணிக்கு மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நில நடுக்கம் 7.6 ரிக்டேர் ஸ்கேல் என்ற அளவுக்கு பயங்கரமானதாக இருந்தது. கடந்த ஆண்டு சுனாமியை உருவாக்கிய நில நடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பயங்கர நிலநடுக்கம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இருந்து 60 மைல் தொலைவில் நில நடுக்கத்தின் மையம் இருந்தது. பாகிஸ்தானில் உருவான அந்த நில நடுக்கத்தின் தாக்கம் இந்தியா, ஆப்கானிஸ்தானிலும் இருந்தது. குறிப்பாக வட மாநில மக்களை இந்த நிலநடுக்கம் நிலை குலைய வைத்து விட்டது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் நில நடுக்கம் கடுமையாக இருந்தது. டெல்லி நகரமே நில நடுக்கத்தால் குலுங்கியது. 9.25-க்கு ஏற்பட்ட நில நடுக்கம் சுமார் 2 நிமிடம் நீடித்ததாக சொல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மீண்டும், மீண்டும் பூமி குலுங்கியது. வட மாநில மக்கள் இதுவரை உணராத அளவுக்கு இன்றைய நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. டெல்லியில் வீடுகள் அதிர்ந்தன. அடுக்குமாடி கட்டிடங்கள் அங்கும் இங்குமாக ஆடின. வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. மின் விசிறிகள் ஆடின. வீடு ஆடியதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 9.25 மணிக்கு ஏற்பட்ட முதல் நில நடுக்கத் தாக்குதலை தொடர்ந்து சிறு, சிறு நில அதிர்வுகள் நீடித்தன. சில நிமிட இடைவெளி விட்டு விட்டு இந்த அதிர்வை மக்கள் உணர்ந்தனர். அதன் பிறகே பயங்கர நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி இருபதை மக்கள் அறிந்தனர். இதைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு அலறியபடி ஓட்டம் பிடித்தனர். 9.30 மணிக்கெல்லாம் வட மாநிலம் முழுக்க நில நடுக்கம் பற்றிய அதிர்ச்சி நிரம்பி இருந்தது. டெல்லி, சண்டிகார், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர் உள்பட வட மாநில முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் உயிரை கையில் பிடித்தபடி தெருக்களில் நின்றத்தை காண முடிந்தது. மக்களிடம் பீதி கலந்த பரபரப்பு காணப்பட்டது. <img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak01.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak02.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak03.jpg' border='0' alt='user posted image'> நன்றி - மாலைமலர் நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர் பலி - vasisutha - 10-08-2005 <b>வட மாநிலத்தில் பயங்கர பூகம்பம்: 30 பேர் பலி- கட்டிடங்கள் இடிந்தன; பீதியில் மக்கள் ஓட்டம்</b> சுமத்ரா தீவு அருகே கடந்த ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஆசிய நில அமைப்பில் மாறுதலை ஏற்படுத்தி விட்டது. பூமிக்கு அடியில் உள்ள தட்டுக்கள், பர்மா நோக்கி நகர்வதன் காரணமாக இந்தியாவில் இனி வரும் நாட்களில் பயங்கர நில நடுக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். அதை நிரூபிப்பது போல வட இந்திய மாநிலங்களை இன்று பயங்கர நில நடுக்கம் நிலை குலைய செய்தது. பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை 9.25 மணிக்கு மிகப்பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டேர் ஸ்கேல் என்ற அளவுக்கு பயங்கரமானதாக இருந்தது. கடந்த ஆண்டு சுனாமியை உருவாக்கிய நில நடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பயங்கர நிலநடுக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மேற்கு முசாபராபாத் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. இது இந்திய எல்லைக்கு மிக அருகில் உள்ள நகரமாகும். இந்த நில நடுக்கத்தால், இந்தியாவின் வட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மற்ற மாநிலங்களை விட காஷ்மீர் மாநிலம்தான் அதிக பாதிப்புக்குள்ளானது. நில நடுக்கம் மையம் கொண்டிருந்த மேற்கு முசாபராபாத் நகர் அருகே காஷ்மீர் இருப்பதே இதற்கு காரணம் ஆகும். காஷ்மீரில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. குறிப்பாக `ïரி' பகுதியில் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 200 வீடுகள் இடிந்தன. பாரமுல்லா மாவட்டமும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இடிந்த வீடுகளை அகற்றும் பணிகளில் உள்ளூர் போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானப் படையும் மீட்பு பணிகளில் குதித்துள்ளது. பாரமுல்லா மாவட்டத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்ததும் தீ பிடித்துக் கொண்டன. இதனால் சில இடங்களில் மீட்பு பணிகளில் இடைïறு ஏற்பட்டது. உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகரில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் பில்லு என்பவர் இடி பாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். அவரது 2 மகள்களும் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். ராஜோரி, பூஞ்ச், கத்ரா பகுதிகளில் 13 வீடுகள் இடிந்து விழுந்தது தெரிய வந்துள்ளது. ஜம்மு மாவட்டம் முழுக்க மக்களிடம் பதட்டம் நிலவுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே இந்திய ராணுவம் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்துள்ளது. நில நடுக்கம் காரணமாக அந்த ரகசிய பதுங்கு குழிகள் இடிந்து நாசமாயின. பதுங்கு குழிகளுக்குள் இருந்த ஏராளமான ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். ïரி செக்டர் பகுதியில் இருந்த பதுங்கு குழி முற்றிலுமாக நொறுங்கியது. அதனுள் இருந்த 15 ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஏராளமானவர்கள் இடி பாடுகளுக்குள்சிக்கி கிடக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை மீட்க ராணுவத்தின் அதிரடி படையினர் நவீன கருவிகளுடன் சென்றுள்ளனர். பூஞ்ச், பாரமுல்லா, குப் வாரா மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இடிந்த வீடுகளுக்குள் இருப்பவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. முசாபராபாத் அருகில் இந்த 3 மாவட்டங்களும் இருப்பதால் காஷ்மீரின் இதர பகுதிகளை விட இந்த 3 மாவட்டங்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் நெடுஞ்சாலையில் ராம் பென் பெல்ட் ஏரியாவில் உள்ள சிரஜ்ஜில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஜம்மு- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. போன் இணைப்புகளும் செயல் இழந்தன. காஷ்மீரில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விட்டதால் மக்களிடையே பீதி நீடிக்கிறது. வீடுகளுக்குள் செல்ல பயந்து தெருக்களில் மக்கள் உட்கார்ந்து இருக்கின்றனர். காஷ்மீரில் செல்போன் இணைப்பு மட்டுமே இயங்குகிறது. அதன் உதவியுடன் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜம்முவில் 27 அரசு அலுவலகங்களில் பெரிய விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பயந்துபோன அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்குள் சென்று வேலை பார்க்க மறுத்து விட்டனர். அது போல பள்ளி களிலும் பீதி பரவியது. இதைத் தொடர்ந்து இன்று காஷ்மீர் மாநிலம் முழுக்க பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காஷ்மீரில் பல இடங்களில் மின்சார தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. குடிநீர் இணைப்புகளும் நொறுங்கி விட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன. பதுத், தோடா பகுதிகளிலும் வீடுகள் இடிந்து கிடப்பதாக தெரிய வந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீடுகள் இடிந்து கிடப்பதாக தகவல்கள் வரத் தொடங்கி உள்ளன. இன்று மதியம் 1.30 மணிக்கு கிடைத்த தகவல்படி காஷ்மீரில் 15 ராணுவவீரர்கள் உள்பட 30 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது. வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஷ்மீரில் மின்சாரம், தொலை தொடர்பு, குடிநீர் உள்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால்மக் களிடம் ஏற்பட்டுள்ளபீதி குறையவில்லை. பொது மக்களுக்கு உதவ ராணுவத்தினர் தீவிரமாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இது வரை 30 பேர் பலியான நிலையில் பொருள் சேதம் பற்றி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். <b>பாகிஸ்தானில் நிலநடுக்கத்துக்கு 1000 பேர் பலி</b> வடஇந்திய மாநிலங்களைத் தொடர்ந்து அண்டை நாடான பாகிஸ்தானிலும் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு இதுவரை மொத்தம் 1000 பேர் பலியாகியுள்ளனர். இத்தகவலை பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அஃப்தாப் அகமத் கான் தெரிவிக்கையில் பாகிஸ்தானின் பல கிராமங்கள் இந்நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமுற்றதாக தகவல்கள் வந்துள்ளன. இதுவரை 1000 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்றார். இந்நிலநடுக்கம் 7.9 ரிக்டர்கள் பதிவாகியுள்ளது. இஸ்லாமாபாதில் 10 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் பல உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என அஞ்சப்படுகிறது. சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை. ஆகவே இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. வடக்கு பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் 12}க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல வீடுகளும் அடுக்குமாடி கட்டிடங்களும் இடிந்து விழுந்துவிட்டதாக பாக். டி.வி. சேனல்கள் தெரிவித்துள்ளன. செய்திகள்: தினமணி.. மற்றும் மாலைமலர் - vasisutha - 10-08-2005 <b>பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நூற்றுக்கணக்கில் பலி: பல கிராமங்கள் முற்றிலும் நாசம்</b> பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் சனிக்கிழமை பூகம்பம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் உயிரிழந்தனர். சில கிராமங்கல் முழுவதுமாக நாசம் அடைந்தன. அதிக அளவில் இஸ்லாமாபாதும் முஸôபராபாதும் பாதிப்புக்குள்ளாயின. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டடங்கள் இடிந்தன. பீதிக்குள்ளன மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து தெருக்களில் திரண்டனர். இந்திய நேரப்படி காலை 9.20 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டதாகவும், இதில் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்திருப்பார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அப்தார் ஷெர்பாவ் தெரிவித்ததாக ஜியோ டிவி தெரிவித்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்கள்பட பல கிராமங்கள் கூண்டோடு நாசமாகி உள்ளன என்றும் அமைச்சர் ஷெர்பாவ் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாதில் பல மாடி கட்டடம் ஒன்று தரைமட்டமானது. இதில் உயிரிழப்பு மிக அதிக அளவில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதன் இடிபாடுகளில் 200க்கும அதிகமானோர் சிக்கியிருப்பதாக பாகிஸ்தான் டிவி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரான முஸôபராபாதில் நீதிமன்ற கட்டடம் இடிந்து நொறுங்கியதில் நீதிபதி உள்பட 25 பேர் இறந்தனர் என்று அதிகார வட்டாரங்களை மேற்கொள்காட்டி தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன தினமணி - vasisutha - 10-08-2005 <img src='http://img21.imageshack.us/img21/5444/aerial4xh.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img21.imageshack.us/img21/5752/0018gg.jpg' border='0' alt='user posted image'> <b>Hundreds die in South Asia quake </b> <b>Pakistan says more than 1,000 people may have died in a powerful quake that also hit north India and Afghanistan.</b> The 7.6-magnitude quake with the epicentre 80km (50 miles) north-east of Islamabad wiped out several villages. At least 500 died in North-West Frontier province in Pakistan. More than 450 died on both sides of the disputed territory of Kashmir. In Islamabad, people rushed to dig with bare hands to rescue those trapped when a tall residential building collapsed. Pakistani President Pervez Musharraf, who was visiting the site, said the quake was a "test of the nation". The earthquake, which was registered at 0350 GMT, was felt by residents as far away as the Afghan capital, Kabul, and India's capital, Delhi. Several aftershocks followed. <img src='http://img21.imageshack.us/img21/1046/map5kw.gif' border='0' alt='user posted image'> <b>bbc.com</b> - kurukaalapoovan - 10-08-2005 http://server.iii.org/yy_obj_data/binary/7...uakeTsunami.pdf ஆசிய நாடுகள் பற்றி சில பயனுள்ள தகவல்கள் சுருக்கமாக இருக்கு. - Thala - 10-08-2005 ஈழத்தமிழருக்காக இலங்கை அரசாங்கத்துக்கு வாரி வழங்கின நாட்டில பேரிடியா????... hock: hock: ஐயோ... நெஞ்சு வெடிச்சிடும் போல இருக்கே... :!:
- kurukaalapoovan - 10-08-2005 <b>நிலநடுக்கம் பூகம்பம் பற்றிய பின்னணித் தகவல்கள்</b> ஆதாம் ஏவாள் பிரமா விஷ்ணு காலத்துக்கு முதல் பூமி எப்படி இருந்து. <img src='http://img277.imageshack.us/img277/5717/pangea5wd.gif' border='0' alt='user posted image'> சிவபெருமான் ஒரு உயரமான இடத்தில குந்தி இருக்க விரும்பினதால் என்ன நடந்தது. <img src='http://img249.imageshack.us/img249/1722/figs825jw.gif' border='0' alt='user posted image'> <img src='http://img277.imageshack.us/img277/682/mouteverest0en.gif' border='0' alt='user posted image'> இறுதியில் பிறவிப் பெருங்கடலை நீங்க முடியதவர்கள் எதிர் கொள்ளுவது. <img src='http://img277.imageshack.us/img277/6919/platecolourdiagram22nj.gif' border='0' alt='user posted image'> <img src='http://img72.imageshack.us/img72/1811/plates0ly.gif' border='0' alt='user posted image'> <img src='http://img249.imageshack.us/img249/6533/ringoffire6wx.gif' border='0' alt='user posted image'> BBC மதனின் தொல்லைகளிலிருந்து தப்ப... http://www.moorlandschool.co.uk/earth/tectonic.htm http://pubs.usgs.gov/publications/text/tectonics.html http://pubs.usgs.gov/publications/text/dynamic.html - Mathan - 10-08-2005 குறுக்ஸ், ஒரு படத்தின் இணைப்பை தான் திருத்த முடிந்தது, மற்றய படத்தின் இணைப்புகளை சரியாக தாருங்கள், படங்களை இணைத்து விடுகின்றேன், படங்களை இணைப்பது எப்படி என்று அறிய இந்த இணைப்பை பாருங்கள். http://www.yarl.com/forum/viewtopic.php?t=6203 - kurukaalapoovan - 10-08-2005 இப்ப திருத்தியாச்சு உதவிக்கு நன்றி. உந்த போட்ட தகவல்களிற்கு ஆதாரம் கேட்டு டாச்சர் பாண்ணாட்டிச்சரி :roll: - Mathan - 10-08-2005 படங்களை எங்கயாவது சுட்டு தானே இருப்பீங்க, அந்த ஆதாரத்த போடுங்க நம்புறன் :wink: - Mathan - 10-08-2005 kurukaalapoovan Wrote:<img src='http://img277.imageshack.us/img277/6919/platecolourdiagram22nj.gif' border='0' alt='user posted image'> இந்த படத்தை பார்த்தால் அந்த தகடுகள் அல்லது அசையும் இடங்களுக்கு அருகில் இலங்கையும் பிரித்தானியாவும் இல்லாத படியால் இங்கு பூகம்பம் வர வாய்ப்பு குறைவு. அப்படியா குறுக்ஸ்? - kurukaalapoovan - 10-08-2005 ஓம் மதன் நேரடியாக பூகம்பம் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட மாட்டா. ஆனால் ஆழிப்பேரலை ஆபத்து 2 க்குமே உண்டு. இன்று நடந்தது இனி சுமத்திரா பகுதியில் புதிய அதிர்வுகள் நடுக்கங்களை உருவாக்கலாம். ஏற்கனவே ஒன்று அப்பகுதிகளில் எதிர்பார்க்கப்படுகிறது. - Danklas - 10-09-2005 நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்த்தானில் மட்டும் 18,000 க்கு மேற்பட்டோர் பலி 41,000 மேற்பட்டோர் படுகாயம்.... CNN... - Danklas - 10-09-2005 பாகிஸ்த்தானில் மட்டும் 30,000க்கு மேற்பட்ட பாகிஸ்த்தானிய மக்கள் பலி....<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->தட்ஸ்தமிழ்..
பூகம்பம் - Birundan - 10-10-2005 பூமி தட்டு மோதியதால் பூகம்பம் வெடித்தது: இந்திய துணை கண்டம் நகர்ந்து பூமி தட்டு மோதியதால் பூகம்பம் வெடித்தது: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் புதுடெல்லி, அக். 10- பூமியானது சுனாமி தாக்குதல், புயல், பூகம்பம் என இயற்கை சீற்றங்களால் அடுத்தடுத்து அழிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியா அருகே கடலுக்கு அடியில் உருவான பூகம்பம் காரணமாக சுனாமி பேரலைகள் ஏற்பட்டு பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத் தியது. அதன் பிறகு இந்தியாவில் அந்தமான் நிகோபார் தீவு களிலும், சுமத்ரா தீவு பகுதி யிலும் அடுத்தடுத்து லேசான நில நடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பயமுறுத்தி வந்தது. இப்போது லேசான நில நடுக்கங்கள் ஒன்று சேர்ந்து தாக்கியது போல் கடந்த சனிக்கிழமை இந்தியாவின் வடக்கு பகுதியையும் பாகிஸ்தானையும் பூகம்பம் தாக்கி மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சுனாமி தாக்கி ஓராண்டு நிறைவடைவதற்குள் மற் றொரு பூகம்பம் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியிருப்பது உலக மக்களை பெரிதும் அச்ச மடையச் செய்துள்ளது. நவீன தொழில் நுட்பங் களுடன் எதற்கும் அஞ்சாமல் இருந்து வந்த அமெரிக் காவையே `காத்ரீனா', `ரீட்டா' என அடுத்தடுத்து இரு புயல்கள் தாக்கி நிலைகுலைய வைத்து விட்டது. எந்த நேரத்தில் எந்த ரூபத்தில் இயற்கைச் சீற்றம் அழிவை ஏற்படுத்துமோ என்ற பீதி உலகம் முழுவதும் நிலவுகிறது. ஒரு பக்கம் இயற்கை சீற்றம் நம்மை தாக்கினாலும் மறுபக்கம் புவியியல் நிபுணர்கள் இயற்கை சீற்றங்கள் குறித்து இடைவிடாமல் ஆய்வு நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தானிலும், இந்தியா விலும் சனிக்கிழமை தாக்கிய பூகம்பம் எப்படி உருவானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அவர் கள் வெளியிட்டுள்ள தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது. அந்த தகவல்கள் வருமாறு :- இந்திய துணைக் கண்டம் அமைந்துள்ள பூமித் தட்டானது ஆண்டுக்கு 4 செ.மீ. என்ற வீதத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது யுரேஷியக் கண்டத்துக்கு அடியில் உள்ள பூமித்தட்டுக்குள் செல்கிறது. அப் போது அதற்கு நேராக மேலே உள்ள பூமியின் மேல் பகுதி உயர்ந்து அடுக்குகள் ஏற்படுகின்றன. இதனால் உலகின் மிக உயரமான சிகரங்கள் இமயமலையில் உருவாகின்றன. பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக இவ்வாறு மாற்றம் நிகழ்ந்து வருவதால் இமயமலை, காரகோரம் மலைத்தொடர், பாமீர் முடிச்சுப்பகுதி, ஹிந்துகுஷ் மலைத் தொடர் ஆகியவை உருவாயின. இந்த இரு பூமித்தட்டுகளும் மோதிக் கொள்வதால் ஏற் படும் அழுத்தமானது மலையடிவாரப் பகுதியில் உள்ள பூமித்தட்டின் மேல் பகுதியில் அதிர்வுகளையும் பிளவுகளை ஏற்படுத்துகிறது. சனிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்துக்கு பூமித்தட்டுகளின் மோதலே காரணம். பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் தலைநகரான முசா பராபாத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் இந்த பூகம்பம் மையம் கொண்டு தாக்கியது. இந்த இடம் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பகுதியாகும். இதனால் அங்கு வளைவு வடிவப் பாறைகளும், சிறு சிறு குன்றுகளும் உருவாகியுள்ளன. இந்த பூகம்பம் பூமியின் மேல் பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்திலேயே உருவானதால் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்ட தாக ஜப்பானிய பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அடியில் மிக அதிக ஆழத்தில் ஏற்படக்கூடிய பூகம்பங்களால் அதிக சேதம் ஏற்படாது. லேசான அதிர்வுகள் மட்டுமே நிகழும். மேல் பரப்புக்கு அருகிலேயே ஏற்படும் பூகம்பங்களால் தான் சேதம் அதிகம் இருக்கும் என்றும் ஜப்பானிய ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள இமயமலை 5 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அமைந்துள்ள புவித்தட்டு யுரேஷிய தட்டுடன் மோதிக் கொண்டே இருப்பதால் அங்கு பூமியின் மேல் பரப்பு மட்டுமல்ல அதிக ஆழத்திலும் மோதல்கள் நடைபெற்று வருகிறது. எனவே இது மீண்டும் பெரி தாக வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அது மிகப்பெரிய பூகம்பமாக இருக்கும் என்றும் ஜப்பானிய ஆய் வாளர்கள் அதிர்ச்சயூட்டும் தகவல் வெளியிட்டுள்ளனர். மாலை மலர் தகவல் http://www.maalaimalar.com/ - Rasikai - 10-11-2005 <b>பூகம்பம்: பாகிஸ்தானில் உயிரிழப்பு எண்ணிக்கை முப்பத்து மூவாயிரத்தைத் தாண்டியது.</b> காஷ்மீரில் சனிக்கிழமை இடம்பெற்ற பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பாகிஸ்தான் அரசினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தொகை கடுமையாக அதிகரித்துள்ளது.தற்போது இந்த எண்ணிக்கை முப்பத்து மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. ஆனால் நான்கு நாட்கள் கடந்து விட்ட நிலையில் உதவிகள் இன்னமும் சில பகுதிகளுக்கு சென்று அடையவில்லை. அத்துடன் கடும் குளிரும், தொடர்மழையும் பிற பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளைப் பாதித்துள்ளன. பூகம்பத்தின் மூடப்பட்ட சில வீதிகளில் இடிபாடுகள் அகற்றப்பட்ட போதிலும், அவை மீண்டும் புதிய மண் சரிவுகளால் மூடப்பட்டுள்ளன.பாகிஸ்தானின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் உள்ள பாக் பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு மிகவும் சிறிய அளவிலான உதவிகளே வந்தடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். நகரில் உள்ள பல பிள்ளைகள் அவர்களது பள்ளிக்கூடங்கள் இடிந்து வீழ்ந்ததனாலேயே கொல்லப்பட்டதாகவும், இன்னும் மீட்கப்படாத நூற்றுக்கணக்கான சடலங்கள் இடிபாடுகளில் அகப்பட்டுக் கிடப்பதாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். மலைகளின் உச்சியில் உள்ள பல பிந்தங்கிய, சென்றடைய முடியாத கிராமங்கள் முற்றாகத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதகாவும், அங்கு வாழ்ந்தவர்களின் நிலைமை குறித்து எந்தவிதமான தகவல்களும் வரவில்லை என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார். <b>இந்திய நிர்வாக காஷ்மீரில் சாவு எண்ணிக்கை ஆயிரத்து முன்னூறு</b> மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் பூகம்பத்தால் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று அந்தப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பல மலைப்பகுதிகளை சென்றடைய முடியாத நிலை நீடிப்பதால், இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக் கூடும் என்றும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய இராணுவம் நீர், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சாத்தியமான இடங்களுக்கு அனுப்பி வருவதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.ஆனால் சில கிராமங்களுக்கு உதவி எதுவும் போய்ச் சேரவில்லை என்றும் அவர் கூறினார். பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட யூர் நகரவாசிகள், மன்மொகன் சிங்கை கோபத்துடன் எதிர்கொண்டதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். உதவிப் பொருட்கள் வழங்குவதில் உள்ள குரைபாடுகள் தனக்குத் தெரியும் என்று கூறிய மன்மோகன் சிங் அவர்கள், தனது அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதாகத் தெரிவித்தார். <b>பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 27 கோடி டொலர்கள் தேவை: ஐ.நா.மன்றம்</b> உணவுக்காக அலைபாயும் பாதிக்கப்பட்ட மக்கள் தெற்காசியப் பூகம்பத்தின் அழிவுகளால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 27 கோடி டொலர்கள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. உணவு, போர்வைகள், குளிர்காலக் கூடாரங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் ஆகியவையே அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளுக்கான அதிகாரி ஒருவர் ஜெனிவாவில் கூறியுள்ளார். காஷ்மீர் பிராந்தியத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், அத்துடன் 10 லட்சம் பேருக்கு அதிமுக்கியமாக உடனடி தேவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். நீண்ட கால மீள்கட்டமைப்புக்கு மேலதிக நிதி தேவைப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த பூகம்பத்தில் குறைந்தது ஆயிரம் மருத்துவமனைகள் நிர்மூலம் ஆகியுள்ளதாக ஐ.நா. நம்புகிறது. நன்றி பிபிசி தமிழ் - RaMa - 10-11-2005 நன்றி உங்கள் தகவலகளுக்கு |